07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 27, 2012

நவீன கவிகள்



கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம். 


ஒரு காலத்தில் காதல்கவிதைகளின் மூலமாக பல இதயங்களை கொள்ளையடித்தவர் நிலாரசிகன். ஏதோ தெய்வகுத்தம் போல இப்பொழுது நவீன கவிதைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இவரது கவிதைகளில் இருக்கும் மென்மையும், ரொமாண்டிசமும் கட்டிப்போடுபவை. 361டிகிரி சிற்றிதழை நடத்திவருகிறார். புகைப்படைக்கலைஞனாகவும் படம் காட்டுகிறார்.


நேசமித்ரன் தனது மொழியில் செய்யும் வித்தைக்காக அவரது கவிதைகளின் நேசன் நான். இவரது கவிதைகள் புரியாதது போல முதல் பார்வைக்குத் தோன்றக் கூடும்.  அது உண்மையில்லை. கவிதையில் ஒரு புள்ளியிருக்கும். அந்தப்புள்ளியைத் தட்டினால் கவிதையின் கதவு திறந்துவிடும். கதவுக்கு பின்னால் வேறொரு உலகம் இருக்கும். தட்டிப்பாருங்கள்.


வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.


கவிதையை வாசித்துவிட்டு "உர்ர்" என்று இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை தூக்கிப்போட்டு உடைத்தவர் இசை. மிக எளிமையான கவிதையை அத்தனை அங்கதத்துடன் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கவைத்தாலும் கவித்துவத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்ஸும் செய்துகொள்ளாத கோயமுத்தூர் கவிஞனின் வலைத்தளம் இது.



சமகாலக் கவிஞர்களில் கவிதை பற்றிய தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுக்கும் இளங்கோ கிருஷ்ணனின் வலைத்தளம். இவர் கோயமுத்தூரில் வசிக்கிறார். தனக்கென மொழியையும், கவிதை வெளிப்பாட்டுமுறையையும் விரைவாக கண்டடைந்த கவிஞர். இவரது சிந்தனையும், வாசிப்பனுபவமும் எப்பொழுதும் என்னை ஆச்சரியமூட்டுகிறது.

8 comments:

  1. அனைத்தும் நல்ல தளங்கள்... சில தளங்கள் அறியாதவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. நன்றி பகிர்விற்கு. நானும் எல்லோரையும் தொடர்கிறேன்

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .தங்கள் சேவைக்கும் என் நன்றியும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்கள் நன்றி

    ReplyDelete
  5. மிகுந்த நன்றி

    ReplyDelete
  6. இரண்டு பேர் கவிதைகள படித்து இருக்கிறேன்.
    எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மணி ,நன்றி கவிஞரே :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது