07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 26, 2011

வித்தியாசமாய்


வா சின்ன பொண்ணு. ஏன் பொலம்பிட்டே வார்ர??

முன்னலாம்  நாங்க பேரு வைக்கிறதா இருந்தா நாலுபேருகிட்ட விஷாரிச்சு நல்ல பேரா எடுத்து காதுல 3 தடவ சொல்லி பேர வச்சுடுவோம். ஆனா இந்த காலத்துல அப்படியா கெடக்கு? இன்னைக்கு காய்கறி வாங்கிட்டு இருந்த பையன்கிட்ட உன் பேரு என்னடான்னு கேட்டேன். சின்னப்பயலாம்.

ஹா…..ஹா….ஹா…. இவ்ளவ் தானா? அவுக சொன்ன ஒரு குரல்ன்னு மனசாட்சி  பேசுற மாதிரி கதை  நல்லா இருந்துச்சு சின்ன பொண்ணு. கேட்டீயா?

வாஸ்த்தவந்தேன். ஆனா இப்படியா பேரு வைப்பாக??? கந்தசாமி, மொக்கைசாமின்னு ஒலகத்துல எவ்ளவ் நல்ல பேருலாம் கெடக்கு?  என்னமோ போ……..

இதுக்கே இப்படி சளிச்சுக்குறீயே??!!. இன்னும் கெடக்கு!!!. மழைக்கால விடியல் பத்தி சொன்னாகளே அவுக பேரு நாய்குட்டி மனசு.

அம்மாடி

அப்பறம் வரலாற்று நாயகர்கள் பத்தி சொல்லிட்டிருப்பாகளே ? அவுக பேரு மாணவன்

 ஆத்தி………… இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட டீவி பொட்டி  உருவான வரலாற  சொன்னாகள??

ம் ஆமா அவுகளேதேன். அப்றோம் வேலைக்கார பொண்ணு வள்ளி பத்தி சொன்னாகளே அவுக பேரு கும்மாச்சி

ஆத்தாடி. போன வாரம் கொல சாமி கோயிலுக்கு சாமி கும்புட போயிருந்தப்ப பத்தாவது படிக்கிற பையன் பேரு ஆளுங்க! வேண்டா வெறுப்பா சாமி கும்புடுட்டிருந்துச்சு. ஆனா தங்கச்சிகாரி  பயபக்தியா வேண்டிட்டு இருந்துச்சு. என்னம்மா வேண்டிக்கிட்ட அப்படின்னு அவுக அப்பா கேட்ட்துக்கு சக்திமான எப்படியாவது காப்பாத்திடுன்னு வேண்டுச்சாம். காலக்கொடும!

அப்றோம்…… வெளங்காதவன் ஊர்ல அம்மனுக்கு மொளகா அரச்சு பூசுறாகளாம்ல தெரியுமா உனக்கு?

அம்மோய்ய்ய்ய்ய்……… எனக்கு தெரியாதே விஷாரிக்கேன்!

சரி நீ ஓட்டு போட போயிருந்தீயா ??

ம் போனேன் போனேன். அவர்கள் உண்மைகள் பத்திரிக்கை மாதிரி;-) வச்சு நடத்துதாகளே. அவுக கூட உள்ளாச்சி எலக்ஷனுக்கு ஓட்டு போட போறீகளான்னு கேட்டாக. ஆமாண்டேன்


வெளியூர்க்காரன்  சைந்தவி,சிபி பீச்சுல அழுதுட்டு இருந்தத பத்தி சொல்லிட்டிருந்தாக கேள்விபட்டேனே உண்மையா?………

ஹும்…..ஆமா………………. அத ஏன் கேக்குற………. சிரிக்கிறதா அழுகுரதான்னு தெரியல.  பொறவு தலகீழா தொங்குமே வௌவ்வாலு……….. அவுகளும் இன்னார் இன்னார் இன்ன படத்துல நடிக்கலாம்னு பட்டியல் போட்டு காமிச்சு சிரிப்ப வரவழச்சாக……. சிரிச்சு மாளல ஹா…..ஹா…..ஹா……

நானும் கேட்டேன் சின்னபொண்ணுநல்லா  ச்சொல்லியிருந்தாவ!

அப்பறம் வர்ர வழிலதேன் பவுடர் ஸ்டார் ஐடியா மணி. வீடு இருக்கு. உங்களுக்கு தமிழ் தெரியுமான்னு கேட்டு  சாகடிச்சாக. கோபம்னாலும் பயங்கர கோபம்.

ஏன்? எதுனால?
 
பின்ன இருக்காதா??? நா என்ன இப்ப இங்கிலீஸுலையா பேசுதேன்?

அது அப்டி இல்ல பொண்ணு. உன்னுடையது கொலதமிழ்………. அதுனால  தமிழ் பெருமைலாம் கத்து கொடுக்க போறாகளாம்.

என் கொலசாமி தமிழ் இல்லையே…. ஆரு வ்களுக்கு தப்பா தகவல் சொன்னா?

ஹா….ஹாஹா,,,, உனக்கு புரிய வைக்க எனக்கு ஜீவேன் இல்ல….. என் மவேன் கத்துறான் டீவி போடச்சொல்லி. இரு வார்ரேன்.

ஸ்டைல் நாராயணன் சொன்னத கேட்டீயா நீ? கொழந்தைங்க டீவி பாக்குறதுனால வர பிரச்சனைய பத்தி சொன்னாகளே…….. கட்டுக்குள்ள வச்சுக்கோ புள்ள. புள்ளை புடிக்கிற காட்டான் கூட கோழி புடிக்குறாராம். கவனமா இருந்துக்கோ.

ம் ச்சேரி ச்சேரி. வேற என்ன சேதி?

பறவை காய்ச்சல் மாதிரி  ஊர் முழுக்க ஒரே பேச்சா இருக்கு

என்னவாம்?


கருத்து கந்தசாமிய சொல்றீயா? அது ஏமாருற மன்னன்னும் இல்ல. ஏமாத்துற மன்னன்னும் இல்ல.ஏமரா மன்னன் :-) எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாக ஹி...ஹி...ஹி.......

அதுவேறையா :-(   வெறும்பய தெரியுமா உனக்கு?

ம் தெரியுமே என்னவாம்?

6 மாசத்துல 30 எட்த்துல வேல பாத்து கின்னஸ் சாதன படைச்சது தான் அவுகளோட வாழ்நாள் சாதனையாம்

அடப்பாவமே………… சரி ராக்கெட் ராஜா அதிசயபடங்கள காமிக்க போறதா சொன்னாக. நீ போயி பார்த்துட்டு வந்துடு!!!

போற வழியில தான் இர்க்கு. பாத்துட்டு போறேன்கொஞ்சம் ஐஸு தண்ணி கொண்டா. குடிச்சுட்டு கெளம்ப!

காலைல வெள்ளனமா வந்துடு. வாரச்ச கொம்பம்பாவக்கா பறிச்சுட்டு வந்துடு!

பாக்குறேன் ஆத்தா….. வர்ட்டுமா

*******************************************************
அடுத்த பதிவு- சமைக்க தெரியலன்னா??!!

அனைவருக்கும் ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  பாதுகாப்பான தீபாவளியாய் அனைவருக்கும் அமைந்திட பிரார்த்திக்கிறேன்.

உங்கள் சகோதரி
ஆமினா

55 comments:

  1. அருமையாக இருந்தது, இது வரை பார்க்காதவர்களின் வலை பூக்களை மேய்ந்து விட்டு வந்தேன்

    ReplyDelete
  2. எல்லாரும் நம்ம பிள்ளைங்கதான், எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. நன்றி சூர்ய ஜீவா

    ReplyDelete
  4. @நாஞ்சில் மனோ அண்ணா

    அவ்வளவு பசங்களா? :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  5. நன்றி ஆமினா..அறிமுகப்படுத்தியதற்கு..:-)

    ReplyDelete
  6. நன்றி சகோ .. நானே மறந்து போன என் ப்ளாகையும் அறிமுகப்படுத்தியதற்கு..

    உங்களுக்கும் மற்ற பதிவுலக உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. ஹா ஹா உங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கலக்கல் அறிமுகங்கள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வணக்கமம்மா
    என்னையும் ஒரு பதிவரா வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளீர்களே.. நன்றி நன்றி

    பதிவுலகத்தின் அனைத்து பதிவர்கள்,வாசகர்கள்,நண்பர்கள்,என்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

    சிறப்பாக ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் அமினாவிற்கு வாழ்த்துக்கள் தங்கள் தலம்போலவே அருமையாக கொண்டுசெல்கிறீர்கள் வாழ்த்துக்களம்மா..

    ReplyDelete
  11. அறிமுங்களுக்கு வாழ்த்துக்கள்!

    எப்படியெல்லாம் பேர் வைக்குறாங்க!

    அனைவருக்கும் தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. @சின்னப்பயல்
    நன்றி ஆமினா..அறிமுகப்படுத்தியதற்கு..:-) //

    மென்மேலும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  13. @வெறும்பய
    //நன்றி சகோ .. நானே மறந்து போன என் ப்ளாகையும் அறிமுகப்படுத்தியதற்கு..

    உங்களுக்கும் மற்ற பதிவுலக உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். //

    ஹா...ஹா...ஹா... மறந்தாச்சா? அப்ப ஏலத்துக்கு விட்டுற வேண்டியது தான் ;-)

    உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @சிவகுமார்
    //அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!! //
    நன்றி சகோ

    ReplyDelete
  15. @ஜலீலாக்கா

    //ஹா ஹா உங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கலக்கல் அறிமுகங்கள் //

    நன்றி அக்கா :-)

    ReplyDelete
  16. @காட்டான் அண்ணா
    //வணக்கமம்மா
    என்னையும் ஒரு பதிவரா வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளீர்களே.. நன்றி நன்றி

    பதிவுலகத்தின் அனைத்து பதிவர்கள்,வாசகர்கள்,நண்பர்கள்,என்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

    சிறப்பாக ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் அமினாவிற்கு வாழ்த்துக்கள் தங்கள் தலம்போலவே அருமையாக கொண்டுசெல்கிறீர்கள் வாழ்த்துக்களம்மா..//

    என் தளத்தையும் வாசித்து வருவது கண்டு ரொம்ப மகிழ்ச்சி. மிக்க நன்றி அண்ணா

    உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. @ராஜா
    உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. @சிவகுமார்
    //அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!! //
    நன்றி சகோ

    @ஜலீலாக்கா

    //ஹா ஹா உங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கலக்கல் அறிமுகங்கள் //

    நன்றி அக்கா :-)

    @காட்டான் அண்ணா
    //வணக்கமம்மா
    என்னையும் ஒரு பதிவரா வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளீர்களே.. நன்றி நன்றி

    பதிவுலகத்தின் அனைத்து பதிவர்கள்,வாசகர்கள்,நண்பர்கள்,என்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

    சிறப்பாக ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் அமினாவிற்கு வாழ்த்துக்கள் தங்கள் தலம்போலவே அருமையாக கொண்டுசெல்கிறீர்கள் வாழ்த்துக்களம்மா..//

    என் தளத்தையும் வாசித்து வருவது கண்டு ரொம்ப மகிழ்ச்சி. மிக்க நன்றி அண்ணா

    உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    @ராஜா
    உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    @கோகுல்
    //அறிமுங்களுக்கு வாழ்த்துக்கள்!

    எப்படியெல்லாம் பேர் வைக்குறாங்க!

    அனைவருக்கும் தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்! //
    நானும் அப்படி தான் பேர் வச்சு சுத்தலாம்னு நெனைக்கிறேன் ஹி...ஹி...ஹி...

    வருகைக்கு நன்றி சகோ. மற்ற தளங்களை பார்வையிட்டமைக்கும் நன்றி

    ReplyDelete
  19. ஆமி நல்ல வித்யாசமான அறிமுகங்கள் அனைவருக்கும்ம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. என்னடா யாரும் எனக்கு தீபாவளி பரிசு இந்தியாவுல இருந்து அனுப்பல என்று வருத்தத்தோடு இருந்த எனக்கு ஆமினா அம்மா நீங்கள் கொடுத்ததுதான் "மிகப் பெரிய தீபாவளி பரிசு". இந்த வீணாப் போனவனை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன். அனைவருக்கும்எனது இதயம் கனிந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    என்றும் மரியாதை கலந்த நட்புடனும் & அன்புடனும்
    உங்களின்
    MaduraiTamilGuy

    ReplyDelete
  21. நன்றி ஆமினா
    எனக்கும் வலைச்சரத்தில் பங்கேற்கணும்னு நெடு நாள் ஆசை
    வாரத்திற்கு ஒரு பதிவு போடவே ததிங்கனத்தோம்
    என்ட்ரன்ஸ் எக்ஸாம் லேயே அவுட் ஆயிடுவேன்
    அறிமுகத்திற்கு நன்றிகள்

    ReplyDelete
  22. ஆமினா அர்முகத்திற்கு நன்றி, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும், அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  24. ஆமினா அம்மா நிங்கள் டீச்சரம்மா ஆனதற்கு எனது வாழ்த்துகள். என்னை உங்கள் சிறப்பு மாணவனாக அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் நன்றிகள். வாழ்க எங்க ஆமினா டீச்சரம்மா போடுங்கம்மா ஒட்டு எங்க டீச்சரம்மாவை பார்த்து போடுங்கம்மா ஒட்டு எங்க டீச்சரம்மாவை என்ன எலக்ஷன் முடிஞ்சு போச்சா? பரவாயில்லை எங்க நாட்டுல இனிமதான் எலக்ஷன்
    அதனால நான் உங்களை அமெரிக்காவின் தலைவியாக சிபாரிசு பண்ணி இப்பவே பிரச்சாரம் ஆரம்பிச்சுறேன்.

    ReplyDelete
  25. எல்லாமே அருமையான அறிமுகங்கள் .எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. புதியவனாகிய என்னை வலைச்சரம் மூலமாக வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்

    இது போன்று பலரிடம் அறிமுகம் பெறுவதாலேயே, ஊக்கம் பெற்று மேலும் எழுத ஆசை வருகிறது..

    அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் என் நன்றிகள் ஆமினா..

    என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. மிக அழகாம இன்றைய அறிமுக பதிவர்களை அறிமுக படுத்திருக்கீங்க... நன்றி & வாழ்த்துக்கள் சகோ!...

    இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. மதிப்பிற்குறிய வலைச்சர ஆசிரியர் திரு.சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர குழுவினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. அருமையாக இருந்தது.... நல்ல பகிர்வு...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  30. ஆமினா,
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வீணாப்போனவங்கள கூட அறிமுகப்படுத்துவாங்க , ஆனால் என்னைப்போல காணாமல் போனவனையும் அறிமுகப்படுத்தி இருக்கிங்க! :-))


    ஹி..ஹி அது ரெண்டு வருடம் முன்ன போட்டது அப்புறமா இப்போ தான் 4 நாளாக மீண்டும் பதிவுபோடுறேன். உங்கள் அறிமுகம் ஊக்கமளிக்கிறது. நன்றி!

    ReplyDelete
  31. அறிமுகங்கள் வித்தியாசமாய்...

    ReplyDelete
  32. நன்றிங்க மேம்...எனது வலைத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு...!

    ReplyDelete
  33. அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க...

    வலைச்சர ஆசிரியப்பணியை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகளும் சிறப்பு நன்றிகளும் பல...!

    தொடர்ந்து கலக்குங்க.... :-)

    ReplyDelete
  34. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. கலக்கலான அறிமுகங்கள்..

    ReplyDelete
  36. அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    சூப்பர் அக்க நன்றிகள் பலபல

    ReplyDelete
  37. @மாமி
    //ஆமி நல்ல வித்யாசமான அறிமுகங்கள் அனைவருக்கும்ம் வாழ்த்துக்கள் //
    நன்றி மாமி

    ReplyDelete
  38. @அவர்கள் உண்மைகள்
    அப்ப இதான் தீபாவளி பரிசா? சகோதரிக்கு ரிட்டன் அனுப்புவீங்க தானே...... இருங்க லிஸ்ட் போட்டு தார்ரேன் ;-)

    ReplyDelete
  39. @ருபி
    சும்மாக்காச்சுக்கும் தானே? செமையா கலக்குவீங்ககு
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  40. @கும்மாச்சி
    //அறிமுகத்திற்கு நன்றி. //
    மிக்க நன்றி சகோ

    உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. @அவர்கள் உண்மைகள்
    ஹா...ஹா...ஹா...
    அமெரிக்கா தேர்தல்ல ஆமினாவா? அப்ப அடுத்து உருப்புடாத ஏரியாவா மாற போகுதுன்னு சொல்லுங்க :-)

    ReplyDelete
  42. @ஏஞ்சலின்
    //எல்லாமே அருமையான அறிமுகங்கள் .எல்லாருக்கும் வாழ்த்துக்கள் //
    மிக்க நன்றி ஏஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  43. @ஆளுங்க
    //இது போன்று பலரிடம் அறிமுகம் பெறுவதாலேயே, ஊக்கம் பெற்று மேலும் எழுத ஆசை வருகிறது..//

    இதை கேட்கும் போது எனக்கும் அதிகா ஊக்கம் வருது சகோ

    வாழ்த்துக்கள்....... மென்மேலும் எழுதி பலன்கொடுத்து பலன் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. @மாயா
    நன்றி ராஜேஷ்

    @நிஜாமுதீன்

    நன்றி சகோ நிஜாமுதீன்

    @மாணவன்
    வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ

    @சே.குமார்
    வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

    @அமைதிசாரல்
    நன்றி அமைதிசாரல் :-)

    ReplyDelete
  45. ஒரு சிலர், தெரியாதவர்கள்தான் பழகிடுவோம் :-)

    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  46. தீபாவளி காரணமாக 2 நாள் நான் வலையுலகத்திற்கு லீவு போட்டுட்டேன்..இப்போதான் வந்தேன்..
    வந்துபாத்தா ஒரு பக்கா இண்ட்ரோ...ரொம்ப நன்றி ஆமி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அசராமல் அடித்து அசத்தும் ஆமிக்கு மீண்டும் நன்றி...

    ReplyDelete
  47. அறிமுகத்திற்கு நன்றிகள்....
    தொடரட்டும் தங்கள் பொன்னான பணி....

    ReplyDelete
  48. @@@@ஆமினா///
    தண்ணியடிச்சிட்டு எழுதுனா கூட இவ்ளோ கொழப்பமா எழுத முடியாது...மிக சிறந்த பதிவு...அருமையாக எழுதியுள்ளீர்கள்...! இந்த பதிவில் என்ன சொல்ல வருகிறீர்கள் என கீழே ஒரு நாலு வரி தெளிவா எழுதினால் என்னை போன்ற வாசகர்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்...! அது மட்டுமல்ல, நல்லா இல்லாத எழுத்தை பாராட்டும் அன்பர்களை புறந்தள்ளி வைப்பது உங்கள் எதிர்கால எழுத்துலக வளர்ச்சிக்கு நல்லது என்பது என் தாழ்மையான கருத்து...! உங்களின் இந்த பதிவு மிக மொக்கையான பதிவு என்பது என் தாழ்மையான கருத்து...!

    ReplyDelete
  49. @ Veliyoorkaran.....

    உங்களைப் போன்ற அறிமுகப் பதிவர்களை ஊக்கப்படுத்தும் இந்தப் பதிவரின் பணி பாராட்டத் தக்கது!

    ஆனாலும் அறிமுக காலத்திலேயே உங்களுக்கு இவ்வளவு ஆணவம் கூடாது வெளியூர்க்காரரே!

    ReplyDelete
  50. நன்றி ஜெய்லானி

    ReplyDelete
  51. ஏமரா மன்னன்
    //தீபாவளி காரணமாக 2 நாள் நான் வலையுலகத்திற்கு லீவு போட்டுட்டேன்..இப்போதான் வந்தேன்..
    வந்துபாத்தா ஒரு பக்கா இண்ட்ரோ...ரொம்ப நன்றி ஆமி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அசராமல் அடித்து அசத்தும் ஆமிக்கு மீண்டும் நன்றி...//

    அதானே ஆளையே காணாம்னு நெனச்சேன்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  52. @வெளங்காதவன்
    //அறிமுகத்திற்கு நன்றிகள்....
    தொடரட்டும் தங்கள் பொன்னான பணி....
    //

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  53. @வெளியூர்காரன்

    வருகைக்கு நன்றி சகோதரர்

    ReplyDelete
  54. @ரெட்டைவால்

    வருகைக்கு நன்றி சகோதர்!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது