07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 30, 2012

சென்று வருக மணிகண்டன் - வருக ! வருக ! மஞ்சுபாஷினி 

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப்  பொறுப்பேற்ற நண்பர் வா.மணிகண்டன், தான் ஏற்ற பொறுப்பினை அழகாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் இட்ட பதிவுகள் : 9
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 30
இவர் அவர்களது தளத்தினையே  சுட்டி கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அவர்களது பதிவுகளில் தனக்கு மிகவும் பிடித்த 8 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார்.
பெற்ற மறுமொழிகளோ : 58

நண்பர் வா.மணிகண்டனை வாழ்த்தி, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அன்புச் சகோதரி மஞ்சுபாஷினி. 

இவருக்கு இவர் தாத்தா அன்புடன் ஆசையுடன் வைத்த பெயர் மஞ்சுபாஷிணி. இவர் குவைத்தில் கணவர், இரண்டு பிள்ளைகள், மற்றும் அம்மாவுடன்  வசிக்கிறர். வேலைக்கு சென்றுக்கொண்டே வீட்டிலும் எல்லோர் தேவைகளையும் பார்த்துக்கொண்டு அவ்வப்போது எழுதுகிறார்.

வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த இவருக்கு 2007 இல் இவரது  தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா - ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து இவரது படைப்புகளைப் பதிவிட கற்றுத் தந்தார்.

கூகுளீல் ஏதோ தேடப் போய் - ஒரு வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத ஆசைப்பட்டு எழுதினார்.. அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக…. 
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார்.. 

அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற இவரது நம்பிக்கையும் பொய்க்கவில்லை.

சகோ மஞ்சுபாஷினியை வருக ! வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் வா.மணீகண்டன் 

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி

நட்புடன் சீனா 

20 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. தங்களுக்கு விருந்தினர் பதிவெழுதுவதில்(Guest Post) ஆர்வமிருந்தால் rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்!

    ReplyDelete
  3. நாளை துவங்க உள்ள வாரத்தின் வலைச்சர ஆசிரியர் திருமதி மஞ்சுபாஷிணி அவர்க்ளா?

    எங்கேயோ ஏதோ நான் கேள்விப்பட்ட பெயராக அல்லவா இது உள்ளது !.

    ஆனால் என் மரமண்டைக்கு டக்குன்னு நினைவுக்கு வர மறுக்கிறதே!

    சரி, யாரென்று உட்புகுந்து பார்த்து விடுவோம்.

    அடடா, நம்ம ”கதம்ப உணர்வுகள்” மஞ்சுபாஷிணி தானா?

    பேஷ் பேஷ் ..... ரொம்ப சந்தோஷம் தான்.

    மிகச்சரியான ஆசாமியைத் தான் வலைச்சர ஆசிரியராகத் தேர்ந்தெடுத்துள்ளார் நம் அன்பின் சீனா ஐயா அவர்கள்!!

    வலைச்சர தலைமை ஆசிரியர் அன்பின் சீனா ஐயாவின் தேர்வு என்றால் சும்மாவா பின்னே?

    ரொம்ப ரொம்ப சந்தோஷமும், நன்றிகளும், என் அன்பின் சீனா ஐயா, அவர்களுக்கு..

    ooooooooooooooooooooo

    என் அன்புத்தங்கை மஞ்சுவின் புதிய வருகையால் என் மனம் பஞ்சு மிட்டாய் கிடைத்தக் குழந்தையாய் மகிழ்வடைகிறது.

    பஞ்சுமிட்டாய் போன்ற இனிப்பான அறிமுகங்களாகத் தருவாள் என் அன்புத் தங்கையென நம்பி, ’மஞ்சு’மிட்டாயை வாழ்த்துகிறேன், ஆசீர்வதிக்கிறேன்.

    ooooooooooooooooo

    வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் என் அன்புத் தங்கை மஞ்சுவுக்கு என் அன்பான இனிய பாராட்டுக்கள்.

    மிகச்சிறப்பாகப் பணியாற்ற என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த வாரம் இனிய வாரமாக அமைய உன் அன்பு அண்ணா + மன்னியின் பிரார்த்தனைகள்.

    ALL THE BEST ....... GOOD LUCK ! TO MY DEAR ம... ஞ்... சூ....;)))))

    பிரியமுள்ள
    VGK அண்ணா


    ooooooooooooooo

    ReplyDelete
  4. ஈழத்துக் கொஞ்சு தமிழ் பேசி முகநூலில் என்னை அறிமுகம் செய்து வைத்த அன்புச் சகோதரி “மஞ்சுபாஷினியா” என்று அறிய அவா.

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும்
    மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்பதிலும்
    வாழ்த்துவதிலும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்
    இவ்வார வலைச்சரப் பணி சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  6. அன்புள்ள மஞ்சு!
    உங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பின் மஞ்சு.உங்களை இங்கு காண்பதில் பெரும் மகிழ்வாக உள்ளது.உங்களுக்கேஉரித்தான பாணியில் வலைச்சர ஆசிரியர்பணியினை சிறப்புற செய்வத்ற்கு அன்பான வழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    அசத்துங்க...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் மஞ்சு,தொடர்ந்து அசத்துங்கள்...

    ReplyDelete
  10. மஞ்சு ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்பு வாழ்த்துகள் மணிகண்டா....

    அன்பு நன்றிகள் சீனா அண்ணா என்னை அறிமுகப்படுத்தியமைக்கு.

    ReplyDelete
  12. //நாளை துவங்க உள்ள வாரத்தின் வலைச்சர ஆசிரியர் திருமதி மஞ்சுபாஷிணி அவர்க்ளா?//

    அன்பு நன்றிகள் வை.கோபாலக்ருஷ்ணன் அண்ணா...

    ReplyDelete
  13. //ஈழத்துக் கொஞ்சு தமிழ் பேசி முகநூலில் என்னை அறிமுகம் செய்து வைத்த அன்புச் சகோதரி “மஞ்சுபாஷினியா” என்று அறிய அவா.//

    அச்சோ இல்லையேப்பா... தாங்கள் சொல்லும் மஞ்சுபாஷினி நான் இல்லப்பா எனினும் இங்கு வந்து அறிய முயன்றமைக்கு என் அன்பு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  14. //வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும்
    மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்பதிலும்
    வாழ்த்துவதிலும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்
    இவ்வார வலைச்சரப் பணி சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

    அன்பு நன்றிகள் ரமணி சார்.

    ReplyDelete
  15. //அன்புள்ள மஞ்சு!
    உங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்!//

    அன்பு நன்றிகள் ரஞ்சும்மா...

    ReplyDelete
  16. //அன்பின் மஞ்சு.உங்களை இங்கு காண்பதில் பெரும் மகிழ்வாக உள்ளது.உங்களுக்கேஉரித்தான பாணியில் வலைச்சர ஆசிரியர்பணியினை சிறப்புற செய்வத்ற்கு அன்பான வழ்த்துக்கள்.//

    அன்பு நன்றிகள் ஸாதிகா.

    ReplyDelete
  17. //திண்டுக்கல் தனபாலன் said...
    மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    அசத்துங்க...//

    அன்பு நன்றிகள் தனபாலன்.

    ReplyDelete
  18. //கூகிள்சிறி .கொம் said...
    தங்களுக்கு விருந்தினர் பதிவெழுதுவதில்(Guest Post) ஆர்வமிருந்தால் rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்!//

    அன்புநன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  19. // Asiya Omar said...
    வாழ்த்துக்கள் மஞ்சு,தொடர்ந்து அசத்துங்கள்...//

    அன்பு நன்றிகள் ஆசியா உமர்.

    ReplyDelete
  20. //Lakshmi said...
    மஞ்சு ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்//

    அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது