கதம்ப ரோஜாக்கள் @ 4/10/2011
➦➠ by:
திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்.
வணக்கம் |
வலைப்பூக்கள் ரோஜாக்களாக மலர்ந்துவிட்டது.நான் அறிமுகப்படுத்தவிருக்கும் பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் கதம்பங்களாக ,
கதம்ப ரோஜாக்களாக அறிமுகம் செய்யவிருக்கின்றேன்
1.ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்ததை அச்சேற்றி நூலாக படைத்தவர் யார் தெரியுமா?அப்படி வந்த முதல் தமிழ் நூல் மற்றும் கண்காணாமல் தொலைக்கவிருந்த தமிழை காத்து வளர்த்தவரை மறந்துவிடலாமா? தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.
2.பக்தி மனம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப்பெறுவோம் .நவராத்திரி நாயகிகள்,நரசிம்மரையும் தரிசித்து திருப்பாவை, திருவெம்பாவை பாடி தரிசித்து திருமயிலை,திருக்கயிலாய யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.
3.மணக்கும் அம்மாவின் முந்தாணையில் முகம் பொதிக்கின்றார்
யாசர் அராஃபத்.
4.மூக்கு மேல கோபம் வரும்.ஆனால் மூக்கு மேல வெறுப்பும்,பின்பு விருப்பமும் வந்தது எதனாலென்று சொல்கின்றார் குமார் கருப்பையா.
5. கூகுளில் முழுமையாக தேடுவது எப்படியென பகிர்ந்துள்ளார்
சதிஸ்குமார்.
4.மூக்கு மேல கோபம் வரும்.ஆனால் மூக்கு மேல வெறுப்பும்,பின்பு விருப்பமும் வந்தது எதனாலென்று சொல்கின்றார் குமார் கருப்பையா.
சதிஸ்குமார்.
6. காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்படாமல் புத்துணர்ச்சியோடு புது உலகை காண்கின்றானோ அவனே புதிதாய் பிறப்பவன் என்கிறார் எழில் எழிலன் அவர்கள்.
7. போவோர் வருவோரின் கால்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறானென்று மனம் உருக சொல்கிறார் இவர்
8. களெசல்யா வீட்டிலே தோட்ட வளர்ப்பிற்கான எளிய வழிகளை பகிர்ந்துள்ளார்.
9.குடிநீரை வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம் என்கிறார் வி.கே.மகாதேவன் அவர்கள்.
10. தஞ்சை வாசனின் கவிதையில் நாளை அழிந்துபோகும் உயிரினங்களில் நீயுமுண்டு என்கிறது சிட்டுக்குருவி .
இன்றைய கதம்ப ரோஜாக்களானவர்களை வரவேற்று உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.இன்று அனைவருக்கும் அன்பு பரிசு இந்த கேக்.
|
|
முத்தான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாவ்!படங்களும் அறிமுகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சூப்பரா இருக்கு!
ReplyDeleteஇத்தனை வித ரோஜாக்களை எங்க பிடிச்சீங்க.பதிவர்களும் ரோஜாக்கள் மாதிரி வித விதமா வித்தியாசமான தகவல்களோட இருக்காங்க.வாழ்த்துக்கள்
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்தல் படங்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் போலவே
தொடர வாழ்த்துக்கள்
Superb!
ReplyDeleteஎன்னுடைய பதிவை உங்கள் பக்கத்தில் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி...
ReplyDeleteஎன்னை அறிமுகபடுதியதுக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteபிற அருமையான அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
படங்கள் மிக அழகு.
பாராட்டுகள்
இன்று அறிமுகம் செய்யப்பட்ட பதிவுகளில் சில மட்டுமே எனக்கு தெரிந்தவை. மற்றவை புதியன. இன்றைக்கு கேக் தந்ததற்கும் நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை...
ReplyDelete#"கௌசல்யா" கொஞ்சம் திருத்தி எழுதவும்.......
இன்றைய முதல் அறிமுகமே முத்தான அறிமுகம். மிகச்சிறப்பாகவே தேர்வு செய்துள்ளீர்கள்.
ReplyDeleteதமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் பற்றி, உண்மையான பகுத்தறிவுடன் எழுதப்பட்ட “பகுத்தறிவு” அல்லவா இன்றைய முதல் அறிமுகம்.
HAYYRAM வலைப்பதிவர் பெயரும் ஹாய்ராம்! ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் போலவே! சிறப்பான எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை.
இன்று தன்னால் தான் தமிழ் வளர்ந்துள்ளதாகவும், எழுச்சி பெற்றுள்ளதாகவும் மார்தட்டிவரும் போலிப் பகுத்தறிவுவாதிகள் அவசியம் படிக்க வேண்டிய பகுதியே.
என்னைப்பொருத்தவரை இவர் எனக்கு ஓர் புத்தம் புதிய அறிமுகமே ஆனாலும் கிடைத்த அரிய பொக்கிஷமே!
அவரின் வலைப்பூவினில் இன்று என்னை நான் Follower ஆக்கிக்கொண்டுள்ளேன்.
நன்றி, உங்களுக்கே!
அனைத்துப் புதிய அறிமுகங்களுக்கும் உள்ளே சென்று பார்க்கிறேன். அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
அன்புடன் vgk
ரோஜா மொட்டு மலர்வது போல காட்டப்பட்டுள்ள படம் அழகோ அழகு, தங்களின் தங்கமான அழகிய பூப்போன்ற மனசு போலவே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவ்வளவு பக்குவமாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, வெகு அழகாக முன் கூட்டியே செட் செய்து வைத்துவிட்டு, கடந்த ஒரு வாரமாக இரவு முழுவதும், தாங்களும் தூங்காமல் என்னையும் தூங்க விடாமல்
ReplyDelete“ஒரே பயமா இருக்கு சார்,
என்ன பண்றதுன்னே தெரியலை சார், இது எனக்கு புதிய அனுபவம் சார், கம்ப்யூட்டர் சிஸ்டர் வேறு படாதபாடு படுத்துது சார்”
என்று ஏதேதோ சாட் மெஸ்ஸேஜ் கொடுத்துக்கொண்டே இருந்தீர்களே!
நானே கொஞ்சம் உள்ளூர பயந்து போய் விட்டேன். இருப்பினும் உங்களுக்கு ஆறுதலாக, நீங்கள் சோர்வு அடைந்து விடக்கூடாது என்பதற்காக, உங்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, நம்பிக்கையூட்டும் பதில்களாக சொல்லிக் கொண்டிருந்தேன்.
பலே ஆளு நீங்க ! சபாஷ் மேடம். vgk
சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்கள்
ReplyDeleteஅன்புள்ள திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் அவர்களுக்கு,
ReplyDeleteஎன் முதற்கண் நன்றி கலந்த வணக்கம்...
என்னுடைய படைப்பையும் என்னையும் உலகிற்கு மீண்டும் அறிமுகபடுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
மற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் வணக்கமும் வாழ்த்த்துகளும்...
பிறரின் எண்ணங்களை தாங்கள் அறிமுகபடுத்தும் பயணம் அருமை... உங்களுக்கும் என் வாழ்த்துகள்...
@கடம்பவன் குயில்
ReplyDeleteவாங்க,வாழ்த்துகளுக்கு நன்றி.
@ராஜி
கூகுளில் கிடைத்த படங்கள்தான்.ரொம்ப சந்தோஷம்.
@கவிதை வீதி சளெந்தர்
வருகைக்கும்,வாழ்த்தியமைக்கும் நன்றி.
@ரமணி
வாங்க சார்.மிக்க நன்றி.
@மிடில் கிளாஸ் மாதவி
மிக்க நன்றி.
@சதிஸ்குமார்
ReplyDelete@kousalya
அழைப்பை ஏற்று வலைச்சரம் வந்தமைக்கு நன்றிகள்.
@சாகம்பரி
பதிவுகளையும்,கேக்கையும் சுவைத்ததற்கு நன்றி.
@வை.கோபலகிருஷ்ணன் சார்.
ReplyDeleteமுதல் பதிவு தங்கள் மனதில் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி.அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.பதிவருக்கும் வாழ்த்துகள்.
@வை.கோபலகிருஷ்ணன் சார்
ReplyDeleteஎன் புலம்பல்களை கேட்டு உற்சாகமளித்ததற்கு நன்றி.இந்த பூக்களை செட் பன்னவே நேற்று அதிக நேரமாகிட்டு.அழகான ரோஜாக்கள் அதிகமாக உள்ளது.ஆனால் என் இஷ்டத்திற்கு செட் பன்ன முடியல/தெரியல.
@தமிழ்வாசி-ப்ரகாஷ்
ReplyDelete@சூர்யஜீவா
நன்றி.தொடர்ந்து வருகை தரவும்
@தஞ்சை வாசன்.
ReplyDeleteவருகைக்கும்,கருத்துகளுக்கும் நன்றி. தொடர்ந்து படைப்புகளை தாருங்கள்.
மிக்க நன்றி
ReplyDeleteமலர்ந்து மணம் வீசும் அருமையான வண்ண வண்ண வலைபூக்களுக்கு வாழ்த்துக்கள். பாரட்டுக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகதம்ப ரோஜாக்களாக கலக்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள். ரோஜாக்கள் படம் அழகு. கேக் வேறு அற்புதம்.
ReplyDeleteகலக்குங்க ஆச்சி.....
ஆச்சி..., பதிவும் படங்களும் அழகாய் இருக்கு :-)
ReplyDeleteஒரு சிலர் தெரியாதவர்கள் அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் :-)
அறிமுகங்கள் மிக அருமை .ரோஜா மலர் அழகோ அழகு .வாழ்த்துக்கள் ஆச்சி .
ReplyDeleteநேரம் வேறுபடுவதால் முதலில் வந்து பின்னூட்டமிட இயலவில்லை
அறிமுகங்கள் அருமை... ரோஜாக்கள்... எழில் கொஞ்சுகின்றன.... :)
ReplyDelete@மகாதேவன்.வி.கே
ReplyDeleteவருகைக்கு நன்றி.
@ இராஜராஜேஸ்வரி
@சே.குமார்.
@கோவை 2 தில்லி
@ஜெய்லானி
@ஏஞ்சலின்
@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
பதிவுக்கும்,பகிர்வுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் :)
ReplyDeleteவாசம் வீசும் கதம்ப ரோஜாக்கள்..
ReplyDeleteஅடியேனின் வலைப்பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஆச்சி ஆச்சி .
ReplyDeleteமற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தாமதமாக வந்ததற்கு மன்னியுங்கள், பணி நிமித்தம் வெளியூர் சென்று விட்டதால் உடனே பதிவு போட முடியவில்லை.
ரோஜாக்கள் மனசை கொள்ளை அடிக்கின்றன.
ReplyDeleteஎன்னை உங்கள் தளத்தில் அறிமுகம் செய்து கௌரப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDelete