07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 9, 2013

ஸ்னேகமாயும்,பூந்தூவலாயும்,,,,,,

வணக்கம்அனைவருக்குமாய்./
குருவி தலையில் பனங்காயை வைப்பதே பெரிய விஷயம்... அதுவும் சிட்டுக்குருவி தலையில் வைப்பதென்பது,,,,,,, அதனால் என்ன இப்பொழுது வலைச்சர நண்பர்கள் நீங்கள் அனைவரும் என் தோள் கொடுக்க என்னருகில் உள்ளபோது எனக்கென்ன மனக்கவலை...? நன்றி வணக்கம்... பதிவர் அறிமுகத்தை துவக்கலாமா...?
                                                    தீதும் நன்றும் பிறர் தர வாரா

தீதும் நன்றும் பிறர் தர வாரா:
இது திரு ரமணி அவர்களது வலைத்தளத்தின் பெயர்... ஒருவரைப்பற்றி தெரிய வேண்டுமானால் அவரது நண்பரிடம் கேளுங்கள் என்பார்கள்... அது போலவே திரு. ரமணி அவர்களை அவரது எளிமையான, பூடகமற்ற எழுத்து அடையாளம் காட்டிச் செல்கிறது. 
அத்து வானவெளியில் குடியிருந்த வீடு, பாம்பு வந்து பயம் கொள்ளச் செய்த பொழுதுகள்,ஆருயிர் நண்பனுக்காய் மனம் நிறைதுயருடன் மருத்துவமனையில் காத்துக்கிடந்த பொழுதுகள்..... இன்னும் இன்னும் என அவர் எழுதிச்செல்கிற எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சாதாரணமாய் விஷயம் கூறிச்செல்லாம் தத்துவவிலாசம் சுமந்து செல்வதாய் உள்ளது... சாமான்யர்கள், நண்பர்கள், தோழர்கள், இன்னுமாய் இச்சமூகம் சுமந்து இன்றளவும் அடையாளபடுத்தி கொண்டிருக்கிற விளிம்பு நிலை மனிதர்கள் என எவறைப்பற்றியும் எதைப் பற்றியுமாய் எழுதுகிற இவரது எழுத்துக்கள் சுமந்த ”தீதும் நன்றும் பிறர் தரவாரா” எல்லோரும் படிக்கவேண்டிய வலைத்தளம்எனகூறிப்பிடு வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
                                   ==============================================
            திண்டுக்கல் தனபாலன்:

         இரண்டு வரிகளில் உள்ள திருக்குறள் என்ன சொல்லிச்சென்று விட முடியும் என்பதை தனது வலைத்தளத்தின் மூலமாய் சொல்லிச் 
செல்கிறார் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
                                                 திண்டுக்கல் தனபாலன்                                              

            திண்டுக்கல் தனபாலன்:
அவரது எளிமையான பேச்சைப்போலவும்,பழக்கத்தை போலவும், 
       அவரது வலிமையான கருத்துக்களைப் போலவுமாய் அவரது எழுத்துக்கள், சினிமாப்பாடல்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும், வாழ்வின் யதார்த்        தங்களிலிருந்துமாய் நிறைய நிறைய விஷயம் விதைத்துச் செல்கிறது விதை   த்தவிதைகளாய் இருக்கிற அவரது எழுத்துக்கள் விருட்சம் அளவு உயரம் கொள்ள பயணப்படுகிறது என  அவரது  வலைத்தளத்தை குறிப்பிடுகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    அலையல்ல சுனாமி

                                                             அலையல்ல சுனாமி

ஒளிவெள்ளத்தில்
நிழல் வராது
இருப்பினும்
வருகின்ற திசையினை
நோக்கி தேடுகிறேன்
நேரம் செல்லச் செல்ல
இருட்டத்தொடங்கியது
அறிவு உரைத்தது
இருட்டிலும் நிழல்
வராது என்று..!

மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது. தேடல் நல்லதுதான். அலை பாயும் கடலையும் மனசையும் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத.. இயல வே இயலாத காரியம். இருந்தும் இருட்டில் திசையே அறியாத அவள் வரும் திசையினை நோக்கித் தேடுகிறது மனசு.


அண்மையில் இப்படி கவிதை எழுதிமனம் கொள்ளை கொண்ட அலையல்ல சுனாமி என்கிற வலைத்தளத்தின் சொந்தக்காரர் மாரிமுத்து என்கிற விச்சு.
சாமான்யனின் வாழ்விலிருந்துதான் எழுத்து பிறந்து புறப்படுகிறது என்கிறார்கள்.இவரது எழுத்தும் சாமான்யமக்களின் உறவு சார்ந்து கவிதை பாடவும்,கதை சோல்லிச்செல்லவுமாய் இருக்கிறது.மென்மையான் பஞ்சுப்பொதிகளை பொல நக்ர்கிற மேகமாய்  வியாபித்திருக்கிற இவரது எழுத்துக்கள் இவரை அடையாளம் காட்டுகிறது.அதையும் கொஞ்சம் படிபோம் வாருங்கள்.

                                                 &&&&&&&&&&&&&&&&
இளமதி அவர்கள்,,,,
                                                                இளையநிலா

தனது வலைத்தளம் முழுவதும் தனது சொந்த கிவிலிங் வேலைப்பாடுகளை அழகாக அடுக்கி வைத்துக்காண்பித்தது போலவும் தன் மனம் பிடித்த வலைத்தளத்தையும் அறிமுகம் செய்கிற இவரது மேன்மை மிகவும் நன்றாக/எழுத்துக்கள் சொல்லி செல்ல வேண்டியவற்றை இவரது க்விலிங் வேலைப்பாடுகள் அழகு சுமந்து சொல்லிச்செல்கிறது,அவருக்கு நம் வாழ்த்துக்களைச்சொல்லி அவரது வலைத்தலம் செல்வோம்.

                                         ###################################

36 comments:

  1. रमणी அவர்களின் வலைத்தளப் பெயர் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா. இது வே சிறப்பு.அவை இரண்டும் ஒருவருக்கு தன செயலால் வருவது.கர்ம வினை.அது ஜாதகத்தில் எழுதப்பட்டது.சிலர் எது பேசினாலும் மற்றவர்களுக்கு கோபம் வராது.சிலர் ஒரு சொல் போதும். அது விந்தை.இந்த அழகிய தலைப்பு பாராட்டுக்கள்.விமலன் அவர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சேதுராமன் ஆனந்த கிருஷ்ணன் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  2. நீங்கள் குறிப்பிட்ட ரமணி சார் அவர்களின் பதிவுகளை படித்த் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.அவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோமதி அரசு சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  3. இன்று அறிமுகம் செய்து அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். தங்களுக்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  4. சிகப்பு எழுத்துக்களில் சுட்டிக் காட்டியுள்ள பதிவர்களின் பெயர்களைக் கிளிக்கினால் அவர்களின் வலைத்தளங்களுக்குச் செல்ல முடியாமல் ஏதோ கோளாறு உள்ளது.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    முடிந்தால் சரி செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  5. இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியைப் பொறுபேற்றிருக்கும் சகோதரர் விமலன் அவர்களே... உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

    இன்று இங்கு என்னையும் இங்கு அறிமுகமாக்கியுள்ளதை வை. கோபலகிருஷ்ணன் ஐயா அறியத்தந்திருந்தார். அவருக்கு என் நன்றி!

    என்னுடன் இங்கு அறிமுகமாகியிருக்கும் அற்புதமான இனிய பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களும் உங்களுக்கு என் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி அவர்களே.நன்றி வருகைக்கு

      Delete
  6. வணக்கம்.. விமலன்!.. தொடக்கமே அருமை.. அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துரை செல்வராஜ் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  7. தள அறிமுகத்திற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தள இணைப்புகளையும் மற்றும் வைகோ ஐயா அவர்கள் சொன்னது போல் சரி பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  8. என்னையும் சிறந்த பதிவர்களுடன் இணைத்து
    அறிமுகப் படுத்தியதுடன் என் எழுத்து குறித்த
    அருமையான அறிமுகத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  9. வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    சிறப்பான பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி அவர்களே.நன்றி வருகைக்கு/

      Delete
  10. ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
    தொடருங்கள்
    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  11. வார ஆசிரியருக்கு வாழ்த்துகள். சிறப்பான பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வையாபதி சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  12. அன்பின் விமலன் - அறிமுகப் படுத்தப்பட்ட தளங்கள் அத்தனையும் அருமை - இருப்பினும் தளத்தினை அறிமுக்ப் படுத்துவதை விட - அத்தளத்தில் உள்ள சிறந்த பதிவுகளை அறிமுகப் படுத்த வேண்டும். அது தான் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். குறைந்த பட்சம் 5 பதிவரகளீன் பதிவுகளில் இயன்ற வரை அறிமுகப் படுத்துக.

    நல்வாழ்த்துகள் விமலன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. நன்றி சீனா சார்.சில வேலைகளின் காரணமாக ஐந்து பதிவுகளை அறிமுகம் செய்ய இயலவில்லை.முடிந்த வரை நன்றாக செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி

    ReplyDelete
  14. ஸ்னேகமாயும்,பூந்தூவலாயும், ரமணீயமான அறிமுகங்கள் அருமை .. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  15. வணக்கம்
    விமலன்(அண்ணா)

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைருக்கும் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வணக்கம்
    விமலன்(அண்ணா)

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் சார்.நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  17. நல்ல அறிமுகங்கள்...
    சிறப்பாகச் செய்ய் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சே குமார் சார்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  18. இளம்திக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி சகோதரி!
      உங்களுடன் இங்கு எனை வாழ்த்திய அன்புறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

      Delete
    2. வணக்கம் கோமதி அரசு சார்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  19. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  20. வணக்கம் விமலன் சார். முதலில் என்னை மன்னிக்கவும். சில வேலைப்பளுவின் காரணமாக வர இயலவில்லை. என் தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது நீங்கள் அறிமுகப்படுத்திய மற்ற தளங்களை நிச்சயம் வாசிக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது