07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 3, 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

நமது நேற்றைய பதிவைப் படித்து விட்டீர்களா? படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 

நேற்றைய பதிவில் நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே அறிமுகங்களைத் தொடங்கியிருந்தேன். இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்பதான தோற்றமே உலகின் பார்வையில் இருக்கிறது என்பதே அது. நேற்றைய பதிவுக்கு வாசகர்கள் வழங்கிய கருத்துரைகள் அதனை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. "இன்று தான் மலையகத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்" என்ற கூற்றைக் கண்டபோது மனம் வருந்தினேன்.
ஆனால் துவண்டுவிடாமல் மலையகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்

 இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத்  வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது செ.அருண்பிரசாத். இவரது "வரிக்குதிரை" வலைப்பதிவின் மூலம் மலையகம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமா, "சில்ட்ரென் ஒப் ஹெவன் (Children Of Heaven)" என்று உலக திரைப்படங்களையும் ஒரு கை பார்க்கத் தவறவில்லை. இவர் எனது பள்ளிக்கால நண்பரும்  கூட. இந்த ஆண்டு இவ்வலைத்தளத்தில் ஒரு பதிவேனும் வெளிவரவில்லை.


தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர். "உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்" என செயல்படுபவர். யாழ்பாவாணன் அவர்களை அறிந்தவர்கள் பலர் இருக்கலாம். "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்" என யாப்பிலக்கணத்தை நம்வீட்டுக் கணினிகளின் வழியாகவே கற்றுத் தந்தவர். "எதுகை, மோனை விளையாட்டு" மற்றும் "கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்" போன்ற பதிவுகள் சிறப்பானவை.

மலையகத்தின் பிரபல, மூத்த எழுத்தாளர். இன்றும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்  தெளிவத்தை ஜோசப் அவர்கள். "தெளிவத்தை ஜோசப்" என்னும் பெயரிலேயே தன் வலைப்பதிவை வழங்கிய அவர் 2011 இல் 21 பதிவுகளை இட்டதோடு தனது வலைப்பதிவை கண்டுகொள்ளவேயில்லை. ஆனாலும் இதனை இங்கு பகிரக் காரணம் இத்தளத்திலுள்ள பெறுமதியான பதிவுகள் தான். "மனிதர்கள் நல்லவர்கள் - சிறுகதை" மற்றும் "மழலை - சிறுகதை" ஆகியன குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.


இவரை விட்டுவிட்டு நான் இலங்கைப் பதிவர் அறிமுகத்தை முடித்துவிட முடியாது. பதிவுலகின் மூலம் என் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டவர். ஈழத்தின் கவிதை முத்து. கருத்துக்களில் தெளிவும் எண்ணங்களில் துணிவும் கொண்டவர். இவர் தனது பதிவுகளுக்கு எப்படிப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் பதிலளிப்பார். நீங்கள் அறிந்தவர்தான். அதிசயா. "மழை கழுவிய பூக்கள்" வாயிலாக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தவர். இவரது "ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்" மற்றும் "இன்னும் சொல்லுவேன் சத்தமாய்" போன்ற பதிவுகள் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை.

இன்று அறிமுகப்படுத்திய பதிவுகள் குறைவுதான் என்றாலும் அத்தனையும் கனதியானவை என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். மீண்டும் நாளையும் மேலும் சில அறிமுகங்களுடன் சந்திப்போம்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

13 comments:

  1. பதிவர்கள் அனைவரும் அவசியம்
    அறிந்திருக்கவேண்டிய பதிவுகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் முதல் பதிவிலும் இன்றைய பதிவிலும் மலையகம் பற்றிய அக்கறை காட்டியமையை வரவேற்கிறேன். ஈழவர் துயரங்களை உலகறியச் செய்தளவுக்கு மலையகத்தார் உண்மைகள் (லயன் வாழ்க்கை) உலகறியச் செய்யவில்லை என்பதில் நானும் கவலை அடைகின்றேன். ஈழவர், மலையகத்தார் பிரிவு புவியியல் அடிப்படையில் அமைந்ததைத் தாங்களும் தங்கள் பதிவூடாக ஏற்றுள்ளீர்கள். ஆயினும், மலையக மக்கள் இலங்கையின் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்.

    எழுத்தை ஆள்பவருக்கு அதாவது எழுத்தாளருக்கு நாடு, இனம், மதம், சாதி எதுவும் கிடையாது. இலங்கையின் வடகிழக்குப் படைப்பாளிகளும் மலையகப் படைப்பாளிகளும் சம அளவிலேயே உலகறியச் செய்யப்பட்டுள்ளனர். வீரகேசரி பத்திரிகையிலும் சம அளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படைப்பாளிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடாது. அதனை நாம் இணைந்து சீர்செய்ய வேண்டும்.

    தங்கள் வலைகளில் இணைந்துள்ளேன். மலையகப் படைப்பாளிகளை, மலையகத்தார் உண்மைகளை எனது தளங்களிலும் பகிர விரும்புகிறேன். மலையகம், வடகிழக்கு, கொழும்புத் தமிழரென எமக்குள் பாகுபாடின்றி பேணவேண்டும். தங்களைப் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து இதனை மேற்கொள்ள எண்ணியுள்ளேன். இலங்கைத் தளங்கள் வரிசையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    இந்திய வழித்தோன்றல் (வம்சாவளி), இலங்கை வழித்தோன்றல் (வம்சாவளி) என்ற வேறுபாட்டையும் நான் எதிர்க்கிறேன். இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றாய்த் தமிழரின் நாடாய் இருந்தது. மேலும் ஆய்வு செய்தால் ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை இந்து சமுத்திரப் பக்கமாய் குமரிக்கண்டம் என்ற இடமும் தமிழருடையதே! கடற்கோள் வந்து எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. இந்தியாவில் கிந்திக்காரரும் ஈழத்தில் சிங்களவரும் சோழராட்சியில் நிகழ்ந்த ஆரியப் படையெடுப்பின் பின் நுழைந்தவர்கள். எனவே, நாம் தமிழரென்று ஒற்றுமையாய் நிற்போம்.

    நீர் மலையகம் என்றால் நான் யாழ்பாணத்தானா? இருக்கமுடியாது! எனது பாட்டனுக்கு சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மடம் சொந்தமாக இருந்தது. சிதம்பரக் கோவிலுக்கான வருவாய்களை இலங்கையிலிருந்து திரட்டி வழங்கும் பணியையே செய்து வந்தார். அப்படியாயின் நானும் ஒரு இந்தியனே! எனவே தான் என்னவோ இந்தியத் தமிழரையும் ஈழத் தமிழரையும் தொப்புள் கொடி உறவுகள் என்கிறோம். எனது நோக்கம் தமிழர் என்ற அடையாளத்தில் உலகெங்கிலும் வாழும் தமிழரை ஒன்றிணைப்பதே! ஒற்றுமை பேணி ஒன்றுபடுவோம் என்பதற்காக இவ்வுண்மையைப் பகிர்ந்தேன். இவ்வாறான ஆய்வுகளில் இறங்கியுமுள்ளேன். தவறுகள் இருப்பின் என்னை எவரும் அடித்து நொருக்கலாம்.

    ReplyDelete
  3. குறிப்பிட்ட அனைத்து பதிவுகளும் சிறப்பானவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. VanKam sonthamae
    Valthukal ungal panoyai yhorampafs saikireerkal
    Kanamana pathivu ethu.thakaval valankiya sonthathitkm valththukal..bharathy superup
    .manri en arimukaththitkai

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் ப(பா)ணி!

    ReplyDelete
  7. பெறுமதியான பதிவுகள். அருமை..
    அறிமுகங்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. மிகச்சிறப்பான பதிவர்கள்! அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தொடர்ந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சிறப்பானவர்களாக உள்ளதை பதிவுகள் மூலமாக அறியமுடிந்தது. நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  11. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. தொடருங்கள் நண்பா...

    சிறப்பான அறிமுகம்...

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது