சனி ஸ்வரம் 'ப'
➦➠ by:
அனுபவம்,
உளவியல்,
மோஹனம்,
ஸ்வரம் 'ப'

வயலின் ஒரு நரம்பு இசைக்கருவி ,பழங்காலத்தில் பிடில் என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணை (பக்கவாத்திய) கருவியாக இது விளங்குகின்றது.இது நான்கு முக்கிய தந்திகளைக் கொண்டது.இதனை வாசிக்க bow எனப்படும் ஒரு குச்சி உண்டு.ஸ்ருதியை சரி செய்து கொள்ள தந்திகளை இறுக்கி கட்டியுள்ள பொத்தான்களை இறுக்கியும் தளர்த்தியும் மாற்றிக் கொள்ளலாம்.இதன் நாதம் மனம் இளகும் வண்ணம் அமையப் பெற்றது.
இன்றைய ஸ்வரம் 'ப' , ஸ்வரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் அமையப் பெற்றது.
5. பஞ்சமம்: ஏழு ஸ்வரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. ( பஞ்ச - ஐந்து) ஸ்வர எழுத்து "ப"
அது போல இன்றைய ஐந்தாம் இடத்தை அனுபவப் பதிவுகளும் உளவியல் பதிவுகளும் வகிக்கின்றன.மனம் இளக்கும் வயலின் நாதம் உளவியல் சம்பந்த
பிரச்சனைகளைத் தீர்க்கின்றன. அது போல் இவர்களின் பதிவுகளும் தீர்வுகளைக் கொடுக்கின்றன.அவற்றைப் பார்க்கலாம்.
ஒவ்வொருத்தர் அனுபவமும் வாழ்க்கைல ஏதாவது பாடம் சொல்லித் தராப்புல அமையுது.இவங்க வாழ்க்கைப் பாடம் பாருங்க. நாம் பக்குவப் பட எத்தனை பேர் உதவறதை சொல்றாங்க.அகிலா! நீங்க கொஞ்சம் அடிக்கடி எழுதலாமே?
ஒரு மனிதனின் மன ஆரோக்கியங்கறது எங்கேருந்து வருதுன்னு கேட்டா,முதல்ல தாய் தந்தையர் கிட்டே இருந்துதான்.பெற்றோர் முன் மாதிரியா இருந்தாதான் குழந்தைகளின் உள்ள வளர்ச்சி நன்றாக இருக்கும். 'நல்ல தாய் தந்தையராய் இருப்பது எப்படி'னு தன் பதிவுல படிக்கறவங்களுக்கு புரியும் விதமா சொல்லி இருக்காங்க நம்ம நிலாமகள்
குழந்தைகள் பற்றிய எதிர்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியான்னு கேட்டிருக்கார் செல்வராஜ்.
அது மட்டுமில்லாம இவர், குழந்தைகள் சாப்பிட மறுப்பது பற்றியும் பெற்றோர்கள் செய்ய வேண்டியது பற்றியும் கூட இந்த பதிவுல சொல்லி இருக்கார்.
வலையின் பெயரே ஒரு வாழ்க்கைப் பாடம் மாதிரி வச்சுருக்கார் இவர்.
குழந்தைகளை எப்படி வளர்க்கணும் எப்படி ஊக்குவிக்கணும்னு சொல்லித் தாரார் இவர் (ஆனா சார்!இந்த காலத்துக் குழந்தைகள் கொஞ்சம் உஷார்.தயாரான்னு கேட்டா குரல் கொடுக்க மாட்டாங்க கண்ணாமூச்சில.அப்படி கொடுத்தாலும் இன்னொரு குழந்தை அங்க தேடத் தெரியாம இருக்கறதில்லை) மற்றபடி இந்த பதிவு சூப்பர் சார்
சாலைகள் போதி மரங்கள்.எப்போதும் ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கின்றன.கொடுத்துக் கொண்டே இருக்கின்றன அப்படின்னு சொல்றார் சேரலாதன்.சாலைகளிலிருந்து அனுபவ பாடம் கத்துக்கற கலையை சொல்றார் தன்னோட ஆணி வேர்களும், சல்லி வேர்களும் பதிவில்.
வசந்த காலத்துல வண்ணமயமா இருக்கற பசுமையான மரங்கள் இலையுதிர்க் காலத்துல தன்னை உதிர்த்திக் கொள்கிறது.ஐந்து மாதங்கள்தானே அதுக்கு எதுக்கு அலட்டிக்கணும்னு அது நினைக்கறதில்லைங்கறதை இயற்கையின் இலையுதிர்க் காலத்துல அன்புடன் ஆனந்தி சொல்றாங்க.ஆனா மனிதர்களோ கஷ்டம் வரதுக்கு முன்னாடியே வரப் போற கஷ்டத்தை நினைச்சு புலம்புகிறார்கள்.
நட்பையோ உறவையோ இழக்க நேரிடறது எத்தனை கொடுமையான விஷயம்.அதுவும் அப்படி இழக்கறதுக்கு முன்னாடி அவங்க நம்ம கிட்ட பேச நினைக்கும்போது நம்மால பேச முடியாத சூழல் இருந்துட்டா அது குற்ற உணர்வா மாறிடுது.இவங்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல..........
இவங்க பதிவைப் படிச்சு பாதில நான் கலங்கிட்டேன்.கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பின் இவங்க தந்த பின்னூட்டம் பாத்தப்பறம்தான் கண்கள்ல ஆனந்தக் கண்ணீரோட நிம்மதியா மூச்சு விட்டேன்.இவங்க இப்ப எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல எனக்கு கூற முடியுமா ப்ளீஸ்...
அனுபவம் மற்றும் உளவியல் சம்பந்தப் பட்ட பதிவுகள்னா இவரைத் தெரியாதவங்களே இருக்க முடியாது.வாழ்வின் நிதர்சனங்களையும் பிரச்சனைகளின் தீர்வுகளையும் இவங்களைப் போல ஒரு தீர்க்க தரிசனக் கண்ணோட்டத்துல பாக்க தனித் திறமை வேணும்.வாழ்வியல் பாடங்கள்ல
இவங்களை என் ஆசானாக நான் நினைக்கிறேன்.
இந்த படத்தை பார்த்தா எப்பேர்ப்பட்ட மனதும் இதமாகாதோ....
மோஹனம்:
அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், க்ரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம்.மனதிற்கு இதம் தந்து மிக அழகாக இசைக்கும் ராகம்.
நன்னு பாலிம்பா நடசி ஒச்சிதிவோ..... பாடல்:

download
Artists: LalgudiGJayaraman
இந்த அனுபவ,உளவியல் பதிவுகளைப் படிச்சு கடைப்பிடிச்சா உள்ளத்தின் நலம் வயலின் இசையில் மோஹன ராகம் மாதிரி வாழ்வியலில் அருமையா இசைக்காதோ??!!!!!!!!!



