07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 15, 2008

பணச்சரம்-3

வர்த்தகம் பற்றிய குறிப்புகள், தகவல்கள் மற்றும் உதவிகளை பரிமாறிக்கொள்ளும் இன்னொரு வலைப்பூ ‘வர்த்தகம்’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், மானியங்கள், கந்துவட்டியை ஒழிக்க என்ன செய்யலாம் மற்றும் பல தலைப்புகளில் உள்ள பதிவுகள் மிகவும் உபயோகமானவை.

தின வர்த்தகம் (Day trading) ஒரு அதி வேக மோட்டார் ரேஸ் போன்றது வென்றால் லட்சங்கள் கரணம் தப்பினால் ‘சங்கு’தான். ஆனால் விவரமாக ஸ்டாப் லாஸ் எல்லாம் வைத்துக்கொண்டு தன் கபாசிடிக்கு தக்க செய்தால் இதிலும் பணத்தை குவிக்கலாம்.

என்னுடைய தாழ்மையான கருத்து பங்கு சந்தையில் புதியவர்கள் இந்த தின வர்த்தகம் பக்கம் எட்டி பார்க்காமல் இருப்பது அவர்களின் பணத்திற்கும் மனத்திற்கும் நலம்.

நண்பர் சுதாகர் தின வர்த்தக குறிப்புகளையும் குறுகிய கால முதலிட்டு பங்குகளையும் தனக்கு கிடைக்கும் தகவல்களையும் இந்த தளத்தில் பதிந்து வருகிறார் சுதாகரின் வலைப்பூ

ஏட்டுசுரைக்காய் கரிக்கு உதவாது என்பார்க்ள் அப்படியா?
தீ சுடும் – இதை படித்து அறிந்தால் பத்தாதா?
விஷம் – மரணம் இதற்கு அனுபவம் தேவையா?
பலரது அனுபவங்களை படித்து, கேட்டறிந்தே எச்சரிக்கையாக இருக்கமுடியும்.

நண்பர் ராதாகிருஷ்ணன் தன் பங்குசந்தை அனுபவங்களை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பக்கத்து சீட்டுல சனி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பிறரது அனுபவங்கள் படித்து கேட்பதன் மூலம் நாம் அந்த தவறுகளை செய்யாமல் இருக்கலாம் அல்லவா பக்கத்து சீட்டுல சனி பாகம் 1, பாகம் 2

நண்பர் சிவப்பிரகாசம் சாமான்யன் சிவா என்ற பெயரில் தான் செய்யும் வர்த்தகங்களையும் தனக்கு கிடைக்கும் தகவல்களையும் இந்த தளத்தில் பதிந்து வருகிறார் ஸ்டாக் சிவா

மருத்துவ காப்பீடு

வாயை கட்டி வயித்த கட்டி பணத்தை மிச்சம்பிடிச்சி சேர்க்கிறோம். எதாவது ஒன்று என மருத்துவமனைக்கு சென்றால் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் எல்லாம் ‘புஸ்’ஸென புஸ்வானமாய் மறைந்துவிடுகிறது. இந்தியாவை விட வெளிநாடுகளில் மருத்துவ செலவுகள் மிக மிக அதிகம் என நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

இன்றைய நிலையில் மருத்துவமனைக்கு எதற்கு சென்றாலும் முதலில் அட்மிசன் அதுக்கப்புறம்தான் பேச்சே என்ற நிலமையாகி விட்டது. மருத்துவமனை கட்டணங்களும் நடுத்தர மக்களுக்கு ஓரளவிற்கு மேல் தாக்குபிடிக்க முடியாததாகவே உள்ளது. இதை எல்லாம் தவிர்க்க ஆபத்து காலத்து ஆபத்பாந்தவனாய் உள்ளவை மருத்துவ காப்பீடு எனும் Medical Insurance இதை பற்றிய டாக்டர் டெல்பின் அவர்களின் கட்டுரை 'என் பார்வையில் மருத்துவ காப்பிடுகள்'
மருத்துவ காப்பீடு 1
மருத்துவ காப்பீடு 2
மருத்துவ காப்பீடு 3

புலியை பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்டதாம் என நம்ம ஊர் பக்கம் சொல்வார்கள் அது மாதிரி இதையெல்லாம் படித்து என் பங்கு சந்தை அனுபவங்களை எல்லாம் நானும் இந்த வலைப்பூவில் கிறுக்கி வைத்திருக்கிறேன் :)

பாகம்1
பாகம்2
பாகம்3
பாகம்4
பாகம்5

- தொடரும் -

6 comments:

  1. சிவா, அத்தனையையும் தேடிப் பிடித்து ஒரு பதிவா, ஏற்கெனவே குறிப்புகள் இருந்தனவா, அல்லது இப்போதைய உழைப்பா - பாராட்டுகள். ஒரு பொறுப்பு கொடுத்தால் உண்ம்மையிலேயே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பாராட்டுதலுக்குறியது.

    ReplyDelete
  2. மாமா நானும் வரேன் உங்க உதவிக்கு....

    ReplyDelete
  3. மருத்துவ காப்பீடு பற்றிய செய்தி அருமை..

    ReplyDelete
  4. //
    cheena (சீனா) said...
    சிவா, அத்தனையையும் தேடிப் பிடித்து ஒரு பதிவா, ஏற்கெனவே குறிப்புகள் இருந்தனவா, அல்லது இப்போதைய உழைப்பா - பாராட்டுகள். ஒரு பொறுப்பு கொடுத்தால் உண்ம்மையிலேயே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பாராட்டுதலுக்குறியது.
    //
    சீனா சார் வாங்க நன்றி

    ஏற்கனவே நான் அடிக்கடி செல்லும் வலைப்பூக்கள்தான் எல்லாமே.

    ReplyDelete
  5. //
    Baby Pavan said...
    மாமா நானும் வரேன் உங்க உதவிக்கு....

    //
    வா கண்ணா
    நன்றி

    ReplyDelete
  6. ///
    ரூபஸ் said...
    மருத்துவ காப்பீடு பற்றிய செய்தி அருமை..

    //
    ஆமா ரூபஸ் அவசியமான ஒன்றுதான்
    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது