கைவினையில் கலக்கும் பதிவர்கள்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!!
நண்பர்களே, இன்று கைவினை பதிவுகளின் மூலம், கைவினைகள் செய்ய நமக்கு புதிய உத்திகளையும், பயனற்ற பொருளென்று நாம் எண்ணுபவற்றைக் கூட, பயனுள்ள கண்ணைக் கவரும் அலங்காரப் பொருளாக்குவது எப்படி என்று நமக்கு கற்றுத் தரும் பதிவர்களைக் காணலாம்.
1. பதிவர் பிரியா ராம் அவர்கள் தனது ரசிக்க ருசிக்க தளத்தில், மணிகள் கொண்டு அழகான மாலையும் அதற்கு ஜோடியாக அழகான கம்மலும் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.
வண்ண வண்ண குந்தன் கற்கள் கொண்டு இவர் வடிவமைத்துள்ள அழகான ரங்கோலியை கண்டு இரசிக்கலாமே.
2. இன்று முதல் தளத்தில் சகோதரி தர்ஷினி அவர்கள் பகிர்ந்துள்ள அழகான டைல்ஸ் ஓவியங்களை பார்ப்போமே.
கைவினைகள் செய்ய பயன்படுத்தும் களிமண்ணில் இவர் செய்துள்ள அழகான ரோஜாப் பூக்கள் உள்ளம் கவர்கின்றன.
3. சரண்யா அவர்களின் கைவண்ணத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் இருந்து உருவாக்கப் பட்ட அழகான மலர்களை பாருங்கள். படங்களுடனான எளிமையான செய்முறை விளக்கங்களையும் வழங்குகிறார்.
நிலக்கடலை ஓடுகள் / தோல் கொண்டு இவர் செய்துள்ள எழில்மிகு வண்ண மலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
4. பொத்தான்கள் கொண்டு அழகான மரத்தினை உருவாக்கி இருக்கிறார் வேதாவின் வலை தளத்தில் எழுதி வரும் கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள்.
காகிதக் கூழ் கொண்டு செய்த கரடி உருவ முகமூடி அற்புதம். செய்முறை விளக்கமும் கொடுத்துள்ளார்.
5. க்வில்லிங் முறையில் சகோதரி சங்கீதா செந்தில் அவர்கள் செய்துள்ள அற்புதமான வாழ்த்து அட்டை.
இவரது கைவண்ணத்தில் உருவான அழகான காதலர் தின வாழ்த்து அட்டை மனம் கவர்கிறது.
6.ஆச்சி ஆச்சி தளத்தில் திருமதி. பி.எஸ். ஸ்ரீதர் அவர்கள் காலுறையில் ( Socks )
ஆழகான கரடி பொம்மை செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.
சேலைகளைக் கொண்டு இவரது கைவண்ணத்தில் உருவான அழகான மிதியடியை காணுங்கள்.
7. எளிதாக செய்யக்கூடிய அல்லது வரையக்கூடிய கடவுள் உருவம் யாதெனில், அது அனைவருக்கும் தெரியும் , அது பிள்ளையாரின் உருவம் தான். திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அருள் தரும் பிள்ளையாரை காண்போமே.
கண்ணைக் கவரும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் - இவரது கற்பனை மற்றும் கைவண்ணத்தில். ஆனால், இது குடிப்பதற்கு அல்ல.
8. கலைச்சாரல் தளத்தில் சகோதரி மலிக்கா ஃபரூக் அவர்களது கைவண்ணத்தில் மண் பானையும் அழகாக மிளிர்வதை காண்போம் வாருங்கள்.
மணிகள் கொண்டு உருவான அழகான மாலை பளபளப்பாய் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.
9. பயணிக்கும் பாதை தளத்தில் சகோதரி அஸ்மா அவர்கள் நட்சத்திர வடிவத்தில் கூடை பின்னுவது பற்றி அழகாக தெளிவான படங்களுடன் நான்கு பகுதிகளாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்.
சாதாரணமாக காட்சி அளிக்கும் ஹேர்பின், இவரது கைவண்ணத்தால், எவ்வளவு அழகாக மாறி உள்ளது பாருங்களேன். தெளிவான படங்களுடன் விளக்கங்களும் அருமை.
10. தேன் மதுரத் தமிழ் தளத்தில் சகோதரி கிரேஸ் அவர்களது கைவண்னத்திலும், அவரது பிள்ளையின் கைவண்ணத்திலும் வெள்ளை கைக்குட்டை எவ்வளவு வண்ணமயமாய் உருமாறி இருக்கிறது !
கிறிஸ்துமஸ் கைவினைகளும், அழகான கவிதை வரிகளும் அருமையிலும் அருமை.
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
மனதிற்கு மகிழ்வளிக்கும்
நல்லதோர் வினை !
ஓய்வு நேரமதில்
செய்து பார்ப்போமே
உற்சாகம் ஊட்டும்
கைவினை !

அறிவிப்பு
திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில் நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:
இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு:
“ சூ ழ் நி லை ”
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
oooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooo o
நண்பர்களே
! இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்திருக்கும் என்று
எண்ணுகிறேன். நாளை வேறு சில பதிவர்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
நன்றி !!!