முடிகிறது ஒரு பயணம்!
➦➠ by:
அ.அப்துல் காதர்
வணக்கம் தோழர்களே!
வலைச்சரத்தில் எனது இறுதி நாள். ஆனாலும் முதல் நாளில் இருந்த அதே மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்கிறேன்.
எனக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்ய முடியாவிட்டாலும் இந்த நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கி என்னைக் கௌரவித்த சீனி அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் முழுவதும் எனது பதிவுகளைப் பொறுமையாகப் பார்வையிட்டும் பின்னூட்டமிட்டும் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் திருவாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகளையும் மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் நான் வலைச்சரத்தில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே எனது வலைப்பூவில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி வருபவர் அவர்.
பொதுவாக நான் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை. காரணம், நானும் பெரும்பாலும் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதில்லை. இணையத்தில் நான் செலவிடும் நேரம் மிகக்குறைவு என்பதைத் தவிர அதற்கு வேறு உள்நோக்கங்கள் எதுவுமில்லை. அந்தக் குறைந்த நேரத்தையும் பொதுத் தளமாகிய முத்தமிழ் மன்றத்தில் செலவிடுவதால் சில குறிப்பிட்ட வலைப்பூக்களைத் தவிர்த்து பிறவற்றைப் பார்வையிட என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.
இனிமேல் மற்ற வலைப்பதிவர்களின் தளங்களையும் பார்வையிட முயற்சி செய்கிறேன். அதுபோல நானும் எனது வலைப்பூக்களில் தொடர்ச்சியாகப் பதிவுகளை இட முயற்சி செய்கிறேன்.
"துரத்துகிறேன்
தொலைவில் ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை"
"ஓய்வைத் தேடும் கால்கள்
சோராதிருக்கிறது மனம்
இன்னும் முடியாத பயணம்"
என்ற எனது குறுங்கவிதைகளோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்!
அன்புடன்,
அப்துல் காதர்.
|
|
உங்கள் பணியை செவ்வனே செய்தீர்கள். வாழ்த்துகள்
ReplyDeleteநிறைவாய் உங்கள் பணியினை திறம்பட செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிறைவான வாரம்... வாழ்த்துகள்.....
ReplyDeleteஇந்த வாரத்தில் பல புதிய தளங்களை அறிமுகம் செய்த வைத்தமைக்கு வாழ்த்துக்கள் சார்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஒரு வார காலத்தில் சிறப்பாக சேவையளித்திருக்கின்றீர்கள் சகோ.! கூடவே நம் மன்றமாம் முத்தமிழ் அன்னையினைப் பற்றியும் எடுத்தியம்பியிருப்பது மனமகிழ்ச்சியினைத் தருகின்றது.
ReplyDeleteநன்றி