07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 13, 2011

போஜனம் செய்ய வாருங்கள்!மதுரையில் குடிகொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் எப்படி நடந்தது, அந்த திருக்கல்யாணத்தில் சாப்பிட என்னன்ன கொடுத்தார்கள் என்பதற்கு ஒரு பாட்டு இருக்கிறது.  பாம்பே சகோதரிகள் பாடிய அந்தபோஜனம் செய்ய வாருங்கள்…” பாடலைக் கேளுங்கள்


Bhojanam Seyya Vaarungal | Online Karaoke


என்ன பாடலைக் கேட்டீர்களா? பாடலில் வரும் அத்தனை வகை உணவுகளையும் இப்போது சமைக்க யாராவது இருக்கிறார்களா என்பது  தெரியவில்லை.  இன்றைய வலைச்சரத்தில் சமையல் குறிப்புகள் எழுதும் சில பதிவர்களின் பக்கங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன்.


 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்று தனது பக்கத்தின் தலைப்பில் எழுதி வைத்திருக்கும் சகோதரி கமலா தனது அடுப்பங்கரை பக்கத்தில் வித்தியாசமாக பப்பாளிப் பழ கேசரி என்ற இனிப்பினை நம்முடன் பகிர்ந்து இருக்கிறார்.  படத்தைப் பார்த்த உடனேயே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது.  நீங்களும் செய்து அசத்துங்களேன்.

  
சாதாரணமா குடைமிளகாயை சாம்பார்ல போடுவோம்.  ஆனா குடை மிளகாய் வைத்து பொரியல் கூட செய்யலாம் என்பதை சொல்லிக் கொடுக்கிறார் மழை மேகம்  சகோ சுந்தரா.  அந்தப் பக்கத்தில போட்டு இருக்கிற பச்சைப்பசேல் குடை மிளகாயைப் பார்த்தாலே செய்து சாப்பிடணும்னு  ஆசையா இருக்கு! என்ன பொரியல் செய்தபிறகு எப்படி இருக்கும்னுதான் படம் போடல.  அதுனால என்ன, இன்னிக்கு சமைச்சுப் பார்த்துட்டா போச்சு என்கிறீங்களா? அதுவும் சரிதான்.


சில சமையல் குறிப்புகள் ஆங்கில நாளிதழ்களிலோ அல்லது புத்தகங்களிலோ வரும்போது அவற்றைப் பார்க்கும்போது நன்றாக இருக்கும்.  செய்து பார்க்கலாம் என்றால் அவற்றில் தேவையான பொருட்கள் என்று ஆங்கிலத்தில் போட்டிருப்பது தமிழில் என்ன பொருள் என்று தெரியாது.  அந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா?  கவலைப் படேல்.  உங்களுக்கு உதவ இங்கே  சென்று பாருங்கள். தீர்ந்ததா உங்கள் பிரச்சனை?

மீனா.கே. என்கிற சகோதரிஅம்மாவின் சமையல்என்ற வலைப்பூ வைத்திருக்கிறார்.  செட்டி நாடு சமையல் என்றால் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் என்று சொல்லும் இவர் செய்திருக்கும் வெள்ளைப் பணியாரம் எப்படி இருக்குன்னு இங்கே பாருங்க

மங்கையர் உலகம் என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் சகோதரி அனிதா சமையல் குறிப்புகள் என்ற பதிவில் நிறைய குறிப்புகளை எழுதி இருக்கிறார்மேலும் மருத்துவக் குறிப்புகள், நவராத்திரி பற்றிய பதிவுகள் என பல விஷயங்களில் பதிவுகள் வெளியிட்டிருக்கிறார்


இந்த மாதத்தில் தீபாவளி வரப்போகிறது.  முன்பெல்லாம் நிறைய வீடுகளில் தீபாவளி மருந்து கிளறுவார்கள்இப்போது அதை எப்படிச் செய்வது என்றே பலருக்குத் தெரியாதுஅப்படிப்பட்டவர்களுக்காகவே சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்தீபாவளி மருந்துசெய்வது பற்றி எழுதி இருக்கிறார் இங்கே. 

இன்றைய வலைச்சரத்தில் ஸ்வீட், காரம், மருந்து எல்லாம் பார்த்தாச்சு..  இனி நாளை வெள்ளிக்கிழமை என்ன என்று கேட்பவர்களுக்கு, “நாளை காலை தெரிந்துவிடும்! அதுவரை காத்திருங்கள்!


 
நாளை சந்திப்போம்…..

நட்புடன்

ஆதி வெங்கட்

51 comments:

 1. நேற்று இது எங்க ஏரியான்னு தலைப்பைப் பார்த்ததுமே சமையல் தொகுப்பை எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எல்லா பதிவர்களும் எனக்கு புதியவர்கள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  'போஜனம் செய்ய வாருங்கள்' கேட்டதுமே சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 3. தீபாவளி நேரத்தில் தேவையான லேகியம் செய்வது எப்படி கொடுத்து விட்டீர்கள்.

  எல்லோரும் புதியவர்களே படித்து விடுகிறேன்.

  அறிமுகம் நல்லா இருக்கிறது.

  வாழ்த்துக்ககுள் ஆதி.

  ReplyDelete
 4. இன்று அருமையான சாப்பாடு.
  ஜீரணமாக தீபாவளி லேகியம் வேறு.
  அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 6. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

  அருமையான போஜனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 7. சூப்பரான பாட்டு.கேக்கவே ஆசையா இருக்கு.அனைவரும் எனக்கு புதியவர்களே.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. சூப்பரான பாட்டு.கேக்கவே ஆசையா இருக்கு.அனைவரும் எனக்கு புதியவர்களே.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வயிறும் மனதும் நிறைந்துவிட்டது.

  ReplyDelete
 11. நல்ல பாட்டு ஆதி.

  அருமையான பகிர்வு. மிக்க நன்றி

  ReplyDelete
 12. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 13. தீபாவளிக்கு முன்னாலேயே விருந்தா? ஒரு கை (!!!) பார்த்துவிட வேண்டியதுதான்.

  ReplyDelete
 14. இன்று அனைத்தும் சமையல் குறிப்பா?

  ReplyDelete
 15. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. @ கலாநேசன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. @ ராஜி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 18. @ கோமதி அரசு: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 19. @ வை.கோபாலகிருஷ்ணன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 20. @ ரத்னவேல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 21. @ இராஜராஜேஸ்வரி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 22. @ thirumathi bs sridhar: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 23. @ கோகுல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 24. @ லக்ஷ்மி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 25. @ புதுகைத் தென்றல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 26. @ சமுத்ரா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 27. @ "என் ராஜபாட்டை"- ராஜா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
 29. @ suryajeeva: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 30. @ சே.குமார்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 31. ஒவ்வொன்றாய் படித்து பிடித்ததை செய்து சாப்பிடணும்..

  ReplyDelete
 32. என்னது நாளைக்கு வரை காத்திருக்கணுமா?

  இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  அழகாய் தொகுத்தளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 33. நல்ல "போஜனம்" கிடைத்தது.

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. பாட்டும் பிரமாதம் ...சமையல் அறிமுகங்களும் பிரமாதம்

  ReplyDelete
 35. புதிதாய் சிலரை அறிந்ததில் மகிழ்ச்சி...நன்றி ஆதி

  ReplyDelete
 36. அருமை... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 37. பப்பாளி பழக்கேசரி,கொடைமிள்காய்ப் பொரியல், சமையலிற்கு உபயோகப்படும்
  பொருட்களின் தமிழ் ஆங்கில சொற்கள்,தாவரவியல் பெயரும் கூட,செட்நாடு வெள்ளைப்பணியாரம்,ஏகப்பட்ட சமையல் டிப்ஸ்,தீபாவளி லேகியம் என்று போஜனப் பகுதியை வித்தியாசமாய் பகிர்ந்து அசத்திவிட்டீர்கள்.பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 38. @ அமுதா கிருஷ்ணா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 39. @ சத்ரியன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 40. @ மாதேவி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 41. @ பத்மநாபன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 42. @ அப்பாவி தங்கமணி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 43. @ மாய உலகம்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 44. @ ஆசியா உமர்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 45. @ மோகன் குமார்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க சார்.

  ReplyDelete
 46. அருமையான பாடல் பகிர்வுக்கும் அறிமுகத்துக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 47. @ சுந்தரா: நன்றிங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது