07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 8, 2011

கதம்ப ரோஜாக்கள் @ 8/10/2011

வணக்கம்,

 நம் ஜனாதிபதி மாளிகையில் ரோஜா தோட்டம் உள்ளதை அனைவரும் அறிவோம்.முகல் கார்டன்,பொட்டானிகல் கார்டன் என்றும் பெயர் உண்டு.ஆறு ஏக்கர்  பரப்பளவில் 250 வகையான ரோஜாக்கள் காணப்படுவதோடு,பல வகை சூர்ய காந்தி பூக்கள்,மூளிகை வகைகள்,வித்தியாசமான காய்கறிகளும் உண்டு.இந்த தோட்டமானது செவ்வக, வட்ட வடிவ  அமைப்புகளுடன்  நேர் நீள் வடிவ பாதை அமைப்பில் தோட்டத்தின்   எழிலை பார்வையிடலாம்.

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பொது மக்கள் பார்க்க ஃபிப்ர்வரி பத்து தேதிக்கு மேல் மார்ச் 20 தேதிக்குள் அனுமதி உண்டு.கட்டணம்இல்லை.ஃபிப்ரவரி மாதத்தின் குளிர்காலம் இதமான  காலநிலையாகும்.   தோட்டத்தை    கூடுதலாக   ரசிக்க     முடியும்.

Orkutjunks.com™ Orkutjunks.com™
  
.

 கதம்ப ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் ஆடும் இவர்கள்,நம் வலைச்சர தோட்டத்தின் எழிலை ரசித்து கதம்ப ரோஜாக்களை அறிமுகம் செய்யவிருக்கின்றனர்.

1.இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது என்கிறார் கோவில்பட்டி ராஜ்.

2.அபி அப்பா தன் அம்மாவை நினைவுபடுத்தியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.

3.பூமி புத்திரா என்பதை எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா?இண்டர்லோக் புத்தகம் உங்களுக்கு கிடைத்துவிட்டதா? விபரங்களை பகிர்கின்றார்  கிருஷ்ணா.

4. சோலார் செல் பற்றின தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் இவர்.

5.ஆடியோ கோப்புகளை ஒன்றாக சேர்க்க மென்பொருளை குறிப்பிடுகிறார் அன்பு.

6.அறிவிப்புப்பலகை மட்டும் புதிதாய் இருக்கிறது என்கிறார் .
இந்த பாமரர்.

7.பெரிய விஷயங்களில் ஆடம்பரத்தை அனுபவிப்பதை விட, சின்னஞ்சிறு விஷயங்களில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உணருங்கள் என்கிறார் சிவரஞ்சனி சதாசிவம்.

8. இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம் ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே கரைந்துவிடுகிறார்கள் என்கிறார் தினேஷ்.
ஒட்டை இல்லா பருப்பு வடை கதை புரியுதானு பாருங்க.

9.கணினி பழுதுபார்க்க புதுமுறை பொய்த்த மனிதன் யாருன்னு தெம்மாங்குபாட்டுக்காரரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.எங்க ஊரு பாளயம்
மிக சுவாரஸ்யம்.

10.பசி என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி போகுமென்று  சொல்கிறார்.அடுத்ததா ஒரு கேள்வியும் கேட்டிருந்தாலும் ஏடாகூடமான பதிவுன்னு அவரே சொல்லிட்டார். அவரது ஆய்வை நீங்களே படித்து பாருங்க.

நம் வருகைக்கான பரிசு இந்த கதம்ப ரோஜாக்கள்  மற்றும்            இந்த கேக் 






நன்றி.

24 comments:

  1. அனைத்தும் புதிய அறிமுகங்கள் . சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. புது புது அறிமுகம்,புது புது ரோஜாக்கள்.
    ஆச்சி! கலக்கறீங்க.

    ReplyDelete
  3. @எல்.கே
    @ராஜி
    வாங்க,படித்துவிட்டு நிறை,குறைகளை சொல்லுங்கள்.நன்றி.

    ReplyDelete
  4. புதுப்புது அறிமுகங்கள்!அதனையும் சுவாரஸ்யங்கள்!
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்!

    ReplyDelete
  5. அனைவரும் புது அறிமுகங்கள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. எனக்கு இவை முற்றிலும் புதிய பதிவுகள். கேக்கிற்கு நன்றி.

    ReplyDelete
  7. எனக்கு இவை முற்றிலும் புதிய பதிவுகள். கேக்கிற்கு நன்றி.

    ReplyDelete
  8. கேக்கு நல்ல டேஸ்ட்டு!

    ஹி ஹி ஹி...

    தொடரட்டும்....

    ReplyDelete
  9. மிக அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  10. நம் ஜனாதிபதிக்கு ஆறு கோடி ரூபாய் சொகுசு சீருந்தை இந்திய அரசு வழங்கி உள்ளது சூறாவளியை கிளப்பி உள்ளது... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. ஜனாதிபதி மாளிகைப் பூந்தோட்டம் பற்றிய செய்திகள் மிக அருமை. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள்.தங்களைத்தவிர வேறு யாராலும், எங்களைப்போன்ற ஏழை எளிய பாமரர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாது. அதற்கொரு ஸ்பெஷல் நன்றி.

    புத்தம்புதிய அறிமுகங்கள் அசத்தல் தான்.

    அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    கையைவிட்டு காசே செலவழிக்காமல் தினமும் ரோஜா தருகிறேன், கேக் தருகிறேன் என்று ஏதேதோ தருகிறீர்கள்.

    ஆச்சின்னா சும்மாவா; காசிலே கெட்டியாச்சே; சரிதானே?

    பொய்க்கேக்கு தரும் உங்களைக் கேக்க ஆள் இல்லை என்று நினைக்கிறீர்களோ! ஏன் இல்லை; நான் இருக்கிறேன்.

    அழகிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். மேலும் ஒரிரு நாட்கள் தான் என்று நிம்மதியாக ஜாலியாக அசால்டாக இருக்காதீர்கள். பதவி நீடிப்பு வழங்கப்பட்டாலும் படலாம். ஜாக்கிரதை! ஹா ஹா ஹா ஹா!!

    ReplyDelete
  13. @கோகுல்
    மிக்க நன்றி.

    @கடம்பவன் குயில்
    நன்றிகள்.

    @சாகம்பரி
    மிக்க நன்றி.நம்ம டேஸ்ட் புரியமாட்டிங்கிது கோபாலகிருஷ்ணன் சாருக்கு.பாருங்க என்ன சொல்லிய்ருக்கார்னு.

    @ஜலீலா கமல்
    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  14. @சூர்யஜீவா
    ஓஹோ!அப்படியென்றால் எந்நேரத்திலும் பாம் வெடிச்சாலும்,வெடிக்கும்.அதில் பயணிக்காமல் இருந்தால் நல்லதுனு நினைக்கிறேன்.

    வாழ்த்திற்கு நன்றி.

    @வெங்கட் நாகராஜ்
    வருகைகும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  15. @வை.கோபாலகிருஷ்ணன் சார்
    //தங்களைத்தவிர வேறு யாராலும், எங்களைப்போன்ற ஏழை எளிய பாமரர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாது//

    சார் நீங்க தமிழ்நாட்டிற்குள்ளே உறவினர் வீட்டுக்கு போக ஆட்டோவிற்கு 5000 ரூபாய் வரை செலவு செய்வீர்கள்.நான் 5000 ரூபாயில் இதர செலவுகள் உட்பட ஒரு தடவை தில்லி 2 சென்னைக்கு வந்துட்டு போய்டுவேனாக்கும்.முகல் கார்டன் பார்க்க கட்டணம் கிடையாது.ஆனால் தில்லிக்கு செலவு செய்து வந்துதான் ஆகனும்.

    //புத்தம்புதிய அறிமுகங்கள் அசத்தல் தான்.அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    //பொய்க்கேக்கு தரும் உங்களைக் கேக்க ஆள் இல்லை என்று நினைக்கிறீர்களோ! ஏன் இல்லை; நான் இருக்கிறேன்.//

    இந்த கேள்வியதான் யாரு எப்ப கேக்கப்போறாங்களோனு எதிர்பார்த்திட்டுருந்தேன்.நீங்க எத்தனை பேர் மன ஆதங்கத்தின் சார்பா கேட்டிங்களோ தெரியாது.

    பதிவுகள் தரமானதாகவும் சிறப்பாகவும்,பலர் மனதை கவரும் வகையில் இருந்தால் ஒரு படம் கூட
    இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

    எனினும் அறிமுகத்தோடு நின்றுவிடாமல் பிரசண்டேசனுக்காக வீட்டுக்கு வந்தோரை உபசரிப்பது போல தினமும் விசுவல் உபசரிப்புதான் இதற்கு காரணம்.படத்தில் உள்ளதை எடுத்து சாப்பிட முடியலயெனு கோபத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள் போல்.

    //ஜாலியாக அசால்டாக இருக்காதீர்கள். பதவி நீடிப்பு வழங்கப்பட்டாலும் படலாம். ஜாக்கிரதை! ஹா ஹா ஹா ஹா!!//

    இன்னைக்கு ஒரு முடிவோடுதான் வந்திருக்கீங்க போல.

    ReplyDelete
  16. உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  17. நேரிலேயே என்னை சந்தித்து எவ்வளவு ஒஸ்தியான கேக் சாப்பிடக்கொடுத்தாலும் நான் அதை சாப்பிட மாட்டேனுங்க.

    கேக் எனக்குப் பிடிக்காத ஒன்று. எந்தக் கேக்காக இருந்தாலும் பிடிக்காதுங்க. சும்மா விளையாட்டுக்குத்தான் எழுதினேன்.

    கோபித்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  18. @சிவரஞ்சனி
    வாங்க.வருகைக்கு நன்றி.தொடர்ந்து பதிவுகளை தொடருங்கள்.

    @வை.கோபலகிருஷ்ணன் சார்

    ஒரு கோபமும் இல்லை சார்.மீண்டும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. அன்புள்ள திருமதி bs sridhar அவர்களே,

    தாங்கள் அறிமுகப்படுத்திய சில பதிவர்களின் பதிவுகள் காப்பி செய்யப்பட்டவை.
    உதாரணமாக:-
    முதலில் ஆடியோ கோப்பு பற்றி எழுதிய அன்பு
    அன்பின் ஒரிஜினல் இங்கே...

    அடுத்து திணேஷ்
    1. திணேஷின் தூக்கம் விற்ற காசுகள் இங்கே
    2.தினேஷின் பருப்பு வடை இங்கே..

    இவை அனைத்தும் 3 நிமிடங்களில் நான் கண்டுபிடித்தவை...மற்ற பதிவுகளை சோதிக்கவில்லை.. எனக்கு சந்தேகம் எழுந்தவற்றை மட்டுமே சோதித்து பார்த்தேன்.

    அபி அப்பாவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.அபி அப்பா நன்றாக எழுதக்கூடியவர். நல்ல பதிவர் :) வாழ்த்துக்கள்.

    இந்த பதிவெல்லாம் காப்பி என்பது உங்களுக்கு தெரியாது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
    இருந்தபோதும் ஒரு பதிவரை நீங்கள் அறிமுகம் செய்யும் முன் குறைந்தது அவருடைய 10 பதிவுகளையாவது படித்து அவரைப்பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

    நான் இந்த வலைச்சரத்திற்கு புதிது.இப்படி ஒரு தளம் இருப்பதே சில நாட்கள் முன்புதான் தெரியும்.காப்பி என்பது தெரிந்தும் சொல்லாமல் போக மனம் இடம் தரவில்லை.

    எல்லோரையும்போல் நன்று, சூப்பர் என ஒற்றை வரிகளில் சொல்லிவிட்டு போய்விடலாம்தான் ஆனால் நான் சற்று வித்யாசமானவனாயிற்றே!!!என்ன செய்வது???

    இந்த கருத்துரை பற்றி தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.அப்படி தவறாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!!

    இந்த பக்கத்தை பார்க்காமலே போயிருக்கலாம்(எனக்கு இப்போது தோன்றுவது)

    நன்றி.

    என்றும்,
    சொ.கமலக்கண்ணன் C.Kamalakkannan.

    ReplyDelete
  20. @மழை
    நன்றி சகோதரரே.

    உண்மையில் எனக்கு பதிவர்களின் சொந்த/காப்பி செய்யப்பட்ட பதிவுகளா என்பது தெரியாது.சிலர் ”இதிலிருந்து எடுத்தது” என்று குறிப்பிட்டிருந்தால் பதிவுகளை தேடும்போது தெரிந்திருக்கும்.அப்படியான பதிவுகளை தவிர்த்திருப்பேன்.

    ஒரு தளத்திற்குள் செல்லும்போது முடிந்தவரை படித்து தரமான பதிவுகளை வேண்டி சென்றேன்.தினேஷ் மற்றும் நான் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் பல பதிவுகள் இந்த ஆண்டு எழுதியிருந்தாலும் கடந்த ஆண்டு எழுதிய பதிவுகளையும் படித்துதான் தரம் பிரித்தேன்.நீங்கள் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.

    தவறுக்கு வருந்துகிறேன்.என்னைப் போலவே இங்கு வந்த கருத்திட்ட பதிவர்களுக்கும் தெரிந்திருக்காது.தெரிந்திருந்தால் இந்நேரம் சொல்லியிருப்பார்கள்.

    ReplyDelete
  21. எனது வலைப் பதிவை இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு..., நன்றி ஆச்சி.

    ReplyDelete
  22. @தெம்மாங்கு பாட்டு
    வாங்க,இப்பதான் செய்தி கிடைத்ததா?
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  23. இந்த பாமரனையும் அறிமுகப்படுத்திய திருமதி BS SRIDHAR அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி, நீங்கள் அனுப்பிய மெயில் நான் கவனிக்காமல் விட்டு விட்டேன் மன்னிக்கவும், தகவல் தந்த கோகுல் அவர்களுக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  24. வாருங்கள் பாமரரே,தகவல் அறிந்து வந்தமைக்கு நன்றி.தொடர்ந்து பதிவுகளை தொடருங்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது