ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனுங்க!!!
➦➠ by:
ஆமினா
வந்துட்டீயா?இந்தா கேசரி எடுத்துக்க....
நானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க!
ஏது? செஞ்சீயா???
நானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க!
ம் கேள்விபட்டேன்.... அத விட கொடுமை.. மகன் பொறந்த நாள கொண்டாட மிச்சமா வச்சுருந்த குலோப்ஜாமுனை கூட கொடுத்ததாக சூர்யஜீவா சொன்னாகளே….. இன்னும் மனச விட்டு மறையல :-(
சௌந்தர் சொன்னாக பொண்ணு! கேட்க கஷ்ட்டமாதேன் இருந்துச்சு. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு சொல்லுவாகளே…. அதே மாதிரிதேன்
ம் சொன்னபடியே கெடச்சுச்சாம். ஆனா திருப்பி கொடுத்துடுச்சாம்
ம் யூத்பூல்விகடன்ல கூட வந்துச்சாம்ல!!!
ம் ஆமா ஆமா... அப்பறம் ஜெயப்பரியா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்ல நடந்த ஒரு அதிசய சம்பவத்த பத்தி சொல்லியிருந்தாங்க
ம். நானும் கேட்டேன். விதியை மதியால ஜெயிச்சவங்கன்னுதேன் சொல்லணும். நீரஜ் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தான் இல்லையா? நாம்ம நல்லா கவனிச்சுகிட்டா செடி மட்டுமில்ல அவனும் மீண்டும் துளிர்ந்து நல்ல மனுஷனா வருவான்னு முடிவு எடுத்திருக்கு !!!
அதுவும் சரிதேன்… இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு பராமரிப்பு ரொம்ப அவசியம் இல்லையா?
நிகாஷா எல்லா விஷயத்தையும் சொல்லி முடிச்சுடுச்சா??
அடடா….
நாதன் இருக்காகள…. இப்ப முன்னமாதிரி இல்லையே….. என்ன ஆச்சர்யம்??
என்ன நோட்ல எழுதிட்டு இருக்க?
இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச கவிதைலாம் எழுதி எழுதி வச்சுட்டிருக்கேன் சின்ன பொண்ணு!
அப்படியா? அப்படி என்ன கவிதை தான் எழுதி வச்சுருக்க? யார் எழுதுனா? கொஞ்சம் எனக்கும் சொல்லேன்!!!
எவனோ ஒருவன்! வாசகியாய் நீ இல்லையேன்னு வருத்தப்படுறேன். என் எழுத்துல நீ வசிக்கிறது தெரியாமன்னு சொல்லியிருந்தாங்க.
ம்....சேரி...
அம்மாவுக்கு பசி வந்தபோது கூட அதோட குழந்தைக்காக உணவு கொடுக்கும் தாயின் மகத்துவத்தை கூறும் தாய் பசித்திருக்கிறாள் என்னும் கவிதை சகோ செய்தாலி எழுதுனது..
மாலதியின் தவத்தின் காரணம் என்னன்னு நீயே பாரேன்
வெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான் என ஒரு சிறுமி சொல்வது போன்ற மகேஷின் நாவறண்ட சொர்க்கம் நெகிழ செய்தது. அதே போல் பனங்கூர் காந்தி ஏழைசிறுமியின் துயரத்தை வரிகளில் சொல்லியிருப்பார்…
அடப்பாவமே….
இரவுகளில் நான்... அமானுஷ்ய பயத்தில் இருந்த போதும் உன் நினைவுகளை மீட்டெடுக்கும் போது எல்லாம் மறைந்து விடுகிறது என்பது போல் சொல்லும் வரிகளுக்கு சொந்தமானவுக ரேவா. கூடல் குணா எழுதிய இரு பொருள்படும்படியான சிலேடை பாடலை நீ வாசித்து பாரு….. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!
அந்தளவுக்கெல்லாம் எனக்கு ஞானம் இல்லையே!!!
உன் பிரிவால் தினம் தினம் மரணிக்கிறேன் என ஒரு பெண் கதறுவது போன்ற பிரஷா எழுதிய கவிதை ஏதோ மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது,
அந்த நிலையில் உள்ள பெண்ணுக்காக பரிதாபப்பட வைக்கிறது!அதே போல் செண்பகத்தின் பிரிதலின் தாக்கம்..... மறுபடியும் ஒரு பாசமலர் பார்த்து முடிச்சது போன்ற உணர்வு
ம்ம்
விடியும் வரையில் கொஞ்சம் நானாக நிறைய நீயாக என்னை ஆக்ரமிக்கின்றாய் கனவுகளில்....... அதற்காகவாவது கனவில் கலையாதே என்று எழுதிவுக ஹரிணி
வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகம் கொடுக்கும் அம்பாளடியாளும் இப்ப கவிதைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்!
குழந்தையின் பிரிவால் வாடும் தாயின் வலிகளை ரிம்ஸா முஹம்மத்
எழுதிய குழந்தாய் என்னும் வரிகளில் அப்படியே பிரதிபலிக்கும்
தன் பழைய காதலி கணவனுடன் எதிரில் வரும் போது அந்த காதலன் இதயம் படும் பாடு..... எத்தனை நாளானாலும் மறக்குமா அவன் நெஞ்சம்? அழகா இரு வரிகளில் சொல்லியிருப்பார்.... அதான் சே.குமாரின் திறமை!
இரும்பாயுதம் என்ற சொல்லை மறந்திட அன்பென்ற ஆயுதம் என்ற ஒரு வார்த்தை போதும் என்ற லாக்ரின் சர்மா வரிகள் நச்!
நாம் மறந்தாலும் நம் நட்பு நினைக்கும் என்ற வரிகளில் நட்பின் ஆழத்தை காண்பித்திருப்பார் கவியழகன்
எதிர்நீச்சல் போட்டு வாழும் ஒரு பெண்ணின் வாடும் நெஞ்சம் அழுகிறது- எழுதியவர் சகோ ஹாசிம்
ஹேமாவின் அவகாசம் தேவைப்படுகிறது இலங்கையில் மக்கள் பட்ட வேதனைகளின் பிரதிபலிப்பு!
தாமதிக்கும் கணங்கள் அத்தனையும் நோவு என்று தனிமையின் க(ன)ணம் பற்றி சகோ ஸதக்கத்துல்லாஹ் எழுதிய கவிதை ரொம்ப அருமையா இருந்தது!
அட……….அட…..அட…….. எல்லாமே சூப்பர்!!! ஆமா உங்களையெல்லாம் நாஞ்சில் மனோ அமெரிக்காக்கு கூடிட்டு போடி பதிவர் சந்திப்பு நட்த்துனாங்களாம்ல!!
ஹி…ஹி…ஹி… யாரு போட்டு கொடுத்தா???? ஆர்கிட்டையும் சொல்லிடாத… பாஸ்போர்ட் விசா இல்லாம கூடிட்டு போயிருந்தாக!!
அடகளவானி கூட்டமே!!! நீ வெறும் அமெரிக்காதேனே போயிருக்க? வேதா என்னைய நெறைய ஊர்க்கு கூடிட்டு போயிருக்கு!!! அதுவும் ஒவ்வொரு எடத்துலையும் என்னைய போட்டோ பிடிக்கும் தெரியுமா?
சரி வயித்தெரிச்சல கொடுக்காத… இன்னைக்கு ஏரியால பாட்டியும் தாத்தாவும் ப்ரபோஸ் பண்ணதுதான் ஹாட் டாபிக்…. ரமேஷ் பாபுதான் இந்த மேட்டர பரப்புனதுன்னு தாத்தாவும் பாட்டியும் கொலவெறியோட தேடிட்டிருக்காங்க!
ஹா…ஹா…ஹா… நானும் கேள்விபட்டேன்!!!
பிரபுவ பாத்தீயா?
ம்ம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தாக… ஒவ்வொரு கேள்விக்கும் 3 பதில் சொல்லிட்டு ஓடிட்டாக
ஒரு கேள்விக்கு 3 பதிலா???
3 பதிலா சொன்னாதேன் எல்லாரும் கொழம்பி போவாங்களாம்!!!
அப்ப இனி நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நானும் அப்படிதேன் சொல்ல போறேன். சரி பேட்டும் (b)பாலுமா இருக்குற பாலா எங்கே போனாக?
தீபாவளிக்கு படம் பார்த்துட்டு அதிர்ச்சில பேயரஞ்ச மாதிரி இருக்காக!! வெளங்கிடும். சரி நா ஒரு கேள்வி கேக்குறேன் சொல்றீயா?
தெரிஞ்சா சொல்றேன்
தெரியலையே
நீயெல்லாம் எந்த ஸ்கூல்ல படிச்ச? விச்சு கிட்ட போயி கேளு….!!!!
ரொம்ம்ம்ம்ம்ப பேசுற நீ!! கணேஷ் சிறு கதை சொன்னாகளே கேட்டீயா?
எப்பவும் சயின்ஸா கத சொல்லுவாகளே அவுகதேனே…. ம்ம் படிச்சேன் புள்ள!
சரி பிரஷாத்க்கும் சென்னைக்கும் என்ன தொடர்பாம்?
அத விட ஒரு பெரிய மேட்டர் ஆட்ட அலங்கரிச்சு பலிகொடுக்க போறதுதேன்!!! அந்த ஆடு வேற யாரும் இல்ல… அவரேதேன்
ஹா…ஹா…ஹா…. உனக்கு எப்படி எல்லாரையும் தெரியுது???
தம்பி பலே பிரபு இருக்காகள? அவுகதேன் தமிழ் வலைபதிவர்களின் பயோடேட்டா குடுக்குறாக… அது மூலமா எல்லாரையும் தெரிஞ்சு வச்சுக்குறேன்
அப்ப நானும் என் பேர சேர்க்க சொல்லுறேன்
உன்னைய பதிவர்ன்னு ஒத்துகிட்டா கொடு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சரி நா கெளம்புறேன்….. நாள பின்ன பாத்தா பேசிக்கலாம்… வர்ட்டா……
நானும் கெளம்புறேன் பொண்ணு… இல்லைன்னா சீனா ஐய்யா கம்பால அடிச்சே வெரட்டிடுவாக!!!
**********************************
இந்த ஒருவாரமா விதியேன்னு வேற வழியில்லாம நா கூப்டேன்னு ஒரே காரணத்துக்காக (வரலைன்னாலும் விடவா போற?) வந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் அதற்கு உதவிய லெட்சுமி மாமிக்கும் என் நன்றிகள் பல பல!!!!
விதிமுறைகளை சரியா கடைபிடிச்சேனான்னு தெரியல… ஆனா என் சக்திக்குட்பட்டு கவனமா இருந்துருக்கேன். அதையும் மீறி எதாச்சும் தப்பு நடந்துருந்துச்சுன்னா மன்னிச்சூ… மன்னிச்சூ…
இன்னும் நெறைய பதிவர்கள அறிமுகப்படுத்தணும்னு ஆசை…. ஆனா நேரமின்மை காரணமா எதையும் ப்ளான் பண்ண மாதிரி செய்ய முடியாத்தில் எனக்குமே அதிக வருத்தம்…
நானாகட்டும் வலைச்சரத்தை படிப்பவர்களாகட்டும் அதில் அறிமுகப்படுத்தப்படும் பதிவுகளுக்கு உங்களின் ஆதரவை கொடுங்க. அதனால் அவர்களுக்கு புது உற்சாகம் கிடைக்கும். என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது அதன் மூலம் எனக்கு கிடைச்ச வரவேற்பும் அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்ல. ஆக பிறரின் சந்தோஷத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!!!
சரிங்க... விட்டா பேசிட்டேயிருப்பேனுங்க.... நா இப்ப கெளம்புறேனுங்க!!!!
உங்களனைவரின் மீதும் உங்களை சார்ந்திருப்பவர்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவ பிரார்த்திப்பவளாக....
உங்கள் சகோதரி
ஆமினா


