07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 31, 2011

மகிழம்பூவுடன் சிறுபொழுதுகளின் சரம்.



வணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு சிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்ப காலத்தில் தங்களின் அருமையான பின்னூட்டத்தினால் என்னை ஊக்குவித்த பதிவுலக நண்பர்கள் திரு.எல்.கே, திரு.கருண், திரு.மனோ, ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அடிப்படையிலேயே ஒரு ஆசிரியர். கற்றுத்தருதல் என்கிற வார்த்தையைவிட தேவையானவற்றையும், புதியனவற்றையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆசிரியரின் பணி என்பதே என் கொள்கை. இங்கேயும் அதேதான், என்னையும் எனக்கு அறிமுகமான பதிவுகளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து   ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன். முன்னதில் ஒரே ஒரு புன்னகையில் பல அறிமுகம் தொடங்கும், பின்னது நண்பர்களாக பரிணமித்த ஒரு குழுவின்  வெற்றிப்புன்னகையுடன் நிறைவடையும்.


இந்த வார வலைச்சரத்தின் கருப்பொருள் : சிறு பொழுதுகள்.

சிறு பொழுதுகள்:  ஒரு நாளானது  ஆறு பகுதிகளாக பிரித்து அவை சிறு பொழுதுகள் என அழைக்கப்பட்டன. அவை பின்வருமாறு:
    
விடியல்  அல்லது வைகறை   - 2 முதல் 6 மணி வரை   
காலை -   6 முதல் 10 மணி வரை     
மதியம் அல்லது முற்பகல்-  10 முதல் 2 மணி வரை   
ஏற்பாடு அல்லது சாயுங்காலம் - 2 முதல் 6 மணி வரை
 மாலை அல்லது அந்தி - 6 முதல் 10 மணி வரை
 இடையாமம் அல்லது இரவு  - 10 முதல் 2 மணி வரை

சிறு பொழுதுகளை பற்றிய விளக்கமானது குறியீடுகளாக இலக்கியத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒரு நாளின் பகுதிகளை மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களாகவும் கொள்ளலாம். இவையே வலைச்சரத்தில் சரம்சரமாக சேர்த்துக் கட்டப்படப்போகின்றன. வாருங்களேன். இன்றைய சிறு பொழுதுகளில் மகிழம்பூச்சரத்தில் பயணிப்போம். நாளை முதல் உங்களுடன் நான்.

விடியல் :
  அன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் 
 குழந்தை பருவம் -பால பருவம். கருவிலிருந்தது முதல் பள்ளி செல்லும் பருவம் வரை. 
    பிறந்த குழந்தை முதலில் உணர்வது பசி. தேடுவது தாயை. இங்கு தாய்மைக்கு மதிப்பு மிக அதிகம். விடியலில் பசிக்குரல் எழுப்பும் குஞ்சுகளுக்காய் உணவு தேடி வரும் தாய் பறவையின் அறிவை சேர்த்து சொல்கிறேன் தாய்மை என்பது ஐந்து அறிவுகளுக்கும் உட்பட்ட மகத்துவம் உடையதுதான்.   ஒரு குழந்தை வளர்வதற்குள் தாய் 32 அவஸ்தைகளை அடைகிறாள் என்று வேதம் சொல்கிறது. 
இந்த கவிதைகளை   படியுங்கள்   தாய் எனும் சக்தி வடிவம்  
                                                                         மகிழம்பூ வாழ்க்கை

காலைப் பொழுது.

 அன்றைய நம்பிக்கையை வெற்றிபெறவைக்கச்  செய்யும் முனைப்புகள்.
 பிள்ளைப்பருவம். பள்ளி செல்வது முதல் பதின் வயது வரையுள்ள பருவம்.
                 
இந்த பருவம் குழந்தை தந்தையை கவனிக்கத் தொடங்கும் காலம். குழந்தைக்கும் தந்தைக்குமான உறவு தொடக்கமாகிறது. தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆரம்பம் முதல் கடைசி வரை அமைதியான நதியில் செல்லும் ஓடம் என்றால், தந்தையுடன் ஏற்படும் உறவு அடிக்கடி அலை வந்து அலைக்கழிக்கும் ஓடமாகிறது.  தந்தை என்ற உறவின் முழு பரிமாணமும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில்  விசுவரூபம் எடுத்து பிரமிக்க வைக்கும். இந்த கடிதத்தை படியுங்களேன்.   
அஞ்சல் பெட்டியை சேராதவை.              


முற்பகல் :
        
       அன்றைய நாளின் செயல் திட்டங்களை செயல்படுத்தும் நேரம்.
       குமார பருவம் - பதின் வயது முதல் திருமணம் ஆகும்வரை. 

வாழ்க்கையை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திக்கும் பருவம். மற்றவர்களை எடைபோட முனையும் தருணம். நட்பு, சகோரத்துவம் போன்ற மற்ற உறவுகளின் மேன்மையை உணரும் நேரம். வேலை,படிப்பு ஆகியவை கவனத்தில்வரும். 

உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திற்கான உளவியல் தீர்வுதான் Emotional Intelligence. இது பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு   உணர்வுகள் என்னும் ஆயுதம் -1.  உணர்வுகளை சரியாக பிரயோகிக்க கற்றுக் கொண்டால் இனிய வாழ்க்கையின் அடித்தளம் அமையும்.  
மனதின் பரிமாணங்களை உணர  இந்த கட்டுரையினை படியுங்கள்.
மலரினும் மெல்லிய மனம்

சாயங்காலம் :
              அன்றைக்கு செய்ய திட்டமிட்ட செயல்களின் செயலாக்கத்தினை திறனாய்வு செய்யும் நேரம்.
              யௌவனம் அல்லது சம்சார பருவம். தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதற்கு தலைவனாகும் தகுதியை பெற்றுக் கொள்ள விழையும் பருவம். வெற்றிகரமான இல்வாழ்க்கைக்கு அடித்தளமிடும் இந்த பருவத்தில்தான் மிகுந்த மனமாச்சரியங்களை உணர முடிகிறது. 
இல்லறத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள  இந்த கட்டுரையினை படியுங்கள்.
 ஆல் போல் ... அறுகு போல்...



மாலை அல்லது அந்தி நேரம்: 

 
             அன்றைய செயல்கள் வெற்றியோ அல்லது தோல்வியோ,  அவை நம்மை பாதிக்காத வகையில் சக்தியூட்டிக் கொள்
ளும் தருணம்.
             மூத்தமகன் அல்லது பேரிளம் பருவம். முப்பதிலிருந்து அறுபது வயது வரை. ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கட்டம். மற்ற பருவத்திலிருப்பவர்களுக்கு உதவும் பொறுப்பு மிக்க காலம். பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து தருவதும், வீட்டின் பெரியவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் இந்த வயதுள்ளோரின் கடமையாகிறது.  பொறுப்புகளும் கவலைகளும் அதிகம் வரும் இந்த வயதில்  ஒரு உறுதியான மன நிலை தேவைப்படுகிறது. உடல் நிலையை பொறுத்தவரை ஒரு அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய மாற்றங்கள் நிகழும் நேரம். (சாமியாராகப் போகிறேன் என்று சிலர் குமுறும் நேரமும் இதுதான்). இந்த நேரத்து பிரச்சினைகளை சீர் செய்ய கீழ்வரும் கட்டுரைகள் உதவும்.

 நிம்மதி என்றொரு தென்றல்
 மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண.


இடையாமம்:
            இருள் ஆரம்பித்து ஒரு நாளைய உழைப்பின் பலன்களை அனுபவிக்கும் நேரம். 


 வயோதிக பருவம். அறுபது வயதிற்கு மேல். வாழ்க்கையின் நிறைவான கட்டம். இத்தனை நாளைய வாழ்க்கையின் பலனாக அமைதியும் அன்பும் சூழ இருக்க வேண்டிய தருணம். குழந்தைகளை கொண்டாடுபவன் மனிதனாவான் எனில், மனிதன் புனிதனாவது மூத்தவர்களை முக்கியமாக வயதான பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போதுதான்.   முதியோரின் பார்வையாக இந்த பதிவுகளை படியுங்கள்
அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்
 சதுப்பு நிலக்காடுகள்  

மகிழம்பூச்சரத்தின் சிறுபொழுதுகளின் பயணித்தமைக்கு நன்றி.உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நாளை 'விடியலின் விந்தைகளில்' சந்திப்போம். நன்றி.

50 comments:

  1. சிறுபொழுதுகளோடு வாழ்க்கையை ஒப்பிட்டு வழங்கிய பதிவுகளின் அறிமுகம் அருமை. சிலவற்றை வாசித்தேன். இன்னும் மற்றவற்றையும் வாசித்து விரைவில் கருத்திடுவேன். வலைச்சர ஆசிரியர் பணியை வெற்றிகரமாகத் துவக்கியுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சாகம்பரி.

    ReplyDelete
  2. பொழுதுகளோடு மனிதபருவத்தையும் ஒப்பிட்ட விதம் ரொம்ப அருமை சகோதரி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பருவத்தை பொழுதுகளோடு ஓப்பிட்டது - முற்றிலும் மாறுப்பட்ட சிந்தனை. சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  4. அன்பின் சாகம்பரி - அருமையான துவக்கம் - அழகாகச் செல்கிறது - இரசித்தேன் - சுட்டிகளைத் தொடர்கிறேன் - படித்து அங்கு மறுமொழிகள் இடுகிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அருமையாக தொடங்கி உள்ளீர்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. கடைசி இரண்டு சுட்டிகள், வேலை செய்யவில்லை

    ReplyDelete
  7. அருமையான துவக்கம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கு நன்றி கீதா. தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  9. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆமினா.

    ReplyDelete
  10. பாராட்டிற்கு நன்றி திரு. ரமேஷ்.

    ReplyDelete
  11. பாராட்டிற்கும் கருத்திட்டதற்கும் நன்றி அய்யா.

    ReplyDelete
  12. மிக்க நன்றி திரு.சூரியாஜீவா. தவறினை சரி செய்துவிட்டேன். தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.கருன்

    ReplyDelete
  14. பாராட்டிற்கு நன்றி .ரமணி சார்.

    ReplyDelete
  15. சிறுபொழுதுகளோடு பதிவுகளின் அறிமுகம் அருமை.


    அருமையான துவக்கம்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாருங்கள் ... கலக்குங்கள்

    ReplyDelete
  17. ஆசிரியப் பணியேற்றிருக்கும்
    ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன்..

    ReplyDelete
  18. மகிழம்பூச்சரத்தின் சிறுபொழுதுகளில் நானும் நடந்து வந்தேன்..

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியர் பணியை வெற்றிகரமாக கொன்டு செல்ல இனிய நல் வாழ்த்துக்கள் சாகம்பரி!!

    ReplyDelete
  20. இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன்.

    உணர்ந்து ரசித்த அருமையான வரிகள்..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. அன்பு சகோதரி...
    ஆரம்ப சரமே அழகாய் தொடுத்திருக்கீங்க
    சிறுபொழுதுகளில் நானும் நடந்துவந்தேன்.
    அறிமுகப்பதிவு நன்று.
    தொடருங்கள் செம்மையாக தங்களின் பணியை...

    ReplyDelete
  22. மகிழம்பூவின் வாசனையே மனதை மயக்கவல்லது. சிறுபொழுதுகள் சிறப்பானதொரு தலைப்பு. தங்களின் படைப்புகள் பற்றிய அறிமுகங்கள் யாவுமே அருமையோ அருமை தான்.

    //ஒரு குழந்தை வளர்வதற்குள் தாய் 32 அவஸ்தைகளை அடைகிறாள் என்று வேதம் சொல்கிறது. //

    அருமையான தகவல்.


    தொடருங்கள். தொடர்கிறோம்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  23. // இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன். //

    ததாஸ்து [அப்படியே ஆகட்டும் ]
    நன்றி!

    ReplyDelete
  24. உண்மையாகவே புதியமுறையில் பங்கிட்டு அளித்திருக்கிறீர்கள்.

    தொடர்ந்தும் சிறப்புற செய்ய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. சிறு பொழுதுகளோடு நல்ல துவக்கம்.
    வாழ்த்துக்கள்.தொடருங்கள்!

    ReplyDelete
  26. @சே.குமார்
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  27. @ராஜபாட்டை ராஜா
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  28. @முனைவர்.இரா.குணசீலன்
    வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  29. @ மனோ சாமிநாதன்
    வாழ்த்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன மேடம். நன்றி

    ReplyDelete
  30. இராஜராஜேஸ்வரி said...
    //உணர்ந்து ரசித்த அருமையான வரிகள்..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

    நன்றி தோழி.

    ReplyDelete
  31. மிக்க நன்றி சகோ.மகேந்திரன்.

    ReplyDelete
  32. வாழ்த்தியதற்கும் விரிவாக கருத்துரையிட்டதற்கும் மிக்க நன்றி.
    மிக்க நன்றி VGK சார்!

    ReplyDelete
  33. வணக்கம். ஊக்கமூட்டும் கருத்திற்கு நன்றி திரு.சத்ரியன்.

    ReplyDelete
  34. வணக்கம் திரு.கோகுல், கருத்திற்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  35. நல்ல பகிர்வு... வாழ்த்துகள்....

    ReplyDelete
  36. வணக்கம் அம்மா...
    அருமையான தொடக்கம் வலைச்சரத்தில்..... தொடருங்கள்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  37. பருவமும்,பொழுதும் அருமை. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  38. ஆஹா!எனக்குப் பிடித்த மகிழம்பூவின் மணத்தோடு சிறு பொழுதுகளின் சரம் தொடுக்கப்படப் போகிறதா?!
    நானும் வைகறையிலிருந்து இடையாமம் வரை தங்களுடன் பயணித்து அனைத்தையும் அனுபவிக்கத் தயார்!(ஆசானிடம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளதே!)

    ReplyDelete
  39. மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.
    நீங்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக வந்தது மிகவும் பெருமைப் படுகிறோம்.

    ReplyDelete
  40. @வெங்கட் நாகராஜ் said... கருத்துரையிட்டு பாராட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  41. தமிழ்வாசி - Prakash said...

    வணக்கம் அம்மா...
    அருமையான தொடக்கம் வலைச்சரத்தில்..... தொடருங்கள்
    வாழ்த்துக்கள்...//
    வாழ்த்துக்களுக்கு நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  42. @விச்சு said...
    வருகைக்கும் பாராட்டிற்கும் திரு.விச்சு நன்றி.

    ReplyDelete
  43. கண்டிப்பாக ஒரு நாள்கூட தவறாத வருகைப்பதிவு வேண்டும். நன்றி ராஜி.

    ReplyDelete
  44. @Rathnavel said...
    //மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  45. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. மகிழம்பூவுடன் சிறுபொழுதுகளின் சரத்தை வலைச்சரத்தில் அருமையாக தொடுத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. மிக்க நன்றி திரு.சண்முகவேல்

    ReplyDelete
  48. மிக்க நண்றி திரு.ராஜேஷ்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது