மனசு பேசுகிறது - திருவிழாக்கள்
வணக்கம் உறவுகளே...
“... மந்திரங்கள் ஓதவில்லை
அபிடேகங்கள்
செய்தது இல்லை
*****
“...எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,
உபயோகமற்று
எப்படியிருக்கீங்க? சரி வாங்க இன்னைக்கு தேரோட்டத்துக்குப் பொயிட்டு அப்படியே நண்பர்களையும் பார்த்துட்டு வருவோம்...
எப்பொழுதும் நகரத்துத் திருவிழாக்களைவிட
கிராமத்துத் திருவிழாக்கள் சற்றே கூடுதல் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை
எல்லோரும் அறிவோம்... உறவுகளுக்குச் சொல்லி ஊரில் எல்லோரும் ஒன்றாகக்கூடி கொண்டாடும்
திருவிழாக்கள் என்றால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம். அதுவும் ‘ஊர் கூடித்
தேரிழுத்தால்...’ என்ற பழமொழிக்கு ஏற்ப சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் ஒன்று கூட கண்டதேவி தேரோட்டம் மிகச்சிறப்பாக நடக்கும்.
(கண்டதேவி தேர்)
வருடா வருடம் ஆனி மாதம் தேரோட்டம்
நடக்கும். பத்து நாட்கள் திருவிழா... தினமும் கலை நிகழ்ச்சி... அதிகாலை சாமி திருவீதி உலா... ஒன்பதாம் நாள் தேரோட்டம்... சின்னத்தேர் பெரியதேர் என இரண்டு தேர்கள்... முன்னே சப்பரத்தில் சில சாமிகள்... என தேரோட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் ஒன்று கூட சிறப்பாக நடைபெறும்.
நாங்கள் பள்ளியில் படிக்கும் போது தேரோட்டம் என்பது மிகப்பெரிய விழா. அன்று
பள்ளிகளுக்கு விடுமுறை, சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி வீட்டில் ஆட்டுக்கறி அல்லது
நாட்டுக்கோழிக்கறிக் குழம்பு வைத்து சாப்பிட்டு மதியம் மூணு மணிக்கெல்லாம் தேர்
பாக்க கிளம்பிவிடுவோம். அப்போது பெரியவர்கள் தேரோட்டக்காசு என்று எல்லாருக்கும் கொடுப்பார்கள்.
எங்கள் ஊரும் கண்டதேவியும் அருகருகே என்பதால் ஐந்து நிமிட நடையில் வந்துவிடலாம்.
தூரத்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வண்டி கட்டி வருவார்கள்.
கோவிலின் முன்பாக அலங்கரித்த தேர் உயரமாக
நிற்பது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதன் முன்னே குதிரைகள் பாய்ந்து
வருவதுபோல் பொம்மை கட்டிவைத்திருப்பார்கள்... நான்கு நாட்டார்கள் பிடித்து இழுக்க
வேண்டிய வடங்கள் வீதியில் போடப்பட்டிருக்கும். நான்கு நாட்டாருக்கும் மாலை மரியாதை
செய்தபின்னர் அவர்களுக்கு உரிய வடத்தில் நாட்டார்கள் வந்து நிற்க, நாட்டம்பலங்கள் வடங்களில் நின்று துண்டைச் சுற்றி இழுக்கச் சொல்ல பெரியவர், சிறியவர், இளைஞர் என எல்லாருமாக சப்தம் எழுப்பியபடி இழுப்பார்கள்.. (நானும் வடம்பிடித்து இழுத்திருக்கிறேன்) இடையிடையே தேரை நிறுத்தவும் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டை போடுபவர்கள் முன்
சக்கரங்களின் அருகே கயிரைப் பிடித்தபடி வருவார்கள். நான்கு வீதியிலும் ஆங்காங்கே
நின்று கிளம்பும் போது குலுங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆனி மாதம் மாம்பழ சீசன் என்பதால் தேரோட்டம்
என்றால் மாம்பழத்திற்குப் பஞ்சம் இருக்காது. தேர் கிளம்பிய இடத்தை வந்தடைவதை 'நிலைக்குத்துதல்' என்று சொல்வோம். தேர் நிலைக்குத்திருச்சா என்று தேர் பார்த்து செல்லும்போது எதிர்படும்
எல்லாரும் கேட்பார்கள். நிலையை அடைந்ததும் மாம்பழங்களை அள்ளி வீசுவார்கள். அதைப்
பிடிக்க ஒரு கூட்டம் கூடிவிடும். தேரோட்டம் பார்த்து திரும்பும் போது மாம்பழம்,
பொரி உருண்டை என எல்லாம் வாங்கி வருவோம்.
முன்பெல்லாம் ரோடு சரியில்லாமல் இருந்ததால்
தேர் சில நேரங்களில் பதிந்து கொள்ளும். இழுத்துப் பார்த்து முடியவில்லை என்றால்
அடுத்த நாள் மீண்டும் இழுப்பார்கள். ஆனால் தற்போது ஊரணியைச் சுற்றி நான்கு
வீதிகளும் தார் ரோடாக இருப்பதால் கடகடவென நிலையை வந்து சேரும்.
எங்களுக்கு எல்லாம் சந்தோஷத்தைக் கொடுத்த
தேர்த் திருவிழா, கடந்த சில வருடங்களாக வடப்பிரச்சினையால் தடைபட்டுக் கிடக்கிறது.
ஒவ்வொரு வருட ஆனிமாதமும் இந்த வருடம் தேரோட்டம் நடக்குமா என்று ஏங்க வைத்துக்
கடந்து செல்கிறது. இனி தேரோட்டம் காணும் நாள் வருமா என்பது கேள்விக்குறியே..
“... என் வீட்டில் ஒரு பெரிய சண்டை
நடந்துகொண்டிருந்தது. நாம் வந்த நேரம் அப்படி என நினைத்துக்கொண்டே சாலையின் எதிரே
இருந்த டீக்கடைக்குள் நுழைந்தேன். அது பெரியசாமி தேவர் டீக்கடை. இப்போது பெரியசாமி
தேவர் புகைப்படத்தில் “எங்கள் இதய தெய்வம்”
என்று எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தார்.
அவரின் மூத்த மகன்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்தார். அங்கிருக்கும் யாருக்கும் என்னை
அடையாளம் தெரியவில்லை. ஒரு பெரிசு மட்டும் “தம்பி என்ன சோலியா வந்திருக்காப்ல?” என்றது. நான்
பதிலேதும் சொல்லாமல் ஒரு டீ சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது என் வீட்டிலிருந்து
ஒரு பெண்மணி ஓடிவந்தார். உற்றுப்பார்த்தேன். என அம்மாதான் அது. உடல் மெலிந்து தலை
நரை போட்டிருந்தது. ஆவேசமாக கையிலிருக்கும் லோட்டாவை டீக்கடையில் வைத்து விட்டு “ஒரு டீ பார்சல்
கொடுடா!” என்றார்...”
எழுத்தாளரின் பெயர்
|
கே.ஆர்.பி.செந்தில்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில்
பழக்க முடியாது என்று சொல்லும் கே.ஆர்.பி. அண்ணனின் எழுத்துக்கள் உணர்வுப்பூர்வமானவை
என்பதற்கு இதைப் படியுங்கள் இதைப்படியுங்கள் என்று சொன்னால் எல்லாப்பதிவுகளையும் சொல்ல வேண்டி வரும்.
அந்தளவுக்கு ஆழமான, அருமையான பகிர்வுகளைப் பகிர்கிறார்.
|
“... தனத்தின்
மகள் பிருந்தாவிற்கு ‘சந்தோஷில்’ பெரிய செலவழித்து பிறந்த ஆண்குழந்தையை கவனிக்க சென்றது அப்ரஞ்ஜிதான்.
ராசியான கையென்று வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு முதல் சக்கரைத் தண்ணி கொடுத்தது
அப்ரஞ்ஜிதான். முன்பெல்லாம் பிரசவத்திற்கு அவளைதான் அழைத்தார்கள். மொட்ட வீட்டு
நாகமணி, கீழத்தெரு காவேரியம்மாளுக்கு பத்து பத்து பிள்ளைகள் சளைக்காமல்
பிரசவம் பார்த்தாள், பிற்பாடு ஆஸ்பத்திரி,
கிளினிக் என வந்துவிட அவளுக்கு உடல்
ஒத்துழைப்பு குறைந்துவிட பார்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இன்றைக்கும்
குழந்தைக்கு முதல் சக்கரைத்தண்ணி அவள் கையால்தான், பிறகு குழந்தையை
குளிப்பாட்டுவதிலிருந்து பீதுணி அள்ளுவதுவரை அவள்தான் செய்வாள்...”
எழுத்தாளரின் பெயர்
|
கே.ஜே.அசோக்குமார்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
எழுதுவதென்பது வாசிப்பு திறன் கொண்ட
அனைவருக்கும் மிக உவப்பான செயல். அதிலும் மற்றவகளிடமிருந்து பெறும் அங்கீகாரம், அவ்வெழுத்தின்
மீதான நம் நம்பிக்கையை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்கிறது என்று சொல்லும்
இவரின் படைப்புகள் இணைய இதழ்களில் அதிகம் வலம் வந்திருக்கின்றன.
|
******
“... இந்த சுசீலாம்மா
கிடைப் பதற்கு முன்னால், திருமணமான முதல் மூன்று வருடங்களில்,
அவள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று வருடத்தில்
ஏழு பேர், வேலைக்கு வந்து போயிருக்கின்றனர்.
வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில், தங்களின் இன்றியமை யாமையைப் புரிந்து
கொண்ட பின், ஒவ்வொருவரும் பானுவைப் படுத்திய
பாட்டில், வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற அவளின்
உறுதி கூட, ஆட்டம் காணத் துவங்கியது..."
எழுத்தாளரின் பெயர்
|
லஷ்மி பாலகிருஷ்ணன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக
எதுவும் செய்யவில்லை என்று சொன்னாலும் அவரது எண்ணங்களை இங்கே அழகாகப்
பகிர்ந்திருக்கிறார். எல்லாவற்றையும் பகிர்கிறார். சிறுகதை சிலதே இருந்தாலும்
நல்ல கதைகள்... தொடர்ந்து சிறுகதைகளை எழுதுங்கள் என்பதே எல்லாருடைய சார்பாகவும் என் வேண்டுகோள் அம்மா.
|
“... மந்திரங்கள் ஓதவில்லை
மாதவங்கள் இயற்றவில்லை
வீண் பொய்
உரைத்ததில்லை
அருள்பாசுரங்கள்
பாடியது இல்லை
அன்னதானம் செய்ய
தப்பியது இல்லை..."
எழுத்தாளரின் பெயர்
|
ஸ்ரவாணி
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
எண்ணச் சுரங்கத்திலிருந்து கற்பனைச் செம்பு
சிறிது கலந்து தங்கக் கருத்துகளைக் கொண்டு கவியாபரணம் படைக்க விரும்பும் ஓர்
சராசரிப் பெண்தான் நான் என்று சொல்லும் கவிதாயினி சகோதரி ஸ்ரவாணி உண்மையிலேயே பதிவுலகின் தங்கச் சுரங்கம்தான்.
|
“... இந்நேரம் நீ வாசல்தெளித்து
கோலமிட்டுக் கொண்டிருக்கலாம்.
பிள்ளைகள் பள்ளிசெல்ல
ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம்.
பால்காரர்வந்து
பால்ஊற்றிச்சென்றிருப்பார்..."
எழுத்தாளரின் பெயர்
|
விமலன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
சிட்டுக் குருவியாய் பதில்களை அள்ளி
வீசும் விமலன் ஒரே நாளில் பல பதிவுகளைப் பகிர்கிறார். அதற்காக அவர் இடம் படங்கள்
அருமையானவையாக இருப்பது கூடுதல் சிறப்பு. எடுக்கும் தலைப்பில் சொல்ல வந்ததை
அழகாகச் சொல்கிறார். படித்துப் பாருங்கள் சிட்டுக்குருவியை உங்களுக்கும் பிடித்துப் போகும்.
|
“...எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,
பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம்.
பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,
ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,
எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.
ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்?
மனிதரைப் படித்தால்தான் நாமும்
மனிதராகலாம்
என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.”
எழுத்தாளரின் பெயர்
|
நா.முத்து நிலவன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
உலக விஷயமெல்லாம் அலசுவோம் என்று
சொல்லும் இவரைத் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் பார்த்திருக்கலாம் என்று
சொல்லியிருக்கிறார்... புதுக்கோட்டைக்காரரான இந்தத் தமிழாசிரியர், பல்சுவையாகப் பதிவுகளைத் தருகிறார். படித்துப் பாருங்கள் வளரும் கவிதை உங்கள் எண்ணத்தில் வளர்ந்து நிற்கும்.
|
“...இன்றைக்கு
எளிமையான , ருசியான, உடலுக்கு ஏற்றதான ஒரு ரெசிபி.
பாசிப்பயறில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் நீரைவடித்து வைத்தால் மறுநாள்
பயறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயறை வேகவைக்கவும். வெங்காயத்தை எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு
நறுக்கிக் கொள்ளவும் ...”
எழுத்தாளரின் பெயர்
|
திரு. ஜி.எம்.பாலசுப்பிரமணியன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
நான் ஒரு திறந்த புத்தகம் என்று
சொல்லும் 74 வயதான இளைஞர் ஐயா அவர்கள் சமையல் குறித்துப் பகிர்கிறார். 2013
ஏப்ரல் மாதம்தான் சமையலுக்கு என இந்தத் தளத்தை ஆரம்பித்து இருக்கிறார். பதிவுகள் கொஞ்சம்தான் இருக்கின்றன... இன்னும் பதிவார் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள் கண்டிப்பாக உங்களைச் சுண்டி இழுப்பார். மேலும் அவரின் மற்றொரு தளமான GMB WRITES-க்கும் ஒரு முறை சென்று வாருங்கள்.
|
“...சில ரகங்கள் ஒரு விதையும் சிலவை இரண்டு விதைகளும் நட வேண்டி இருக்கும். அதைத் தாண்டி “போக்கு” விதையும் நட வேண்டி இருக்கும். அது பிறகு. நஞ்சை புஞ்சை இரண்டிலும் பராமரிப்பு வேறு வேறாக இருக்கும். நீர்ப்பாசன வசதி இருக்கும் வயல்களில் பருத்தி விதை நட்டதும் வழக்கமான முறையில் நீர் பாய்ச்சுவார்கள். மேட்டு நிலம் என சொல்லப் படும் நீர்ப் பாசன வசதி இல்லாத வயல்களில் பருத்தி விதை நட்டதும் உடனே கையால் தான் நீர் ஊற்ற வேண்டும். சிறு வாளியில் நீர் எடுத்துக் கொண்டு தம்ப்ளர்கள் அல்லது சிறு சொம்புகள் கொண்டு நீர் ஊற்றுவோம். பருத்தி செடி ஓரளவு வளரும் வரை இப்படி நீர் ஊற்ற வேண்டும், மழைக் காலமாக இருந்தால் இது தேவை இல்லை..."
எழுத்தாளரின் பெயர்
|
சஞ்சய் காந்தி
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
நான் சிறு வயதில் பார்த்த கிராமம்
செயற்கைகோள் தொலைகாட்சிகளின் தயவிலும் பன்னாட்டு நிறுவன பணி ஆசைகளாலும் இப்போது
அதன் சுவடுகளை இழந்து நிற்கிறது. அந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட
இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே
இந்த டிஜிட்டல் கிராமம் என்று சொல்லும் நண்பர் கிராமத்து அழகை புகைப்படமாக
அதிகம் பகிர்ந்திருக்கிறார். படித்துப் பாருங்கள் கிராமத்து நினைவுகள் உங்களையும் தாலாட்டும்.
|
“...பேக்டேரியக்களால்
[Bacteria ] உருவாகும் நோய்களை ஒடுக்க கொடுக்கப்
படும் மருந்துகள் இவ்வளவு நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற வரைமுறையை யாரும்
கடை பிடிப்பதில்லை... இதனால் இந்த கிருமிகள் எந்த மருந்துகளுக்கும் தாக்கு
பிடிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன..."
எழுத்தாளரின் பெயர்
|
சூர்யாஜீவா
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
மொய்க்கு மொய் என்பது என் நோக்கம்
அல்ல.. மக்களின் அனைத்து உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் முயற்சியே, நண்பர்களின்
வலைபூக்களுக்கான என் வருகை என்று சொல்லும் இவர் மருத்துவம் குறித்த பகிர்வுகளில்
பெரும்பாலும் ஏமாற்றுக்காரரகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவுகளையே
பகிர்கிறார். படித்துப் பாருங்கள் உங்களுக்குள்ளும் ஆணிவிட்டு துளிர்க்க ஆரம்பிக்கும்.
|
“...இதில நாம்
யூடியூபின் யூஆர்எல முகவரியை பேஸ்ட் செய்யவும்.அடுத்து இதில் உள்ள டூல்ஸ் டேபினை
கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Convert Video Formats.Want only Audio.Save
only Favorite Scence.Resize the Video Size.Check the video Quality Information என ஐந்துவிதமான ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். தேவையானதை கிளிக்
செய்துகொள்ளவும்..."
எழுத்தாளரின் பெயர்
|
வேலன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
வலைப்பூவிற்கான
தொழில்நுட்பம் மட்டுமின்றி கணிப்பொறி பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமான
மென்பொருள்களை பற்றி விரிவாக எழுதி அதை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பையும்
கொடுத்து விடுகிறார். படித்துப் பாருங்கள்... அழகன் முருகனை எப்படி எல்லாருக்கும் பிடிக்குமோ அப்படியே இந்த வேலனையும் பிடித்துப் போகும்.
|
“... எதோ எனக்கு சொல்ல தெரியவில்லை.. இந்த பாடல் வரிகள் பிடித்து
நான் இந்த பதிவை போடுகிறேனா, இல்லை... இளையராஜாவின் இசையில் வந்த்தால் பிடித்து போயிற்றோ
எனக்கு சொல்ல தெரியவில்லை... கடந்த வாரத்தில் இருந்து இன்று வரை என் கண்ணியில் ஓலிக்கும்
இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...”
எழுத்தாளரின் பெயர்
|
அஸ்வின் நாராயணசாமி
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
நான் வித்தியாசங்களை பரிட்சித்து பார்க்கிறேன்.... வித்தியாசமான முடிவுகளுக்காக
என்று சொல்லும் ஆசிரியர் சினிமா குறித்து நிறைய எழுதுகிறார்… படித்துப் பாருங்கள்
அவர் சொன்ன நானும் என்பதை நீங்களும் பிடித்துக் கொள்வீர்கள்.
|
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவைநாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம்நாம்; இமயம்நாம்; காலத் தீயில் வேகாத பொசுங்காத தத்துவம் நாம்; வெங்கதிர்நாம்; திங்கள்நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரிநாம்; கங்கை யும்நாம்; |
-கற்பனைகளை கவியாக்கி நமக்களித்து வானுலகம் சென்ற கவிஞர் மீரா, சிவகங்கை
|
திருஞான சம்பந்தர் பற்றி வாரியார் சுவாமியின் சிஷ்யை திருமதி. தேசமங்கையர்கரசி அவர்களின் அருமையான உரை. பாருங்கள் தாங்களும் ரசிப்பீர்கள்...
மரங்கொத்தி
வீடு...
வீதியில்
கிடந்தது
வெட்டப்பட்ட
மரம்..!
சரிங்க... தேர்ப் பார்த்துவிட்டு அப்படியே நீர் நிறைந்த தம்மத்துப் (ஊரணி) படியில் அமர்ந்து நண்பர்களைப் பார்த்துட்டு அப்படியே காத்து வாங்கிட்டு வந்துட்டோம்... சரி நாளைக்கு மறுபடியும் சுத்தப் போவோம்... வரட்டுங்களா...
நன்றி.
மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.
|
|
வித்தியாசமான முறையில் அறிமுகங்கள். தொடரட்டும் ..வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteநன்றி சேகுமார் சார்,அறிமுகத்திற்கு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஎன்னைப் பற்றியும், எனது வலைப்பக்கம் பற்றியும் எழுதி அறிமுகப்படுத்திய அய்யா குமார் அவர்களுக்கும், வலைச்சரம் வலைப்பக்கக்குழுவினர்க்கும் என் அன்பான நன்றி. நேரம் கிடைக்கும்போது எனது மற்ற வலைப்படைப்புகளையும் படித்து கருத்துச் சொல்ல வேண்டுகிறேன். மீண்டும் நன்றி, வணக்கம்.
ReplyDeleteதங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன் -http://valarumkavithai.blogspot.in/
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteதேர்த் திருவிழா விவரணை அருமை.
ReplyDelete//கடந்த சில வருடங்களாக வடப்பிரச்சினையால் தடைபட்டுக் கிடக்கிறது.//
பிரச்சனை “வடம்” ஆக மட்டும் இருந்தால் எளிதில் தீர்க்கக் கூடியதாக இருக்கும். நாடோ வீடோ கட்சியோ கோவிலோ பொது நலத்தை மறந்து உள் அரசியல் ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன :)
மிகவும் சிரத்தையுடன் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள். பாராட்டுகள்.
பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteதம்பி குமாருக்கு நெகிழ்ச்சியும், நன்றியும்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்தும், பாராட்டுக்களும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteசிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteரசிக்கவைத்த அறிமுகங்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteபாராட்டுக்கள்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅறிமுகத்தோடு மட்டும் நின்று விடாமல் அதை
ReplyDeleteஅவரவர் தளங்களுக்குச் சென்று அறிவிப்பும் செய்வது
மனதைத் தொடுகிறது.இன்று கானொளியில் ஒரு பெண் பேச்சாளர் ....
மகிழ்ந்தேன். தளங்களில் இணைந்தேன்.
தேரோட்ட முதலும் குறுங்கவிதை முடிவும் அருமை.
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
உழவன் கவிதை உங்களைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை.
மற்ற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மீண்டும் உங்களின் நாளைய பதிவை எதிர் நோக்கி ஆவலுடன் .......
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅன்பிற்கு நன்றி சே. குமார். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteநண்பரே
ReplyDeleteஇப்பதிவிலும் வீசும் வலைப்பூக்கள் வாசம் கம கம என்று மணக்கிறது வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஇன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பான பதிவுகளைதேடி தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கு.....?
நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅறிமுகப் படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் உழைப்பு ஒவ்வொரு நாள் பகிர்விலும் தெரிகிறது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ReplyDelete