அனுசுயா - தாராசுரம்
பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லுதல் பலருக்கும் ஈடுபாடான விசயமாகும். எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் என்றால் கொள்ளை பிரியம். நம்மவர்களின் கலை திறமையை கண்டு மகிழ இந்த ஒரு பிறவி போதாது. அத்தகைய கலை கருவூலங்கள் செறிந்தது நம் தமிழ்நாடு. புகழ்பெற்ற தலங்களுக்கு செல்லும் போது நம்மவர்கள் நேரமின்மை அல்லது போதிய விவரமின்மை காரணமாக சிலவற்றை தவற விட்டுவிடுகிறார்கள். உதாரணமாக காஞ்சிபுரம் செல்பவர்கள் பெரும்பாலும் ஏகாம்பரீசுவரர் கோவில், காமாட்சியம்மன் கோவில் போன்றவைகளை தரிசித்து விட்டு மண்சிற்ப கலைகருவூலமாக திகழும் காஞ்சி கைலாச நாதர் திருக்கோவிலை தவறவிட்டு விடுகிறார்கள். அதே போல கும்பகோணம் நகருக்கு செல்பவர்கள் கும்பேசுவரர் திருக்கோவில தரிசித்து விட்டு மகாமகம் குளம் போன்றவற்றுடன் திரும்பி விடுகிறார்கள். ஆனால் வெகு அருகே தாராசுரம் என்ற உலக புகழ்பெற்ற கோவில் உள்ளது. காஞ்சி கைலாச நாதர் கோவிலும் , கும்பகோணம் - தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில் இவ்விரண்டுமே
யுனெஸ்கோ நிறுவனத்தின் பட்டியலில் உள்ளவைகளாகும்.
இந்த தலம் பற்றிய மிகசிறந்த ஒளிபடங்களை காண http://sankriti.blogspot.in/2013/09/airateswara-temple-darasuram-uunesco.html வலைபதிவிற்க்கு சென்று பார்ப்பது மிக சிறப்பானது. இரண்டாம் ராஜராஜசோழனால் கட்ட பட்ட அழகிய கலைக் கூடமாகும் இந்த கோவில். கட்டடற்ற கலைக்களஞ்சியமான விக்கிப் பீடியாவில் ஐராவதேஸ்வரர் கோயில் பற்றி பின் வருமாறு விவரிக்க பட்டுள்ளது விரிவான செய்திக்கு விக்கி பக்கத்தினை முழுமையாக படியுங்கள்...
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.[2]
எனக்கு இது போன்ற பல இடங்களை பற்றி பலரும் எழுதும் கட்டுரைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. வரலாறு.காம் http://www.varalaaru.com தளத்தில் பலரும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். எனக்கு பிடித்த பயணகட்டுரை ஆசிரியராக திரு.ஜெயமோகனை கூறுவேன். அவருடைய சில பயணகட்டுரைகள் சில...
இந்தியப் பயணம் சில சுயவிதிகள் , இந்தியப் பயணம் 1 – புறப்பாடு
மீண்டுமோர் இந்தியப்பயணம் , அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா
நூறு நிலங்களின் மலை – 1
மேற்க் கண்ட மூன்று தொடர்களுமே மிகவும் மறக்க முடியாத தொடர்களாகும். எனது வாழ்நாளில் இந்த பாரத கண்டத்தை மேற்க்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு பயண வழியிலேனும் முழுமையாக பயணம் மேற்க் கொள்ளுவேனா என்று தெரியவில்லை.
புகழ்பெற்ற பிரபலங்களை விடுத்து வலைபதிவாளர்களில் பயணக்கட்டுரை எழுதுபவர்கள் சிலரின் அறிமுகம்..
மோகன்குமார் - வீடுதிரும்பல் என்ற பெயரில் வலைபதிவினை எழுதி வருகிறார். இதோ நமது எல்லையில் உள்ள கேரளா பற்றி இவரின் கட்டுரைகள் மிகவும் இரசிக்க தக்கவை. மலையக மக்களை பற்றி புரிந்து கொள்ள மிகவும் உதவும். நாம் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளன என்பதை இவர் கட்டுரைகள் மூலம் இறிய இயலுகிறது.
திருமதி.வேதா அவர்களும் மிக சிறப்பாக பயணக் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய சில முக்கிய கட்டுரைகள்.. பயணக் கட்டுரைகள் ,
பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) , பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) , பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)
துளசிதளம் என்று நம் அனைவராலும் புகழ்பெற்ற துளசிகோபால் அவர்களை விட்டுட்டு பயணகட்டுரைகள் பற்றிய பேச்சை முடிக்க முடியுமா.. :) :) அவருடைய சில முக்கிய கட்டுரைகள்.. கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1),பாலி நீ வாழி! , அக்கரையில் ஒரு நவராத்ரி (ப்ரிஸ்பேன் பயணம் 1) ... இப்படி ஏகப் பட்டது இருக்கு. வலைபதிவு முழுக்க படிச்சு முடிக்க ரொம்ப காலம் ஆகும்..!!
|
|
ஆஹா, பயண அறிமுகங்களா.. மாலையில் வந்து எல்லாருடைய பக்கங்களுக்கும் விஜயம் செய்கிறேன்..
ReplyDeleteசரித்திரக்குறிப்புகளுடன் அமைந்த சிறப்பான பதிவு
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட சுற்றுலா தளங்கள் அனைத்தும் அருமையானவை. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteஅருமையான பயண அனுபவங்கள் நிரம்பிய பதிவுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteசிறப்பான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅனைத்தும் அருமை
ReplyDeleteநன்றி
பயணங்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துகள். பயணஅனுபவங்களை படிப்பது எனக்கும் பிடித்தமானது. நன்றி.
ReplyDelete