07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 14, 2011

பாட்டு பாடவா? பார்த்து பேசவா? 

தேன் நிலவு என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளை ஏ.எம். ராஜா பாடிய "பாட்டு பாடவா? பார்த்து பேசவா?" பாடலுக்கு ஜெமினி கணேசன் மற்றும் வைஜெயந்தி மாலா நடித்திருப்பார்கள்.  இப்பாடல் மிகவும் பிரபலமான ஒன்று.  அதுபோல இன்று பாடல் வரிகளையும்,  பாடல் பற்றிய விவரங்களையும், பாடலைக் கேட்கவும்/பார்க்கவும் நமக்கு உதவிடும் சில பதிவர்களின் சுட்டிகளை இன்று பார்க்கலாம்…


 

நல்ல பாடல்கள் கேட்க வேண்டுமா?  கோவை ரவி என்ற நண்பரின் பாசப் பறவைகள்வலைப்பக்கத்துக்குப் போனால் நிறைய தொகுப்புகளை  சேர்த்து வைத்திருக்கிறார் நாம் கேட்டு மகிழ.

 

கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் ஓலிக்கும் பாடல்களை யாருக்குத்தான் பிடிக்காதுஅவர் ஆங்கிலப் படமான காந்தியில் கூட ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாடலை இங்கே கேளுங்க.


பார்க்க/கேட்க பிடிக்காத பாடல்களுக்கெனவே   ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஸ்வர்ணரேக்கா. இதுவும் சரிதான்இப்போது  வரும் பாடல்களில் நிறைய பாடல்கள் இதுபோலத்தான் இருக்கிறது இங்கே பாருங்க அவருக்குப் பிடிக்காத பாடல்களின் தொகுப்பை..  

”ஒரு திரைப் படத்தின் கதையுடன், பாத்திரங்களுடன் ஒன்றியிருப்போம், அப்போது பார்த்து ஒரு டூயட் சாங், அல்லது கனவுப் பாடல் வரும். பார்ப்பது சினிமா என்று ஞாபகப்படுத்தி விடும். இப்படி விலகியிராமல் அதாவது பாடல் காட்சி பாடல் காட்சியாக இல்லாமல் எப்பவாவது சில முறைதாம் திரைக்கதையின் ஒரு காட்சியாக அமையும். சிறந்த திரைக் கதாசிரியரும் இயக்குனரும் அதற்குத்தான் படாத (பாடாத) பாடுபடுவார்கள்” என்று சொல்லும் இந்தப் பகிர்வுக்கு சொந்தக்காரர், பெரிய சிறுகதைகளாகட்டும் ஒரு பக்கக் கதைகளாகட்டும் அவைகளைப் படைப்பதில் வித்தகரான திரு கே.பி. ஜனா. 

 

பதினேழு பதிவர்கள் சேர்ந்து ஒற்றுமையாக ஒரு வலைப்பூ நடத்துவது என்பது எவ்வளவு போற்ற வேண்டிய விஷயம்.  அதுவும் கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த தேன்கிண்ணம் வலைப்பூ கிட்டத்தட்ட இரண்டாயிரம் பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  அவர்களது முயற்சிக்கு ஒரு தலைதாழ்ந்த வணக்கம். இங்கே சென்று பாடல்களை கேட்டு/பார்த்து மகிழுங்கள்.

 

கவிதை வீதி சௌந்தர் அவர்களின் பாட்டு ரசிகன் தளத்தில் தமிழ்ப்  பாடலின் வரிகளை ஆய்வுகளோடு பகிர்கிறார்.  மொத்தம் 18 பாடல்களே இருந்தாலும் அத்தனையும் நல்ல பாடல்கள். அவரின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெறட்டும்.


 

இன்று பாடல்களைப் பற்றிய பகிர்வுகளைப் பார்த்தோம்.  நாளை வேறு சில பதிவர்களின் அறிமுகங்களோடு சந்திப்போம்.

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்.39 comments:

 1. நீங்கள் எழுதும் ரசித்த பாடல் தளத்தையும் இதில் சேர்த்திருக்கலாமே...

  ReplyDelete
 2. பாடல்களுக்கு பிரத்யேகமாக இவ்வளவு வலைப்பூக்கள் இருப்பது ஆச்சர்யம்..நல்ல அறிமுகங்கள்....

  ReplyDelete
 3. டோராவும் பயணிக்கிறாள்.
  வானவில் ரோஜா தினமும் மலர்ந்து வருகிறது.
  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. பாட்டு கேட்டு மகிழ எவ்வளவு தளங்கள் !

  நன்றி ஆதி.

  டோராவின் பயணம் மிகவும் இனிமையாக இருக்கிறது.

  ReplyDelete
 5. பாடல் அறிமுகங்கள் அருமை.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 6. அடேங்கப்பா!பாடல்கள் பற்றியே இத்தனை பதிவுகளா?

  ReplyDelete
 7. நல்ல்பாடல்கள் கேட்க நல்ல தளங்களின் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. பாடல்களுக்கான பதிவுகள்.அருமையான அறிமுகங்கள், ஆதி.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 10. கானக்கந்தர்வன் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஆதி.
  பாசப்பறவைகளோடு எஸ்பீபிக்கு என்றே தனி வலைப்பூவு இருக்கிறது பாடும் நிலா பாலு என நினைக்கிறேன்.

  தேன் கிண்ணம் பாராட்டப்படவேண்டிய வலைப்பூ

  ReplyDelete
 11. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சீனா சார். பாசப்பறவைகள் தளத்தில் பதிய இன்னும் ஏகப்பட்ட பதிவுகள் காத்திருக்கு வித்தியாசமான ஒலிப்பதிவுகளில் அறிவிப்பாளர்களின் குரல் ஜாலங்களையும் அதற்கு மேல் வானொலி நேயர்களின் உற்சாகத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிப்பதே அந்த தளத்தின் தலையாய பணி. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிந்து இணையதள நேயர்களூக்காக வழங்க காத்திருக்கிறேன். ஒரு ஹாஸ்யத்துக்காக இந்த சுட்டியிலும் சென்று பார்க்கலாம் நண்பர்களே http://anjalipushpanjali.blogspot.com/

  ReplyDelete
 12. தில்லி வந்த புதிதில் எங்களுக்குத் தமிழ் பாடல் கேட்பது என்றால் Tape Recorder மட்டும் தான். தமிழ்த் தொலைக்காட்சிகள் அப்பொழுது வர ஆரம்பிக்கவில்லை. புதுப்பட பாடல்கள் 2-3 மாதங்களுக்குப் பின் தான் (யாராவது தமிழகம் சென்று வந்தப் பின்) கிடைக்கும். அதனால் tape recorder நாங்கள் (நான், வெங்கட் எல்லாரும் தான்) வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் அது ஓலித்துக் கொண்டே இருக்கும். நல்ல வேளையாக எங்களுக்கு ஒரே Taste. இல்லையென்றால் கஷ்டம் தான்.

  இப்பொழுது புதுப்பாடல்கள் உடனுக்குடனே வந்துவிடுகின்றன, ஆனால், எதைத் தேர்ந்தெடுப்ப்து என்பது தான் பிரச்சனை. அதற்கு நல்ல பாடல் தளங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 13. "பாட்டு பாடவா? பார்த்து பேசவா?"

  அதுவே நல்ல அழகானதொரு பாடல்.

  அதையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்தது தங்களின் தனித்திறமையைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 14. தேன்துளிகளாய் பாட்ல்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. @ கலாநேசன்: ரசித்த பாடல் தளத்தைப் பற்றி முதல் நாளே குறிப்பிட்டிருக்கிறேனே...
  அது போக முதல் நாள் மட்டுமே சுய தம்பட்டம்...

  நன்றிங்க.

  ReplyDelete
 16. @ பத்மநாபன்: ஆமாங்க. இன்னும் கூட இருக்குங்க.நேரம் தான் கிடைக்கலை தேட..

  நன்றி சகோ.

  ReplyDelete
 17. @ thirumathi bs sridhar: சென்று பாருங்கள் ஆச்சி.

  நன்றிப்பா.

  ReplyDelete
 18. @ கோமதி அரசு: ஆமாம்மா.நிறைய தளங்கள் இருக்கின்றன. நன்றிம்மா.

  ReplyDelete
 19. @ ராஜி: நன்றிப்பா.

  ReplyDelete
 20. @ மோகன் குமார்: இன்னும் தேடினால் நிறைய கிடைக்கும்.

  நன்றிங்க சார்.

  ReplyDelete
 21. @ லக்ஷ்மி: நன்றிம்மா.

  ReplyDelete
 22. @ ராம்வி: நன்றிங்க.

  ReplyDelete
 23. @ தமிழ்தோட்டம்: நன்றி.

  ReplyDelete
 24. @ புதுகைத் தென்றல்: தகவலுக்கு நன்றிங்க.

  தேன் கிண்ணத்தில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் பதிந்துள்ளார்கள்!!!

  ReplyDelete
 25. @ Covai Ravee: தங்கள் கருத்துக்கு நன்றிங்க சார்.

  ReplyDelete
 26. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆமாம். இவரும் நிறைய சொல்லியுள்ளார். வீட்டில் ஏகப்பட்ட கேசட்டுகளும், சிடிக்களும் இருந்தனவே.
  என்னுடைய பொழுது போக்கும் அன்றிலிருந்து இன்று வரை பாடல்கள் கேட்பது தானே....

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 27. @ வை.கோபாலகிருஷ்ணன்: பழைய பாடல்கள் எல்லாமே பிரமாதமாய் இருக்குமே.

  நன்றி சார்.

  ReplyDelete
 28. @ இராஜராஜேஸ்வரி: நன்றிங்க.

  ReplyDelete
 29. பாட்டொன்று கேட்போம் பரவசமாவோம்....

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. பாடல் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு என் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வித்தியாசமாய் இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 32. பாடல்களுக்கான பதிவுகள்.அருமையான அறிமுகங்கள்.
  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 33. அறிமுகமாகியுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 34. @ மாதேவி: பாடலாகவே பின்னூட்டமா!
  நன்றிங்க.

  ReplyDelete
 35. @ Rathnavel: நன்றிங்க அய்யா.

  ReplyDelete
 36. @ மோகன்ஜி: நன்றி சார்.

  ReplyDelete
 37. @ மகேந்திரன்: நன்றிங்க.

  ReplyDelete
 38. @ மாய உலகம்: நன்றிங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது