வணக்கம் தோழர்களே!
➦➠ by:
* அறிமுகம்,
அ.அப்துல் காதர்
வணக்கம் தோழர்களே!
மதிப்பிற்குரிய சீனா அய்யா அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இதோ எனது வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
கீற்று முதலிய பொதுத்தளங்கள் மற்றும் சில பிரபல எழுத்தாளர்களின் வலைத்தளங்கள் ஆகியவற்றின் பார்வையாளனாகத் தொடக்கத்தில் இருந்த நான் முதன்முதலாகப் பங்கெடுத்தது முத்தமிழ் மன்றம் என்ற பொதுத் தளத்தில்தான். அதன் பின்னர் ஓர் ஆர்வக் கோளாறில்தான் நானும் என் சமூகமும் என்ற எனது வலைப்பூவைத் தொடங்கினேன். பணியிடையே கிடைக்கும் சொற்ப நேரத்தில் எனது கவிதைகளை அதில் பதிவிட்டும் வந்தேன். சரளமாகக் கவிதையெழுதும் திறமில்லாததால் தொடர்ச்சியாக என்னால் பதிவுகளை இடமுடியவில்லை. தொடர்ந்து கவிதைகளையே பதிவிட்டு வந்த எனக்கு எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது தொடங்கியதுதான் சொல்வதற்கும் கொஞ்சம் இருக்கிறது என்ற எனது மற்றொரு வலைப்பூ. இப்போது இவ்விரு வலைப்பூக்களிலும் உள்ள சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
சமூகக் கவிதைகள்
1.பூமியின் எல்லா வாசங்களையும் பரப்பிக் கொண்டிருந்த காற்று, இப்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கருகிக் கொண்டிருக்கும் பூமியின் கருகல் வாசத்தைப் பரப்பிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலையுறுகிறது இக்கவிதை
2.மனிதர்களின் துன்புறுத்தலுக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும் தெருநாய்களைப் பற்றிய கவிதை
3.போபால் நச்சுவாயு விபத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது மனம் வெம்பி எழுதிய கவிதை
4.குழந்தைத் தொழிலாளர் முறைக்கெதிரான கவிதை
5.போர்களே வரலாறான இப்புவியில் அவற்றுக்கெதிரான கவிதைகள்
அழகியல் கவிதைகள்
நான் ரசித்த இயற்கையின் அழகு உங்களுக்கும் இதோ!
தனிமை
தனிமை குறித்த எனது கவிதைகள்
பிற கவிதைகள்
நமக்குள்ளே இருக்கும் நமது இன்னொரு முகத்தோடான உரையாடல்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அந்த உரையாடலைச் சற்று கேளுங்கள்!
நான்களின் உரையாடல்
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒரு பிரளயம் நிகழ்ந்து விட்டால்?
பிரளய நாளொன்றில்..
கவிதை எழுதும் மனநிலையில் இல்லாதபோது தோழன்/தோழி/காதலன்/காதலி கவிதை கேட்டால்?
இது நிலவுக் கவிதையன்று
ஞானம் போதி மரத்தடியில் மட்டுமன்று; எல்லா மரத்தடியிலும் கிட்டும்; தேடல் இருந்தால்!
எல்லா மரத்தடியிலும் புத்தன்
காதலி வந்துபோன அறைக்கென சில குறிப்புகள் இருக்கின்றன; பாருங்கள்!
நீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்
சுடுசொற்கள் ஏற்படுத்தும் வேதனையைச் சொல்லி மாள சொற்கள் இல்லை
ஆறுவதில்லை நெஞ்சம்!
அடையாளங்களின் அரசியலால் நிரம்பி வழியும் இவ்வுலகில் அடையாளமற்று வாழ்வதன் சாத்தியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறது இக்கவிதை
பெயரற்றவன்
எறியப்படும் கற்களுக்குப் பதிலாகப் பூக்களைத் திருப்பியளிக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள்!
கற்களும் பூக்களும்
திசைகளைத் தொலைத்தவனின் பயணம் எப்படியிருக்கும்?
திசைகளைத் தொலைத்தவன்
சரி, கவிதைகளைப் படித்துக் களைத்தது போதும்; மாற்றுச் சிந்தனைகள் குறித்த எனது இந்தப் பதிவுகளைப் படித்துச் சற்றே இளைப்பாறுங்கள்!
கட்டுடைத்தல்
எது நல்லது? எது கெட்டது?
தோழர்களே! இதில் குறிப்பிடப்படாத மற்ற பதிவுகளையும் வாசித்தீர்களேயானால் இன்னும் மகிழ்வேன்! சரி தோழர்களே! என்னைக் கவர்ந்த மற்ற பதிவர்களின் பதிவுகளோடு மீண்டும் உங்களை நாளை சந்திக்கிறேன்.
அன்புடன்,
அப்துல் காதர்.

|
|
சிறப்பான அறிமுகத்துடன்
ReplyDeleteஆசிரியர் பணியினைத் துவக்கியுள்ள
தங்கள் இந்த வலைச்ச்சர வாரம் சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteசாக்கடை எனச் சொல்லியே நல்லோரும் வல்லோரும்
ReplyDeleteஒதுங்கிவிடுவதால் வருகிற கேடு இது
சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் வலைத்தளத்தை அறிந்துக் கொண்டேன் சகோ. பல உன்னதமான கவிதைகளை படைத்துள்ளீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்களின் சிந்தனை பதிவுகளையும் படிக்க முனைகின்றேன். வாழ்த்துக்கள் சகோ !!!
ReplyDeleteத.ம. 2
ReplyDeleteஅன்பின் அப்துல் காதர் - சுய அறிமுகம் அருமை - கவிதைகளின் சுட்டிகள் சென்று படிக்க ஆவலைத் தூண்டுகின்றன. அத்தனையையும் படிக்க முயல்கிறேன் - நல்வழ்த்துக்ள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்லது...
ReplyDeleteவெற்றிகரமாக ஆசிரியர் பணியை முடிக்க என் வாழ்த்துக்கள்..
அற்புதமான கவிதைகள் தொடருங்கள் உங்களோடு நாங்களும்
ReplyDeleteமேலும் அறிமுகங்கள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் .இன்றய அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .அதற்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteசிறப்பான அறிமுகம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கு பிடித்த அறிமுகங்களை அறிய ஆவல்... நன்றி...
நல்லதொரு அறிமுகம்! தளம் சென்று வருகிறேன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
அருமையான சுய அறிமுகம்...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் மற்ற சிறப்பான அறிமுகங்கள்.
சுய அறிமுகம் நல்லா இருக்கு தொடருங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
ReplyDelete