சனி ஸ்வரம் 'ப'
➦➠ by:
அனுபவம்,
உளவியல்,
மோஹனம்,
ஸ்வரம் 'ப'
வயலின் ஒரு நரம்பு இசைக்கருவி ,பழங்காலத்தில் பிடில் என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணை (பக்கவாத்திய) கருவியாக இது விளங்குகின்றது.இது நான்கு முக்கிய தந்திகளைக் கொண்டது.இதனை வாசிக்க bow எனப்படும் ஒரு குச்சி உண்டு.ஸ்ருதியை சரி செய்து கொள்ள தந்திகளை இறுக்கி கட்டியுள்ள பொத்தான்களை இறுக்கியும் தளர்த்தியும் மாற்றிக் கொள்ளலாம்.இதன் நாதம் மனம் இளகும் வண்ணம் அமையப் பெற்றது.
இன்றைய ஸ்வரம் 'ப' , ஸ்வரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் அமையப் பெற்றது.
5. பஞ்சமம்: ஏழு ஸ்வரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. ( பஞ்ச - ஐந்து) ஸ்வர எழுத்து "ப"
அது போல இன்றைய ஐந்தாம் இடத்தை அனுபவப் பதிவுகளும் உளவியல் பதிவுகளும் வகிக்கின்றன.மனம் இளக்கும் வயலின் நாதம் உளவியல் சம்பந்த
பிரச்சனைகளைத் தீர்க்கின்றன. அது போல் இவர்களின் பதிவுகளும் தீர்வுகளைக் கொடுக்கின்றன.அவற்றைப் பார்க்கலாம்.
ஒவ்வொருத்தர் அனுபவமும் வாழ்க்கைல ஏதாவது பாடம் சொல்லித் தராப்புல அமையுது.இவங்க வாழ்க்கைப் பாடம் பாருங்க. நாம் பக்குவப் பட எத்தனை பேர் உதவறதை சொல்றாங்க.அகிலா! நீங்க கொஞ்சம் அடிக்கடி எழுதலாமே?
ஒரு மனிதனின் மன ஆரோக்கியங்கறது எங்கேருந்து வருதுன்னு கேட்டா,முதல்ல தாய் தந்தையர் கிட்டே இருந்துதான்.பெற்றோர் முன் மாதிரியா இருந்தாதான் குழந்தைகளின் உள்ள வளர்ச்சி நன்றாக இருக்கும். 'நல்ல தாய் தந்தையராய் இருப்பது எப்படி'னு தன் பதிவுல படிக்கறவங்களுக்கு புரியும் விதமா சொல்லி இருக்காங்க நம்ம நிலாமகள்
குழந்தைகள் பற்றிய எதிர்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியான்னு கேட்டிருக்கார் செல்வராஜ்.
அது மட்டுமில்லாம இவர், குழந்தைகள் சாப்பிட மறுப்பது பற்றியும் பெற்றோர்கள் செய்ய வேண்டியது பற்றியும் கூட இந்த பதிவுல சொல்லி இருக்கார்.
வலையின் பெயரே ஒரு வாழ்க்கைப் பாடம் மாதிரி வச்சுருக்கார் இவர்.
குழந்தைகளை எப்படி வளர்க்கணும் எப்படி ஊக்குவிக்கணும்னு சொல்லித் தாரார் இவர் (ஆனா சார்!இந்த காலத்துக் குழந்தைகள் கொஞ்சம் உஷார்.தயாரான்னு கேட்டா குரல் கொடுக்க மாட்டாங்க கண்ணாமூச்சில.அப்படி கொடுத்தாலும் இன்னொரு குழந்தை அங்க தேடத் தெரியாம இருக்கறதில்லை) மற்றபடி இந்த பதிவு சூப்பர் சார்
சாலைகள் போதி மரங்கள்.எப்போதும் ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கின்றன.கொடுத்துக் கொண்டே இருக்கின்றன அப்படின்னு சொல்றார் சேரலாதன்.சாலைகளிலிருந்து அனுபவ பாடம் கத்துக்கற கலையை சொல்றார் தன்னோட ஆணி வேர்களும், சல்லி வேர்களும் பதிவில்.
வசந்த காலத்துல வண்ணமயமா இருக்கற பசுமையான மரங்கள் இலையுதிர்க் காலத்துல தன்னை உதிர்த்திக் கொள்கிறது.ஐந்து மாதங்கள்தானே அதுக்கு எதுக்கு அலட்டிக்கணும்னு அது நினைக்கறதில்லைங்கறதை இயற்கையின் இலையுதிர்க் காலத்துல அன்புடன் ஆனந்தி சொல்றாங்க.ஆனா மனிதர்களோ கஷ்டம் வரதுக்கு முன்னாடியே வரப் போற கஷ்டத்தை நினைச்சு புலம்புகிறார்கள்.
நட்பையோ உறவையோ இழக்க நேரிடறது எத்தனை கொடுமையான விஷயம்.அதுவும் அப்படி இழக்கறதுக்கு முன்னாடி அவங்க நம்ம கிட்ட பேச நினைக்கும்போது நம்மால பேச முடியாத சூழல் இருந்துட்டா அது குற்ற உணர்வா மாறிடுது.இவங்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல..........
இவங்க பதிவைப் படிச்சு பாதில நான் கலங்கிட்டேன்.கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பின் இவங்க தந்த பின்னூட்டம் பாத்தப்பறம்தான் கண்கள்ல ஆனந்தக் கண்ணீரோட நிம்மதியா மூச்சு விட்டேன்.இவங்க இப்ப எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல எனக்கு கூற முடியுமா ப்ளீஸ்...
அனுபவம் மற்றும் உளவியல் சம்பந்தப் பட்ட பதிவுகள்னா இவரைத் தெரியாதவங்களே இருக்க முடியாது.வாழ்வின் நிதர்சனங்களையும் பிரச்சனைகளின் தீர்வுகளையும் இவங்களைப் போல ஒரு தீர்க்க தரிசனக் கண்ணோட்டத்துல பாக்க தனித் திறமை வேணும்.வாழ்வியல் பாடங்கள்ல
இவங்களை என் ஆசானாக நான் நினைக்கிறேன்.
இந்த படத்தை பார்த்தா எப்பேர்ப்பட்ட மனதும் இதமாகாதோ....
மோஹனம்:
அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், க்ரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம்.மனதிற்கு இதம் தந்து மிக அழகாக இசைக்கும் ராகம்.
நன்னு பாலிம்பா நடசி ஒச்சிதிவோ..... பாடல்:
download
Artists: LalgudiGJayaraman
இந்த அனுபவ,உளவியல் பதிவுகளைப் படிச்சு கடைப்பிடிச்சா உள்ளத்தின் நலம் வயலின் இசையில் மோஹன ராகம் மாதிரி வாழ்வியலில் அருமையா இசைக்காதோ??!!!!!!!!!
|
|
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.
சுகமான மோகனம்..
ReplyDeleteஅறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
சனி ஸ்வரம் 'ப' மோகனமாய் வசீகரிக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவித்தியாசமான முறையில்... இசையை மையமாய் வைத்து.. அழகாய் தொகுத்து இருக்கீங்க.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி!
உங்களுக்கும், "பஞ்சமத்தில்" இணைந்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!
நல்ல அறிமுகங்கள். எனது நண்பர் சீனுவை [கையளவுமண்] இந்த வாரத்திலும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....
ReplyDeleteசங்கீதமாய் சென்ற வாரம் நாளையோடு முடியப்போகிறது என்று வருத்தம் இப்போதே வந்துவிட்டது. பேசாம இன்னும் ஒரு வாரம் உங்களையே ஆசிரியரா போடச் சொல்லலாமா?
வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வும் நன்றியும் ராஜி.
ReplyDeleteஏழு ஸ்வரங்களையும் தொடர்புபடுத்தி ஏழு நாட்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை புதுமைப்படுதியமைக்கு பாராட்டுகள். வாத்தியங்கள் பற்றிய விவரங்கள், அழகிய ராகங்கள், அவற்றிலமைந்த பாடல்கள், ஸ்வரங்களுக்குத் தொடர்புடைய உபயோகமான பதிவுகள்... அடடா...ரொம்ப மெனக்கிடல் தெரிகிறது. எடுத்த காரியத்தை சிரத்தையுடன் செய்வது நிறைவைத் தருகிறது. தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வருகிறேன்.
நல்ல அறிமுகம்
ReplyDeleteமோகனம் அதுவும் லால்குடி. அருமை.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கிருபா நந்தினி குறித்து தகவல் கிடைத்தால் தனி பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
ReplyDeleteசனிக் கிழமை - உளவியல் தலைப்பில் அறிமுகம் கிட்டியுள்ளது. அத்துடன் மனதையும் உறங்க வைக்கும் லால்குடியின் தெய்வீக இசை. அறிமுகம் செய்யப்பட்ட அத்தனை பதிவுகளும் மனதில் இடம் பிடிக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி ராஜி.
ReplyDeleteமென்மையாக காதுக்கு இனிமையாக பின்னிசையுடன், மோஹ்னமான இன்றைய அறிமுகங்களைக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். vgk
எல்லோரும் ரொம்ப வெயிட்டா எழுதறாங்கன்னு புரியுது மேடம்! :-)
ReplyDeleteமதுர மோஹனமாய் இருக்கிறது!! :-)
Nalla esai.. RaaJiii.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.
congratz.
Vetha. Elankathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
This comment has been removed by the author.
ReplyDeleteலால்குடியின் மோகனமான மோகனத்துடன் ஆரம்பித்த :P: பஞ்சமம் பிரமாதம் ஆனால் மோஹன ராமா பாடல் இல்லை பதிலாக நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோ ராமா சூப்பர். உங்களுக்கு தெரியுமா இந்த மோஹன ராகம் ஆசியா முழுவதும் வியாபித்துள்ள ராகம்.தாய்லந்து நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் மோஹன ராகம் இசைக்கும் போதுதான் முடிசூட்டிக்கொள்வார்கள்.பஞ்சமத்தை வயலினிகாட்டி உருக்கியதுமாதிரி காருண்யமிக்க பதிவுகளின் வரிசையால் மனதையும் தொட்டுவிட்டீர்கள்
ReplyDeleteஎனது பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteப்ளாக் எழுதவே நேரமில்லாமல் போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். முடிந்த அளவு சீக்கிரம் எழுதப்பார்க்கிறேன். வலைச்சரத்தில் இடம்பெற்ற மற்ற நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
வாழ்த்திய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@காந்தி பனங்கூர்
ReplyDelete@மகேந்திரன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@மாதவி
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ஆனந்தி
வர்கைக்கும் வாழ்த்டிற்கும் நன்றி
@வெங்கட் நாகராஜ்
அட!அவர் உங்களது நண்பரா?!
எனது வலையில் மீண்டும் சந்திக்கலாம்.வருத்தம் வேண்டாம்.
நான் பெற்ற இன்பம் மற்றவங்களும் பெற வேண்டுமே!
@நிலாமகள்
உங்கள் பெயர் மிக நன்றாக உள்ளது.பதிவிற்காக வைத்ததா அல்லது பெயரே இதுவா?
பாராட்டுக்களுக்கு நன்றி.கட்டாயம் சமயம் கிடைக்கையில் அனைத்து பதிவுகளையும் வாசிக்கவும்.
@'என் ராஜபாட்டை-ராஜா'
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@RAMVI
கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி
@suryajeeva
தகவல் கிடைத்தால் கட்டாயம் போடுகிறேன்.நானும் அவர்களைப் பற்றி அறிய தவிப்புடன் காத்திருக்கிறேன்.வருகைக்கு நன்றி
@சாகம்பரி
கருத்திற்கு நன்றி மேடம்
@வை கோபாலகிருஷ்ணன் சார்
பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
@RVS
ஒவ்வொருத்தரும் என்னமா எழுதறாங்கங்கறீங்க!!!!!!!!!
மதுர மோஹன பாராட்டிற்கு நன்றி
@kavithai
கருத்திற்கு நன்றி.தங்கள் வலை எனக்கு ஓப்பன் ஆகவில்லை.
@தி ரா ச
கருத்திற்கு நன்றி.முடிசூட்டு விழாவின் போது மோஹனம் எனக்கு புது தகவல்.பகிர்விற்கு நன்றி.பாராட்டிற்கும் நன்றி
@Sriakila
எழுதுங்கள்.பயனடைபவர்கள் அதிகம்.வருகைக்கு நன்றி
@shanmugavel
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள் ராஜிக்கா! நான் உடம்பு ஒண்ணுமில்லாம நல்லா இருக்கேன். உடம்பை விட மனசு ரொம்ப காயப்பட்டுப் போச்சு. அதான், இனிமே பதிவு எழுதறதில்லைன்னு நிப்பாட்டிட்டேன். உங்களை மாதிரி அன்பு உள்ளங்களுக்காகத்தான் இப்போ மத்தவங்க பதிவுகளைப் படிச்சு, கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன். என் மீதான அக்கறைக்கும், என் வலைப்பூ பத்தி உங்க பதிவுல குறிப்பிட்டதுக்கும் ரொம்ப நன்றிங்க்கா!
ReplyDelete@கிருபாநந்தினி
ReplyDeleteவாழ்த்துக்கள் கிருபா!உடம்பு குணமாகி நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
எழுதறதை நிறுத்த வேண்டாம் கிருபா!விமர்சனங்களால் காயப் படுபவன் உண்மையான கலைஞனா, நல்லதொரு கலைஞனா வளர முடியாது.அதனால எதையும் மனசுக்குள்ள கொண்டு போறதை ஒதுக்கிட்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அது உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரும் கட்டாயமா.