07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வெ.இராதாகிருஷ்ணன். Show all posts
Showing posts with label வெ.இராதாகிருஷ்ணன். Show all posts

Sunday, April 3, 2011

மறுத்துவிட்ட சனியும், விட்டுப் போகச் சொல்லும் ஞாயிறும்

ஆசிரியர் பணியினை திறம்பட செய்ய இயலாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

ஒருநாள் ஒரு மணி நேரம் என ஒதுக்கிவிடலாம் என நினைத்தது தவறாகிப் போனது. அந்த ஒரு மணி நேரத்தை கூட ஒதுக்க இயலாதது சற்று வருத்தமே. எனது எழுத்துகள் தடைபடுவதன் காரணம் என்னவென தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி வைக்கும் விதமாக இந்த வலைச்சரம் அமையும் என்றே கருதினேன். தொடர்ந்து எழுதுவது என்பதில் சின்னதொரு வெற்றி எனினும் முழுமையான வெற்றியா என இனிமேல் தான் தெரியும். 

கதைகளில் அற்புதம் செய்யும் ரிஷபன் கவிதையிலும் அருமையாய் தெரிகிறார்.

இன்னும் எத்தனை எத்தனையோ பதிவர்கள். பல பதிவர்களுக்கு அறிமுகமே அவசியமில்லைதான். இருப்பினும் புதிய புதிய பதிவர்களை தேடி கண்டுபிடிக்க போதிய நேரம் இல்லாமல் போனது எனது தவறுதான். 

வாய்ப்பு அளித்த சீனா ஐயாவிற்கு நன்றிகள். 


மேலும் வாசிக்க...

விடை சொல்ல தெரியாத வெள்ளி

சினிமா விமர்சனங்களாகட்டும், மற்ற விமர்சனங்களாகட்டும் அதை எழுதுவதில் மிகவும் தனித்திறமை படைத்தவர் கிரி. எப்படி எழுத வேண்டும் என இவரிடம் நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ளலாம். மிகவும் உற்சாகமாக எழுதுபவர். இவரின் எந்திரன் இங்கே. 

பல அரிய தகவல்களை நம்மில் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவர்கள் பலர் உண்டு. அப்படி பல தகவல்தனை நம்மிடம் அழகாக சொல்லும் வல்லமை பனித்துளி சங்கர் அவர்களிடம் அதிகம். 

பார்வையற்றவர்களை எண்ணிப் பார்க்கையில் நாம் பாக்கியசாலிகள் என நினைத்து கொள்ளலாம், ஆனால் கண்ணிருந்தும் குருடர்களாகவே நாம் வாழ்கிறோம் என சொல்வதுண்டு. ஆன்மிக கடலில் ஒரு பாராட்டுதனை காணலாம். பிறரை போற்றி அவர்களை முன்னிறுத்துவதுதான் நமது தலையாய கடமை. 

சில விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை சொல்லிவிடலாம் என முயற்சிகள் குறைவதே இல்லை. மரணத்திற்கு பின்னர் என்ன என அத்தனை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் ஜனா. 

மெய்யப்பன் அவர்களின் வலைப்பூவில் பல அரிய விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இயல்பு இயலை சொல்லித் தரும் விதம் அழகு. 

அறிவியல் பற்றி அழகிய பதிவு இது. சர்க்கரை நோய் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். 

எது தவறு, எது சரி என்பது பற்றிய ஒரு அழகிய பாடம் இங்கே. 

இது ஒரு அழகிய பதிவு. பாலசுப்ரமணியம் ஐயாவின் பார்வையில் எழுதுவது, படிப்பது குறித்த ஒரு அலசல் இங்கே. 

கலகலப்பாக பல விசயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் காயத்ரியின் ஒரு பதிவு இங்கே. விடுகதைக்கு விடை தேடும் பாதை சரிதான். 

சில பல நேரங்களில் சரியான ஊக்குவிப்பு இல்லாத காரணத்தால் பலர் எழுத மறுத்துவிடுவதுண்டு. இவர் அப்படியல்ல என்றே கருதுகிறேன். கவிதையினை படித்து பாருங்கள். 

சிறுகதைகளில் பல காவியங்களை படைத்துவிடும் வல்லமை பலரிடம் உண்டு. 

இந்த வெயிற்காலம் தரும் சுகம்தனை எப்படி சொல்வீர்கள்? 

காதலே என் காதலே எனும் இந்த கதையைத்தான் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
மேலும் வாசிக்க...

விட்டுப் போகாத வியாழன்

முடியாது என சொல்ல தெரியாததால் பல நேரங்களில் மனிதர்கள் திண்டாடுகிறார்கள் என ஒருவர் சொன்னதுண்டு. அதே வேளையில் 'முடியாது' என்கிற வார்த்தை எனது அகராதியில் கிடையாது என சொன்ன மாவீரனும் இவ்வுலகில் உண்டு. தமிழ் எழுதுவதற்கான தகுதி எது? தமிழ் வார்த்தைகள் எத்தனை தெரியும்? என பார்க்கும்போது பல நேரங்களில் பதில் சொல்ல இயல்வதில்லை. கவிதை சுவை என பார்த்தால் சில நேரங்களில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தே பெரிய பலமாக இருக்கும். பலமுறை இவரது எழுத்துகளில் என்னை தொலைத்ததுதான் மிச்சம். பலமுறை வாசிக்க தூண்டிடும் எழுத்துகள் நேசமித்திரன் அவர்களின் கவிதையில் தமிழ் துள்ளி விளையாடும். 

வெயிலின் அருமை நிழலில் தெரியும். அட எப்படி எழுதிவிட்டேன்! சரி மாற்றிக் கொள்ளலாம். மனிதர்களிடம் நிறை குறைகள் உண்டு. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களிடம் உயர்ந்த குணத்தை மட்டுமே பார்த்து போற்றி எழுதும்போது இப்படிப்பட்ட உலகம் மட்டுமே கண்ணுக்குத் தெரியாதா என மனம் ஏங்கிப் போய்விடும். அப்படிப்பட்ட மனித மனங்களை படம் பிடித்து காட்டுவதில் மிகவும் திறமையானவராகவே பா. ரா தெரிந்தார். புரை ஏறித்தான் போகிறது. இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு காவியம். 

மரணமில்லா வாழ்வு என்று ஒன்று இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும். எழுத்துகள் மரிப்பதில்லை என சொன்னாலும் மாபெரும் பொக்கிஷங்கள் எரிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. பல விசயங்கள் நமக்கு கிடைக்காமலே போயின, அதைவிட கிடைத்திருக்கும் விசயங்களை படிப்பதற்கு நமக்கு காலமே இல்லாதும் ஆயின. பலா பட்டறை ஷங்கர் சொல்லித்தரும் பாடம் புதியது.

கலகலப்ரியா. இவர் எழுதுவதை நிறுத்திவிட்டதைப் போன்ற பதிவினை இன்றுதான் கண்டேன். எதற்கு எழுதுவதை நிறுத்த வேண்டும் எனப் பார்த்தால் பல நேரங்களில் பதில்கள் கிடைப்பதில்லை. பல மாதங்களாக என்னால் எதுவுமே எழுத இயலவில்லை. ஆனால் எழுதுவதை முற்றிலும் நிறுத்த வேண்டிய வாய்ப்பினை நிச்சயம் ஏற்படுத்தி கொள்ள கூடாது என்றே நினைத்தாலும் அவை தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. இவரது பதிவுகள் மிகவும் சிறப்பானவைகள். இந்த வரிகளில் புதிர் புரிந்து கொள்ள முடிகிறதோ என்னவோ?  

இவரது எழுத்துகளில் மனித நேயம் மிகவும் அதிகமாகவே இருக்கும். சின்ன கவிதைகளில் பல அரிய விசயங்களை தாங்கி அழகாக இருக்கும். இவர் அதிகம் எழுதாவிட்டாலும் மாதம் ஒரு சில பதிவுகள் என வந்தாலும் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருக்கும். மனிதம் நிலைக்க கூடாதா? 


மேலும் வாசிக்க...

Thursday, March 31, 2011

புதன் புண்ணியம் தேடட்டும்

மனிதர்களே இல்லாத உலகத்தில் நாம் சென்று வாழ்ந்து விடக் கூடாதா  என நினைப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. மனிதர்கள் மனிதாபிமானம் தொலைத்துவிட்டார்கள் என்கிற குறைபாடு அதிகமே உண்டு. ஆனால் மனிதர்களுடன், அவர்களது நிறை குறைகளுடன் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம். காட்டில் தவம் செய்ய செல்வது, சந்நியாசம் கொண்டு வாழ்வது மிகவும் கடினம் என்றால் அதைவிட மிகவும் கடினம் குடும்பம் என ஒரு கட்டுகோப்புடன் வாழ்வதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் எத்தனை சிறப்புடையது. ஏதாச்சும் செய்யணும் பாஸ் என அழைப்பு விடுத்த விதூஷ் மனதில் நீங்காத இடம் பெற்றார் என்றால் மிகையாகாது. இவரது எழுத்துகள் மிகவும் அருமை. 

மீண்டும் அதே மனிதர்கள். எத்தனைவிதமான மனிதர்கள் உலகில் உண்டு என்பதை மிகவும் அருமையாகவே படம் பிடித்து வருபவர்கள் மிகவும் குறைவு. நமக்கு ஏற்றமாதிரிதான் பிறர் அமையவேண்டும் என நினைக்கும் மக்கள் உலகில் அதிகம். பிறருக்கு ஏற்றமாதிரி வாழ்ந்துவிட இருப்பவர்கள் ஒன்று கட்டயப்படுத்தபட்டு இருப்பார்கள், அல்லது சூழ்நிலை கைதி என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை அதுவல்ல. இவரின் பதிவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும். ஒவ்வொன்றும் அதி அற்புதம். என்னை பலமுறை யோசிக்க வைத்தவர். பாமரர்கள் எப்பொழுதுமே அதி புத்திசாலிகள் தான். வானம்பாடிகள் என மனதில் நீங்காத இடம் பெற்ற வலைப்பூ இது. 

மனதில் உள்ளதை சொல்ல தைரியம் வேண்டும் என்பார்கள். ஆனால் பல நேரங்களில் நமக்கு வாய்ப்பதில்லை. மனதில் இருப்பதை எழுத்துகளில் வேறு வடிவத்தில் வடித்து வைக்கும் திறனும் பலரில் உண்டு. ஆனால் தனக்கு ஏற்பட்டது இதுதான் என சொல்ல நிச்சயம் துணிவு வேண்டும். அந்த வகையில் தனது செல்ல குழந்தையை பற்றி அருமையாய் எழுதி வருபவரான இவர் சமூக அக்கறை உடைய ஒரு பதிவராகவே எனது கண்களுக்கு தீபா தெரிந்தார். ஒரு புன்னகை பதிவு இது. 

வானத்தில் கோட்டை கட்டுவது. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போன்றே இவரது ஆசைகள் எனக்கு தெரியும். அதாவது பதிவர்கள் மூலம் பல விசயங்கள் சாதிக்க இயலும் என்கிற அசையாத நம்பிக்கைதான் அது. ஆனால் எனக்கு எதற்கு இந்த வீண்வேலை, வீண் நினைப்பு என்றே தோன்றும். உண்மையிலேயே நினைத்து பார்க்கும்போது பல விசயங்கள் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சில விசயங்கள் சாத்தியமானது அனைவரும் அறிந்ததுதான். தமிழா தமிழா என இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை நிச்சயம் பாராட்டுக்குரியது. 

ஆண்களுக்கு மட்டுமே தைரியம் என சொல்லிவைத்த நாடு இது. பெண்கள் என்றால் மிகவும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என கோடு போட்டு வைத்த நாடு. ஆனால் மிகவும் வெளிப்படையாக, கலகலப்பாக பதிவுகளில் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக, கோபம் கலந்த வேகத்துடன் தீர்க்கமாக சொல்லும் அதிசயம் இந்த பதிவரிடம் கண்டேன். பெயர் என்னவோ எனக்குப் பிடித்த மாமா மகள் பெயராக இருக்கவும் ஒருமுறை வலைப்பக்கம் சென்று பார்க்க ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிறப்பு. நிச்சயம் இவரை பாராட்டலாம். 

இவரைப் பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்தமான பதிவர். மனதின் எண்ண ஓட்டத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அழகோ அழகுதான். மனிதத்தை எப்படி வானம்பாடிகள் அவர்கள் வேறு விதத்தில் படம் பிடிக்கிறார்களோ அதைப்போலவே மற்றொரு கோணத்தில் படம் பிடிக்கும் அழகு தனி. எனக்கு பிடித்த பதிவு எனது பதிவில் சுட்டி இருந்தாலும் இங்கே வேறு ஒரு பதிவு. இவரது எழுத்துகளால் தமிழ் தினமும் புதிய உதயம் பெறத்தான் செய்கிறது. 

கலக்கல் பதிவர். கலக்கல் பின்னூட்ட காரர். இறை பக்தி அதிகம் உடையவர். திருநெல்வேலி மண்ணுக்கு சொந்தக்காரர். என்னை பல விதத்தில் ஆச்சர்யம் அடைய செய்தவர். வாசிக்கும் அனுபவமே மிகவும் உறுதுணை எழுத்துக்கு. இவரது வாசிப்பு அபாரம். எழுத்துகள் களைகட்டும். பல இடங்களை சுற்றிப் பார்த்து அதில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக சொல்வதில் வல்லவர். இப்படித்தான் அழகாக சொல்கிறார் சித்ரா. கொஞ்சம் வெட்டி பேச்சு என சொன்னாலும் மிகவும் வித்தியாசமான பேச்சுதான். 

இவரை எப்படி விட்டுவிடுவது? இன்னும் நினைவில் இருக்கிறது இவரது இயற்கை நேசி எனும் வலைப்பூ. மிகவும் வித்தியாசமான சிந்தனைகாரர். பெயரை பார்த்ததும் எனக்கு கூட அட என தோன்றியது. தெகா என செல்லமாக அழைக்க அத்தனை அழகுதான். இவரது ஒவ்வொரு பதிவும் பல அருமையான கதைகள் சொல்லும். படம் பிடிப்பதிலும் வல்லவர். ஏன் இப்படி என கேட்கும் விதத்தில் பல விசயங்கள் மிகவும் அவஸ்தைப்படும். 

அடடா, இடுகைகளை பற்றி அல்லவா நான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் இடுகை இட்டவர்களை பற்றி அல்லவா எழுதி விட்டேன். ஆனால் அது அப்படித்தான். ஏனெனில் ஒரு இடுகை மட்டுமே ஒருவருக்கு அறிமுகம் தந்துவிடாது. ஒவ்வொரு இடுகையும் அவர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும். மனதில் நீங்கா இடம் பிடித்த மின்மினிபூச்சிகள் ஷக்திபிரபா. திருவண்ணாமலை மட்டுமல்ல பல பதிவுகள் மிகவும் சிறப்பு. 

இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. விட்டுப் போகாத வியாழனில் மனம் தொட்டு சென்றவர்களை நிச்சயம் எழுதுவேன். வலைச்சரத்தின் விதிமுறைக்கு அப்பாற்பட்டு எழுதி இருப்பின் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். 
மேலும் வாசிக்க...

கிட்டவே கிட்டாத புதன்

'பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது' இதுதான் மூதாதையார்கள் சொல்லித் தந்த பாடம். பூமியில் தாதுப் பொருட்கள் ஒரு அளவுக்குள் கொட்டி கிடப்பதை கண்டு கொண்டார்கள். எப்படியாவது அந்த பொன்தனை தோண்டி எடுத்துவிட முடியும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதே வேளையில் வானத்தை பார்த்தார்கள். அப்பொழுதெல்லாம் பூமிதான் மையம், மற்ற கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன என்கிற ஒரு அறிவுணர்வு இருந்தாலும் நம் மூதாதையர்கள் சூரியனை மையமாகவும், முதன்மையாகவும் வைத்து இருந்தார்கள் என்பது ஒரு உண்மையான விசயம். அப்படி வைத்திருந்தபோதுதான் புதன் என்கிற கோளானது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெப்பத்தில் தகதகத்து கொண்டிருப்பதாலும் புதன் கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் அவர்களின் ஒரு அறிவு. வெள்ளி என்றால் ஒரு நட்சத்திரம் என பொருள்படும். வெள்ளி மிகவும் வெப்பமான கோள் என்பதால்தான் அப்படி ஒரு பெயர் எனவும் கொள்ளலாம். அப்படித்தான் சில நேரங்களில் பெரும் பொக்கிசங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விடுகின்றன. அப்படிப்பட்ட அறிய பொக்கிசங்கள் பற்றிய அருமையான தொடரை எழுதிவரும் நண்பர் ரத்தினகிரி அவர்களின் அண்டத்தின் அற்புதங்கள் மிகவும் குறிப்பிட தகுந்தவை. 

நேற்றைய பொழுது இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான நாடுகளில் வாழும் இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கி இருந்த நேரம் எனலாம். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளலாம். விளையாட்டுகள் மட்டுமல்ல பல்வேறு திறன் படைத்த ஏ ஆர் ஆர் அண்ணன் எழுதும் ஒவ்வொரு விசயமும் மிகவும் சுவாரஸ்யமானவை. 

சில நேரங்களில் இவர்கள் எல்லாம் எதற்கு எழுத மறுத்து ஒதுங்கி விடுகிறார்கள் என நினைக்கும் போது வருத்தம் மேலிடத்தான் செய்யும், ஆனால் அதுதான் அவர்களின் நிலை என பார்க்கும்போது அதற்கான விசயத்தை அறிந்து கொள்ள இயலும். அப்படித்தான் மிகவும் அட்டகாசமான ஒரு பதிவு ஒன்று உண்டு. பத்மஜா தோழியின் பகவத் கீதை. நண்பர் மோகனின் மணல் சிந்தனை. நண்பர் மகுடதீபனின் எண்ணக் கலாபங்கள், மற்றும் சாவா கலை நெறி. 

நண்பர்கள் என்றால் ஒவ்வொரு நிலையிலும் வருவார்கள், போவார்கள் என்பதல்ல. எப்பொழுதும் இருப்பவர்கள் நண்பர்கள் என்கிற பாதையை காண்பித்த மன்னைகோசை அவர்களின் அழகிய பதிவு இது. அவர் இப்போது நம்முடன் இல்லை. எழுதுகிறோம் என்பதற்காக எழுதாமல் எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்கிற பாதையை காண்பிக்கும் அத்தனை அழகிய சொல்லாடலை விவரிக்கும் பாங்கு. ஜலசயனன் எனும் இவரது பெயரை தேடி இவரது எழுத்தை படித்தால் தமிழ் மணக்கும். 

தனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோசம் எதுவும் இல்லை. தன்னிடம் பல விசயங்களை கேட்பவர்களுக்கு உதவியதால் அதை எழுதினால் என்ன என எழுதிய கலை மிகவும் பாராட்டுக்குரியது. நம்மை பற்றி நமக்கு என்ன தெரியும் என்கிறார் இவர் தான் நிஷா. 

இவர் வலைப்பூவிற்கு வருவதற்கு முன்னரே எனக்கு பழக்கம். இவரது தமிழ் அத்தனை அருமை. இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தமிழ் பெற்றுக் கொள்ளும் பெருமை. சுந்தரா சகோதரியின் எண்ணங்களை அவரது வலைப்பூவில் சென்று காணலாம், இங்கும் காணலாம்.  கவிதை பற்றி மேலும் அறிந்து கொள்ள பல கவி சித்தர்களை அங்கே காணலாம். 

இத்துடன் நிறுத்துவதில்லை இந்த கிடைக்கவே கிடைக்காத புதன். வலைப்பூவில் என்னை ஒருமுறை அல்ல பலமுறை யோசிக்க வைத்த கிட்டவே கிட்டாத வலைப்பதிவர்களை நான் குறிப்பிடாமல் போனால் அது புதனுக்கு மட்டுமல்ல எனக்கும் அழகல்ல. விரைவில் அடுத்த பகுதி வரும். 


மேலும் வாசிக்க...

Wednesday, March 30, 2011

செவ்வாய் முடிந்தும் இறைவன்

சுத்தம் சுகம் தரும், சரி சரி சோறு போடும். பரிசுத்த ஆவி. நாம் சுத்தமாக இல்லாவிட்டால் நம்மை இறைவனிடம் ஒப்புவித்தல் கூடாது என்போர் உளர். இதில் இறைவனை எப்படியெல்லாம் அணுகவேணும் எனும் முறைகள் உண்டு. ஆனால் இப்படியும் கேள்வி எழுப்பலாம் என எழுதிய கல்வெட்டு 2005 வருடத்தில் இருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் விசயங்களுக்குள் முகவரி தொலைத்து வாழும் மனிதர்கள் தான் நாம். வெளிப்படையாக எதுவும் பேசினால் அநாகரிகம் ஆகிவிடும். கனியிருப்ப காய் கவர்ந்தற்று என சொன்னாலும் காய் தான் கனியானது என்பதுதான் உண்மை. 

இந்த வலைப்பூ பற்றி நான் குறிப்பிடாமல் போனால் அது சரிவராது. எத்தனை விசயங்கள் அலசப்படுகின்றன. இறைவன் என்பவருக்கு எதற்கு அடையாளம்? ஆனால் அடையாளம் கொடுத்து சுருக்கி கொண்டோம். கடவுள் வாழ்த்து எழுதிய திருவள்ளுவர் சற்று யோசித்து இருக்கலாம். வாழ்த்து பாடினால் தான் கடவுள் ஏற்று கொள்வாரா? இல்லவே இல்லை. மேலும் பெயர்களை குறிப்பிடாமல் (இந்திரன், ஆதி) விட்டிருந்தால் எந்த கடவுள் எனும் பிரச்சினை வந்திருக்காது. இதோ ஒரு அலசல் கண்ணபிரான் பார்வையில். 

இது ஒரு உலகின் புதிய கடவுள். மதம் சாராத இறைவன் ஒன்று இருந்தால் எத்தனை சுகமாக இருந்திருக்கும்? ஆனால் மதம் சார்ந்த இறைவன் என்பது மாற்ற இயலாத ஒன்றாகிப் போனது. இறைவன் எப்படியெல்லாம் ஒருவருக்கு தோன்றும் என மிகவும் அழகாகவே ஒரு சின்ன தொடர் ஒன்று இந்த வலைப்பூவில் உண்டு. 

அன்புதான் இறைவன் எனும் சொல் வழக்கு உண்டு. அதை புரிந்து கொள்ள சொல்லும் பல வலைப்பூக்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இது. 

உருவ வழிபாடு அவசியமா, அவசியம் இல்லை என்பதல்ல கேள்வி. எதற்கு வழிபாடு என்பதுதான் நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. சில பதிவுகளின் மூலம் பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சாதாரணமானவரின் வலைப்பூவில் இந்த உருவ வழிபாடு குறித்த சிந்தனை உண்டு. 

நிகழ்காலத்தில் சித்தர்கள் கூட இறைவனாக சித்தரிக்கப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த சித்தர்கள் பற்றிய ஒரு வலைப்பூ மிகவும் அருமை.  நூறு வயது வாழலாம் எனும் அறிவுரையை விட மிகவும் அதிகமாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. 

செவ்வாய் அன்று இறைவன் பற்றிய விசயம் இத்துடன் நிறைவுறுகிறது என சொன்னாலும் விடுபட்டு போன எத்தனையோ வலைப்பூக்கள் இருக்கிறது என்பதை நான் ஏன் மறுக்கப் போகிறேன்?!


மேலும் வாசிக்க...

Tuesday, March 29, 2011

செவ்வாயன்று இறைவன்

'செவ்வாய் வெறும் வாயாகிப் போனது' என சொல்வார்கள். காரணம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் உயிரினங்களை கொண்டிருந்ததாக ஒரு கணக்கு உண்டு. அது உண்மையா என்பதை நிரூபணம் செய்ய எந்த ஒரு ஆதாரமும் கிடைத்தபாடில்லை. அதுபோலவே இறைவன் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி இறைவன் எங்கே எனும் ஆதாரம் இன்னும் இங்கே கிடைத்தபாடில்லை என்றாலும் மனது வைத்தால் இறைவன் தெரிவார் என சொல்லலாமோ. இதோ கோவி கண்ணன் அவர்களின் இறைவன் பற்றிய பார்வை. அவரது வலைப்பூவின் பெயர் காலம். மதங்கள், மனிதாபிமானங்கள் என பலவித கலவையுடன் அவர் எழுதி வரும் விதம் பாராட்டுக்குரியது. இருமுறை தமிழ்மண விருதுகள் வென்றவர். 

சத்தியத்தின் வழி நிற்க தெரிந்த மனிதர்கள் இப்போதெல்லாம் மடையர்களாகவே கருதப்படுகிறார்கள். நேர்மை, நியாயம் என்பதெல்லாம் இன்றைய உலக சூழலுக்கு மட்டுமல்ல என்றைய உலக சூழலுக்கும் பொருந்தி வருவதில்லை. உண்மையாகவே இருப்பவரே இறைவனுக்கு உகந்தவர் என எடுத்துக் கொண்டால் இறைவன் அவதாரங்கள் கூட தோற்றுப் போய்விடும். வாய்மை எனப்படுவது யாதெனின் தீமை இலாத சொலல். யாருக்கு தீமை இல்லாமல் போக வேண்டும், யாருக்கு தீங்கு நேர வேண்டும் என்பதை எவர் தீர்மானிப்பது. அற்புத கதைகளுடன் ஒரு அழகிய பதிவுதனை படிக்க இதோ கபீரன்பனை அணுகுங்கள். அவரின் வலைப்பூவின் பெயர் கபீரின் கனிமொழிகள். 

மெய்ப்பொருள் என சொல்லும்போதே அதில் பொருள் ஒட்டி இருக்கிறது. பொருள் அல்ல இறைவன். இறைவன் பொருள் எனும் சமன்பாட்டில் ஒருபோதும் அமர்வதில்லை. இறைவன் நமது எல்லைக்கு உட்பட்டால் அது இறைவனே அல்ல. ஆனால் இதோ நூருல் அமீன் அவர்கள் தனது புல்லாங்குழல் வலைப்பூவில் அருமையாக எழுதி எனது எண்ணத்தை மாற்ற சொல்லும் வரிகள் தான் எத்தனை அழகு. ''இன்ன பொருள் என சொல்ல முடியாத ஆன்மாவின் இருப்பே அந்த ஆன்மாவை வழங்கிய ஒப்புவமை இல்லாத இறைவனின் இருப்புக்கு மகத்தான சாட்சியாக இருக்கின்றது. ஆன்மா என்னும் அகக்கண்ணைக் கொண்டு தான் நாம் அனைத்தையும் அறிகின்றோம் என முந்திய இடுகையில் பார்த்தோம். இமாம் கஸ்ஸாலி போன்ற ஆன்மீக அறிஞர்கள் நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த ஆன்மீக பார்வையை வழங்கும் ஆன்மா என்னும் அகக்கண்ணுக்கு வெளிச்சம் வழங்கும் சூரியன் என இறைவேதத்தை கூறுகின்றார்கள்.''

செவ்வாயன்று இறைவன் இன்னும் வளரும்.



மேலும் வாசிக்க...

Monday, March 28, 2011

திங்களன்று அதீத கனவுகள்

விடைபெற்று சென்ற ஆசிரியர் ராஜா ஜெய்சிங் அவர்களின் தந்தையாரின் மறைவு செய்தியை படித்தபோது திடுக்கென்று இருந்தது. மனதில் இனம் புரியாத வலி. அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இன்னும் நான்கு வருசம், ஐந்து வருசம் என சொல்லிக்கொண்டிருக்கும் எனது தந்தை மனதில் நடமாடுகிறார். பதின்மூன்று வருடங்கள் முன்னர் என்னை தவிக்கவிட்டுவிட்டு சென்ற எனது தாய் கண்களில் கண்ணீராய் நிறைகிறார். இந்த ஆசிரியப் பணி பொறுப்பினை எனது பெற்றோர்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். 

தற்போது எனது அதீத கனவுகள் எனும் வலைப்பூவில் இப்படித்தான் என்னை அறிமுகம் செய்து இருக்கிறேன். 

தமிழ்செயின்ட்ஸ் எனும் ஒரு இணையத்தில் முதல் முதலாக ஐந்து வருடங்கள் முன்னர் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த வலைப்பூக்கள் எல்லாம் சுத்தமாக எனக்குப் பரிச்சயமில்லை. அப்படி எழுதி கொண்டிருந்தபோது மற்றொரு இணையத்திலும் எழுதினேன். பின்னர் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது தவிர்த்துவிட்டு தமிழில் எழுத வாய்ப்பும் அமைந்தது. ஆனால் தமிழில் நேராக எழுதுவது என்பது இல்லாத காரணத்தால் சற்று நேரம் அதிகம் ஆனது. 

அப்பொழுது இலங்கை மகள் எனும் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளம் தான் முத்தமிழ்மன்றம்.  அங்குதான் எனது எழுத்து பயணம் முழுவீச்சில் பயணிக்க தொடங்கியது. நினைத்து பார்க்கவே சற்று பிரமிப்பாக இருக்கிறது. இணையங்களில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதி வருகிறேன். முத்தமிழ்மன்றத்தில் கிடைத்த நல்ல நண்பர்கள் மிகவும் அதிகம். இப்பொழுது சில வருடங்களாக முத்தமிழ்மன்றத்தில் எழுதும் நேரம் குறைந்து போனது. 

முத்தமிழ்மன்றத்தில் அடியெடுத்து வைத்த நாள் 4 அக்டோபர் 2006. நண்பர்களின் வேண்டுகோளினால் தொடங்கப்பட்ட வலைப்பூ நாள் 7 அக்டோபர் 2008. முத்தமிழ்மன்றத்தில் எழுதிய பதிவுகளை மட்டுமே சேகரிக்கும் வலைப்பூவாக உருவானது எல்லாம் இருக்கும் வரை. இந்த தலைப்பினை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் வரை தான் எல்லாம். எதுவும் இல்லாமல் போனால் அதனால் ஏற்படும் இழப்புகள் கூட பெரிதாக உணரப்படுவதில்லை. காலப்போக்கில் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, மாறுதலுக்கு உட்பட்டு உலகம் புது வேகத்தில் பயணித்து கொண்டேதான் இருக்கிறது. எல்லாம் எழுதிவிட்டார்கள் என எவரும் இறுமாந்து இருக்கவில்லை. சிந்தனைகள் காலந்தோறும் புதிப்பிக்கப்பட்டு  கொண்டேதான் இருக்கின்றன. 

இப்படியான இலவசமான வலைப்பூவினை பணம் கட்டி ஒரு தனித்தளமாக மாற்றியது ஒரு முட்டாள்தனமான செயல்பாடு என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்று கருத்து இல்லை. எதற்காக செய்தேன், ஏன் செய்தேன் என நினைக்கும்போது தனிப்பட்ட அங்கீகாரம் என்பதற்கா எனவும் புரியவில்லை. இப்படித்தான் ஒரு கல்விக்கென ஒரு தளம் ஆரம்பித்தது கவனிப்பாரற்று கிடக்கிறது. தினமும் ஏதேனும் எழுத நினைத்தாலும் மனம் ஒத்துழைக்கவில்லை. நேரம் தடுமாறி கசிகிறது. 

சில மாதங்களாக எனது மனதின் எண்ணமெல்லாம் எங்கு எங்கோ சென்றுவிட எழுதுவதன் அவசியம் அனாவசியமாகிப் போனது. வாசித்தலில் மனம் நிலைத்திட எழுதிட எழுத்து புரிபடமால் போனது. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தபோதுதான் சீனா ஐயாவிடம் இருந்து வலைசரத்திற்கு ஆசிரியராக பணியாற்ற ஒரு அழைப்பு. வாழ்க்கை பல நேரங்களில் எதிர்பாராத விசயங்களை திணித்து திக்குமுக்காட செய்துவிடுகிறது. நன்றி சீனா ஐயா. வலைச்சர குழுவினருக்கும் நன்றிகள், வலைச்சரத்தில் பணியாற்றி சிறப்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். சீனா ஐயா லண்டன் வந்திருந்தபோது அவரை நான் பார்க்க இயலவில்லை. நேரத்தை காரணம் குறை கூறி எனது சோம்பேறித்தனத்தை மறைக்க விருப்பமில்லை. நான் இந்தியா வந்தபோது எந்த நண்பர்களையும் சந்திக்க முயற்சி எடுக்கவும் இல்லை. நான் ஒரு நன்றி உடையவனா என பல நேரங்களில் கேள்வி எழுந்தாலும் 'இதுதான் நான்' என்னை ஏற்று கொள்ளும் பக்குவம் உடையவர்கள் மட்டுமே எனது நண்பர்கள் எனும் அகங்காரம் இருப்பது உண்டு. 

எனது வலைப்பூவின் பெயரை பணம் கட்டி மாற்றினேன். அப்பொழுது அதீத கனவுகள் எனும் தமிழ் பெயரை பரிந்துரைத்தவர் சுரேஷ் எனும் சக பதிவர். நன்றி சுரேஷ். இவரை நான் எடின்பரோவில் சந்தித்தேன். அருமையான உபசரிப்பினை தந்தார். ஆனால் அவர் லண்டன் வந்திருந்தபோது சந்திக்க இயலவில்லை. இவர் பாராட்டிய  அந்த பாராட்டுக்குரிய தொடர் ஏனோ வெகுவேகமாக எழுத இயலவில்லை. 

எழுதுவதன் அவசியம் என்பதை விட எப்படி எழுதவேண்டும் என்பதில் எனக்கு சில வரைமுறைகள் உண்டு. வார்த்தைகள் தரும் வலி மிக மிக அதிகம். அந்த வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என திருவள்ளுவர் மிகவும் அற்புதமாக சொல்லி இருப்பார். அதைவிட எங்களது கிராமத்தில் சொல்வார்கள், 'வார்த்தையை சிந்திட்டா அள்ளமுடியாது' என்பார்கள். எனது தந்தை 'பேசுனா கூட பரவாயில்லை, எழுத்தில வைக்கிறப்போ ரொம்ப கவனமா இருக்கனும்' என்பார். பலமுறை தவறி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். 

நான் இங்கே இருநூற்றி பதினாறாவது ஆசிரியராக பொறுப்பினை ஏற்று கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். எனது தந்தை ஒரு ஆசிரியர். எனது தாய் மேலும் இரண்டு வகுப்புகள் படித்திருந்தால் அவரும் ஒரு ஆசிரியராக இருந்து இருப்பார். எனக்கு ஆசிரியராக பணியாற்றுவது என்றால் கொள்ளைப்பிரியம். தெரிந்ததை சொல்லித்தருவதைப் போல மிகவும் சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை. இந்த ஆசிரியர் எல்லாம் எவர் எவர் என்பதை பற்றி கூட ஒரு தொடர் எழுதியது உண்டு.  

தம்பி நீ ஆசைப்படு என தைரியம் தரும் வாழ்க்கை இது. ஆசை மட்டும் இல்லாது போனால் இவ்வுலகம் ஜனனம் கண்டிருக்க முடியாது என்பார்கள். உயிரற்ற பொருட்கள் உயிர் கொள்ள ஆசைப்பட்டன. உயிர் கொண்டதும் நிலை கொள்ள ஆசைப்பட்டன. இல்லாத ஒன்றை இருப்பது போன்ற ஆசைகள் வடிவம் கொண்டன. சின்ன சின்ன ஆசைகளுக்குள் பேராசைகள் ஒளிந்திருக்கும் வண்ணம் இருப்பதுதான் வாழ்க்கை. 

கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நான் எழுதுவதை கவிதைகள் என ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் வெறும் வார்த்தைகள் என அடையாளம் சூட்டினேன். அப்படிப்பட்ட வெறும் வார்த்தைகளில் படிக்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வர செய்யும் கவிதைகள் சில உண்டு. 

எழுதும்போது இறைவனை பற்றி குறிப்பிடாமல் போனால் எனது எழுத்துகள் எப்போதும் நிறைவு பெறுவதில்லை. இந்த இறைவன் யார் என்பதில் எனக்கு எப்பொழுதும் இரு வேறு கருத்தில்லை. ஆனால் வார்த்தைகளில் வைத்திடும்போது பலமுறை தடம் புரண்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். விவரிக்க முடியாத பேரானந்தத்தை வார்த்தைகளில் சுருக்கியது எனது முட்டாள்தனமே அன்றி வேறு எதுவும் இல்லை.  

காதல்! காதல் ஒரு முறை வரும் என்பதைவிட ஒவ்வொருவரின் மீதும் வரும் எனும் பைத்தியகாரத்தனமான எண்ணங்களை கவிதைகளில் வடித்து வைப்பது எப்படி சரியாகுமோ என தெரியாது. ஆனால் காதல் புரிந்து கொள்ளும் என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருக்கிறேன். 

நாவல்கள் படைத்த ஒரு வறட்டுத்தனமான போதை அதிகம் உண்டு. ஆனால் அந்த நாவல்களையே விமர்சிக்கும் சக்தியும் மனதில் உண்டு. கண்ணீர் விடவைக்கும் கதையும் உண்டு. 

நுனிப்புல் பாகம் 1 எனும் முதல் நாவலை வெளியிட உதவிய நண்பர் இரத்தினகிரி மற்றும் அவரது நண்பர் கணேஷ் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை சொல்வதிலும், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பை வெளியிட உதவிய தம்பி செல்வமுரளி மற்றும் அவரது நண்பர் இஷாக் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும், தொலைக்கபட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த வலைப்பூ எனும் சோலையில் எனக்கு பிடித்த பதிவுகளும் உண்டு. இதோ இவர்தான் சிறந்த மாணாக்கன் என ஆசிரியர் ஒருவரை சொன்னால் மற்ற மாணவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் இல்லை என நினைத்து கொள்ள கூடாது என்பதுதான் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அறிந்து கொள்ளவேண்டியது எனும் பாடம் எனக்கு ஒரு ஆசிரியர் சொல்லித் தந்தது. 

குருகுல வாசம், ஆசிரியர் எனும் பொறுப்பிற்கு மரியாதை என்பது எல்லாம் தொலைந்து கொண்டே வருகிறது என குறைபட்டு கொள்வோர் உண்டு. ஆனால் இங்கே சக பதிவர்களுக்கு ஆசிரியர் பொறுப்பு தந்து கௌரவிக்கும் வலைச்சரம் பூத்து குலுங்கட்டும். சற்று நேரம் இளைப்பாறி செல்லும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும். 

பற்றினேன் நீ வழி காட்டுவாய் என
போற்றினேன் நீதான் யாவும் என

கற்றது எவையென கேட்டால் 
மறந்தவை கணக்கில் இல்லை

சுற்றி பார்க்கும் வாய்ப்புதனில்
கிட்டுவது எத்தனை எத்தனையோ 

சுட்டிவிடும் முயற்சியில் கொட்டிவிடாது 
கெட்டியாக பிடிப்பது எதுவென்பேன்

தட்டி தருவதால் வளரும் எழுத்து
பரவட்டும் உலகம் செழித்து. 

இது எனது அதீத கனவுகளின் மிங்கி மிங்கி பா. 






மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது