07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 7, 2007

வட்டார வழக்கு பதிவுகள்.....

சென்ற இரண்டு நாளாக அலுவலகப் பணி அழுத்தம் காரணமாய் இங்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியான தமிழ் இடத்துக்கு இடம் பலவகையான மொழிவழக்கு பிரயேகப்படுத்தபடுகிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நடையை வைத்து அவர்களின் சொந்த ஊரை அறியப்படும் பொழுது பிறக்கும் சந்தோஷம் அளப்பறியது அல்லவா?? பேசுவதில் இயல்பாக வரும் வட்டார வழக்கு மொழி எழுதும் பொழுது அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. நானும் பலமுறை முயன்று தோற்று இருக்கிறேன். அந்த வட்டார வழக்கை எழுத்துக்களில் கொண்டு வரும் முயற்சிகளில் சிலருக்கு கைவந்த கலையாக அமைகிறது.

இப்பதிவில் வட்டார வழக்கில் புகுந்து விளையாடும் சில பதிவர்களின் சுவராசிய பதிவுகளை பார்க்கலாம்.

நல்லா இருங்கடே'ன்னு எப்பவுமே சொல்லுற நம்ம அண்ணாச்சியோட தன்னோட படிப்பை பத்தி எழுதுன பதிவு.

திருநெல்வேலி பாணியே அப்பிடியே எழுத்திலே கொண்டு வந்துருப்பார்.


அந்த வட்டார வழக்கிலே எழுதும் மற்றுமொரு பதிவர் ஜியின் தொடர்கதை ஒன்று.

கதாப்பாத்திரங்களின் வசனபிரயோகங்கள் அனைத்தும் நெல்லை பாணி.


கோவை கொங்கு வட்டார வழக்கிலே அசத்துறது'க்கு வேறயார்... நம்ம கொங்கு ராசா'வின் அசத்தல் அழகு.


நம்முரு மதுரை வட்டார வழக்கில் எழுதும் வரவனையின் பதிவு

தருமி ஐயாவின் இப்பதிவு


ஈழத்து தமிழில் சமிபத்தில் நான் படித்த பதிவுகள்

கானாபிரபா'வின் மண்ணெண்ணையில் பார்த்த படங்கள். கடைசி வரியில் கண்கலங்க வைத்து விட்டார்.


சிநேகதியின் கானமும் கதையும் குரல் பதிவு.


சகோதரி தூயா'வின் நானும் என் ஈழமும் தொடர்

சயந்தனின் ஆராய்ச்சி பதிவான காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன தொடர்பு.

ஈழத்து தமிழ் பேச்சு வழக்கை மதுரையிலிருந்த அகதிகள் முகாமில் கேட்டப்பொழுது சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே புரியவில்லை. அவர்களிடமே அதுக்கு என்ன அர்த்தமின்னு கேட்டு நமது சொல்வழக்கு அவர்களுக்கு சரிவர தெரியாதனாலும் ஆங்கிலத்தில் எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

இன்னமும் பல சுவாரசியமான பதிவுகளை நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, June 4, 2007

எல்லாருக்கும் வணக்கமுங்க....

என் இனிய தமிழ் பதிவர்களுக்கு நாந்தான் உங்கள் பாசக்கார பய இராம் எழுதுகிறேன்னு பாரதிராஜா எப்க்ட்'லே பில்ட்-அப் எல்லாம் கொடுத்து எழுதமுடியாதுங்க. நம்ம மண்டையிலே இருக்கிற கொஞ்சகாணு பச்சை மண்ணிலே என்ன செய்யமுடியுமோ அதே மட்டுந்தானே செய்யமுடியும், சட்டி செய்யுற அளவுக்கு மண்ணை வைச்சிக்கிட்டு பானையா செய்யமுடியும். எதுக்கு இப்பிடி நீட்டி மொழங்குறன்னா வலைசரமின்னு ஒரு பதிவு. அதுக்கு ஒரு வாரத்துக்கு ஆசிரியர்'ன்னா கெத்தா இண்டரோ கொடுக்கவேணாமா? கொடுக்கிற அறிமுகத்திலே இவ்ங்கிட்டே என்னோமோ விஷயமிருக்குன்னு நம்ப வைக்கக்கூட வேணாம், அட்லிஸ்ட் சந்தேகப்பட வைக்கலாம் இல்ல.

இன்னவரைக்கும் நான் எப்பிடி வலைபதிய ஆரம்பித்தேன்னு யாருக்கிட்டேயும் சொல்லவே இல்லை. அதுக்கு எங்களுக்கு தெரிஞ்சு என்னா ஆகப்போகுதுன்னு நீங்க முணுமுணுக்கிறது என்னோட மானிட்டர் ஸ்பீக்கர் அலறுது. அப்பிடியெல்லாம் வலிக்கிறமாதிரியெல்லாம் நடிச்சா நாங்க விட்டுருவோமா?

வாங்க பாஸ்! என்னோட வலைபதிய வந்த வரலாற்றை சொல்லுறேன்.

2005 டிசம்பர் மாசம் நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பத்தி கூகுளிலே தேடிட்டு இருந்தோப்போ எதோச்சையா ஷிரிஷிவ் பதிவை படிக்க நேர்ந்துச்சு, அவரு அதிலே உலக அதியசத்தை பத்தி எழுதிவைச்சிருந்தார், அதே படிச்சி பார்த்ததும் நம்ம ஊரு கோவிலை ஒலக அதிசயமா ஆகிறக்கூடாதுன்னு நடக்கிற வெளிநாட்டு சதியோ இல்ல உள்நாட்டு சதிக்கோ அவரும் துணைப்போறார்'ன்னு நான் போய் கருத்தை சொல்லிட்டு வந்தேன். அப்பிடியே அந்த பதிவிலே இருந்து மோகன்தாஸ், பினாத்தலார், கொழுவின்னு யாரல்லாம் பின்னூட்டம் போட்டுருந்தாங்களோ அவங்க பதிவுக்கெல்லாம் போய் படிச்சுப்பார்த்துட்டு மதியோட இந்த சுட்டிதான் முதலிலே அறிமுகம் ஆச்சு. ஓய்வுநேரங்களிலே ஒவ்வொரு பதிவா படிச்சிட்டு இருப்பேன். எவ்வளவு நாள்தான் படிச்சிட்டே இருக்கிற நாமெல்லும் தமிழிலே எழுதனுமின்னு என்னத்தயோ டவுண்லோட் பண்ணி இன்ஸடால் பண்ணுனேன். நாமே உபயோகப்படுத்துற லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு அப்போதான் தெரிஞ்சது. ஆபிஸிலே அதுக்காக சண்டைப்போட்டு ஒரு (வீணாப்போன) விண்டோஸ் சிஸ்டத்தையும் வாங்கி வைச்சிட்டு வலைப்பதிய ஆறு மாசம் ஆகிப்போச்சுங்க.

ஏண்டா இப்பிடி ஆரம்பத்திலே அறிமுகம் கொடுக்கிறேன்னு அறுவையே போடுறேன்னு இன்னொருதடவையும் ஸ்பீக்கர் அலறிருச்சு. ;)

நம்ம மக்கள்ஸோட சுவராசியமான அறிமுகத்தை பற்றி பதிவுகளின் சுட்டிகளை பாருங்க. அதுக்குள்ளே அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.


கொங்கு ராசா'வின் கலக்கல் அறிமுகம்

ஆசிப் அண்ணாச்சியின் அறிமுகம்

'ஓ'மப்பொடியோட அறிமுகம்

தடாலடியாரின் அறிமுகம்

(பதிவிலே போய் டைரக்டர் கெளதமா'ன்னு கலாய்ச்சு வைக்க, அவரோ அதை சீரியஸின்னு நினைச்சிட்டு தனிமெயிலாம் அனுப்பி வைச்ச நல்லவரு... )

கைமண் அளவுதான்னு சொல்லிட்டு கடலளவு விஷயத்தை எழுதும் ஜெகத்'ன் அறிமுகம்

கல்யாணம் ஆனதும் பதிவே எழுதாத துபாய் இராஜா'வின் அறிமுகம்

தன்னடக்கத்தின் ஒட்டுமொத்த உருவம் CVR'வின் அறிமுகம்

கதையோ,கவிதையோ எல்லாத்திலேயும் அசத்தும் ஜி'யின் அறிமுகம்

மிகவும் சமிபமாய் வந்து கவிதைகளில் கலக்கும் காயத்ரியின் டிபிகல் அறிமுகம்

அடுத்த பதிவிலே இன்னும் சில சுவராசியமான பதிவுகளை பார்க்கலாம்.

பாபா வேலை எவ்வளோ கஷ்டமின்னு இப்போதாய்யா தெரியுது.
மேலும் வாசிக்க...

வெட்டிப்பயல், அய்யனார், இராம்

நேரமின்மையால் முந்தைய வாரத்தில் அறிமுகப்பதிவு எழுத விட்டுப்போய்விட்டது. அய்யனார் மன்னிக்க :)

வெட்டிப்பயல் மே 21ஆம் தேதி தொடங்கும் வாரம் நிறைந்த வேலைச் சுமைகளுக்கிடையிலும் நிறைவான வாரமாக சரம் தொடுத்திருந்தார். பொருளடக்கம்வாரியான பரிந்துரைகள் என்றில்லாமல், பதிவர் வாரியான இடுகைகளாக பரிந்துரைத்ததில் பதிவர்களாக இருந்த எழுத்தாளர்கள் வரைக்கும் எழுதி பல்வகைப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.

படிமக் கவிதைகள், ஆங்கிலப்படங்கள் என்று கலக்கிக் கொண்டு பாசக்காரக் குடும்பத்தில் பங்காளியாக இருக்கும் அடர்கானகப் புலி அய்யனாரை வலைச்சரம் தொடுக்க அழைத்த முதற் காரணமே, அவரது பரந்துபட்ட வாசிப்பே. எங்கள் கணிப்பை மெய்ப்பிப்பது போலவே, திரட்டிகளில் இல்லாத பல்வேறு பதிவுகளையும், இடுகைகளையும் பல்வகையாகப் பிரித்துப் படைத்து ருசிகரமான விருந்தாக படைத்துவிட்டார்.

அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியராக வரவிருப்பது வ.வா.சங்கம் புகழ் மதுரைக்காரர் இராம். ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் புதிய இணைய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொணரவும் இராமை வருக வருக என்று அழைக்கிறோம்..
மேலும் வாசிக்க...

Sunday, June 3, 2007

விடைபெறல்







வலைச்சரத்தின் மூலமாய் என் பார்வைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆரம்ப பதிவில் சொன்னது போல சமீபமாய் படிக்க துவங்கியிருப்பதால் பெரும்பாலான பதிவர்களை இன்னும் கண்டறியவில்லை.என் ஒற்றைப் பார்வையில் இவ்வுலகில் தட்டுப்பட்ட இடுகை மற்றும் பதிவர்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.பதிவுகளை படித்த நபர்களின் எண்ணிக்கை எனக்கு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் (குறிப்பாய் மின்னுதுமின்னல்) எழுதப் பணித்த வலைச்சரம் ஆசிரியர் பொன்ஸ் க்கும் மிகுந்த அன்பும் நன்றிகளும்.

திட்டமிட்டபடி ஐந்து இடுகைகளை பதிவிக்க முடிந்தது.செறிவாய் வந்திருந்ததா என தெரியவில்லை.ஐந்து இடுகைகளும் ஒற்றை சாளரமுறையிலே எழுதப்பட்டது ஒரு குறையாகப் படுகிறதெனக்கு இருந்தும் திட்டமிட்டபடி செயலாற்றியதில் மகிழ்ச்சி.

எதிலேயும் திருபதியடையா சிக்கலான மனதின் நீட்சி இன்னும் செறிவாய் எழுதியிருக்கலாமோ என விடைபெறும் கணங்களில் யோசிக்கத் தவறவில்லை.
மேலும் வாசிக்க...

ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்

தூரன் குணா - கொரங்காடு
வலைக் கவிகள் பதிவில் விடுபட்ட செறிவான கவிஞர்.அபூர்வமாய் வலைபதியும் குணா தற்போது தன் கவிதைகளை தொடர்ந்து பதிவிக்க தொடங்கி இருக்கிறார் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இவரின் சில கவிதைகள் ப்ரியத்தின் பொங்குகள், பாழை அடைகாப்பவன் நீ , கூடற்ற பறவை


காயத்ரி
பாலைத்தினை என இலக்கியமாய் உள்ளே வந்திருப்பவர் ஒரே மாதத்தில் 40 இடுகைகளுக்கு மேல் எழுதி தள்ளிவிட்டார் .இவரின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் விமர்சனம் படித்து இன்னொரு நகைச்சுவை பதிவர் என முத்திரை குத்தும்முன் கவிதைகளாய் எழுதி இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.எல்லா கவிதைகளும் நன்றாய் வந்திருக்கிறது.புறக்கணிப்பின் வலிகள், மரபுடைக்க முடியாமையின் துயர் மிகச் சரியாய் சொல்லப்பட்டிருக்கிறது.வந்த உடனேயே பரவலான கவனம் பெற்றிருக்கிறார்.

அருண் சிவா - குட்டிப்பிசாசு
அட்டகாசமான பேர் :) உள்ள நுழைந்த உடனே நேராய் கிடேசன் பார்க்கில் துண்டு போட்டு இடம் பிடித்து பாசக்கார குடும்பத்தின் கொ.ப.செ பதவியையும் வாங்கிட்டார். நகைச்சுவை,திரைப்படம்,கவிதை ன்னு இந்த பிசாசு நல்லா எழுதுது serigo leone பற்றிய இடுகை நல்லா வந்திருந்தது.கம்மங்க்கூழு வித் கவுண்டமணி செம காமெடி
எழுத்துருவ மாத்து பிசாசு.


கீர்த்தனாவின் - +ள் விகுதி
உள்ள வரும்போதே நண்பர்கள் புடைசூழ வந்திருக்காங்க பெரிய பதிவர்களின் தோழியா இருப்பங்கன்னு நெனக்கிறேன்.இவங்களோட எண் முறை இல்த்திரனியல் புதுமையான அபூர்வமான இடுகை.கரப்பான், ஆண் சிலந்திகள் , போன்ற கவிதைகள் சிறப்பாக இருந்தது.

கதிரவன் - வாழ்க்கைப் பயணம்
தன் பயணங்களை பகிர்ந்து கொள்ளும் கதிரவனின் இப்பதிவு செறிவாய் இருக்கிறது.இஸ்ரேல் பற்றிய வரலாற்றுப் பூர்வமான தகவல்களை இங்கே பெறலாம்

கோகிலவாணி - துவக்கம்
குழந்தைகளுக்கான படைப்புகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் வலைப்பதிவில் இல்லை.அக்குறை தீர்க்க குழந்தைகளுக்கான பாடல்களை சுமந்து வந்திருக்கிறார்.சிங்க ராஜாவும் சின்ன பெண்ணும் , கோழியும் மயிலும் இந்த பாடல்கள் இனிமையாக் இருக்கிறது.
பொன்ஸ் இவங்களை கவனிங்க குழந்தைகளுக்கான் வலைத்தளத்துல பயன்படுத்திக்கலாம் :)

சிமோன்தி
இந்த வலைப்பக்கம் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை என நினைக்கிறேன் மூன்று கவிதைகளும் மிக சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.காலத்தின் மீது மரணத்தால் எழுதுதல்,கனதியான பொழுதுகளில் அழியும் இருப்பு

திரைவெளி - மணிதர்ஷா
இவரது ஒசாமா திரைப்படபதிவு நன்றாக வந்திருக்கிறது.சரிநிகர் இலக்கிய இதழில் வெளிவந்த விமர்சனம் மிகச் சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.மற்ற இரண்டு படங்களும் two woman , turtles can fly வெகு சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.இவரின் வரவு என் போன்றவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.

தனிமடலில் சிமோன் தி மற்றும் மணிந்தர்ஷா பதிவின் சுட்டிகளை தந்த ABV VBA (என்ன பேர்னு கூட தெரியலிங்க மடல் ஒண்ணு வந்தது) க்கு நன்றிகள்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது