காலடி என்ன ஒரு பணிவான பெயர், அதையே மிதியடின்னு வெச்சிருந்தா நம்ம கலாச்சாரப்படி பணிவில்லாத செருக்கான பெயராகிவிடும் என பயந்து போய் மனுசன் இவரோட தளத்திற்கு காலடின்னு பேர் வெச்சிட்டார் போலருக்கு..
இவர் பெங்களூரூவில் இருந்து எழுதுகிறார், பெரும்பாலும் அனுபவம் சார்ந்த பதிவுகள், ஆனால் கட்டுடைக்க ஆசைப்படும் கட்டுமஸ்தான மனிதர், ஆனால் பாவம் இவருக்கும் கால் கட்டு போட்டுவிட்டார்கள். இவர் வீட்டு அம்மிணி என்னை ரொம்ப நல்லவன்னு வேற சொல்லிருக்காங்க, அதுக்காகவேனும், பெங்களூரூ சென்று இவர் வீட்டில் இரண்டு வேலை சாப்பிட்டு விட்டு வரவேண்டும். அப்புறமா அந்த திண்ணி முண்டம் குடுகுடுப்பைய வாட்டாள் நாகராஜ் கிட்ட பிடிச்சி கொடுங்கன்னு சொல்லிருவாங்க.
இவரின் பதிவுகள் சில இங்கே.
கட்டுடைக்க நினைத்து இவர் எழுதிய பதிவு
இங்கே, அங்கே அவர் பார்த்ததை சொன்னதற்காக ,அதன் பின்னர் கையுடைந்து மாவுக்கட்டுடன் ஆணழகனாக மாற நினைத்தது
இங்கே, இந்தப்பதிவில் என்னுடைய பின்னூட்டம் பார்த்து என்னை பெண்களூரூவில் ஆண் அழகுக்கடை வைக்கவும் அழைத்திருக்கிறார். எனக்கு ஆணழகுக்கடை வேண்டாம்
வடை போதும் என்று சொல்லிவிட்டேன்.
இன்னொரு பதிவர்
கவிக்கிழவர். இவருடைய அனைத்து கவிதைகளையும் படியுங்கள், ஈழத்தமிழனின் வலி தெரியும்.
முந்திய பதிவு இங்கேயும்.
மிஸ்டர் NO என்பவர் ஆரம்ப காலங்களில் கோவி கண்ணனின் ”காலத்தில்” , தன்னுடைய கலாய்த்தல் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் அளித்துக்கொண்டிருந்தார், தற்சமயம் இந்த புயல் எந்தக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாத தருமபுரி காந்தி, நண்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் மையம் கொண்டிருக்கிறது தவறாமல் படியுங்கள். இவர் பதிவர்களின் கருத்துக்கள் மீது தனி மனித தாக்குதல் இல்லாமல் விமர்சிக்கும் தன்மை ஒட்டு மொத்த பதிவுலகத்திற்கு ஒரு படிப்பினை.
NO' வின் பின்னூட்டங்கள்தலைப்பு விளக்கம் : ஒரு பின்னூட்டத்தில் இவர் ஜே.கே ரித்தீஷ் போல இருப்பதாக ஒருவர் கூறியிருந்தார். ஜே.கே ரித்தீஷ் பதிவுலகில் நல்ல விலைபோகும் பெயர் என்பதால்.
மேலும் வாசிக்க...
மிஸ்டர் NO என்பவர் ஆரம்ப காலங்களில் கோவி கண்ணனின் காலத்தில் , தன்னுடைய கலாய்த்தல் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் அளித்துக்கொண்டிருந்தார், தற்சமயம் இந்த புயல் எந்தக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாத தருமபுரி காந்தி, நண்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் மையம் கொண்டிருக்கிறது தவறாமல் படியுங்கள். இவர் பதிவர்களின் கருத்துக்கள் மீது தனி மனித தாக்குதல் இல்லாமல் விமர்சிக்கும் தன்மை ஒட்டு மொத்த பதிவுலகத்திற்கு ஒரு படிப்பினை.
NO' வின் பின்னூட்டம் படிக்க
மேலும் வாசிக்க...
ஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.
நசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.குடுகுடுப்பை :
நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.
நசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா ? அது உங்களுக்கு இருக்கா? சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.குடுகுடுப்பை :
ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.
அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர்.
ரொம்ப பகடியா எழுதறாப்ள.அதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .திடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .தன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.பெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,
அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம்,
கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.
அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.
திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .
நசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா?குடுகுடுப்பை :
நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ?நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?குடுகுடுப்பை :
யாழ்ப்பாணம் கள்ளும்,
கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார்.
போதுமா?
நசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு?குடுகுடுப்பை :
அது லோக்கல் ஆளுதான்,
ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார்.
இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.
இந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.
நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?குடுகுடுப்பை :
இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பாருங்க,
பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.
நசரேயன் : வழியுதா? அப்ப ஒகே ?நமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா?குடுகுடுப்பை :
அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம்,
இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம்,
நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன்.
இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.
அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க,
பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும்.
அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது.
கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.
கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.
நசரேயன்: என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்குடுகுடுப்பை :
ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார்,
நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன்,
நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.
நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.குடுகுடுப்பை :
போட்டிரலாம் ஆனால் அவரு பேர "
புதுமை ஏசி"
ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.
நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?குடுகுடுப்பை :
ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.
பிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.
மேலும் வாசிக்க...
நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ எங்கப்பா, பொக்கிசமாக வைத்திருந்த மர்பி ரேடியோவில் பாடல் பாடியவர் :பித்துக்குளி முருகதாஸ் என்று எப்போதோ காதில் விழுந்தது, அதே சமயத்தில் வலைமாமனி விருது பெற்ற நாகம்மாள் எங்களையெல்லாம் மிரட்டுவதற்கு வெளியில் சென்று விளையாண்டால் தாடி வெச்சிருக்கிற பித்துக்குளி புடிச்சிட்டு போயிருவான் அப்படின்னு பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. எப்படியோ பித்துக்குளின்னாலே , பித்துக்குளி முருகதாஸ்தான்னு முடிவு செஞ்சிட்டேன் , அவரு ஒரு நாளைக்கு நம்மள வந்து பிடிக்கப்போறான்னு பயம். இந்த சமயம் ஒரு நாள் எங்க வீட்டு வாசலில் ஒரு தாடி வெச்ச ஆள் எங்கப்பாகூட பேசிட்டு இருந்தாரு. நான் அழுது அப்பா அந்த பித்துக்குளி முருகதாஸ விரட்டி விடுங்க பயமா இருக்குன்னு அழுதது இந்த நவீன ஞானபித்தனின்
கிழமொழி படிக்கும் போதும் ஞாபகம் இருக்கிறது.
இந்த ஞானபித்தன் புரியாமல் எழுதுவதில் கில்லாடி, இவர் நன்றாக அறிமுகமான பதிவராக இருந்தாலும் என்னுடன் கருத்து ரீதியிலும் நிறைய ஒத்துப்போவதால் இந்த
சப்பாத்திப்பதிவையும் அறிமுகம் செய்கிறேன். இவர்
இங்கே பயணக்கட்டுரைகளும் எழுதுகிறார்.
இவர் பித்தன் , நான் பித்தன், பி-த்-த-ன் இப்படியெல்லாம் இருந்த பெயர் ஞானபித்தனாக மாற காரணமாக இன்னோரு பித்தர் காரணமாக இருந்திருப்பார் என நினைக்கிறேன். அந்த பித்தர் என்னுடைய எழுத்துக்கள் மேல் மோகம் கொண்டுதான் எழுதவே ஆரம்பித்தாராம். அதனால்தானோ என்னவோ என்னைப்போல் எழுத்துப்பிழைகளில் அதிகம் இவரும் கவனம் செலுத்துவதில்லை, அதே சமயத்தில் சிலர் தொடர்ச்சியாக படிக்கும் அளவுக்கு எதையோ எழுதுகிறோம் என்ற திருப்தி.
இவரின் பதிவுகளை இங்கே படியுங்கள். தமிழ்மணத்தில் இணையாமலேயே ஐம்பது பதிவுக்கு மேல் எழுதிவிட்டார்.
நகைச்சுவையான கல்யாண அனுபவம்கடலை தயிர், சாப்பாட்டு ராமன் ஐம்பது பதிவுகளை தாண்டிவிட்டார்,இவருடைய நிறைய பதிவுகள் நானும் இதுவரை படித்ததில்லை, பிடிந்திருந்தால் பாலோ செய்யுங்கள்.
நியூயார்க் மாகாணத்தில் இருந்து எழுதுகிறார். மிக நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. எனக்குப்போட்டியாக அதிபர் வேட்பாளர் ஒருவரை வளர்ப்பதாக பிதற்றிக்கொண்டிருக்கிறார்.
இவருடைய பதிவுகள் இங்கே.
வித்தியாசமான உத்தியில் சுவாராஸ்யமாக எழுதப்பட்ட கதை.
உளவுஆனைப்பட்டி அனுபவம்இப்போ பித்துக்குளி முருகதாஸ் என்ன ஆனார்னு பார்ப்போம், பித்துக்குளி முருகதாஸ்னு நான் நெனச்சிட்டு இருந்தவர், தாடி ராமன் என்பவர் எங்க வீட்டு நடவுக்கு நாத்து பறிக்க காண்ராக்டு பேச வந்தவர். நாத்து பறிக்க வந்தவர் அவர் தாடியையும் பறிச்சிட்டு வந்திருக்கலாம்.
மேலும் வாசிக்க...
கிராமத்தான் ரெட்மகி, கொழும்பு பதிவர் பிரபா
முதலாமவர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் எழுதுகிறார், கிராமத்தான் என்ற பெயரிலேயே மென்பொருள்கள் அதன் பயன்பாடுகள் பற்றி நகரத்தானுக்கும் புரியும் வகையில் விளக்கும் 24 வயது இளைஞன், எழுத தேர்ந்தெடுத்தாலும் தன்னுடைய வேலை சம்பந்தமான பதிவுகளையே எழுதி, தன்னுடைய துறையிலும், எழுத்திலும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் இந்த இளைஞனை படியுங்கள் ஊக்கமளியுங்கள்.
இவர் ஐம்பதாவது பதிவை தொட்டுவிட்டார்.
மென் கிராமத்தான்இன்னொரு இளைஞர் , இலங்கையிலிருந்து எழுதுகிறார். இவர் கொஞ்சம் பதிவு போதை தலைக்கு ஏறி தன்னை நிறையப்பேர் படிக்கவேண்டும் என்ற ஆவலோடு உள்ளார். விழியும் செவியும் என்ற பதிவில் எழுதுகிறார்.
கோபத்தை கட்டுப்படுத்த வழி ஆப்ரஹாம் லிங்கனை துணைக்கு அழைத்து வழி சொல்கிறார்
இங்கேவாழ்க்கை பற்றி பதக்கம் வேண்டுமா ஜெயிக்கலாம் என அழைக்கிறார்
இன்னொருவரின் கவிதையின் மூலம்இந்த நண்பருக்கு பதிவு எழுதுவது மட்டும் முழுநேர வேலையாக இருக்கமுடியாது. முழுநேர வேலையில் முழு கவனம் செலுத்துங்கள், கூடவே உங்கள் எழுத்துக்களை செம்மைப்படுத்துங்கள். பதிவுகள் உங்கள் கற்பனையிலிருந்து/அனுபவங்களிலிருந்து வரும்போது நன்றாக கவனிக்கப்படும்.
மேலும் வாசிக்க...
கிளுகிளுப்பை என்ற பெயரில் பதிவெழத நினைத்து, ஏற்கனவே அந்த பெயரில் பிளாக்ஸ்பாட் இருந்ததால் குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவெழுத ஆரம்பித்தேன், பின்னர் வருங்கால முதல்வராக ஆசைப்பட்டு அனைவரையும் போல மிக எளிதில் வருங்கால முதல்வராக ஆகினேன்.பொதுவாக வருங்கால முதல்வராக ஆசைப்படுபவர்கள் உடனடியாக கட்சி ஆரம்பித்துவிடுவார்கள். உலகத்தில் முதன்முறையாக வருங்கால முதல்வராக ஆன பின்னர் சாதிசங்கம் போல் இருந்த குடுகுடுப்பையை கு.ஜ.மு.க என்ற கட்சியாக மாற்றினேன். இந்தக்கட்சியின் ஒரே நோக்கம் நானும் என் குடும்பமும் மட்டுமே. சொல்லின் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் தமிழரசு கழகத்தில் எத்தனை உறுப்பினர் என்று கேட்டால், தன்னுடைய வளமான மீசையை முறுக்குவாராம், ஆனால் கு.ஜ.மு.க பொதுச்செயலாலர் குடுகுடுப்பைக்கு மீசையும் இல்லாததால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, இதற்கு கிளைகளோ, வேறு உறுப்பினர்களோ இல்லை என்பதை வலைச்சரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
கு.ஜ.மு.கவை மதித்து எழுத்துரிமை அளித்த ’சீனா’வுக்கு நன்றி.கட்சியின் சீரிய கொள்கையின் படி எனக்குப்பிடித்த என்னுடைய சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். தமிழ்மண நட்சத்திரமாக இருந்த காலத்தில் நான் எழுதிய
வரலாறுபிக்சன் என்ற பதிவு நிறைய பேருக்குப்பிடிக்கும் என நினைத்தேன், ஆனால் ஏனோ சரியான அளவு சென்றடையவில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பாருங்கள்.
பதிவெழுத வந்த புதிதில் எழுதிய பதிவு, மருந்து உட்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒரு உண்மைச்சம்பத்தை வைத்து எழுதிய
மீண்டும் நடக்கப்பழகினான்என்ற பதிவு, இதற்கு முன்னர் படிக்கவில்லையெனில் கண்டிப்பாக படிக்கவும்.
கிராமத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கிடைத்த இந்த
தொன்னை அனுபவம். அங்கே கட்டிய சில வீடுகளின் கலவையால் கிடைத்த ஒரு உரையாடல் கதை
வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.ஒரு முருங்கைமரத்தை ஹீரோவாக வைத்து சொன்ன ஒரு அறிவுரைக்கதை
நொண்டி முருங்கை மரம்வருங்கால முதல்வரில
விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் சரியா, தவறா விவாதம்நேரமிருப்பின் சினிமா மற்றும் பயணம் பதிவுகளையும் இந்த லிங்குகளில் படிக்கவும்.
சினிமாபயணம்கல்லூரி சாலைதொடர்ந்து நான் படிக்கும்/படிக்காத சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
மேலும் வாசிக்க...