07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பிரேம்குமார். Show all posts
Showing posts with label பிரேம்குமார். Show all posts

Friday, June 20, 2008

விடுபட்டவை

தகவல் தொழில்நுட்பத்துறைக் காரர்கள் என்றாலே ஏதோ வேற்றுக்கிரக வாசிகளை போல பார்க்கும் வழக்கம் இப்போது பலருக்கு இருக்கிறது. ஏன் ? எதற்காக என்ற எந்த கேள்விகளும் இல்லாமல் எல்லோரும் சொல்வதலோ அல்லது ஒரு முன்முடிவுடனேயே இந்த விசயத்தில் இருக்கிறார்கள். ச‌மூக‌ அவ‌ல‌ங்களையும் ஐ.டி.கார‌ர்க‌ளையும் இணைத்து பேசும் ம‌க்க‌ள் க‌ருத்து ப‌ற்றியும் உண்மை நிலை ப‌ற்றியும் விள‌க்கிறார் வெட்டி

***

ஐ.டி. நிறுவனங்களில் பெருகி வரும் பாண்டு நடைமுறை பற்றி அழகாக விளக்குகிறது தமிழ்நெஞ்சத்தின் பதிவு.

வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் என்ற‌ போதும், அவ்வ‌ள‌வாக த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌க்கார‌ர்க‌ளின் வாழ்வை ப‌ற்றிய‌ ப‌திவுக‌ள் வ‌ருவ‌தில்லை. சீக்கிர‌ம் வ‌ர‌ வேண்டும் என்ற‌ வேண்டுகோளை இங்கு வைக்கிறேன்

***

ச‌மூக‌த்திலும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் அதன் தாக்கங்கள் & அவை தரும் படிப்பினைகளையும் அழகாக தொகுத்து தருகிறார் பாலா அண்ணா தன் விடுப‌ட்ட‌வை ப‌திவுக‌ளில்

ப்ரிய‌னின் 'ப்' ப‌க்க‌ங்க‌ளிலும் இந்த வகை பதிவுகளை காணலாம்

***

வெவ்வேறு துறையில் இருக்கும் சில நபர்கள் ஒரு நாள் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்ந்தால் என்னவெல்லாம் லூட்டி அடிப்பார்கள் என்று யோசித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் சின்ன பையன்.யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!
என்ன நடக்கும் என்ற அவர் கற்பனையை பாருங்கள்

***

வேலை கிடைக்கவில்லை என்று இப்போதெல்லாம் யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனேனில் பல்வேறு வேலை வாய்ப்புகள் எங்கேங்கும் இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில் வேலைக்கான தகுதிகள் நம்மிடம் இருப்பதில்லை, அல்லது வேலை வாய்ப்புகள் குறித்து நமக்கு தெரிவதில்லை. தமக்கு தெரிந்த வேலை வாய்ப்புகளை பொதுப்பார்வைக்கு வைக்கிறார் கார்த்திகேயன் தனது 'ஜாப்ஸ் அவென்யூ' பதிவுகளில்

***

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள் என சொல்வதுண்டு. எப்படியாவது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டும் என்று எப்போதும் ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக மீண்டும் செய்திகளில் 'வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று ஏமாற்றியவர் மாயம்' போன்றவைகளை கேட்க முடிகிறது. வேலை தேடுவோருக்கு ஒரு எச்சரிக்கை பதிவாக அமைந்திருக்கிறது 'வேலை தேடுவோர் ஜாக்கிரதை' பதிவு

***

முன்னேற்றம், நாகரீகம் எனும் காரணிகளைக் காட்டி இயற்கையை விட்டு மனிதன் எங்கோ தூரமாக சென்றுக்கொண்டிருக்கிறான். இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே என்று அறிவுறுத்துவதோடு எளிய இயற்கை (பாட்டி) வைத்தியங்களையும் சொல்லி தருகிறது பாட்டி வைத்தியம் பதிவு

***

இன்றோடு வலைச்சரத்தில் என் பயணத்தை நிறைவு செய்து கொள்ள எத்தனித்திருக்கிறேன். ஓரளவுக்கேனும என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தோடு விடை பெறுகிறேன்.

வலைச்சரம் குழுவுக்கும் பின்னூட்டமிட்டும் வாசித்தும் ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

வலைப்பதிவுகளில் எப்போதும் போல் ஒன்றாய் தமிழோடு பயணிப்போம்

நன்றியுடனும் வணக்கங்களுடனும்
உங்கள் சக பயணி
பிரேம்குமார்
மேலும் வாசிக்க...

Thursday, June 19, 2008

சுட்டிகளின் உலகிற்கு சுட்டிகள்

ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்? அப்படி இணையத்தில் இறைந்து கிடக்கும் மழலைக்குறும்புகள் பற்றிய பதிவுகளும் குழந்தைகளின் உலகைச் சார்ந்த பதிவுகளும் இன்று

***

ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு நேசிப்பாள் என்று சொல்ல தேவையில்லை। ஆனால் ஒரு குழந்தையாய் மட்டும் பாராமல், தன் சினேகிதியாகவே தன் குழந்தையை பாவிக்கிறார் கலையரசி. என் குட்டி சினேகிதி!

***

ஒரு குழந்தைப்பட்டாளம் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது முத்தலெட்சுமி அக்காவின் கோன் பனேகா கோரோர்பதி பதிவு

***

தன் குட்டி தேவதையின் ஒவ்வொரு செயலையும் உருகி உருகி ரசிக்கும் சந்தனமுல்லை நம்மையும் அந்த தேவதையின் குறும்புகளுக்கு சிரிக்க வைக்கிறார் பப்புஸ் டே அவுட் பதிவில்

***

முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம் :)

***

இந்த பிள்ளைக்கு கதை சொல்லி தூங்கும் வைக்கும் முன்னே நான் முதலில் தூங்கிப்போகிறேன் என்பது தான் பல கதைசொல்லிகளின் குறை :)அப்படித்தான் ஐந்து தலை யானை முட்டைக் கதை வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறாள் ஜனனி। அருட்பெருங்கோ அலறியடித்துக்கொண்டு ஒரு யானையின் மேல் ஐந்து தலை நாகத்தை உட்காரச் சொல்லிவிட்டு முட்டைக்கு எங்கே போவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது கொலைவெறியோடு யோசித்து ஆகாயநதி சொன்ன - ஐந்து தலை யானை முட்டைக் கதை

***

ஒரு குட்டிப்பாப்பா தன் அப்பாவுடன் சேர்ந்து அழகாய் சொல்லும் கதை கேட்கனுமா? கதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை

***

உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி பற்றியும் மாண்டிசோரி கல்வி முறை பற்றியும் தெளிவாக விளக்கிறார் புதுகை தென்றல்

***

போன வாரம் ரிலயன்ஸ் ப்ரேஷில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது ஒரு குழந்தை தன் அம்மா பின்னாடியே 'அம்மா, தாபிகானா சூ.... தாபிகானா சூ' என்று கத்தியபடியே சென்றது (வேறொன்றுமில்லை ட்ராபிக்கானா ஜீஸ் வேண்டுமாம்). எங்க மாமா பொண்ணுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது. குர்குரே என்றால் அவ்வளவு பிரியமாய் சாப்பிடுகிறாள். JUNK FOOD சாப்பிடும் பழக்கம் இப்போதிலிருந்தே ஆரம்பித்தால் உடல்நிலை என்னாவது? குழந்தைக்களுக்கான உணவு முறை பற்றி விளக்குகிறது பேரண்ட்ஸ் கிளப்பின் பதிவு

***

சொல்வதற்கு ஏதுமில்லை.... நீங்களே பதிவு பாருங்க‌ :)
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்

மேலும் வாசிக்க...

Tuesday, June 17, 2008

நினை(வலை)ச்சரம்

பணம் பாதாளம் வரை பாயும், பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்.... அதெல்லாம் சரி, ஆனால் பணம் இருந்தும் பசியும் இருந்தும் புசிக்க ஏதும் கிடைக்காவிட்டால்? அப்படி ஒரு சமயத்தில் நடந்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை கதிரவன் விவரிக்கையில் நமக்கும் அந்த சிலிர்ப்பு தொற்றிக் கொள்கிறது

********************************************************************
அந்த காலத்தில் எல்லாம் மாடு பிடிப்பவன் தான் வீரன் என்று கொள்வார்களாம்। நம்ம எம்.ஜி.ஆர் கூட படத்தில புலி கூட எல்லாம் சண்டை போட்டிருக்காரு. ஆனால் அதையெல்லாம் விட பெரிய சாதனை இரவு அல்லது அதிகாலையில் ஒரு நாய் நிறைந்த தெருவில் தனியாக நடந்து வருவது. அத்தகைய நிகழ்வொன்றினை இங்கே விளக்குகிறார் ஜி.

********************************************************************
வெளியூரில் தங்கி வேலைப் பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அதில் தலையாய பிரச்சனை திடீர் என்று ஊருக்கு கிளம்பிப் போவது. தொடர்வண்டிகள் இருந்தால் சிக்கலில்லை. ஆனால் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்றால் ? பேருந்து அமைவது கூட இறைவன் கொடுக்கும் வரம் போலும். நிறைய பேருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை நகைச்சுவை ததும்ப எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ. சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் செஞ்சுருக்கீங்களா?

********************************************************************
ஒரு வாலிபனுக்கு என்னவெல்லாம் துன்பம் வரலாம்? துணி துவைப்பதிலும் கூட எப்படியெல்லாம் தனக்கு இன்னல்கள் வந்தன என்று விவரிக்கிறார் செல்வேந்திரன்

********************************************************************
நட்பு ~ அந்த வார்த்தையைச் சொல்லும் மனதுக்குள் ஒரு சந்தோசப்பூ பூத்துவிடுகிறது. சாதி, மதம், இனம், வயது, மொழி எதையும் பார்க்காதது நட்பு. பாலின பேதம் மட்டும் பார்க்குமா என்ன? அதிகமாய் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத கல்லூரி பருவத்துப் பட்டாம்பூச்சிகள் செய்யும் கூட்டாஞ்சோற்றை பற்றி கோபிநாத் கூறுகையில் நாமும் கண் மூடி சில நேரம் நம் கல்லூரி காலத்திற்கு சென்று வரலாம்

********************************************************************
சென்னைக்கு வரும் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டணம் நினைவுகளை தந்துவிடும். தான் சுற்றிப் பார்த்த சென்னையை பற்றி அழகாக‌ நினைவுகூறுகிறார் தூயா

மீண்டும் பயணிப்போம்...
மேலும் வாசிக்க...

காதல் ! காதல் ! காதல் !


காதல் என்ற தலைப்பில் எழுதப்படும் எதுவுமே கவிதையாகிவிடும் என்றொரு கவிஞர் சொல்லியிருக்கிறார். மற்ற பாடுபொருள்களை காட்டிலும் காதலினால், காதலால், காதலுக்காக பாடப்பட்ட கவிதைகளே அதிகம்.
பயணத்தின் போது எதிர்ப்பட்ட சில அழகான காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் கடல்
என் வழித்தடங்களில் நடந்துவராதே
உன் சுவடுகள் படாத கோவத்தில்
கொந்தளிக்கிறது பொறாமைக்காரக் கடல்

வாரம் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதனை அழகாக தன் காதல் கவிதைகளோடு இணைப்பதில் வல்லவர் ஸ்ரீ

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மழைக்கால கவிதைகள்

எந்த நிறத்தில்
மழைத்துளிக் கேட்டாய் ... ?
அதோ வானம் வரைகிறது வானவில்
தேர்ந்தேடுத்துக்கொள் ஏழில் ஒன்றை

காத‌லும் ம‌ழையும் இணைபிரியாதவை. ஒருவ‌கையில் பார்த்தால் ஒருகுணமுடையவை. எப்போதும் பெய்யும், எப்போது பொய்க்கும் என்று தெரியாது. தீர்ந்த‌ பின்னும் நெடுநேர‌ம் இருக்கும் ஈர‌மும், தூண்டிவிட்டு சென்ற‌ வாச‌மும்... இன்னும் சொல்லிக்கொண்டே போக‌லாம்
ப‌ழ‌னியின் ம‌ழைக்கால‌ க‌விதைக‌ளில் ந‌னையுங்க‌ள்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ-நான்
என்ன தைரியம் உன்மோதிரத்திற்கு?
24 மணி நேரமும் உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு

பெண்க‌ள் எழுதும் காத‌ல் க‌விதைக‌ள் எப்போதும் த‌னித்துவ‌ம் வாய்ந்த‌வை. திரைப்பாடல்களிலும் சரி, கவிதைகளிலும் சரி ஒரு பெண்ணின் நிலையிலிருந்து எழுதும் ஆண் க‌விஞ‌ர்க‌ளால் எப்போதுமே அதை முழுதாய் எழுதிவிட‌ முடிவதில்லை.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் மழை

தொடக்கமும் முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்

கண்ணாடியில் பெய்த மழை காதலாய் கிறுக்கியவை ...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நானும் ஒற்றை ரோஜாவும்

உன் நினைவுகளின் பிடியில்
நானும்
நீ கொடுத்த ஒற்றை ரோஜாவும்...

காதலின் நினைவாக ஒற்றை ரோசாவோடு வாடிக்கொண்டிருக்கும் பெண்ணை பற்றி கௌசல்யா அவர்களின் கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
விதிவிலக்கா???
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்
தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தான் காதல்। ஆனால் காதலுக்கு இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா என்று கேட்கிறது தணிகை இந்த கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ

உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்!
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த சிரிப்பை
பார்க்கமுடியவில்லையே...

சார்லஸின் காதல் பொங்கும் கவிதைகளுக்குப் என்ன அறிமுகம் தந்துவிட முடியும்?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதல்! காதல்!! காதல்!!! - 10

உன் முத்துப்பதித்த
தொங்கு கம்மலின் நுனியில்
ஊசலாடும் ஒரு மழைத்துளிக்குள்
தெரிகிறது என் உயிரின் உருவம்

காதலும் நோய் தான் போலும். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே எங்கும் எதிலும் எப்போதும் காதலும் காதலியும் தான் தென்படுகிறது காதல் மனதுக்கு.

மேலும் வாசிக்க...

Monday, June 16, 2008

பயணத்தில் கவனித்த கவிதைத்தடங்கள்

அத்துமீறி உடைந்து வெளியேறி
என் அந்த‌ர‌ங்கம்
யாரோ ஒருவ‌ர் கையில் தன்
சாவியை திணிக்கின்ற‌து!


உள்ளுக்குள் அலைக்கழிக்கும் ரகசியங்களை பற்றி அழகாய் சொல்கிறது செல்வாவின் "ந‌ட்ச‌த்திர‌ ர‌க‌சிய‌ங்க‌ள் " கவிதை

***
வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...

சின்ன சின்னதாய் சிலிர்க்கவைக்கும் சில கவிதைகள் இருக்கின்றன தினேஷின் வலைப்பூவில்

***

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்
தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

தேவைகளின் பட்டியல் எப்போதும் தீர்வதில்லை கவிஞர்களுக்கு. தினேஷின் வேண்டும் பட்டியல்.


***

பிரியும்போதும் கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை।
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?

நிகழ்வுகளை அற்புதமாக கவிதையில் சொல்பவர் பிரபாகரன். அவரின் "அவனுக்கேனும் நினைவிருக்குமா" கவிதை எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதொன்று

***

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள் கிசுகிசுத்துக்கொண்டன‌।

போய் பார்க்கத்தான் நேரம் ஒழியவில்லை।

அனிதாவின் கவிதைகளில் உள்ள ப‌டிம‌ங்க‌ள் ப‌ல‌ க‌தைக‌ள் பேசும்.


***

கவிதைகளற்ற
இக்கணத்தில் எழுதத் துவங்கிவிட்ட
இந்த வார்த்தை குவியல்
நிச்சயம் கவிதையாயிருக்க முடியாது...

க‌விதையாயிருக்க‌ முடியாது என்று சொல்லும் ச‌ர‌வ‌ண‌குமாரின் இந்தக் க‌விதையும் அவரின் மற்ற கவிதைகளை போலவே ரசிக்கவே வைக்கிறது

மீண்டும் பயணிப்போம்...
மேலும் வாசிக்க...

உங்களோடு ஒரு பயணம்

அனைவருக்கும் வணக்கம்।

மொழியோடு எங்கோ ஒரு ஓரமாய் பயணித்துக் கொண்டிருந்த என்னை, இங்கே எழுத வைத்த வலைச்சரம் குழுவிற்கு என் முதல் நன்றி। ஆயில்ய‌னின் ஆர்ப்பாட்ட‌மான‌ வ‌லைச்ச‌ர‌ப் ப‌திவுக‌ளுக்கு பின், "நாம் என்ன‌ எழுத‌ப்போகிறோம்?", "இப்ப‌டி அழ‌காய் சுவார‌சியமாய் எழுத‌ முய‌ற்சியாவ‌து செய்ய‌ வேண்டும்" என்ற‌ இரு எண்ண‌ங்க‌ளும் மாறி மாறி வ‌ந்து கொண்டே இருக்கிற‌து ம‌ன‌தில்.

என்னைப் ப‌ற்றிய‌ அறிமுக‌த்தை சீனா அய்யா ஏற்க‌ன‌வே ப‌திந்துவிட்டார். 2006 முத‌ல் ப‌திவெழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் தொடர்ந்து செயல்படுவதில்லை. அனேக‌மாய் எல்லா ப‌திவுக‌ளையும் ப‌டித்து வ‌ந்தாலும் பெரும்பாலும் பின்னூட்ட‌ம் இடுவ‌தில்லை. அலுவ‌ல‌க‌த்தின் உள்ள‌ இணைய‌ப் பிர‌ச்ச‌னைக‌ளும் வேலை ப‌ளுவும் தான் முக்கிய‌ கார‌ணிக‌ள்.

க‌விதைக‌ள் எழுத‌த்தான் முத‌லில் என் வ‌லைப்பூ உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. க‌விதைக‌ளில் ந‌ல்ல‌ தேர்ச்சி இல்லையென்றாலும் க‌விதைக‌ள் வாசிப்ப‌து, க‌விதைக‌ள் எழுத‌ முய‌ற்சி செய்வ‌து என்ப‌ன‌ பிரியமான‌ விச‌ய‌ங்க‌ள்.
எப்போதோ ப‌ள்ளி நாட்க‌ளில் எழுதி நான் மட்டுமே படித்துப் பார்த்துக்கொண்ட நிலா க‌விதையொன்றை ப‌திவில் இட்ட‌ போது சின்ன‌தாய் ஒரு ம‌கிழ்ச்சி வ‌ர‌த்தான் செய்த‌து

முன்பெல்லாம் நீளமான கவிதைகள் எழுத மிக பிடிக்கும். அவ்வாறு எழுதியதில் மிகவும் விருப்பமானவை :
காதல் மான்கள் ~ புறநானூற்று மான் கவிதை புதுக்கவிதை நடையில்
இதயங்கள் ~ தாயின் அன்பை சொல்லும் கதையொன்று கவிதை வடிவில்
கடலைப் போட்டு பார் ~ வைரமுத்து பாணியில் விடலைகளின் கடலை பற்றி ஒரு கவிதை

ஆனால் பல சமயங்களில் நீள் கவிதைகள் எழுதுவது சிக்கல் த‌ந்துவிடும். தொடக்கத்திலோ, முடிவிலோ எங்காவது சிக்கிவிடும். அதனாலேயே என் ஏடுகளில் இன்னும் உறங்குகின்றன பல முழுமையடையா கவிதைகள். அந்த‌ பாதிப்பில் எழுதிய‌ ஒரு க‌விதை

சொல்லாமலே
தொட‌க்க‌மோ
முடிவோ
ஏதோ ஒன்று புல‌ப்ப‌டாத‌தால்
ம‌ன‌திலேயே த‌ங்கிவிட்ட‌ன‌
ப‌ல‌ க‌விதைக‌ளும்
சில‌ காத‌ல்க‌ளும்

பிப்ர‌வ‌ரி 2007ல் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ காத‌ல் க‌விதைக‌ளின் தொகுப்பு இது காத‌ல் காலம் ஒவ்வொரு வ‌ருட‌மும் பிப்ர‌வ‌ரி மாத‌ம் இந்த‌ தொகுப்பை தொட‌ர‌ வேண்டும் என்ப‌து என் விருப்ப‌ம் ;)

காத‌ல் கார்த்திகை
சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும்
ஒளிப்பிச்சைக்காக‌

கார்த்திகைக்கு எழுதிய காதல் கவிதை இது। மொழியோடு நடந்த பயணத்தில் காதலின் சுவடுகளை காண "காதல்"

உரக்க சொன்னதில்லை நீ! என்ற என் கவிதையொன்று தான் முதன் முதலாக அச்சு வடிவில் ஒரு மாத இதழில் வந்தது। அதை சாத்தியமாக்கியது இணையம் தான் :)

ச‌முதாய‌ கோப‌ங்க‌ள் ப‌ல‌ இருந்தாலும் பெரும்பாலும் அதை வெளிப்ப‌டுத்த‌ முடிவ‌தில்லை। வ‌லைப்பூவில் எழுதுவ‌து அந்தக் கோப‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு வ‌டிகாலாக‌ இருக்கிற‌து


க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ந‌மீதா ந‌ட‌த்தும் த‌மிழ் கொலை ப‌ற்றிய‌ ப‌திவிற்குத்தான் இதுவ‌ரை என் வ‌லைப்ப‌திவில் அதிக‌ம் வாச‌க‌ர்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள்। ந‌மீதா மட்டும் தான் தொலைக்காட்சிக‌ளில் த‌மிழ் கொலை செய்கிறாரா என்றால் ச‌த்தியமாய் இல்லை ;)

மேலும் என் எண்ண‌ங்க‌ள் சில‌...

உங்கள் அனைவரின் ஆதவரவோடும் இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கும் உங்களுக்கும் பிடித்த நல்ல பதிவுகளை சுட்டிக்காட்ட முற்படுகிறேன்।

மீண்டும் பயணிப்போம்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது