இன்னும் கொஞ்சம்
➦➠ by:
வா.மணிகண்டன்
கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.
ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.
கவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.
தீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ. இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.
|
|
இன்று குறைவாக எழுதுபவர்களை நிறைய எழுத சொல்லும் ஆதங்கம் தெரிகிறது.
ReplyDeleteஇன்று அறிமுக படுத்தியவர்கள் எல்லாம் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
(த.ம. 1)
அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteநன்றி மணிகண்டன்...
ReplyDeleteவலைத்தளத்தில் தொடர்ந்து எழுதுவதைப் பற்றி சில நாட்களாகவே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
முகநூலிலிருந்து விடுபட்டு, இலக்கிய - அரசியல் சர்ச்சைகளிலிருந்து விலகி எனக்கே எனக்கான தளத்தில் எழுதும் ஆவல் மிகுந்து வருகிறது.