ஆவி கொலை வழக்கு- 6 ( காதலர் சங்கமம்)
➦➠ by:
கோவை ஆவி
ஆவியை அருகில் பார்த்த சந்தோஷத்தில் நஸ்ரியாவின் கண்கள் மழை பொழிந்தது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர ஆவியை கட்டியணைத்துக் கொண்டாள். அவன் கன்னங்களை தொட்டுப் பார்த்து எல்லையில்லா ஆனந்தம் கண்களில் கொப்பளிக்க மகிழ்ச்சியில் பேச மறந்து சிலையாய் நின்றாள். "ஏன்டா, ஏன் இப்படி ஒரு நாடகம்" செல்லமாய் அவன் நெஞ்சிலே குத்தினாள். வாஞ்சையுடன் அவள் கேசத்தை வருடி, அவள் கன்னங்களில் வழிந்தோடிய நீரைத் துடைத்துவிட்டான். "எல்லாம் இந்த தேவதைக்காக தான்" என்றான். "இடியட்.. இப்படியா விளையாடுவே.. எவ்ளோ பீல் பண்ணினேன் தெரியுமா?" என்றவளை "நீ மட்டும்.. காதல் சொல்லி, கவிதை எழுதி, உன்னை துரத்தி துரத்தி காதல் செய்த என்னை நீ கண்டுக்கவே இல்லையே"
"ஆமா, டீவில நியுஸ் வந்துதே, எல்லா பிளாக்கிலயும் உன்னை பற்றி எழுதியிருந்தாங்களே.." "நீ வெளிய வா, சொல்றேன்" என்று அந்த அறையின் கதவை திறந்து வெளியே வந்த போது அங்கே பெரிய பதிவர் கூட்டமே நின்றிருந்தது. "இதோ நாம சேர்ந்ததுக்கு இவங்க எல்லாருமே காரணம். இந்த நாடகத்துக்கு கதை என் குருநாதர் பாலகணேஷ் சாரோடது, வசனம் மஞ்சு அக்காவுது, இயக்கம் நம்ம உலக சினிமா ரசிகன் பாஸ்கர் சார். எல்லாத்துக்கும் மேல நீ விசாரிக்கும் போது விஷயம் தெரிந்திருந்தும் அதை கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் கொண்டு சென்ற ஜீவா மற்றும் மற்ற எல்லா பதிவர்களும் தான். இவங்க மட்டுமல்ல இங்கே இல்லாத இன்னும் பல பதிவர்களும் நாம ஒண்ணு சேர்றதுக்காக கஷ்டப்பட்டாங்க.
பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு காதல் கவி பல எழுதிக் கொண்டிருக்கும் "இரவின் புன்னகை" வெற்றிவேல். பூண்டு ஊறுகாய் செய்து கிச்சனிலும் கலாய்க்கும் ராஜி அக்கா, ரங்கமணியை ஆல்வேஸ் காலை வாரிவிடும் (நகைச்சுவையாய்) அப்பாவி தங்கமணி, பலூன் வியாபாரியையும் படகோட்டியையும் நமக்கு அறிமுகம் செய்த வெங்கட் நாகராஜ், பாட்டி சொன்ன தங்கமே தங்கம் கதையை நமக்கு சொன்ன சிவகாமி (பூந்தளிர்3.), தன் கவிதையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அம்பாளடியாள்..குற்றாலக் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கோவை கமல், கரை சேரா அலை அருகில் நின்று கொண்டு விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைத்த அரசன் ஆகியோர் அங்கு வர அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது.
"டிவி மட்டுமல்ல, போலிஸ் ரெக்கார்டுகள், இன்னும் பல ஆவணங்கள் தயார் செய்ய உதவி செய்தது ஒருத்தர்.. அவங்க யார்னு தெரிஞ்சா நீ ஆச்சர்யப்படுவே.." ஆவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் ஆண்ட்ரியா. "சாரிப்பா, ஆவி என்கிட்டே ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டதால ஹெல்ப் பண்ண வேண்டியதா போச்சு.. நல்ல விஷயத்துக்கு தானேன்னு நானும் நடித்தேன்." எனவும் வெட்கமும் சந்தோஷமுமாக சிரித்தாள் நஸ்ரியா. அப்போது ஆவி ஆண்ட்ரியாவிடம் "ஆண்ட்ரியா நீ எங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா உன்னை ஒருத்தன் தீவிரமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். ஆனா உன்கிட்ட சொல்ல தயங்கறான்" எனவும் ஒரு சிறு ஆச்சர்யத்தோடு ஆவியை பார்த்தாள்.
அப்போது அறைக்கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு திறக்கவும், அங்கே டிடக்டிவ் நமிதா நின்றிருந்தார். "ஆண்ட்ரியா மேடம், சீனுங்கிற பதிவர் இன்னைக்கு காலையில இருந்து காணாமல் போயிட்டார். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம். அந்த கேஸை நீங்கதான்.. " நடப்பதை உணர்ந்து கொண்ட ஆண்ட்ரியா கூட்டத்தில் ஒளிந்திருந்த சீனுவை கண்டுபிடித்து அடிக்க ஓட, சீனு ஆவியின் பின் சென்று மறைந்து கொள்ள, நஸ்ரியா சீனுவின் இருப்பிடத்தை காட்டிக் கொடுக்க சீனுவை செல்லமாய் அடித்த ஆண்ட்ரியா.."இதுக்காக நீ காணாம எல்லாம் போக வேணாம். காதல சொல்ல தயக்கமென்ன என் கண்ணாடி மச்சான்" என்று சீனுவின் சட்டையை பிடித்திழுத்து கட்டிக்கொள்ள எல்லோரும் சந்தோஷத்துடன் இரண்டு ஜோடிகளையும் வாழ்த்தினர்.
*************** சுபம் *****************
வலைச்சரத்தில் ஆசிரியராய் இருக்க அழைத்த சீனா ஐயாவிற்கு என் நன்றிகள் பல. இந்த ஒரு வாரத்தில் என் படைப்பிற்கும் அறிமுகங்களுக்கும் ஆதரவு அளித்த வாசகர்கள்/ பதிவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் உங்கள் ஆதரவை வேண்டி உங்கள் "கோவை ஆவி" விடைபெறுகிறேன்.
பதிவுகள் எழுதுவோம்!! தமிழ் வளர்ப்போம்!!
|
|
Realy super aavi.
ReplyDeleteநன்றி பிரகாஷ்..
Deleteவணக்கம்
ReplyDeleteகோவை ஆவி(அண்ணா)
இந்த வாரம் வலைச்சர அறிமுகங்கள் மிக மிக நன்று இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்..
Deleteதினமும் எல்லா அறிமுகங்களின் வலைத்தளத்திலும் அவர்கள் அறிமுகத்தை தெரிவித்ததற்கு நன்றிகள் பல.
வாழ்த்துக்கள் நண்பரே. ஒரு வாரம் கடந்ததே தெரியவில்லை.
ReplyDeleteநன்றிங்க. உங்கள் ஆதரவுக்கும் பின்னூட்டங்களுக்கும்..
Deleteஅடப்ஆஆஆவி! சீனுவுக்கும் சந்தடி சாக்குல ஆன்ட்ரியாவை ஜோடி சேத்து வெச்சுக் கொண்டாடிட்டியாக்கும்...1 இந்த மாதிரிநேரத்துல மட்டும் இந்த ஆவிக்கு என் நெனப்புல்லாம் வராது. (சரிதா வலைச்சரம் படிக்க வாய்ப்பில்லைங்கறத நினைவில் கொள்க! ஹி... ஹி...!)
ReplyDeleteஹஹஹா.. டோன்ட் ஒர்ரி ஸார்.. அதான் டிடக்டிவ் நமிதா காரெக்டர் உள்ள வந்திருக்கே ஸார்.. ஹிஹிஹி.
Deleteதவிர, நான் பயப்படறது சரிதா அக்காவுக்காக அல்ல.. உங்க பாசமுள்ள தங்கைகள் என்னை அடிக்க வந்திடுவாங்க.. அதுக்காக தான்.. அவ்வ்வ்வ்!!
Deleteஅந்த பயம் இருக்கட்டும் எங்க அண்ணாவை யாருடனாவது மாட்டிவிட்டிங்க..
Deleteஹஹஹா..வாத்தியாரே, இப்படி பாசமுள்ள "என் தங்கை கல்யாணி" கள் இருக்கிறவரை நீங்க TR ஆ தான் இருக்க முடியும்.. ஹாஹஹா..
Deleteதுப்பறியும் வாரத்தொடர் மூலமாக பதிவர்களை அறிமுகம் செய்த ‘பதிவர் கோவை ஆ.வி.’ தமிழ்த்தாய் அருளால் மேலும் சிறக்க...வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஸார்.. உங்க வாழ்த்துகள் ஒன்றே போதும்!!
Deleteஹா... ஹா... கலக்கல்...
ReplyDeleteவித்தியாசமாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்..ரசித்தமைக்கு நன்றி..
Deleteஆவி--> நச்ரியா
ReplyDeleteசீனு--> ஆன்ட்ரியா
இந்த நமீதா யாரோட சோடின்னு சொல்லவே இல்ல....
வித்தியாசமான பணி அண்ணா. திறம்பட எழுதியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்...
மேலே உள்ள கமெண்டுகளை படிக்கவும்.. ஹிஹி..
DeleteJob well done and interestingly done! congrats!
ReplyDeleteமாதவி, உங்க வருகைக்கும், என் பதிவுகளை ரசித்தமைக்கும் நன்றிகள் பல..
Deleteஹா ஹா... சந்தடி சாக்குல சீனுவுக்கு சோடி சேத்தாச்சு... ஒரு துப்பறியும் தொடர் மூலம் வலைச்சர ஆசிரியர் பணி செய்து அசத்திய ஆவிக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteஹஹஹா.. எதோ, நம்மால முடிஞ்சது..
Deleteநன்றி ஸ்.பை..
சுபமாக கதையை முடித்து
ReplyDeleteஇன்னொரு கதையும் ஆரம்பித்துவைத்த
கலகல்ப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!
நன்றி அம்மா.. கதை ரசித்து தொடர்ந்து பின்னூட்டங்களால் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி..
Deleteஅனைவரையும் ஆர்வத்துடன் தினமும் வலைச்சரம் தேட வைத்த உங்கள் எழுத்து நடை சிறப்புங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்க ரசனைக்கும், வாரம் முழுவதும் தொடர்ந்து வந்ததுக்கும் ஒரு சல்யுட்.
Deleteஅதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர ஆவியை கட்டியணைத்துக் கொண்டாள்??//
ReplyDeleteஅதிர்ச்சில நீங்களும் கமென்ட் போடாம விட்டுட்டீங்க..
Deleteஇன்னும் ஓரு வாரம் எழுத இருப்பதை ஒரே நாளில் சுருக்கமாக முடித்து விட்டதை போல் தெரிகிறது
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க.. இந்த தொடருக்கு இவ்வளவுதான் நான் எழுதியிருந்தேன்.
Deleteதொடர்ந்து வந்தமைக்கு நன்றிகள் பல.
. ஹிஹிஹி..
ReplyDeleteஓ.. கமென்ட் இங்கே இருக்கா.. நன்றி ஐயா..
Deleteநல்ல சேந்ததய்யா சோடி!!!
ReplyDeleteஎந்த சோடிய சொல்றீக??
Deleteவலைச்சர வரலாற்றில் முதல்முறையாக ஆவி ஆசிரியர் பொறுப்பேற்று, துப்பறியும் கதை எழுதி, பதிவர்களி அறிமுகம் செய்திருக்கிறது - ஸாரி! செய்திருக்கிறார். புதுமைக்குப் பாராட்டுக்கள் ஆவி!
ReplyDeleteநன்றி அம்மா.. உங்க பாராட்டுகள் மகிழ்ச்சி அளிக்கிறது!!
Deleteஅருமையாக ஒருவாரம் போனதே தெரியவில்லை.. அப்படி உங்கள் கதைமூலம் கட்டிக் கவர்ந்திழுத்துச் சென்றுவிட்டீர்கள் சகோ! மிகவும் ரசித்தேன்... தொடருவேன்.. அங்கும்!
ReplyDeleteஅறிமுகங்களும் அருமை! அனைவருக்கும் ஸ்பெஷலாக உங்களும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி.. கண்டிப்பா வாங்க..
Deleteஇந்த வாரம் சிறப்பாக ஒரு திகில் தொடரோடு பயணிக்க முடிந்தது.வாழ்த்துக்கள் பணியை சிறப்பாக்கியதுக்கு ஆவி!
ReplyDeleteதொடர்ந்து வந்ததற்கு நன்றிங்க..
Deleteசிறப்பாக தொடர்கதை மூலம் பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தி வீட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteஅற்புதம்!.. அம்சமான கதை!.. சுபம் .. சந்தோஷம்!.. அன்பின் ஆவி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஇந்த முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ...
ReplyDeleteநீங்களே நஸ்ரியாவையும் ஆண்ட்ரியாவையும் எடுதுக்குட்டா எப்படி எனக்கும் எதாச்சு பார்த்து பண்ணக் கூடாதா ... ஹா ஹா ஹா
கலக்கலாக கொண்டு சென்றீர்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
துப்பறியும் கதை வாயிலாக அறிமுகப்படுத்திய
ReplyDeleteபுதிய பாணியை செமையாக வரவேற்கிறேன்.
சீக்கிரம் முடிந்து போச்சே என்று வருத்தமாக உள்ளது...வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றி வெற்றி வெற்றி... ஆண்ட்ரியாவை என்னோடு சேர்த்து வைத்த ஆவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
ReplyDeleteஎங்கே வேலன் அவதாரம் எடுத்து ஆண்ட்ரியாவை என்னிடம் இருந்து பிரித்து விடுவீரோ என்று நினைத்தேன்...மங்களம் உண்டாகட்டும் ஆவி :-)))))
அதெப்படிப்பா.. நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்லாரும் நல்லாருப்போம்..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் .என்னையும் இங்கு அறிமுகம் செய்து வைத்த
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஆவிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும் .
வாழ்த்துக்கள் சகோதரா சிறப்பாக அமைந்த ஆசிரியப் பணிக்கு .
நன்றி சகோ..
Deleteஆவி மூலம் எனக்கும் ஒரு அறிமுகம். மனமார்ந்த நன்றி கோவை ஆவி! :)
ReplyDeleteCreative work Anand...keep it up... waiting for more stories in your blog...:) Thanks for joining me in this travel
ReplyDeleteThanks Bhuvana!!
Delete