07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சூர்ய பிரகாஷ். Show all posts
Showing posts with label சூர்ய பிரகாஷ். Show all posts

Sunday, September 9, 2012

இது டாட்டா டைம்

ஒரு டபுள் ஓ.கே வில் நான் கம்மிட்டானேன் ! எந்த அளவு கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்தேன் என தெரியவில்லை.

இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குக் மறுமொழியிட்டு, வாக்களித்து உற்சாகமூட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னுடைய இந்த வார பதிவுகளில் உங்களுக்கு பிடித்தவை, என்னுடைய எழுத்தை பற்றிய உங்களுடைய கருத்து ஆகியவற்றை உங்களிடம் எதிரப்பார்க்கிறேன்.

இன்றைய பரிந்துரைகள்:

நேசியுங்கள் – நேசிப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

தொழில்நுட்ப கடவுள் Steve Jobs

சச்சின் டெண்டுல்கர் 

கூடங்குளம் 

மீண்டுமொருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி, தவறாமல் கருத்திடுங்கள்.
குறிப்பாக சுப்பு தாத்தா அவர்களின் கமெண்டுகள் எனக்கு ஒரு உற்சாக டானிக்.


இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .

என்னுடைய பதிவுலக STD லையே நான் இத்துனை பதிவுகள் தொடர்ந்தாற்போல் எழுதியது கிடையாது, இதெற்கெல்லாம் முக்கிய காரணமான நம்ம சீனா அய்யா அய்யாவுக்குதான் இன்றைய அவார்ட். அய்யா என்னுடைய பதிவுகளை பற்றிய உங்களின் Feedback ற்காக காத்திருக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Saturday, September 8, 2012

அடிக்கடி,சுண்ணாம்பு,இது,என்னடி,IT,மனைவி,எவனோ

>>அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

>>சுண்ணாம்புச் சுவற்றில் நகங்களால் கீறினால் ஒரு ஓசை எழுமே, அதை கொஞ்சம் மனதுக்குள்ளேயே ஓடவிட்டுக் கேளுங்கள்... டக்கராக(!) இருக்கிறது அல்லவா?

இரண்டு நன்கு துருப்பிடித்த தகரங்களை ஒன்றின் மேல் ஒன்று வைத்து நன்கு உராயலாம்

அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை!


>>இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். முதல் 20நிமிடம் போனதே தெரியவில்லை. ஏனெனில் நானே இருபது நிமிடம் கழித்துதான் போனேன். இந்த சக்கையான படத்தை மொக்கையான படம் என சிலர் சொன்னார்கள். அவர்கள் அறிவு அவ்வளவுதான்.

yaarukku Yaaro-2012 /யாருக்கு யாரோ..தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.


>>என்னடி நான் ஆபிஸுக்கு போக நேரமாச்சு இன்னும் ஒண்ணு கூட சமைக்கலை? எனக்கு உடம்பு சரியில்லைங்க அதனால பையன் கிட்ட லீவ் லெட்டர் கொடுத்து அனுப்பிச்சுட்டேன் அது உங்க டேபிளில் இருப்பதாக சொன்னான் அதை நீங்க பார்க்காதது என் குத்தமில்லைங்க.



>>IT Project Manager வேலை செய்றதுக்கு எத்துண பேர் வேணும்,எவ்வளவு நேரம் ஆகும், அதுக்கான ப்ளான் போட்டு கொடுத்து வேலை வாங்கறது தான் என் வேலை,

ஓ சூபர்வைசர் வேலையா ?



>> மனைவியின் ஏங்க இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேனா? என்ற கேள்வி அபாயகரமான கேள்வி. ஆமாம்மா, அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்கே


>> எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்

மேலும் வாசிக்க...

Friday, September 7, 2012

ஆட்டோகிராப் சேரன் துணை

நாட்டியமாடும் அந்த கால்கள்
சட்டென்று என்னை தாக்கும் அவள் விழிகள்
ஒரு வேலை வேறு யாரயாவது பார்கிறாளோ ?
சில நேர புலனாய்வுக்கு பிறகு கன்பார்ம் செய்தேன்
என்னை தான் பார்க்கிறாள் !! (நம்ளையும் ஒரு பிகர் பாக்குதுபா)
தந்தையை அருகில் வைத்துக்கொண்டே !
ரயில் தாமதமாக சோர்ந்து போனவளாய் கண்களால் அவள் வருத்தத்தை தெரிவிக்க, நானும் அமர்ந்து கொண்டே அவளை கண்களால் தேற்றினேன்,
 அவளும் நோக்க, சூர்யாவும் நோக்க அவளின் தந்தை முறைக்க ,
சட்டென்று விலகியவளாய், நான் எங்கே என்று தேட என் அருகில் அமர்ந்திருக்கிறாள் !!
ஒரு காதிலிருந்து மறு காது வரை நான் இளிக்க! மீண்டும் அவள் தந்தை முறைக்க! அப்பொழுது அவளின் மூச்சு காற்று படும் தூரத்தில் நான் இருக்கிறேன், திடீரென்று என்னை நேருக்கு நேர் பார்க்கிறாள் !!
அவள் கண்கள் என்னை ஊடுருவ ஊடுருவ சிலையாகிப்போன நான் அவள் எழுந்து சென்ற பிறகு தான் உணர்ந்தேன் என் கழுத்து ஐந்து பேர் சேர்ந்து அடித்தார் போல் வலிக்கிறதென்று !! (ஆமா ஏன் எழுந்து போனா ? காலைல குளிச்சிட்டு தானே வந்தேன் ? )

அன்று ரயில்வே ஸ்டேஷனில் தொலைத்த அவளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன் !!
பள்ளியில் புஷ்பா என்னை விரட்டிய போதும், கல்லூரியில் ஜானுவை நான் விரட்டியபோதும், இடையில் ஸ்டெபி, ரேகா, ப்ரியா, என லிஸ்ட் போனாலும் இவள் என்னை ஏதோ செய்து விட்டாள். ச்ச மறுபடியும் அவள பாக்கணும் டா சூர்யா.

ஏனென்றால் இவையெல்லாம் என் முதுமையின் தனிமைக்காக நான் சேர்த்துக்கொண்டிருக்கும் பொக்கிஷங்கள். அப்பொழுது எனக்குள் நானே சொல்லிகொள்வேன் அன்னைக்கு அவள் கிட்ட பேசி இருக்கலாம் டா ..

இப்பலாம் வெறும் லவ் பாட்டா கேக்க புடிக்குது,
புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீர் அடிச்சும் கிக்கில்லை,
கல்லு குடிச்சும் தூக்கமில்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே !!

அப்படியே லவ் மூட்லையே ப்ளாக் படிக்க போனா எனக்கு ஒரே ஆச்சர்யம் !

உள்நெஞ்சின் உரசல்

சிறகடிக்கிறேன்


நீ என்






அதை மட்டும் திருப்பிக்கொடு..

காலங்கள் மீது பயணிக்கும் காதல்

நிச்சயம் இதுவொரு பிரிவுக்கவிதை

உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !


யம்மாடியோவ் எத்துனை எத்துனை காதல் ! இன்னும் படித்து கொண்டே இருக்கிறேன் ! இவர்களெல்லாம் காதலை காதலிப்பவர்கள்!!!
 ஒன்று மட்டும் நிச்சயம் நாம் மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை !!

இறுதியாக உறுதியாக

"I am still an Eligible Bachelor" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ,,,


இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


தேவா அண்ணா ,,, இவர் நவீன உலகின் போர் வீரர் ! இவர் எனக்கும் ஒரு படி மேல, இவரின் சுவாசமே காதலாகி விட்டது !!!




மேலும் வாசிக்க...

Thursday, September 6, 2012

Foreign Return

ஏன் ? எதுக்கு? எதனால? இன்னிக்கு நம்ம ஊர்ல இன்ஜினியரிங் படிச்ச, படிக்கிற, படிக்க போற எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி! எட்டு செமஸ்டர் 44 எக்ஸாம்ஸ் , 24 லாப்,வைவா, ஆயிரமாயிரம் அசைன்மன்ஸ், இன்னவேடிவ்ஸ், செமினார்ஸ், பிரசண்டேசன்ஸ், லட்சம் லட்சமாய் பணம்,பாங்க லோன், கடன், வட்டி, கந்து, கை மாத்து, முழுதாக நாலு வருஷம்! இவ்வளவும் செய்து கரை தேர்ந்து வந்தால் நமக்கு கிடைக்கும் ஒரு பதில் தம்பி வெறும் டிகிரிய மட்டும் வச்சிக்கிட்டு யவனும் வேல கொடுக்க மாட்டான்.

மறுபடியும் சர்டிபிகட் கோர்ஸ் புதிய கடன், புதிய வட்டி, வேலையின்மையால் வரும் ஏச்சுக்கள், பேச்சுக்கள், மனக்குழப்பம், கஷ்டம், வெளியூர் வாக்ழ்கை, குடும்ப நினைவுகள், ஒரு வேலையை வாங்கி கரை சேர்வதற்குள் கிட்ட தட்ட வாழ்கையே வெறுத்திருக்கும்.அப்படி வாங்கும் வேலையும் இனித்தும் விடாது !!

சரி விடுங்க எதுக்கு சீரியசா போய்கிட்டு,

ஒரு கம்மியான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து ரெண்டு பேர் கைய புடிச்சு நாலு பேர் கால வாரி விட்டு சில பல போர்களம் சந்தித்து ஒரு குறிப்பட்ட நிலையை அடைவதற்குள் தலை நரைத்து விடும் இல்லைனா கிளார் அடிக்கும்!, திரும்பிபார்த்தால் நம்ம டாவோட பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருப்பார்கள்! பள்ளி தோழிகள் பேரன் பெயர்த்தியை  பார்த்திருப்பார்கள்! அடங்கொன்னியான் ! இருங்கடி நாங்களும் உங்க புருசனுன்களோட ஒசத்தின்னு காமிக்கிரோம்னு, அண்ணாமலை ரஜினி ஸ்டையிலில் ஒரு 40 pages நோட் வாங்கி குறித்து வைத்துக்க சொல்லி விட்டு பொண்ணு பார்க்க கிளம்பினால்!!

தம்பி அமெரிக்காவா ?
இல்லீங்க சாமி ..
இந்தியாவா... சரி ஒரு , ஒரு லட்சம் சம்பளம் வாங்குவியா
??!@@?????

ஜவுளி கடையில் தள்ளுபடி பார்த்திருப்பீர்கள், செல் போன் கடையில் பார்த்திருப்பீர்கள் இதை பார்தததுண்டா ?
 ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள் !!

அமெரிக்கா அமெரிக்கா ஆனால் அங்கோ இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள்  !!

அமெரிக்கா போக வில்லையானாலும் அவன் இங்கு வந்துவிட்டான், கார்போரேட் ரூபத்தில்,வேறு வழியில்லை நாமும் சம்பதித்தாக வேண்டும்!
படியுங்கள் பங்கு வர்த்தகம்,  , பங்கு ஆலோசனை.

பேசாம நம்ம அவன்ட்ட இருந்த சுட்டா என்ன ?

பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?
சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா?

பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் :

ஆதி மனிதன் 

ஏற்றுமதி உலகம் 

ஜெய் ஜவான் 


இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .




Selva Speaking நம்ம செல்வா அண்ணா! உலகம் சுற்றும் வாலிபன்! அனைவரும் படிக்க வேண்டிய மனிதர் !

சொந்தநாட்டிலேயே அகதிகளான இந்தியவடமாநிலத் தொழிலாளர்கள் அண்ணனின் சமீபத்திய பதிவு. 
மேலும் வாசிக்க...

Wednesday, September 5, 2012

பன்றிகுட்டி தான் எவ்வளவு அழகு!

பன்றிகுட்டியை என்றாவது ரசித்திருக்கிறீர்களா? அழகான நான்கு கால்கள், அதற்கு மாட்சிங்கா பிட் செய்தது போல் அதன் உடல், சினிமா ஹீரோயின்களே தோற்று போகும் அதன் அழகு மூக்கு ! நாம் அதை கிராஸ் செய்து போகும் போது உர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் என்று அது எழுப்பும் ஒலி !! ச்ச ஜான் காஸ்ட்ரோவே  தோற்று போய் விடுவார்! ( ஒரு நிமிஷம் ஜான் காஸ்ட்ரோனா சொன்னேன் யார் அவர் ? )



பன்றிகுட்டியின் அந்த அழகான இசை ஒரு ஒலி, அந்த ஒலி நிறைய விந்தைகளை கொண்டது ! இந்த உலகில் மறைக்கப்படும் உண்மைகள் நிறைய ஆனால் ஒலியை பற்றியும் சில இருக்கின்றன !! எவ்வளவு அழகு இந்த ஒலி !

கோயிலில் சற்று நேரம் அமர்வதற்காக சென்றிருக்கிறீர்களா ? எத்துனை மனிதர்கள், எந்நேரமும் எல்லா மொழிகளிலும் கடவுளை டிஸ்ட்ரப் செய்து கொண்டே இருக்கிறார்கள் ! உண்டியலில் பத்து ரூபாய் போட போய் பின்பு ஒரு ரூபாயை எடுத்து போடுகின்றனர்! கடவுளிடமே கருப்பு பணம்! அந்த பினான்ஸ் ஒன் ரூப்பி கடவுளுக்கு போதும் தான் :) கோயிலின் எந்த ஒரு மூலையிலும் சிறிது கரி அடித்திருந்தால் போதும் அதையும் தொட்டு வணங்குகின்றார்கள், கோயில்களெல்லாம் கலைத்தாயின் பிறப்பிடங்கள், நம் முன்னோர்களின் வரலாற்று சுவடுகள் . எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த உலகம் !!

ஒரு உலகம் மட்டுமல்ல ஐ மீன் இரண்டாவது உலகமும் இருக்கத்தான் செய்கிறது ! சூரியனுக்கே சவால் விடும் கண்டுபிடிப்பு தான் மின்விளக்கு ! எப்படி தயாரிக்கிறார்கள் ?

எப்படி கண்டுபிடித்தோம் அந்த மின்விளக்கை,விடை கல்வி,, இந்த உலகின் முதல் கல்வி கூடத்திற்கு  என் உளமார்ந்த நன்றிகள்.

கல்வி நம்மை ஆக்க பாதைக்கு இட்டு சென்றது, ராக்கெட்டில் கட்டியிருந்த எலுமிச்சையின் அருளால் உலகை தாண்டி செவ்வாய் வரை சென்றோம் !, வேற்று கிரக வாசிகளை விசிட் அடிக்க இன்விடேசன் கொடுத்தோம் ! எவ்வளவு அழகு இந்த கல்வி !!

ஆனால் கல்வி நம்மை அழிவு பாதைக்கும் இட்டு சென்றது இல்லுமினாட்டி என்னும் கூட்டம் இன்னும் உலகை அழிக்க விரும்புகிறது ! அழிவு தான் எவ்வளவு அழகு !!

முடிவு முடிவாகிவிட்டால் பதறாதீர்கள் ஆசையாய் அதை அரவணையுங்கள், அமைதியாய் அனுபவியுங்கள் வாழ்க்கைதான் எவ்வளவு அழகு !!

பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் :

வரலாற்று சுவடுகள்

அறிவியல் விந்தைகள்

தமிழ் ஜீனியஸ் 



இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


திரு செங்கோவி அவர்கள் நிச்சயமாக அவருக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ஆனால், என்னை அதிகம் கவர்ந்த பதிவர் அவர். 

அவரின் நானா யோசிச்சேன் பதிவுகள், முருக வேட்டை  தொடர் அத்துனையும் கலக்கல். 

மேலும் வாசிக்க...

Tuesday, September 4, 2012

My Computer Icon எவ்வளவு ?

என் வாழ்நாளின் மிகப்பெரிய பர்ச்சேஸ் என்னுடைய லாப்டாப் :)

டேய் அந்த பட்டன எதுக்கு அவ்வளவு வேகமா அழுத்துற ?, ஸ்க்ரீன் ல கை வைக்காத டா, அம்மா பீரோகுள்ளார வச்சிருந்த  லாப்டாப்ப எதுக்கு வெளில எடுத்து வச்ச, அப்பா தம்பி கிட்ட என்ன கேக்காம லாப்டாப்ப எடுக்க வேணாம்னு சொல்லு, என்று என் குடும்பத்திற்கு கொலைவெறி தாக்குதல் கொடுத்த காலம் அது !

வெகு சிலர் மட்டுமே லாப்டாப் வைத்திருந்ததால் விளம்பரத்திற்காகவே அடிக்கடி கல்லூரிக்கு எடுத்து சென்றவண்ணம் இருந்தேன், ஆனால் மிகபெரிய  கம்ப்யுடரைலாம் பார்த்து பழம் தின்று கொட்டை போட்டிருந்த டிபார்ட்மென்ட் பென்டிரைவ்  என் லாப்டாப்பை பார்த்து தூ என துப்பிவிட்டது ! 

விளைவு கண்ட்ரோல் பேனலை காணவில்லை ! அய்யா கிணத்த காணோம் கிணத்த காணோங்குற ரேஞ்சுக்கு வகுப்பையே ரெண்டு பண்ணிவிட்டேன். 

என்னை தேற்ற பலரும் முயற்சி செய்து தோற்ற நிலையில், இதை கேள்விப்பட்ட என் நண்பன், 

இதுக்கு ஏன்டா அழற ? மச்சி இங்க வா இவனுக்கு அந்த கண்ட்ரோல் பேனலை நாமக்கல் போயிட்டு வாங்கிட்டு வந்து கொடு இந்தா 200ரூபா, நீ அழாத சூர்யான்னான். அந்த இடத்தில் சிரிப்பதா இல்லை மேல் கொண்டு பீல் பண்ணுவதா என்று குழம்பித்தான் போனேன். ஆனால் ஒன்று முடிவு செய்தேன் பென்டிரைவ் ஸ்கான் பண்ணி தான் போடணும், ஆண்டி வைரஸ் போடணும் இப்படி பல.

இப்படி இன்னும் கூட My Computer Icon எவ்வளவு ? என்று கேட்பவர்களுக்காகவே தான் இந்த பதிவு. 

எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை தானே. 

நேத்து நம்ம அறிமுகத்துக்கும் நாலு பேர் ஓட்டு போட்டு இருக்காங்களே, அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தேடி கொண்டிருந்தேன், பார்த்தால் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? னு ஒரு பதிவு ! நம்ல மாதிரியே யோசிச்சிருக்காரே! அட நம்ம ப்ளாகர் நண்பன்! இதனால எல்லாருக்கும் தெரிவிப்பது நண்பர் ப்ளாகை பற்றிய ஆராய்ச்சியை முடித்து இப்பொழுது தமிழ்மண ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் :)

அப்படியே 
வந்தேமாதரம் சசி 
தங்கம்பழனி
டெக் முருகானந்தம் 

எல்லாரும் நம்ம காய்ஸ் தான். சும்மா விசிட் பண்ணுங்க.

இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


பதிவுலகம் எனக்கு அளித்த உறவு என் அக்கா மனதோடு மட்டும் கௌசல்யா! படிக்க வேண்டிய பதிவுகள் ,
யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!
யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!

அட நமக்கு ஒரு அக்கா கிடைச்சாச்சுனு சந்தோசமா இருந்தா தம்பி எனக்கு ரெண்டுமே பசங்கதான் பொண்ணுங்க இல்லன்னு சொல்லிபுட்டாங்க :( , 
ம்ம் நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்  

மேலும் வாசிக்க...

Monday, September 3, 2012

யார்பா அந்த சூர்ய பிரகாஷ் ?


தலைப்ப படிச்சிட்டு ரொம்ப திங் பண்ணிடாதீங்க! நான் யாருனு நானே சொல்லிடறேன் .

வகுப்ப கட் அடிக்கிறது ஒரு கலைங்க, அதுவும் சாப்பாட்டு வேலை முடிஞ்சு முதல் வகுப்பிற்கு வரும் ஆசிரியரின் கண்ணில் படாமல் மற்ற வகுப்பு மாணவர்களுடன் நைசா எஸ்கேப் ஆகி ரவுண்ட்ஸ் அடித்து கொண்டிருக்கும் HOD யிடம் சிக்காமல் லைப்ரரியில் இருக்கும் ஒரே கம்ப்யுடரை சென்றடைவதற்குள் ஒரு திகில் சினிமா பார்ப்பது போல இருக்கும்.

இவ்வாறு பல தடைகளை தாண்டி சென்றால் அந்த கம்ப்யுட்டரில் வேறு ஒருவன் அமர்ந்திருக்கிறான் ! சொல்லுங்கள் எவ்வளவு கோபம் வரும் ?. அது வேற யாரும் இல்லைங்க நம்ம பலே பிரபு !!

ஆமாங்க நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம் ! (சாரி பொய் சொல்ல விரும்பலை ஒண்ணா கல்லூரிக்கு போனோம், ஒரே பெஞ்சில் உக்கார்ந்தோம் திரும்ப வந்துட்டோம், படிக்க செய்லை :) )

என்ன பண்றான் ? ஏதோ 'பலேபாண்டியா' என்ற பெயரில் சைட் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறான் ! அந்த நொடி, அந்த வினாடி , அந்த தருணம் தான் நான் முதன் முதலில் வலைப்பதிவை பற்றி கேள்விபட்டேன் !  என்னோட வலைபதிவுல ஜாயின் பண்ணுடா பண்ணுடான்னு ஒரே டார்ச்சர், போய் தொலைன்னு ஒரு நாள் ஜாயின் பண்ணேன் அன்று தான் நானும் ஒரு வலை பதிவை தொடங்கி ஒரு மிக பெரிய வரலாற்று கிராண்ட் என்ட்ரி கொடுத்தேன்.

அதோட பேர் நால்ரோடு (4 roads), பெயர் காரணம்லாம் கேக்காதீங்க, பிரபு  பலேபாண்டியா னு வச்சான் ப்ளாப் படத்தோட பேர் ! நான் அதவோட மொக்கையா யோசிச்சேன் :)

கிராண்ட் என்டிரியோட சரி அப்பறம் அந்த ப்ளாக் பக்கமே எட்டி பார்க்கலை. ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்தா நம்ம பிரபு கற்போம்  அளவுக்கு வளர்ந்து  நிக்கிறான் !!

இன்னைக்கு அந்த கற்போம் நிர்வாகம் இருவர் கீழ் வந்துவிட்டது ! யாருன்னு யோசிக்காதீங்க அந்த இன்னொருத்தர் நான்தான் :)



அப்புறம் கழுகு ல நானும் ஒரு உறுப்பினர்.
அப்படியே பசுமை விடியல் 
ஆண்டிராய்ட் கற்போம் 
ஸ்டார்ட் மியூசிக் 
Zero Mania, Mobile mania

வரைக்கும் இந்த சூர்ய பிரகாஷ் ஐ நீங்கள் சந்திக்கலாம். பேஸ் புக்கிலும் இருக்கேன்.

நான் வலை பதிவை பற்றி தெரிந்து கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன் தான் என்றாலும் இன்னும் ஒரு புதியவனை போலத்தான் உணர்கிறேன்.

ஒருநாள் திடிரென்று சீனா அய்யாவிடமிருந்து 'அன்பின் சூர்யா' என்ற அய்யாவின் டிரேட் மார்க் அழைப்பு !

அப்பொழுது ஜனகராஜ் பாணியில் எனக்கு நானே சொல்லிகொண்டேன்
"என்னமோ போடா "
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது