07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 20, 2014

இவன் யாரோ.... இவன் யாரோ....


வணக்கம்
--------------------------

வன்.... சே.குமார்... 'பரிவை' சே.குமார்... 'மனசு' குமார். ஆம்... சேதுராமனின் மகனான குமார் என்னும் நான் எழுத ஆரம்பித்த போது... அட ஒண்ணாப்புல எழுத ஆரம்பித்த போதுன்னு நினைச்சிட்டீங்களா? அப்போ இல்ல... கதை, கவிதையின்னு கிறுக்க ஆரம்பிச்ச போது புனைப்பெயரெல்லாம் வச்சி எழுதிட்டு அப்புறம் ஊர்ப் பெயரைச் சேர்த்து எழுதி வந்தேன். பெரும்பாலும் முழுப்பெயரை யாரும் கூப்பிட மாட்டோம் சுருக்கி செல்லமாக் கூப்பிடுவோம் இல்லையா அப்படி ஊர்ப்பெயரைச் செல்லமாச் சுருக்கி 'பரிவை' என்று மாற்றி பேருக்கு முன்னால் அடைமொழி ஆக்கினேன்.

வலைப்பூ ஆரம்பித்து எழுதலாம் என்ற எண்ணத்தை விதைத்து இங்கு நண்பன் கணேசன் அழைத்து வந்தபோது கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய ‘மனசு’ கையெழுத்துப் பிரதியின் பெயரையே இதற்கும் வைத்து எழுத ஆரம்பித்தேன். ஏதோ தத்திப்பித்தி தவழ்ந்து.... நடந்து... நிமிர்ந்து... திரும்பிப் பார்த்தால் நிறைய உறவுகளைப் பெற்று எல்லாருடைய மனசிலும் 'மனசு' குமார் ஆனேன்.

வலைச்சரத்தில் அதிக முறை நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களில் நானும் ஒருவன் என்கிற சந்தோஷம் எனக்குள் உண்டு. அதேபோல் வலைச்சரத்தில் இது மூன்றாவது முறை கிடைத்திருக்கும் ஆசிரியப் பணி... தினம் தினம் புதுப் பதிவர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் வலைச்சரத்தில் இத்தகைய வாய்ப்பு கிட்டுவது அரிதென நினைக்கிறேன்... மூன்றாவது முறையாக அழைப்பு என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... இதற்குக் காரணமான என் மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் ராஜி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும்... எனது வலையில் கூட 67 சிறுகதைகள் பதிந்திருக்கிறேன். நாம ஒரு கருவைப் பிடித்து அதை  எழுதலாம்என நினைத்து... நினைத்து... நாட்களைத் தள்ளிப் போட்டு வந்து ஒரு நாள் இரவில் விழித்திருந்து எழுதி பதிவிட்டால் சில பதிவுத் திருடர்கள் திருடர்கள் திருடி தங்கள் பதிவாக்கி விடுகிறார்கள். எனவே சிறுகதைகளைப் பகிர்வதை நிறுத்தி விட்டேன். நாம புத்தகம் போடலாம்ன்னு கனவோட இருக்கும் போது அவங்க புத்தகம் போட்டுட்டா... அதான் யோசனையின் முடிவாய் நிறுத்தம்.

சமீபத்தில் கூட ஒரு போட்டோவை தேடிய போது நான் போட்டோ போட்டோ வேறோரு தளத்தில் இருந்தது. அங்க போன நம்ம தளத்தோட பெயரில் அப்படியே போட்டிருக்காங்க... பதிவின் கீழ் வரும் என்னோட பேர் கூட அப்படியே இருக்கு. அப்புறம் ஆங்கிலத்தில் ஒரு மெயில் தட்டினேன். அதற்கு எது தங்களது என்பதை இணைப்புடன் சொல்லுங்கன்னு சொன்னானுங்க... சொன்னதும் இப்போ அந்த இணைப்பு வேலை செய்யலை... சொக்கா... கொஞ்சமில்லை மக்கா என்னோட பதிவில் மொத்தம் 463. இன்னும் நண்பர்களும் இருக்கிறார்கள். படத்தைப் பாருங்கள் தெரியும். இதேபோல் ஒருவனைப் பற்றி பல சகோதரிகள் சொல்லியிருந்தார்கள். அந்தாளு எல்லாமே அவன் எழுதுனமாதிரி பதிவுகளில் படமெல்லாம் போட்டு கலக்கிட்டான்னா பாருங்களேன்.

இன்றைய அறிமுகத்தில் இவன்...

பெயர்
சே.குமார்
வலையில் எழுதும் பெயர்
'பரிவை' சே.குமார்
வலைத்தள முகவரி
பெற்றோர்
திரு. சேதுராமன் - திருமதி. சிவகாமி
மனைவி
நித்யா குமார்
மகள்
ஸ்ருதி குமார்
மகன்
விஷால் குமார்
படிப்பு
எம்.சி.ஏ.,
பணி
அபுதாபி

(என்னடா இவன் பொண்டாட்டி, பிள்ளைங்க பேருக்கு பின்னால இவன் பெயரைச் சேர்த்துட்டானே ஆணாதிக்கவாதியா இருப்பானோன்னு நினைச்சிடாதீங்க... நம்ம குட்டீஸ்க்கு இப்படித்தான் சொல்லப் பிடிக்கும்... இருவரும் அப்பா செல்லமல்ல... அப்பா பைத்தியம்.... அதனால எல்லாருக்குப் பின்னாலும் எப்பவும் இவன் இருப்பான்)

இவன் கிறுக்கிய பகிர்வுகள் சில உங்கள் பார்வைக்கு...

சிறுகதைகள் :

1. நினைவின் ஆணிவேர் (வெட்டி பிளாக்கர்ஸ் போட்டியில் முதல்பரிசு)   
2. கூழாங்கல் (அதீதத்தில் வெளியானது)

கவிதை :


கிராமத்து நினைவுகள் :


சினிமா :


மனசு பேசுகிறது :


இன்னும்.... வெள்ளந்தி மனிதர்கள், நண்பேன்டா, தொடர்கதை இப்படி நிறைய வாசிக்க... ஒரு எட்டு அப்படியே நம்ம மனசு பக்கம் வந்துட்டுப் போங்க...

இந்த வாரம் தீபாவளி... அதனால விடுமுறை... அப்புறம் மதுரைப் பதிவர் சந்திப்பு, சந்தோஷம் என இருக்கப் போவதால் வலையுலகம் காத்தாடும் என்பதில் சந்தேகம் இல்லை... இருந்தாலும் கொஞ்சம் இந்தப்பக்கமா வந்து இவன் என்ன எழுதிக் கிழிக்கிறான் என பார்க்கத் தவறாதீர்கள் நட்புக்களே... நாளை முதல் வந்த வேலையைக் கவனிப்போம்... அதுவரைக்கும் இதைப் பாருங்க... அதுக்கு முன்னால வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் என்னையும் தொடர்ந்து வாசிக்கும் நட்புக்களுக்கும் வலைச்சர நட்புக்களுக்கும் நன்றி.

தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை
ஞான ஒழிவாழும் வழி


 நாளை பதிவர் அறிமுகங்களுடன் சந்திப்போம்...

நட்புடன்
-‘பரிவை’ சே.குமார் 
மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா 2014 மதுரை -  நிகழ்ச்சிநிரல்
 

43 comments:

  1. அருமையான intro அண்ணா! வாழ்த்துகள்:))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

      Delete
  2. நானும் பார்த்துள்ளேன் உங்கள் வலைப்பூ நல்லபதிவுகள் சூழ்ந்த நல்ல மனசு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது தங்கள் வார்த்தைகள்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

      Delete
  3. வருக வருக சோதரனே...
    வாசமலர்ப் பூக்களால்
    நீவீர் தொடுத்திடும்
    வலைச்சர வாசத்தை
    நுகர்ந்து களித்திடவே
    வலைச்சர வாசலிலே
    தவம் இருக்கின்றேன்

    சுய அறிமுகம் மிகவும் அழகு... உங்கள் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் வார்த்தைகள்.
    இவ்வளவு பணிச்சுமைக்கு இடையிலும் மூன்றாவது முறையாக ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    கலக்குங்க...
    தினமும் உங்கள் பகிர்வுகளின் நிகழின் நிழலாக தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கவிதையால் கவிஞரின் வாழ்த்து... ரொம்ப நன்றி அண்ணா.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

      Delete
  4. ஓய்வு இல்லாத நிலையிலும் பயனுடையதொரு நல்ல பணியை ஏற்ற உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

    நல்லதொரு சுய அறிமுகம். தொடர்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.

      Delete
  5. சே. குமார் அவர்களின் கதைகள் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும்....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனது கதைகளைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி பிரகாஷ்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. பணியின் பண்பாடு உங்கள் பாதையில் தெரிகிறது நண்பரே!
    பணி சிறக்க வாழ்த்துகிறேன் முத்தமிழ் அன்னையின் பொற்பாதம் தொழுது.
    நன்றி!
    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா,,,

      Delete
  7. நல்ல தொடக்கம். மூன்றாம் முறை வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் . தங்கள் பதிவுகளில் நண்பன்டா நான் மிகவும் ரசித்துப் படிப்பேன்,
    தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  8. அன்பின் குமார்..

    நல்வாழ்த்துக்கள்..
    இந்தத் தீபாவளி - இரட்டைத் தீபாவளி..
    ஆனந்தம் அகல் விளக்குகளாக சுடர்கின்றன..
    மனசெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்புகளாக சிதறுகின்றன!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  9. வாழ்த்துகள் அண்ணே ... சிறப்பாக தங்கள் பணி தொடரட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி.

      Delete
  10. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள் குமார்! நிச்சய‌ம் உங்கள் ஆசிரியப்பணி அசத்தலாக, அமர்க்களமாக இருக்கும்! அழகாய்த்தொடருங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

      Delete
  11. வெல்கம் குமார். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  12. அழகிய சுய அறிமுகத்துடன் இனிய வரவு ஆசிரியராக! வாழ்த்துக்கள் நண்பரே! தங்கள் வலைச்சரப்பணி இனிதாய் பயணிக்க! ...எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  13. Replies
    1. தேவகோட்டை போயாச்சா? எப்போ?
      சொல்லாமல் சென்று விட்டீர்களே சகோதரா.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  14. வாழ்த்துக்கள் நண்பரே! தெள்ளத்தெளிவாக ஓர் சுய அறிமுகம்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

      Delete
  15. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.

      Delete
  16. சிறப்பான சுய அறிமுகம்....

    பாராட்டுகள் குமார். தொடர்ந்து இங்கே சந்திப்போம்....

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாருங்கள் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  17. மலர்ந்து மணம் பரப்பும் மனசுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

      Delete
  18. வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் குமார்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  19. 3-ஆம் முறையாகவும் வலைச்சரத்தில் பேனா எடுத்து ஆசிரியர் ஆனதற்கு நல்வாழ்த்துக்கள் திரு. சே. குமார்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.

      Delete
  20. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

      Delete
  21. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  22. வணக்கம் குமார்! சிறப்பான சுய அறிமுகம்!

    வலைச்சரத்தில் இவ்ளோ நாள் சரியாக பழக்கமில்லாதவர்கள் ஆசிரியர் பணியை ஏற்றிருந்ததால் இந்தப்பக்கம் வர முடியலை. எல்லாரும் நிம்மதியா இருந்திருப்பாங்க! :)

    இப்போ ஒரு "தெரிந்த முகம்" "நம்ம குமார்" னு வந்து நிற்கிறேன். சொல்லுங்க! கேட்டுக்கொண்டு இருக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி வருண்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
      தொடர்ந்து வாங்க.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது