07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 6, 2013

மனசு பேசுகிறது – ஆசிரியர்கள்

வணக்கம் உறவுகளே..

நேற்று தேர்ப்பார்க்கப் போயிட்டு அப்படியே நண்பர்களையும் பார்த்து மகிழ்ந்தோம். இன்னைக்கும் ஒரு எட்டுப் போய் நம்ம நண்பர்கள் சிலரை பார்த்து வருவோம் வாங்க... அதுக்கு முன்னாடி ஆசிரியர் தினத்துல கொஞ்சம் நம்ம ஆசான்களைப் பார்த்துட்டு வருவோம். 

னக்கு ஒண்ணாங்கிளாஸ், ரெண்டாங்கிளாஸ்க்கு ஒரே டீச்சர்தான். அவங்க பேர் மரியம்மை... பேருக்கு ஏற்றாற்போல அன்னைதான். எங்க அம்மா ஒண்ணாப்பு முடிச்சதும் ஆளு சின்னப்பயலா இருக்கான்... அதனால மறுபடியும் இவனை ஒண்ணாப்புல போட்டுடுங்கன்னு சொன்னதுக்கு சத்தம் போட்டாங்களாம். எட்டாவது வரைக்கும் அதே பள்ளி என்பதால் என்மேல் மிகவும் பிரியமாக இருப்பார். இப்போது எனது அன்பு ஆசிரியர் மண்ணுலகில் இல்லை.

அடுத்தது எங்க தாசரதி ஐயா, கணீர்க்குரலில் பாடம் எடுப்பதாகட்டும், அழகாக பாடல் பாடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவர்தான்... சிறியவர்களைக்கூட வாங்கய்யா என்று வாயார அழைப்பார்... வீட்டிற்குப் போனால் அவரைப் போல் உபசரிக்க முடியாது. கலையிலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் போது அவருடன் தொடர்ந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாரிடமும் என்பிள்ளைகள் என என்னையும் முருகனையும் சொல்லுவார்.

இதேபோல் பள்ளியில் படிக்கும்போது அதிகம் தொடர்பு இல்லாவிட்டாலும் கலையிலக்கியப் பெருமன்றத்தில் இணைந்தது மூலம் மிக நெருக்கமானவர்கள் முக்கியமானவர்கள் சவரிமுத்து ஐயாவும் அருள்சாமி ஐயாவும்... இன்றும் இருவரும் மிகவும் பாசமாகப் பேசுவார்கள்...

கல்லூரியில் நிறைய ஆசிரியர்களைச் சொல்லலாம்... எங்க துறைத்தலைவர் கே.வி.எஸ் சார், அமலசேவியர் சார், வெங்கடாசலம் சார், சேவியர் சார், எம்.எஸ்.சார், சந்திரமோகன் சார், விஜயன் சார், பரமசிவம் (சார்) அண்ணன், மாணிக்கம் சார், சுப்பிரமணியன் சார், பெரிய திருவடி சார், சுந்தரமூர்த்தி ஐயா, ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, பட்சிராஜன் சார், ரபீக்ராஜா சார், ஜானகிராமன் சார்... இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம்.

என் ஆசான் குறித்து நிறைய முறை சொல்லியாச்சு. இந்நாளில் அவருக்கும் மற்ற அனைத்து நல் ஆசிரிய இதயங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அவர்களின் பாதம் பணிந்து சொல்லிக் கொள்கிறேன்.



“…மூன்று முறை கனவு வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால் வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்றுசுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை.. சிதிலமடைந்த இடம் போன்றுமூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு என்னையே பார்ப்பது போன்று…”

எழுத்தாளரின் பெயர்
மஞ்சுபாஷினி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
உணர்வுகளைக் கதம்பமாகப் பகிரும் மஞ்சு அக்கா அவர்கள், ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் இடுகிறார் என்றால் அதுவே ஒரு பதிவு போல் இருக்கும் அப்படி ஒரு சிரத்தையுடன் பதிவின் பொருளை நன்கு உணர்ந்து அழகானதொரு பின்னூட்டம் இடுவார்கள். பதிவுலகின் முடிசூடா பின்னூட்ட ராணி அக்காதான். படித்துப் பாருங்கள்...  அக்காவின் பின்னூட்டங்கள் உங்களை ரசிக்க வைக்கும்.



 “...ஜிபிஎஸ்ஸை எடுத்து மீண்டும் இயக்கிப் பார்த்தும் ஏதும் பலனில்லை. ஐஃபோன் கையில் இல்லை. சுமார் நூற்றியறுபது மைல்கள் வீட்டைத் தாண்டி முதன் முறையாக இந்த அமெரிக்க மாகாணத்திற்கும் இடத்திற்கும் வந்துகொண்டிருப்பதால் அடுத்த திசை என்னவென்று தெரியவில்லை. சென்றடைய வேண்டிய இடம் ஒரு இசைப்பள்ளி என்பதைத் தவிர மூளையில் எதையும் பதிக்கவில்லை. ஆளில்லாத சாலையில் தனியாக நின்றுகொண்டிருந்தேன். இந்தியாவில் இப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். அப்பாவை அழைத்தேன்…”

எழுத்தாளரின் பெயர்
அரவிந்தன்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
சிறுமழையில் அனைத்துப் பதிவுகளையும் பெருமழையெனப் பகிர்கிறார் ஆசிரியர். இவர் தன்னைப் பற்றி குறிப்பால் உணர்த்தவில்லை. ஆனால் கைதேர்ந்த எழுத்தாளன் என எழுத்தால் உணர்த்துகிறார். படித்துப் பாருங்கள்... உங்களுக்கு சாரல் மழையெனப் பிடித்துப் போகும்.

****
“…இந்த உடல்வாகு ஒரு சிற்பியைச் சிலைவடிக்கத் தூண்டியதா..!! மனத்தை இலேசாக கர்வமேகம் மூடியது. நேற்று அந்த சிற்பி பார்த்தப் பார்வை அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தது. அதனால் தான் அவன் யாரென்று விசாரித்தாள்.
   ஆனால் அழகு என்பது அந்த அழகைத் தாங்கிய உடலுக்கோ மனத்திற்கோ சொந்தமில்லை. அது அவளைக் கொண்டவனுக்கு மட்டுமே மணமானப் பின் சொந்தமாகி விடுகிறது. அடுத்தவர் அவள் அழகை பார்க்கக் கூடாது. ரசிக்கக் கூடாது. புகழக் கூடாது. இது தானே பண்பாடு…”

எழுத்தாளரின் பெயர்
அருணா செல்வம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
கவிதைகளுக்கு நாயகியாகத் தெரிந்தாலும் கதைகளிலும் குறிப்பாக நிமிடக்கதைகளில் கலக்கிவருகிறார் ஆசிரியர் அருணா. இவரது வலைப்பக்கம் கதம்பமாக தொகுக்கப்பட்டாலும் எல்லா மலர்களுமே வாசனைப்பூக்களாகத்தான் இருக்கின்றன. படித்துப் பாருங்கள்... பிடித்துப் போகும்...


"...உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!.."

எழுத்தாளரின் பெயர்
தமிழ்முகில் பிரகாசம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.

 ****

"...சின்னவளாய் நானும் சிரித்திருந்த காலமதில்
இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே
என்னசொல்லி ஏதுபயன் இழந்தவைகள் மீண்டிடுமோ...

தேசம்விட்டு நாமும் தெருவெல்லாம் திரிந்தலைந்து
பாசமுடன் இருந்த பலரையும் தொலைத்துவிட்டோம்
வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை..."

எழுத்தாளரின் பெயர்
இளமதி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை என்று சொல்லும் ஆசிரியரின் எழுத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது என்பது இவரின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி. நீங்களும் படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும்.


"...தமிழக கல்வித்துறையில் சுதந்திரத்திற்கு பின் திட்டங்களும் மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருப்பு காந்தி காமராசர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ,ஏழைக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவியது. மிகவும் பின் தங்கிய மக்கள் மதிய உணவுக்காவே பள்ளிக்கு அனுப்பினார்கள். மதிய உணவுத்திட்டத்தை மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தியதன் விளைவு, இன்றளவும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது..."

எழுத்தாளரின் பெயர்
சரவணன்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
கல்விக்கான சிறப்பு வலை என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த நண்பர், பள்ளிக்கூட ஆசிரியர் சரவணன் அவர்கள் பெரும்பாலும் கல்வி சம்பந்தமான பகிர்வையே பகிர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படித்துப் பாருங்கள்... சரவணனின் கல்வி உங்களுக்கும் பிடித்துப் போகும்.


“…சாதம் உதிரியாக இருந்தால் தான் ஃப்ரைட் ரைஸ் போன்றவை நன்றாக அமையும்.உதிரியாக வர அரிசியை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தேவையான தண்ணீருடன் 20 நிமிடம் ஊற விட்டு வேக விட வேண்டும்.இவ்வாறு செய்வதால் அரிசியின் மேல் ஒட்டியுள்ள அனைத்து மாவுச்சத்தும் போய்விடும்.சாதம் உதிரியாக இருக்கும்.சாதம் வேகும் பொழுது எலுமிச்சம் பழச்சாறு அல்லது எண்ணெய் சில துளிகள் சேர்த்தால் சாதம் பார்ப்பதற்கு ஒரு வித பளபளப்புடன் இருக்கும்…”


எழுத்தாளரின் பெயர்
ஆசியா உமர்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
சமைத்து அசத்தலாம் என்று சொல்லி அசத்திவரும் ஆசியா அக்காவை அறியாதவர்கள் இருப்பது அரிது. இருந்தாலும் அவரின் மணித்துளியை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பதால் அதில் சொல்லிய சமையல் குறிப்புக்களை உங்களுக்கு தெரிவிக்க இங்கே பகிர்ந்துள்ளேன்... படித்துப் பாருங்கள்... மணித்துளி... பனித்துளியாய் உங்களுக்குள் சில்லிப்பை வழங்கும்...


“…மனிதக்கழிவுகளைச் சேகரிக்கும் முறைகள் மாறிவிட்டன. முன்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும், மனிதக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நகரத்தைச் சுற்றிலுமுள்ள விவசாயிகள் தானியமல்லாத மற்றப் பயிர்களுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். ( நம்பள்கி அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். சைனாவில் நெற்பயிருக்கு இதுதான் முக்கிய உரம். அங்கு இந்த மனிதக் கழிவுகளை அருவருப்புடன் பார்ப்பதில்லை)...”

எழுத்தாளரின் பெயர்
பழனி. கந்தசாமி
வலைப்பூ
கவர்ந்த பதிவு
பிரபலமான பதிவர் ஐயா.பழனி. கந்தசாமி அவர்கள், மன அலைக்குள் எல்லாவற்றையும் அழகாக எழுதிவருகிறார். விவசாயம் குறித்தும் எழுதியிருக்கிறார். இதையும் படித்துப் பாருங்கள்.... மன அலைகள் நமக்குள்ளும் தென்றல் அலையை ஏற்படுத்துவதை உணரலாம். படித்துப் பாருங்கள்... பிடித்துப் போவார் ஐயா என்பதில் சந்தேகமில்லை...



"...பொன்னாங்கண்ணிக்கீரை கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சூடான உடல் உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும். தோல் சுரக்கத்தை நீக்கும். வெந்தயக்கீரை அறிவுக்குத் தெளிவ தரும் கீரை. உடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும். பலம்தரும். சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்..."

எழுத்தாளரின் பெயர்
சந்திரகௌரி
வலைப்பூ
கவர்ந்த பதிவு
அழகை ஆராதிப்பவர்கள். வாழ்க்கையை இரசிப்பவர்கள். உடற் பராமரிப்பில் அக்கறை கொள்வோர் எல்லாரும் வாருங்கள் உங்களுக்கான பகிர்வுகள் இங்கே காத்திருக்கின்றன  என்று சொல்கிறார். சென்று பாருங்கள் நிச்சயம் அவர் சொல்லியபடி அருமையான பதிவுகள் உங்கள் வாசிப்புக்காக காத்திருக்கின்றன.



“...நண்பர் ஒருவர் கணிணியில் உள்ள முகவரி புத்தகங்கள் அந்த அளவுக்கு பயனில்லை என்று கூறினார். அவருக்காக இந்த மென்பொருள் இந்த மென்பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனி கணக்குகள் மூலம் நம் முகவரிகளை சேமிக்கலாம்இந்த மென்பொருளில் உள்ள Sync மூலம் அவர்களுடைய சர்வரில் நேரடியாக சேமித்துக் கொள்ளலாம்…”

எழுத்தாளரின் பெயர்
வடிவேலன்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
தகவல் தொழில்நுட்பத்திற்லான தளம்தான் இது... இங்கு தொழில்நுட்பம் சம்பந்தமான அனைத்துப் பகிர்வுகளையும் பகிர்கிறார். போய் பாருங்கள்... கண்டிப்பாக உதவியாக இருக்கும்.



“…பாரதிராஜா,கமல்,ரஜினி ,மணிரத்னம் போன்ற பெரிய கைகளின் படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்துவந்த  கவுண்டமணி  அவர்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவுடன் அருகில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. திரையில் எத்தனை பேர் நின்றாலும் தனித்து தெரியக்கூடிய முரட்டுத் திறமைக் கொண்ட கவுண்டரை சேர்த்துக்கொள்ள அவர்கள் அஞ்சியதில் நியாயம் இல்லாமல் இல்லை. மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் அவருடன் நடித்த ரஜினி பின்னர் பல படங்களில் கவுண்டரிடம் அடிவாங்கும் செந்திலைத் தான் நடிக்க வைத்தார். பல வருடங்கள் கழித்து மன்னன் படத்தில் கவுண்டமணி தொழிலதிபர்களைக் கிண்டல் பண்ணும்போது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் ரஜினி…”

எழுத்தாளரின் பெயர்
சந்திரமோகன்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
டெல்லியில் தனியார் துறையில் பணிபுரிகிறேன். வடக்குவாசல், உயிர்மை போன்ற பத்திரிக்கைகளில் ஓவியம் வரைகிறேன். இசை, இலக்கியம், சினிமா மீது ரசனை உள்ளவன். என்று சொல்லும் ஆசிரியர் சத்தான சினிமா செய்திகளைத் தருகிறார்... சினிமாப் பருக ஒருமுறை உள்ளே சென்றால் உங்களைக் கட்டிப்போட்டுவிடும்...

வாங்க வாங்க... ரொம்பத்தூரம் வந்துட்டீங்க... அப்படியே கொஞ்சம் வேப்பமரத்து காத்து வாங்கிக்கிட்டு சிறுகூடல்பட்டி கவிஞனின் கவிதையை வாசிங்க.. கொஞ்சம் வீடியோ பாருங்க... கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்....


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

காலத்தை வென்ற கவிஞர். கண்ணதாசன்
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்










நீண்ட பெருமூச்சுடன்
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!

சரிங்க... இன்றைய நட்புக்களின் வலைத்தளம் சென்று வாசித்து உங்கள் கருத்துக்களை வாரி வழங்கி வாங்க... நானும் பொயிட்டு நாளைக்கு வருகிறேன் சில நட்புக்களோடு....

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

25 comments:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    குறிப்பு- தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி நடத்துவது பற்றிய பதிவு 2தளத்திலும் உள்ளது பார்க்கவும்
    https://2008rupan.wordpress.com
    http://dindiguldhanabalan.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம் குமார்!

    தினமும் உங்கள் அறிமுகங்கள் மிகமிகச் சிறப்பு! ஒவ்வோர்முறையும் நல்ல நல்ல புதிய தகவல்களைப் பகிர்வதும் நன்றாகவே உள்ளது.
    உங்கள் குறுங்கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள் சகோ!

    இன்றும் இத்தனை திறமைசாலிகள் நடுவே என்னையும் இங்கு வலைச்சரத்தில் அறிமுகமாக்கியது மகிழ்வைத்தந்தாலும் இவர்களுடன் நானுமா எனத்தோன்றுகிறது.

    உங்கள் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உளமார்ந்த இனிய நன்றிகள் சகோ!

    என்னுடன் இன்று அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. #தண்டவாளமானது
    பயண நட்பு..!#
    அப்படின்னா நட்பு நீண்டதா ?இல்லை ,சேராமலே போனதா ?

    ReplyDelete
    Replies
    1. சேராமல் போய்விட்டது...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  4. Aravindan அவர்களின் தளம் புதிது... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மிகவும் சிறப்பான அறிமுகங்கள்..

    ReplyDelete
  6. எனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சகோதரரே. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  8. முதலில் இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு(இப்ப தானே தெரிய வந்தது) என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க.என்னவொரு நேர்த்தியான பகிர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  9. மிக அக்கறையாகத் தொடுக்கப்பட்டு இருக்கும்
    அறிமுக மாலைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  10. அருமையான தொகுப்பு. உங்கள் குறுங்கவிதை நன்றாய் இருக்கிறது. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  11. அழகான தொகுப்பு குமார்... அற்புதமா உழைச்சிருக்கீங்கன்னு தெரியறது..

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள்பா...

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை வந்து என் வலைப்பூவில் தெரிவித்த உங்களுக்கும் ரூபனுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

    இன்று அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் பலர் எனக்கு தெரிந்தவர்களே...

    அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்பா...

    தங்களின் ஆசிரியர்களை, அவர்கள் உங்கள் மேல் வைத்திருந்த அன்பை, அவர்கள் உங்களை உருவாக்கிய விதத்தை, இப்போது அவர்கள் உயிரோடு இல்லை என்றாலும் இதோ அவர்கள் உருவாக்கிய துளிர் இப்போது விருக்‌ஷமாகி பலருக்கும் பயன் தரும் உங்களைப்போன்றோரின் சொல்லில் இன்னும் உயிர்த்தே இருக்கிறார்கள்பா ஆசிரியர்கள்...

    கடைசியில் முடிவும் கவிதையாகவே முடித்தது அழகு...

    அன்பு வாழ்த்துகள்பா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  12. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  13. மிக அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்
    அர்ப்பணிவுடன் அக்கறை எடுத்து
    அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள்.

    செய்நேர்த்திக்கு எடுத்த கவனம்
    மலைக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  14. மிக்க நன்றி . என் கிடாரிபட்டி பற்றிய பதிப்பு ஆவணம் என்று பலரால் சொல்லப்படுகிறது. அதை பகிர்ந்தமைக்கு நன்றி . தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நல்ல பதிவுகளை தேர்வு செய்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  15. மிகத்தாமதமாக இங்கே வருகிறேன், மன்னிக்கவும். பதிவை இங்கு சுட்டிக் காட்டியதில் மகிழ்ச்சி. நன்றி :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது