07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 3, 2010

யார் கடவுள்?? வலைச்சர செவ்வாய்






தென்னை மரத்தைப் பார்த்து வாழை மரம் என்று சொல்லும் குழந்தையை எப்படிக் கண்டிப்பது? அதன் பெயர் தென்னை மரம் என்று உனக்குத் தெரியுமா? நீதான் அதற்குப் பெயர் வைத்ததா? என்று அந்தக் குழந்தை திருப்பிக் கேட்பின் என்ன பதில் சொல்வோம்?.

யாரோ பெயர் வைத்தார். யாரோ வழி மொழிந்தார். தலைமுறை தலைமுறையாக அதன் பெயர் தென்னை மரம். பெயரில் என்ன இருக்கிறது?.

கூச்சல்களை ஒழுங்குபடுத்தி, வடிவம் கொடுத்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் கொடுத்து அதற்கும் மொழி என்று பெயர் வைத்து இது என் மொழி என்று சிலாகித்து

“ஏய் அது தென்னைமரந்தான், இந்தா பார் வாழை மரம் இப்படி இருக்கும் புரிஞ்சிதா?” என்று நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மீண்டும் குழந்தையின் மண்டையில் ஏற்றிப் பெயர் கற்றுக்கொள்ளும் பண்டிதனாக்குகிறோம்.

கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கையும் ~ மறுப்பும் இதை ஒட்டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒன்று தென்னைமரத்தை தென்னை மரமென்றே ஏற்றுக்கொள் அல்லது அது என்ன என்று நிரூபி!. ஆயினும் கடவுளோ, தென்னையோ இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் எனக்குத் தெரியவில்லை. நல்ல காலம் அவற்றிற்கென ஏதும் மொழி இல்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சரி, கடவுள் நம்பிக்கை பற்றி நான் படித்ததில் என்னைக் கவர்ந்த ஒரு பக்குவ பக்கம் திரு.ஏவிஎஸ் அவர்களின் ஞாயிறு தபால். படியுங்கள். தேடல்களுடன் அங்கே நீங்கள் ஆரோக்கியமாய் விவாதிக்கலாம். ஆனால் அந்த இடுகை ஏன் எழுதப் பட்டது? தூண்டிய பதிவர் யார்? என்ற கேள்விக்குள்ளும் நீங்கள் செல்வீர்கள் என்றால் நிச்சயம் ஒரு விஷயத்தை எப்படி தெளிவாக அணுகலாம் என்பது உங்களுக்குப் புரியவரும்.

மேலோட்டமாய் படித்து அல்லது நமது அடையாளங்கள் சார்ந்து பின்னூட்டம் இடுவதை விட எல்லாவற்றையும் கழட்டி வைத்துவிட்டு என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தால், நம்பிக்கைகள் பற்றிய உங்கள் புரிதல்கள் உங்களுக்கு கைகூடும். :))

ரைட்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



புலனாய்வு பத்திரிகைகள் நீங்கள் விரும்பிப் படிப்பதுண்டா எனில் வழிப்போக்கனின் கிறுக்கல்கள் என்ற வலைப் பூவில் திரு.யோகேஸ்வரன் அவர்கள் எழுதிய இந்த இடுகை நீங்கள் படிப்பது நலம். :-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புலனாய்வு பத்திரிகைகள் படிக்காமல் வெறும் இணையம்தானா? :-) எனில் பதிவுலகம் பற்றி சுவாரஸ்யமாக திரு.போகன் ~ அரிவை அரனில் எழுதியுள்ள இந்த இடுகை வாசிக்கலாம்.:) அப்படியே அவரின் இடும்பைக் கூர் என் வயிறே என்பதையும், மர்மயோகி அகத்தியர் என்ற தொடரையும் படித்துப்பாருங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்மைலிகளில் உணர்வுகளைத் தெரிவிக்கும் இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பை வலியுறுத்தும் திரு.மோகன் ~ மோகனச்சாரலில் எழுதிய அக்கா மகனுக்கு ஒரு பிறந்த நாள் கடிதம். நம்மில் எத்துனைப் பேருக்கு இது போன்று ஒரு கடிதம் வந்திருக்கும்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




நிறைய பெண் குழந்தைகளுக்கு அப்பா ஹீரோதான். ஆனாலும் அனாமிகா துவாரகன் ~ அப்பாவை ஹீரோவாக நினைப்பதில் உள்ள சிக்கல்கள் பத்தி ஒரு இடுகை எழுதி இருக்கிறார். நிறைய ரெளவுத்திரமும், ஆதங்கமும் படக்கூடிய ஒரு கோபக்கார சகோதரி!.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முடிவாக காட்சியில் ~ திரு.சாம்ராஜ் எழுதிய மதுரை பற்றி வந்த இந்தக் கட்டுரை உறங்கா நகரம் (முன்னொரு காலத்தில்)

அதிலிருந்து சில வலிகள்!!

“
மூணு மணிக்கு இட்லி சாப்பிட போகிறேன் என்பவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் மதுரையில் பொறுப்பேற்ற வடக்கத்திய உயர்காவலதிகாரி. தங்க பதக்கம் திரைப்படத்தின் எஸ் பி செளத்ரியின் வசனத்தில் சொன்னால் “அந்த ராத்திரி நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம்” என்றார்கள். எல்லாம் அடைக்கப்பட்டன, நிறுத்தப்பட்டன. டீக்கடைகள் பனிரெண்டு மணிக்கு மேல் சாராய கடைகளை போல் இயங்கின. ஒரு மணிக்கு விளக்கணைத்து இருட்டில் இட்லி சாப்பிட வேண்டிய கட்டாயம். போலிஸ் வேனின் சக்கரத்தின் கீழ் ஒரு கலாச்சாரம் நசுங்கியது. யுகம் யுகமாய் தூங்காத மதுரை வலுக்கட்டாயமாக அடித்து ”உறங்க” வைக்கப்பட்டது.

சமகாலத்து இரவு நேரத்து மதுரை வீதிகள் என்னை அழ வைக்கின்றன. எவ்வளவோ பார்த்த புது மண்டபத்து யாளிகளும் என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகின்றன. புது மண்டபத்தின் வாசலில் இருந்த புராதன குழியை மூடி மார்பிள் பதித்து விட்டார்கள். பதினோரு மணிக்கு மேல் அங்கு “வேறொரு” வியாபாரம் களைகட்டும். கீழ்பாலமும் போனது. அதன் எளிய இரவு வியாபாரங்களும் காணாமல் போயின. “இரவு பறவைகள்” எங்கே போயினர்? “பீம புஸ்டி அல்வாக்காரரை எவரேனும் பார்த்தீரா? கரகாட்டகாரனின் கரகம் எந்த பரணில் உறங்குகிறது? சாமி கள்ளழகரையே நேரத்தோடு வரச் சொல்கிறது “நிர்வாகம்”.


ஹும்ம்..!

:( மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,

ஷங்கர்.
மேலும் வாசிக்க...

Monday, August 2, 2010

என் காதலியை பிரசவித்தவர்கள்..


உங்களின் அமோக வரவேற்புக்கு நன்றி நண்பர்களே!

கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானதுதான். கவிதைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வட்டத்தில் அடைத்துக் கொள்வதையும், அடைக்கப் படுவதையும் மவுனமாகவே பார்த்துக் கொண்டு விலகும் எனக்கு..

புரியாத கவிதைகளை உடலில் சுருக்கங்கள் விழுந்து ஏதும் பேசாது ஆழப் பார்க்கும் ஒரு வயதான மனிதர் போலவும், புரிந்தவைகள் இரு கைகள் நீட்டி ஓடி வரும் குழந்தைகளைப் போலவுமே உணர்கிறேன். அப்படி நிறைய இங்கே வாசித்திருந்தாலும் நான் படித்த சில பூக்கள் உங்கள் பார்வைக்கு..


புறப்படும் இடமும்
சேரும் இடமும் ஒன்றுதான் என்றாலும் எல்லோருடைய ரயிலும் ஒன்றல்ல..
என்று முடியும்

பி.ஆர்.மஹாதேவனின் ரயிலும் ரயில் சார்ந்த நிலமும். இந்தக் கவிதைகளின் சில வரிகள் எனக்குள் ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டிவிட்டன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாளைப் போவான் என்ற பெயரில் எழுதும் நண்பரின் பக்கம் இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும். ஆழமாய்ப் படிக்கும், கிடார் வாசிக்கும் அழகான ஆறு விரல்கள் கொண்ட விப்ரோவில் வேலை செய்யும் இளைஞன் / வலை ~ சினேகிதன்.:-)


அவரின் சமீபத்திய புனிதம் என்ற கவிதையின் சில வரிகள்..

புனிதம் புணர்ந்த புனிதமும் புனிதம்
புனிதமும் புனிதமும் வன்மமாய்ப் பொருந்துகையில்
புனிதம் உடைக்கிற புனிதமும் புனிதம்!



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்து கொற்றவை ~ சாவின் உதடுகள் என்ற வலைப்பூவின் பெயரில் எழுதும் இவரின் கவிதைகள் உங்கள் புருவம் உயர்த்தவைக்கும்.இவரின் கல்லெறியும் குளம் என்ற கவிதையிலிருந்து மீண்டும் புனிதம் பற்றிய சில வரிகள்..

கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால் புனிதம் காத்திருந்தது உதடுகள் தொங்க முத்தம் கேட்டு..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திரு.குமரகுருபரனின் ~ குமார சம்பவத்தில் எதுவும் நிகழாத போது
என்ற கவிதை முடியும்போது..

இந்த மழைக் காலம் முடியும் முன்
கொஞ்சம் பூக்களையாவது சேகரித்து கொள்ளலாம்
நம்முடைய மரித்தல் குறித்த கடைசி சடங்குகளுக்காக
நம் காதல் குறித்து யாரேனும் விசாரித்தால்
முகமன் சொல்லி மறுத்துவிட்டு வாயேன்..


என்று சொல்லி நமக்குள் ஏதேனும் புதிதாய் துவக்குகிறது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திரு.தா.அகிலன் அவர்களின் கனவுகளின் தொலைவு வலைப்பக்கத்தில் நிகழாக் கவிதையில் சில வரிகள்..


என் கவிதையின் கரங்கள்நீண்டபடியிருக்கின்றன சொற்களைத்தேடி….
தாயின் இறகுகளை நீங்கித் தப்பும் ஒர் தனியன் குஞ்சைப்போல சிக்கிக்கொள்ளாது தப்பியலைகின்றன சொற்கள்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இதுபோக நிறைய நண்பர்கள் கவிதைகளில் சொக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வலைச்சரத்திலும் அவர்கள் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அதிகம் முன்னிருத்திக்கொள்ளாத சிலரையே நான் இங்கே பகிர்ந்துள்ளேன். :))


நன்றி நண்பர்களே,

மீண்டும் சந்திப்போம்.


டிஸ்கி::


(வலைச்சரத்திலேயே 50 இடுகைகள் எழுதிவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது! ) ::-))




.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் முதல் நாள் - பலா பட்டறை - ஷங்கர்..



வணக்கம் நண்பர்களே!

வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கு நன்றி கூறி வலைச் சரத்தில் முதல் நாள் என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் துவங்குகிறேன்...

பலா பட்டறை என்பது என் வலைப்பக்கத்தின் பெயர். ஷங்கர் என்பது என் பெயரில் ஒன்று!:) போன வருடம் நவம்பரில் ஆரம்பித்து, நல்ல பல நட்புகளுடன்/சந்திப்புகளுடன் தொடரும் என் பயணத்தில் இன்றைக்கு வலைச்சர ஆசிரியர் பணி. நானும் இதே வலைச்சரத்தில் பல நல்ல உள்ளங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவன்தான் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இதுவரை வந்த ஆசிரியர்கள் பணி மிகச் சிறப்பானது. ஓரளவிற்கு தொடர்ந்து வலைச்சரம் வாசித்தவன் என்றபோதிலும் சமீபகாலங்களில் சொந்த காரணங்களால் வாசிப்பு குறைந்தது.

பின்னூட்டமிடாது நான் மட்டுமே எழுதவும் மனமில்லை. எண்ணத்தில் உதிப்பதை எனக்குத் தெரிந்த தமிழில் என்னை பாதித்த அல்லது எழுதத் தூண்டுவதையே நானும் எழுதி வந்திருக்கிறேன். எழுதும் இடுகைகளில் ஏதேனும் முன்னேற்றமிருப்பின் அதற்கு உங்களின் எழுத்தும், அன்பும், ஆதரவுமே காரணம். அதற்காய் மீண்டும் வலைச்சரம் மூலமாக உங்களனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இனி அறிமுகப் படுத்தவேண்டிய பதிவர்கள் இருக்கிறார்களா என்கிற அளவிற்கு வலைச்சரத்தின் வீச்சு இருக்கிறது. எனக்கு தெரிந்த அளவில் பகிரவே விருப்பம். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க!

~~~~

நான் எழுதியவற்றில் சில உங்களின் பார்வைக்காக மீண்டும்..


என் வாழ்வில் நான் கடந்த பாதையில் எதிர்பட்டவைகள்..








என்னுடைய ஒரு காதல் கவிதையைப் படித்த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய் அவர் பதிவில் அதைப் பற்றி எழுதியது போக, தன் குரலிலேயே பதிவும் செய்து இருந்தார். அதையும் இங்கே பகிர விரும்புகிறேன்.:-)




மீண்டும் சந்திப்போம்.

நன்றி நண்பர்களே. :-)
மேலும் வாசிக்க...

Sunday, August 1, 2010

நல்வாழ்த்துகள் புலிகேசி - வருக வருக பலாபட்டறை ஷங்கர்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் புலவன் புலிகேசி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 45 இடுகைகளை அறிமுகம் செய்து, 130 மறுமொழிகள் பெற்றுள்ளார். செய்த பணி பாராட்டுக்குரியது. இவரை நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை ஆக்ஸ்ட் 2ம் நாள் த்வங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் பலா பட்டறை ஷங்கர்.
நவம்பர் 2009 லிருந்து எழுதுகிறார். கிராமம் சார்ந்த வாழ்விற்காய் விரும்பி சென்னை புற நகரில் வசிக்கிறார். கனரக இஞ்சின் உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்குதல் தொழில். படிப்பதும், வரைவதும், புகைப் படங்கள் எடுப்பதும், தோட்டமும், இயற்கையும் மிகவும் பிடித்தமானவை.

நண்பர் ஷங்கரை வருக வருக - வரவு நல்வரவாகுக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரம் இறுதிநாள் - புலவன் புலிகேசி

நமது பிள்ளைகளுக்கு சாதி வரலாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் மனித இனத்திற்கு நடந்த துரோக வரலாறு சொல்லிக் கொடுப்பதில்லை. 2 திசம்பர் 1984 இன்று போல் ஒரு ஞாயிறு செய்வதறியாமல் இறந்து போன அந்த உயிர்களைப் பற்றி இப்போதிருக்கும் இளைங்கர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

இவை எல்லாம் நம் தமிழ் நாட்டில் நடக்கத் தொடங்கியாயிற்று. ஆம் நாமெல்லாம் சுற்றுலா சென்று வரும் கொடைக்கானலில் பாதரசம் முலம் இன்னொரு போபால் உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்புறம் சமிபத்திய பாக்ஸ்கான் சம்பவம் இவற்றின் அறிகுறியாகவே தோன்றுகிறது. இது பற்றி தெரியாமலே நம் சந்ததிகள் மடிந்து போகக் குடும். அவர்களுக்கு இதன் கொடுமைகளை எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை. இன்று அந்த துயர சம்பவம் குறித்து நம் பதிவர்கள் எழுதிய பதிவுகளை உங்களுக்காக இங்கே தொகுக்கிறேன். அவசியம் படியுங்கள்.


"பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய்"


"ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை "


"26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை"


போபால் சம்பவம் குருத்து தெரியாதவர்கள், விபரம் வேண்டுபவர்கள் இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் பி.தி.எப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.


"சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை..."




"கொஞ்சம் கூடவா நமக்கு சுரணையில்லாம போச்சு, இது எப்படி நீதியாகும், லட்ச லட்சமா சாமானியன் செத்தாலும் குற்றம் செய்தவன விசாரிக்க கூட செய்யாது நம்ம நீதிதுறை, அப்படியே தண்டனைக் குடுத்தாலும் காலையில இரண்டு வருட சிறை, சாய்ங்காலம் பணை விடுதலை, சீ! கேவலமாயில்ல, பகுத்தறிவு அற்ற விலங்குகள் கூட ஏத்துக்காது இப்படி ஓர் கேவலத்தை நீதியென்று, ஆனால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட நாம் ஏற்போம்!"


"கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. "


ஆனால், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வேண்டும்.... இனி, ஒரு இந்திய சகோதரன் அழும் போது, கைகளில் டிவி ரிமோட் வைத்து கொண்டு, "அடுத்து என்ன ப்ரோக்ராம்?" என்று தேடி கொண்டு இருக்காமல், அதே கையால், அழுபவரின் கண்ணீர் துடைக்க மனம் பதற வேண்டிய உள்ளம் வேண்டும். அந்த மாறுதல் வரும் போது, இந்த மாதிரி மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பற்ற சூழ்நிலையோ - இல்லை, அதற்கு இப்படி ஒரு "கண்துடைப்பு" தீர்ப்போ எப்படி வர இயலும்?

இன்றுடன் எனது வலைச்சரப் பணி நிறைவடைகிறது. ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பணியை ஓரளவுக்கு செய்திருக்கிறேன் என நம்புகிறேன். நன்றி சீனா ஐயா. அடுத்து வரும் ஆசிரியருக்கு என் வரவேற்புகள்.

நன்றி,
புலவன் புலிகேசி
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது