07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 3, 2012

யார்பா அந்த சூர்ய பிரகாஷ் ?


தலைப்ப படிச்சிட்டு ரொம்ப திங் பண்ணிடாதீங்க! நான் யாருனு நானே சொல்லிடறேன் .

வகுப்ப கட் அடிக்கிறது ஒரு கலைங்க, அதுவும் சாப்பாட்டு வேலை முடிஞ்சு முதல் வகுப்பிற்கு வரும் ஆசிரியரின் கண்ணில் படாமல் மற்ற வகுப்பு மாணவர்களுடன் நைசா எஸ்கேப் ஆகி ரவுண்ட்ஸ் அடித்து கொண்டிருக்கும் HOD யிடம் சிக்காமல் லைப்ரரியில் இருக்கும் ஒரே கம்ப்யுடரை சென்றடைவதற்குள் ஒரு திகில் சினிமா பார்ப்பது போல இருக்கும்.

இவ்வாறு பல தடைகளை தாண்டி சென்றால் அந்த கம்ப்யுட்டரில் வேறு ஒருவன் அமர்ந்திருக்கிறான் ! சொல்லுங்கள் எவ்வளவு கோபம் வரும் ?. அது வேற யாரும் இல்லைங்க நம்ம பலே பிரபு !!

ஆமாங்க நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம் ! (சாரி பொய் சொல்ல விரும்பலை ஒண்ணா கல்லூரிக்கு போனோம், ஒரே பெஞ்சில் உக்கார்ந்தோம் திரும்ப வந்துட்டோம், படிக்க செய்லை :) )

என்ன பண்றான் ? ஏதோ 'பலேபாண்டியா' என்ற பெயரில் சைட் ஒன்றை பார்த்து கொண்டிருக்கிறான் ! அந்த நொடி, அந்த வினாடி , அந்த தருணம் தான் நான் முதன் முதலில் வலைப்பதிவை பற்றி கேள்விபட்டேன் !  என்னோட வலைபதிவுல ஜாயின் பண்ணுடா பண்ணுடான்னு ஒரே டார்ச்சர், போய் தொலைன்னு ஒரு நாள் ஜாயின் பண்ணேன் அன்று தான் நானும் ஒரு வலை பதிவை தொடங்கி ஒரு மிக பெரிய வரலாற்று கிராண்ட் என்ட்ரி கொடுத்தேன்.

அதோட பேர் நால்ரோடு (4 roads), பெயர் காரணம்லாம் கேக்காதீங்க, பிரபு  பலேபாண்டியா னு வச்சான் ப்ளாப் படத்தோட பேர் ! நான் அதவோட மொக்கையா யோசிச்சேன் :)

கிராண்ட் என்டிரியோட சரி அப்பறம் அந்த ப்ளாக் பக்கமே எட்டி பார்க்கலை. ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்தா நம்ம பிரபு கற்போம்  அளவுக்கு வளர்ந்து  நிக்கிறான் !!

இன்னைக்கு அந்த கற்போம் நிர்வாகம் இருவர் கீழ் வந்துவிட்டது ! யாருன்னு யோசிக்காதீங்க அந்த இன்னொருத்தர் நான்தான் :)அப்புறம் கழுகு ல நானும் ஒரு உறுப்பினர்.
அப்படியே பசுமை விடியல் 
ஆண்டிராய்ட் கற்போம் 
ஸ்டார்ட் மியூசிக் 
Zero ManiaMobile mania

வரைக்கும் இந்த சூர்ய பிரகாஷ் ஐ நீங்கள் சந்திக்கலாம். பேஸ் புக்கிலும் இருக்கேன்.

நான் வலை பதிவை பற்றி தெரிந்து கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன் தான் என்றாலும் இன்னும் ஒரு புதியவனை போலத்தான் உணர்கிறேன்.

ஒருநாள் திடிரென்று சீனா அய்யாவிடமிருந்து 'அன்பின் சூர்யா' என்ற அய்யாவின் டிரேட் மார்க் அழைப்பு !

அப்பொழுது ஜனகராஜ் பாணியில் எனக்கு நானே சொல்லிகொண்டேன்
"என்னமோ போடா "

19 comments:

 1. அச்சோ சூர்யா !! என்ன ஒரு கலகலப்பு ?!!! சூப்பர் இன்ட்ரோ...!!

  செமையா எழுதுற...!!

  இந்த வாரம் முழுவதும் இப்படியே அசத்திடு.

  அக்கா தொடர்ந்து வந்து படிசிடுறேன்.

  வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள் !!

  :)))

  ReplyDelete
 2. "கற்போம்" வலைத்தளத்திற்கு
  கல்லாததை கற்போம் அப்படின்னு
  கல்லு முள்ளு பாக்காது
  கால் நோகப்போனேன்.

  அங்கே !!
  ஆன் இடியட்ஸ் கைட் டு ஃபோடோ ஷாப் அப்படின்னு
  ஆன் லைன் லே ஒரு போர்டு.

  ஆஹா ! ஆரம்பிச்சுட்டாங்கய்யா !!
  இங்கேயும் நமக்கொரு போட்டியா !!

  இருந்தாலும்
  இமீடியட்லி என்னை
  இணைத்துக்கொண்டேன்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 3. ஆரம்பமே அசத்தல்! வாழ்த்துக்கள் நண்பா!

  இப்போ தான் "ஆன்ட்ராய்ட் மசாலா தோசை" வெர்சனை படித்து வந்தேன்.

  :D :D :D

  ReplyDelete
 4. ஆக மொத்ததில ரெண்டு பேருமே ஸ்கூல்ல சாரி காலேஜ்ல பெஞ்சை தேய்ச்சிருக்கீங்க என்னை மாதிரியே! :) :)

  நைஸ் என்ட்ரி, கலக்குங்க! :)

  ReplyDelete
 5. அறிமுகப் படலம் அருமை.
  தொடருங்கள்... தொடர்கிறோம்.

  ReplyDelete
 6. ஹாய் எப்படி இருக்கீங்க?

  வலைசரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வலைச்சர
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. jaalya pokum inthavaaram!

  vaazhthukkal!

  ReplyDelete
 9. அன்பின் பிரகாஷ் - நல்லதொரு அறிமுகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. வாழ்த்துகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சுய அறிமுகம் செம..
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அட......எங்க வீட்டுக் கன்னுக்குட்டி இங்க துள்ளி விளையாடிட்டு இருக்கே....!

  செம ரகளை சூர்யா தம்பி... அதுவும் லாஸ்ட் லைன்......செமையோ செம....!

  என்னமோ போடா சூர்யா....ஹா.. ஹா!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சுவையான அறிமுகம்!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள். "யார்பா?" என்ற தலைப்பே படிக்க வைத்தது.

  ReplyDelete
 15. ஆரம்பமே அசத்தல் தொடருங்க

  ReplyDelete
 16. நல்ல அறிமுகம். முதலில் உங்களைப் படிக்கிறேன் - பிறகு நீங்கள் செய்யப்போகும் அறிமுகங்களைப் படிக்கிறேன்.. :)

  ReplyDelete
 17. அறிமுகம் கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சார்....
  அறிமுகமே ரொம்ப கலக்கலா இருக்கு..
  தொடருங்கள்

  ReplyDelete
 19. அறிமுகம் 'நச்' ...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது