ஆவி கொலை வழக்கு- 1 (துப்பறியும் நிபுணர் வருகை)
➦➠ by:
கோவை ஆவி
(இதில் வரும் கதாப்பாத்திரங்கள் நிஜம். ஆனால் இது ஒரு கற்பனைக் கதை மட்டுமே.. இது யாரையும் புண்படுத்த அல்ல.. அதையும் மீறி புண்பட்டிருந்தால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் "கொல்லுகிறோம்"..)
பல நாட்களாக எல்லாரும் மறந்து விட்டிருந்த "ஆவி கொலை வழக்கை" துப்பறிய வந்திருந்த டிடெக்டிவ் நஸ்ரியா வழக்கின் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். தன் வசீகரிக்கும் விழியினில் வழக்கின் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி ஆவி கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு இறந்திருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. நடு ஹாலில் வைத்து நிகழ்த்தப் பட்ட இந்த கொடூரத்தை யார் செய்திருப்பார்கள் என்று காவலதிகாரிகளின் விசாரணையில் கிடைத்த ஆவணங்களும் அதில் இருந்தன..
இறப்பதற்கு முன்பு கணினியில் யாரோ ஒரு பதிவரை கண்டித்து பதிவு எழுதிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. முழுதாய் எழுதி முடிக்கப்படாத அந்த பதிவில் தனக்கு அந்த பதிவர் கொலை மிரட்டல் கொடுத்ததாய் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதைப் பார்த்த நஸ்ரியா ஆவியை கொலை செய்தது ஒரு பதிவராகவோ, முகநூல் நண்பராகவோ இருக்கலாம் என்பதால் ஆவியின் வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அவருக்கு ஈ-மெயில் அனுப்பிய பதிவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்.
முதல் சந்தேகமாய் ராம்போர்ட் (Ramfort) என்ற முகமூடிக்கு பின் "அறிவுக் குடிசை" எனும் பெயரில் ஆங்கிலத்தில் எழுதும் ராகுல். இவருடைய வலைப்பூவில் புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும், நமக்கு முற்றிலும் புதியதாய் தோன்றும் தகவல்களையும் பரிமாறியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய "ஈ-பால்" தொழில் நுட்பம் பற்றிய பதிவு நமக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் தரக்கூடியது. ஆவிக்கும் தொழில் நுட்பத்துக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருப்பதாலும், ஆவி கடைசியாக செல்பேசியில் கல்லூரி மாணவரான இவருடன்தான் பேசியிருக்கிறார் என்பதும் இவரை சந்தேக லிஸ்டில் முதலில் வைக்க வைத்தது.
அடுத்தது CJ என்றழைக்கப்படும் ஜெயராஜ், இவர் தனது வலைப்பூவில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு சிறப்பான பதிவை கொடுத்தார். அதன் பின் தலைமறைவாகி "ஜாவா" தீவில் சுற்றுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. மற்றொருவர் ஆவியைப் போலவே கமலின் தீவிர பக்தர் முனியாண்டி. இவருடைய அடிச்சுவடு எனும் வலைதளத்தில் அறை நண்பன் எனும் கவிதையில் நட்பின் பெருமையை அழகாய் விவரித்திருந்தார். இவரும் பதிவுலகில் இருந்து பிப்ரவரி 2012 க்கு பிறகு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சந்தேகப் பட்டியலில் இருக்கும் மற்றொரு பதிவர் LK எனும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். இவர் கவிதை, கதைகள், அரசியல் என பல வகை படைப்புகள் கொடுத்தாலும் இவருடைய ஆடுகளம் எனும் வலைப்பூவில் சச்சின் விடைபெற்ற அன்று அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை எடுத்துரைக்கிறார். எப்போதும் ஆவியின் முகநூல் வரிகளுக்கு முதல் ஆளாக"லைக்" போடும் இவர் சமீப காலமாய் லைக் எதுவும் போடாதது இவர் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மனதோடு மட்டும் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவரும் கௌசல்யா மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை பற்றி எழுதியிருந்தார். உருக்கமான அந்தப் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் MJ வை பிடிக்க ஆரம்பிக்கும். ஆவிக்கும் மிகவும் பிடித்த MJ வை பற்றி எழுதிய இவர் கொலை செய்திருப்பாரோ எனவும் தோன்றுகிறது.
கோப்புகளை படித்துக் கொண்டிருந்த நஸ்ரியாவின் கண்களில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாய் கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. தனக்காக "ஆவிப்பா" எழுதி உருகி உருகி காதலித்த ஆவியை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற எண்ணம் மனதில் எழ தானும் ஆவியை விரும்பிய போதும் தான் பார்க்கும் பணியின் காரணம் அதை வெளிப்படுத்த முடியாமல் போனதும், அதை ராஜினாமா செய்துவிட்டு ஆவியிடம் தன் காதல் சொல்ல நினைத்திருந்ததும் அதற்குள் இந்த துர்சம்பவம் நிகழ்ந்ததால் தானே இதை துப்பறிய முடிவெடுத்து வந்ததை யோசித்துக் கொண்டிருக்கையில் நஸ்ரியாவின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரவு பதினொன்றரை மணிக்கு கதவை தட்டுவது யார் என்று சென்று திறக்க, அங்கே..
தொடரும்..
|
|
அட... துப்பறியும் பாணியில் வலைச்சர வாரமா.... சூப்பர்.. கலக்குங்க... ஒவ்வொரு சுட்டியையும் போய் பார்க்கிறேன்....
ReplyDeleteசொன்ன மாதிரியே முதல் ஆளா வந்துட்டீங்களே.. DD பின்னூட்ட சூறாவளின்னா நீங்க "பின்னூட்டத் தென்றல்"..
Deleteஇதுவரை யாரும் கடைபிடிக்காத பாணியில் அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் நண்பரே. தொடருங்கள்.
ReplyDeleteநன்றிங்க.. "தனித்துவம்" - என் குருநாதர் பாலகணேஷ் சார்கிட்ட இருந்து கத்துகிட்டது..
DeleteI'm honoured! Thanks dear AAVI!
DeletePleasure is mine, Sir!!
DeleteFF Nazriya ingayum vanthuttala? haa... ha... detective story type il introduction method is very nice and interesting to read. keep it up. some bloggers are new to me. will see. Many thanks to you for the nice introductions. thodarnthu kalakka AAVI, THE BOSSkku my heartful wishes!
ReplyDeleteநன்றி சார்.. நீண்ட நாள் தவத்துக்கு பின் பதிவுலகுக்கு வர்றீங்க.. முதன் முதலில் எனக்கு பின்னூட்டம் இட்டதில் நான் பாக்கியவான் ஆனேன்..
Deleteஆவி சூப்பர். வித்தியாசமான தொடக்கம், ஆவியை விசாரித்தால் பல பதிவர்கள் பற்றி தெரிய வரும். தொடரட்டும் விசாரணை
ReplyDeleteஆவிய விசாரிக்கணுமா? அப்ப நீங்க "ஆவி அமுதா" கிட்டதான் போகணும்!! ;-)
Deleteவணக்கம்
ReplyDeleteகோவை ஆவி(அண்ணா)
இன்றைய வலைச்சரஅறிமுகம் ஒரு தனிச் சிறப்பு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை. அறியாத வலைப்பூக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.. தொடர்ந்து படியுங்கள்..
Deleteவித்தியாசமான சுவாரஸ்யமான முறையில்
ReplyDeleteபதிவர்களை அறிமுகம் செய்வது அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.. தொடர்ந்து வாருங்கள்!
Deletetha.ma 2
ReplyDeleteநன்றி.
Deleteஇரவு பதினொன்றரை மணிக்கு கதவை தட்டுவது யார் என்று சென்று திறக்க, அங்கே.. ஆ..வி...!
ReplyDeleteவித்தியாச அறிமுகங்கள்..
காணவில்லை விளம்பரம் ..
பாராட்டுக்கள்..!
பதிவை ரசித்தமைக்கு நன்றி அம்மா!
Deleteநாளை வரை காத்திருங்கள் அங்கே யார் என்று தெரிந்து கொள்ள.. :-)
வியக்க வைக்கும் வித்தியாசமான அணுகுமுறை. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி அப்பாதுரை சார்!!
Deleteவித்தியாசமான அணுகு முறை...
ReplyDeleteவலைச்சர ஆசிரியரானதர்க்கு வாழ்த்துகள்...
நன்றி தம்பி..
Deleteஆவி என்றால் சும்மாவா...?
ReplyDeleteபாராட்டுக்கள்....
DD, இன்னைக்கு ரொம்ப லேட்.. உங்க இடத்த ஸ்கூல் பையன் பிடிச்சுகிட்டாரு..
Deleteஅட..ஆவித்தம்பி வித்தியாசமாக கலக்குது பாருங்க..சூப்பர்..தொடருங்க...
ReplyDeleteசெல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் "கொல்லுகிறோம்".///இப்படி எல்லாம் சொல்லி சொல்லி கிலி காட்டக்கூடாது ஆமா..:)
ஹாஹா..
Deleteபொருத்தமா அமைந்ததுங்கள் பெயரும் !! (ஆவி கையெடுத்துக் கும்பிட்டுக்
ReplyDeleteகேட்கின்றோம் எங்கள் வீட்டுக் கதவை மறந்து விடுங்கள் பக்கத்தில
நிறையப் பாட்டுப் பாடும் புலவர்கள் இருக்காங்க ம்ம்ம்ம் ....சூட மீன்
பொரியல் வேணும் என்றால் அந்த வீட்டு வளவுக்க வைத்து விடுகின்றேன் !!)
ஆவி வாழ்க அவர் பணி ஓங்குக :))) //வாழ்த்துக்கள் சகோ கலக்குங்க :)
அதெல்லாம் எங்க துப்பறியும் நிபுணர்கிட்ட பேசிக்கோங்க.. அவங்க யாரை சந்தேகப்பட்டாலும் அவங்க வீட்டு கதவு தட்டப்படும்.. திறக்கலேன உடைக்கப்படும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Delete//டிடெக்டிவ் நஸ்ரியா // இங்கையும் நஸ்ரியாவா... யோவ் இதெல்லாம் அல்டிமேட் அநியாயம்யா...
ReplyDeleteவித்தியாசமான உங்க டீலிங் புடிச்சிருக்கு..
நஸ்ரியாவுக்கு கொ.பா.சே வா இருக்கலாம்யா ஆனா கோட்சேவா இருக்கக் கூடாது...
AAVI D BOSS ROCKS
//அல்டிமேட் அநியாயம்// ஹஹஹா..
Delete//ஆனா கோட்சேவா இருக்கக் கூடாது//
நஸ்ரியாவுக்கு கோட்டா (Coat) இருப்பேனே தவிர கோட்சேவா இருக்க மாட்டேன்.. :-)
//AAVI D BOSS ROCKS//
நன்றி சீனு..
வித்தியாசமான நடையில் அறிமுகங்கள் எல்லாம் சிறப்பா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க..
Deleteஅட போட வைத்த வித்தியாசமான நடை... எதற்கும் ஆவிய பூனைப்படைகள் வைத்து பாதுகாப்பாக எங்கும் போக சொல்லுங்க.. யாராவது கடத்திட போறாங்க..
ReplyDeleteவலைச்சர பாதுகாப்பு இரும்பு கோட்டை போல் பலம் மிக்கது பயப்பட தேவை இல்லை.
Delete@சசிகலா - ஹஹஹா.. ஆவிக்கு பூனைப் பாதுகாப்பா? விந்தையாக உள்ளதே நீங்கள் சொல்வது..
Deleteகலாகுமரன் சாரே சொல்லிட்டாரு.. அப்ப பயப்பட வேண்டாம்.. ;-)
Deleteஅன்பின் ஆவி - தமிழ் மண வாக்கு ஐந்து - விதி முறைகளின் படி தமிழ் வலைப்பதிவுகள் மட்டுமே அறிமுகப் படுத்தப்பட வேண்டும். மற்ற வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ய வேண்டாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசரி ஐயா, இனிவரும் நாட்களில் இதை நினைவில் கொள்கிறேன்..
Deleteவித்தியாசமான நடை!.. அன்பின் ஆவியின் பாணி அசத்தல்!.. வாழ்க.. வளர்க!..
ReplyDeleteநன்றி துரை அவர்களே!!
Deleteஅவரோட கொலையையே இன்னும் ஜீரணிக்க முடியல...
ReplyDeleteஇதுல நான் கொலை பண்ணி இருப்பேனா னானு சந்தேகம் வேறயா ?! :-)
மிக அருமையான எழுத்து நடை, ரசிக்க வைக்கும் விவரிப்பு ...மிக பிடித்துவிட்டது எனக்கும் ஆவி !!!! :-)
அறிமுகத்திற்கு என் அன்பான நன்றிகள் !!
சந்தேகம் தானே.. நீங்க கொலை செய்திருக்க மாட்டீங்கன்னு ஆவி நம்புறேன். போதுமா.. :-)
Deleteஎழுத்து நடை, விவரிப்பு உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
வித்தியாசமான ஒரு பாணி..... துப்பறியும் நஸ்ரியா சுட்டிக் காண்பித்த பதிவர்களுக்கு வாழ்த்துகள்.....
ReplyDeleteவருகைக்கு நன்றி வெங்கட் சார்..
Deleteமிகவும் வித்தியாசமான பாணியில் வலைச்சர அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteசந்தடி சாக்கில நஸ்ரியா காதலை சொல்ல வந்தாங்கன்னு உங்க ஆசையை தீர்த்துக்கிட்டீங்க...ம்..நடத்துங்க ..நடத்துங்க....
ReplyDeleteகதையில் கூட ஏத்துக்க மாட்டீங்கன்னா எப்படி மேடம்..
Deleteஅன்பின் ஆவி - அருமையான அறிமுகங்கள் - அறிமுகப் படுத்தப் பட்ட தமிழ்ப் பதிவுகள் அனைத்தும் சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து , மறுமொழகளூம் இட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா.. நாளை முதல் தமிழ் பதிவுகள் மட்டும் அறிமுகப்படுத்துகிறேன்..
Deleteவித்யாசமான அறிமுக பதிவு...
ReplyDeleteஎங்கும் நஸ்ரியா எதிலும் நஸ்ரியா.... கலக்குங்க
உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் !
ரசிகர் மன்றம் எல்லாம் வச்சுட்டு, நாம எழுதற கதையில நாமளே சேத்துக்கலேனா எப்புடி??
Deleteஆவி வழக்கில் துப்பறியும் அவசரத்தில்..தவறான கதவை தட்டியிருப்பினும் பிழை ஏற்புடையதே. துப்பறியும் தேடலில் இன்னும் யார் யார் மாட்டுவாங்களே ஆவல் எல்லோரையும் போல் எனக்கும்.
ReplyDeleteகதையை உள்வாங்கி அதை ரசித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.. தொடர்ந்து வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
Deleteவித்தியாசமாய்த்தான் போய்க்கிட்டிருக்கு.
ReplyDeleteஅதனால நாளையும் வருவோம். (இறை நாட்டம்)
தொடரும்...
கண்டிப்பா வாங்க நிஜாமுதீன்..
Delete