வியாழன் ஸ்வரம் 'க'
➦➠ by:
கதை,
தேவகாந்தாரி,
ஸ்வரம் 'க'
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. புல் அங்க குழல், இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதி இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி
குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
3. காந்தாரம்: காந்தர்வ கான சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் ஸ்வரம் காந்தாரம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "க'
காந்தாரம் தரும் சுகம் போல், எழுத்தில் கதைகள் பலவித உணர்வுகள் கலந்து சுவாரசியம் தருகின்றன.இன்றைய கதை காந்தர்வர்கள் யாரென்று பார்க்கலாம்.
தோல்வி என்பது தடையேயன்றி முடிவல்ல என்பதை தெளிவாக உணர்ச்சிகள் கலந்து மனம் உருகும் வண்ணம் அன்புடன் அருணா சொல்லியிருக்காங்க.
மத்தவங்க அனுபவங்கள், பிறர் படற கஷ்டங்கள் பார்த்தாவது நாம் நம்ம
தவறுகளை திருத்திக்கணும்கறதை தன் பூ வனத்துல ஜீவி வெளிப்படுத்தி இருக்கார்
ஒரு குழந்தையோட வெள்ளை மனதை ஒரு சின்ன விஷயத்தை வச்சு அப்படியே படம் பிடிச்சு காமிச்சுருக்கார், எதுவுமே தப்பில்லைன்னு நினைக்கற சுனில்
குழந்தைக்கு ஏங்கற மனைவியும் அதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்கற கணவனையும் தெளிவா தன் கதையில் படம் பிடிச்சுக் காட்டி இருக்கார் நாறும்பூ
இவர் எழுதி இருக்கற முகம் சிறுகதையில் தசராவையும் சரஸ்வதி பூஜையையும் நேரில் கொண்டு வந்துருக்கார்
சொல்லாமல் சுமக்கும் காதல் பற்றி கதை பாத்திரங்களோட நினைவலைகளை மீட்டிப் பார்க்கிறார் ஷைலஜா
பிச்சைக்காரனாக இருந்தால் என்ன பைத்தியக்காரனாக இருந்தால் என்ன?
அவர்களுக்கும் மனதைப் பிசையும் நிகழ்வுகள் வாழ்வில் உண்டு.அவர்களுக்கும் உணர்வுகள் உண்டுனு தன் கதையில தந்தி மீட்டி இருக்கிறார் கிருஷ்ணகுமார் ஆதவன்.பைத்தியக்காரனின் ஸ்வெட்டர் மனதைப் பிசையும் படைப்பு
எப்போம்மா வருவீங்கன்னு கேக்கற ஒரு குழந்தையோட ஏக்கத்தையும் தாயின் தவிப்பையும் தன் படைப்பில் முழுமையா கொண்டு வந்து நிறுத்தி இருக்கார் புதுமையான ரங்கா.
இவர்கள் மேல் பரிதாபம் தேவையில்லை.இவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தன் பதிவின் மூலம் நாதம் எழுப்பியுள்ளார் எக்ஸ்பர்ட்சத்யா.
இனிய உளவாக இன்னாத கூறல் என்பதை நினைவுபடுத்தும் வண்ணம் இவர் கதை உள்ளது. சொல்லும் கொல்லும் என்பதை தன் படைப்பின் மூலம் உணர்த்துகிறார் இந்த மழை மேகம்.
மெல்லிய சோகம் இழையோடும் ஒரு காதல் கதை எழுதணும்னா அதுவும் மனதைப் பாதிக்கறாப்புல எழுதணும்னா அதுக்கு ஒரு திறமை வேணும்.
சோகமா வாசிச்சாலும் சில ராகங்கள் சுகமானதும் கூட.அப்படித்தான் இந்த வானவில் மனிதர் தன் பொன் வீதியை வாசிச்சுருக்கார்.
விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு ஆசிரியரின் தூங்க இயலாத சூழ்நிலையை
கதையா படைச்சு அதில் இயலாமை உணர்வைக் கலந்து தந்திருக்கிறார்
பாலமுருகன்
நம்மைச் சுற்றி நடப்பவைகள் நம் மனதை பாதித்தும் நாம் அதை எப்படி அலட்சியம் செய்து சுயநலமிகளாக செல்கிறோம்னும் அதுக்கப்பறம் குற்ற உணர்வு தலை தூக்கறதையும் தன் படைப்புல நல்லா கொண்டு வந்திருக்கார் இந்த நிசப்த பதிவாளர்.
இப்பிடிக் கூட ஒரு கதையை எழுத முடியுமா? பிரமிப்பா இருந்தது.எந்த அளவு கற்பனைத் திறன் இருந்தா இப்பிடி யோசிக்கத் தோணும்?எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தோணலை.அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க இந்த 'தந்தை சொல்' கதையைப் பத்தி.
வாழ்க்கைல நடந்த நிகழ்வுகள் சில படைப்புகளுக்கு காரணமாகின்றன.ஆனால் அதை சுவை பட எழுதும்போதுதான் அது நல்ல படைப்பாகிறது.அப்படி ஒரு படைப்பை இங்க கொடுத்திருக்கார் ஒளியுடையோன்
இந்த கதை காந்தர்வர்களோட படைப்புகளை எல்லாம் படிச்சுட்டு காந்தார கான சுகம் கிடைக்குதான்னு சொல்லுங்க.
தேவகாந்தாரி : 29 ம் மேளகர்த்தா ராகமான சங்கராபரணத்தின் ஜன்ய ராகம்
தேவகாந்தாரி.நவரசங்களுள் வீரம் சம்பந்தப் பட்ட ராகம்.தேவ கந்தர்வ கானமாக அமைந்த ராகமானதால் தேவ காந்தாரி ஆனது.
க்ஷீர சாகர சயனா பாடல:
download
Artists: NRamani


