07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2007

சுவாரசியமானவர்கள்

புதுசா வரவங்கள்ள [நான் எழுதவந்தே ஆறுமாசமாகல ]
என் கண்ணுக்குப்பட்ட சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்..சிலவற்றை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கலாம்..சிலவற்றை நீங்கள் கடந்துபோயிருக்கலாம்.. சிந்தாநதி ஆரம்பித்திருக்கும் முறையால் ஒருத்தருக்கொருத்தர்
நாம் பிடித்ததை அறிமுகப்படுத்திக் கொள்ள வசதியா இருக்கிறது.
நிறைய படிக்கிறேன் சிலவற்றை ஏற்கனவே வந்தவர்கள்
அறிமுகப்படுத்தி விட்டார்கள் உதாரணத்திற்கு ராதாவின் பதிவு.
இன்றைக்கு ஒரு மூன்று புதிய தளங்கள்.


அப்படியா ன்னு ஒருதளம்..அதன் படமே பாருங்க அருமையா இருக்கு.
உலகம் ஒரு சுவாரசியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே ஆரம்பிக்கறார் அதுல நிஜமாவே சுவாரசியமான வற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்

உலகத்தில் ஆபத்தான சாலைகளாம் பாருங்க்ளேன் அய்யோ ,,,
மரணத்தை அருகில் பார்த்தவர் இருக்கார் பாருங்க..ஒரு பெட்டியா இரண்டு பெட்டியா பத்து போகியும் தட தடன்னு தாண்டிப்போனா எப்படி இருக்கும் ...நினைச்சுப்பார்க்கவே முடியலயே...

பனிக்கரடியோடு ஒன்னா குளிக்கலாமாம் அது அப்படியே முகத்துக்கு நேரா வந்து அதோட வாயைத்திறந்து கர்கர்ன்னு ஒரு உறுமு உறுமுனா எப்படி இருக்கும்...பாருங்க படத்தை.


கிரிக்கெட் எழுத வந்தேன்ன்னு சொல்லிக்கிட்டு வந்தாலும் நிறைய சென் கதையெழுதி இருக்காங்க போய் படிச்சுப்பாருங்க கொஞ்சம் வாழ்க்கையில் பின்பற்ற கஷ்டமா இருந்தாலும் ஒரு விதமான அறிவுரைக்கதைகள். முயற்சி செய்யலாம் .
இந்த வயசுல படிக்கறதும் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதும் மட்டுமே
முக்கியம்ன்னு இல்லாம இப்படி அறிவை விசாலப்படுத்திக்கறது அவசியம்.
வாழ்த்துக்கள் ம்மா.


கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு நம்ம கூட குதுகலமா திருநெல்வேலிக்காரங்க
வந்துருக்காங்க ஒரு எட்டு போய் வந்துருங்க...ஊர் ஊருக்கு ஒரு விசேஷம் சொல்லி இருக்காங்க..சிலது நமக்கும் ஆசையை உண்டாக்குது.

அந்த அல்வா மேக்ரூன் எல்லாம் ஹ்ம்ம்...
அந்த அந்த ஊருல
இருக்கறவங்க கொடுத்து வச்சிருப்பாங்க போல.

அடுத்த பதிவோடு நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

வலைச்சரம் தொடுப்பவர் யார்?

வலைச்சரம் இருவாரங்களாக தன் செயல்பாட்டை தொலைத்திருந்தது. அதற்கு முழுமுதற் காரணமும் நானே!

எனது கணினியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் நினைத்த நேரத்தில் எழுத முடியாமல் போனதும் வேறு சில பிரச்சினைகளுமாக சரியான தொடர்புகள் ஏற்படுத்த முடியாமல் போனதும் கடந்த வாரம் நானே எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டு தொடர இயலாது போனது. எனினும் இனி இம்மாதிரி நிகழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்ய முனைகிறேன்.

இந்த வாரம் யார்?

அனைவரும் விரும்பும் அழகான பதிவுகள் மூலம் மனதைக் கவரும் தலைநகரத் திருமகள் சிறுமுயற்சி வலைப்பதிவாளர் முத்துலட்சுமி இதோ வருகிறார்.

கணினி நுட்ப பதிவுகள் தவிர மற்ற எல்லா விஷயங்கள் பற்றியும் பதிவு எழுதியிருக்கிறார். அவரது பதிவுகளிலேயே அவரது பல்துறை ஆர்வமும் முயற்சிகளும் தெரிகின்றன. அதனால் அவரது வலைப்பதிவுக்கும் சிறு முயற்சி என்று பெயர் வைத்திருப்பது பொருத்தம் தான்.

இனி ஓவர் டு முத்துலட்சுமி.
மேலும் வாசிக்க...

Friday, April 20, 2007

வந்தேன் நானே வலைச்சரம் தொடுக்க...

ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் உண்மை. தமிழ்மணத்தில் இந்த வாரம் நட்சத்திரமாக தமிழ்மணமே இருக்கும் இதே வாரத்தில் வலைச்சரத்திலும் அதே நிலைமை!

தமிழ்மணத்தில் நட்சத்திரத் தேர்வு என்பதும் வலைச்சர ஆசிரியர் தேர்வு என்பதும் பாரட்சமின்றி தேர்வு செய்யப் படும் ஒன்று. இதற்கு வெறுமனே யாராவது வருகிறீர்களா என்று அறிவிப்பு சொல்லி விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்வு செய்ய இயலாது. அப்படி எவரும் விண்ணப்பிக்கவும் மாட்டார்கள். குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வலைப்பதிவர்களில் இந்த வாரம் யாரை அழைக்கலாம் என்பதை நேரங்காலம் அறிந்து யோசித்து கேட்டு அவர்களின் சம்மதம் அறிந்து விவரம் தந்து தயார்ப்படுத்தி வர வேண்டிய விஷயங்கள் இவை. இன்னும் பலர் வர வேண்டியிருக்கிறது. நிறைய பேரை அழைக்கவே இல்லை. அழைக்காததற்கு காரணம் உதாசீனமல்ல. நேரக்குறைவே.

மின்னஞ்சல் முகவரி கிடைத்து அவர்களின் வசதி அறிந்து தர வேண்டும். இரண்டாவதாக வலைச்சரத்தைப் பொறுத்தவரை முந்திய வலைப்பூ ஆசிரியராக இருந்தவர்களை சற்று தாமதமாக அழைக்கலாம் இப்போதைக்கு புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று தீர்மானம். தேடுதல் அதிகரிக்கிறது.

உண்மையில் இது போன்ற முயற்சிகளும் சரி அதில் பங்கேற்பவர்களுக்கும் சரி மகிழ்ச்சிக்குரிய பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் நேரக்குறைவால் இதில் தேவைப்படும் கடுமையான உழைப்புக் காரணமாக தடுமாற்றங்கள் நிகழ்கின்றன.

தமிழ்மண நட்சத்திரத் தேர்வு பற்றி பலரும் பேசுவதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதையும் பாரபட்சமாக பேசுபவர்கள் இருப்பார்கள் தானே? புரிந்து கொள்ளவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

இடைவெளி, தாமதம் குறித்து இங்கே சொல்லிவிட்டதால் மீண்டும் சொல்லி போரடிக்கவில்லை.

-oOo-

நான் படித்த பதிவு இடுகைகளில் சில....

இலக்கணப் பிழைகள் பற்றிய பதிவென்றதும் உள்ளே நுழைந்து பார்த்தால் அது ஆங்கில இலக்கணம். ஆனாலும் நமக்கெல்லாம் ஏற்படும் சின்னச்சின்ன பிழைகள் பற்றி கூறியிருக்கிறார் பகீ.

இந்த பூமிக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை நீக்கி சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்! குறித்து பேசுகிறார் இவர்.

சமீபத்தில் விவாதத்துக்குள்ளாகிய இரு பிரபலங்களின் தேசப்பற்று பற்றாக்குறை சார்ந்த விவாதம் பற்றி இவரது கருத்தையும் பார்ப்போம்.

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11 என்று 11வது பதிவாக விளக்கி வருகிறார் இந்த சங்கத் தோழர்.

தொடர்ந்து தொழில் நுட்ப பதிவுகளாகத் தரும் தமிழ்ப்பித்தன் இங்கே உரையாடல் களைப் பதிவு செய்ய ஒரு தளத்தை அறிமுகம் செய்கிறார்.
மேலும் வாசிக்க...

Monday, April 16, 2007

ஆசிரியர் பராக்

வித்தியாசமான தொகுப்புகளை இட்டு போனவார வலைச்சரம் தொகுத்து தந்தார் சென்ஷி.அவர் இட்ட ஆறு பதிவுகளில் நான்கு பதிவுகளுக்கு வெவ்வேறு தீம்களை எடுத்துக் கொண்டு அதனுள் பதிவுகளை அறிமுகம் செய்திருந்தது (உ-ம் : புத்தக விமர்சகர்கள்) முன்மாதிரியான வரவேற்கத்தகுந்த முயற்சி. வாழ்த்துக்கள் சென்ஷி.

அடுத்த ஆசிரியர் யார் என்று அறிவிக்க வேண்டும் இன்று...

இதழுக்கான வேலை மற்றும் விடுமுறைக்கால உறவினர்கள் காரணமாக நண்பர்களைத் தொடர்பு கொள்ள தவறி விட்டேன். ஏற்கனவே தொடர்பு கொண்டு வலைச்சரம் தொடுக்க கேட்டிருந்த நண்பர்கள் வேலை நெருக்கடி காரணமாக தொடரும் வாரங்களில் செய்யலாம் என்று சொல்லிவிட கடைசியாக ஆர்வமாக முன்வந்த நண்பர் கூட வலைப்பதிவுகளில் நடந்து வரும் கூத்துகளைப் பார்த்து விட்டு இந்த வாரம் நமக்கு வேணாம்பா ஒரேயடியா ஆட்டை இல்ல ஆபரேசன் இதுதான் இருக்கு இந்த வாரம் முழுக்க. இதுல வலைச்சரத்தில் எதைப் போட என்று சென்று விட்டார். கடைசியில் பயங்கர யோசனைக்குப் பிறகு மாட்டியவருக்கு வேறு வழியே இல்லை.

ஆகவே நண்பர்களே இந்த வாரம் வலைச்சரம் தொடுப்பவர் இவர்தான். இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, April 14, 2007

உயிர் எழுத்துக்கள் மூன்று

தலைப்பை ஆசான் டைப்படித்ததும் கோவிஞ்சாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

"வாத்யாரே.. நீ பெரியாளாக்கீறேப்பா... இவ்ளோ நாளா நான் தமிழ்ல உசுர் எழுத்து அதிகமா இருக்குதுன்னு நெனெச்சுக்கிட்டிர்ந்தேன்...
உனக்கெப்படி இப்படி"

"கோயிஞ்சாமி, தமிழ்ல நிறைய்ய இலக்கியங்கள் இருக்குது. ஆனா நம்மாளுங்க திருக்குறளையும், ராமாயணத்தையும் விட்டா உதாரணம் காட்ட வேற எதையும் தொட மாட்டேங்கிறாங்க."

"நீ என்னப்பா... எப்பவுமே தாடிய விட்டுக்கொடுக்காம பேசுவ.. இப்போ இப்படி ஜகா வாங்கிட்ட?"

"கோயிந்த், நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே... திருக்குறள படிக்குற எல்லோருமே அத்தோட நிறுத்தாம பண்டைய இலக்கியங்களையும் படிக்கணும்னு சொல்ல வர்றேன்"

"நீ வேற வாத்தியாரே, நம்ம இம்சை ரவி ஏற்கனவே தேவையில்லாத பாடத்த நடத்துன வாத்தியார் மேல ஆசிட் ஊத்தனும்னு அலையறாரு. இந்த நேரத்துல நீ வேற இப்படி பழச பத்தி ஆரம்பிச்சா ஆசிட், பினாயில்ன்னு கைக்கு கிடைச்சத எடுத்துக்கினு வந்திடப் போறாரு.."

"ஒரு விஷயம் தெரிஞ்சுக்கனும் கோயிந்த், எந்த ஒரு விஷயத்தையும் வெளியில இருந்து பாக்குறப்ப அது கஷ்டமாத்தான் தெரியும். ஆங்கிலத்தை உலகமொழியா மாத்துனதுல தமிழோனட பங்கு இல்லைன்னு நினைக்குறியா.. !

நாம நம்ம இலக்கியத்த வளர்க்காம வேற யாரு செய்வா?

நம்ம இலக்கியத்துல இல்லாத காதலையா நீ சேக்ஸ்பியரோட ஹாம்லெட்ல தேடப்போற... இல்லை நம்ம ராஜாக்கள் வீரத்தை விட நெப்போலியன் எந்த விதத்துல பெரியவனா காட்டப்போறே..?"

"அய்யோ மன்னிச்சுக்க வாத்தியாரே... தமிழன் வாழ்க..
இப்போ ஒத்துக்குறியா.. சரி இன்னிக்கு எந்த பதிவு சொல்லப்போறேன்னு இவ்வளவு பில்டப்பு..."

'அடப்பாவி.. நான் உணர்ச்சிவசப்பட்டு பேசறத கிண்டல் பண்றியா..

அருணா ஸ்ரீநிவாசனோட அலைகள்ங்கற பதிவுல கேள்விகள் ஆயிரம்ங்கற படைப்ப படிச்சுப்பாரு.. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்.."

"அதுக்கில்ல வாத்தியாரே... தமிழ வளர்க்கணும்ன்னு சொல்றப்ப ஒரு விஷயம் புரியல எனக்கு.. அத்த யார் அழிக்கப்போறா, நாம வாழ வைக்கிறதுக்கு.."

"இதுக்கு நான் பதில் சொல்றதவிட ஜெசிலா மேடம் எழுதுன தமிழ் சாகடிக்கப்படுகிறதாங்கற பதிவு படிச்சா உனக்கே எல்லாம் புரியும்.."

"சரி ஆசான்.. எனக்கும் இலக்கியத்துமேல ஆச வந்து அத்த படிக்கனும்னு வை. யாராண்ட போறது. எதுனா ஐடீயா கொடு.... இத்த சாக்கா வச்சிக்குனு உன்னோட கிளாஸ்லயே 5வதா என்னயும் உக்கார வச்சிடாதே..!"

"சொல் ஒரு சொல் ங்கற பதிவுக்கு போய் எல்லா பதிவயும் படி.. பிறமொழி சொல் கலப்பில்லாம எத்தனை வார்த்தைகளை நாம பேச முடியும்ன்னு வகைப்படுத்தியிருக்காங்க...

இது 4 பேர் கொண்ட குழு பதிவு... இவங்களோட பதிவுல செருங்கற பதிவு நகைச்சுவையா கருத்து சொல்றாமாதிரி அமைச்சிருப்பாங்க.. உனக்கு ஏதாவது இலக்கியத்தப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடு.. பதில விக்கிப்பசங்க மாதிரி தேடித்தருவாங்க.."

"எனக்கு கூட ஒரு இலக்கியப்பாட்டு தெரியும் வாத்யாரே...
ஓராயிரம் யானை கொன்றால் பரணின்னு ஒரு பாட்டு கேட்டிருக்கேன், இதுக்கு என்ன அர்த்தம், பரணின்னு பேர வைக்க 1000 யானைய கொல்லணுமா?"

"அதுக்கு அர்த்தம் அது இல்ல கோவிந்த்.. அந்த காலத்துல போர்ல ஜெயிச்ச மன்னர்களை புகழ்ந்து கவிஞர்கள், பாணர்கள்லாம் பாட்டு பாடி பரிசு வாங்கிப்போவாங்க.. அப்படி ஒரு கவிஞர் எழுதுன கலிங்கத்துபரணிங்கற நூல்ல மன்னன் வீரத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சதுக்காக இந்த பரணிப்பாட்டு எழுதினாங்க...."

"பொன்ஸ் அக்கா ஒரு யானைக்கு அடிப்பட்டாலே வருத்தப்படுவாங்க.
1000 யானய கொன்னது தெரிஞ்சா என்ன செய்வாங்க...!

நான் மறந்துட்டேன் பாத்தியா... அதென்ன உயிர் எழுத்துக்கள் மூன்று.. அத்த சொல்லு வாத்திய்யாரே.."

"அது ஒண்ணுமில்ல கோவிந்த்... யோசிப்பவர் ஸ்டைல்ல நானும் ஒருபதிவு போடலாம்ன்னு நினைச்சேன். அதான் இப்படி"

"எப்படி?"

"உயிர்-ங்கற வார்த்தையில இருக்குற எழுத்து எத்தனை?"

"மூணு"

"அதான் தலைப்பு.."
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது