கவிதை பிடிக்காதவர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . கவிதை எழுதுவது ஒரு வரம் போல . எல்லாராலும் எல்லார்க்கும் பிடிக்கும் வண்ணம் எழுதமுடியாது . ஆனால் கவிதைகளால் தங்கள் வலைத்தளங்களை நிறைத்து பலரின் கவனத்தை கவர்ந்த சிலரின் அறிமுகங்கள் இதோ .
இரவின் புன்னகை :
நண்பர் சாலகுருச்சி வெற்றிவேல் அவர்களின் வலைத்தளம் இது . கவிதைகள் இங்கு நிரம்பி வழிகிறது . கவிதைகள் மட்டும் இன்றி வனவள்ளி என்ற அருமையான தொடரையும் எழுதிவருகிறார் .பழக அருமையான நபர் இவர் . சென்ற வருட பதிவர் சந்திப்பில் இவருடன் இருந்தது மறக்க முடியாதது .
---------------------------------------------------------------------------------------------------
நீரோடை : மகேஷின் கவிதைகள்
பல்வேறு தலைப்புகளில் பல அழகான கவிதைகளை தனது வலைபக்கத்தில் பதிந்து வைத்துள்ளார் நண்பர் மகேஷ் . நீங்களும் படித்து ரசியுங்கள் .
---------------------------------------------------------------------------------------------------
சுவாதியும் கவிதையும் :
சுவாதியும் கவிதையும் என்னும் வலைப்பூவை எழுதிவரும் சகோ சுவாதி தனது அருமையான எழுத்துநடையால் படிப்பவரை கட்டிபோடுகிறார் . வார்த்தை ஜாலங்களில் கவிதை களைகட்டுகிறது .
---------------------------------------------------------------------------------------------------
பென்சில் நதி :
ராஜா சந்திரசேகர்
இவர் எழுதிய கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான்
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
*2003ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது
(கவிப்பேரரசு வைரமுத்து வழங்கியது)
*புதிய கவிதைத் தொகுதிகள் 'அனுபவ சித்தனின் குறிப்புகள்,நினைவுகளின் நகரம் வெளியாகியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------
ஒன்னும்தெரியாதவன் :
இல்யாஸ் அபுபெக்கர் என்ற நண்பரின் வலைபூ இது . முகநூளில் கலக்கி வரும் இவர் பலகவிதைகள் எழுதியுள்ளார் . இவரது ஸ்பெஷல் "குட்டிம்மா " தான் . மதங்களை கடந்து மனிதனை , மனிதன் மனதை நேசிக்கும் மிக சில மனிதர்களில் முக்கியமானவர் இவர் . முடிந்த அளவு இவரை நண்பராக ஆக்கிகொள்ளுங்கள் . இவரது முகநூல் முகவரி :https://www.facebook.com/ilyas7032?fref=nf
---------------------------------------------------------------------------------------------------
தமிழா தமிழா !!
- Kanchana Radhakrishnan
- T.V.ராதாகிருஷ்ணன்
தமிழின் அருமையான கருத்துகளை எடுத்து மற்றவர்களும் சொல்லும் அழகான கவிதைகளை இவர்கள் படைகின்றனர் . மரபுக்கவிதை முதல் புதுகவிதைவரை அனைத்தும் இவர்களிடம் உண்டு . படித்து பாருங்கள் .
---------------------------------------------------------------------------------------------------
ராஜாசந்திரசேகர் கவிதைகள் :
பல அருமையான , சிந்திக்க வைக்கும் அதே சமயம் ரசிக்க வைக்கும் கவிதைகள் அடங்கியவலைபூ இது . இதில் நான் ரசித்த சில கவிதைகளை உங்களுக்கு அளித்துள்ளேன் .
மேலும் வாசிக்க...
தேன் நிலவு என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளை ஏ.எம். ராஜா
பாடிய "பாட்டு பாடவா? பார்த்து பேசவா?" பாடலுக்கு ஜெமினி கணேசன் மற்றும்
வைஜெயந்தி மாலா நடித்திருப்பார்கள். இப்பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. அதுபோல இன்று பாடல் வரிகளையும், பாடல் பற்றிய விவரங்களையும், பாடலைக் கேட்கவும்/பார்க்கவும் நமக்கு உதவிடும்
சில பதிவர்களின் சுட்டிகளை இன்று பார்க்கலாம்…
நல்ல பாடல்கள் கேட்க வேண்டுமா? கோவை ரவி என்ற நண்பரின் பாசப் பறவைகள்வலைப்பக்கத்துக்குப் போனால் நிறைய தொகுப்புகளை சேர்த்து வைத்திருக்கிறார் நாம் கேட்டு மகிழ.
கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் ஓலிக்கும் பாடல்களை யாருக்குத்தான் பிடிக்காது. அவர் ஆங்கிலப் படமான காந்தியில் கூட ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாடலை இங்கே கேளுங்க.
பார்க்க/கேட்க பிடிக்காத பாடல்களுக்கெனவே ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஸ்வர்ணரேக்கா. இதுவும் சரிதான் – இப்போது வரும் பாடல்களில் நிறைய பாடல்கள் இதுபோலத்தான் இருக்கிறது. இங்கே பாருங்க அவருக்குப் பிடிக்காத பாடல்களின் தொகுப்பை..
”ஒரு திரைப் படத்தின் கதையுடன், பாத்திரங்களுடன் ஒன்றியிருப்போம், அப்போது
பார்த்து ஒரு டூயட் சாங், அல்லது கனவுப் பாடல் வரும். பார்ப்பது சினிமா என்று
ஞாபகப்படுத்தி விடும். இப்படி விலகியிராமல் அதாவது பாடல் காட்சி பாடல் காட்சியாக
இல்லாமல் எப்பவாவது சில முறைதாம் திரைக்கதையின் ஒரு காட்சியாக அமையும். சிறந்த
திரைக் கதாசிரியரும் இயக்குனரும் அதற்குத்தான் படாத (பாடாத) பாடுபடுவார்கள்” என்று சொல்லும் இந்தப் பகிர்வுக்கு சொந்தக்காரர், பெரிய
சிறுகதைகளாகட்டும் ஒரு பக்கக் கதைகளாகட்டும் அவைகளைப் படைப்பதில் வித்தகரான திரு கே.பி. ஜனா.
பதினேழு பதிவர்கள் சேர்ந்து ஒற்றுமையாக ஒரு வலைப்பூ நடத்துவது என்பது
எவ்வளவு போற்ற வேண்டிய விஷயம். அதுவும் கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த தேன்கிண்ணம் வலைப்பூ கிட்டத்தட்ட இரண்டாயிரம் பாடல்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது. அவர்களது முயற்சிக்கு ஒரு தலைதாழ்ந்த வணக்கம். இங்கே சென்று பாடல்களை
கேட்டு/பார்த்து மகிழுங்கள்.
கவிதை வீதி சௌந்தர் அவர்களின் பாட்டு ரசிகன் தளத்தில் தமிழ்ப் பாடலின் வரிகளை
ஆய்வுகளோடு பகிர்கிறார். மொத்தம் 18
பாடல்களே இருந்தாலும் அத்தனையும் நல்ல பாடல்கள். அவரின் இந்த நல்ல முயற்சி வெற்றி
பெறட்டும்.
இன்று பாடல்களைப் பற்றிய பகிர்வுகளைப் பார்த்தோம். நாளை வேறு சில பதிவர்களின்
அறிமுகங்களோடு சந்திப்போம்.
நட்புடன்
ஆதி வெங்கட்.
மேலும் வாசிக்க...
இந்த முறை நவராத்திரியில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான்! கோயில்களில் கூட்டம் நெரியும்! நாம் நவராத்திரி நாயகியரை இங்கேயே தரிசிப்போம்!
என் அம்மாவுக்காக, பாரதியாரின் இன்னுமொரு நவராத்திரிப் பாட்டு இன்று இதோ: (இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தாட்டாலும் என் அம்மா என்னைத் திட்டுவார்! பாட்டு மூன்று தேவியரையும் குறித்துப் பாடுவதால், கொஞ்சம் நீளம்!)
தலைப்பைப் பார்த்து, திருப்பி நேற்றைய கனவுக்குப் போய் விட்டேனோ என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் கனவு மெய்ப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்! இன்றைய என் பதிவர்களைப் பற்றிப் பார்ப்போம்! ஒவ்வொருவர் வலைப்பூ எழுதும் போதும் தம்மிடம் மற்றவர்களுடன் பகிரத்தக்க விஷயங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறார்கள். எழுதும் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்! அவரவர் கனவு கட்டாயம் மெய்ப்பட வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்மையே நினைத்தும் செய்தும் வந்தால், நல்ல கனவெல்லாம் பலிக்கும் என்பதை அனுபவபூர்வமாக நம்மில் பலர் உணர்ந்தும் இருப்போம்!
முதலில் யாரைப் பற்றிப் பதியலாம் என்று 'உட்கார்ந்து யோசித்த' போது, மனங்கவரும் நடிகர் நாகேஷின் படத்தை அடையாளமாக வைத்திருக்கும் சேட்டைக்காரன் நினைவு வந்தது! 'இங்குள்ள மொக்கைகளைப் படிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!' என்று சொல்வதைத் தாண்டி தைரியமாக உள்ளே நுழையலாம்! பொருத்தமாக அன்னை காளிகாம்பாள் பற்றி அவர் எழுதிய பாடல்கள் அழகு! அவருடைய 'சேட்டை' பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை! சமீபத்தியது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
'நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !' - யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் - பத்திரிகை உலகிலே எழுத்தாளராகப் பிரபலம் ஆன ரிஷபன் - அவர் பதிவுகள் அத்தனையுமே அருமை! - கதையாகட்டும், கவிதையாகட்டும், ஒரு ரிஷபன் டச்சோடு இருக்கும்! சமீபத்திய அவர் இடுகைகள் - குட்டி நாய் சிறுகதை - இதில் யார் பரிதாபத்துக்குரியவர்? அன்பின் மொழி - கவிதை - கவிதை!!
கற்றலும் கேட்டலும் என்று அழகுப் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ராஜி, எழுத்தின் பல துறைகளிலும் எழுதுகிறார்; கதை, கட்டுரை, ஆன்மிகம் என்று எழுதி வந்த இவர், கவிதைகளிலும் ஜமாய்க்கிறார்! பல வருடங்களுக்கு முன் வீதியில் வந்த மிட்டாய்க்காரர்கள் போன்ற தொலைந்த தொழிலாளிக்கு வருந்தும் அவருடைய ஒரு கவிதை! உறவுகளைப் பற்றி நெகிழச் செய்யும் ஒரு கதை! அழகில்லாத ஓவியமா-இதில் ஜெய்ப்பூர் ஓவியங்களை ரசிக்கலாம்!
அய்யம்மாளின் அழகுத் தமிழ் நினைவலை - இந்த வலைப்பூவில் எழுதி வரும் அய்யம்மாள் ஒரு புதிய பதிவர்! சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்கிறார். பூரண கொழுக்கட்டையும் உண்டு; பொள்ளாச்சி சிக்கன் பிரியாணியும் உண்டு இவர் இடுகைகளில்! இவர் ‘தெய்வகுளத்து காளியம்மன்’ என்ற பெயரில் ஒரு கோவிலைப் பற்றியும் அழகாகப் பகிர்ந்திருக்கிறார்.
'ஃப்ரீயா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க... ' என்று அதிரடியாகச் சொல்லும் ஸ்வர்ணரேக்கா, பூசலம்பு என்ற வலைப்பூவின் சொந்தக்காரர். நடுவில் காணாமல் போயிருந்த(!) அவருடைய சமீபத்திய பதிவு பார்க்க, கேட்கப் பிடிக்காத பாடல்கள்! சரியாகத் தான் படித்தீர்கள், அது பிடிக்காத பாடல்கள் தான்!
Mano - !¡...என் செய்வேன்...¡! என்ற வலைப்பூவைப் பார்ப்போம். டைரக்டர் கே.பாலச்சந்தர் பற்றி ஒரு இடுகையும் எழுத்தாளர் சுஜாதாவின் மின்னூல்களை அளித்து ஒரு இடுகையும் என்னை மிகவும் ஈர்த்தன.
கொஞ்சம் கனவு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் புன்னகை,நிறைய ஆசைகள் கொண்டவன்.. உலகையும் மனிதர்களையும் ரசிப்பவன்..
என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் Raazi
!..யாதும் ஊரே...! என்ற பெயரில் ஜூலை 2011 முதல் எழுதுகிறார். இவருடைய லேடிஸ் பர்ஸ்ட் என்ற நகைச்சுவைப் பதிவு வலை மேய்கையில் கண்ணில் பட்டது.
பல நிறம் கொண்ட வானவில் போன்று விதவிதமான பதிவர்களின்
இடுகைகளை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!

டிஸ்கி: பேரன்புடைய வலையுலகப் பெருந்தகையீரே! வலைச்சரப் பதிவுகள் தமிழ் மணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள்/உங்களுக்குப் பிடித்த பதிவுகள் பலரைச் சென்றடைய ஓட்டுப் போட மறக்காதீர்கள்! நன்றி!
மேலும் வாசிக்க...