திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் ஆகிய ஆச்சியின் முன்னுரை
➦➠ by:
சுய அறிமுகம்,
திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்
இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியராக வாய்ப்பளித்த திரு.சீனா சார் அவர்களுக்கும்,வலைச்சர குழுவினருக்கும்,பரிந்துரைத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன்சார்
அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வலைப்பதிவுகளை கட்டணமின்றி நாமே உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமென்று வலைப்பதிவை எனக்கு அறிமுகம் செய்த எனது நண்பர் திரு.அரும்பொறைச் செம்மல் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என் எழுத்தும்,படிப்பும் பட்டைய படிப்பு மட்டுமே.கடந்த வருடம் என் அம்மாவின் மரணம் முற்றிலும் என்னை பாதித்திருந்த நிலையில் அம்மாவின் நினைவுகளை பாதுகாக்க கடந்த அக்டோபர் மாதம் வலைப்பதிவு துவங்கினேன்.மற்றவர்களின் பதிவுகளை படித்ததின் ஈர்ப்பில் எனக்காக மற்றொரு வளைதளம் உருவாக்கி என் சிற்றறிவிற்க்கு எட்டியதை பகிர்ந்து வருகின்றேன்.இதற்கு ஒத்துழைப்பு அளித்துவரும் என் கணவருக்கும் மகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என் அம்மா இறந்த பின்னும் வழிகாட்டிய பாதையாக பதிவுலகை நினைப்பதுண்டு.
இந்த ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக திரு.எல்.கே அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டேன்.முகம் தெரியாதவர்களின் ஆறுதல்களும்,நட்புகளும்,எழுத்தார்வமும் கிடைக்கப்பெற்றேன்.
இந்த பத்து மாதங்களுக்குள் திருமதி.ஆனந்தி, திருமதி.அப்பாவி தங்கமணி திரு.கவிதை வீதி செளந்தர், ஆகியோர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன்.இன்று இந்தவார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன்.வாய்ப்பளித்த திரு.சீனா சார் அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
நிறைகுறைகளை தொடர்ந்து பின்னூட்டமளித்து என்னை ஊக்கப்படுத்திவரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார்,திருமதி.ராஜி, திருமதி.ஆதி, திருமதி.ஏஞ்சலின்ஆகியோருக்கு எனது நன்றிகள்.திரட்டிகளில் இணைக்க உதவிய திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் முதன் முதலில் தேசிய மொழியில் துவங்கி 64 கலைகள் சொல்லி நிலவொளி பள்ளி, லோட்டஸ் டெம்பிள் வரை சென்று உருவமும் மொழியும் அற்றவர் கடவுள் என்றாலும் ஏ.டி.எம் மில் அனைவரையும் சிரிக்க வைத்து அக்ஷார்தாம் சென்றாலும் பாண்டி நாட்டு தமிழை மறக்க முடியாதே!சிறுகதை முயற்சியில் கனவு நிறைவேறுமா என்று வினவியுள்ளேன்.
விடைபெற்ற மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு வாழ்த்துகளும்,நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் அறிமுகம் செய்யவிருக்கும் பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும்
நான் அறிமுகம் செய்யவிருக்கும் பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும்
தொகுத்து வழங்க வருகின்றேன்.
அறிமுகமாகும் வலைப்பூக்களை பகிர்ந்து,நிறை குறைகளை தெரிவிக்கவும்.
ரோஜா மலர்களுடன்
வலைப்பூக்களும்பதிவுகளும்
கதம்பங்களாக
கதம்ப ரோஜாக்களாக
கதம்ப ரோஜாக்களாக
நாளை முதல்
அறிமுகங்களாக
மலரும்.
அறிமுகங்களாக
மலரும்.
இன்றைய
வருகையாளர்க்கு
இனிய சாக்லேட்
ரோஜாவை
பரிசளிக்கின்றேன்.
வருகையாளர்க்கு
இனிய சாக்லேட்
ரோஜாவை
பரிசளிக்கின்றேன்.
நன்றி. |
|
|
அன்பின் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் - அருமை அருமை - துவக்கம் அருமை. அழகாகச் செல்கிறது. அத்தனை சுட்டிகளையும் சுட்டி, பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள். சாக்லேட் ரோஜாவிற்கு நன்றி
ReplyDeleteதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்
ReplyDeleteசாக்லேட் ரோஜா எனக்குதான்....
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்... சும்மா தூள் கிளப்புங்க...
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் திருமதி பி.எஸ். ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துகள்....
ReplyDeleteதனது ஆசிரியர் பணியை செவ்வனே செய்து முடித்த சென்ற வார ஆசிரியர் மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கும் வாழ்த்துகள்....
தொடரட்டும் வலைச்சரப் பூக்கள்...
வாழ்த்துகள் ஆச்சி. வலைச்சர ஆசிரியராக சிறப்பான அறிமுகம் தர வாழ்த்துகள்
ReplyDeleteசாக்லேட் ரோஜாவிற்க்கு நன்றி
ReplyDeleteதங்கள் பயணம் இனிதே தொடங்கட்டும்
வலைசர வாழ்த்துக்கள் :-).இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள் ஆச்சி :-)
ReplyDeleteஅழகான ஆரம்பம்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சாக்லெட் ரோஜா நல்லாயிருக்கு ஆச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாங்க வருக
ReplyDeleteவருக வருக..............
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி!
'அம்மா’ மேல் ஆசை வைத்து அம்மாவின் அன்பும், அருளும், ஆசியும் பெற்றவர்களுக்கு, வாழ்க்கையில் என்றுமே வெற்றி மேல் வெற்றி கிட்டுவது உறுதியே என்பதற்கு சான்று தான், வலைச்சர ஆசிரியரான மிகவும் பாராட்டுக்குரிய பெருமை வாய்ந்த பதவி தங்களைத்தேடி தானாகவே இன்று வந்துள்ளது.
ReplyDeleteமிகச்சிறப்பாகப் பணியாற்றுங்கள்.
புன்னகையுடன்
வருக! வருக!! வருக!!!
புதுப்புது அறிமுகங்களைத்
தருக! தருக!! தருக!!!
மனமார்ந்த
ஆசிகள்.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
என்றும் அன்புடன் vgk
திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்
ReplyDeleteதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பரிசளித்த சாக்லேட் ரோஜா அழகோ அழகு தான்.
ReplyDeleteஆசையுடன் அதை சுவைக்கப்போய்
கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் எச்சிலானதும்,
என் நாக்கு எரிச்சலானது தான் மிச்சம்.
ஹா ஹா ஹா ஹா !!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட வித்தியாச்மாக சாக்லேட் ரோஜா ரொம்ப நல்ல இருக்கு.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆச்சி .ஆரம்பமே அசத்தல் .சாக்லேட் ரோஜா அருமை .
ReplyDeleteஉங்கள் ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஆச்சி.
ReplyDeleteசாக்லேட் ரோஜா தந்து அசத்தி விட்டீர்கள்.
@சீனா சார்
ReplyDeleteவாய்ப்பளித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
@கலாநேசன்
@முனைவர்.இரா.குணசீலன்
@மாய உலகம்
உங்களுக்குதான்
@வெங்கட் நாகராஜ்
வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்
@எல்.கே
ReplyDelete@சம்பத் குமார்
@ஜெய்லானி
@மிடில் கிளாஸ் மாதவி
@ஆமினா
@சூர்யஜீவா
அனைவருக்கும் நன்றிகள்.
@வை.கோபலகிருஷ்ணன் சார்.
ReplyDelete@மகேந்திரன்
@ஜலீலா கமல்
@காந்தி பனங்கூர்
@ஏஞ்சலின்
@கோவை2தில்லி
அனைவருக்கும் நன்றிகள்
சாக்லேட் ரோஜா அனைவர் மனதையும் கவ்ர்ந்ததில் மகிழ்கின்றேன்.
உங்களுடைய அம்மா நினைவுப் பதிவுகள் எனக்கு மிகவும் வலி தந்தவை.
ReplyDeleteதினமும் இனிப்பு உண்டா? அப்ப, கண்டிப்பாக வருவேன். வாழ்த்துக்கள்.
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியேற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாக்லேட் ரோஜாவிற்கு நன்றி!
சாக்லேட் ரோஜா தான் ச்சோ ஸ்வீட் !
ReplyDeleteமுன்னுரை மிக அருமை திருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்களே...
ReplyDeleteஅம்மாக்குழந்தையா நீங்களும்?
தங்களுடைய வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் அன்பு வாழ்த்துகள்....
சாக்லேட் ரோஸ் வெச்சாலும் வெச்சீங்க. எல்லாருக்கும் சாக்லேட் சாப்பிடும் ஆசை வந்துட்டுது பாருங்க...
வாங்க வாங்க அன்பு வரவேற்புகள்பா...
ஒரு வாரமும் அழகா சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணி செய்து முடித்த அன்பு மாதவிக்கு என் அன்பு வாழ்த்துகள்பா...
ReplyDelete@சாகம்பரி
ReplyDeleteஎன்ன சொல்றதுனு புரியல மேடம்..இதெல்லாம் பாக்க என் அம்மா இல்லாம போய்ட்டாங்கன்ற வருத்தம் இருக்கிறது.
ஒகே,தினமும் உண்டு.வர கெஸ்ட்டை படிச்சிட்டு மட்டும் விட மனதில்லை.நன்றி.
@இரவு வானம்
@மனோ சாமிநாதன்
@கோகுல்
@நாய்குட்டி மனசு
@மஞ்சுபாஷனி
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள்.
இவ்ளோ பேர் மனதில் இடம்பிடித்த சாக்லேட் ரோசிற்கும் நன்றி சொல்லனும்.
வாழ்த்துக்கள்:)
ReplyDeleteதொடக்கமே நல்லா அமைஞ்சுருக்கு ஆச்சி
ReplyDeleteகதம்ப ரோஜாக்களுக்காக காத்திருக்கிறேன்.
சாக்லேட் ரோஜா அருமை
@மழை
ReplyDeleteவருகைக்கு நன்றி
@ராஜி
வாங்க,சாதகமான சூழ்நிலை இல்லை போல அதான் உங்கள காணும்னு நினைத்தேன்.வந்துவிட்டதற்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteவாழ்த்துக்கள். சாக்லேட் ரோஜாவிற்கு நன்றி
ReplyDelete@கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteவாங்க,வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.
@இராஜேஸ்வரி
நன்றி.உங்களுக்கும் பிடித்துவிட்டதா,சந்தோஷமே
வணக்கம் தங்கள் வலைத்தள ஆசிரியர் கடமை எல்லாவகையிலும் சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சாக்லேட் கொடுத்தமைக்கும்
ReplyDeleteபகிர்வுக்கும் ........
@அம்பாளாடியாள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாழ்த்துகள்.ஆரம்பமே விறுவிறுப்பாக உள்ளது.
ReplyDeleteஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்