அக்கரைக் காற்று
➦➠ by:
வா.மணிகண்டன்
கே.பாலமுருகன்:
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.
மாற்றுப்பிரதி:
ஈழத்துக்கவிஞர் றியாஸ் குரானாவின் வலைப்பதிவு. வலைப்பதிவின் பெயருக்கேற்றபடி கவிதையில் மாற்றுப்பிரதியை உருவாக்குவதில் முக்கியமான கவிஞர். இதுவரை கவிதை என முன்வைக்கப்பட்டதை கலைத்துப்போட்டு விளையாடுகிறார். நவீன கவிதையில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கவிதைகள் புரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும். ஆனால் இந்த புரியாததன்மையே இவரது கவிதைகளின் காந்த சக்தி. திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வித்தையை நிகழ்த்துகிறது.
தீபச்செல்வன்:
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடி சாட்சியம் தீபச்செல்வன். இரத்தமும் சதையுமாக மண்ணுக்குள் புதைந்து போன மக்களின் வலிகளையும், வேதனைகளையும் தன் கவிதைகளின் வழியாக கண் முன் நிறுத்தும் இந்த ஈழத்துக்கவிஞனின் வலைத்தளம் இது. தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலமாக ஈழத்து இலக்கியத்தின் தடத்தில் தனக்கான அடையாளத்தை அழுந்தப் பதிக்கிறார்.
|
|
அறிமுகங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅக்கரைக் காற்று அருமையாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் அவர்களுக்கு.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அக்கரைக் காற்று
ReplyDeleteநல்லதொரு அறிமுகம் நண்பரே...
எனது தளத்தில் என் காதல் க(வி)தை... 03
அறிமுகங்களுக்கு மிக்க நன்றிகள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeletevetha.Elangathilakam