07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 16, 2011

ராஜி - ஆதி வெங்கட்டிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஆதி வெங்கட் தான் ஏற்ற பொறுப்பினை ஈடுபாட்டுடனும் - உழைப்பினால் தேடிப்பிடித்து பதிவர்களை அறிமுகம் செய்தும் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூற்று நாற்பதற்கும் மேலான மறுமொழிகள் பெற்றும் - சரிவர நிறைவேற்றி இருக்கிறார். அன்னாரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த்ள்ளார் சகோதரி ராஜி. இவர் .........

"விருதுநகர் மாவட்டத்தில் அமைந்த ராஜபாளையத்தில் பிறந்து, சிறுவயதில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்த திருநெல்வேலியில் வளர்ந்து, தாமிரபரணியையே இவரது தோழியாக சிறுவயதில் கற்பனை செய்து பின் தந்தையின் பணி நிமித்தம் அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்.

தந்தையின் அரசுப் பணி காரணமாக வருடம் ஒரு ஊரில் இருந்து படித்து பின் அடுத்த வருடம் மற்றொரு ஊர் என்று வாழ்ந்ததால் பல ஊர்களின் அனுபவங்களை இளம் வயதிலேயே கண்டறிந்தவr. கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் பல மாநிலங்களிலும் வாழ்நதபவர் - வாழ்பவர்.

வணிகவியலில் இளநிலைப் படிப்பு படித்து சமஸ்க்ருதத்தில் டிப்ளோமோ பெற்றவர்.

இவரது இலக்கிய ஆர்வத்தின் காரணமாக சிறு வயதிலிருந்தே பல புத்தகங்களையும் பல எழுத்துக்களையும் படிக்கும் பழக்கமும், தெளிந்த ஞானமுடைய இவரது தந்தையின் மூலம் கேள்வி வழியே கற்றறிதலும் தொடர்ந்தது.

பத்தாவது படிக்கும் பொழுது தமிழாசிரியை தந்த ஊக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். அன்றிலிருந்து இன்றுவரை அந்த ஆர்வம் தொடர்ந்து இன்று நம் முன் அவரை நிறுத்தியுள்ளது

சகோ ராஜியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட்
நல்வாழ்த்துகள் ஆதி

நட்புடன் சீனா

13 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சென்ற வார பொறுப்பினை செவ்வனே செய்த ஆதி வெங்கட் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. கடந்த வாரம் சிறந்த பணியாற்றிய ஆதிவெங்கட் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!

  வரும் வாரத்திற்கு பொறுப்பேற்கவுள்ள ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ஆதி.
  வாருங்கள் ராஜி,வாழ்த்துகள்

  ReplyDelete
 5. செவ்வனே பணிசெய்த சகோதரி ஆதி வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள்.

  ஆஹா, எங்க ஊரு தாமிரபரணிக் கரையில் வளர்ந்த சகோதரி ராஜி அவர்களே
  வருக வருக. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சிறப்பாகப் பணியாற்றி நம்மிடமிருந்து விடை பெற்றுச்செல்லும் சென்ற வார ஆசிரியர் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  திருமதி ”ஆதி வெங்கட்” அவர்கள் விடைபெற்றுச் செல்கிறார்களே என யாரும் வருத்தப்பட வேண்டாம்;

  ”நவீன ராஜி வெங்கட்” ஆகிய நான் இருக்கிறேன் என பேரெழுச்சியுடன் பொறுப்பேற்க வந்து கொண்டிருக்கும்
  புதிய வலைச்சர ஆசிரியர் அவர்களை வருக! வருக!! வருக!!! என இரு கரம் கூப்பி வரவேற்பு கொடுப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

  நான் மட்டுமா என்ன?
  நாம் எல்லோருமே தானே!!

  புதிதாகப் புரட்சிப் புயலாக வரவிருக்கும் திருமதி ராஜி அவர்களை நாம் எல்லோருமே வாழ்த்தி வரவேற்போம்.

  அவர்களின் மிகச்சிறந்த படைப்புகள் போலவே அவர்களின் பணியும் மிகச்சிறப்பானதாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  நல் வாழ்த்துக்கள் திருமதி ராஜி மேடம்!

  அன்புடன் vgk

  ReplyDelete
 7. வாய்ப்பளித்த திரு சீனா அவர்களுக்கு எனது நன்றிகள்

  @கோகுல்

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  @திருமதி பி எஸ் ஸ்ரீதர்
  @மகேந்திரன்

  வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

  @வை கோபாலகிருஷ்ணன் சார்

  தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மகிழ்வுடன் வரவேற்பதற்கும் நன்றி.தங்களின் வாழ்த்துக்கள் என்றும் எனக்கு துணை நின்று ஊக்கமளிக்கும்

  @மாதவி

  நன்றி மாதவி

  ReplyDelete
 8. வாழ்த்துகள் சகோ ராஜி...

  ReplyDelete
 9. சென்ற வாரத்திற்கு நன்றியும்
  வரும் வாரத்திற்கு வரவேற்பும்
  கொடுக்கும்
  சொற்சரம்

  ReplyDelete
 10. சகோதரிகளுக்கு வாழ்த்தும் வரவேற்பும் :-))

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியர் ராஜிக்கு என் வாழ்த்துகள்.

  என்னை வாழ்த்திய சீனா அய்யாவுக்கும்,மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 12. @வெங்கட் நாகராஜ்
  @suryajeeva
  @அமைதிச்சாரல்
  @கோவை2தில்லி

  நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது