07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sunday, October 19, 2014

அம்புலிப் பருவம்!!!








" எந்தச் சேனல் மாத்தினாலும் போட்டதையே போடுறான்.... புதுசா இந்த உலகத்தில எதுவுமே இல்லையா?............"
" ஏங்க புதுசா ஏதாவது மாடல் வந்திருக்கா ... எல்லாம் பழசு மாதிரியே தெரியுதே.."
புதிய தகவல்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.
பொதுவாக, நேரம், தரம்  மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
யாருமே எங்கேயும் காத்திருந்து கிடைக்கும் ஒரு பொருளுக்காக காத்திருக்க விழைவதில்லை. நேரம் காரணமாக இருக்கலாம்? இந்தப் பொருளுக்காக இவ்வளவு நேரம் காத்துக் கிடக்கணுமா ?? என்ற தரம் குறித்த கேள்வியாகவும்.. ஏ..அப்பா... இப்பளவு விலையா இதுக்கு இவ்வளவு கூட்டமா?
ஒரு புதிய பொருளை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம், யாராவது பயன்படுத்திப் பார்த்து, நல்லா இருக்குன்னு சொன்ன பிறகு அந்தப் பொருளுக்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்துக்கிடந்து வாங்குவோம்.
ன்று பல தொலைகாட்சி நிறுவனங்களும், ஊடகங்களும், பள்ளி கல்லூரிகளும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்கிறார்கள். நமக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.








"பழையன கழிதலும்
புதியன புகுதலும் "
என்றைக்கும் அவசியமான தேவையே. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தால் தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நம் நாட்டுக்கு வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும்.

சிறுபனை ஓலையில்
சிலவரிகள் எழுதி
புறாவிடு தூதனுப்பி!
ஒரு திங்கள் காத்திருந்தேன்!
மூன்றுபக்க கடிதத்தில்
முழுமனதை எழுதிவிட்டு
ஒரு வாரம் காத்திருந்தேன்!
தந்தியெனும் நந்தியில்
சில வார்த்தைகள் அனுப்பி
ஒரு நாள் காத்திருந்தேன்.........
நினைத்த நேரத்தில்
குறுஞ்செய்தி அனுப்பி
அடுத்த நொடி பதில்கண்டேன்
வியந்தேன் விஞ்ஞானத்தை
அவசியமான ஆகிருதிகள் என
வாரி அணைத்துக்கொண்டேன்....

=====================================================================



அம்புலிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் அம்புலிப் பருவம். அமுதுண்ணும் போது வாயினுள் இருக்கும் உணவை உதடு வழியாக பிதுக்கி வெளியே கொண்டுவந்து கைகளால் முகம் முழுதும் கோலம் போட்டு அன்னையைப் பார்க்கும் குழந்தை, எனதருமைச் செல்லமே உனக்காகவே இந்த அமுதூறும் உணவென அமுதூட்டும் அன்னையவள் அம்புலியைக் காட்டி குழந்தைக்கு அமுதூட்டுதலே அம்புலிப் பருவமாம். இப்படியான அழகான பருவத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் இளம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசும் பதிவர்களைக் காண்போம்.

=======================================================================


தொழில்நுட்பம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் தங்கம்பழனி அவர்கள். இதோ பாருங்கள், தானியங்கி பண இயந்திரத்தில் பணமெடுக்க பணமெடுக்கும் அட்டை இல்லாமல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறையொன்றை விளக்குகிறார் வாருங்கள் பார்ப்போம்.

தங்கத் தமிழ்மகனே
தருவித்தாய் இனிதாய்
தகவல் தொழில்நுட்பங்களை
உருவிலும் ஏற்றி - எம்
சிந்தனைக்கு விருந்தளித்தாய்
இன்னும்பல நுட்பங்களை
எமக்காய் வழங்கிடவே
வாழிய எம்மானே!!

=========================================================================


புயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி  மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.ரும் இந்த இளம் விஞ்ஞானியை சென்று பார்ப்போம் வாருங்கள்.


மின்சார மின்னனுக்களை
செயல் இழக்கச் செய்திடவே
உபாயம் கண்டெடுத்தீர் - உம்
செயற்கரிய செயலிது
போற்றத் தகுந்ததய்யா!!

=======================================================================


கணினி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம். அதிலும் நொடிக்கு நொடி புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.இதோ நண்பர் சில்வெஸ்டர் சிபி விண்ணரசன் அவர்கள் தனது தளத்தில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பொன்றை விளக்குகிறார்.

செல்பேசி செய்தியை
செல்லமாக சொல்லும் தம்பி
செவ்வனே தொடருங்கள்
செழிப்பான உம் பணியை
களிப்புடனே ஏற்கிறோம்
நீவீர் தரும் செய்தியினை!!!

====================================================================


மாணவப் பருவத்தில் இருக்கும் அறிவுப்பசி அளவற்றது. அத்தகைய பருவத்தில் இன்று உலகமே அனுபவித்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலுக்கு ஒரு உபாயம் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு மாணவர். நண்பர் இளங்கோ தனது வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார் வாருங்கள் பார்ப்போம்.


கரியமில வாயுவை
கரைத்து உருமாற்றிட
கனிவாக வழி சொன்னாய்
கரு சுமந்த வான்மேகம் - உன்னை
கருணைகொண்டு வாழ்த்தட்டுமே!!

===================================================================


குறைந்தபட்சம் ஆறுமாத காலம் காத்திருந்தால் தான் நாம் தங்குவதற்கு வீடு கட்ட இயலும். ஆனால் இங்கே பாருங்க ஒரே நாளில் வீடு தயார் செய்கிறார்களாம். ஆச்சர்யங்களுக்கு அளவே இல்லை.

அஸ்திவாரம் போட்டு
பத்து நாள் தண்ணீர்விட்டு
அதற்கு மேல்கட்டி
உச்சிக்கூரை போட்டு
அன்பகத்தில் குடியேற
ஆறுமாதம் ஆகிடுமே!
ஒரு நாளில் அதைச்செய்யும்
புண்ணியவாளனே
எங்கய்யா நீ இருக்க.....

=====================================================================




இயந்திரந்துறையில் ஒரு அரிய சாதனை படைத்து  அரசின் "இளம் விஞ்ஞானி விருது" பெற்ற திரு.செந்தில்குமார் அவர்களை நமக்காக அறிமுகப்படுத்துகிறார்கள் இங்கே. வாருங்கள்  சென்று பார்த்து வாழ்த்தி வருவோம்.
இரு உலோகத் தனிமத்தை
ஓட்டுவதில் நீ புரிந்த
இமாலய சாதனை
இயந்திரத் துறைக்கு
இன்னுமொரு வைரக்கிரீடமே!!

====================================================================

அகண்ட பெருவெளியில்
அடியெடுத்த மனிதனுக்கு
அறிவியலே விடிவெள்ளி....
நிற்காமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள். இன்னும் பெருகும் நித்தமும் நித்தமும். ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கும் நற்பதிவுகளை வாசிப்போம், நேசிப்போம், வளம் பெறுவோம் வாழ்த்துவோம்.




இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுறுகிறது. கடந்த ஏழு நாட்கள் ஒரு பிள்ளையாய் நான் உங்களோடு தவழ்ந்திருந்தேன். அனுபவம் பல பெற்றேன். என்னை ஆசிரியனாய் அமர்த்திய ஐயா.சீனா அவர்களுக்கு மீண்டும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள். அருமையாக கருத்திட்டு என் எழுத்துக்களை மேம்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
 
 
என்றென்றும்
அன்புடன்
அன்பன்
மகேந்திரன்







மேலும் வாசிக்க...

Monday, September 1, 2014

தொழில்நுட்ப பதிவர்கள்


இன்று நாம் பார்க்க போகிற நண்பர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் பதிவர்கள் . இவர்கள் தனக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உடையவர்கள் . அதனால் அறிவியலில் , கணினியியலில் அன்றாடம் நடக்கும் நிழவுகளை நமக்கு பதிவாக்கி தருகின்றனர் .

BLOGGER நண்பன் 

அன்பு நண்பர் அப்துல் பாசித் அவர்களின் வலைத்தளம் இது . இன்று பிளாக் வைத்திருக்கும் பெரும்பாலான நண்பர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரிந்திருக்கும் . பிளாக்கில் வரும் அனைத்து பிரச்சனைக்கும் இவரிடம் தீர்வு உண்டு . பழகவும் எளிமையானவர் .

இவரின் சில பதிவுகள் ..

ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா?

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி 


=========================================================================

தெரிந்துகொள்ளலாம் வாங்க :

இன்றைய மொபைல் உலகில் தினமும் புது புது விதமான போன்கள் வருகிறது . அப்படி வரும் போனை பற்றிய அனைத்து தகவல்களையும் தருகிறது இந்த தளம் . மற்றும் தினமும் உலகில் நடக்கும் தகவல் தொழில்நுட்ப செய்திகளை அளிக்கிறார் நண்பர் .

 இவரின் சில பதிவுகள் ..

ரூ.5,301 விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 069 மொபைல் போன்


*******************************************************************************
புதுமை தகவல் :

நண்பர் MSM நசீம்அவர்களின் வலைதளம் இது . தகவல்தொழில்நுட்ப உலகில் நடக்கும் தவறுகளை எப்படி எதிர்கொள்ளவது என அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதுபோல நமது தளத்துக்கு தேவையான  தலைப்பு படங்களை எப்படி ONLINE இல் எப்படி செய்வது என அழகாக பதிவுட்டுள்ளார் .

இவரின் சில பதிவுகள் ..

உங்களுக்கு தேவையான title logo களை online இல் நீங்களே இலகுவாக உருவாக்கிக்கொள்ளலாம் 

 

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி 

  ******************************************************************

 அன்பை தேடி அன்பு :








நண்பர் அன்பு எனது நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர் சேர்ந்தவர் .தான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவர் .எந்த தகவல் வேண்டும் என்றாலும் ஒரு மெயில் செய்தால் உடனே பதில் அளிக்கும் நல்ல நண்பர் .

இவரின் சில பதிவுகள் ..

VLC MEDIA ப்ளேயரில் முகப்பு பக்கத்தை மாற்றுவது எப்படி?

  Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர


=========================================================================

99 LIKES

நண்பர் nawsin khan அவர்களின் வலை தளம் இது . இங்கு பல மென்பொருள்கள் இலவசமாக கிடைகிறது . அதுபோல [பல வலைத்தளங்களை நமக்கு அறிமுகமும் செய்கிறார் இவர் . நீங்களும் சென்று பாருங்கள் .


                                       இவரின் சில பதிவுகள் ..

தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை) 100% உண்மையானது






மேலும் வாசிக்க...

Sunday, July 21, 2013

பயுனுள்ள பதிவர்கள் -என் ரசனையில் ..

மேலும் வாசிக்க...

Friday, December 30, 2011

தொழில்நுட்ப பதிவுகள் ஒரு பார்வை

அனைவருக்கும் வணக்கம்

எனக்கு நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பதிவிட முடிவவில்லை.அதனால் சீனா ஐயா என்னை மன்னிக்கவும்

நாம் இன்று சிலபயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போம்

ப்ளாக்கர் நண்பன்
                நமக்கு தேவையான File-களை Online-ல இலவசமாக பதிவேற்றலாமாம்.இதுல நிறைய வசதி இருக்காம்.மேலும் இவர் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?-ன்னு ஒரு தொடர் பதிவும் எழுதிருக்காரு.அதுவும் நமக்கு பயன்படும்.

கற்போம்
                இப்போ கணிணியில விண்டோஸ் 7 பயன்படுத்துறாங்க அது இன்ஸ்டால் ஆகுறதுக்கு நிறைய நேரம் எடுக்குதுன்னா20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி-ன்னு நண்பர் பலேபிரபு சொல்லிதாரத கேளுங்க.
இந்த நண்பர் வெப் ஹோஸ்டிங் பற்றி தொடர் பதிவு எழுதுறாரு

வந்தேமாதரம்
               இப்போது Google-தனது தோற்றங்களை மாற்றி வருகிறது.அந்த வகையில் அதனுடைய logo-வையும் நம்முடைய பிறந்தநாள் இல்லன்னா ஏதாவது ஒருநாள் Google-ன் லோகோ-வையும் மாற்றலாமாம். இதை பற்றி வந்தேமாதரம் சசி அண்ணன் சொல்றாரு.இவரும் ஒரு தொடர்பதிவு எழுதுறாரு அது எதுன்னா சில பதிவர்கள் செய்யும் தவறுகள்

தமிழர்கள்
                நம்மை போல கணிணியிலயும் ஆண் பெண்-ன்னு இருக்காம்.ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கனும்-ன்னு தமிழர்கள் சொல்லிதாராங்க.இவரும் ஒரு தொடர் பதிவு எழுதிருக்காரு அது என்னது தெரியுமா? உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள

அறிவின் உச்சகட்டம்
              இவர் Adobe Photoshop CS3 மென்பொருளை இலவசமாக தறவிறக்க நமக்கு
சுட்டிய சொல்லிகொடுக்குறாரு.மேலும் இவர் Google இடம் Domain வாங்குவது எப்படின்னு தொடர் பதிவும் எழுதுறாரு


கூகிள் சிறி
உங்கள் கணிணியின் இயங்கு தளம் Windows 7-ஆக இருந்தால் அது குறைவான வேகத்துடன் இயங்கினால் அதனுடைய வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்
             
பொன்மலர் பக்கம்
                கணிணியில இருந்தே இலவசமா SMS அனுப்பலாமாம்.அதுக்கு ஒரு மென்பொருளும் இருக்காம் அது பற்றி அக்கா பொன்மலர் சொல்லிதாராங்க

தமிழ் கம்ப்யூட்டர்
                நமக்கு தேவையானது மாதிரி அல்லது பிடித்த மாதிரி மாற்றி வைக்கலாமாம் அது எப்படின்னு பார்க்க சுட்டி

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
               இவுங்க நமது File-களுக்கு பாஸ்வேர்டு கொடுத்து அதை CD,DVD மற்றும் Pen Drive-ல காப்பி பன்னலாம்னு சொல்ராங்க

அதே கண்கள்
                நம்மளுடைய ப்ளாக்கில் கர்சர்-ல உங்க படத்தையே வைக்கலாமாம்.அது பற்றி சொல்கிறார் அதே கண்கள்

தமிழ்நுட்பம்
                இவுங்க என்ன சொல்றாங்கன்னா Microsoft Office-ல உள்ள  Microsoft Office PowerPoint -கோப்புகளை வீடீயோவா மாற்றலாம்னு சொல்றாங்க


தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
               இவுங்க Nokia,Samsung போன்ற Compay Mobile-க்கு Pc Suite இருக்குற மாதிரி China Mobile-க்கும் Pc Suite இருக்காம்

கொம்பியூட்டர் உலகம்
              இவர் ந்மக்கு 1001 எழுத்துரு இருக்குற ஒரு இனையதளத்தை காட்டி தாராரு

தகவல் தொழில்நுட்பம்
              நாம இப்போது அதிகமாக பயன்படுத்திக்கிட்டிருக்க PenDrive எப்படி தயாரிக்கிறாங்கன்னு சொல்லிதராங்க
மேலும் வாசிக்க...

Saturday, August 13, 2011

கழுத்தில் தொங்கும் எமன்


அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம் 

இன்றைய செய்தி

* உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணைத் தனியே குறித்து வைக்கவும்.

* மொபைல் போன் தொலைந்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன்படும். அந்த போனைப் பயன்படுத்துபவர்களை அறிய இது உதவும்.

* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும்.

* கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாமே.

யாராவது கொஞ்சம் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்களேன்


இன்றைய வலைப்பூ நண்பர்கள்

1.    தொழில்நுட்ப செய்திகள் அளிப்பதில் வல்லவர் இவர். குறிப்பாக மொபைல் தொழில்நுட்பம் பற்றி பல அறிய தகவல்களை நமக்கு அளிக்கிறார். ராக்கெட் ராஜா என்று தலைப்பிட்ட அவருடைய வலைப்பூ நமக்கு பல ஆச்சரிய    செய்திகளை தருகிறது.  அவருடைய சமீபத்திய பதிவு விண்வெளி பற்றிய  அநேக வியக்க வைக்கும் செய்திகளை தருகிறார்
   

2.    இவர் ஒரு தொழில்நுட்ப பதிவர் இவரின்  வலைப்பூ  சாஃப்ட்வேர் பற்றிய கட்டுரைகளே அக்கிரமித்து உள்ளன.  இவருடைய சமீபத்திய பதிவு உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி? எளிமையா உங்களுக்கு ஃபோட்டோஷாப் சொல்லி குடுக்கும்

3.   வலைப்பூ முழுவதும் எங்கு பார்த்தாலும் தொழில்நுட்ப செய்திகள் லிங்க்குகளாய் நிரம்பி வழிகிறது. அவர் தரும் செய்திகள் மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. புது புதிதாய் சாஃப்ட்வேர்களை அறிமுகம்    செய்கிறார். இவரின் சமீபத்திய பதிவு இலவச ஆட்டோ ரன் வைரஸ் நீங்கி 3.1 முழு பதிப்பு  எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு சாஃப்ட்வேர். 


அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது