07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி!!!


எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்காக நம் வலைச்சரம் மிகவும் வருந்துகிறது! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
மேலும் வாசிக்க...

Wednesday, February 27, 2008

நான் என்னாத்த சொல்ல! இதுக்கு தலைப்பே வைக்க தெரியலைங்க எனக்கு!!!

எனக்கு ஏன் தான் இப்படி புத்தி போச்சுன்னே தெரியலைங்க. மனசு ஆசைப்பட்டுடுச்சு. அதனால புத்தி கெட்டு போச்சு. கதிர் தம்பிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாமான்னு நெனச்சேன். தப்பா நெனச்சுகிட்டா என்னா பண்றதுன்னு மனசுல குழப்பம் வேற. சரி என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணி மெதுவா தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னேன்


உடனே தம்பி”என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கும் ரெஸ்ட் எடுங்க மனசும் உடம்பும் லேசாகும், நாங்க தான் இப்படின்னா நீங்க கூட எதுக்கு சின்ன பசங்க எங்க கூட கூத்தடிக்கப் பார்க்கறீங்க, பேசாம இருங்க நேரா வீட்டுக்கு போன் போட்டுடுவேன்”ன்னு சொன்ன பிறகு எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாத்தான் போச்சு. அதிலும் வீட்டுக்கு போன் அது இதுன்னதும் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். நான் உடனே “சரி தம்பி, விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும், வெளியே தெரிய வேண்டாம்”ன்னு சொன்னேன். அதுக்கு தம்பி “2 நாள் முன்ன என் ரகசியத்தை உலகம் முழுக்க சொன்னதுக்கு பழி வாங்க எனக்கு இது நல்ல சந்தர்ப்பம் தான் ஆனா இது வரை நீங்க சேர்த்து வச்சிருக்கும் இமேஜ்க்காக பார்க்கிறேன்”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

வீட்டுக்கு வந்து புரண்டு புரண்டு படுத்தாலும் மனசு குரங்கு துள்ளி துள்ளி குதிச்சுகிட்டு இருக்கு. வேற வழியில்லாம கோபிக்கு போன் பண்ணினேன். விஷயத்தை பக்குவமா எடுத்து சொல்லியும் அவன் கோவத்தை என்னால் அடக்க முடியலை. “உங்க வயசு என்னா ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு”ன்னு ஏகப்பட்ட திட்டு. அதோட போய் பச்ச தண்ணிய தலையிலே ஊத்திகிட்டு வந்து படுத்துட்டேன்.

காலை எழுந்து ஆபீஸ் போன உடனே சேட்டிலே குசும்பன் தென்பட்டதும் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மெதுவா சேட்ல பிட்ட போட்டேன்.அவன் கொஞ்சம் விவரமானவன். அதிகம் கோவம் வராது. தம்பி, கோபி மாதிரி இல்லை. அதனால என் அவஸ்தையை மெதுவா புரிய வச்சேன். அதுக்கு அவன் சேட்டில இருந்து போனுக்கு தாவி “அபிஅப்பா உங்க அவஸ்த்தை எனக்கு புரியுது. ஆனாலும் நீங்க இதை என் கிட்ட கேட்டிருக்க கூடாது. கேட்டாலும் என்னால சரியா பதில் சொல்ல முடியாது ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம், அதனால பெட்டர் சாய்ஸ் அண்ணாச்சி தான் உங்களுக்கு. அவருக்கு இதிலே நல்ல அனுபவம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க அவர் கிட்ட கேளுங்க”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

இத போய் என்னாத்த அவர் கிட்ட கேட்கிறது எதுனா தப்பா நெனச்சுட்டார்ன்னா என்ன பண்றதுன்னு பேசாம இருந்துட்டேன். பின்ன ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல போன் பண்ணினா மனுஷன் கேஷுவலா இத பத்தி பேசறார். எனக்கோ கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்துச்சு. பின்ன அவரே சொன்னார் “பாருங்க ஒரு முடிவு எடுத்திட்டீங்க ஆனா அதுக்கு முன்ன நல்ல எலுமிச்சம்பழமா வாங்கி தலையிலே கர கரன்னு தேச்சு குளிச்சுட்டு பின்னவும் நீங்க அதே முடிவிலே இருந்தா எனக்கு கூட வேண்டாம் ஜஸ்ட் அய்யனார் கிட்டே போன் பண்ணுங்க, எல்லாம் சுமூகமா முடியும்”ன்னு சொன்னார்.

எங்கே அவர் சொன்ன மாதிரி குளிச்சா மனசு மாறிடுமோன்னு உடனே அய்யனாருக்கு போன் பண்ணினேன். பாவி பய புள்ள என்னமா பேசுது மாங்கு மாங்குன்னு.”இதிலே என்ன அபிஅப்பா வயசெல்லாம் இது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்”ன்னு ஏதேதோ பேசிட்டு கடைசியா “சரி நீங்க ஒண்னு பண்ணுங்க சாயந்திரம் அல்கூஸ் கிராண்டு மால் பின்ன ஒரு முட்டு சந்து இருக்கு இல்லியா அங்க வாங்க என் கிட்ட இப்ப 4 இருக்கு உங்களுக்கு பிடிச்சதை எடுத்துகோங்க”ன்னு சொன்ன பிறகு தான் எனக்கு மனசு திருப்தியாச்சு.

எனக்கு வேலையும் ஓடலை ஒன்னும் ஓடலை. எப்படா ஆபீஸ் முடியும்ன்னு பார்த்துகிட்டே இருந்து அந்த முட்டு சந்தை அடைந்து அய்யனாரை பார்த்த பின்ன தான் திருப்தியாச்சு. 4ல் ஒண்ணு நான் செலக்ட் பண்ணினப்ப அய்யனார் சொன்னார் “எடுத்தவுடனே எதுக்கு ஓவர் டோஸ், மைல்டா ஆரம்பிங்க”ன்னு சொன்னது எதுவும் என் காதிலே விழலை. சரி நான் வீட்டுக்கு போகிறேன்ன்னு சொல்லிட்டு சட்டைக்குள்ளே மறைச்சு கிட்டு ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு.

வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணினார் அய்யனார் “என்ன அபிஅப்பா என்னா ஆச்சு உங்களுக்கு”ன்னு கேட்டப்பதான் சொன்னேன். “இல்ல அய்யனாரே, வலைச்சரம் எழுதறேன். வெரைட்டி குடுக்கலாம்ன்னு ஆசை, பின்னவீனத்துவம் பத்தியும் குடுக்க ஆசை, எனக்கு ஏற்கனவே கெட்ட பேர் இருக்கு படிக்காம பின்னூட்டம் போடறேன்ன்னு. அதான் அதை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் படிக்கலாமேன்னு தான், இப்ப எடுத்துட்டு வந்த புக் பேரே நல்லா இருக்கே “ஆவியில் சதை”யா சூப்பர்ல்ல அய்ஸ்”ன்னு சொன்னேன்.

அதுக்கு அவர் “அடப்பாவி மனுஷா அதுக்கு நான் சில சுட்டி தர்ரேன் அதை படிங்க முதல்ல பின்ன இந்த புத்தகத்தை படிக்கலாம்”ன்னு சொன்னாருங்க. இதோ நான் படித்த அந்த பதிவுகளை லைப்ரரி கதைவை உடச்சிகிட்டு உள்ளே போய் “ஸ்ஸ்ஸ்ஸ் பேசாதே” போர்டை தூக்கி கடாசிட்டு சத்தம் போட்டு படிங்க. அப்பதான் கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கும்! கட்டுடைப்போம் அதுக்கு முன்ன லைப்ரரி கதவை உடைப்போம்!!
மேலும் வாசிக்க...

Tuesday, February 26, 2008

"நச்"ன்னு பத்து முத்து!!!!

துபால்ல வெள்ளின்னாதானே ரெண்டு அப்படின்னா இன்னிக்கு என்ன வெள்ளிகிழமைன்னு எல்லாம் கேக்கப்பிடாது. உங்களுக்காக நான் ஓடா உழைச்சு மாடா தேய்கிறேன் அய்யா தேய்கிறேன். இந்த பதிவில் நான் சுடப்போவது பத்து சுட்டிகளை. பத்தும் முத்து. அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்.

இதை எழுதிய அந்த நண்பர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் இந்த நிமிடம் வரை. ஒரு முறை தம்பி லக்கி இந்த பதிவை போய் பாருங்க செம சூடுன்னு சொன்னார். போய் பார்த்தேன். அவ்வளவுதான், அன்னிக்கு 3 மணி நேரம் ஓவர் டைம் பார்த்தேன்ல ஆபீஸ்ல. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த பதிவுகளில். அவர் ஒரு புகைப்பட பிளாக் ஒண்னும் வச்சிருக்காருங்க. அதிலே தலையை விட்டு பார்த்தேன் அன்னிக்கே. அப்போதுதான் நான் மாயவரம் பாதிரி மாம்பழம் பத்தின ஒரு பதிவு தயார் பண்னி வச்சிருந்தேன். (அந்த நேரத்தில் தான் மைஃபிரண்டு தங்காச்சி டுரியான் பழம் பதிவு போட்டிருந்துச்சுங்க) ஆனா அப்போ எனக்கு பாதிரி மாம்பழ போட்டோ கிடைக்கலை. மத்த மாம்பழம் மாதிரி இல்லை இந்த பாதிரிபழம். பச்சை கலரில் தான் இருக்கும். கிழவி மாதிரி(சரி கிழவன் மாதிரியும் தான்) நாளுக்கு நாள் சுருங்குமே தவிர அழுகாது. சுருங்க சுருங்க வாசமும், டேஸ்ட்டும் தூக்கும். மாயவரத்துகாரங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லார் வீட்டு பீரோவிலும் பாதிரியை பழுக்க வைப்பாங்க. அடுத்த நாள் சட்டை எல்லாம் பாதிரி வாசனையா இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் அவரின் போட்டோ பிளாக்கிலே ஒரு கிழவி போட்டோ பார்த்தேன். அப்படியே பாதிரி மாம்பழம் மாதிரி சுருங்கி. நான் லக்கிகிட்ட கேட்டேன் அதை சுட்டுக்கவான்னு. அவரை கேக்காம சுட்டா திட்டுவார்ன்னு சொன்னார். அப்படீன்னா கேட்டுட்டு சுட்டுக்கவான்னு கேட்டேன். அதுக்கு லக்கி அப்படி கேட்டா நேர்ல வந்து திட்டுவார்ன்னு சொன்னார். சரி அவருக்கு எதுக்கு செலவு வைக்கணும்ன்னு அந்த பதிவையே இன்னும் டிராப்ட்டிலே வச்சிருக்கேன்.

சரி அவர் எழுதினதுல என்ன என்ன சுட்டி தந்திருக்கேன் தெரியுமா? அஃப்கோர்ஸ் தீபாவெங்கட் பத்தின பதிவுங்க. நான் இந்த பதிவை படிக்காமல் சுட்டி மாத்திரம் தருகிறேன் என நிலாகுட்டி, பேபிபவன் கூட சொல்ல மாட்டாங்க.(நழ நழ – இப்படிக்கு நட்டு)

அடுத்து அடுத்து பதிவுகளில் நரிக்குறவர் வாழ்க்கை, அவங்க வீரசிவாஜியின் படை வீரர்கள் என்கிற விஷயம், தற்போதைய அவர்களின் வாழ்வு முறை எல்லாம் இருக்கின்றது. அந்த பதிவிலே பாருங்க ஜோதிகா என்கிற 3 வயசு நரிக்குறத்தி பாப்பா போட்டோ போட்டிருக்கார் பாருங்க கொள்ளை அழகு. அந்த கண் இப்பவும் கண் முன்னே நிக்குது. அந்த உதட்டு சாயம் ஜூப்பரோ ஜூப்பர். அதுவும் இப்படித்தான் சொல்லியிருக்குமோ “ழீங்கல்லாம் ழென்நோழ நொழந்தைங்க”ன்னு தோணுச்சு.

பின்ன குடுகுடுப்பைகாரங்க பத்தின பதிவு. அவங்க பூர்வீகம், வாழ்க்கை அமைப்பு, ஒரு ஆடு மாடு வளர்த்து தன் பிள்ளை குட்டிங்க படிக்க வைக்க முடியாத அவலம்…ஊப்ஸ்ஸ்ஸ்.. படிங்க

பின்ன ஒரு சேதி படிச்சேன், சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வேயில் 50% டிக்கெட் விலைக்குறைப்புன்னு. ஆனா நான் கொடுக்கும் இந்த சுட்டியிலே பாருங்க பாவம்ங்க அந்த தாத்தா.

அடுத்து சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலம். கொடுமையே கொடுமைங்க.

நம் வலைச்சகோதரி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு ஆதரவாக ஒரு நச் பதிவு. அதிலே ஒரு பின்னூட்டம் அனானியாக “இந்த பதிவை தமிழக முதல்வருக்கோ, ஜனாதிபதிக்கோ அனுப்ப வேண்டும்” என்று. செய்தார்களா என தெரியவில்லை. இதை படிக்கும் நாமாவது அனுப்ப வேண்டும்!

அடுத்து பாலியல் அறிவு பற்றிய ஒரு சூப்பரோ சூப்பர் பதிவு! அதை படிங்க படிங்க படிங்க கூச்சம் தேவையில்லை. எல்லோருக்கும் அவசியம். ஒருமுறை தருமிசார் பதிவிலே டாக்டர் டெல்பினம்மா “கன்னித்தாய்” பற்றி குறிப்பிட்டு இருந்தது எனக்கு மட்டுமல்ல தருமி சாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. தெரிஞ்சுக்க வேண்டியது ஆயிரம் இருக்குங்க!!

அதனால இப்ப லைப்ரரி கதவை திறங்கப்பா. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க!

நன்றி திரு. மரக்காணம் பாலா அவர்களே! உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பர்மிஷன் கேக்க! ஆனாலும் உங்கள் கருத்துக்கள் எல்லோருக்கும் இன்னும் அதிகமாக போய் சேர்ந்து எல்லோரும் பயன் பெறவே இப்படி செய்துவிட்டேன்!
மேலும் வாசிக்க...

'நச்' சுட்டிகளுக்கு முன்னே கொஞ்சம் பிறந்தகப் பெருமைகள்!!!

ரொம்ப சந்தோஷம் நேற்றைய என் வலைச்சரத்துக்கு தந்த ஆதரவுக்கு. இன்றைக்கு நச்ன்னு வர்ரேன்னு சொன்னேன். கொஞ்சம் கவுஜ படிச்சதால ஹச் ஹச்ன்னு ஆகிப்போச்சு நிலைமை. அதனால இந்த கேப்பிலே எங்க ஊர் பெருமையை கொஞ்சம் பார்த்துடலாம்ன்னு வந்திருக்கேன். சாதாரணமாகவே எல்லோருக்குமே அவங்க அவங்க ஊர் பத்தின ஒரு பாசம் பொங்கிகிட்டே இருக்கும். எங்க ஊர்ல அது நல்லா இருக்கும் இது நல்லா இருக்கும்ன்னு அலட்டிப்பாங்க. ஆனா எங்க ஊர்ல அப்படி குறிப்பிட்டு சொல்லும் படியா ஏதும் இல்லை. அதனால் தான் முத்துலெஷ்மி கூட அவங்க நட்சத்திர வாரத்திலே மேம்பாலம் பத்தி எழுதியிருந்தாங்க. நான் கூட கோவில் பத்தி எழுதியிருந்தேன். ஆனா பாருங்க இந்த மனுஷன் மாயவரத்தை எப்புடி பிரிச்சு மேஞ்சு இருக்கார்ன்னு.

பிறந்தக பெருமைன்னு ஒரு ஆறு பாகம் எழுதியிருக்கார் பாருங்க அப்படியே அள்ளிகிட்டு போகுது மனசை. அந்த எழுத்து நடை இருக்கே சரளம் சரளம், பிருந்தா மாஸ்ட்டர்? பாணியிலே சொல்ல போனா கிழி கிழி கிழி…. எதெல்லாம் மாயவரத்திலே அழகுன்னு சொல்றார் பாருங்க. ஜங்ஷன்…காலை மதுரையிலிருந்தோ சென்னையிலிருந்தோ வந்தாச்சுடா ராசா வந்தாச்சுன்னு புஸ்ஸு புஸ்ஸுன்னு பெரு மூச்சு விட்டு கிட்டு வந்து நின்னு சூடான வென்னீரை உச்சாவா போகும் கரி எஞ்சின் ரயில்ல ஆரம்பிச்சு ஸ்ட்ராங் பினாயில் முதல் குளோரோபாஃம் பவுடர் வரை ஸ்டேஷனின் அத்தனை அழகையும் சொல்லி, அஜீத் எக்கிற சோனி குதிரை வண்டி பயணம், புது தெரு ரயில்வே கிராஸ்ல ஏறி இறங்கி வீட்டுக்கு போகும் விஷயத்தை சொல்லச் சொல்ல நாமும் சீக்கிரம் ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகுது.

அது தவிர எங்க ஊர் கூவம் மிஸ். பழங்காவேரி(ஆறுகள் எல்லாமே பெண்பாலாமே) பத்தி என்னமா எழுதியிருப்பார் பாருங்க. அதிலே மூழ்கி ஸ்னானம் செஞ்சு ‘மடி’யா வெளியே வரும் பன்னி குட்டிகள் அப்போ அருவருப்பா இருந்துச்சு. ஆனா அவர் எழுத்து நடையிலே பார்க்கும் போது அந்த பன்னிகுட்டிகளை பிரகாஷ்ராஜ் பாணியிலே “அய் மிஸ்யூடா செல்லம்”ன்னு சொல்ல தோணுது. அதிலும் அந்த கொழுக் மொழுக் பன்னிகளை அவர் நமீதாவுக்கு இணையாக சொல்லியிருப்பதை பார்த்தா அவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிரானவரா இருப்பாரோன்னு தோணுதுJ)

மணிகூண்டிலிருந்து மேம்பாலம் வரை போட்ட கான்கிரீட் ரோடு பத்தி அவர் சொல்லியிருக்கும் விதமும் பஸ்ட்டாண்டு அழகும் அதன் பூகோள எல்லை பிரச்சனை பத்தி எச்சரித்த விதமும் சூப்பரோ சூப்பர். அதை விட வடக்கத்தி டூரிஸ்ட் வருவதும் ரோட்டின் ஓரத்தில் தோசை சுடுவதும் (டேய் அபிஅப்பா அது சப்பாத்திடா ), பஸ்டாண்டு கல்கண்டு பாலும், அரைஞான் கயிற்றின் பட்டிமன்றமும் அழகோ அழகு.

மனுஷன் ரொம்ப ரசிப்பு தன்மை உள்ளவர் என்பதற்கு அவர் வெத்தலை போடும் ஒரு விளக்கம் போதும். வெத்தலை போட சிறந்த காஸ்ட்டியூம் வேட்டிதான்னு நான் தல தலயா அடிச்சிகிட்டேன். யாரும் கேக்கலை. அவர் சொல்றார் பாருங்க என்ன அற்புதமா. அதன் வாலை கிள்ளி நரம்பை எடுத்து சொக்குபுள்ள கடையின் பன்னீர் புகையிலையோட அய்யோ ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அந்த மாயவரம் லோக்கல் ஸ்டேஷன் பத்தியும் அந்த தரங்கம்பாடி ரயில் பத்தியும் நானே எழுதனும்ன்னு இருந்தேன். ஆனா இவரின் அந்த பதிவுக்கு பின்ன நான் எழுதினா அவர் எழுதின பதிவுக்கு அவமானம்னு விட்டுட்டேன். இதோ கதவை திறந்து நம்ம நூலகத்துக்கு போய் பாருங்க, சத்தம் போடாம படிங்க. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க.

பின்ன ஒரு விஷயம், போன பதிவிலே தருமிசார் சொல்லியிருந்தார், ஒரே சுட்டின்னதுமே முழிச்சிகிட்டு இருந்திருக்கனும்ன்னு, நம்ம மாயவரம் பாசக்கார பயபுள்ளய்ங்க கிட்டத்தட்ட எல்லாருமே அப்படித்தானுங்க சாரே! இவரை பாருங்க இங்க. அருமையா எழுதுவார். கொஞ்ச நாளா பிசியாகிட்டார். ஆ.வில மாணவ நிருபரா இருந்தவர். அவர் பதிவிலே போய் பாருங்க அருமையா இருக்கும்!

நாளை இன்னும் நல்ல குட்டிகளோடு வர்ரேன்!
மேலும் வாசிக்க...

Monday, February 25, 2008

"விதி" வலியது!!!!!!!!

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைச்சரம் தொடுக்க வாய்ப்பை வழங்கிய முத்துலெஷ்மி அவர்களுக்கு நன்றி. ஆனாலும் அவங்களுக்கு ரொம்ப தைரியம் தான். அதற்கு பாராட்டுக்கள். சாதாரணமாகவே எனக்கு ஒரு பெரிய கெட்ட பெயர் இருக்குங்க. படிக்காமல் பின்னூட்டம் போடுகிறேன் என்று. உண்மை தான். சில சமயங்களில் அப்படி நடக்கும். என்னா ஆபீஸ்ல படிக்க நேரம் இருக்காது.(ஆனா சேட் பண்ண மட்டும் நேரம் கிடைக்குமா என கேக்கப்பிடாது கீதாம்மா)அது போல சமயங்களில் சேமித்து வைத்து கொள்வேன். பின்பு படிப்பேன். அப்போது பின்னூட்டம் போடலாம் என பார்த்தால் அதை தேடி எடுக்க சோம்பல் பட்டு கொண்டு ஓடிவிடுவேன்.

கடந்த ஒரு வாரமாக நம்ம துளசி ரீச்சர் வெண்கல கடையில் யானை புகுந்த மாதிரி துவம்சம் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்க சொல்லியிருந்தாங்க “பழைய ஆசிரியர்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லைப்பா, அடுத்து அடுத்து வரும் ஆசிரியர்கள் தொடுக்க வலைப்பூவே வைக்க மாட்டேன்றாங்க”ன்னு சொல்லியிருந்தாங்க. அதான் ரீச்சர் நான் உங்களுக்கு சொல்வதும். நான் இப்போ என்ன தொடுக்கப்போகிறேன்னு எனக்கே தெரியலை. ஆனாலும் என்னால் முடிந்தது ஒரு பதிவுக்கு ஒரு சுட்டியோ அல்லது அதிக பட்சமாக 2 சுட்டியோ கொடுக்கிறேன்.

முதல் பதிவிலே தன்னை பற்றி சுய தம்பட்டம் பண்ணிக்கலாம் என வலைச்சர விதி சொல்லுது. அதனால தம்பி லக்கிலுக்கார் ஆசிரியராக இருந்த போது அவரின் அத்தனை பதிவுகளையும் சுட்டியிருந்தார். நான் அப்படியில்லைங்க நெம்ப ரீஜண்ட்டானவன். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு சுட்டியை மட்டும் கொடுத்துக்கறேன்.விதி வலியது:-))

சரி மேட்டருக்கு வர்ரேன். என்ன விஷயத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என யோசித்து பார்த்த போது முதலில் எனக்கு தோன்றியது மகளிர் பிரச்சனைகள் தாங்க. மகளிர்ன்னாவே பிரச்சனை தானே என அண்ணாச்சி சொல்வது காதில் கேட்கிறது. மகளிர் உடல்கூறு பிரச்சனைகள் பற்றிய முக்கியமான சுட்டிகளை இப்போது நான் சுட்ட போகிறேன். இது போன்ற கம்பியில் நடக்கும் வித்தை எல்லாம் அபிஅப்பா இது வரை செய்ததில்லை என்றாலும் இந்த வலைச்சரத்தின் மூலமாக எல்லோரையும் சென்று அடையும் இந்த முக்கியமான விஷயங்கள் என நினைத்தே இந்த சுட்டிகளை தருகிறேன்.
பொண்ணா பிறந்தது முதல் மண்ணா போகும் வரை பிரச்சனைகளை மட்டுமே அவர்கள் ஒவ்வொறு பருவத்திலும் சந்திக்கிறார்கள் என்பது இந்த சுட்டிகள் மூலம் புரிபடும் உங்களுக்கு. பூப்பெய்யும் முதலாகவே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. இது பற்றின புரிதல்கள் அவ்வளவாக பரவலாக இல்லை என்பதே என் கருத்து. என் மாணவ பருவத்தில் கூட ஏகப்பட்ட குழப்பங்கள் இந்த விஷயங்களில் இருந்ததுண்டு. டுபுக்கு அவர்கள் கூட ஒரு பதிவு அதை பற்றி எழுதியிருந்தார்.

என் வகுப்பிலே படித்த முரளி நல்ல அஸ்திவாரம் போட்டு படித்தவன். எங்களை விட சீனியர் வயசிலே. அப்பப்ப டைரக்ஷன் கத்து கொடுக்கிறேன் அது இதுன்னு ஏதாவது ஏடாகூடமா கத்து கொடுப்பான். அப்படித்தான் ஒரு நாள் நான், குரங்கு ராதா எல்லாம் அவனிடம் பாடம் படித்தோம் “சினிமா டைரக்ஷன் செய்வது எப்படி”ன்னு. அவன் அப்ப சொன்னான். “டேய் முதல்ல ஒரு பொண்ணு ஆத்துல தண்ணி எடுக்குது, பின்ன நடந்து வருது அப்போ டொப்புன்னு குடத்தை போட்டுட்டு வயத்தை பிடிச்சுகிட்டு கீழே உக்காந்து அழுவுது.குடம்தட தடன்னு உருண்டு போவுது திரும்பவும் ஆத்திலே போய் விழுகுது . ஏன்னா அது வயசுக்கு வந்துடுச்சு”ன்னு ஏதேதோ சொல்லி குடுப்பான்.

ஒரு நாலு நாள் கழிச்சு ராதா அவசர அவசரமா என் வீட்டுக்கு வந்தான். “டேய் நம்ம கிளாஸ் மாலா வயசுக்கு வந்துடுச்சுடா”ன்னு சொன்னான். “உனக்கு எப்படிடா தெரியும்”ன்னு கேட்டதுக்கு அவன் “அவங்க வீட்டு வழியா வந்தேன் இப்போ அப்போ தெரு பம்பிலில இருந்து தண்ணி எடுத்து கிட்டு வந்துச்சு. அப்போ குடத்தை கீழே போட்டுடுச்சுடா”ன்னு சொன்னான். மாலா பலமுறை எனக்கு முன்பே குடத்தை கீழே போட்டிருக்கு . ஆக அந்த பருவத்தில் அந்த விஷயத்தில் அவ்வளவு தான் புரிதல் இருந்தது.

இதை எல்லாம் மீறி இது மாதிரியான உடற்கூறு தொல்லைகளுக்கு பின்னே அவர்களின் உடல் மற்றும் முக்கியமாக மனம் படும் பாடுகள் என்ன என்பதை இந்த சுட்டிகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இந்த சுட்டிகளில் அதற்கான தீர்வுகளும் இருப்பது இன்னும் சிறப்பு. பெரும்பாலான சுட்டிகள் 2003 /2004 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அந்த விஷயம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் எழுதியதின் தமிழாக்கமும் இருக்கின்றது. அதுபோல் எழுத்தாளினி ஏகாம்பரி எழுதின ஒரு பதிவும் மிக அருமையாக இந்த விஷயத்தை அலசி காயப்போடுது வீட்டு ஓட்டின் மேலே. நம்ம டெல்பினம்மாவும் அது சம்மந்தமா எழுதியிருக்காங்க. இப்போ ஜாக்கிரதையா என் பின்னே வாங்க. ஒரு இடத்துக்கு கூட்டிகிட்டு போறேன். வந்தாச்சா இதோ இந்த கதவை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு திறந்து உள்ளே போங்க “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சத்தம் போடாதே”ன்னு போர்டு போட்டிருக்கா, அதனால சத்தம் போடாம படிச்சுட்டு இங்க வந்து கும்முங்க!! நாளை “நச்”ன்னு வர்ரேன்!!

முக்கியமாக மிக்க நன்றி சந்திரவதனா அக்கா, உஷாராமச்சந்திரன், டாக்டர் டெல்பின் விடோரியா அவர்களுக்கு!!
மேலும் வாசிக்க...

பதிவு சூப்பருங்கோ இருங்க படிச்சிட்டுவரேன்!!!

வலைச்சரத்தையே இப்படியும் அப்படியுமா புரட்டி எடுத்துட்டாங்க துளசி.. ..
முதல் பதிவில் இருந்து எல்லா பதிவையும் படிச்சு ஆராய்ந்து அதற்கு ஒரு விமர்சனம் சொல்லவேண்டுமென்றால் நல்ல பொறுமை வேண்டும். வலைச்சரத்தில் இதுவரை எழுதிய ஆசிரியர்கள் எல்லாவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் என்று விருந்து சாப்பாடும் போட்டு மன நிறைவு தந்தார். நேற்றுப்பூத்த மூளப்பாளையம் பதிவு வரை இன்முகமாய் வரவேற்று சரத்திலும் இணைத்துவிட்டார்.
50 வது வாரத்தையும் ஆண்டு நிறைவையும் கொண்டாடி மகிழும் நேரத்தில் புகைப்படக்கலை தளம் போன்ற புது முயற்சிகள் புது பதிவர்களுக்கு எப்படி ஆர்வத்தை அளித்து அழைத்துவருகின்றன என்கிற துளசியின் வரிகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நன்றி துளசி .

-------------------------------------------------------------------------------------எப்பவும் பதிவு வந்தவுடன் புள்ளி , சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் ,, பதிவு சூப்பருங்கோ இருங்க படிச்சிட்டு வரேன்னு சொல்லும் அபி அப்பா தாங்க இந்த வாரம் .. இல்ல இல்ல சத்தியமா நான் படிச்சுதான் பின்னூட்டம் போட்டேன்னு சொல்றார் . .. வாங்க எப்படி நிரூபிக்கறார்ன்னு பார்ப்போம்.. நகைச்சுவை என்றாலே நினைவுக்கு வரும் பதிவர்களில் அபி அப்பாவின் பதிவும் ஒன்று.நம் வலைச்சரமும் கூட கலகலப்பாக இவ்வாரம் களைகட்டும் என நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

வீட்டுக்குப் போறேன்

இங்கே வந்து ஒரு வாரம் ஆகுது. அங்கே போட்டது போட்டபடி வீட்டை விட்டுட்டு வந்தேன். இனிப் போய்தான் 'எல்லாத்தையும்' ஒழுங்குபடுத்தணும்.


வலைப்பதிவுகள் என்னென்ன செய்யுதுன்னு பார்க்கணும் என்று நான் நினைச்சுக்கிட்டு இருந்த ஒரு வேலையை.........அடடா......... இப்படி வா(ழை)ழப்பழத்தை உரிச்சுக் கையிலே கொடுத்துட்டார்னு சொல்லவா? ஊஹும்.............

மாதுளம்பழத்தை எடுத்து உரிச்சு, வெறும் முத்துக்களை மட்டும் ஒரு அழகான கிண்ணத்துலே போட்டுக் கொடுத்துருக்கார் நம்ம சுப்பு ரெத்தினம்.


நம்ம வலைச்சரத்துக்கு எதிரில் இன்னொரு கடையும் போட்டுருக்கார் நண்பர்.

நம்ம மா சி. வலை மகுடம் தொடங்குனது நினைவுக்கு வருது. தன்னடக்கம் காரணமா இங்கே சுட்டி தரலை:-)))))


கொட்டிக்கிடக்கும் பூக்களில்தான் எத்தனை வகை. மணம்வீசும் நறுமலர்கள், வழக்கமா பளிச்னு தெரியும் வண்ண மலர்கள், இதுவரை பார்த்தேயிராத இனியக் காட்டுப்பூக்கள், எப்போதாவது மட்டுமே பூக்கும் சீஸன் பூக்கள்ன்னு கலந்து கட்டிக்கிடக்கு இங்கே.


இந்த வாரம், வாசக அன்பர்களுக்கு ஏற்கெனவே பரவலாகத் தெரிஞ்சிருந்த வலைப்பூக்களை விட்டுட்டுப் புதுசா இதுவரை சரியாகக் கவனிக்கப்படாத சில பூக்களை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.
நானும் சுமாராத்தான் வனத்துக்குள்ளே ஓடித்தேடுனேனே தவிர, ஒவ்வொன்னா நின்னு நிதானமாப் பார்க்க நேரம் வேணாமா? இருப்பது இருபத்திநாலு மணி நேரம்தானே?
.
வலைச்சரத்தின் நிர்வாகிகளுக்கும், பொறுப்பாசிரியருக்கும், இந்த வாரம் முழுசும் பின்னூட்டிய & பின்னூட்ட மறந்த நண்பர்களுக்கும்( ஏம்ப்பா குறைந்தபட்சம் படிச்சீங்கன்னு நம்பிக்கவா?) மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் இந்த நல் வேளையில்...........


வலையில் பதியும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு ஒரு விசேஷ அன்பையும், வாழ்த்து(க்)களையும் தெரிவிச்சுக்கறேன். இவுங்க இல்லேன்னா, யாவாரம் எப்படி நடக்கும்? மூலப்பொருளே இந்தப் பூக்கள்தானே, இல்லீங்களா?

எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க.

இதோ, கடைச்சாவியை இங்கே இந்தப்பூவின் மேல் வச்சுட்டுப்போறேன், அடுத்து வரப்போறவங்க இன்னும் நல்லா அனைவரையும் 'ஊக்கு' விப்பார் என்ற நம்பிக்கையில் 'பின்' வாங்காமல்.




அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்.
மேலும் வாசிக்க...

Sunday, February 24, 2008

முதியோர் கல்வி.

வலைப்பூக்கள் படிக்கிறது ச்சும்மா டைம் பாஸ் இல்லைன்னு ஆகிப்போச்சுங்க.வலைகளின் வீச்சு ரொம்ப தூரம் போகிறது பார்த்தீங்களா? வாழ்க்கை முழுசும் ஏதாவது வகையில் என்னத்தையாவது கத்துக்கிட்டுத்தானே இருக்கோம்.....


புகைப்படக்கலை வகுப்புகளுக்குக் கூட்டம் எப்படி அம்முது பாருங்க. 'கல்விக் கரையில கற்பவர் நாள் சில'( பழமொழி சரியா?) கண்ணுலே படும் காட்சிகளைக் கிளிக் பண்ணிக்கிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுகள்கூட கொஞ்சம் கவனமெடுத்துக் கிளிக் பண்ண ஆரம்பிச்சது இந்தப் பதிவுகளைப் படிச்சுட்டுத்தான். மாசாமாசம் புகைப்படப் போட்டின்னு வச்சு நம்ம திறமையை வளர்க்கும் இந்த வகுப்புகளை நடத்தும் நம்ம மக்கள்ஸ்க்கு வலைச்சரத்தின் சார்பில் ஒரு நன்றியும் சொல்லிக்கலாமா? இந்தப் போட்டிகளில் கலந்துக்கறதுக்காகவே புதுப்புது ஜனங்க வலை பதியக் கிளம்பிருக்காங்க. எப்பவுமே படமாவேக் காட்டுவாங்களா என்ன? அப்படியே கொஞ்சம் எழுதவும் செய்வாங்கதானே?

கோணம் கூட இப்படி ஆரம்பிச்சதுலே ஒண்ணுதான். அப்பாடா............எத்தனை கோணம் எத்தனை பார்வை!!!!


மலாய் மொழிச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்த செக்குவைக் காணோம்?
ஆறுமாசம் லீவு விட்ட செக்கு, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
ஒரு பக்கம் மொழி கத்துக்கொடுத்துக்கிட்டு, இன்னொரு பக்கம் ஜில்லுன்னு (ஒரு)மலேசியான்னு கூட ரெண்டு ஆளுங்களை சேர்த்துக்கிட்டு ச்சும்மாக் கலக்குக் கலக்கிக்கிட்டு இருக்காங்க. மலேசிய மாரியாத்தா , விக்னேஷ்(வரா) எல்லாரையும் காப்பாத்துன்னு வேண்டிக்க வேண்டியதுதான் பாக்கி. தைப்பூசம் படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது





மருத்துவம் சம்பந்தப்பட்டப் பதிவுகள் ஒரு விழிப்புணர்ச்சியைத் தருது.
எல்லா விவரமும் இப்ப வலையிலே கிடைக்குதுன்னு சொன்னாலும், நம்ம தமிழில் படிக்கும்போது இன்னும் ஒரு அண்மை உணர்வு வருதுங்க.



நாமே ஊர் சுத்த அலையறோம். நம்மளைப்போல ஊர்சுற்றிகள் எழுதும் பயணக்குறிப்பு சுவையா இருக்குமேன்னு தேடிப்போனப்பக் காலிலே அகப்பட்ட மூலிகைகள் ஏராளம். ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல? யாத்திரீகன் எல்லோராவை எப்படி எழுதி இருக்காருன்னு நீங்களே பாருங்க.





தினேஷ் குமார் ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்தே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்காருங்க.




வல்லி சிம்ஹன், நானானி,நிர்மலா, செல்வராஜ், சிவிஆர், கைப்புள்ளெ, மோகன்தாஸ்,கானா பிரபான்னு சொல்லிக்கிட்டே போகலாம். அப்புறம் வலைச்சரத்தின் ஆயிரத்தாவது பதிவுவரை பட்டியல் நீண்டு போகும் அபாயம் இருப்பதால் இதோடு நிறுத்திக்கலாம். பெயர் குறிப்பிடாமல் விட்டவுங்க எல்லாரும் என் மனசுலே பெயர் பொறிச்சு வச்சுட்டுப் போயிருக்கீங்க.
தெரியாத விவரங்களைத் தெரிஞ்சுக்கவும், சரித்திர சம்பவங்கள் நடந்த இடங்களை இப்படியாவது பார்த்துக்கவும் முடியுதேன்ற மகிழ்ச்சியை இந்தப் பயணக்குறிப்புகள் தருதுன்னு நான் சொன்னா நீங்க மறுக்கவா போறீங்க?


இப்படி எல்லா விஷயத்திலும் எங்கேயாவது எதையாவது வாழ்க்கை முழுதும் கற்றுக்கொடுக்கும் (முதியோர்) கல்விக்கூடம் வலைப்பூக்கள்னு சொல்லவா?


முதியோர்ன்னு சொன்னா கிழவன் கிழவின்னு இல்லீங்க. அறிவில் முதிர்ந்த முதியோர் என்று கொள்க:-)))))
மேலும் வாசிக்க...

Saturday, February 23, 2008

இது புதுசு கண்ணா..புதுசு .......புத்தம் புதுசு..

தெனாலியிலே தனக்கு என்னெல்லாம் பயமுன்னு ஒரு பெரிய லிஸ்ட் போடுவாரு பாருங்க. அதே போல என்னெத்தையெல்லாம் தொலைச்சாருன்னு அத்திவெட்டி ஜோதிபாரதி சொல்றதைப் பார்த்துட்டு, நீங்களும் இதுவரை தொலைச்சதை எழுதுங்க மக்கா............



நம்ம வலைச்சரத்துக்குக் கதம்பம் கட்டலாமுன்னா இங்கேயே இவர் திறந்திருக்கும் பிராஞ்சு ஆஃபீஸில் வாங்கிக்கலாம் போல. வலைப்பூவில் தமிழ்ப்பூ விக்கறார்.
விலைகூட ரொம்ப மலிவா இருக்கான்னு பார்க்கணும்:-))))



சிங்கைப்புள்ளி போல இவர். ஒரு பதிவோட இல்லாம இன்னொரு இடத்தில் (அத்தி)வெட்டியா அலசிக்கிட்டு இருக்கார் . அங்கே ஒரு பறவையோட படம் போட்டுருக்கார். அட்டகாசமா இருக்கு அதோட வர்ணம். ஆளுக்குக் கவிதை(யில்) கண் இருக்கு.

கவிதைக் காதலர்கள் இங்கே போகலாம். எல்லாம் அளவாத்தான் இருக்கு.



அதென்ன அளவான்னு சொல்றேன்னா.............. நம்ம உண்மைத்தமிழனின் ஞாபகம் வந்துச்சு:-) இன்னொரு புதியவர் மெட்ராஸ் தமிழனாம். எக்ஸ்பேட் குருன்னு தன்னைச் சொல்லிக்கிறார். கூடுதல் சிறப்புன்னா சென்னைத்தமிழைச் சிறப்பா பேசுவாராம். ஒரு பத்துப் பதிமூணு இடுகைவரை போட்டுருக்கார். ஒண்ணேயொண்ணை உங்களுக்குச் சாம்பிள் கொடுக்கலாமுன்னா லிங்க் எடுக்க முடியலை( தொழில்நுட்பக் கோளாறு?)
எவ்வளவோ தாங்கினோம், இதைத்தாங்க மாட்டோமா?



அதென்னவோ பேரே ஒரு வித்தியாசமா இருக்கோ? மூளப்பாளையம் நட்புகள்.
ஒருவேளை மூளைப்பாளையமோன்னு மூளையைக் கசக்கிப்பார்த்தேன், நட்புகள்னு இது ஒரு கூட்டுப்பதிவு. 12 பேர், ஒரு 10 இடுகையில் இப்ப நிக்கறாங்க. தொழில்நுட்பக்கோளாறு ஒண்ணும் இல்லைன்னாலும் பத்துதானேன்னு பசங்களைப் புடிச்சுப் போட்டுருக்கேன் பாருங்க.



தமிழ்க்குன்னு வந்தவர் டிஆர்தாசன்.பப்ளிஷிங்லே இருக்காராம். மனசில் ஒரு மூலையில் போட்டு வச்சுக்குங்க. 'குச் காம் கோ ஆயேகா':-))))
மூணே இடுகை. தமிழ்மணத்துலே சேர்ந்துருக்கார். ஹைக்கூஊஊஊஊ எழுதறார்.




வாழ்வில் ஓரு முறைன்னு கவிதைகளா எழுதித்தள்ளிக்கிட்டு இருக்கார் இன்னொருஇ புதுவரவான முத்துக்குமார் கோபால கிருஷ்ணன்.( அட! நம்ம கோபால கிருஷ்ணன். பேரே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஏன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?:-)))))) பறவைகள் விற்பவனும் நானும்!!!



இவரும் இதுவரை பத்துக்கவிதைகள் போட்டுருக்கார். போய்ப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிச்சுப்போச்சுன்னா............. படிச்சுட்டு ஒரு பின்னூட்டி ஆதரவு கொடுங்க மக்கா.


எல்லாரும் கவிதைன்னே ஆரம்பிச்சுக்கிட்டு வந்தாலும், நிறையப் புதியவர்கள் தமிழ் (தமிழில்) எழுத வந்திருப்பது கவனிக்கப்படவேண்டும். இதுவே தமிழுக்கு ஒரு வெற்றிதானே?
மேலும் வாசிக்க...

Thursday, February 21, 2008

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்........



வயசு ஒண்ணு ஆயாச்சு நம்ம வலைச்சரத்துக்கு.



வலைச்சரத்தைத் தொடுக்க ஆரம்பிச்சு இன்றோடு வருசம் முடியுது. பிறந்த ஒரே வருசத்தில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் இதுவரை 342 பதிவுகள் போட்டுருக்கு குழந்தை.









இதுவரை வந்த இந்த முன்னூத்தி நாற்பத்தியிரண்டு பதிவுகளில் அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவை எழுதிய பெருமை நம் சீனாவுக்கு.
கும்மி இல்லாத கொண்டாட்டமா? அடடாடா...... 136 பின்னூட்டக் கலாட்டா:-))))







சரத்துக்கு ஆதரவா இருக்கும் அன்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம் அனைவரின் அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம்.






வலைச்சரமே........... நீ வாழ்க பல்லாண்டு

கேக் எல்லாம் வெட்டப்போறதில்லை. நம் தமிழ்ப் பண்பாடு வகையில் எல்லாருக்கும் இலை போட்ட சாப்பாடு.








மேலும் வாசிக்க...

பாட்டுச் சத்தம் கேக்கலையா..... பாட்டுச்சத்தம்..... ம்ம்ம் பாட்டுச் சத்தம்

நான் ரசித்த பல பதிவுகளில், சில இன்னிக்கு.
காலையில் காஃபி குடிக்கலைன்னா எனக்குத் தலையே வெடிச்சுப் போயிருமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒருவேளை காஃபி கிடைக்கலைன்னா? இங்கே இருக்கு பாருங்க, வகைவகையா.

காஃபியே ஒரு சிமுலேஷந்தானே?


செவிக்குணவுன்னு கொஞ்சம் பாட்டுக் கேட்டுக்கலாமுன்னா இங்கெல்லாம்கூடப் போய் வரலாம். அதான் தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே.
திரை இசையில் கேட்கும் ராகங்கள் அதோட பெயர் தெரியாமலேயே எப்படி மனசுக்குள் 'பச்சக்'னு ஒட்டிக்கிது பாருங்க.


தமிழ் மட்டும் கேட்டாப் போதாது.....இன்னும் கொஞ்சம் ஹிந்திப்பாட்டும், கர்னாடக சங்கீதமும் வேணுமுன்னு இப்படி அடம் பிடிக்கறவங்க போகவேண்டிய இடம் இது. கலந்துகட்டி அடிக்கிறாருங்க.


இவ்வளோ சொல்லிட்டு, நம்ம வலைச்சரத்துலே ரொம்பவே வாசம் வீசும் பூவா இருக்கும் பிரபாவை விட்டுற முடியுதா?



தனியா ஒரே ஒரு இடுகையைச் சொல்லலாமுன்னா எதைச்சொல்வது என்ற குழப்பம்தான். அத்தனையும் ஜொலிக்கும் வைரமா இருக்கும்போது அப்படியே அதைக் கொத்தாத் தூக்கிக் கொடுத்தா உங்களுக்கு வேண்டியதை நீங்களே எடுத்துக்கிட மாட்டீங்களா?


இசைக்கான தளங்கள் கொட்டிக்கிடந்தாலும், இன்னிக்குக் கொஞ்சம் ஆணி அடிக்க வேண்டி இருப்பதால் பாட்டுக் கேட்டுக்கிட்டே(யாரிடம்?) அதைச் செய்யலாமுன்னு போகிறேன்.... ஜூட்:-)
மேலும் வாசிக்க...

Wednesday, February 20, 2008

நுழைவதற்கு முன் மூச்சை நல்லா இழுத்து விட்டுக்குங்க.

நேத்து மூடுன கண்ணை, நானும் இன்னைக்குத்தான் தொறந்தேன். பார்த்தா.....
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதமுன்னு பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு.
'நான் ரவா உப்புமா மாதிரி'ன்னு சொல்லிக்கிட்டே வந்த பெரியார், ப்ரின்ஸ் என்னார் சாமா ஒரு காரைக்குடிக்காரர்னு தெரிஞ்சதும் மனசு முந்தாநாள் பார்த்த ஒரு படத்துக்குப் போயிருச்சு. இவர் சுட்டிய பதிவுகளில் ஒண்ணு உடனே என் கவனத்தை இழுத்துச்சு. அட! மொதல்லேயே தெரியாமப்போச்சே
வாசுகி என்பது தமிழ்ப் பெயரில்லையா? போச்சுரா........

நான் சின்னப்பையன். இவ்வளோதான் ஞாபகம் இருக்குன்னு சொல்லித் தாளிச்சவர் ஜி. வெட்டிட்டு வான்னா வெட்டுனதோடு இல்லாம அதைக் கட்டிட்டு வந்தமாதிரி, சரம் தொடுக்கக் கூப்புட்டா..... . பக்தியிலே ஆரம்பிச்சுத் தமிழ்,சிறுகதை,கதம்பம், கவிதைன்னு வண்ண மாலை தொடுத்துட்டார் நம்ம கோவிகண்ணன். இந்த வண்ணமாலையைத் தூக்கி யாருகையிலே கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க. பழமொழி பொய்க்கவில்லை.:-))))



வெறும் கைகாட்டுற வேலைன்னு மண்டையை ஆட்டிக்கிட்டே வந்தேன்னு சொல்றவங்க நம்ம லக்ஷ்மி. இவருக்கு, நகைச்சுவை, லேடீஸ்,ஜெண்டில்மேன், இளைஞர், இப்படி எல்லாமே ஸ்பெஷல்:-)


கவிஞர் கென் வந்தாருங்க. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம் என்றதால் இவர் பக்கமெல்லாம் போகாமக் கொஞ்சம் ஒதுங்கி இருந்துட்டேன்(-:


ஜாலியா நம்மையெல்லாம் ஜம்ப் பண்ண வைக்கறதுக்குன்னே ஜாலிஜம்பர்னு பெயர் வச்சுக்கிட்டு இருக்காரோன்னு ஒரு நினைப்பு. எழுத்துச் சண்டைன்னு வந்துறக்கூடாது.......வேடிக்கைப் பார்க்கப்போயிருவாராம்:-)))) சீரியஸ்ஸான பதிவர்.ஆனா பெயரில் இருக்கும் ஜாலியை ஜஸ்டிஃபை பண்ணணுமேன்னு காமெடிப் பதிவையும் சுட்டிட்டுப் போயிருக்கார். அடுத்துவந்த மா.சியைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமாக்கும்?


எக்ஸ்ப்ரெஸ் வந்துக்கிட்டு இருக்கு, ஆறுவகையில். ஓடிப்போய் ஏறிக்குங்கப்பா, கிழுமத்தூர் போகலாம்.


கவிதைகளின் காதலி,காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஓடும்போதும் கும்மிகளை மறக்கலை!!!


காமெடி, கதை கவிதை,சீரியஸ், புதுசுன்னு கலக்கிட்டுப்போன இந்தப் பாசக்கார குடும்பத்து மைஃப்ரெண்ட், இப்ப ஏன் மலாய் சொல்லிக் கொடுக்க வர்றதில்லைன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.


கூட்டாஞ்சோறு ஆக்கிவச்ச கும்மி ஸ்பெஷலிஸ்ட் காயத்ரி, அவுங்க பங்குக்கு வெறும் கும்மியா இல்லாமத் தமிழ்மணத்துலே இல்லாத பதிவுகளைச் சுட்டிச்சுட்டி நல்லாவே ஆடுனாங்க. அதுக்குப்பிறகு,அக்குளில் அணுகுண்டு வச்சுட்டாங்கன்னு அலறிக்கிட்டே வந்தாருப்பா புலி. புலிக்கும் அக்குள் இருக்குன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சது! தெரிவெல்லாம் 2006லே வந்தவை.
பத்துக்குப் பழுதில்லை, எல்லாமே முத்து( ச்சும்மா ஒரு எதுகைமோனைதான்)போறபோக்குலே புத்திமதியொண்ணைச் சொல்லிட்டுப்போனார். எல்லாம் நமக்குச் சாதகமாத்தான்:-)))) படிங்க. படிச்சுட்டு பின்னூட்டுங்கன்னு!


சத்தமே இல்லாம அமைதியா ஓடும் தமிழ்நதியில் ஆட்டம்போட ஒரு வாய்ப்புக் கிடைச்சது. அமைதின்னு நாந்தான் தப்பா நினைச்சுட்டேன்போல....
ரொம்ப ஆழமான வாசிப்பு. இப்படி ஒரு இடத்துலே சொல்லி இருக்கறதைப் பாருங்க.


//வலைச்சரம் என்றால் சும்மா வேலையில்லை. படிப்பை நிறுத்தியபிறகு 'பள்ளிக்கூடம் போ' என்பது மாதிரி கொஞ்சம் பழைய பதிவுகளுக்குள் சுற்றியலைந்து திரும்பவேண்டியிருக்கும். //


நமக்கு இருக்கும் ஒரு சந்தேகம் இவருக்கும் இருந்துருக்கு பாருங்களேன்


//வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை//


கூடல்நகர் கவிஞர் முத்துக்குமரன் கைதட்ட வந்தாராம். அப்படியே பிடிச்சுப்போட்டு, அதே கையால் சரத்தைத் தொடுக்கச் சொல்லியாச்சு. இது ஒரு விசேஷச் சரம். 250வது பதிவு. புதுமைப்பெண்களைப் பற்றிச் சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. என்ன இருந்தாலும் நான் பெண்ணினத்தை விட்டுக்கொடுப்பேனா?:-))))


பதிவரா இல்லாம வாசகரின் அனுபவத்தோடு வலைச்சரம் தொடுக்க வந்த நம்ம பாலராஜன்கீதாவுக்கு எதை விடுவது எதைத் தொடுப்பதுன்னு ஒரு மனக்குழப்பம். ஏன்னா....... எதையுமே விட்டுவிடாமப் படிக்கும் பழக்கம்தான்:-)))


அய்யோடா...அப்படியா ஆச்சுன்னு பேரன்போடு வந்தார் தங்கக்கம்பியான நம்ம தம்பி. பதிவர்களையே சரஞ்சரமாத் தொடுத்துட்டாருன்னா பாருங்க! வருசக்கடைசியும் வந்தது ரசிகனும் வந்தார். பாசக்காரக் குடும்பத்துப் பயபுள்ளெ(அப்படிச் செல்லமாச் சொல்றதுதான்)


புரியலென்னு கன்ஃப்யூஸ்ட் திராவிடியன் வந்தார். நம்ம டிபிசிடிதான்:-)ஒரே
ஃபீலிங்ஸ் ஆகிப்போச்சு. எப்படி இருக்கவேண்டிய நாம் ஏன் இப்படி ஆயிட்டோமுன்னு! அதுக்கு அடுத்துக் களம் இறங்குனவர் வலைச்சர டெண்டூல்கரா இல்லே காவாஸ்கரான்னு எனக்கே ஒரு குழப்பம். இந்த ஏழரை கெடுக்காம, கொடுத்துட்டுப்போச்சு,18 நாட் அவுட்:-) இதுவரை இவரோட ரெக்கார்டை யாரும் முறியடிக்கலை. வெல்டன் மங்களூர் சிவா!


நண்பரே நண்பனா வந்தார். திரைப்படங்கள் குறித்த தேடுதல்,ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்னு எல்லாமே கனம் கூடிய பதிவுகள். (அதான் பின்னூட்டம் ரொம்ப வரலை போல!)


சில்லுன்னு ஒரு சீனா வந்து, சரத்தை உண்டு இல்லைன்னு ஆக்கிப்புட்டார். சிவாவுக்குப் போட்டியா இருப்பேன்னு (சீனாச் )சபதம் போட்டுக்கிட்டு 19 ஆவது போடணுமுன்னு இருந்தாராம். 15ன்னு கணக்குலே ஆச்(சி)சு:-))) பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து ,


ஆடுமாடு வந்து அழகா மேய்ஞ்சிட்டுப்போனதும் தெக்கிக்காட்டான் ஆட்டையைப் புடிச்சதும் சமீபத்திய நிகழ்வுகள். நினைவிருக்குல்லே:-))))


லிங்க் கொடுக்கணுமுன்னு பொறுப்பாசிரியர் கூப்புட்டுச் சொன்னாங்கதான். ஆனா முதல் ஆறுமாசமாச் சரம் பின்னுன கைகளுக்குக் கொடுக்காததை,
அடுத்த ஆறுமாசத்துக்கும் கொடுக்காம ஜஸ்டிஃபை செஞ்சுருக்கேன்.


அதுக்காக பொறு[ப்பாசிரியர் சொல்லை மீறலாகுமா? ஒரு ரெண்டு லிங்க் அதோ....மேலே போட்டுருக்கேன் பாருங்க.


இனி, நாளை முதல் லிங்கோ லிங்குதான்:-))))))

மேலும் வாசிக்க...

Tuesday, February 19, 2008

1 முதல் 18 வரை.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (ரகசியக்) கணக்கு இதுதாங்க. வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருத்தரும் எத்தனை பதிவுகள் போட்டாங்கன்னுதான் இது சொல்லுது:-)


நம்ம சயந்தன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டு, தடங்கலுக்கு வருந்துகிறேன்னு போயிட்டார்.

ஆனா களத்தில் நின்னு ஆடறதுன்ற முடிவோட இறங்குன நம்ம மங்களூர் சிவா 18 பதிவுகள் போட்டு முதலிடத்தில் நிக்கறார் (இப்போதைக்கு)


முதல் ஆசிரியர் பெருமை நம்ம பொன்ஸ்க்குப் போய்ச் சேருது. மூணே பதிவுகள்னு சொன்னாலும் ஒவ்வொண்ணும் ஒரு முத்து. துறை சம்பந்தப்பட்டப் பதிவுகளையும், புதுசா வந்து மின்னிக்கிட்டு இருக்கும் பதிவர்களையும் சொல்லி இருக்காங்க. 'கவிதை எழுதிக் காலத்தை வீணடிக்காதீங்க லட்சுமி:-))))'ன்னு நம்ம கயல்விழி முத்துலெட்சுமிக்குச் சொல்லி வச்சிருக்காங்க. பிடிச்சிருக்கு

ரெண்டாவதா வந்த நம்ம சிறில் அலெக்ஸ் சொன்னாரு பாருங்க இப்படி
//தமிழ் வலைப்பதிவுகள் அசுரத்தனமா வளர்ந்திருக்குது எனலாம்.//
இது அப்ப, கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முந்தின கதை. இப்ப இந்த அசுரத்தனம், பேய் அசுரத்தனம் ஆகிக்கிடக்கு. இன்னிக்குக் கணக்குலே தமிழ்மணத்துலே பதிவு செஞ்சுக்கிட்டது மட்டுமே
2642. ஒரு வாரத்துக்கு 1215. அதுலேயும் ஒரு நாளைக்குச் சராசரியா 165 பதிவுகளாம்.


இது இல்லாம தனியாத் தளங்கள் வச்சுக்கிட்டு இருக்கும் பதிவர்களும் ஏராளம். தமிழ்மணம், அடுக்ககமுன்னு சொன்னா இவுங்க எல்லாம் தனி பங்களாக்கள்,பண்ணை வீடுகள்.


எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் படிக்கறது நடக்கிற காரியமா? எத்தனையோ அருமையான நல்ல பதிவுகள் கண்ணுலே விழாமக் காணாமப்போயிருது. இதுலே வலைச்சர ஆசிரியர்கள் நல்லதைக் குறிப்பிட்டுச் சொல்றதும்கூடக் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நாம் எதையெதைக் கவனிச்சோமுன்ற லட்சணமும் தெரிஞ்சுருமே:-))))


மூணாவதா வந்த நெல்லை சிவா, பரபரன்னு சுட்டிகளை அள்ளித் தெளிச்சுட்டார். நான்காவது ஆசிரியரா வந்த நம்ம சுப்பைய்யா வாத்தியார் சுட்டிகள் கொடுத்தது மட்டுமில்லாம படமும் காமிச்சார். ரவிவர்மாவின் அருமையான ஓவியங்களையும், பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எடுத்த படங்களையும் பதிவுகளில் போட்டது அப்படியே மனசை அள்ளிக்கிட்டுப்போயிருச்சு. வலைச்சரத்தின் முதல் படங்காட்டி என்ற பெருமை நம்ம சுப்பையா வாத்தியாருக்குத்தான். என்னதான் சொல்லுங்க, பக்கா ஒரிஜனல் வாத்தியார் ஆச்சே அவர்.


//சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஆசையால் எழுதுபவர்களுக்கு,எழுத்து, வெறும் ஊட்டமல்லஎழுத்து, வெறும் சுவாசமல்லஎழுத்து, வெறும் நேசமல்லஎழுத்து வெறும் இயக்கமல்லஎழுத்து வெறும் ஆயுதம் அல்லஎழுத்து, ஒரு போராட்டம்.//
இப்படிச் சொல்லிக்கிட்டு வந்தார் நம்ம மலைநாடான்.


சென்ஷி, சிந்தாநதி, கயல்விழி முத்துலெட்சுமி ன்னு வந்துக்கிட்டு இருந்தவங்களில் வலைச்சரத்தின் 50-வது பதிவைப் போட்ட பெருமையைத் தட்டிக்கிட்டுப்போனாங்க நம்ம கயல்விழி முத்துலெட்சுமி.


அதுக்கப்புறம் வரிசையில் வந்து கைவரிசை காட்டுனாங்க மங்கை, விக்கி, வெட்டிப்பயல், அய்யனார், இராம் (வவாசங்கம்), ரவிசங்கர்.இவுங்களோட வாசிப்புகளைப் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன். உண்மையைச் சொல்லணுமுன்னா அய்யனார், ரவிசங்கர் போன 'வீடுகளை' நான் எட்டிப்பார்த்ததே இல்லை(-:


சின்னப்பொண்ணா இருக்கும் சிநேகிதி ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்துட்டாங்க. சொல்வது ஒண்ணு, செய்யறது ஒண்ணுன்னு//எனக்குண்மையா சரம் கட்டத்தெரியவே தெரியாது.//
மெய்யாலுமா? கட்டத்தெரியாமலேயே இந்தப் போடு போட்டா......கட்டத்தெரிஞ்சுருந்தா எப்படி இருந்துருக்கும்?இளைய தலைமுறை மீது எனக்குள்ள நம்பிக்கையை உண்மையாக்கியவர். வலைச்சரத்தின் ஆசிரியர்களிலேயே வயதில் மட்டுமே சிறியவர்.

99 வது ரன் எடுத்தவர் சிந்தாநதின்னா, அதை 100 ஆக்குனவர் நம்ம சித்தார்த். வலைச்சரத்தின் நூறாவது கண்ணி. தொடர்ந்து வந்தவர்கள் வகைவகையா சரவெடி கொளுத்திப்போட்ட லக்கிலுக், 'ஆவி'வந்த பதிவுகளை எழுதுன வினையூக்கி, சரத்தைத் தொடுத்துப் பெட்டியில் வச்சுப் பூட்டிட்டு, சாவியில்லாமல் கவலைப்பட்ட அகிலன், பா.க.ச.வுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும் தல பாலபாரதின்னு அடிச்சு ஆடிட்டு போனாங்க.


சவுண்டுப் பார்ட்டின்னு வந்தவர் உதயகுமார், வலைச்சரத்தின் நாராக வந்தவர் மஞ்சூர் ராசா.விட்டேனா பார்ன்னு வலைச்சரத்தில் பூவாக வந்த தூயா, யாரும் மண்டபத்தில் எழுதித்தராமல் தானாகவே 'ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் 'னு அறிக்கை விட்டுவந்த தருமி......

ஸ்ஸ்ஸ்ஸ்.......ப்ப்ப்பா........... கண்ணைக் கட்டுதே (உங்களுக்கு)


பாக்கியை நாளைக்குப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, February 18, 2008

வலை வீசம்மா வலை வீசு. வணக்கம் சொல்லி வலை வீசு

அறிமுகமுன்னு ஒண்ணு தனியாக் கொடுக்கப்போறதில்லை. பொறுப்பாசிரியர் சொன்னதே போதும்.


வலைகளில் நடமாடிக்கிட்டு இருக்கும் தமிழ்ப்பதிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டணுமாம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் ஒரே காரணம்.


நான் மாத்திரம் படிச்சுட்டு, மத்தவங்களுக்கு இதைப் பத்தித் தெரியாமப் போச்சுன்னா?


கண்ணுக்குத்தெரியாத ச்சின்ன மீனுன்னா ஒரு லென்ஸ் வச்சுக் காட்டிப்பிடலாம். தமிழ்வலைகளில் திமிங்கிலங்கள் மிதக்குதப்பா. இதுலே நான் என்னத்தைன்னு 'பிடிச்சு' உங்களுக்குக் காட்டுறது? அதுதான் சூடாவும், குளிர்ச்சியாவும், நாப்பதுக்குக்கீழேயாவும், அதே நாப்பதுக்கு மேலேயாவும் முகப்புகளில் ஆடுதே.....



எதையாவது கவனிக்காம விட்டதை எழுதலாமுன்னா, நம்ம வலை ஆசிரியர்கள் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தோமுன்னு ஆழமாத் தோண்டி எல்லாத்தையும் புரட்டிப்போட்டு வச்சிருக்காங்க. என்னடா.....நமக்குப் பின்னாலேயும் சக ஆசிரியர்கள் வருவாங்களே.....அவுங்களுக்கு எதாவது மிச்சம் மீதி வச்சுட்டுப்போணும் என்ற எண்ணமே துளியும் இல்லாதவங்கப்பா:-)))



நம்மளை(யும்) ஒரு டீச்சருன்னு வலை உலக மக்கள்ஸ் ஒருவழியாச் சொல்லி வச்சுருக்காங்க. அதனால் கிடைச்ச வாய்ப்பை விடாம ஆசிரியர்களுக்கே ஆ.........'சிறியரா' வந்துட்டேன், இந்தப் பெரிய டீச்சர். மத்த டீச்சருங்க என்ன செஞ்சுவச்சுருக்காங்கன்னு பார்த்தாப் போதும்தானே? பள்ளிக்கூடத்துக்கு 'டீவோ' வர்றாருங்கற மாதிரி. அந்தக் கொள்கையின் படி இதுவரை இருந்த நாற்பத்தியொன்பது வலைச்சர ஆசிரியர்கள் ரிப்போர்ட்டைத்தான் இந்த வாரம் பார்க்கப் போறோம்.

புதுசா வந்தவங்களை அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம். இன்னிக்குக் கணக்குக்கு ஆசிரியர்கள் வரிசை இப்படி................
2 முதல் 18 வரை
மேலும் வாசிக்க...

தா(யா)னைத்தலைவி வருக!வருக! -50 வ்து வாரம்

தெக்கிக்காட்டான் தன் மேய்ச்சல்நிலங்கள் என்ற பொது தலைப்பில் வரிசையாக இட்ட அத்தனைப்பதிவுகளுமே நாம் தவறவிட்ட நல்ல நல்ல பதிவுகளை அடையாளம் காட்டுபவையாக அமைந்திருந்தது. மேலும் புதிய பதிவர்களுக்கு இப்போது எழுதுவதைக்குறைத்துவிட்ட பதிவர்களின் பதிவுகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்று இருப்பார்கள் என நினைக்கிறேன்..

வவ்வாலின் ஆழ் நீர் நெல் சாகுபடியும், சுயப்பிரசவம்,பித்தானந்தாவின் போதனை... சாமி காட்டிய ,படகு புகட்டிய பாடமும் ... என்று அவருடைய சிறந்த வாசிப்பு அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டு சிறப்பித்தமைக்கு அவருக்கு எங்கள் நன்றி.

------------------------------------------------------------

வலைப்பதிவுகளின் ஆரம்பக்காலத்தில் மதி கந்தசாமி வலைப்பூ இதழ் ஆரம்பித்தார். அதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பதிவுகளை விமர்சனத்தோடு அறிமுகம் செய்துவைத்தார். முக்கியமான பதிவுகள் அதில் சுட்டிக் காட்டப் பட்டும் விமர்சிக்கப் பட்டும் தவறவிடப் படாமல் வாசிக்க உதவின.வ்லைப்பூ ஆசிரியர் என்பது பின்னர் தமிழ்மண நட்சத்திரமாக மாறியது. பின்பு தமிழ்மணப்பூங்கா வ்லைப்பதிவர்களின் பதிவுகளை தொடுத்துவந்தது.

கில்லி, பாஸ்டன் பாலாவின் ஸ்னாப்ஜட்ஜ், கதம்பமாலை, மாற்று என்று பல நல்லப் பதிவுகளை திரட்டும் இடங்கள் இருந்தாலும் அந்த வலைப்பூ அமைப்பைப் போலவே வாரம் ஒரு ஆசிரியரின் விமர்சனமும் ஆவணப் படுத்துதலும் என்கிற முறையில் புதிதாக இந்த வலைச்சரம் அமைப்பு தொடங்கப்பட்டது.

யானைத்தலைவி பொன்ஸ் தன் பொற்கரத்தால் ஆரம்பித்துவைத்த வலைச்சரம் இந்த வாரம் சிறப்புமிக்க ஐம்பதாவது வாரமாக தா(யா)னைத் தலைவி துளசி கையில் வந்திருக்கிறது. (முதன் முதலாக பழைய வலைப்பூவிலும் ஆசிரியராக இருந்த அனுபவம் உள்ளவர் வலைச்சரம் தொடுக்கிறார் என்ற சிறப்பும் சேர்கிறது)

பொதுவாகவே பல சம்பிரதாய விசேச நிகழ்ச்சிகள் என்றால் யானைவந்து மாலையிட்டு வரவேற்று சிறப்பித்துவைப்பது என்பது நமது மரபுதானே. துளசிஅவர்கள், அக்கா என்றும் டீச்சர் என்றும் அழைக்கப்பட்டு அத்தனை பதிவரும் அறிந்த பதிவராக இருக்கிறார். புதிதாக வரும் பதிவர்களையும் சென்று வாசித்து ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரேதான்.. பின்னூட்ட நாயகி என்ற பெயரும் கூட அவருக்கு இருப்பதை நினைவுறுத்துகிறேன்..

நாட்டின் வரலாறாகட்டும் மனிதர்களின் குணாதியங்களாகட்டும் தொடராக எழுதி தள்ளிவிடுவார். அவர் வாசிக்காத பதிவுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளாகத்தான் இருக்கவேண்டும். எனவே சிறப்பான வலைச்சரம் தருமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் வாசிக்க...

சரி, நான் பொயித்து வர்ட்டா...!!

உண்மையிலேயே எப்படி எடுத்து எப்படி முடிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொட்டில் பழக்கம் இடுகாடு வரைக்குமின்னு சொன்னது மாதிரியே கடைசி நேரத்தில் டென்ஷன் எகிற, எகிற பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் முதல் நாளும் அடிக்கும் மக் அப் மாதிரியே இந்த வலைச் சரமும் அமைந்திருச்சு.

ஆனால் இதிலொரு வித்தியாசம் இருக்குது. அது என்னான்னா, எப்போயோ படித்தவர்கள் எல்லாம் மனசில பசக்கின்னு ஒட்டிக்கிட்டவங்க என்னுள் ரொம்ப ஈசியா வந்து வெளியில் விழுந்தாங்க, பரீட்சை அறையில் கையில் எழுது காகிதத்தை வாங்கினவுடன் பொங்கி பொங்கி வரும் நன்கு அறிந்த கேள்விகளுக்குப் பதில்கள் போலவே சில பேரின் பதிவுகள் வந்து விழுந்தது.

அப்படியாக அமைவதுதான் உண்மையான வலைச்சரமென்றும் கருதுகிறேன். நண்பர்களின் தளங்கலை முற்றிலுமாக தவிர்க்கவே நினைத்தேன் அப்படியும் ஒரு சிலரை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இதிலிருந்து ஒதுங்லாக இருந்தவர்கள் அனைவரது பதிவினையும் நான் வாசிக்கவில்லை என்று பொருள் கிடையாது, மாறாக அவர்கள் பரவலாக எல்லோராலும் இங்கு அறியப் பட்டவர்கள் என்பதாலே அவ்வாறு நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை இப்படி பயன் படுத்திக் கொண்டேன்.

அய்யய்யோ நான் எப்படி இந்த வாரத்தை கொடுக்கப் போகிறேன் என்று எப்பொழுதும் புலப்பியது போலவே புலம்பும் பொழுது சிலர் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டினார்கள், ஆனால், கடைசியில் என் "ஈகோ" அதனை விட நீளமாகி அவ்வாறு கொடுக்கப்பட்ட தொடுப்புகள் வாரமல் பார்த்துக் கொண்டது :). எனவே, அவர்களுக்கும் இத் தருணத்தில் ஒரு சிறப்பு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே வலைச்சர நிர்வாகிகளுக்கும் இங்கு வந்து கை நனைத்து விட்டுப் போன படிப்பாளிகளுக்கும் எனது நன்றியோ நன்றிகள்! நான் இப்ப பொயித்து வாரேன்...
மேலும் வாசிக்க...

Saturday, February 16, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V

ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும் உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார். 18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள்.

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.
மேலும் வாசிக்க...

Friday, February 15, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV

எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விளாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகத் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்குபச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும். பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.
மேலும் வாசிக்க...

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III

சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் களைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிர்க்கு நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுறித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

...எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள்
சிறுமிவரைந்த வீட்டில்...

என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதென்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.

...என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்?
ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்
ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை
செய்கிறோம்
எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால்
நிரப்புகிறோம்...

இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.
மேலும் வாசிக்க...

Wednesday, February 13, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II

தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்
கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.
மேலும் வாசிக்க...

Tuesday, February 12, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I

எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.




திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.




...பொட்டச்சியப் பெக்கப்போற

பொட்டக் கழுதக்கித்

தொணையெல்லாம் ஏதுக்குன்னு

வெசலூரு கெரகாட்டம்

போயிட்டாரு எம்புருஷன்...




என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.




மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு.




அங்கே ஆடுமாடுகளுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை இப்படியாக தொடங்கி நகர்த்தியிருப்பார் ... புல்வெளிகளில் மேயும் மாடுகள் விண் வெளியில் உலாவுதாக நினைக்கின்றன. ''ஏல...ஆத்துக்கு மேப் பக்கம் மாட்டை பத்திராதே, சுப்பையா தேவன் நேத்தே பொலம்பிட்டு இருந்தான் வயல்ல விழுந்துட்டுன்னு. பாத்துக்கோ. இல்லைனா அவன் எழவுல நிக்க முடியாது" என்று ஒரு பெரிசு காது கிழிய கத்தும்...




இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.




இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.




அதிலிருந்து ஒரு சிறு துளி ...நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான்... இப்படியாக தொடங்கி கபில முனியின் சூத்திரத்தை எப்படி நமது நட்சத்திர முனி அவருக்கு வேணுங்கிற மாதிரி புரிஞ்சிருக்கார்னு நம்ம பதிவர் பிட்டுப்பிட்டு வைச்சிருப்பார் அங்கே.




ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...




...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...




என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.
மேலும் வாசிக்க...

Monday, February 11, 2008

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.

இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த வலைச்சரங்கள் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்ப்பை கொஞ்சம் உங்க கைக்குள்ளயே வைச்சிக்கோங்க, இந்தப் பக்கம் வரவங்க இந்த ஒரு வாரத்திற்கு மட்டும்.

நான் எழுத ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமின்னு பார்த்தா, தட்டச்சும் பொழுது இப்ப வேகமாக தமிழில் தட்டச்ச முடிகிறது முன்பிருந்ததை விட. இரண்டாவது, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இந்த இடத்தில் இவங்க சொன்ன மாதிரியே எழுத்தில் எந்தவொரு பெரிய மாற்றமுமில்லை, அதே காய்ந்த விசயங்களை பற்றித்தான் பெரும்பாலும் என் பதிவுகள் அமைந்திருக்கிறது. மேலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்தை மறுப்பதற்கில்லை.

என்னோட ஆரம்பக் கால பதிவுகள் ரொம்பவே வேகமாக இருந்தது. அந்த நேரத்தில் இங்கும் நடந்த வலை அரசியல் எல்லாம் தெரியாமல் சமூக அவலங்களை முகமூடி அகற்றி காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட பதிவுகள் எல்லாம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே சென்று உறங்க ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் சீரங்கத்து எழுத்தாளர் வலை பதிவுகளைப் பற்றி வரையறுத்திருந்தது அதாவது "ஒரு பத்து நிமிட பாப்பிலாரிட்டிக்காகத்தான்" எழுதுகிறேன் என்று விளங்காமலேயே இங்கே பதிப்பித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது இப்படி இங்கு எழுதுவதற்கு (காசு வாங்காமல்) உளவியல் ரீதியான காரணமிருப்பதை.

அந்த நேரத்தில் ஊரில் பார்த்த காட்சிகளாக, படித்து விட்டு பொற்றோர்களையும், சமூகத்தையும் சுரண்டிச் சாப்பிடும் இளைஞர்களை பார்த்து உதவாக்கரை பட்டாதாரிகள்...! என்றழைத்து ஒரு பதிவும், பிரிதொரு சமயம் அவர்களே எப்படி பரிணமித்து பல்கிப் பெருகி மனித அட்டைகளாக சமூகத்தில் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஜீவராசிகள் மனதில் ஈவு இரக்கமற்ற நிலையில் நம்மூர் அனாதைக் குழந்தைகளை அலட்சியம் செய்து அவ் குழந்தைகளை புலம் பெயர வைக்கிறார்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும் அந்நாளைய பதிவுகள்.
பிறகு தமிழ்மணத்திலிருந்து திடீரென்று ஓர் அழைப்பு. அந்த வாரத்தில் நான் வழங்கிய சில பதிவுகள் எனக்கே பிடித்து விட்டதுதான். குழந்தைகளை எப்படி நமது தேவைக்காக நம்முடைய நிறைவேறா எண்ணங்களை அவர்களுனூடையே வைத்து திணித்து நம் அவர்களின் படைப்பாற்றலையும், வாழ்வையுமே பாலடிக்கிறோம் என்பதனை குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... என்ற பதிவிலும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் முதலில் எது நாகரீகமென்று கேட்டு விட்டு, பிறகு நட்சத்திர வாரத்தில் அதன் தாக்கம் எங்கே கொண்டு போய் விடுகிறது நம்மை என்பதனை எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை என்று சொல்லி முடித்திருப்பேன்.

மேலும் இயற்கை நேசி என்ற வலைத் தளத்தில் இயற்கை சார்ந்த விசயங்களை சொந்த அனுபவங்கொண்டு என்னோட (தெகா) வாசனையையும் அதில் குழைத்து பல பதிவுகள் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.

ஊருணியிலும் எனது சிந்தனைகளை வேற்றுக் கிரக வாசிகளும் படிக்க வேண்டும் (முடிந்தால் படிச்சிக்கட்டுங்கிற தைரியத்தோட:) என்ற நல்லெண்ணத்தில் வைத்திருக்கேன். தோண்டிப் பார்க்க நினைக்கிறவங்க தோண்டிப் பாருங்க, ஏதாவது கிடைக்கலாம்.


அப்படா, முடிந்தது சுய-புராணம். அடுத்த பதிவில் இருந்து எப்பலாம் அடுத்தவங்க பதிவு படிக்க நேர்ந்து, அப்படி படித்த பதிவுகளில் எது மனதில் தைத்துப் போனதோ அவர்களை மனதிலிருந்து எடுத்து வெளியே அறிமுகப் படுத்தி வைக்கிறேன். அது வரைக்கும் நிம்மதியா மூச்சு வாங்கிக்கோங்க, ஏன்னா, மூச்ச பிடிச்சி திரும்ப இழுத்துப் பிடிக்க வருவேன் அதான்.
மேலும் வாசிக்க...

ஏன் என்ற கேள்வி ??

சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் கவிதைகளும் என்று அவர் எடுத்துக்கொண்ட எல்லா தலைப்புகளுக்கும் அழகான சிற்றுரையும் அதன் பின்னே விமர்சனங்களும் என்று ஆடுமாடு மிக சிறப்பாக வலைச்சரம் தொடுத்தளித்தார் . அவரின் பதிவுகளைப்போலவே வலைச்சர வாரப்ப்திவுகளும் ஒரு இனிமையான வாசிப்பனுவம் தருவதாக அமைந்தது.. நல்ல நல்ல பதிவுகளின் அறிமுகங்களை எளிமையாக தொடுத்தளித்திருந்த ஆடுமாடுவிற்கு நன்றி.


-----------------------------------------------


தான் பார்க்கின்ற விசயங்களை அவற்றால் அவருக்குள் நேரும் மாற்றங்களை அவை தன்னை எப்படி பாதித்தது என்று கலப்பில்லாமல் தருகின்றேனென்று பதிவிடும் தெக்கிக்காட்டான் அவர்கள் இந்த வாரம் நமக்கு தன் விருப்பப்பதிவுகளை சரமாக தொடுக்க இருக்கிறார்.. ஏன் இப்படி என்று சரியாக தலைபிட்டிருக்கிறார் ஏன் என்ற கேள்விகேட்காமல் வாழ்க்கை இல்லை ...இவரின் பதிவில் வித்தியாச வித்தியாசமான விசயங்களைத் தொட்டு செல்கின்ற இடுகைகளைக்காணலாம் . தான் படித்த ஒரு செய்தியாகட்டும் சகப்பதிவர்களின் பதிவாகட்டும் இவர் தன் பாணியில் தன் கருத்தை விளக்கமாக பதிவாக இட்டிருக்கிறார்.. நிச்சயமாக இவர் ரசித்தப்பதிவுகளை விவரமான விமர்சனங்களோடு அளிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் வாசிக்க...

ஆதலால் நண்பர்களே...

ஆதலால் நண்பர்களே...

தமிழாசிரியராக வேண்டும் என்கிற கனவில் (ஒரு காலத்தில்) இருந்தவனை, வலைச்சரத்துக்கு ஆசிரியராக்கியிருக்கிறது இந்த ஆசிரியக் குழு. அவர்களுக்கு நன்றி. நிறைய எழுத நினைத்து, ஆழியூரானின்
கரகாட்டம்: வயசுப் போனால் பவுசு போச்சு
என்கிற மனதை தொடும் கட்டுரை உட்பட பல நல்ல கட்டுரைகளை மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்து வைத்தும், இன்னும் சில பதிவுகளை சுட்ட விடாமல் சுரண்டிப் போனது என் வியாபார நெருக்கடி. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ என்கிற கேள்வி எப்போதும் போலவே இப்போதும் மனதுள்.

நொடிப்பொழுதும் எழுத்தும் வாசிப்புமாக இருந்த என் இயல்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக ஓய்ந்து போயிருந்தது. பெரிதாக காரணம் எதுவுமில்லை. எரிச்சல்தான். வலைப்பதிவுகள் அந்த ஓய்வுக்கு ஓய்வளித்து, அதிகமாக படிக்க வைத்திருக்கிறது.

வலைப்பதிவை தொடங்கிய தருணங்களில் தத்தக்கா பித்தகாவென தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு, பல தகவல்களை தந்த துளசி டீச்சர், வெயிலான் , நண்பர் பைத்தியக்காரன் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

அனைவருக்கும் நன்றி. அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க...

Sunday, February 10, 2008

சிறுகதைகள்

நிற்கும் இடத்தில், நடைபயணத்தில், பஸ் ஸ்டாண்டில், தம்மடிக்கும் இடத்திலென எங்கும் கிடைக்கிறது ஏதாவதொரு கதைக்கான விஷயம். அதை கதையாக்கும் கலை கைவந்தால் போதும். ஒரு காட்சி ஏற்படுத்தி விடமுடியாத தாக்கத்தை, நல்ல சிறுகதை தந்துவிட முடியும். சொல்லப்படுகின்ற விஷயத்தை பொறுத்தது அது.

'ஒரு நல்ல கதை வாசகனிடம் சலனத்தை ஏற்படுத்த வேண்டும்' என்பார்கள். அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மூலமாக, எழுதப்படுபவர்கள் அறியப்படும் நிலை வந்தால் அதுதான் சிறந்ததாகக் கொள்ளப்படும்.

வலைப்பதிவில் அதிகமாக கதைகளை வாசிக்கவில்லையென்றாலும் வாசித்த சில கதைகளை சொல்லிவிடுகிறேன். மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை விட, அந்த மரணம் மற்றவர்களுக்கு தந்து போகிற அதிர்ச்சிகள் அபாயகரமானவை. மகனின் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் பைத்தியமான அம்மாக்களின் நிஜ கதைகளை இங்கே பார்க்க நேரிடுகிறது.

அப்படி மரணம் ஏற்படுத்திய நினைவின் அசைவுகளை சொல்கிறது அருட்பெருங்கோவின் இந்தக் கதை .

தமிழ்மகனின் இந்த கதை அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தை பேசுகிறது. இவரின் மொழி நடையும் விவரிக்கின்ற காட்சிகளும் நமக்குள் அதிர்வை ஏற்படுத்திவிட்டு போகின்றன.

சுந்தரின் பூனைகள் பற்றி ஓர் ஆய்வு என்கிற கதை பன்முக வாசிப்பு தன்மையை கொடுக்கிறது.

லக்ஷ்மியின் இந்தக் கதை பெண்களின் பிரச்னையை பேசுகிறது. ஓடிப்போன ஒரு பெண்ணின் தங்கை, கணவ்னிடம் எதிர்கொள்ளும் பிரச்னையை சொல்லும் இந்தக் கதை, இன்னும் விரிவாக்கப் பட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
மேலும் வாசிக்க...

Saturday, February 9, 2008

குபுக் குபுக் பதிவுகள்

பணம் என்கிற விஷயம் ஆட்டிப்படைத்த பிறகு பொருளீட்டுவதற்கான காரணிகளைத் தேடி போய்விட்டது வாழ்க்கை. இந்த டென்ஷன் உலகில் சிரிப்பு என்பது, சேனல்களில் காண்பிக்கப்படும் காமெடிக்குள் அடங்கிவிட்டது. இதனால்தான் பார்த்த காமெடியையே தினமும் பார்த்தாலும் அலுப்புத்தட்டாமல் இருக்கிறது.
அந்த வகையில் வலைப்பதிவில் காமெடியும் நக்கலும் பஞ்சமில்லாமல் பரவிகிடக்கிறது. கடினமான வார்த்தைகளைக் கொண்டு எழுதப்படுகிற கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுபவனின் இறுக்கமான மன உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. அப்படியான சூழலில் காமெடியை கையாளுவதும் எழுதுவதும் தனி கலைதான்.

டுபுக்குவின் பதிவில் கிடைக்கும் அனைத்துப் பதிவும் விழுந்து சிரிக்கவும், சிரித்து ரசிக்கவும் முற்படுகின்றன. நடந்த சம்பவங்களை கொஞ்சம் அதீத கற்பனை கொண்டு எழுதினாலும், அதில் யதார்த்தம் மீறாமல் அவரால் செய்யப்படுகின்ற கட்டுரைகள், அவரது நகைச்சுவை உணர்வை காட்டுகின்றன. உதாரணத்துக்கு இது.

அபி அப்பாவின் காமெடிக்குள் விழுந்து விழுந்து சிரித்த பதிவு இது. அவரின் சிதம்பரத்துக்குப் போன அப்பா(டா) சாமி காமெடிக்கு நூறு சதவிகித கியாரண்டி.

எந்த ஒரு விஷயத்தையும் கலாய்க்கவும் நக்கலடிக்கவும் தெரிந்த குசும்பன் பாராட்டுக்குரியவர். அவரது இந்த கலை எனக்கிருந்தால் நான் என்ன எழுதுவேன் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இவரது இந்த கார்ட்டூன் குசும்பு , வலைப்பதிவின் சுவாரஸ்யம். இதே போல இலவச கொத்தனாரின் இந்தப் பதிவும்.

லக்கி லுக்கின் இந்த பதிவு நக்கலோ நக்கல்.
மேலும் வாசிக்க...

Thursday, February 7, 2008

பெண்- சில புரிதல்கள்

மனித உடம்பின் உறுப்புகளின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டிருக்கிற அடையாளங்களின்
காரணமாகவே பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். ஆண் என்பவன் தன்னிடமுள்ள ஆண் அடையாளம் பெண்ணிடம் இல்லை என்பதாலேயே அவளை முழுமையடைய வேண்டியவள் என்கிற ஆதிக்கக் கருத்துக்களைப் படைக்கிறான்.

உடல் உறுப்புகளை வைத்து கட்டப்பட்டிருக்கும் பால் வேறுபாடுகளை உடைக்கும் போது, அல்லது அது பற்றிய புரிதல் வரும்போது, ஒரு அடிப்படை தர்க்கமே உடைபடும் என நினைக்கிறேன். அதாவது ஆண்களை வானமாகவும் பெண்களை பூமியாகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்து மதக் கோட்பாடுகளை உடைத்தெறிவதற்கான வழியாகக்கூட கொள்ளலாம்.

இந்தியாவின் சக்தியாக விளங்குகின்ற சாதி அமைப்பும் இந்து மதச் சிந்தனையும் மேல்நாட்டு பெண்ணியவாதிகளால் அறிய முடியாததாக இருக்கிறது. ஐரோப்பிய பெண்ணிய சிந்தனைக்கும் இந்திய பெண்ணிய சிந்தனைக்கும் எட்டமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த புரிதல் இன்றி , அங்கிருந்து இறக்குமதியாகின்ற பெண்ணிய சிந்தனைகள் இங்கே பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

''பெண்ணியம் மேற்கத்திய சிந்தனைதான்; இதை ஆண் பெண் உடல்சார்ந்த பிரச்னையாக நான் பார்க்கவில்லை. அது கருத்தியல் சார்ந்த பிரச்னை. பெண் இல்லாமல் அலலது பெண்ணுடன் வித்தியாசப்படாமல் ஆணை எப்படி வரையறுப்பீர்கள்?" என்று கேள்வி கேட்கிற ஜமாலனின் இந்தக் கட்டுரை முக்கியமானப் பதிவு

பெண்களுக்கான அடக்குமுறையை, குடும்பம் சார்ந்திருக்கிற நமது சமூக அமைப்பு எவ்வாறு செய்கிறது என்கிற ஆதவன் தீட்சண்யாவின் கருத்தை பதிவிட்டிருக்கும் செல்வநாயகியின் இந்தக் கட்டுரை , பெண்களுக்கு, சாதி கட்டிப்போட்டிருக்கிற பெரும் சங்கிலி பற்றி பேசுகிறது.

பெண் என்பவள் யார் என்று கேட்கும் கிருத்திகா, இந்த கேள்விவிக்கு ஆணை அளவு கோலாக வைக்க முடியுமா? என்று கேட்கிறார் இந்தப் பதிவில் .

லஷ்மியின் மலர்வனத்தில் இடப்பட்டிருக்கும் கனிமொழியின் இந்தக் கட்டுரை பெண் உரிமை என்பது என்ன என்பததை விரிவாகப் பேசுகிறது.
மேலும் வாசிக்க...

கவிதை 2

கவிதைகளை அந்தரக்க கவிதை, சமூகக்கவிதை என்று பார்க்கிற தன்மை இங்கே இருக்கிறது.
பொதுவாக எல்லோருடனும் பகிர்வதற்கு கூச்சப்படும் கவிதைகள் அந்தரங்க கவிதைகளாகக் கொள்ளப்படுகின்றன. தனிமனிதனின் சொந்த ஆசாபாசங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் சமூக கவிதைகளைவிட அதிக அரவணைப்பை பெறுவதாகவே நினைக்கிறேன்.

மரணம் என்கிற உயிர்கொல்லி எல்லோருக்கும் பயத்தை தருவதாகவே இருக்கிறது. மரணத்துக்குப் பின் ஆன வாழ்க்கை இன்னும் புதிர்தான். 'மரணத்தின் அழைப்பைக் கேட்டவர்களுக்குத் தெரியும் வாழ்வின் வசீகரங்கள்' என்கிற இளையபாரதியின் கவிதை ஞாபகத்துக்கு வந்துபோகிறது. ஆனால் மணிகண்டனின் மரணம் பேசும் இந்தக் கவிதையும் அப்படியானவைதான். மரணத்தை எதிர்கொள்ள துணிகிறவனின் மனம் நம்மை அழைப்பது உயிர் பிரியும் ஓசையை ரசிக்க.

துப்பாக்கிகளும் போர்விமானங்களும் ஈழத்து மண்ணை ரத்தமாக்கிய பிறகு அந்நாட்டு கவிதைகள் அலங்காராங்களை அப்படியே போட்டுவிட்டு திட்டவட்டமான மொழியை கையாளத் தொடங்கிவிட்டன. வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து அகதி என்கிற சொல்லை தாங்கும் போது ஏற்படுகின்ற வலி கொடூரமானது. அந்த வலியை, அனுபவிப்பவரால் மட்டுமே உணரமுடியும். ஆனால் மிதக்கும் வெளியில் சுகுணா , 'உன் வலியை என்னால் உணரமுடிகிறது' என்கிறார். அப்படி உணர்பவரால்தான் இப்படியும் சொல்லமுடியும்: 'உனது எதிர்பார்ப்பு உன் தேசத்திற்கான விடுதலை. எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை" .அந்தக் கவிதை இங்கே.

ஆற்றுமணலை சோறாகவும் சோற்றை ஆற்றுமணலாகவும் ஆக்கும் சக்தி காதலுக்கு உண்டு. அது ஆழ்மனதை கிள்ளியெடுக்கும் நுண்ணுயிரி. காதலித்து பின்னர் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் துவங்குகின்றவர்களின் எண்ணங்கள் தமிழ்நதியின் கூட வராதவன் போலத்தான். இப்படியானதொரு கவிதையை எழுதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் அவரவர்களுக்கான நிகழ்வுகளும் அனுபவமும் வெவ்வேறானவை. அதனால்தான் அம்மாதிரியான கவிதைகள் இன்னும் அழுத்தமாய் மனதில் நிற்கின்றன.

நிவேதாவின் கவிதைகளில் வலி நிறைந்த வாழ்க்கையின் அனுபவங்கள் விரவி கிடக்கின்றன. அவரது காத்திருக்காத தேவதைகள் நினைவுகளைக் கனக்கச் செய்கிறார்கள்.
மேலும் வாசிக்க...

Tuesday, February 5, 2008

கவிதை - 1

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மாயவித்தைதான் கவிதை. நேரிடையாக ஒன்றையும், அதுகாட்டும் குறியீடு, படிமங்களின் வாயிலாக இன்னொன்றையும் வெளியிடுகிற சாத்தியம் கவிதைக்கு மாத்திரமே சாத்தியம். இது மொழியின் பலவீனமும் கூட. மொழியின் மூக்கணாங்கயிறை சுண்ட இழுத்து, சொற்களை பலவீனமாக்கியோ இல்லை பலமாக்கியோ புனையப்படும் எழுத்துக்கு கவர்ச்சியும் வெறுப்பும் அதிகம். அந்த வெற்றுப்பையும் கவர்ச்சியையும் கவிதை என்றும் சொல்லலாம்.

வாழ்வின் குத்தாட்ட குஸ்திகளில், சந்திக்க நேர்கிற அனுபவங்களை, அந்த நொடி ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் உணர்வையும் வார்த்தைக்குள், சிந்தனா பூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் அடக்க முடிந்தால் அந்தக் கவிதைக்கு ஆயுள் ஜாஸ்தி.

இன்றைக்கு புதிதாக கவிதை எழுதிவருபவர்கள், அதன் வரலாறை, முன்னோடிகளை அறிந்துகொள்வது அவசியம். புதுகவிதையின் வரலாறை, ஏற்கனவே கவிஞர் பாலா, வல்லிக்கண்ணன், ராஜமார்த்தாண்டன் ஆகி்யோர் எழுதியிருந்தாலும், நடைவழிக் குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அறியவேண்டியது.

சுந்தரின் மொழிவிளையாட்டில் காய்த்து தொங்குகிறது கவிதைகள். அவரது கவிதைகள் நகரம் சார்ந்தவை. நகரத்தின் சந்துபொந்துகள் பிதுக்கிப் போடும் வேதனைகளில்/சுகங்களில் அவர் வாழ்வி்ன் இயக்கம் துடிதுடிக்கிறது. அவ்வாறு துடிக்கின்ற ஒரு மெல்லிய உணர்வின் கனத்த காயத்தை தந்து போகிறார்கள் அவரி்ன்அக்காவும் நானும் . இவர் ஆரம்பித்திருக்கிற அ கவிதைகள் சுகமான மொழி விளையாட்டு.

எதையாவது வெளிப்படுத்தவே விரும்புகிறது எல்லா கவிதைகளும். அந்த வெளிப்படுத்தலுக்கு கவனிப்புகள் முக்கியம். எங்கோ ஒரு புள்ளியை பார்த்தால், அதை கோடாக்கலாம். கோலமாக்கலாம். ஆனால் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் தனித்து இயங்கும் அல்லது தப்பி நிற்கும் புள்ளிகள் நம்மை ஏளனமாகப் பார்க்கின்றன. எதற்காகவோ சிரிக்கின்றன. பரபரத்து திரியும் வாழ்க்கையில் மனதுக்குள் முரண்டுபட்டு நிற்கும் அந்த புள்ளிகளின் எண்ணிக்கை ஏராளம். புள்ளி என்பது ஒரு நேர்க்கோட்டின் துண்டு. அதை நெற்றியில் வைத்தால் பொட்டு. வானில் வைத்தால் சூரியன். காயத்ரியின் பாலைத்திணைக்காட்டும் புள்ளியில், உறுத்திக்கொண்டிருக்கும் புள்ளியின் வீச்சில் நான் இதைத்தான் பார்க்கிறேன்.

கவிதை இதைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை கடந்தது. அது ஐந்து சொற்களில் அண்டத்தை அடைகாத்துவிடும் சகதி பெற்றது. அய்யனாரின் தனிமையின் இசையில், நிராகரிப்பின் வலிகள் நிறைந்த கவிதைகள் அதிகம். அவரது வார்த்தைகள் கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கின்ற வாசகத் தோழமை கொண்டவை. வார்த்தையாகக் கட்டப்பட்டிருக்கிற இவரது எழுத்தின் மேல் வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த நுட்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.
பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்
என்கிற கவிதையில் வருகிற கருப்பு தேசத்து குழந்தை, அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானத்தை நினைவுபடுத்தி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் யுத்தம்தான். பஸ் பயணத்தில், அலுவலக அரசியலில், ரேஷன் கடை கியூவில்... இன்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு துடிப்பிலும் சந்திக்கின்ற யுத்தங்கள், சங்ககால போருக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. முபாரக் எழுதியிருக்கும் இன்றிரவின் யுத்தம் பிழைப்புக்காக நகரம் சார்ந்து, அதன் கொடும் கரங்களில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்குமான யுத்தமாகிறது. மிகுந்த சொற்சிக்கனத்தோடும் செறிவோடும் எழுதப்பட்டிருக்கிற கவிதை இது.

'மொழிபெயர்க்க முடியாதது எதுவோ கவிதை' என்கிற மேற்கோளை எங்கோ படித்திருக்கிறேன். இப்படியான கவிதையை, மண் சார்ந்து அந்த மண்ணின் மொழியிலேயே எழுதினால் மட்டுமே சாத்தியம். 'ஏலே...' என்கிற பதம் இன்னொரு மொழியில் எப்படி மொழிபெயர்க்கப்படும் என்று தெரியவில்லை. இதே போன்ற மண்ணின் மொழி ஏராளமாக இருக்கிறது. அந்த வட்டார வழக்கு நடைகளுக்கு, வலைப்பதிவில் பஞ்சம் இருப்பதாகவே நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

சினிமா

பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் வளர்ந்த, பழங்கலைகள் மீது சினிமா என்கிற அந்நிய தொழில்நுட்பம் கை வைத்து, இன்று பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. சினிமா என்கிற பேக்டரியிலிருந்துதான் நம் அரசியல் தலைவர்கள் வர வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது என்பதே அதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள உதவும். எல்லா மக்களின் கனவுகளோடு உறவாடி சக்தி மிக்க கலையாகியிருக்கிறது சினிமா.

1913ம் ஆண்டு 'ராஜா அரிச்சந்திரா' என்கிற முதல் இந்திய சினிமாவைத் தயாரித்த தாதா சாகேப் பால்கே, '57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி...ஒரு திரைப்படத்தின் நீளம், 2000 மைல்கள்...எல்லாம் 3 அணாவுக்கு' என்று விளம்பரப்படுத்தினார்.

இன்று?

''இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, மக்களை கவரும் கருவிகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த கருவி சினிமாதான்" என்ற நிலையில் அது தன் வேரை விரித்திருக்கிறது.

வலைப்பதிவை தொடங்கி சில வாரங்கள் ஆன பிறகுதான், தமிழ்மணம் என்ற ஒன்று இருப்பது தெரிய வந்தது. புதிதாக ஒன்றை அறியும்போது/தெரியும் போது வருகின்ற ஆச்சர்யங்களும் மகிழ்ச்சியும் அதிகாலை அருந்தும் இளநீர் போல இனிமையானது. இதில் வரும் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இணைப்பது என்பதில் குழம்பிய நேரத்தில்தான், மதி கந்தசாமி தனது பதிவில் கிராமம் பற்றி சிலாகித்து எனது கட்டுரையை இட்டிருந்தார். இதை நண்பர் வெயிலான் மூலமாக தாமதமாக அறிந்து படித்தபோது உச்சிக்குள் வேர்த்திருந்தது.

யாராலும் அறியப்படாத ஒரு பதிவை ஒரு வலைப்பதிவில் பார்க்கும் சந்தர்ப்பம் கிளர்ச்சியை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன். இவரின் பதிவை, தொடர்ந்து வாசித்ததில் சினிமா பற்றிய இவரது விமர்சனங்கள்/விளக்கங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. கடமைபட்ட ஒருவனின் மனநிலையில் இவர் எழுதிவரும் விமர்சனங்களை வாசிக்க, கடமை பட்டதாகவே இருக்கிறது மனசு. இந்த ஒரு விமர்சனம் உங்களுக்கு சாம்பிள்.

சினிமா என்கிற காட்சி ஊடகத்தை அதன் மொழியிலேயே எடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமா பகீரதப் பிரயத்தனங்கள் செய்துவருகின்றன. அவ்வாறு எடுக்கப்படாவிட்டாலும், சினிமா படங்களை அதன் கண்ணோட்டத்தில், செவ்வகத் திரையில் வைக்கப்படும் அந்த படத்தின் நீள அகலங்களை விலாவாரியாக பார்க்கின்ற ஆய்வுகள் முக்கியமானவை. படம் பேசும் அரசியலும், சொல்லப்படுகின்ற விஷயமும் காட்சி ஊடகத்தின் மூலமாக வெளிப்படும் போது, அது பரவலான ஆக்கிரமிப்பை பெறுகின்றன. அவ்வாறு பெறப்படும் படங்கள், மேலோட்டமாக பேசும் விஷயங்களை மட்டும்தான் சாதரண பார்வையாளனால் உணரப்படுகிறது. அதற்கு அவனது ரசனையும் தளமும்தான் காரணம். இப்படி அறியப்படாத பல விஷயங்களைப் பேசுகிறது ஜமாலனின் அந்நியன்.அவரது
கல்லூரி்யும் அப்படித்தான்.


வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட அல்லது படம் சொல்கின்ற பொருளின் பின்னணிகளை அறிந்துகொண்டால் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளின் சினிமாக்கள் புரியவரும். ஏனென்றால் அந்த சினிமாக்களின் முன்னால் வரலாற்றுக் கடமை இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டு ஆட்சியின் ஆதிக்கத்தால் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டை இழந்து நிற்கிற அந்த நாடுகளின் சினிமாக்கள், தங்கள் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இப்படியான படங்களின் விமர்சனங்களை நீர் தேடும் வேர் போல வலைப்பதிவில் தேடிக் கொண்டிருக்கிறேன். பார்த்தவர்கள், எழுதியவர்கள் தெரியப்படுத்தலாம்.

சமீபத்தில் வலைச்சரத்துக்காக சினிமா விமர்சங்களைத் தேடிய போது, டிஜே தமிழன் எழுதியிருக்கும் மைக் நெவல்லின் லவ் இன் தி டைம் ஆப் காலரா கண்ணின் பட்டது. நல்ல விமர்சனம். இந்தக் கதைதான் தமிழில் சமீபத்தில் வந்த, ஆக்ரா படத்தின் கதை. அழகாகத் திருடியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், ஆக்ராவில் காயப்படுத்தப்பட்டிருந்தது.

அய்யனாரின் மொழி நடையில் வோல்வர் படமும் தாரே ஜமின் பர் , தருமியின் இந்த விமர்சனமும் சன்னாசியின் டாக் டே ஆஃப்டர்னூன்' விமர்சனமும் அழகாக விமர்சிக்கப் பட்டிருப்பதாகக் கருதுகிறேன். தெகாவின் ஒன்பது ரூபாய் நோட்டு வேறொரு பார்வையை காட்டுகிறது.

உருப்படாததுவின் உருப்படியான பல பதிவுகளில் ஜாலியாகச் சொல்லிவிட்டுப் போகும் இந்தப் பதிவு சுவாரஸ்யமானது.


இன்னும் வாசிப்புகளும், அறியப்படாத வலைப்பதிவுகளும் இருக்கிறது.
மேலும் வாசிக்க...

Monday, February 4, 2008

பின் நவீனத்துவமும் சில கட்டுரைகளும்

பின் நவீனத்துவம் என்கிற பிரம்மாண்டம் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு கொடூரனைப் போல என்னை விரட்டி விரட்டி அடித்திருக்கிறது. 96ம் ஆண்டு வாக்கில் சில இலக்கிய கூட்டங்களில் எஸ். ராமகிருஷ்ணன், இது குறித்த பேச்சை ஆரம்பிக்க போதெல்லாம் ஒரு பூனை குட்டியாக நடுங்கியிருக்கிறேன். அந்த நடுக்கம்தான் தொடர்ந்து அது பற்றிய பயத்தைப் போக்கியது.

'உண்மையில் 'பின்நவீனத்துவம்' என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின் நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்' என்கிறது நடை வழிக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ள பின்நவீனத்துவம் ஓர் அறிமுகம் என்கிற கட்டுரை.

பின் நவீனத்துவ நாவல் என்பது என்ன? நாவல் கொண்டிருக்கும் வடிவ அமைப்பை பின்நவீனத்துவம் எப்படி எதிர்கொள்கிறது. அல்லது பின்நவீனத்துவ நாவல் என்பது எது என்கிற கேள்விக்குவளர்மதியின் இந்தக் கட்டுரை பதிலாக இருக்கிறது.

பின் நவீனத்துவ வாசிப்பு என்பது என்ன? அதன் கதையாடல் எப்படியிருக்கும் என்பதை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளங்க வைக்கிறது பைத்தியக்காரனின் இந்த கொத்துப்புரோட்டா.

பின் நவீனத்துவ சினிமா எப்படி இருக்கும்? கமலஹாசனின், 'ஹே ராம்' பற்றி புரியவில்லை/குப்பை என்ற விமர்சனங்கள் ஓங்கி எழுந்தன. கோட்சேவின் தம்பி கூட இந்தப் படத்தின் சில விஷயயங்களில் ஒத்தும் சிலவற்றில் மாற்றுக்கருத்தும் கூறியிருந்தார். இதுதொடர்பாக படம் வெளியான காலத்தில் பெரும் சர்ச்சை கிளம்பி அடங்கியது. ஆனால், பின் நவீனத்துவ கதை கூறல் முறைகளில் ஒன்றான, வரலாற்றை அழித்தெழுதுதல் (palimpsest) என்கிற பிரதியாக்க யுத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது என்கிறார் நண்பர் ஜமாலன். அதாவது இதை பின்நவீனத்துவப் படம் என்கிறார் அவர். அவரின் விரிவான விளக்கமும் வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கும் பாங்கும் அருமையாக இருக்கிறது. அந்த கட்டுரை இங்கே

பின் நவீனத்துவம் விடுத்து ஏகப்பட்ட நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் கட்டுரைகள் பல பதிவுகளில் காணக் கிடைக்கிறது.

பாரதி பற்றிய மேன்மைதாங்கிய கருத்துருவாக்கங்கள் ஒரு புறமிருந்தாலும் அவரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் மதிமாறன், ஏற்கனவே பாரதீய ஜனதா பார்ட்டியை எழுதியவர். பாரதி பற்றி தொடர்ந்து அவர் எழுதும் ஆய்வுகள் இன்னொரு கருத்துத் தளத்தைக் கொடுக்கிறது. பாரதியின்
நாலு வர்ண தேச பக்தியை பேசுகிறது இந்தக் கட்டுரை.

முரண்வெளி யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறலா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தலும் தளவாயின் நகுலன் பற்றிய கட்டுரையும் அவர்களுக்கான அஞ்சலியைத் தாண்டியும் நிற்கிறது.
மேலும் வாசிக்க...

ஆடுமாடாகிய நான்...

மொழிக்குள் விழுந்து, மொழிக்குள் புதைந்து, மொழிக்குள் தொலைந்து போவது பிடித்துப்போனதிலிருந்து எழுதுவது சுகமாகிப்போனது. மாடு மேய்க்கிற பள்ளி விடுமுறை நாட்களில், கம்யூனிச புத்தகங்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா என் தோழர். அவரின் தேடலில் என்னையும் இழுத்து, புத்தகங்களுக்குள் விழ வைக்க, அவர் பட்ட சிரமமும், இருக்கிற காசுக்கு புத்தகங்கள் வாங்கிவிட்டு திருநெல்வேலியிலிருந்து திருட்டுத்தனமாக, ரயிலில் ஊருக்கு வந்த காலங்கள் மறைந்து போகாமல் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

அவரது தோழமையிலேயே சில எழுத்தாளர்களின் சந்திப்பும் அறிமுகமும் கிடைத்தது. அவர்களுக்காக வாங்கப்படுகிற சாராயத்திலும், விருந்தினர்களுக்காக உயிர்விடத் தயாராக இருக்கிற, வீட்டுக் கோழிகளின் பிரியாணியிலும் வளர்ந்தது என் வாசிப்பு ஆர்வமும் எழுத்தார்வமும்.
பதினாறு வயதில் திக்கி திக்கி தொடங்கிய எழுத்து இன்னும் போதை மாறாமல் இருக்கிறது. வாசிக்க கிடைக்கிற ஏதாவது ஒன்றைப் பொருத்து போதை மாறுகிறது அல்லது ஏறுகிறது.

தினமும் ஒரு ரகசியத்தைச் சொல்லிப்போகும் மொழியின் கைகளில் நான் ஒரு குழந்தை. அதன் விளையாட்டில் பயணிக்கும் இந்த வழித்தடத்தில், அறிந்தும் அறியாமலும் இருக்கிற கணினியின் நட்பு கிடைத்த பின், எழுத்துக்கு அடிமையாகிப் போன அவஸ்தை, உங்களைப் போலவே எனக்கும் ரசனையாகவே இருக்கிறது.

வலைப்பதிவு பற்றி பேசுகின்ற/ எழுதுகின்ற நண்பர்களின் அறிமுகத்துக்குப் பிறகு எனக்குள்ளும் விதையொன்று விழுந்து ஆக்கிரமிக்க, ஆரம்பமானது
ஆடுமாடும் கடனாநதியும்.

பிரியமான புத்தகத்தின் சில குறைகளை எழுதியதற்காகவே எனது புத்தகத்தை பிரித்து மேய்ந்த நண்பர்களிடம் கற்ற இலக்கிய அரசியலுக்குப் பிறகு, ஆடுமாடுக்குள் அடங்கிக்கொண்டு கிராமத்தையும் ஆடுமாடுகளைப் பற்றியும் அது தொடர்பானதையும்தான் எழுத வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. என் ஆரம்ப பதிவில் இதை கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது மனமும் எழுத்தும் அதை மாற்றிப்போட்டிருக்கிறது.

அரைமணி நேரமோ/ஒரு மணிநேரமோ ஓசியில் கிடைக்கின்ற இணையத்துக்குள் என்னால் முடிந்தளவுக்கு வாசித்திருக்கிறேன். சில சுவாரஸ்யங்களையும் சுகங்களையும் தந்த அந்த பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கர்வமும் இருக்கிறது.

வணக்கத்துடன் ஆடுமாடு.
மேலும் வாசிக்க...

மண்வாசனை சரம்

வலைச்சரம் சீனா சாரின் அனுபவத்தில் மிளிர்ந்தது . வாரம் முழுதும் கடவுள் வாழ்த்து என்று ஆரம்பித்து படித்தது பின்னூட்டமிட்டது , என்று வரிசைப்படுத்தி பதிவுகளை அள்ளித்தந்தார். ஆன்மீகச்சரம் தான் தன் வயதொத்தும்.. கும்மிப்பதிவர்களைக் காணலை என்று நானும் இளையவனே என்றும்..கவிதைகளும் என்று அவர் தொடுத்த ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. அனுராதாவின் வலைப்பூ என்றும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள் என்றும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவுகளையும் குறிப்பிட்டார்.
இன்னும் கூட தொடுக்க ஆசையாக இருக்கிறார்.. மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கவேண்டும் போல அவருக்கு.. :) நன்றி திரு சீனா..
-----------------------------------------------------------------------------------------
தன் பெயரே வித்தியாசமாக வைத்திருக்கும் ஆடுமாடு தான் இந்த வார வலைச்சரம் தொடுக்க இருக்கிறார். இது கிராமத்து சகதி என்கிறார் அவருடைய பதிவினை, மண்வாசனையோடான பதிவுகள் மிக சுவாரஸ்யமானவை.அவருடைய ரசனைக்குகந்த வலைப்பதிவுகள் எவை எவை என்பதை நம்முடன் பகிரவருகிறார்
மேலும் வாசிக்க...

வருகிறேன் -- !! ( மீண்டும்) - நான் ..... !

அன்பு நட்புவட்டங்களே!

ஒரு வார காலம் வலை வீசி, மீன் பிடித்து, கருத்துகளை கையிலெடுத்தேன். அவை என்னிடம் கண்சிமிட்டிப் பார்த்தன. கும்மி அடித்த சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எழுத நினைத்து, ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக விட்டுப்போனவை ஒரு சில. அவைகளில் முதன்மையானது சகோதரி துளசியின் துளசி தளம் பற்றி விரிவாக எழுத நினைத்தது. பல கருத்துகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அவை என் பதிவில் எட்டிப் பார்க்கும்.

மற்றொன்று - லிவிங்ஸ்மைல் வித்யா பற்றியது. அவரது பதிவுகளிலும் பல செய்திகள் உள்ளன. படித்து, மறு மொழிகள் பல இட்டிருக்கிறேன். ஒரு விரிவான பதிவு சீக்கிரமே என் சொந்த வலைப்பூவில் எழுத ஆசை. பார்க்கலாம்.

வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு நன்றி.

வந்து சென்ற நட்பிற்கு நன்றி.

மறுமொழியிட்ட உள்ளங்களுக்கு நன்றி.

அடுத்து வரும் ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்.

மேலும் வாசிக்க...

Sunday, February 3, 2008

மறு மொழி இடப்பட்ட பதிவுகள் - பதிவர்கள் - 2

அன்பின் பதிவர்களே

சென்ற பதிவினில் சில தட்டச்சுப் பிழைகள் இருந்தன. சரி பார்க்க நேரம் இல்லை. 10 மணித்துளிகளில், தட்டச்சு செய்யப்பட்டு, பதிவிடப்பட்ட பதிவு அது. பதிவிட்ட வுடன் கோவை கிளம்பி விட்டேன். 24 மணி நேரம் கழித்து இப்போது தான் வருகிறேன். சிறு தட்டச்சுப் பிழைகளை சரி செய்து விட்டேன். பொதுவாக என்னுடைய பதிவுகள் சிந்தித்து, தட்டச்சு செய்யப்பட்டு, சரி பார்க்கப் பட்டு, சரி செய்யப் பட்டு, துணைவியிடம் காண்பிக்கப்பட்டு, அவர் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் பொறுமையாகக் கேட்டு ( மாற்றங்கள் ஏற்கப்பட்டனவா - பரம ரகசியம் - கூறுவதோடு அவர்கள் கடமை முடிந்தது) பின்னர் தான் பதியப்படும். இப்பதிவு ஒன்று தான் மேலே கூறிய எதுவுமே செய்யாமல் ( சிந்திக்காமல் கூட) பதிவிடப் பட்டது.

086க்க்குப் பிறகு 097 - இது தட்டச்சுப் பிழைதான். இப்போதுதான் பார்த்தேன். சரி செய்ய வில்லை. இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன்.

சேதுக்கரசியின் பெயர் அடிக்கடி படிப்பதாலும், பார்ப்பதாலும், அவரது பெயர் இங்கு சேர்க்கப்பட்டு விட்டது. அவர் ஒரு வலைப்பூ வைத்திருந்தாலும், அங்கு பதிவுகள் எதுவும் போடப்பட வில்லை என நினைக்கிறேன். ஆனால் பல பதிவுகளிலே, அவருடைய மறு மொழி ஒரு ஐம்பதாவது படித்திருப்பேன். அவற்றிற்கு மறு மறு மொழி இட்டிருப்பேன். ஆகவே அவரது பெயர் இங்கே சேர்த்திருப்பது பொருத்தமே.

123 அபி பாப்பா - அடிக்கடி பதிவுகளிலே படிக்கும் பெயர் இது . அவசரத்தில் குட்டீஸ் கார்னரில் இருக்கும் என நினைத்துப் போடப்பட்டது. அவ்வளவு தான்.

097 சாம் தாத்தா - இது சாம் ஜார்ஜ் என்ற தருமி இல்லை. அவரது போலியும் இல்லல. அவரின் வயதை ஒத்த சாம். தாத்தா சாம்சன் என்பவரின் வலைப்பூ இது. இவர் சென்னையிலே வசிக்கிறார். ஓய்வு பெற்றவர். கட்டைப் பிரமச்சாரி.

இளா மற்றும் விவசாயி என இரு முறை வந்துள்ளது. இருவரும் ஒருவரே.


சரி சரி -ம் சும்மா பில்டப்பு எல்லாம் வேண்டாம் - தொடருங்க அடுத்த லிஸ்டே ன்னு ரசிகன், குசும்பன், அபி அப்பா எல்லாம் சத்தம் போடுறாங்க. அதனாலே அடுத்த லிஸ்ட் இதொ:


126 மதுமிதா

127 முதுவை ஹிதாயத்
128 புலம்பல்கள்
129 குப்பைஉலகம்
130 ரவிசங்கர்
131 தேசிகன்
132 கோபி
133 பினாத்தல் சுரேஷ்
134 முத்து தமிழினி
135 வற்றாயிருப்பு சுந்தர்
136 நாமக்கல் சிபி
137 இட்லி வடை
138 மோகன்தாஸ்
139 பொன்ஸ்
140 பொட் டீ கடை
141 ராமச்சந்திரன் உஷா
142 A & N My lens
143 நல்லடியார்
144 இம்சை அரசி
145 நண்பன்
146 இரண்டாம் சாணக்கியன்.
147 சந்தோஷ்
148 ஐகாரஸ் பிரகாஷ்
149 செந்தழல் ரவி
150 தெகா
151 பொடிச்சி
152 மு.ச்ந்தரமூர்த்தி
153 விக்கி பசங்க
154 அப்பாவி ஆறுமுகம்
155 மாதங்கி
156 அண்ணா கண்ணன்.
157 லோகேஷ்
158 மயிலாடுதுறை சிவா
159 சந்திரவதனா
160 சுகுணா திவாகர்
161 தமிழச்சி
162 தமிழ் சசி
163 சாலை ஜெயராமன்
164 ச்சின்னப்பையன்
165 இளையகவி
166 ரிஷான் ஷெரீப்
167 இப்னூஜூபைர்
168 இறக்குவானை நிர்ஷன்
169 மதுரை சொக்கன்
170 பனிமலர்
171 ரத்னேஷ்
172 வினையூக்கி
173 மார்த்தாண்டம் கவிதைகள்
174 இ.கா.வள்ளி
175 K.R.அதியமான்
176 PRINVENRSAMA
177 டெல்ஃபைன்
178 புபட்டியன்
179 பீம்பாய் ஈரோட்
180 ராதா ஸ்ரீராம்
181 ஜாலி ஜம்பர்
182 மா.சிவகுமார்
183 அரை பிளேடு
184 Doctor Bruno
185 மலைநாடான்
186 K4Karthick
187 தமிழ் மணம்
188 வந்தியத்தேவன்

189 ஆயில்யன்

190 கால்கரி சிவா

191 - 200 : மேலே குறிப்பிடப்பட்ட பதிவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள்

அப்பாடா - நேரமில்ல – இன்னும் இரண்டு மணி நேரத்துல அடுத்த ஆசிரியர் வந்துடுவாரு அதனாலே சீக்கிரமே முடிச்சிட்டேனே!

மேலும் வாசிக்க...

Saturday, February 2, 2008

மறுமொழி இடப்பட்ட வலைப் பதிவுகள் - பதிவர்கள்

இனிய நண்பர்களே . இதுவரை பல வலைப்பூக்களின், பதிவுகளைப் படித்து, பொறுமையாக மறுமொழியும் இட்டிருக்கிறேன். அவ் வலைப் பூக்களைத் தொகுத்துத் தருகிறேன். வரிசை ஒன்றும் அகர வரிசையோ, தர வரிசையோ, கருத்து வரிசையோ, பதிவு எண்ணிக்கை வரிசையோ அல்ல. கைக்கு வந்த வரிசை தான். நான் முதல் முதலில் படித்த பதிவு எது ? யாருக்கு நினைவு இருக்கிறது. இன்றைய தினம் தேவைப் படுமென்று அன்றே தெரிந்திருந்தால் நாட்குறிப்பாவது எழுதி வைத்திருக்கலாம். எழுத வில்லை.
எழுதும் பழக்கமும் இல்லை.

நான் இணையத்திற்கு வந்து, வலைப்பூ பார்க்க ஆரம்பித்த காலத்தில் தமிழ் மணத்தைக் கண்டு பயந்து போய், இணையத்தை விட்டே விலகி விடலாமா என நினைத்து, பின்னர் தேன்கூட்டில் இணைந்தேன். பின் சிறிது காலம் கழித்து, தமிழ் மணத்திலும் இணைந்து விட்டேன்.

இதோ நான் படித்த பதிவர்கள்:

000 இரா.முருகன்
001 தருமி
002 இளவஞ்சி
003 முத்துக்குமரன்
004 லிவிங் ஸ்மைல் வித்யா
005 பால பாரதி
006 துளசி
007 சேதுக்கரசி
008 நானானி
009 நளாயினி
010 பாசமலர்
011காட்டாறு
012 திவ்யா
013 களவாணி வித்யா
014 கண்மணி
015 சிந்தாநதி
016 முத்துலட்சுமி
017 புதுகைத் தென்றல்
018 சதங்கா
019 அருணா
020 லக்கி லுக்
021 அனு ராதா
022 குசும்பன்
023 ரசிகன்
024 அபி அப்பா
025 சர்வேசன்
026 சற்று முன் பாஸ்டன் பாலா
027 சேவியர்
028 சிவ பாலன்
029 சிவ முருகன்
030 கபீரன்பன்
031 ஜீவி
032 ஜீவா
033 கலை அரசன்
034 சின்னக் குட்டி
035 கானா பிரபா
036 ராம்
037 ஜி.ராகவன்
038 குமரன்
039 மங்களூர் சிவா
040 நாகை சிவா
041 இம்சை
042 பவன்
043 நிலா
044 நந்து
045 சஞ்ஜெய்
046 பிரபு ராஜ துரை
047 மக்கள் சட்டம் - சுந்தர் ராஜன்
048 அடுப்படி
049 வவ்வால்
050 இளா
051 விவசாயி
052 நவீன் பிரகாஷ்
053 திகழ் மிளிர்
054 புகாரி
055 ஆசிப் மீரான்
056 ஜமாலன்
057 ஆடுமாடு
058 சென்ஷி
059 டிபிசிடி
060 கோவி கண்ணன்
061 கண்ணபிரான் ரவி ஷங்கர்
062 செல்வி ஷங்கர்
063 நா.கணேசன்
064 பத்ரி
065 சுப்பையா
066 வசந்தம் ரவி
067 பிரியமுடன் கேபி
068 தமிழ் பித்தன்
069 குழலி
070 குட்டிப் பிசாசு
071 சிறில் அலெக்ஸ்
072 ஓசை செல்லா
073 வி எஸ் கே - ஆத்திகம்
074 மதுரையம்பதி மௌளி
075 தஞ்சாவூரான் ராஜா
076 மணிக்கூண்டு
077 கைலாஷி
078 என். கண்ணன்
079 கீதா சாம்பசிவம்
080 வல்லி சிம்ஹன்
081 தி ரா ச
082 ஞான வெட்டியான்
083 ரசிகவ் ஞானியார்
084 பிரியா (எ) செண்பகவல்லி
085 நவன்
086 ட்ரீம்ஸ்
097 சாம் தாத்தா
098 வேதா
099 பி.கே.சிவகுமார்
100 சக்தி
101 சதீஷ்
102 அமிர்தன்
103 இப்னு ஹம்துன்
104 நிலா ரசிகன்
105 சகாரா
106 நாடோடி இலக்கியன்
107 இராகவன் என்ற சரவணன் மு
108 பிரேம் குமார்
109 ஷைலஜா
110 அருட்பெருங்கோ
111 நம்பிக்கை பாண்டியன்
112 என்றும் அன்புடன் பாலா - பாலாஜி
113 ஜோஹன் பாரீஸ்
114 ஜோதி ராமலிங்கம்
115 ஆஷ் அம்ருதா
116 .:: மை ஃபிரண்ட் ::.
117 அப்ரா
118 சுரேஷ்
119 அந்தோணி முத்து
120 விக்கி பையன்
121 இரண்டாம் சொக்கன்
122 டி.பி.ஆர் ஜோசப்
123 அபி பாப்பா
124 அம்பி
125 இலவசக் கொத்தனார்

கை வலிக்குதுங்கோ - அப்புறமா பாக்கலாமா - அடுத்து இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரிலயே - மண்டையே சொரியணும்
பாப்போம்


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது