07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 25, 2013

அனுசுயா - அறம்

  
       இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக முக்கிய ஆளு​மை திரு.​ஜெய​மோகன். அவரு​டைய விஷ்ணுபுரம், பின்​தொடரும் நிழலின் குரல் ​போன்ற​வைகள் மன​தை கவர்ந்தாலும்அறம் சிறுக​தை ​தொகுப்​பே என்​றைக்கும் மன​திலும், உணர்விலும் நி​றைந்திருப்ப​வைகள். க​தைகள் அவரு​டைய தளத்தில் ​வெளியாகும் ​போ​தே ஆர்வத்துடன் படித்து முடித்திருந்தாலும் பின்னர் நடிகர் கமலஹாசன் ஒரு ​தொ​லைகாட்சி ​பேட்டியில் சிலாகித்து சிபாரிசு ​செய்த ​போதுதான் அந்த ​​தொகுப்பின் வீச்சு இன்னமும் நன்றாக புரிந்தது. அறம் சிறுக​தை ​தொகுப்​பை இ​ணையம் வழி​யே வாங்க  https://www.nhm.in/shop/100-00-0000-230-5.html ​பொதுவாக இலக்கியத்தில் அந்த ​கோணம், இந்த ​கோணம், பின்நவீனத்துவம் என்பது ​போல விளக்குவார்கள். அவ்வாறின்றி நான் ​நேரி​டையாக -தட்​டையாக- மட்டு​மே ​பேசுகி​றேன்.

இந்த க​தையில் ஆச்சியாக பட்டவள் ​செய்யும் காரியமானது இன்று நி​னைத்து பார்க்க​வே இயலாத ஒன்றாக உள்ளது. தன் வாரிசுகள் எந்த பழிபாவத்திற்க்கும் ஆளாகாது நல்லவர்களாக வளர ​வேண்டும் என்பதான தாய்​மையின் உணர்ச்சி ​வெளிபா​டு மிக அரு​மை. இன்​றைக்காக இருந்தால் அது ஆண்களின் வரவு-​​செலவு என்று ​சொல்லி கழண்டு ​கொண்டு இருப்பார்கள்.

ஆச்சி அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா. அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ’இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’

சோற்றுக்கணக்கு [சிறுகதை]
என் ​றைக்கும் உணவி​னை மிச்சம் ​வைத்து, வீணாக்குபவர்​க​ளை காணும் ​
போ​தெல்லாம் நி​னைவில் வரும் க​தை. இந்த க​தையில் பலருக்கு பல இடங்கள் பல காரணங்களால் பிடிக்க கூடும். ஆனால் எனக்கு பிடித்தது..

அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.

வணங்கான் [சிறுகதை] -1 , வணங்கான் [சிறுகதை] 2 
​பொதுவா இந்த க​தை பிடித்தமான ஒன்று.

யானைடாக்டர் [சிறுகதை] -1 , யானைடாக்டர் [சிறுகதை] 2 , யானைடாக்டர் [சிறுகதை] 3        
ஒவ் ​வொரு வரியும் நி​னைவில் நிற்கும் க​தை. யா​னை டாக்டர் ​போல இப்படியும் சில​ரேனும் இருப்பதால் தான் காடு, கழனிகள் ​செழிக்க ம​ழை ​பெய்கிற​தோ என்று சில சமயம் நி​னைத்தது உண்டு. இந்த க​தை மட்டும் இலவச பிரசுர ​வெளியீடாக வந்த​தை ​பெற்று பல நண்பர்களுக்கும் ​கொடுத்து படிக்க ​செய்ததுண்டு. எனக்கு ​தெரிய ஒரு சிறுக​தையானது இப்படி தனி​யே ​பொது நலன் கருதி ​வெளியானது இந்த க​தை தான். அ​னைத்து வரிகளு​மே பிடித்த வரிக​ளே..

நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க

நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4    
மிகவும் தாழ்த்தபட்ட சமூகத்தலிருந்து முன்​னேறி வரும் புதிய த​லைமு​றை மகனுக்கும், பழ​யை நி​னைவுகளில் அல்லலுறும் தாய்​மைக்குமான பாசப்
பி​ணைப்பு ​போராட்டம். வார்த்​தைகளால் வர்ணிக்க இயலாதது.. :( :(


ஓலைச்சிலுவை [சிறுகதை] -1 , ஓலைச்சிலுவை [சிறுகதை] -2 , ஓலைச்சிலுவை [சிறுகதை] 3   

இந்த சிறுக​தையில் ஒரு வரிகூட தவறவிடக்கூடாதது. அந்தளவு பிடித்தமான க​தை.

இலக்கியம் என்றா​லே நான் தவறாது நாடும் ஒரு வ​லைபதிவு அழியாச் சுடர்கள் . பின்​னே பின்வரும் இத்த​னை இலக்கிய ஆளு​மைகள் பற்றி ஒ​ரே இடத்தில் படிக்க கி​டைப்பது என்றால் சும்மாவா... ​தொடர்ந்து வளர்ந்து வரும் வ​​லைபதிவு இது. வாழ்க இவர்கள் ​​சே​வை.
அ. மாதவையா , அ.முத்துலிங்கம் , அ.ராமசாமி , அசோகமித்திரன் , அபி , அம்பை , அறிமுகம் , ஆ. மாதவன் , ஆதவன் , ஆத்மாநாம் , ஆர்.சூடாமணி , ஆவணப்படம் , இந்திரா , பார்த்தசாரதி , இமையம் , உமா மகேஸ்வரி , உமா வரதராஜன் , எக்பர்ட் சச்சிதானந்தம் , என். டி. ராஜ்குமார் , எம்.ஏ.நுஃமான் , எம்.டி.முத்துக்குமாரசாமி , எம்.வி. வெங்கட்ராம் , எஸ். வைத்தீஸ்வரன் , எஸ்.ராமகிருஷ்ணன் , க.நா.சு , கடித இலக்கியம் , கந்தர்வன் , கரிச்சான் குஞ்சு , கலாப்ரியா , கலாமோகன் , கல்யாண்ஜி , கி ராஜநாராயணன் , கி. அ. சச்சிதானந்தம் , கிருஷ்ணன் நம்பி , கு. அழகிரிசாமி , கு.ப.ரா , கோணங்கி , கோபிகிருஷ்ணன் , கௌதம சித்தார்த்தன் , ச.தமிழ்ச்செல்வன் , சமயவேல் , சம்பத் , சா.கந்தசாமி , சாரு நிவேதிதா , சார்வாகன் , சி. மோகன் , சி.சு. செல்லப்பா , சி.மணி , சிட்டி , சு.வெங்கடேசன் , சுகுமாரன் , சுஜாதா , சுந்தர ராமசாமி , சுப்ரபாரதிமணியன் , சுரேஷ்குமார இந்திரஜித் , சூத்ரதாரி , சோ.தர்மன் , ஜி. நாகராஜன் , ஜி.குப்புசாமி , ஜெயகாந்தன் , ஜெயந்தன் , ஜெயமோகன் , ஞானக்கூத்தன் , தஞ்சை பிரகாஷ் , தமிழவன் , தமிழில் முதல் சிறுகதை , தி. ஜானகிராமன் , திசேரா , திலீப் குமார் , தேவதச்சன் , தேவதேவன் , தோப்பில் முஹம்மது மீரான் , ந. முத்துசாமி , ந.பிச்சமூர்த்தி , நகுலன் , நாஞ்சில் நாடன் , நீல பத்மநாபன் , நேர்காணல் , ப.சிங்காரம் , பசுவய்யா ,பவா செல்லதுரை , பா. செயப்பிரகாசம் , பாதசாரி , பாமா , பாரதி மணி , பாவண்ணன் , பி.எஸ்.ராமையா , பிரபஞ்சன் , பிரமிள் , பிரம்மராஜன் , புகைப்படங்கள் , புதுமைப்பித்தன் , பூமணி , பெருமாள்முருகன் , மகாகவி பாரதியார் , மனுஷ்யபுத்திரன் , மா. அரங்கநாதன் , மாலன் , மு.சுயம்புலிங்கம் , மௌனி , யுவன் சந்திரசேகர் , யூமா வாசுகி , ரமேஷ் : பிரேம் , ரவிசுப்ரமணியன் , ராஜ மார்த்தாண்டன் , ராஜா சந்திரசேகர் , ராஜேந்திர சோழன் , லஷ்மி மணிவண்ணன் , லா.ச. ராமாமிருதம் , வ.கீதா , வ.வே.சு ஐயர் , வண்ணதாசன் , வண்ணநிலவன் , வல்லிக்கண்ணன் , விக்ரமாதித்யன் நம்பி , வித்யாஷ‌ங்கர் , விமலாதித்த மாமல்லன் , விருதுகள் , வெங்கட் சாமினாதன் , வேதசகாய குமார் , வேல.இராமமூர்த்தி , வைக்கம் முஹம்மது பஷீர் , ஷங்கர்ராமசுப்ரமணியன் , ஸில்வியா , ஹெப்சிபா ஜேசுதாசன்

இலக்கிய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகம் ​போன்ற​வைகளுக்காக படிக்கும் மற்​றொரு வ​லைபதிவு சிலிகான் ஷெல்ஃப் . தனிப்பட்ட மு​றையில் அவரு​டைய கருத்துக​ளை, விமர்சனங்க​ளை அடக்கிய ஒரு வ​லைபதிவாகும்.
​மோகன்தாஸ் அவர்களின்  Being Mohandoss . இவரு​டைய சில சிறுக​தைகள்...  , ,
வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தம் வ​லைபதிவும் ​தேடிப் படிக்கும்
வ​லைபதிவுகளில் ஒன்​றேயாகும்.

10 comments:

  1. அருமையான வலைத்தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான வலைத்தளங்களின் அறிமுகத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. சிறப்பான பல வலைதளங்களின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. அருமை.. அருமை..

    ReplyDelete
  6. தரமான பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    கருத்துச் செறிவுள்ள பதிவு.

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
  8. இலக்கிய வலைபதிவாளர்களின் தொகுப்பு சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  9. கருத்துச் செறிவுள்ள கதைகளின் தொகுப்பான
    இந்தப் பதிவு, மதிப்பு மிக்கது ஆகும்.

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகம்!.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது