07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 22, 2014

கவிதை பாடு குயிலே... குயிலே...

வலைச்சரத்தில் நேற்றைய பதிவான 'தமிழா... தமிழா...' பகிர்வினைப் படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

முதலில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய பகிர்வில் கவிதை படைக்கும் பெண்கள் பற்றிய ஒரு பார்வை. இன்று இணையத்தில் எழுதும் எல்லாருமே ஒரு கவிதையாச்சும் பதிந்து விடுகிறோம். அப்படியிருக்க பெரும்பாலும் கவிதைக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதில் ஆண்களை விட பெண்களே அதிகம் எனலாம். இவர்கள் தங்கள் கவிதையில் காதல், சமூகம், வாழ்க்கை என முப்பரிமாணங்களையும் கொண்டு வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றுதான் என்றாலும் வார்த்தைகளை எப்படிப் போட்டு எழுதினால் எழுத்து வசமாகும் என்று தெரிந்து எழுதுபவர்கள் மட்டுமே கவிஞராக முடியும். நானும் கவிதை என்று சிலவற்றைக் கிறுக்கி வைத்துள்ளேன். ஒரு சிலரின் கவிதை படிக்கும் போதே மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். அது எதாவது ஒரு தருணத்தில் ஏதோ ஒரு நினைவில் நம்முள்ளே வந்து போகும். அப்படிப்பட்ட கவிதைகளை என் நட்பு வட்டத்தில் இருக்கும் பல சகோதரிகளின் எழுத்தில் கண்டிருக்கிறேன்.  என்ன ஒரு வருத்தம்ன்னா இன்னைக்கு வலைப்பூவில் பகிர்வதைவிட முகநூலில் பகிரும் சகோதரிகள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

இங்கு நிறைய கவிதாயினிகளுக்கு களம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனது வழவழாக்களைக் குறைத்துக் கொள்கிறேன்... சரி வாங்க பாரதி கண்ட புதுமைப் பெண்களின் கவிதை மழையில் நனையலாம்.

முதலில் எனது நட்புக்கு மரியாதை...

ழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிஸ்ஸில் வாழும் எனதன்பு அக்கா ஹேமா அவர்கள் வானம் வெளித்த பின்னும் கவிதையில் வெளுத்து வாங்குகிறார். வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என் மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப் போக முடிவதில்லை' என்று சொல்லியபடி வசந்த கவிதைகளுடன் வலி நிறைந்த கவிதைகளையும் பருகத் தருகிறார். அவரின் பிரிக்கப்படா சிக்கல் கவிதையில் இருந்து சில வரிகள்...
"சுவர்க்கோழியெனஒட்டிக்கிடக்கிறேன்அடுப்பங்கரையில்குடத்தோடும்உட்சுவர் உடைத்தஇடுப்புவலியோடும்."

ருமைத் தங்கை மைதிலி கஸ்தூரி ரங்கன் தனது வலைப்பூவான மகிழ்நிறையில் (அதாவது எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்பதன் சுருக்...). அழகழகான கவிதைகளை அள்ளித் தருகிறார். இவரின் உப்புமா எனும் விடுமுறை கவிதையில் எப்படிச் சொல்கிறார் எனப் பாருங்கள்.

“வகைகொன்றாய்உங்களுக்கும்உங்கள்பிள்ளைகளின் சிற்றுண்டிக்கும்குறிப்பேடுகள் தொகுக்கும் அவள்துணைப்பொருள் தேடும் தலைவலிக்குஒருநாள் ஓய்வளிக்க நினைத்திருக்கலாம்...”


*

ருமைச் சகோதரி ஆனந்தி, மிகச் சிறந்த எழுத்தாளர்... அன்புடன் ஆனந்தியில் இவரின் பகிர்வுகளைத் தொடர்ந்து வாசிப்பேன். ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. இன்று கவிதாயினிகளைத் தேடிய போது ஏனோ மனசு ஆனந்தியின் வலைப்பூவுக்குச் சென்றது. அட இன்றைக்கு ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். இவர் கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும். நீங்களே பாருங்கள் நிதர்சனம் நீ...யில் இவர் என்ன சொல்கிறார் என்பதை...

"இமைகளுக்குள் புகுந்தேஇரவுகள் தொலைக்கச் செய்வாய்..இதமான உன் அன்பில்இவ்வுலகம் மறக்கச் செய்வாய்.. உன்னை வரையறுக்கஉவமைகள் தேவையில்லைஉண்மைக் காதலுக்குஉவமானம் தேவையில்லை..."


*
ன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்தான் இந்த மழைச்சாரல் என்று சொல்லும் சகோதரி பிரபா அவர்கள் தனது வாழ்வெனும் சுருக்கம் என்ற கவிதையில் தனது வருத்தத்தை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.

"அதுவெல்லாம் சரிஅம்மாவைத் தேடும்அம்மூன்று வயதுகுழந்தைக்குஆறுதல் யாரோ?"

*
இனி மற்ற கவிதாயினிகள் பற்றிய சிறு பார்வை இங்கே... உங்கள் பார்வையை இங்கு மட்டும் இல்லாமல் இவர்களின் தளங்களுக்கும் இட்டுச் சென்று வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லி வாருங்கள்...

வாழ்க்கை ஒருமுறை வாழ்ந்துபார் வீழ்ந்துவிடாதே... என்று சொல்லும் நங்கூரம், உயிர்த்தீ என இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான கவிதாயினி நளாயினி அவர்கள் தனது உயிர் கொண்டு திளைத்தல் என்ற தளத்தில் கவிதைகளை திளைக்கத் திளைக்கத் தருகிறார்.  2005-ல் பதிவுலகம் வந்து 2011 வரை எழுதியிருக்கிறார். அவரின் உயிர்த்தீ என்ற கவிதையில் எப்படிச் சொல்கிறார் எனப் பாருங்கள்..

"உன் அங்கவஸ்திரம்கொண்டு என் உயிர்பறித்தவனே!!வாத்தியக்கருவிஒன்றை கண்டெடுத்தேன்.அடடே!!பார்த்துக் கொண்டிருக்கவேஎனக்குள் எத்தனை நாதம். "
 *
விதாயினி லாவண்யா அவர்கள் தொலைந்து போனேனென்று நினைத்திருந்தேன்... இதுதான் என் முகவரி என்று தெரியாமல் என்று சொல்லிக் கொண்டு என் முகவரி என்ற தளத்தில் எழுதுகிறார். இவரது நிலச்சரிவு கவிதையில் இப்படிக் கேட்கிறார்.

"மண்-விலக்கு தந்துநிலத்தையும் மரத்தையும்தனியே பிரித்து வைக்கஉயர நின்ற மரமும் பட்டுப் போகசிரித்து மகிழ்ந்த நிலமும் வெறிச்சோடிக் கிடக்கதனிமை தான் விரட்டியதோ"
*
னக்கு கவிதைகள் எழுதுவது ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லும் கவிதாயினி வியா அவர்கள் என்னுள் என்றும் அழியாதது உன் நினைவுகள் என்று கூறி தொடரும் நினைவுகள் என்ற தளத்தில் 2008 முதல் 2011 வரை கவிதை ஊர்வலம் நடத்தியிருக்கிறார். இவரின் நினைவெல்லாம் நீ...! என்ற கவிதையில் வாழவேண்டும் என்ற நிர்பந்தத்தால் வாழ்வதாகச் சொல்கிறார்.

"வாழவேண்டும் என்றநிர்ப்பந்தத்தால்எத்தனை வேதனைகளைத்தான்விருதுகளாய் பெறுவதுகாலம் கேள்வி கேட்கபதில் சொல்ல மறுக்கிறது மனது..."
 *
ந்தக் கவிதாயினி தன்னை நிலா பெண் என்று போட்டுள்ளார். சில பகிர்வுகளின் கீழ் புவி என்று இருக்கிறது. நிலாப்பெண்ணுக்கு பெயர் எதற்கு என்பதால் விட்டுவிட்டாரோ என்னவோ.. அட நமக்குப் பக்கத்தில் துபாயில் இருந்து எழுதுகிறார். நிலா பெண்ணின் தளம் நிலாப்பெண்... இதில் கவிதையின் கதை என்ற கவிதையில் கவிக்குழந்தைகள் எப்படிப் பிறந்தன என்று சொல்கிறார். 

"அழகான கவிதைகளென,
புன்னகைப் பூத்தாய்..ஆரவாரமிட்டு கூச்சலிட்டனஉன்னால் பிறந்த,
கவிக் குழந்தைகள்.."

 *
மிழ் கவிதைகள் என்ற தளத்தில் எழுதும் கவிதாயினி சாந்தி பாலாஜி கவிதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். இவர் காப்பாற்ற வருவாய் என்ற கவிதையில் இப்படிக் கேட்கிறார்.

"காதலா !..உன்னை நான் எப்படிகாணாமல் இருப்பேன்?..
இருதயம் இல்லாத கூட்டத்தின்இரும்பு பிடியில் நான் ...பாசம் இருப்பதுபோல்பாசாங்கு செய்கிறார்கள் ..."
 *
விதாயினி ஷைலா ரஹமத்துல்லா தனது எழுத்தை உதிரும் என் வாழ்வின் உதிரிப் பூக்கள் என்று சொல்லிக் கொண்டு உதிரிப்பூக்கள் என்ற தளத்தை 2012-ல் ஆரம்பித்து 2014 ஜனவரி வரை பூக்களை உதிர விட்டிருக்கிறார். அதில் எனக்கும் உண்டு இதயம் என்பதில் இப்படிச் சொல்கிறார். 
"உனக்கானகாத்திருப்பின் இடைவெளிகளில்கரைந்து போகும் தனிமையைக்கூடசில நேரங்களில் சுகமாகத்தான்உணர்கிறது இந்த உள்ளம்..."
 *
ங்கு நான் பகிர்ந்திருப்பவை எல்லாம் என் மனவோட்டச் சாரலில் நனைந்து மலர்ந்தவைதான் என்று சொல்லும் கவிதாயினி பூங்கோதை அவர்கள் தனது பூங்கோதை படைப்புகள் என்ற தளத்தில் வாடீ என் தோழி என்ற கவிதையில் தோழி பற்றி இப்படிச் சொல்கிறார்.

"பொம்மைச் சண்டையெல்லாம் போச்சுவெம்மை நெஞ்சில் பரவலாச்சுபொய்மையில் தொலைந்தவள் நானடி-இனிபுவியினில் வாழ்வெனக்கேதடி.சொல்லியழ முடியவில்லை - நான்சொல்லிப் புரியும் ரகமுமில்லைமெல்லும் வழி தெரியவில்லைமெல்லாதுமிழத் தோன்றவில்லை"

 *
விதாயினி திவ்யா அவர்கள் துள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு... மின்மினியாய் மத்தாப்பு... மெருகேற்றும் முத்தாய்ப்பு என்று சொல்லி தனது மனசுக்குள் மத்தாப்பு வலைத்தளத்தில் மத்தாப்பாய் கவிதைகளைப் பகிர்கிறார். அவரது கவிதை கண்ணாமூச்சி என்ற கவிதையில் இருந்து சில வரிகள்... 

"இடைவெளியின்றிபடபடவெனநான் பேசுவதைமெளனமாய்கேட்டுக் கொண்டிருந்துகவனமாய் மொழிபெயர்த்துகவிதையாக வெளியிடுவதைஎப்போதடா நிறுத்தப் போகிறாய்??"



சரிங்க நீண்ட பதிவாயிடுச்சுன்னு நினைக்கிறேன். இத்தோட கடையை சாத்திருவோம்.. தீபாவளி கொண்டாடிட்டு வாங்க... அதுக்கு முன்னால கவிதை பருகிய கையோடு இதையும் ரசித்துச் செல்லுங்கள்...
கவிதை பாடு குயிலே... குயிலே...


அப்படியே நம்ம மதுரை வலைப்பதிவர் மாநாடு 2014 நிகழ்ச்சி நிரலையும் பார்த்துட்டுப் போங்க...


-'பரிவை' சே.குமார்.

27 comments:

  1. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  2. பல புதிய அறிமுகங்கள்! அனைத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

    தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! தங்கள் குடும்பத்தாருக்கும் சுட்டீசுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி சார்....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  3. நிறைய கவிதாயினிகள்! கவிதைகள் என அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  4. கவிதை பாடும் குயில்களுக்கும் மற்றும் -
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்வராஜூ ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  5. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  6. நான் விரும்பித் தொடரும்
    அருமையான கவிதாயினிகள்
    அறிமுகம் செய்த விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரமணி ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  7. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க யாழ்பாவணன் சார்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  8. கவிதை பாடும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    கவிதைத் தொகுப்பு அருமை. பாடல் பகிர்வு அருமை.

    இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள் குமார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  9. இன்று சிறப்பான அறிமுகங்கள்!

    தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  10. மிக்க நன்றி குமார்.இன்னும் உங்கள் மனங்களில் கவைதையாய் வாழ்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.உங்க இந்தப் பாராட்டுக்கள்தான் இன்னும் இன்னும் என்னை எழுதத் தூண்டுகிறது.அத்தனை கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.இங்கு காணும் எனக்கு அறிமுகமான தளிர் சுரேஷ்,என் ஆன்மீகத்தோழி, ரமணி ஐயா ,கோமதி அரசு எல்லாருக்கும் என் வணக்கம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மற்றும் எனது வலைப்பக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆனந்தி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  12. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. ஒன்றிரண்டு பேர் தவிர மற்றவர்களின் படைப்புகளை வாசித்ததில்லை. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  14. என்னைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி சகோ... மிகவும்தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.... இதில் என் தளத்தின் பெயர் சரியாக வந்துள்ளது ஆனால் என் பெயர் பிரபா என்று தவறாக வந்துள்ளது..... எனது பெயர் பிரியா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது