இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அனுசுயா அவர்கள், தமது வலைச்சர பணியை ஆர்வமுடனும், அசத்தலான தலைப்புகள் மூலம் பதிவர்களை மிக அருமையாக அறிமுகம் செய்தும் நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடைபெறுகிறார்.
இவரது பதிவுகள் சுமார் 70 மறுமொழிகளை பெற்றும், 850 பக்க பார்வைகளும் பெற்றுள்ளது. அனுசுயா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெரும் மகிழ்ச்சி அடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அகலி(கை)கன் என்ற வலைப்பூவை எழுதிவரும் முரளி கிருஷ்ணன் அவர்களை அழைக்கின்றேன். சென்னை அம்பத்தூரில் டிஜிட்டல் ஸ்டுடியோ வைத்துள்ள இவர் கல்லூரி காலங்களில்(BA) பேச்சுப் போட்டிகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார். கட்டுரை பத்திகள் எழுதுவதை விட, கவிதைகள் எழுதவே இவருக்கு பிடிக்கும் என சொல்கிறார்.
முரளி கிருஷ்ணன் அவர்களை வருக வருக என வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
எனது வலைப்பூவில் நான் எழுதிய விசயங்களில் அதிகம் பூக்களைப் பற்றியது தான். எனக்கு மிகவும் பிடித்த பூக்களை பற்றி எழுதாவிட்டால் எனது வலைசரம் பூர்த்தியே ஆகாது. கடந்த மாதம் நான் வால்பாறை சென்று இருந்தேன். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டம் தான். ஊட்டியிலும் கண்டுள்ளேன் ஆனாலும் இங்கு சற்று அதிகம் போல தோன்றுகிறது. இதுவரை தேயிலை செடியை மட்டும் பார்த்து வந்த எனக்கு அதன் பூ மற்றும் காய் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
மாதேவி இவரின் வலைத்தளத்தில் எண்ணில் அடங்கா பயனுள்ள குறிப்புகள் பூக்களைப்பற்றி இருக்கின்றன. உணவாகும் பூக்கள் போன்றவைகள் சுவாரசியமானவை.
அதே சமயத்தில் நம் சமூகத்தில் பசுமையை மலரச் செய்வதில் திரு.வின்சென்ட் அய்யா அவர்களின் மண், மரம், மழை, மனிதன் வலைபதிவு மிக முக்கியமானதாகும். பல்வேறு மூலிகைகள் பற்றியும், மாடியில் செடி வளர்ப்பது போன்றவை குறித்து மிக்க அனுபவசாலி. நமது சந்தேகங்களை தாராளமாக கேட்கலாம். பொறுமையாக விளக்குவார்.
இதே போல வேளாண்மை குறித்த செய்திகளை தொகுத்து வழங்கி வருவது வேளாண் அரங்கம் வலைப்பதிவாகும். திரு.முருகபாண்டியன் அவர்களின் முயற்ச்சியால் நடைபெற்று வருகிறது. இவரே வேளாண்அரங்கம் மார்க்கெட் பெயரிலான தளத்தில் பல்வேறு நிறுவனங்கள் பற்றியும், வேளாண் பொருட்கள் பற்றியும் பட்டியலிட்டு வருகிறார். இவர்கடைசி பெஞ்ச் என்ற பெயரிலான வலைபதிவிலும் எழுதி வருகிறார்.
நம் கலாச்சாரத்தில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதனுள் கோலம் போடுவது ஒரு கலையாக வருமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு.உதயன் அவர்களுக்கு இந்த கலையின் மீது தீராத ஆர்வம்.
உதயம்.இன் என்ற தளத்தின் மூலமாக கோலக் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது எப்படி என்று அசைப் படங்களும் (Animation) செய்து ஒளிப்படங்களாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் Engineering Drawing முறைப்படி சரியான அளவில், சரியான வடிவத்தில் வரையப்பட்டு நல்ல தரமான படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
நமது கலைகள் குறித்தான அறிமுகத்தில் மிக முக்கியமா நான் கருதுவது
மாணிக்க மாதுளை முத்துகள் என்ற பெயரில் எழுதி வரும் திரு.ஜி.ராகவன் அவர்களின் வலைபதிவாகும். அவர் புதிய யுக்தியாக கம்பராமயணத்தை தனது குரலில் விளக்கம் கொடுத்து வலையேற்றி வருவதே தனிசிறப்பாகும்.
திரு.சி. ஜெயபாரதன் அய்யா அவர்களின் நெஞ்சின் அலைகள் வலைபதிவில் வானவியல், அணுவியல் சார்ந்த கட்டுரைகளை படித்து மகிழலாம். அழகு தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை இவர் மிக நீண்ட காலமாக எழுதி வருகிறார்.
திரு.என்.ராமதுரை அவர்களின் அறிவியல்புரம் எனும் வலைப்பதிவில் எளிய முறையிலான அறிவியல் கட்டுரைகளை காணலாம். சிறுவர்களுக்கு தமிழில் எளிள கட்டுரைகள் படிக்க ஏதுவாக இருக்கும். பெரியவர்களுக்கும் சுவையான கட்டுரைகள் உண்டு.
இன்றைய நவீன தொழில் நுட்ப உலகில் யாவராலும் தவிர்க்க இயலாது விரும்பி கற்க முனையும் ஒரு கலை புகைப் படக் கலை எனலாம். தொழில் நுட்ப ரீதியாக சில விசயங்கள் தெரிந்து கொண்டால் வாழ்வில் மறக்க இயலாத தருணங்களை என்றென்றும் கண்டு மகிழலாம், இந்த துறையினை குறித்து நம் நண்பர்கள் நடத்தும் வலைபதிவு PiT என்று சுருக்கமாக அழைக்க படும் photography-in-tamil வலைதளம் ஆகும்.
இந்த வலைதளத்தில் பல்வேறு தலைப்புகளில் மாதாந்திர போட்டிகள் நடத்த பட்டு ஊக்குவிக்க படுகிறது. கோடை என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் மூன்றாமிடம் வந்த ஒளிபடம்...
எல்லாரும் தான் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்வார்கள். நானோ என்னை எடுத்ததில் பிடித்தமான படத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..:) :)
ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் மிக முக்கியமான ஒன்றாகும். இவரே ஒளிப்படக்கலை வலைதளத்திற்க்கும் முக்கியமானவர். இவருடைய தளத்தில் நிறைய பதிவுகள் அவருடைய ஒளிபதிவு பற்றி அனுபவங்களையும், ஒளிப்படங்களையும் கொண்டதாக இருக்கும். தவற விடகூடாத வலை பதிவுகளில் இவருடையதும் ஒன்று.
உதயனின் அவர்களின் உதயனின் உதார்கள் வலைபதிவானது தமிழகத்தினுள் பயணித்து எடுக்க பட்ட பயண ஒளிபடங்களால் நிரம்பியது. பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் வசித்த இடங்களை நோக்கி பயணிப்பதாகவே அமைந்திருக்கும்.
இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக
முக்கிய ஆளுமை திரு.ஜெயமோகன். அவருடைய விஷ்ணுபுரம், பின்தொடரும்
நிழலின் குரல் போன்றவைகள் மனதை கவர்ந்தாலும்அறம் சிறுகதை
தொகுப்பே என்றைக்கும் மனதிலும், உணர்விலும் நிறைந்திருப்பவைகள்.
கதைகள் அவருடைய தளத்தில் வெளியாகும் போதே ஆர்வத்துடன் படித்து
முடித்திருந்தாலும்
பின்னர் நடிகர் கமலஹாசன் ஒரு தொலைகாட்சி பேட்டியில் சிலாகித்து
சிபாரிசு செய்த போதுதான் அந்த தொகுப்பின் வீச்சு இன்னமும் நன்றாக
புரிந்தது. அறம் சிறுகதை தொகுப்பை இணையம் வழியே வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-230-5.html
பொதுவாக இலக்கியத்தில் அந்த கோணம், இந்த கோணம், பின்நவீனத்துவம்
என்பது போல விளக்குவார்கள். அவ்வாறின்றி நான் நேரிடையாக -தட்டையாக-
மட்டுமே பேசுகிறேன்.
இந்த
கதையில் ஆச்சியாக பட்டவள் செய்யும் காரியமானது இன்று நினைத்து
பார்க்கவே இயலாத ஒன்றாக உள்ளது. தன் வாரிசுகள் எந்த பழிபாவத்திற்க்கும்
ஆளாகாது நல்லவர்களாக வளர வேண்டும் என்பதான தாய்மையின் உணர்ச்சி
வெளிபாடு மிக அருமை. இன்றைக்காக இருந்தால் அது ஆண்களின் வரவு-செலவு
என்று சொல்லி கழண்டு கொண்டு இருப்பார்கள்.
ஆச்சி
அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி
கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே
குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா.
அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே
வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ’இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா
நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ
குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார்
ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச
உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு
எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா
விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே
கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக்
கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே
அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான்.
பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச
செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில்.
நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி
டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா
கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த
அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப
தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா
இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ
முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான்
செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து
அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து
ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’
என்
றைக்கும் உணவினை மிச்சம் வைத்து, வீணாக்குபவர்களை காணும்
போதெல்லாம் நினைவில் வரும் கதை. இந்த கதையில் பலருக்கு பல இடங்கள் பல
காரணங்களால் பிடிக்க கூடும்.
ஆனால் எனக்கு பிடித்தது..
அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.
ஒவ்
வொரு வரியும் நினைவில் நிற்கும் கதை. யானை டாக்டர் போல இப்படியும்
சிலரேனும் இருப்பதால் தான் காடு, கழனிகள் செழிக்க மழை பெய்கிறதோ
என்று சில சமயம் நினைத்தது உண்டு. இந்த கதை மட்டும் இலவச பிரசுர வெளியீடாக
வந்ததை பெற்று பல நண்பர்களுக்கும் கொடுத்து படிக்க செய்ததுண்டு.
எனக்கு தெரிய ஒரு சிறுகதையானது இப்படி தனியே பொது நலன் கருதி
வெளியானது இந்த கதை தான். அனைத்து வரிகளுமே பிடித்த வரிகளே..
நான்
பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என்
தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய
மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை
மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான்
நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான்
வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி
லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க
இந்த சிறுகதையில் ஒரு வரிகூட தவறவிடக்கூடாதது. அந்தளவு பிடித்தமான கதை.
இலக்கியம் என்றாலே நான் தவறாது நாடும் ஒரு வலைபதிவு அழியாச் சுடர்கள் . பின்னே பின்வரும் இத்தனை இலக்கிய ஆளுமைகள் பற்றி ஒரே இடத்தில் படிக்க கிடைப்பது என்றால் சும்மாவா... தொடர்ந்து வளர்ந்து வரும் வலைபதிவு இது. வாழ்க இவர்கள் சேவை.
இலக்கிய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகம் போன்றவைகளுக்காக படிக்கும் மற்றொரு வலைபதிவு சிலிகான் ஷெல்ஃப் . தனிப்பட்ட முறையில் அவருடைய கருத்துகளை, விமர்சனங்களை அடக்கிய ஒரு வலைபதிவாகும்.