ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்,,,,
➦➠ by:
சிட்டுக்குருவி
வணக்கம் இன்று
நான்காவது நாளாக,,,,,,,
சினிமா என்ன செய்யும்,என்னவும் செய்யும்/விமர்சனமாக சொல்கிறார்
பரிதி முத்துராசன் அவர்கள்.கவிதை தொகுப்பதைப்போல தன் வலைப்பக்கம் (பரி திமுத்துராசன்)ல்
அழகு பட சினிமாக்களை விமர்சனம் செய்கிறார்.தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு,ஹிந்தி
என சிறகு விரிக்கிறார்.சினிமா விமர்சனம் ஒருபக்கம்
இருக்க அதற்காக அவர் வைத்துள்ள படங்கள் இருக்கிறதே அடேயப்பா,மனம் கொள்ளை போகிறதுதான்.வாருங்களேன்
அவரது வலைத்தளம் பக்கம் செல்வோம்.
================
தன் மனம் சூல் நினைவுகளை எழுத்தாக்கி விடுகிற திரு.பாண்டியக்
கண் ணன் அவர்களின் வலைத்தளம்.ஒளி இதுதான் அவரது வலைத்தளத்தின் பெயர்.மண்ணும்,மண் சார்ந்த
எளிமையான மக்களின் வாழ்வையும் சொல்லிச் செல்கிற இவரது எழுத்து மிகவும் வலிமை வாய்ந்ததாயும்,சாதாரண
மக்களின் வாழ்நிலை பற்றி பேசிச்செல்வதாகவும்/இவரின் சலவான் நாவல் தமிழ் இலக்கிய ச்சூழலில்
பேசப்பட்ட ஒன்று. இதோ அவரது எழுத்துக்களிலிருந்து கொஞ்சமாய்,,,,
“எனக்கும் ஒன்னமாதிரியே சடங்கு கழிச்சாங்க சீறு செனத்தி நெறயா வத்துச்சி வீட்டசுத்தி சனக்கூட்டம் மொசு, மொசுன்னு திருவிழா கூட்டமாதிறி கெடந் துச்சி மூனானேத்து குச்சுலுக்கு அனுப்பி வச்சி மட்டத்தே தொழுவுக்குள்ள போட்டு தனி தீனிகுடுத்து வளப்பாங்களே அதெ மாதிறி எனக்கும் நல்ல தீனி
தான் சமஞ்சப்போ திங்கிறதீனித்தான் சாகளவும் பொம்பளைக்கு உரம் இல்லைன்னா ஒத்த புள்ளைய பெத்ததும் ஒதுக்கி வச்சிட்டு ஆம்பள அடுத்த வட்ட போயிறுவான் இத மனசுலேவச்சிக்கிட்டுத்தான் தாய் வீட்டுலையும் தாய் மாமன் வீட்டுலையும் முப்பது நாளைக்கும்முப்பாலும் கறியும் சோறு தான் நல்லெண்ணையும் நாட்டுகோழியும் தின்னு தின்னு இன்னக்கி நெனச்
சாலும் கொமட்டுது குச்சுல இருக்குறப்ப கவனிச்ச கவனிப்பபாத்துட்டு வாழ்க்க முழுசும் குச்சுலேயே இருக்கனும்ன்னு தொனுச்சி ஒரு வாரம் கழி ஞ்சி ஒம்பதாம் நாலு நடுக்குரு சாமம் சத்தம் கேட்டு எந்திரிச்சி பார்த்தென் நரி ஊளையிடுரசத்தம் படக்குன்னு படுத்துக்கிட்டேன் . கூட யாரும் இருக்க கூடாது ஆனா எங்கம்மாயிஎன்மேல இருந்த பாசத்துலே குச்சுக்லுக்கு வெளிய கம்மா கறையில படுத்துருந்தாஅதனால பயம் இல்லாம படுத்துக் கிட்டேன் செத்த நேரத்துலே யாரோ சலப்புர சத்தம்அதுக்கடுத்தாப்புலே நாய் சத்தம் ‘’சேடு சேடுன்னு அம்மாயி நாயே வேறட்டுர சத்தம்கேட்டிச்சி அதனாலநிம்மதியாபடுத்துக்கிட்டேன்அப்புரம்ஒருஅனுக்கத்தையும்கானாமகொஞ்ச நேரத்துல யாரோ கத்தி கூப்பாடு போடுரறதும் அப்புறம் விடுடா ங்கடா என்னைய விடுங்க டான்னு பெரிசா கத்து கத்துன்னு கத்திட்டு மெல்லமெல்லமுனைங்கி அடங்கிருச்சிஒடனையே இழுத்து பொத்திக்கிட்டு தூங்காரம்பிச்சிட்டேன்”.இது அவர் தொடராக எழுதி வரும் நீர் வட்டம் நாவலிருந்து ஒரு பகுதி.
************************
கரிசல்குளத்தானின் வயக்காடு
என கவிதை பாடிச்செல்கிறார்.வத்திராயிருப்பு தெ,சு கவுதமன் விளைகிறா நிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாகிப்போன பிபு சென்னைக்கு குடியேறி விட்ட இவர் கண்ணில் பட்ட நிகழ்வுகலை
கயிதையாக்குகிறார். சமுதாயம் இவரிடம் வேறென்ன எதிர்பார்க்கும் இவரது இச்செயலைத்தவிர,வாழ்த்துவோம்
அனைவரும் தொடர்ந்து எழுதட்டும் நிறைய,சொல்லிப்போகட்டும்,கண்ணில் பட்டவையையும்,மனம்
பாதிதவைகளையுமாய்/இதோ அவரது வலைத்தளம் காண்பித்த கவிதைகள்
அவள் காதிலே
ரகசியமாய் காதல் பேசும்போது
தவிர்க்க முடிவதில்லை
ஒட்டுக்கேட்கும் காதணிகளை!
ரகசியமாய் காதல் பேசும்போது
தவிர்க்க முடிவதில்லை
ஒட்டுக்கேட்கும் காதணிகளை!
******************
டாஸ்மாக் பார் கடக்கையில்
புளிச்ச பீர் வாசம்
அடுக்களையிலிருந்து வரும்
அரைத்த மசாலா வாசம்
கோவில் பிரகாரத்தின்
விளக்கெண்ணெய் வாசம்
சாவு வீட்டில் போர்த்திய
ரோஜாப்பூக்களின் வாசம்
நேற்றைய மழையில்
கிளம்பிய மண்வாசம்
அத்தனையுமற்ற
வெறிச்சோடிய உலகம்
புதிதாயிருக்கிறது
ஜலதோஷம் பிடித்த எனக்கு!
புளிச்ச பீர் வாசம்
அடுக்களையிலிருந்து வரும்
அரைத்த மசாலா வாசம்
கோவில் பிரகாரத்தின்
விளக்கெண்ணெய் வாசம்
சாவு வீட்டில் போர்த்திய
ரோஜாப்பூக்களின் வாசம்
நேற்றைய மழையில்
கிளம்பிய மண்வாசம்
அத்தனையுமற்ற
வெறிச்சோடிய உலகம்
புதிதாயிருக்கிறது
ஜலதோஷம் பிடித்த எனக்கு!
இப்படியெல்லாம் கவிதை எழுதுபவரின்
வலைப்பக்கம் செல்வோம் வாருங்கள்/
*8888********8888*********8888888*************
தாய் தெள்ளித்தின்ற மண்,அள்ளித்தின்ற
சாம்பல்,அது சுமந்த மண்பரப்பு ,மண் சுமந்த மனிதர்கள்,மனிதர்கள் சுமந்த
வீதிகள்.வீதிசுமந்து நின்ற உறவுகள்,உறவுகள் அடைகாத்த பழக்கங்கள், பழக்க ங்களில்
விளைகிற செயல்கள்,செயல் ஒன்றே சிறந்த சொல் என நினைக்கிற உழைப்பின் மனிதர்கள் என
யாவருமாய் நிறைத்து நிர்கிற சொந்த மண்னை இவரை விட வேறு யாரும் இவ்வளவு
பிரியமாகவும், ஒட்டுதலாயும்,ஈரமாகவும் சொல்லிச்செல்ல முடியுமா எனத்தெரியவில்லை.
அரசன்.சே அவர்களின் கரைசேராஅலை வலைத்தளம் அதை செய்கிறது.அவரது
எழுத்திலிருந்து,,,,,,
நான்காம் தலைமுறை
சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வறுமையும் சொல்லும்படி இல்லை. இளமை முறுக்கு, வாலிபச் செருக்கு என்று விதவிதமாய் திட்டுவாள் முத்தம்மாள் பாட்டி! சுருக்கம் விழுந்த தேகம் , சுருள் சுருளாய் முடி. இரவிக்கை அணியாத உடல். மனசு இன்னும் சுறுசுறுப்பாய் தான் இருக்கிறது, உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று சமீப காலமாக அடிக்கடி அவள் சொல்லி கேட்கமுடிகிறது! என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது! பறவைகளோடு, மனிதர்களும் இரைதேடும் அறுவடைக் காலங்களில் நின்று கூட பேச நேரமிருக்காது. அந்த அவசரக் காலங்களில் இவளுக்கு அடை காக்கும் கோழி தான் தோழி!
இப்படி
மண்வாசம் மணக்கச்செய்கிற வலைத்தளம் பக்கம் போய்த்தான் வருவோமே/
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மனசு இது
வார்த்தைகளின் வசந்த ஊஞ்சல் என தன் வலைத்தலம்பற்றி கூறிச்செல்கிற சே.குமார்
அவர்கள் கதை,கவிதை,சொல்ச்சித்திரம் என நிறைய எழுதிச்செல்கிறார்.அப்படிச்செல்கிற
அவருக்கு பிடித்தமான பதிவாகவும் நம் மனம் கவர்ந்ததாயும் இருக்கிறதிலிருந்து
கொஞ்சமாய்,,,
மனசு பேசுகிறது: மகாகவி பாரதி
"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
மகாகவி பாரதியின் நினைவு நாள் இன்று. அந்த மகாகவிஞனை எத்தனை பேர் இந்த நாளில் நினைக்கிறோம் என்பதை அவரது இறப்புக்கு வந்தவர்களைப் போல் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மாளின் மகனான சுப்பிரமணிய பாரதி, 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் - 11 ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். சுப்பையா என்று அழைக்கப்பட்ட பாரதி தனது 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார்.
தமிழ் மீது தீராத காதல் கொண்ட பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று பாடியவர் பாரதி.
1904ஆம் ஆண்டு சுதேசிமித்திரனில் உதவியாசிரியராக பணியாற்றிய பாரதி 1906ஆம் ஆண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் தான் மறைவதற்கு முன்னர் சில மாதங்கள் மீண்டும் உதவியாசிரியராக பணியாற்றினார்.மேலும் சக்கரவர்த்தினி, இந்தியா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிக்கைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.,,,,,,,,,,,,,,,,,,
இப்படியெல்லாம்சொல்லிச்செல்லும்
அவரது வலைப்பக்கம் வாருங்கள்.
வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/
விமலன்
|
|
அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் திண்டுகல் தனபாலன் சார்.நன்றி வருகைக்கு/
Deleteஅருமையான தளங்களை
ReplyDeleteமிக நேர்த்தியாக பதிவு செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்.நன்றி வருகைக்கு/
Deleteவிமலன் அண்ணேன்...உங்க அறிமுகத்தில்
ReplyDeleteகரிசல்குளத்தானின் வயக்காடு!
கவிதைகளை மிதிக்காமல் ரசிக்கவும்!
.........எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
அறிமுகத்திற்கு நன்றி
வணக்கம் பரிதி முத்துரசன் சார்.நன்றி வருகைக்கு/
Deleteஅன்பின் விமலன் - ஏற்கனவே ஒரு மறுமொழியில் குறிப்பீட்டிருந்தேன் - தளங்களை அறிமுகப் படுத்துவதை விட்டு விட்டு பதிவுகளை அறிமுகப் படுத்துங்கள் என்று - தங்களூக்குப் பிடித்த தளங்களுக்குச் சென்று அத்தளத்தில் உள்ள சிறந்த பதிவுகளை அறிமுகப் படுத்துங்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் சீனா சார்.என் பாணியில் நான் செய்கிறேன்.வலைச்சர பாணி என ஒன்று தனியாக இருக்குமானால் கூறிவிடுங்களேன்/
Deleteவணக்கம்
ReplyDeleteவிமலன்(அண்ணா)
இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் சார்.நன்றி வருகைக்கு/
Deleteநல்ல வலைத் தளங்களின் அறிமுகம்.. அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கம் துரை செல்வராஜ் சார்.நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் விமலன் சார்...
ReplyDeleteதள அறிமுகத்துக்கு நன்றி.
இன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... தள அறிமுகத்தில் GIF பைல் மூலம் படங்களைப் பகிரும் உங்கள் பாங்கு அருமை....
வாழ்த்துக்கள்...
வணக்கம் சே.குமார் சார்.நன்றி வருகைக்கு/
Deleteஅறிமுகத்திற்கு நன்றி. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் மாதேவி அவர்களே.நன்றி வருகைக்கு/
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார்.நன்றி வருகைக்கு/
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிமலன் சார், அறிமுகங்கள் சிறப்பாக உள்ளன.. படங்களின் அளவுகளை குறைத்தல் நலம். தயவு செய்து பொருத்தமான படங்களை மட்டும் இணைக்கவும்
Deleteவணக்கம் டீ.என் முரளிதரன் சார்.நன்றி வருகைக்கு/
Deleteதளங்களையும் அறிமுகப்படுத்தி, அதிலிருந்து சில
ReplyDeleteபகுதிகளையும் இணைப்பாய் தருவது சுவையாகவே
இருக்கின்றது. தொடருங்கள்!
நன்றி கலையன்பன் சார் வருகைக்கு/
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை.. !!!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியவருக்கு, அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்...!!!
எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்
வாசித்துப் பயன்பெறுங்கள்..
அருமையான தளங்களின் அறிமுகம்! சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சுப்புடு சார் நன்றி வருகைக்கு/
ReplyDeleteவணக்கம் சுரேஷ் சார் நன்றி வருகைக்கு/
ReplyDeleteவயல்வெளியில் உலாவிய அனுபவத்தை தந்தது விமலன் சார்
ReplyDelete