07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 30, 2011

ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனுங்க!!!

வந்துட்டீயா?இந்தா கேசரி எடுத்துக்க....


ஏது? செஞ்சீயா???


நானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க!

ம்ம்.... மரகதம் மாமிய பாத்தீயா? மகளுக்கு டீச்சர் வேல கெடச்சதும் அப்படியே பேச்ச மாத்திடுச்சு?!!

ம் கேள்விபட்டேன்.... அத விட கொடுமை.. மகன் பொறந்த நாள கொண்டாட மிச்சமா வச்சுருந்த குலோப்ஜாமுனை கூட கொடுத்ததாக சூர்யஜீவா சொன்னாகளே….. இன்னும் மனச விட்டு மறையல :-(

நித்யா புள்ள எறந்து போச்சே தெரியுமா ஒனக்கு?

சௌந்தர் சொன்னாக பொண்ணு! கேட்க கஷ்ட்டமாதேன் இருந்துச்சு. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு சொல்லுவாகளே…. அதே மாதிரிதேன்

வானதி இன்னைக்கு உள்ளங்கை அரிக்குதுபணம் வரப்போகுதுன்னு சொன்னுச்சேஎன்ன ஆச்சு?

ம் சொன்னபடியே கெடச்சுச்சாம். ஆனா திருப்பி கொடுத்துடுச்சாம்

பொழைக்கதெரியாத மனுஷி!!! கீதா சிகப்பி பத்தி சொன்னத கேட்டீயா??

ம் யூத்பூல்விகடன்ல கூட வந்துச்சாம்ல!!!

ம் ஆமா ஆமா... அப்பறம் ஜெயப்பரியா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்ல நடந்த ஒரு அதிசய சம்பவத்த பத்தி சொல்லியிருந்தாங்க

ம். நானும் கேட்டேன். விதியை மதியால ஜெயிச்சவங்கன்னுதேன் சொல்லணும்.  நீரஜ் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தான் இல்லையா? நாம்ம நல்லா கவனிச்சுகிட்டா செடி மட்டுமில்ல அவனும் மீண்டும் துளிர்ந்து நல்ல மனுஷனா வருவான்னு முடிவு எடுத்திருக்கு !!!

அதுவும் சரிதேன்இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு பராமரிப்பு ரொம்ப அவசியம் இல்லையா?

நிகாஷா எல்லா விஷயத்தையும் சொல்லி முடிச்சுடுச்சா??

இல்லல்லவழக்கம் போல சுவாரசியமா சொல்லிட்டிருக்கும் போது ஓடிபோய்டுச்சு!

அடடா….

நாதன் இருக்காகள…. இப்ப முன்னமாதிரி இல்லையே….. என்ன ஆச்சர்யம்??

ஆச்சர்யம் கனவு மூலமா வந்துருக்கு! செத்து போன மாதிரி கனவு கண்டாங்களாம்அதான் இந்த மாற்றம்!!!

என்ன நோட்ல எழுதிட்டு இருக்க?

இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச கவிதைலாம் எழுதி எழுதி வச்சுட்டிருக்கேன் சின்ன பொண்ணு!

அப்படியா? அப்படி என்ன கவிதை தான் எழுதி வச்சுருக்க? யார் எழுதுனா? கொஞ்சம் எனக்கும் சொல்லேன்!!!

எவனோ ஒருவன்! வாசகியாய் நீ இல்லையேன்னு வருத்தப்படுறேன். என் எழுத்துல நீ வசிக்கிறது தெரியாமன்னு சொல்லியிருந்தாங்க.


ம்....சேரி...


அம்மாவுக்கு பசி வந்தபோது கூட அதோட குழந்தைக்காக உணவு கொடுக்கும் தாயின் மகத்துவத்தை கூறும் தாய் பசித்திருக்கிறாள் என்னும் கவிதை சகோ செய்தாலி எழுதுனது..

மாலதியின் தவத்தின் காரணம் என்னன்னு நீயே பாரேன்


வெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான் என ஒரு சிறுமி சொல்வது போன்ற மகேஷின் நாவறண்ட சொர்க்கம் நெகிழ செய்தது. அதே போல் பனங்கூர் காந்தி ஏழைசிறுமியின் துயரத்தை வரிகளில் சொல்லியிருப்பார்


அடப்பாவமே….


இரவுகளில் நான்... அமானுஷ்ய பயத்தில் இருந்த போதும் உன் நினைவுகளை மீட்டெடுக்கும் போது எல்லாம் மறைந்து விடுகிறது என்பது போல் சொல்லும் வரிகளுக்கு சொந்தமானவுக  ரேவா. கூடல் குணா எழுதிய இரு பொருள்படும்படியான சிலேடை பாடலை நீ வாசித்து பாரு….. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!

அந்தளவுக்கெல்லாம் எனக்கு ஞானம் இல்லையே!!!


உன் பிரிவால் தினம் தினம் மரணிக்கிறேன் என ஒரு பெண் கதறுவது போன்ற  பிரஷா எழுதிய கவிதை ஏதோ மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது,  
அந்த நிலையில் உள்ள பெண்ணுக்காக பரிதாபப்பட வைக்கிறது!அதே போல் செண்பகத்தின் பிரிதலின் தாக்கம்..... மறுபடியும் ஒரு பாசமலர் பார்த்து முடிச்சது போன்ற உணர்வு


ம்ம்


விடியும் வரையில் கொஞ்சம் நானாக நிறைய நீயாக என்னை ஆக்ரமிக்கின்றாய் கனவுகளில்....... அதற்காகவாவது கனவில் கலையாதே என்று எழுதிவுக ஹரிணி

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகம் கொடுக்கும் அம்பாளடியாளும் இப்ப கவிதைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்!

குழந்தையின் பிரிவால் வாடும் தாயின் வலிகளை ரிம்ஸா முஹம்மத் 
எழுதிய குழந்தாய் என்னும் வரிகளில் அப்படியே பிரதிபலிக்கும் 

தன் பழைய காதலி கணவனுடன் எதிரில் வரும் போது அந்த காதலன் இதயம் படும் பாடு..... எத்தனை நாளானாலும் மறக்குமா அவன் நெஞ்சம்? அழகா இரு வரிகளில் சொல்லியிருப்பார்.... அதான் சே.குமாரின் திறமை!

இரும்பாயுதம் என்ற  சொல்லை மறந்திட அன்பென்ற ஆயுதம் என்ற ஒரு வார்த்தை போதும் என்ற லாக்ரின் சர்மா வரிகள் நச்!

நாம் மறந்தாலும் நம் நட்பு நினைக்கும் என்ற வரிகளில் நட்பின் ஆழத்தை காண்பித்திருப்பார் கவியழகன் 

எதிர்நீச்சல் போட்டு வாழும் ஒரு பெண்ணின் வாடும் நெஞ்சம் அழுகிறது- எழுதியவர் சகோ ஹாசிம்

 ஹேமாவின் அவகாசம் தேவைப்படுகிறது இலங்கையில் மக்கள் பட்ட வேதனைகளின் பிரதிபலிப்பு!

தாமதிக்கும் கணங்கள் அத்தனையும் நோவு என்று தனிமையின் க(ன)ணம் பற்றி சகோ ஸதக்கத்துல்லாஹ் எழுதிய கவிதை ரொம்ப அருமையா இருந்தது!


அட……….அட…..அட…….. எல்லாமே சூப்பர்!!! ஆமா உங்களையெல்லாம் நாஞ்சில் மனோ அமெரிக்காக்கு கூடிட்டு போடி பதிவர் சந்திப்பு நட்த்துனாங்களாம்ல!!


ஹி…ஹி…ஹி… யாரு போட்டு கொடுத்தா???? ஆர்கிட்டையும் சொல்லிடாத… பாஸ்போர்ட் விசா இல்லாம கூடிட்டு போயிருந்தாக!!


அடகளவானி கூட்டமே!!! நீ வெறும் அமெரிக்காதேனே போயிருக்க? வேதா என்னைய நெறைய ஊர்க்கு கூடிட்டு போயிருக்கு!!! அதுவும் ஒவ்வொரு எடத்துலையும் என்னைய போட்டோ பிடிக்கும் தெரியுமா?


சரி வயித்தெரிச்சல கொடுக்காத… இன்னைக்கு ஏரியால பாட்டியும் தாத்தாவும் ப்ரபோஸ் பண்ணதுதான் ஹாட் டாபிக்…. ரமேஷ் பாபுதான் இந்த மேட்டர பரப்புனதுன்னு தாத்தாவும் பாட்டியும் கொலவெறியோட தேடிட்டிருக்காங்க!

ஹா…ஹா…ஹா… நானும் கேள்விபட்டேன்!!!


பிரபுவ பாத்தீயா?

ம்ம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தாக… ஒவ்வொரு கேள்விக்கும் 3 பதில் சொல்லிட்டு ஓடிட்டாக


ஒரு கேள்விக்கு  3 பதிலா???

3 பதிலா சொன்னாதேன் எல்லாரும் கொழம்பி போவாங்களாம்!!!


அப்ப இனி நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நானும் அப்படிதேன் சொல்ல போறேன். சரி பேட்டும் (b)பாலுமா இருக்குற பாலா எங்கே போனாக?

தீபாவளிக்கு படம் பார்த்துட்டு அதிர்ச்சில பேயரஞ்ச மாதிரி இருக்காக!! வெளங்கிடும். சரி நா ஒரு கேள்வி கேக்குறேன் சொல்றீயா?


தெரிஞ்சா சொல்றேன்தெரியலையே

நீயெல்லாம் எந்த ஸ்கூல்ல படிச்ச? விச்சு கிட்ட போயி கேளு….!!!!


ரொம்ம்ம்ம்ம்ப பேசுற நீ!! கணேஷ் சிறு கதை சொன்னாகளே கேட்டீயா?

எப்பவும் சயின்ஸா கத சொல்லுவாகளே அவுகதேனே…. ம்ம் படிச்சேன் புள்ள!


சரி பிரஷாத்க்கும் சென்னைக்கும் என்ன தொடர்பாம்?

அத விட ஒரு பெரிய மேட்டர் ஆட்ட அலங்கரிச்சு பலிகொடுக்க போறதுதேன்!!! அந்த ஆடு வேற யாரும் இல்ல… அவரேதேன்


ஹா…ஹா…ஹா…. உனக்கு எப்படி எல்லாரையும் தெரியுது???

தம்பி பலே பிரபு இருக்காகள? அவுகதேன் தமிழ் வலைபதிவர்களின் பயோடேட்டா குடுக்குறாக… அது மூலமா எல்லாரையும் தெரிஞ்சு வச்சுக்குறேன்


அப்ப நானும் என் பேர சேர்க்க சொல்லுறேன்


உன்னைய பதிவர்ன்னு ஒத்துகிட்டா கொடு


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி நா கெளம்புறேன்….. நாள பின்ன பாத்தா பேசிக்கலாம்… வர்ட்டா……


நானும் கெளம்புறேன் பொண்ணு… இல்லைன்னா சீனா ஐய்யா கம்பால அடிச்சே வெரட்டிடுவாக!!!
**********************************
இந்த ஒருவாரமா விதியேன்னு வேற வழியில்லாம நா கூப்டேன்னு ஒரே காரணத்துக்காக (வரலைன்னாலும் விடவா போற?) வந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!


எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் அதற்கு உதவிய லெட்சுமி மாமிக்கும் என் நன்றிகள் பல பல!!!!


விதிமுறைகளை சரியா கடைபிடிச்சேனான்னு தெரியல… ஆனா என் சக்திக்குட்பட்டு கவனமா இருந்துருக்கேன். அதையும் மீறி எதாச்சும் தப்பு நடந்துருந்துச்சுன்னா மன்னிச்சூ… மன்னிச்சூ…


இன்னும் நெறைய பதிவர்கள அறிமுகப்படுத்தணும்னு ஆசை…. ஆனா நேரமின்மை காரணமா எதையும் ப்ளான் பண்ண மாதிரி செய்ய முடியாத்தில் எனக்குமே அதிக வருத்தம்…


நானாகட்டும் வலைச்சரத்தை படிப்பவர்களாகட்டும் அதில் அறிமுகப்படுத்தப்படும் பதிவுகளுக்கு உங்களின் ஆதரவை கொடுங்க. அதனால் அவர்களுக்கு புது உற்சாகம் கிடைக்கும். என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது அதன் மூலம் எனக்கு கிடைச்ச வரவேற்பும் அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்ல. ஆக பிறரின் சந்தோஷத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!!!


சரிங்க... விட்டா பேசிட்டேயிருப்பேனுங்க.... நா இப்ப கெளம்புறேனுங்க!!!!

உங்களனைவரின் மீதும் உங்களை சார்ந்திருப்பவர்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவ பிரார்த்திப்பவளாக....


உங்கள் சகோதரி
ஆமினா

34 comments:

 1. வலைச்சர அறிமுகமானவர்களுக்கும், அறிமுகப்படுத்திய உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்..!!

  தொகுத்தளித்த விதம் அருமை!!!

  ReplyDelete
 2. சிறப்பாய் செய்தீர்கள் என்ற மனநிறைவுடன் சென்று வருக சகோதரி.

  ReplyDelete
 3. எனது வலையில் இன்று:

  தமிழ்நாடு உருவான வரலாறு

  தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 4. உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்திங்க, கலக்கிட்டீங்க... விளையாட்டா நான் எழுதின கதையா அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி...

  ReplyDelete
 5. ஆமி சுப்பரா பணியை நிறைவு செய்திருக்கீங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. எனது கதையையும் இங்கு அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றிங்க))

  ReplyDelete
 7. உரைநடையில்
  அகம் ரசித்த பதிவுகளின்
  அறிமுகங்கள்

  உங்களின்
  கவி ரசனையின் வருடலால்
  பதிவுகள் மணக்கும்
  வலைச் சர மாலையில்
  நர்ம மலர்களுடன் மணக்குது
  ஒரு கிறுக்கல் மலர்


  மிக்க நன்றி சகோ ...

  ReplyDelete
 8. என் கதையையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி அக்கா :))

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள்... வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்த உங்களுக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. ஒரு வாரம் அசத்திடிங்க!
  பல நல்ல அறிமுகங்கள்.
  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. சகோதரி ஆமினா மிக வித்தியாசமாக அறிமுகம் செய்கிறீர்கள். என்னை மிக நெகிழ்த்திவிட்டீர்கள். எனது ரூபவாகினி இலங்கைத் தொலைக்காட்சிப் பேட்டியை அல்லவா போடடுள்ளீர்கள். ஓ! மிக மிக நன்றி சகோதரி. தொடருங்கள். வாசிக்கிறேன் இறை ஆசி கிடைக்கட்டும்.
  http://www,kovaikkavi.wordpress.com
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 12. நான் சமையலில் கைதேர்ந்தவள் அல்ல. சமைக்க ஆரம்பித்து 2 வருடம்கூட முழுமையடையவில்லை. வீட்டில் செய்யும் சில சமையல்களை எனக்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்து பதிவேற்ற வேண்டும் என்ற ஆசையால் புதிதாக ப்ளாக் ஆரம்பித்தேன். ஆனால் இப்போது அதிக பொறுப்புகளுக்கு ஆளாகியிருக்கிறேன். :-) கத்துக்குட்டிக்கு கைகொடுத்தமைக்கு மிக்க நன்றி. என்றும் உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை.

  ReplyDelete
 13. நன்றி ஆமினா.இந்த வார வலைச்சர ஆசிரியர் நீங்களா?உண்மையில் கவனிக்கவேயில்லை.அன்பு மன்னிப்போடு.நிறைவான பணியை திருப்தியோடு முடித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துகள் நன்றியும்கூட!

  ReplyDelete
 14. நிறைவான நல்லதொரு வாரமா இருந்தது ஆமி.. அறிமுகத்துக்கும் நன்றிகள் :-)

  ReplyDelete
 15. நன்றி ஆமினா..தலைப்பே அருமை. நன்றாக தொகுத்தளித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 16. வலைப்பூக்களை ரொம்ப அழகாத் தொடுத்து சுவாரசியமா கொடுத்திருக்கீங்க ஆமினா. வலைச்சரத்தில் கீதமஞ்சரியின் அறிமுகம் ரொம்பவே உற்சாகமூட்டுது. நன்றிங்க ஆமினா. அறிமுகப்படுத்தப்பட்ட எல்லாப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. தங்கம்பழனி

  வருகைக்கும் மிக்க நன்றி சகோ

  உங்களின் கருத்து என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது

  @சகோ நிஜாமுதீன்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 18. @சூர்ய ஜீவா

  //உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்திங்க, கலக்கிட்டீங்க... விளையாட்டா நான் எழுதின கதையா அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி...//

  ஹி...ஹி...ஹி... சுயதம்பட்டம் அடிக்கிறது தன்னடக்கமா :-)

  ரொம்ப அழகான கரு கொண்ட கதை....

  தொடருங்கள் சகோ

  ReplyDelete
 19. @மாமி

  உங்கள் உற்சாகத்தால் தான் இவ்வளவும் செய்ய முடிந்தது.. மிக்க நன்றி மாமி

  @கணேஷ்
  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 20. @சகோ செய்தாலி

  கவிதையில் வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி சகோ

  @சகோ வெங்கட்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

  @சௌந்தர்
  வருகைக்கு நன்றி தம்பி

  @கோகுல்
  மிக்க நன்றி சகோ

  @வேதா
  வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி

  ReplyDelete
 21. @நாகாராம்

  ஐ... அப்படி சொன்னா விட்டுடுவோமா???? குறிப்பிட்ட சில நாட்களிலேயே அதிகமான குறிப்பு கொடுத்து அசத்துவ நாகாவை அறுசுவை மறக்குமா? :-)

  வருகைக்கு நன்றி நாகா

  ReplyDelete
 22. @ஹேமா

  உங்களுக்கு அதிக பணியிருந்திருக்கும் என புரிந்துக்கொண்டேன். வாழ்த்தியமைக்கு நன்றி தோழி

  ReplyDelete
 23. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 24. நன்றி சகோ அறிமுகம் செய்தமைக்கு..
  வலைசரத்தில் நீங்கள் எழுதிய பதிவுகள் எல்லாம் அருமை.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. அறிமுகத்துக்கு நன்றி அக்கா. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. அறிமுகத்துக்கு நன்றி சகோதரி.
  மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  மிக்க நன்றி தோழரே.
  மேலும் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை.

  மகேஷ்

  ReplyDelete
 28. தங்கள் பணியை அழகாக நிறைவுசெய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. மிக்க நன்றி ஆமினா என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு :-)

  ReplyDelete
 31. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அமினா.

  ReplyDelete
 32. அட்டகாசமான பதிவு வலைச்சரத்தின் இந்த தேடல்களுடன் கைகோர்த்த சிறப்பு பதிவாளர்களின் கலக்கல்கள் வாராவாரம் அசத்தல்களாகி நிற்கிறது

  சகோதரியின் அலசலில் எனது கவிதையொன்றும் இடம்பெற்றிருப்பது எனக்கு மகிழ்வைத்தருகிறது

  ஆழ்கடலான பதிவர் உலகில் ஆழ்ந்து முத்தெடுத்து அழகுபடுத்திய அன்னைக்கு நன்றிகள் வாழ்த்துகள்

  ReplyDelete
 33. @ஆமினா,

  அறிமுகப்படுத்தலுக்கு நன்றி - மகிழ்ச்சி...

  ReplyDelete
 34. அறிமுகப்படுத்தலுக்கு நன்றி - மகிழ்ச்சி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது