07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 15, 2013

கோவை ஆவி விமலனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் விமலன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் கடும் பணிச்சுமையின் காரணமாக பதிவுகளை அறிமுகப் படுத்துவதற்குப் பதிலாக பதிவர்களை, அவர்களைப் பற்றிய கருத்துகளுடன் தளங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். 
பெரும்பாலும் தளங்களீல் உள்ள சிறந்த ஒரு பதிவில் இருந்து தேவையான வரிகளைத் தந்திருக்கிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                               : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் / தளங்கள்         : 035
அறிமுகப் படுத்திய பதிவுகள்                                   : 005
பெற்ற மறுமொழிகள்                                                    : 182
வருகை தந்தவர்கள்                                                       : 716


 நண்பர் விமலனை பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் கோவையினைச் சார்ந்துள்ள நண்பர் கோவை ஆவி. 

இவரது இயற்பெயர்   கோவை ஆனந்தராஜா விஜயராகவன் என்பதே.  இதன் சுருக்கமே கோவை ஆவி. 

கணினியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஆறு வருடங்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து விட்டு தற்சமயம் கோவையில் சுயதொழில் செய்து வருகிறார். 

2008 ல் முதன் முதலாக பதிவுலகிற்கு வந்தவர்.. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த வலைப்பதிவு வாசகர்கள் வரவேற்பு அதிகம் இல்லாத காரணத்தால், கோவை ஆவி என்ற பெயரில் 2010ல் தமிழில் ஒரு வலைப் பதிவை ஆரம்பித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் விரும்பி படிக்கும் வண்ணம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

நண்பர் கோவை ஆவியினை  வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் விமலன்

நல்வாழ்த்துகள் கோவை ஆவி 

நட்புடன் சீனா



23 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றி சீனா ஐயா.. நன்றி விமலன்..

    ReplyDelete
  3. வாங்க கோவை ஆவி திறம்பட ஆசிரியர் பணியாற்ற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க..

      Delete
  4. நாளை முதல் வலைச்சரப் பொறுப்பேற்கும் நண்பர் கோவை ஆவிக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. ஆவி அவர்களை சூடு பறக்க வரவேற்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. ஆவி பறக்க வரவேற்றிருக்கலாமே? :P

      Delete
  6. சிட்டுக்குருவி சிறகடித்துப் பறக்க ஆவி பறக்க வருகிறார் கோவை ஆனந்தராஜா அண்ணன்...

    வாங்க கலக்குங்க...

    ReplyDelete
  7. விமலன் தூயவன் பிறகு ஆவி .ஆவி பறக்கட்டும்(சூடான } வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, உங்க வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்.

      Delete
  8. வாங்க ஆவி
    உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த விமலன் அவர்களுக்கும், கலக்கப் போகும் இனிய நண்பர் ஆவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வணக்கம் விஜயராகவன். வருக. என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. கோவை ஆவியின் வலைச்சர வாரம் ஆவி பறக்க இருக்கட்டும்....

    வாழ்த்துகள் ஆவி!


    சென்ற வார ஆசிரியர் விமலனுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.. கலக்கிருவோம்..

      Delete
  12. சிறப்பாகப் பணிமுடித்த சகோதரர் விமலனுக்கும் இவ்வாரம் அசத்த இருக்கும் சகோதரர் கோவை ஆவி அவர்களும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நல்லவிதமாக தளங்களை அறிமுகம் செய்த அன்பின் விமலன் அவர்களுக்கு நன்றி!.. மீண்டும் ஒரு நல்வேளையில் சந்திக்கக் கூடும்!.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது