07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 22, 2012

பணம் படுத்தும் பாடு


   






  

    
 வெளிநாட்டில் வேலை மோகம் நம்மூரில் உள்ள அனைத்து இளசுகளுக்கும் உண்டு. ஏலே கோவாலு பக்கத்து தெரு மாரியப்பன் வெளிநாட்டல போய் சம்மாரிச்சின்னு வந்து சொந்த வூடு வாங்கிட்டான், அவன் தங்காச்சிக்கு நல்ல இடத்துல கண்ணாலம் கட்டி கொடுத்துட்டான். நீயும் இருக்கியே நேத்து தான் அவன் துபாயில இருந்து வந்தான் போய் அவன பார்த்து என்ன ஏதுன்னு கேட்டு நீயும் அங்குபோய் சேர பாரு..
  
ம்ம் இப்படி எத்தனை கோவாலுக்களும் , சல்மான் பாய்களும் வந்து படிப்புக்கு ஏற்ற வேலை கிடக்காம எதுனாலும் பரவாயில்ல் என்ன வேலைன்ன்னாலும் பரவாயில்லன்னு கிடைச்ச வேலைய பார்த்துக்குட்டு காலம் தள்ளிக்கிட்டு இருக்காங்க..







மச்சான்...  நான் டுபாய் வந்துட்டேண்டா..... நீ எங்கடா இருக்கே!!!

நான் எங்கே இருக்கேனு சொன்னா உனக்கு வெளங்கவா போகுது.... நீ எங்க இருக்கேனு சொல்லுடா.. நான் வர்ரேன்.

மச்சீ.. நான் எங்கே இருக்கேன்னே தெரியலடா... ஒன்னுமே புரியல...

சரி.. நீ இருக்குர இடத்துல இருக்குர ஒரு Land Mark'ஐ சொல்லுடா...
.ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா..
.. டுபாய்ல காக்கா, குருவிய விட பிளைட்டுத்தான் அதிகமா பறக்கும். வேற எதாவது சொல்லு மாப்பூ...



2.முதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்


டேய் நான் நாளைக்கு மலேசியா போறேண்டா ,சந்தோசமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன் .எங்கேடா வேலையில் சேரப்போறே  என கேட்டவனிடம் தெரியலடா அங்கே போனால்தான் தெரியும் என்று சொன்னேன் .

பயணம் கிளம்பும் அன்று என் உறவினர்கள் எல்லோர் வீட்டிற்கும் சென்று பயணம் சொன்னேன்  
நான் முதன் முதலில் வேலை பார்த்த நாள் எது தெரியுமா .சரியாக என் பிறந்தநாளான ஏப்ரல் பத்து அன்று .என்றுமே வாழ்வில் மறக்கமுடியாத நாளாக போய்விட்டது என் முதல்நாள் வேலை அனுபவம் .


3.வெளிநாட்டில் வேலை தேட போகிறீர்களா?  இங்க வாங்க ஈசியா தேடிக்கொள்ளலாம்.





26 நாட்கள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயிலை 

சமாளிக்க யோசனைகள்

கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்: உடல் எடை, சத்து குறையும், சோர்வு ஏற்படும், மயக்கம், தலைவலி உண்டாகும். சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், நிறுநீரங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள் ஏற்படும்.

என்ன செய்யலாம். இங்கு தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.





பழைய அறை, சமைக்க அனுமதி இல்லை, விருந்தினருகு தடா , டீவி சத்தம், பாத்ரூம் டைமிங் இது போல பல பல........
சம்ஸ் பதிவை பாருங்கள்.அபுதாபி





5. மத்திய கிழக்கு நாடுகள் அயல் நாட்டு மோகம்
உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. 
சம்மர் சர்ப்ரைஸ்

வருசத்துக்குஒருதடவைஷாப்பிங்பெஸ்டிவல்நடக்குறதாலநடுவில துபாய்சம்மர்சர்பிரைஸ்’ நடக்கும்.இதுவும்அதுபோலத்தான்.கேளிக்கைகள்கொண்டாட்டம்எல்லாம்தூள்பறக்கும்.
ரெண்டுக்குஎன்னவித்தியாசம்னாதுபாய்ஷாப்பிங்ஃபெஸ்டிவல்குளிர்காலத்தில்நடக்கும்... துபாய்சம்மர்சர்ப்ரைஸஸ்என்பதுகோடைகாலத்தில்நடக்கும்... பின்னேவெயில்காலத்துலஊருக்குள்ளஆளுங்களஎப்படிகூப்பிடறது... இல்ல..எவன்இந்தசூட்டுக்குஉள்ளவருவான


இந்தபுடவைவெறும் ரூ.50,000 தான்... எனக்குகூடஇவ்வளவுசீப்பாவாங்கணுமான்னுதோணித்து.. இருந்தாலும்அடுத்தமாசம்,இதைவிடகொஞ்சம்காஸ்ட்லியாவாங்கிக்கலாம்னுஇந்தகல்யாணத்துக்காகஇதைஎடுத்துட்டேன்... ஒருபுடவைபார்த்தேன்பாருங்கோ.... ஆஹா.. அதுசூப்பர்..விலையும்கொறச்சல்தான்..வெறும் 70,000 தான்என்பா

//கல்யாண வீட்டில் ஆசிர்வாதம் பண்ணும் போது பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்னுமுன்னு ஆசிர்வாதம் பண்ணுவா? அதுக்கு அர்த்தம் புரியாதவர்கள் 16 குழந்தையான்னு கெக்கெபெக்கேன்னு சிரிக்கும் அத பார்த்து மண பெண், மணமகன் அசடு வழியும்,//




6.வெளிநாட்டு வாழ்க்கை மதில்மேல் பூனை.


 நான் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறேன். 6 வருடம் முடிந்து 7 வது வருடம் போய்க்கொண்டு இருக்கிறது. 4 வருடம் முடிந்ததும் சிங்கப்பூர் வேலையே வேண்டாம் என வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இந்த நாலு வருடத்தில் பல நண்பர்களுடைய தொடர்பு குறைந்தும் சில நண்பர்களுடைய தொடர்பு துண்டித்தும் போயின. 

இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக 


7. நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். 




 வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும்.  

அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றன 


 




பல தலைமுறைகளாக இங்கு மன்னராட்சிதான் நடக்கிறது.

இதனால் இங்கு சுவற்றில் எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என நமது ஜனநாயக கடமைகளை இங்கு ஆற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் தடை.ஆள்பவர்களை விமர்சனம் செய்ய முடியாது.

எல்லா வெளிநாடுகளைப் போலவே இங்கும் மலையாளிகளே அனைத்து வேலைகளிலும் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் அவர்களை பற்றி ஆயிரம் குறைகள் சொன்னாலும் ஒற்றுமையிலும், சுத்தமாக இருப்பதிலும், துணிச்சலிலும், பிரச்சனை ஏற்படும் போது உதவுவதிலும் ஒரு அடி முன்னே நிற்கிறார்கள்.




உறவுகளை பணயம் வைத்து
இதயமதை இரும்புமாக்கி
கண்ணீரில் கரைந்தே நாம்
பணம் சேர்க்கின்றோம்
சொந்த மண் துறந்து!



10. என் எண்ணச்சிதறலில் இருந்து கழ்டபடமா இருக்க கழ்டபடுங்கள்/.




வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,


11. தஞ்சை சிவாவின் பயன அனுபவம் அபுதாபியில் இருந்து ஓமானுக்கு உங்களை அழைத்து செல்கிறார்...
அப்படியே துபாய் துபாய் அப்படி என்ன தான் இருக்கு துபாயில் , மக்காஸ் துபாயிக்கு வர போறீங்களா.இத படிச்சி பார்த்துட்டு முடிவெடுங்கள்..





இது  என் பதிவு , என்ன இடை இடையே இவங்க பதிவும் போட்டு சந்துல சிந்துபாடுறாங்கன்னு நினைக்க வேண்டாம். மொத்தம கணக்கில்லா பதிவுகள் இருக்கு அதில் சில நல்ல பதிவுகளையும் இங்கு பகிர்ந்தால் நிறைய பேருக்கு உதவும்.

நிறைய எழுதனும் என்று ஆனால் நேரமின்மையால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

வேறு ஒரு அறிமுகங்களுடன் பிறகு சந்திப்போம்.

இப்படிக்கு
ஜலீலாகமால்








17 comments:

  1. ஆஆஆஆஆஆ ஜலீலாக்கா இன்று மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)

    ReplyDelete
  2. பார்த்தீங்களோ.. பொறுமையா இருந்தால் அரசாளலாமாம்... நான் பொறுமையா, எழும்பி ரீ எல்லாம் குடிச்சு இப்பத்தான் நெட்டை ஓபின் பண்ணினேன்ன்ன்ன்.... சரி இதுக்கு இன்று ஏதாவது பரிசுண்டோ?:) சரி அதை விடுங்க... விஷயத்துக்கு வாறேன்ன்ன்...

    ReplyDelete
  3. தலைப்புக்களும் படங்களும் சூப்பராக இருக்கு, எழுதியிருக்கும் விதம், போய்ப் படிக்கோணும் போல மனதை தூண்டுது...

    அந்த மதில்மேல் பூஸார் படம் சூப்பர்.

    ReplyDelete
  4. புன்னகையே வாழ்க்கை படிச்சேன்ன்.. கலக்கலாக இருக்கு... ஆனா எழுதினவரின் முகத்தில புன்னகை இல்லையே:)).... ஹையோ ஆளைக்கூடத்தெரியாமல் கதைக்கிறேன், ஜலீலாக்கா படிச்சதும் கிழிச்சு ஹாஸ் அடுப்பில எரிச்சிடுங்க:)... பின்பு வந்து ஒவ்வொன்றையும் படிக்கிறேனே....

    ReplyDelete
  5. வித்தியாசமான அறிமுகங்கள்

    ReplyDelete
  6. 2 வது.. எண்ணங்களுக்குள் நான்... வலைப்பூ ஓபின் ஆகுது ஆனா படிக்க முடியவில்லையே... ஆடுது புளொக்... ஏதோ வைரஸ் இருக்கும்போல... எனக்கு மட்டும்தான் இப்பிரச்சனையோ தெரியவில்லை.

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. வித்தியாசமான தலைப்பு!! வாழ்வின் அவசியமான, தவிர்க்கவே இயலா கட்டம் “பணம் தேடுதல்”. அதை அழகா தொகுத்திருக்கீங்க.

    ReplyDelete
  9. தேவையான பகிர்வு, அருமையான தொகுப்பு.அறிமுகங்கள் அனைவரின் அனுபவப் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  10. ஆமாம் ஜலீலா ..வெளி நாட்டு வாழ்கைல நாம் தொலைத்ததை திரும்ப தேடினாலும் கிடைக்காது ..நிறையமன வலிகள் :((

    அருமையான பகிர்வு,அருமையான தொகுப்பு நன்றி

    ReplyDelete
  11. ஜலீலா....

    அருமையான பதிவு.... திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற கூற்றுக்கேற்ப திரை கடலோடி திரவியம் தேடும் பலரின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்திய இந்த பதிவில் என் வலையான www.edakumadaku.blogspot.com அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி....

    நானும் என் நண்பர் லாரன்ஸ் அவர்களும் இணைந்து மத்திய கிழக்கு நாடுகள் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று முடிவு செய்து “மத்திய கிழக்கு நாடுகள் அயல் நாட்டு மோகம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினோம்.. அதில் எங்களால் முடிந்தவரை நிறைய தகவல்கள் தந்தோம்...

    அப்போது அந்த தொடர்க்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது... அதை இங்கே மீண்டும் பதிவில் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி....

    பதினாறும் பெற்று பெருவாழ்வு என்பதின் உண்மையான அர்த்தத்தை சொல்ல முயன்ற பதிவு தான் :

    “பட்டு மாமி...பட்டு புடவை....பதினாறும் பெற்று பெருவாழ்வு”

    இதில் அந்த பதினாறு என்னவென்று விளக்கியுள்ளோம்... தெரியாதவர்கள் படித்து அறிந்து கொள்ளலாம்...

    மீண்டும் ஒரு முறை ஜலீலா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை பதிவு செய்கிறேன்....

    தொடரட்டும் உங்கள் அசத்தல் பணி...

    ReplyDelete
  12. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  13. சிறப்பான அறிமுகங்கள் .அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. அவசியமான பதிவு ஜலீலா, அறிமுக படுத்திய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அதிரா

    வை கோபாலகிருஷ்னன் சார்

    ஸாதிகா அக்கா
    ஹுஸைனம்மா

    ஏஞ்சலின்
    ஆசியா
    கோபி
    துரைடேனியல்
    கோமதி அரசு
    அம்பாளடியாள்

    கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. நன்றாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வித்தியாசமான அறிமுகங்கள்.. நன்றி ஜலீலா. நான் இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது