நான் ஆவி..!
➦➠ by:
கோவை ஆவி
வலைச்சர வாசகர்களுக்கு என் முதற்கண் "ஓண ஆஷம்ஷகள்" (ஆஷம்ஷகள் - வாழ்த்துகள்). கேரளாவில் மட்டுமல்லாது தமிழ் நாட்டிலும் பரவலாக கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை தமிழர்களின் பொங்கல் பண்டிகை போன்ற ஒரு அறுவடைத் திருநாளாகும். மகாபலி எனும் மன்னனின் வருகையை கொண்டாடும் நாளாகவும் இதைக் கூறுவர். மக்கள் மனம் கோணாது (பெட்ரோல், டீசல், வெங்காயம் எல்லாம் விலை ஏறாமல் பார்த்துக் கொண்ட) ஆட்சி செய்த அவரை வரவேற்க பூக்களால் கோலமிடுவர். பத்து நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் நாம் இன்று கொண்டாடுவது பத்தாவது நாளான "திருவோணம்" என்பதாகும். (சுந்தரி நீயும், சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் ன்னு கமல் பாடுவாரே, அதே தான்!)
என்னைப் பற்றி சுருக்கமா சொல்லணும்னா நான் ஒரு அஞ்சு வருஷம் வைரமுத்து சார்கிட்ட உதவியாளரா இருந்துட்டு, அப்படியே ரஹ்மான் சார்கிட்ட ம்யுசிக் கத்துக்கிட்டேன் ன்னெல்லாம் சொல்ல ஆசைதான். ஆனா அப்படி எதுவுமே நடக்கலேயே. 2008 இல் ஆங்கிலத்தில் வலைப்பூ ஆரம்பித்து எழுத துவங்கினேன். (பெரும்பாலும் சொந்த சரக்குகளே) அப்போது தான் 2010ல் என் எழுத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்த தமிழ் நல்லுலகத்தின் பால் என் பார்வை திரும்பியது. (ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த வரை எனக்கு ஐந்தாறு வாசகர்கள் மட்டுமே.. )
தமிழில் ஆரம்பித்த போதும் வாசகர்கள் வருகை குறைவாக இருந்த காரணத்தால் என் வலைப்பூவைப் படிக்க வேண்டி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து அன்புடன் மிரட்ட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று கூட யோசித்ததுண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் என்னை பாரி எனும் பதிவர் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார். பிற்பாடு திருமதி B.S. ஸ்ரீதர் மற்றும் அப்பாவி தங்கமணி ஆகியோர் அறிமுகம் செய்தனர். இந்த அறிமுகங்கள் என் தளத்தை நிறைய வாசகர்களுக்கு கொண்டு சென்றது என்பது மறுக்க முடியாத உண்மை. சென்ற மாதம் சீனா ஐயா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இவ்விடத்தில் பிற பதிவர்களை அறிமுகப் படுத்தி வைக்க சந்தர்ப்பம் கொடுத்த அவருக்கும், என்னை அறிமுகம் செய்த நல்ல உள்ளங்களுக்கும், என் பிரிய வாசகர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
முதல் நாள் நாம பாக்கப் போகும் பதிவர் கோவை ஆவி (ஆமாங்க நானே தான், ஹிஹிஹி.. ) நான் எழுதி எனக்கு ரொம்பப் பிடிச்ச சில பதிவுகள உங்க கூட பகிர்ந்துக்கறேன். நாளையிலிருந்து ஆவி உங்கள வேற உலகத்துக்கு கூட்டிட்டு போய் சுத்தி காமிக்கப் போவுது. (சுத்தியும் வேண்டாம், ஆணியும் வேண்டாம்னு நீங்க சொல்றது கேக்குது..) வேற உலகம்னதும் பயந்துடாதீங்க.. பதிவுலகத்த தான் அப்படி சொன்னேன். சரி, பதிவுகள் பாக்க நீங்க ரெடியா?
என் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம், திருவள்ளுவரே என்னைப் பார்த்து திருதிருன்னு முழிச்ச நாள் அது.
ஒரு வித்தியாசமான "காதலுக்காக" நான் அலைந்த கதை.
பட்டிமன்ற ராஜா அவர்களை நான் சந்தித்தபோது நான் கேட்ட கேள்வி
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உணர்வை நான் அமெரிக்காவில் வாழ்ந்த போது உணர்ந்து எழுதியது இது.
குழந்தைகளுக்காக நான் எழுதி, மெட்டமைத்துப் பாடிய பாடல்
மற்றுமொரு திகில் அனுபவம்
நான் எழுதிய எல்லாமே எனக்கு இஷ்டமானவை தான் என்றாலும் மேற்கூறிய பதிவுகள் என் வாசகர்களால் அதிகம் பாராட்டப் பட்டவை என்ற முறையில் இவற்றிற்கு கொஞ்சம் செல்லம் அதிகம். இதுல உங்களுக்கு எது பிடிச்சதுன்னு நீங்க சொல்லுங்க..நாளை ஒரு முக்கிய நபர் உங்க எல்லாரையும் சந்திக்க விரும்பறாங்க.. அவங்களோட உங்களை சந்திக்கிற வரைக்கும் இப்போ உங்களிடமிருந்து ஜூட் விடுவது உங்கள் ஆவி!!
|
|
வாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பரே அருமை
தொடருங்கள்
முதல் வாழ்த்துக்கு நன்றி..
ReplyDeleteசுய அறிமுகம் அசத்தல்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஓண ஆஷம்ஷகள்...
நன்றி DD..
Deleteஹலோ ஆவியா !!
ReplyDeleteநீங்க வலைச்சரத்துக்கு வந்து இருக்கீக அப்படின்னு சொன்னாகளா ?
ஒரே தில்லும் திகலுமா உங்க பஸ் பிடிச்சு ஏறினோம்.
இங்கன உங்க பஸ்ஸிலே வந்து கிட்டு இருந்தோமா ?
ஏ .சி. பஸ் இல்லையா ?
அதுலே எப்படி ஐயா இப்பவே அந்த
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை போட்டு ஜில் பண்ணிட்டீக...!!!
அப்படியே ம்யூசிக் கேட்டுக்கினு தூங்கிப்போயிட்டோம்.
ஒரு கனவு கண்டோம்
அது என்னான்னு இங்கன வந்து பாருங்க...
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
ஹஹஹா.. படிச்சேன் தாத்தா.. வழக்கம் போல் சிரித்தபடியே ரசித்தேன்..
Deleteஆவி பறக்கும் வாரமாக இருக்க வாழ்த்துகள் ஆனந்த விஜயராகவன்......
ReplyDeleteஅசத்திடுவோம் வெங்கட் சார்..
Deleteஅருமையான சுய அறிமுகம்... உங்கள் தளத்தில் நான் படிக்காத நிறைய பதிவுகள் இருக்கின்றன.. படிக்கிறேன்...
ReplyDeleteவாங்க நண்பா.. கண்டிப்பா படிங்க..
Deleteநான் ஈ
ReplyDeleteஎன்பதுபோல தலைப்பும்
ஆவி தன்னை அறிமுகம் செய்து கொண்ட விதமும்
மிக மிக அருமை
தொடர்கிறோம் தொடர வாழ்த்துக்கள்
அந்த தலைப்புக்கான அர்த்தம் நாளைய பதிவில் தெரிய வரும் ஐயா.. வருகைக்கு நன்றி..
Deleteவணக்கம்
ReplyDeleteகோவை ஆவி(அண்ணா)
சுயஅறிமுகம் மிக நன்று இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்.. உங்கள பிற பதிவர்களின் பின்னூட்டத்தில் சந்தித்திருக்கிறேன். இப்போ இங்கே சந்திக்கிறதில் மகிழ்ச்சி..
Deleteவருக! வருக! ஆனந்த விஜயராகவன்!(ஆவி) அவர்களே!
ReplyDeleteசுவாரசியமான சுய அறிமுகம் .
நன்றி முரளி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteபோயும் போயும் ஒரு ஆம்பளை ஆவிதான் உங்களோட வந்ததா ?ஒரு மோகினிப் பிசாசுன்னாக் கூட ஒரு கிக்கா இருந்து இருக்கும் !
ReplyDeleteவலைச்சரத்தில்அசத்த வாழ்த்துகள்!
ஆஹா... பொறுங்க.. தேவதையே வந்துகிட்டு இருக்கு..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
DeleteWelcome!
ReplyDeleteThanks!!
Deleteஅடடா..ஆவிதான் இவ்வார ஆசிரியரா..உங்கள் பாணியில் அசத்துங்கள்.வாசிக்க காத்திருக்கிறோம்.வலைசர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகக்ள்.
ReplyDeleteவாங்க ஸாதிகாக்கா!! நன்றி!!
Deleteவலைச்சரத்தை திகிலடிக்கப் போகும் ஆவி அவர்களுக்கு ஓம் கிரீம் க்லீம் க்ரீம் ஜெய் ஆவி போலோ வாழ்த்துக்கள்...
ReplyDelete//என் வாசகர்களால் அதிகம் பாராட்டப் பட்டவை என்ற முறையில் இவற்றிற்கு கொஞ்சம் செல்லம் அதிகம்.// இதுகெல்லாம் ஒரு தனிதிறம வேணும்யா :-)
நன்றி சீனு.. பலி பீடத்தில் கழுத்தின் மேல் கத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் காமெடி பண்ணும் திறமை சிலருக்கு மாத்திரம் உண்டு. அதுல நீதாம்பா மொதோ ஆள்..
Deleteஆவி எத்தன பேர அடிக்கப் போகுதுன்னு தெரியலையே...!!!!
Deleteஅன்பின் ஆவி - சுய அறிமுகம் அருமை - த.ம 3 - அத்தனை சுட்டிகளையும் சுட்டி, சென்று பார்த்து, படித்து, மகிழ்ந்து , மறுமொழிகளும் இட்டு வந்தேன் - தொடர் பதிவுகள் - 10- இஞ்சினீயர் ( நானும் நானும் தான் மெகானிகல் இஞ்சினீயர் ) - பயனக்க்கட்டுரை 15 - ஆக 25 பொறுமையாகப் படிக்கிறேன். முதல் நாளே கலக்கறீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாய்ப்பளித்தமைக்கு நன்றி ஐயா.. உங்களின் எல்லா மறுமொழிகளையும் பார்த்து மகிழ்ந்தேன்.
Delete//முதல் நாளே கலக்கறீங்க//
நன்றி ஐயா..
வலைச்சரம் ஆசிரியராக...
ReplyDelete‘முதல்வன்’ போல் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஸார்.. நாளைக்கும் வாங்க. அந்த சிறப்பு விருந்தினர் உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கறேன்..
Delete//‘முதல்வன்’ போல் ஜெயிக்க வாழ்த்துக்கள்./
அங்கயும் ஒரு சினி டச் வச்சீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க..
சுய அறிமுகம் அசத்தல்! அருமை!
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!..
த ம.5
நன்றி இளமதி.. தொடர்ந்து வாருங்கள்.
Deleteஉங்க பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன்.. இன்று தான் உங்கள் இளையநிலாவை பதிவு வானில் பார்த்தேன். நிலாவின் ரசிகனாயும், நான் எப்போதும் ஆராதிக்கும் சுப்புத் தாத்தா அவர்கள் மெட்டமைத்து பாடிய உங்கள் பாடலையும் கேட்டேன்.. அருமை..
வாங்க வாங்க....
ReplyDeleteஐ.. பிரகாஷ்.. என்ன லேட்டா வர்றீங்க.. பைன் கட்டுங்க.. :-)
Deleteஆவி இருந்தால் தானே எதுவும் நடக்கும் யாருக்கும் போகச் சொல்ல மனம் வருமா?
ReplyDeleteஎனவே வருக! ஆவி! தருக! வாழ்க! வளர்க!
எல்லாம் உங்க ஆசிர்வாதம் ஐயா.. நன்றி..
Deleteஒரு வாரத்துக்கு பட்டைய கிளப்பட்டும் மிஸ்டர் ஆவி ...
ReplyDeleteஅதற்கு முந்தி என் வாழ்த்துக்களும் , வணக்கங்களும் ...
நன்றி அரசன்..
Deleteநான் என்னமோ ஆனந்த விகடன்ல நீங்க ஆசிரியரா இருந்திருப்பீங்களோன்னு நெனச்சேன்.... :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
ஹஹஹா..நன்றி அப்துல்..
Deleteவாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteசுய அறிமுகம் மிகஅழகாய்த் தொடுத்தீர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநன்றிங்க..
Deleteகலக்கலான அறிமுகம்!.. மென்மையான நகைச்சுவை!..தங்களின் வரவு நல்வரவாகுக!.. வாழ்க.. வளர்க!..
ReplyDeleteநன்றி துரை அவர்களே..
Deleteவாழ்த்துகள். வாரம் சிறக்கட்டும்.
ReplyDeleteநன்றி மாதேவி..
Deleteகலக்குங்க
ReplyDeleteநன்றி கோகுல்..
Deleteநண்பனை வித்தியாசமா வாழ்த்தலாம்னு பார்த்தா எல்லோரும் விதவிதமா வாழ்த்திட்டாங்க.... கொஞ்ச நாளா நம்ப நெட் சோம்பேறியா இருக்கு...உங்களிடம் இன்னம் எதிர்பார்க்கிறேன்...உங்களின் ஜோவியலான பதிவர் அறிமுகங்களை....வாழ்த்துக்கள் ஆ.வி...
ReplyDelete//நண்பனை வித்தியாசமா வாழ்த்தலாம்னு பார்த்தா எல்லோரும் விதவிதமா வாழ்த்திட்டாங்க....//
Deleteஉங்க பாணில சொல்லுங்க. வித்தியாசமா இருக்கும்.. ;-)
//உங்களின் ஜோவியலான பதிவர் அறிமுகங்களை...//
இல்லை இந்த முறை ஜோவியலா அறிமுகப் படுத்தப் போறதில்லை.. ஆனா உங்க முகத்துல சிரிப்பிருக்கும்படி பார்த்துக்கறேன்.. :-)
ஆரம்பம் பிரமாதம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஜனா..
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அப்பாதுரை சார்..
Deleteதாய்மொழியை விடுத்து பிறமொழிக்கு எப்படி வாசகர்கள் வருவாங்க... பாருங்க நம் மொழியில் ஆவி என்றாலும் பிரியத்துடன் பேச வருவாங்க..வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteவாங்க தோழி.. தமிழ் போல வருமா?
Deleteபதிவர் கோவை ஆவி பற்றிய உங்களின்
ReplyDeleteஅறிமுகம் மிகவும் அருமை ஆவி அவர்களே!
கலக்கு(றீ)(வீ)ங்க...
நன்றி நிஜாமுதீன்..
Deleteவலைச்சர
ReplyDeleteவருகைக்கு
வாழ்த்துகள்..!
நன்றி அம்மா!
DeletePadikiravangalukku Kot-Aavi varatha padi swarasiyama arambichirukeenga AAVI! Thodarnthu varam muluvathum aaravaram seithu kalakka manam niraintha nalvalthukkal dear!
ReplyDeleteநன்றி ஸார்.. உங்க ஆசிர்வாதம் கிடைச்சில்ல.. இனி டாப் கியர்ல வண்டிய எடுத்திட வேண்டியதுதான்!!
Deleteஆவி என்றதும் லைட்டா பயம் இருந்தும்
ReplyDeleteஓடினால் ஆம்பிளிங்சுக்கு அழகில்லையே
வந்துட்டேன்....!
ஆரம்பவே களை கட்டுது
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ஆவி...
ReplyDelete