07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 29, 2008

கவிதைச்சரம்!

கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..
கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?






கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது ஆயிரம் மலர்களின் தோட்டம்.

கவிதை என்பது எந்த சந்தர்ப்பங்களிலும் முட்டிக்கொண்டு வந்துவிடுமா? சுனாமி வந்தபோது கவிதை வந்தது.கும்பகோண ம் தீவிபத்து நடந்தபோது கவிதை வ ந்தது. பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டபோது கவிதை வ ந்தது. இந்தக்கவிதைகள் எழுதும் கவிஞர்களை நாம் மதிக்கிறோம் ஆனால் இதுபோல இன்னொருகவிதை எழுத வாய்ப்பு நேராதிருந்தால் தேவலை என்று மனம் எண்ணுகிறது.

நம்மில் அவ்வபோது உக்கிரம் கொள்ளும் உணர்ச்சிகளையே கவிதையாக்குகிறோம் நம் உதடுகளுக்கு புன்னகைபுரியவும் தெரியும் நம் விழிகளுக்கு கனல் உமிழவும் தெரியும்.

கவிதை இதயம் சம்பந்தப்பட்ட்து. விமர்சனங்கள் ,அதனை மூளையைக்கொண்டு அணுகும்போது அபத்தமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கவிதை பலவித ருசிகளைகொண்டது சிலர் குறளில்காமத்துப்பாலை அகற்றி விட்டு மற்றதை பைண்ட் செய்துவைத்திருப்பார்கள் உண்மையில் காமத்துப் பாலில்தான் கவிதை இருக்கிறது,மற்றதில் உரைநடை இருக்கிறது!

முகத்தைதான் படமெடுக்கலாம் முகமூடியை படமெடுத்து என்னபயன்?
கவிதையில் நாம் நாமாக இருக்கவேண்டும்

நம் ஒவ்வொருவரிடமும் ஒருகவிஞன் இருக்கிறான். பலரின் கவிதைகள் மௌனமாக உறைந்திருக்கின்றன சிலர்மட்டுமே அவற்றை வார்த்தையால் மொழிபெயர்க்கிறார்கள். கவிதை பார்வையிலேயே இருக்கிறது.

இந்தவகையில் நான் ரசித்த கவிதைத்தளங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுதத் விரும்புகிறேன்.

வளர்ந்துவரும் இளம்கவிஞர் ரிஷான் ஷெரீபின் கவிதைத்தளத்தில்
! பல கவிதைகள் மிகவும் எதார்த்தமானவை..’மரணம்துரத்தும் தேசத்துக்குரியவனாக ‘ ‘நடுநிசியில் எனது தேசம்’ போன்ற கவிதைகளின் சோக்ம் நெஞ்சை உலுக்குகிறது. காதல்கவிதைகளிலும் எதார்த்தம் மெனமை மிளிர்கிறது.

மைத்துளிகள் என்று வலைத்தளத்தில் தோழி சுவாதி எழுதிய காதல்பறிய கவிதை அதன் இயல்பை அப்படியே சொல்கிறது சுவாதியின் பலகவிதைகள் அவர் வலையில் சிறப்பாக் உள்ளன. அவை உண்மைத்துளிகள்!

இங்கு நிலவுநண்பன் எனும் ரசிகவ் ஞானியரின் தூக்கம் விற்ற காசுகள் இது பலமுறை பலரால்பாராட்டு பெற்றதுதான்,,,இன்னும் பலகவிதைகள் சிறப்பாக உள்ளன.
அவைகால்தடங்கள் மட்டுமன்று எனும் ப்ரியனின் கவிதையைக்காண வாருங்கள் இந்தவலைத்தளத்தில் அவரது பலகவிதைகள் எல்லாரையும் கவர்ந்துவிடும்.

என் அன்புத்தம்பி நிலாரசிகன்! செல்லமாய் இவரை ஜூனியர்வைரமுத்து என்போம் குழுவில் நாங்கள். இரு கவிதை நூல்கள் அளித்திருக்கும் இவரது வலைமனையில் ஏராளக்கவிதைகள் கதவிடுக்கில் சிக்கியவிரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதல் என்பது போன்ற காதல்கவிதைகள் தொடங்கி சமுதாய சிந்தனை கொண்ட கவிதைகள் வரை நிலாதன் வலையில் உலா போவதை கவனியுங்கள் அவைகள் உங்கள் பார்வைக்குக்கிடைக்க இதோ..
.



கென் பெயர்தான் சின்னது .மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது இவருக்கு!
இவருடைய தற்கொலைக்கானகாரணங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ப்ரேம்குமார் வலையில் தேடும்போதே கிடைத்த தேடல்கவிதை சின்னது ஆனா சிறப்பானது இவருடைய மற்றகவிதைகளும் அப்படியே படித்துப்பாருங்கள்.

காதல்கவிஞர் அருட்பெருங்கோவாஇ இங்க விடலாமா? காதல்மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் மனிதர் அசத்துகிறார். பாருங்க அவைகளை இங்க…

கவிநயாவின் கனியான கவிநயமிக்க கவிதைகளை காணவும் அங்கே அருவியின் சப்தம் கேட்கும்.அபிராமி அன்னையின் அருள்விழி திறந்திருக்கும். வசந்தம் வீசும் இன்னும் இன்னும்!! எனக்குப்பிடித்த இளம் கவிதாயினிகளில் கவிநயாவும் ஒருவர்.

தணீகையின் அருமையான பலகவிதைகள் இங்கே ..புரியமுற்படுகையில் எனும் இவரது கவிதை சிந்திக்கவைக்கும் வெற்றுக்காகிதம் என்று சொல்லிக்கொண்டு பல வெற்றிக்கவிதைகள் படைக்கிறார்.

சிறுவனின் வலைத்தளமாம் கம்ல்ராஜன் இங்கே பெரியபெரிய அற்புத விஷய்ங்களை கவிதையாய் தருகிறார்.

தஞ்சைமீரானின் ‘தடை ‘கவிதை அவரது இந்த பிடிக்கும்

சூர்யாவின் கவிதைகளை அவரது சூர்யபார்வையில் காணலாம்….உணர்சிபூர்வமான எதார்த்த கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.

அங்கே தீட்டு கவிதை பிடிக்கும் எனக்கு

இங்க மங்களூர் சிவா கவிதைகள் அருமை . ஆனா ஒரு படம் போடறார்பாருங்க பெண்களுக்கு வருமே வெட்கம் வெட்கம்! சைன்னு சொல்வேன் ஷை!!!

அண்ணா கண்ணன் சிஃபி ஆசிரியர் மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய பொய்க்காரியின் ரசிகை நான்!

இங்கேஎன் அன்புத்தோழி மதுமிதாவின் கவிதைகளை காற்றுவெளியிடையே காணுங்கள் அதில் அன்பின் நிறம் எனக்கு மிகப்பிடிக்கும்.

<.

லக்ஷ்மண் ராஜா சகாராதென்றல் என்று இன்னும் பலரின் கவிதைகள் கொண்ட தளங்களை இன்னொரு பதிவில் காண்போம்.

கவிதைச்சரம் இப்போது கட்டிவிட்டேன். மணக்கிறதா?!
மேலும் வாசிக்க...

Monday, April 28, 2008

வலைச்சரத்தில் என் 'தலை' எழுத்து!






எனக்குத்தெரிந்த வளைச்சரம் இதுதாங்க! என்னைப்போய் வலைச்சரம் தொடுக்க முத்துலட்சுமி அன்புக்கட்டளையிட்டப்போ கொஞ்சம் திகைப்பாயிருந்தது.!சீனாவும் வலைசரம் தொடுத்துடுங்க ஏதும் உதவிதேவைன்னா தயங்காம கேளூங்கன்னு மடல் அனுப்பிட்டார்.முதல்ல நன்றி முத்துலட்சுமிக்கும் சீனாவுக்கும்.

நான்பாட்டுக்கு பத்திரிகைளுக்கு கதை பண்ணிட்டு-ஸாரி-எழுதிட்டு இருந்தேன்…(இருக்கேன் !!)

ஆறுவருஷம் முன்பு இணையத்தில் மன்றமையம்ல கவிதைக்குக்கவிதைமூலமா தத்திதத்தி தட்டச்சி உள்ளவந்தேன்..இப்போ ஜீவ்சா இருக்கும் அன்புத்தம்பி ஐயப்பன் மன்றமையத்துல கவிதை எழுதுவாரு. என்னை மரத்தடி.காமுக்கு அழைச்சிட்டு வந்த பெருமை அவருக்கு சேரும்.மரத்தடில வந்ததும் நிறைய நட்பும்கிடைச்சிது ..அங்க
எழுதிக்குவிச்சேன் என்பதைவிட நிறைய குறும்பும் அன்புமாய் மடலிட்டுக்கொண்டு நட்பு வட்டத்தைக்கூட்டிக்கொண்டேன் என்பது நிஜம்! அங்கிருந்தபோதே பலருடைய வலைத்தளங்களை பார்வையிட்டு பின்னூட்டமிட்ட என்னை சொந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்படி சிலர் கேட்டுக்கொண்டர்கள்.



பாரதியைப்பிடிக்கும் ஆகவே அவருடைய வாக்கான எண்ணியமுடியவேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் என்ற வரிகளை என் வலைமொழியாய் வைத்து அமைத்தேன் . ஆரம்பிச்சேனே தவிர அப்படி ஒண்ணும் அதிகமா எழுதவே இல்ல எனலாம்.

தமிழ்சங்கம் மற்றும் கண்ணன்பாட்டுல ஓரளவு என்பங்கு இருக்கும். அதுவும் அதிகமில்லை!

வலை ஆரம்பிச்ச உடனே தேன்கூடு போட்டில ஆறுதல் பரிசு இந்தக்கவிதைக்குக் கிடச்சிது கொஞ்சம் காதல்ரசம் அதிகமிதுல

அன்னையர்தினத்துக்கு அம்மா பத்தி நான் எழுதின கட்டுரை எனக்கு ரொம்பவே பிடிச்சது. அம்மா பத்தி எழுதினாலே அது நல்லாத்தான் வருது இல்லையா?

போனவருஷம் …வா.வ.ச நடத்தின போட்டில ராயல்ராமினை மையமா வச்சி குழந்தைகள் அடிச்சலூட்டியினை கட்டுரை எழுதினதுல பரிசுகொடுத்தாங்க.

காக்ககாக்க காலணி காக்க ன்னு நகைச்சுவை கட்டுரை எழுதினேன். அது நிஜமா நட்ந்ததுதான் …எழுதறப்போவே நான் சிரிச்சது இதை!

சீரியசா எழுதின சிலகவிதைகள் சில மட்டும் இங்க…, இங்க

அப்புறம் அன்புடன் நடத்தின போட்டில ஒலிகவிதைக்கு பரிசைவாங்கிட்டு திரும்ப வலைமனையை பூட்டிட்டேன்.

அதை தூசிதட்டி எழுப்பவைச்ச பெருமை டாக்டர் வீஎஸ்கேவுக்கே சேரும்! அப்போவும் ஒண்ணும் இங்க வலைச்சரத்துல இதுவரை எழுதின மத்தவங்க மாதிரி நான் அதிகம் எழுதியதாய் தெரியல! இதுல இந்தவருஷ ஆரம்பத்துல புதுவருஷ உறுதிமொழின்னு எடுத்தபடி இனிமே அடிக்கடி வலைத்தளத்துல எழுதணும்னு ஓரளவு எழுதிட்டுதான் வரேன்.

நேரம் கிடைக்கிறப்போ எல்லாரும் வந்து படிச்சி கருத்து சொன்னீங்கன்னா மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..டாக்டர் வீ எஸ்கே அல்லது சுவாதி அல்லது மஞ்சூர்ராசா அல்லது கேஆரெஸ் விளக்கம் தருவாங்க) செஞ்சி தருவேன்!

ரொம்ப என்னைப்பத்தி சொல்லிக்க எதுவுமில்ல எல்லார்கிட்டயும் அன்பாய் பழகணும் என்கிற எண்ணம் இருக்கிற சராசரிப்பெண்தாங்க!

நாளைக்கு இணைய நண்பர்களின் + சிநேகிதிகளின் வலைப்பூக்கள் பறிச்சிட்டு சரம் தொடுத்திட்டு வரேன், என்ன?

மேலும் வாசிக்க...

எழுத்தாளரே வாங்க சரம் தொடுக்க..

வலைச்சரத்திற்கு அழைத்தபோது நானா என்று கேட்ட கீதாம்மாவின் தன்னடக்கத்தை என்ன சொல்வது. அவர்களின் இணைய இணைப்பு பிரச்சனையும் மீறி 9 பதிவுகள் எழுதி வலைச்சரத்தை அழகாக தொடுத்தார். தன் தோழிகள் என்று ஆரம்பித்து துளசி கவிதா வேதா வல்லி என்று அனைவரையும்பற்றிய அவரின் எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இசை ஆன்மிகம் போன்ற வற்றில் நல்ல பல பதிவுகளின் இணைப்புகளை தந்தார்.செய்யப்படும் செய்யவேண்டிய வேலைகள் பற்றிய பதிவு நல்லதொரு சரம்.பட்டங்கள் கொடுத்தும் பாராட்டுகள் செய்தும் அனைவரையும் ஊக்கப்படுத்தி நகைச்சுவையாக நம்மோடு பேசிக்கொண்டே அதை படித்தீர்களா இதை படித்தீர்களா என்று கூடவே அழைத்து போய் பதிவுகளை படிக்க வைப்பது போல் இருந்தது..
சிரமம் எடுத்துக்கொண்டு வாரம் முழுதும் சரம் தொடுத்து தந்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.
நன்றி கீதா சாம்பசிவம்.
-----------------------------------------------------------
இனி இந்த வாரம் வருபவர் ஷைலஜா. சிறுகதைகள் , தொடர்கதை, நாவல் என்று பத்திரிக்கை எழுத்துலகிலும் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் ஷைலஜா அவர்கள் இங்கே இணையத்தில் எண்ணிய முடிதல் வேண்டும் என்கிற பதிவிற்கு சொந்தக்காரர். எண்ணியதும் நல்ல விசயமாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு நகைச்சுவையாக பல சிறுகதைகள் தந்திருக்கிறார். சுடோக்கோ சுமதி படித்தீர்களா ? மரத்தடி , மற்றும் தமிழுலகம் கவிதைப்போட்டிகள் தேன்கூடு போட்டிகள் என்று வெற்றி வாகைகள் பெற்றிருக்கிறார்.
எழுத்து அவருடைய மூச்சு . ஒலி FM ல் பகுதி நேர பணி. பொதிகையில் நிகழ்ச்சி தொகுப்பு. பிண்ணனி குரல் கொடுப்பது. பன்முகத்திறமை கொண்டவர். அவர் தான் ரசித்த இடுகைகளை நமக்கு வலைச்சரமாக தொடுக்க இருக்கிறார். ஷைலஜா வருக! வருக !
மேலும் வாசிக்க...

Sunday, April 27, 2008

விடை பெறுகின்றேன்!

ஒரு வாரம் போனது தெரியவில்லை. முத்துலட்சுமியின் அழைப்பு வந்த போது, முடியுமா என்றே யோசனை! முக்கியமாய் என்னோட கணினியின் இணைய இணைப்புத் தான் பெரும் பயம், கவலை! சனி, ஞாயிறு என்றால் இணைப்பே அநேகமாய் இருக்காது. எப்படியோ இம்முறை காப்பாற்றிவிட்டது என்றே சொல்லலாம். இதில் அநேகக் குறிப்புகள் எடுத்து வைத்து விட்டு, எழுத முடியவில்லை. தனியாக இதை மட்டுமே கவனித்திருந்தால் எழுதி இருக்கலாம். ஆனால் முடியவில்லை எனினும் சில முக்கியமானவர்கள் பெயர் விட்டு விட்டது. அதை மட்டும் குறிப்பிட்டு விட்டு விடை பெறுகின்றேன்.

முதன் முதலில் எனக்குக் "கீதாம்மா" என்ற பெயர் வைத்த குமரன், பல குரல்களில், பல பெயர்களில் கூப்பிட்டுப் பேசி என்னை ஏமாற்றலாம் என நினைத்துத் தோற்றுப் போகும், நாமக்கல் சிபி,என்ன வேணும் சொல்லுங்க, செய்யறேன் என உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கும் புலி, நாகை சிவா, மெளனமாய் அனைத்து உதவிகளும் செய்யும், ராயல் ராம், என்னுடன் விவாதம் நடத்தாமல் இந்தியாவை விட்டுப் போக வேண்டி இருக்கே என்று வருந்திய கே ஆர் எஸ்., எனக்காக முதலில் போஸ்டர் ஒட்டிய கார்த்திக் முத்துராஜன், என் திருமண நாளுக்கு பாரதி பற்றிய பதிவு எழுதிப் பரிசளித்த மணிப்ரகாஷ், விக்கி பசங்களில் என்னையும் எழுத வைத்த இ.கொ. (இ.கொ.வின் பதிவுகள் பத்தி எழுத ஆரம்பிச்சா, வலைச்சரத்திலே வேறே எழுத முடியாது) ஆகியவர்களைப் பற்றி எழுத எடுத்த குறிப்புகளில் ஒரு பத்துப் பதிவுகளாவது வரும்! எழுத முடியவில்லை. குறிப்பிட்டிருப்பதோடு நிறுத்திக் கொள்கின்றேன். விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்போ கடைசியாக் கொஞ்சம் மொக்கை போட்டு விட்டு விடை பெறுகிறேன். தொலைக்காட்சி விளம்பரங்களில், இப்போ ரொம்பவே மனதைக் கவருவது, "அனுபவம் புதுமை" பாட்டோடு வரும் "தனிஷ்க்" வைரம் பற்றிய விளம்பரம் தான். இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் அம்பி நினைவும், கைப்புள்ள நினைவும் வந்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பூஜை வேளையில் கரடி போல் எட்டிப் பார்க்கும் மாமியாரை நினைத்தும் சிரித்துக் கொள்வேன். ம.பா. அது பற்றிக் கேட்கும்போது அவரிடம் விவரித்ததும், அவரும் அந்த விளம்பரம் வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டு விடுகின்றார், யானை வந்தால் கூப்பிடணும்னு கண்டிஷன்! அதே போல் இதுக்கும் கண்டிஷன் போட்டிருக்கேன், கூப்பிடும்படி!. அடுத்துப் பிடித்த விளம்பரம், கணவனின் உறவினர்கள் கிட்டு மாமாவும், மாமியும் வராங்கனு தெரிஞ்சதும், வீட்டு ஜன்னல் ஏறிக் குதிச்சு, நவ நாகரீக உடையில் இருந்து பாரம்பரிய உடைக்கு மாறிக் காபி கொடுத்து உபசரிக்கும் பெண்,. ஜன்னல் ஏறிக் குதித்துக் கணவனின் உறவுக்காக அவள் மாறுகின்றாள். அருமையான கவிதைத் தன்மை நிரம்பிய இம்மாதிரி விளம்பரங்களை இந்தியாவில் தான் பார்க்கலாம். மறக்காமல் பாருங்கள், அதுவும் "தனிஷ்க்" diamonds of for ever போது அம்பியையும்,கைப்புள்ளயையும் நினைவு கூருங்கள்.

வாழ்த்துகளுடன் விடை பெறுகின்றேன்.

கீதா சாம்பசிவம்.
மேலும் வாசிக்க...

செய்யப் படும் வேலைகளும், செய்யவேண்டியவைகளும்- ஒரு பார்வை!

சில முக்கியமான, அதே சமயம் தேவையான அறிமுகங்கள் இப்போது. முதலில் வருகின்றார் மரபூர் ஜெ.சந்திரசேகரன், ப்ளாஸ்டிக் தொழில் நுட்ப நிபுணர் ஆன இவர், பதிவுகளில் அனைத்து விஷயங்களையும் பார்க்கலாம்.கடைசியாக சுஜாதாவின் அஞ்சலிக் கூட்டத்துக்குப் போய் வந்துவிட்டு எழுதி இருக்கும் பதிவு இதோ! இங்கே! சந்திரா இவருடைய இந்தப் பதிவுப் பக்கங்களில் பொதுவான அரசியல், சமூக, விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரெனில், இதோ இவரின் மற்றொரு வலைப்பதிவு ஆன இதில், சந்திரா என்ற பதிவில் மற்ற தம் ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை ஒன்றினால் எனக்கு இவர் ஆரம்ப நாட்களிலேயே அறிமுகம் ஆனவர். சுத்தானந்த பாரதியாரின் பேரனும் கூட. என்றாலும் இவரின் கோவில் திருப்பணிகளினால் தற்சமயம் தான் கொஞ்சம் நெருங்கிய அறிமுகம் ஆகி உள்ளார். சரித்திரப்பிரசித்தி பெற்று, அதே சமயம் திருப்பணிகளுக்குக் காத்திருக்கும் கோயில்களுக்கு இவர் சார்ந்துள்ள இயக்கம் பெரும் உதவி செய்து வருகின்றது. "உழவாரப் படை" ஒன்று அமைத்து, கோவில்களைச் சுத்தம் செய்யும் பணிகளையும் இவர் சார்ந்துள்ள இயக்கம் செய்து வருகின்றது. இதோ அந்த இயக்கங்களின் அறிமுகம்To save culture & heritage visit:
கலாசாரம்
கோயில்கள்
வரலாறு

to do your bit to uplift the society visit
சமூகம் இந்த மாதிரியான பல பணிகளில் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருக்கின்றார். அவர் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன். அடுத்து, தமிழுக்குப் பெருமை சேர்த்த விஷி என அனைவராலும் அன்பாய் அழைக்கப் படும் விஸ்வநாதன். ஆர் ஈ சி. யில் படித்த தொழில் நுட்பப் பொறியாளர் ஆன விஷி ஆரம்ப காலத்தில் நல்ல கம்பெனியில், நல்ல சம்பளத்தில் உயர்ந்த வேலையில் இருந்தவர். வெளிநாடு சென்றிருந்த சமயம் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு பெரிய அளவில் இவரைத் தாக்க பின்னர் இவர் வேலையை விட்டு, விட்டு வீட்டில் இருந்தே, நோயோடு போராடிக் கொண்டே கொண்டு வந்தது தான் "அழகி". சுருக்கமாய் இவரின் கஷ்டங்களை விவரிக்க முடியாது. ஆகவே இவரைப் பற்றிய மேல் அதிக விபரங்களுக்குப் பாருங்கள் இதோ இங்கே!
விஷி அனைத்து விபரங்களும் ஏற்கெனவே ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் தவிர, மங்கையர் மலரில் டிசம்பர் 2005-ல் 34-ம் பக்கத்திலும் வந்துள்ளது. இந்த "அழகி"யைக் கொண்டு வர இவருக்கு உதவியது இவர் மனைவி மீரா.மனைவியின் மாறாத அன்பு, உதவி, ஊக்கம் இல்லாமல், இத்தகைய உடல் நிலையில் இது நடந்திருக்கவே முடியாது, என்று உணர்ந்த விஷி, இதைத் தன் மனைவிக்கே அர்ப்பணித்துள்ளார். மீராவும் ஒரு கணினி தொழில்நுட்ப நிபுணரே! எனினும், கணவனுக்கும் கை கொடுத்து அவர் வாழ்விலும் ஒரு வசந்தம் தோன்ற உதவி உள்ளார். ஆகவே மனைவியைப் பெருமைப் படுத்தும் விதத்திலேயே இந்த மென்பொருளுக்கு "அழகி" எனப் பெயரிட்டுள்ளார் விஷி! இதோ இங்கே போய் அழகியைப் பார்த்து மகிழலாம், அழகியோடு தமிழில் பேசலாம், தமிழில் தட்டச்சலாம், எல்லாவித உதவிகளும் செய்வாள் இந்த அழகி!
அழகி

அடுத்து "ஆகிரா" என அன்போடு அழைக்கப் படும் திரு ஏ.கே.ராஜகோபாலன் அவர்கள். அடிப்படையில் மெகானிகல் இஞ்சினியர் ஆன இவர், பல கம்பனிகளில் வேலை பார்த்து வந்தாலும் கணினி தொழில் நுட்பத்தின் மேல் கொண்ட ஆசை காரணமாய்ச் சில நண்பர்களோடு சேர்ந்து, கணினியில் வெப் டிசைனிங் செய்து வருகின்றார். காஞ்சீபுரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வரும் இவர் இதையே தன் முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றார். மேலும் குழந்தைகளுக்காக மழலைகள்.காம் என்னும் ஒரு தளத்தைத் தொடங்கி, அதில் மாதம் இருமுறை, குழந்தைகளுக்குத் தேவையான, ஆன்மீகம், சரித்திரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மொழி அறிவு, பாடல், கதைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் தேர்ந்தெடுத்தவர்களால் எழுதப் பட்டு வெளிவரச்செய்கின்றார். இன்னும் பல சமூகப் பணிகளும் செய்து வருகின்றார். இவரின் தளம் இதோ!AKR
மழலை ஆகியவை ஆகும்.

அடுத்த தளம் இந்தியாவின் மேன்மை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு தளம் ஆகும்.


தரம்பால் இறக்கும்வரை காந்தீயவாதியாகவே வாழ்ந்த இவர் இறந்ததும் வார்தாவின் சேவாகிராம் ஆசிரமத்தில் தான், அக்டோபர் 2006-ல் இறந்த இவர், ஆராய்ந்து எழுதிய பல புத்தகங்கள் இந்தியாவின் மேன்மையைப் பறை சாற்றுகின்றது. முக்கியமாய் "The Beautiful Tree Indigenous Indian Education in Eithteenth Century" "Indian Science and Technology in Eighteenth Century" ஆகிய புத்தகங்கள் இன்றைய இளைஞர்கள் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நான் இன்னும் முழுசும் படிக்கவில்லை, என்றாலும் படித்துத் தெரிந்து கொண்ட வரையிலும், எல்லாரோலும் படிக்க வேண்டிய ஒன்றே என்பதைப் புரிந்து கொண்டேன்.
அவரிடம் எடுத்த பேட்டிகளில் பஞ்சாயத்து ராஜ் பற்றிய அவரின் கருத்து கீழே!


//We found that the panchayat had constructed a new building. When we went through the Panchayat records and proceedings there was no mention about the decision to construct a new building for the village Panchayat. On inquiry we were informed that the decision to construct a building was taken at what they called Bees Biswa Panchayat (20 parts Panchayat), an ‘unofficial’ panchayat on traditional line which was more representative of the village than the statutory panchayat.

This was an interesting case of how the villagers perceived certain things and how they reacted to things from outside. It also showed how little we knew about our villages. I had similar experiences in Andhra, Tamil Nadu and other places. Between 1963-65, we undertook a study of the working of the panchayat system in Tamil Nadu. I went round several districts of Tamil Nadu talking to knowledgeable people and holding discussions with panchayat leaders. In Tanjore I met the chairman of the local Bharat Sevak Samaj. He told me about the existence of over 100 Samudayam villages in Tanjore area even around 1937. Samudayam villages are those in which while members had specific shares in the land of the village, the land which any of them cultivated was changed from time to time and the whole vested in the village community. Such a change was stated to be based on the assumption that a certain alteration occurs in the fertility of all land from time to time which creates inequality among the members of the community and hence occasional redistribution was considered necessary.

When I went through the revenue records and other reports, I found that in the district of Tanjore around 30% of villages were classed as Samudayam villages in 1807. The more I went into the late 18th and early 19th century records, the more I was convinced that the picture of Indian society that we all have is wrong. Some one had to go into the late 18th century British records and I thought I should begin and do whatever I can.//

அடுத்துச் சில கருத்துக்களைச் சுட்டுவதோடு இதை முடித்துக் கொள்கின்றேன். முடிவு உங்கள் கையில்!


//Would the West be of any help today?
D: We can get out of this only on our own. There are examples of people growing more and more inwards and I think this is what the Indian people have done. They have shrunk into themselves, the ordinary Indian, because even with one meal a day or half a meal, the way he lives in shacks, without much water, with very little fuel, because of his environment and also his world-view, he could survive. He must have devised a way - as civilisations have a knack of doing - that in adverse times, you reduce, you shrink into yourselves and you think of something else and distance yourself from your larger society, and your goal becomes some other goal, non-societal, non-material, that keeps you going. But it seems that we have over the past ten to twelve generations forgotten how to get out of this shrunken state and return to normality. Perhaps it has become a habit and perhaps because whenever our people tried to come out of it, in a very short time, they got another beating and their experience may be that such effort will not do. So they become diffident about it. So they have sort of retired from life. But the spark remains and hence the possibility is there. Now if they are to be brought into social life, into the running of society - taking it into their own hands, they would only come out of it for something which is worthwhile, which is do-able. If it is not do-able, then they wouldn't. Normality would return when the communities and groups are allowed to have control over their lives, resources and decisions.

What about the Westernised class?
D: Those who have become Westernised - the Western type of commodities may be used by a very large number of people, but those whose minds have been Westernised - I think are not more than half a per cent of us. Probably less, basically not more than half a million people - the officer class in the European sense of the term, which could mean scholars, administrators, army personnel, high dignitaries, managers of industry, etc. And those who are completely lost, among these half a million wouldn't be very many, maybe a few thousand or so - the rest I think can be brought back by a movement backed by spirit and courage and hope. Such a movement however has to be of much greater dimensions and inner energy than even the freedom movement under Mahatma Gandhi. It may not be India-wide, it could initially be a regional thing - because if we are going to wait for the spark to be all over India, then we would be waiting for many generations. The spark may arise in some corner of Tamil Nadu or in Bihar or anywhere, or in areas where movements like that of Swadhyaya have made visible impact during the past three to four decades, wherever there is this feeling of 'What happened to us', 'We have got Lost', 'Let's stand up, do something.'//

செய்ய வேண்டியது உங்கள் கையில்! வாழ்த்துகளுடன்,
கீதா சாம்பசிவம்.
மேலும் வாசிக்க...

Saturday, April 26, 2008

இசை இன்பமும், இனிய நண்பரும்!

இப்போக் கொஞ்சம் இசை கேட்போமா? திரு திராச அவர்களுக்கு அறிமுகம் எதுவும் தேவை இல்லை. அவர் திரு சுப்புடு என்னும் இசை விமரிசகரின் சீடர் ஆவார். அதனால் சுப்புடுவை விடக் கூடத் திறமையாக இசை விமரிசனங்களும் செய்து வருகின்றார். அந்த அளவுக்கு இசை ஞானம் என்னிடம் இல்லை, எனினும் இசையை ரசிக்க முடியுமே? அந்த அளவில் அவரின் சமீபத்திய இசை விமரிசனம் பற்றிய ஒரு பதிவின் அறிமுகம் இதோ! ஏசியாநெட்டில், அறிமுக இசைப் பாடகர் ஆன திரு துஷார் என்பவரின் இசை வெள்ளத்தை அறிமுகம் செய்து வைக்கின்றார் பாருங்கள். இசை மொழி கடந்தது என்பதற்கு இதை விடவும் சான்று உண்டோ? இதோ இங்கே: திராச

இதைத் தவிரவும் பல ஆன்மீகப் பதிவுகளும் எழுதி வருகின்றார் திரு திராச அவர்கள். என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது சங்கிலித் தொடர் அழைப்புக்கு இணங்க அவரின் இந்த எட்டுப் பதிவும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த விஷயமும் தான். அவரின் பெருந்தன்மை மட்டுமின்றி, பழையதை மறக்காமல் அதே பணிவோடும், அடக்கத்தோடும் இருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் தன்மையையும் சுட்டுகின்றது அல்லவா?

//சென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.// இதோ அந்தப் பதிவு!
திராச

அடுத்த இசை இன்பம் இதே இசை பற்றிய தமிழ் ப்ரியனின் ஒரு தொகுப்பு. எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர், திராச வின் பதிவில் இருந்து சென்றேன். என்றாலும் இசைக்கு மொழி தேவை இல்லை என்பதை நினைவூட்டும் அந்தப் பதிவு இதோ!
தமிழ் பிரியன்

எனக்கும் கர்நாடக இசையும் பிடிக்கும்,எனினும் அதன் நுட்பங்கள் அவ்வளவாய்த் தெரியாது. இசையை ரசிக்கத் தெரியும் அவ்வகையில் மகாராஜபுரம் சந்தானம் குரலில் "ஆடாது அசங்காது வா" பாடலும், அருணா சாயிராம் பாடும், "மாடு மேய்க்கும் கண்ணா" பாடலும், பங்கஜ் உதாசின், "சிட்டி ஆயி ஹை" பாடலும், ஆங்கிலத்தில் நெட் வொர்க் சார்ட்டில் இருந்த, "No New Years Day" பாடலும் ரொம்பவே பிடிக்கும், No New Years Day பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகளும், பாடல் பாடும் பாடகரின் குரலும் கண்ணில் நீரை வரவழைக்கும். இசைக்கு மொழி ஏது?


அடுத்து நம் இனிய நண்பரும், என்னை ஆதரிக்கும் வள்ளலும் ஆன திரு அதியமான் இவர் தம் சிறப்பு சொல்லவும் பெரிது! :P எனினும் சில, பல சிறப்புக்களைச் சொல்லுவோம். முதலில் இருந்தே என்னை ஆதரித்து வரும் நாமக்கல் சிபி, குமரன், கைப்புள்ள என அன்புடன் அழைக்கப் படும் இவர் மூவரில் இவர் தான் முதலில் என்னையும், எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பதவியையும் அங்கீகரித்து சங்கத்தின் சார்பில் ஒரு பதிவை முதன் முதலாய் வெளியிட்டார். அந்தப் பதிவின் சில வார்த்தைகள் இதோ!
வவாச

//இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு... "_ _"க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

Posted by கைப்புள்ள at Monday, May 22, 2006 //

இவரின் இந்தப் பதிவிற்குப் பின்னரே எனக்குப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என்றால் அதில் சற்றும் மிகை இல்லை. பல பதிவுகளையும் எழுதி இருக்கும் இவரின் தனித் திறமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வட மாநிலங்களிலும் வசித்திருப்பதால் வடமொழியும் அதில் படித்து, எழுதும் வல்லமையும் பெற்றவர் என்பதை அவர் எனக்கு "சாகேத் ராமாயண்" என்னும் ஹிந்தி கவிதைத் தொகுப்பின் லிங்க் கொடுத்த போது தெரிந்து கொண்டேன். இவரின் விஷய ஞானம் வியக்க வைக்கும். எங்கள் குடும்பம் அதிகம் இருந்த ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இவரும் இருந்ததோடு அல்லாமல் அவற்றின் சிறப்புக்களையும் திறம்பட எடுத்து உரைக்கின்றார் பாருங்கள் இதோ, ராஜஸ்தானின், சிதோட்கட் பற்றிய பதிவிலும், அடுத்து குஜராத்தின் சாலைகள் பற்றிய பதிவொன்றிலும்.
நாத்துவாரா
சித்தோட்கட்

அம்பிக்கும், இவருக்கும் ஒரே மாத இடைவெளியில் திருமணம் நடைபெற்றதால் அம்பியை இவர் தனக்குக் குருவாகக் கொண்டிருக்கின்றார். எல்லாம் தங்கமணியைச் சமாளிப்பதில் தான். அம்பி, பூரிக்கட்டை அடி வாங்குவதைப் புரிந்து கொண்ட இவர், தான் அவ்வாறு அடி வாங்காமல் தப்பிப்பதற்கு ஆவன செய்து வருவதை இதோ இந்தப் பதிவில் பாருங்கள்,
இட்லி மாவு


மற்றும் அவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள், தங்கமணிகள் வாழ்க! கோஷம் எழுந்து வலை உலகை நிரப்பட்டும்.

//விகிபீடியால கண்ணுல பட்ட இன்னொரு விஷயம் இவரோட 'லிஸ்ட் ஆஃப் பொண்டாட்டிஸ்". இந்த மனுசன் வாங்குன அவார்டு லிஸ்டு மாதிரியே இந்த லிஸ்டும் ரொம்ப பெருசா இருக்கு. படிச்சிட்டு வாயை மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம். தலைவர் டுபுக்கு மாதிரி தங்கமணி வாயைக் கெளறி எதாச்சும் ப்ளாக்ல எழுதனும்னு அந்த பாழாப் போன நேரத்துல மண்டைக்குள்ள மணியடிச்சுது. விதி வலியதாச்சே? எங்க வூட்டு அம்மா கிட்ட "ஒன்னே ஒன்னை வச்சிக்கிட்டே அவனவன் திண்டாடறான், இந்தாளு எப்படி தான் சமாளிச்சானோ'ன்னு வாயை விட்டேன். ப்ளாக் எழுதறதுக்காக விழுப்புண் பெற்றவன் என்ற பெயரும் பெற்றேன் :(//

தங்கமணி

கட்ட பொம்மன், ஊமைத்துரை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படித்தும் நிறையவே எழுதி இருக்கின்றார், என்றாலும் இன்னும் பூலித் தேவன் பற்றியோ, அவன் இறந்தது பற்றியோ, அதனால் தான் எட்டப்பன் கட்டபொம்மனைப் பழி வாங்க நேர்ந்தது பற்றியோ இவர் இன்னும் படித்து எழுதவில்லை என்பது எனக்குக் கொஞ்சம் வருத்தமே! இவர் மாமனார் இந்த அம்பத்தூர் தான் என்றாலும் இவர் இங்கே வரும்போது முகமூடியுடனேயே வந்து செல்வதாய்க் கேள்விப் பட்டேன்.போகட்டும், கஷ்டம் என்னும்போது தொலைபேசியில் விசாரிக்கின்றார் அல்லவா? அதற்காக மன்னிக்கலாம். :P

அடுத்துச் சில முக்கியமான தளங்கள் பற்றிப் பார்ப்போமா?
மேலும் வாசிக்க...

Friday, April 25, 2008

சில பட்டங்களும், விமரிசனங்களும், ஒரு திருத்தமும்!

அபி அப்பா கிட்டே பேசும்போது, உங்களை "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" பட்டம் கொடுத்துப் போட்டுடலாமானு கேட்டேன். வேண்டாம்மா, அதெல்லாம் நம்ம குருநாதர் டுபுக்குவுக்கே உரியது, அவருக்கே கொடுத்துடுங்க, நான் வாரிசு தான் அப்படினு சொல்லிட்டார், அதனால் ஏகமனதாய் "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" பட்டம் டுபுக்குவுக்கே போகிறது. டுபுக்கு பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்றாலும், இப்போ எனக்கு, "டாம்" பத்திச் சொல்லியே ஆகணுமே!


என்னுடன் தீராத சண்டை போடும் "டாம்" ஆகிய அம்பியின் அண்ணா தான் டுபுக்குனு எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். இந்தப் பதிவுலகில் தங்கமணி, ரங்கமணி என்னும் இரண்டு வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியவர்,அபி அப்பாவுக்குக் குரு, நம்ம டிடி அக்காவின் குரு, என்று பல பட்டங்களைச் சுமக்க முடியாமல் சுமந்துட்டு இருக்கார், (கீழே இறக்கி வைச்சுடுங்க டுபுக்கு), நகைச்சுவையின் சக்கரவர்த்தி என அனைவராலும் ஏகமனதாய் ஒப்புக் கொள்ளப் பட்டவர், திருவாளர் "டுபுக்கு" அவர்கள் போட்டியில் முதன்மையில் இருக்கின்றார். "லண்டனுக்குப் போவது" பற்றிய அவரின் பதிவு படிச்சதிலே இருந்து வாசகர்கள் அனைவரும் லண்டன் செல்வது பற்றி யார் சொன்னாலும் கேலியுடனேயே பார்ப்பார்கள் எனவும் அனைவரும் அறிவார்கள். அந்தப் பதிவின் லிங்க் கிடைக்கவில்லை. டுபுக்கு, நீங்களே வந்து கொடுத்துடுங்க, 2 நாளாத் தேடறேன், உங்க பதிவுகளிலே, அலசிப் பிழிஞ்சு, துவைச்சுக் காயப்போட்டாச்சு, கிடைக்கலை! முக்கியமான பதிவுகள் ஜொள்ளித் திரிந்ததொரு காலம், இதோ இங்கே!டுபுக்கு , மூல்தானி மெட்டி, ரயில்
ஸ்நேகங்கள் ஆகியவை. என்னுடைய சில பதிவுகள் இவரால் "தேசி பண்டிட்"டில் இடம் பெற்றிருக்கின்றது. இவருக்கே "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை மனமுவந்து அளிக்கின்றேன்.

என்னோட திருமண நாள், பிறந்த நாள் அன்று இது வரை "டாம்" வந்து வாழ்த்துச் சொன்னதே இல்லை, அடுத்து என்ன வலை வீசலாம்னு யோசிச்சுட்டு இருக்கும். ஆனால் அவர் அண்ணாவான "டுபுக்கு" சரியா எதுக்கோ மூக்கிலே வேர்க்குமாமே அது போல் வந்து தாமதமாகவாவது வாழ்த்திட்டுப் போவார்.

அடுத்து, என்ன இருந்தாலும் டுபுக்கு மாதிரி நம்மாலே எழுத முடியலையே என்று புலம்பும் அபி அப்பா! இவரைப்பத்தி நான் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. அவரே எல்லாம் சொல்லிக்கிறாரே? :P இதோ பாருங்கள்!அபி அப்பா

விஜய்டிவியில் அபி அப்பா குடும்பம்" பற்றிய இந்தப் பதிவை எல்லாரும் படிச்சிருப்பீங்க, நானும் படிச்சேன், ஆனால் பின்னூட்டம், முன்னூட்டம் ஒண்ணும் கொடுக்கிறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அது என்னங்க, கல்யாணப் பந்தியிலே பாயாசம் பரிமாறுகிறவங்களுக்குக் கரெக்டா நம்ம இலைக்கு வரும்போது பாயாசம் தீர்ந்து போகுமே? தெரியும் இல்லையா, அது போலத் தான் இந்த அபி அப்பாவும். திரும்பப் போய்ப் பாயாசம் எடுத்துட்டு வரவங்க, கவனமா எப்படி நம்ம இலையை விட்டுட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., (அதுவும் முக்கால் வாசிக் கல்யாணங்களிலே நல்லாவே பால் பாயாசம் வச்சிருப்பாங்க) அடுத்த இலையில் இருந்து ஆரம்பிப்பாங்க, ஒரு முறை, இப்படி ஆயிடுச்சு, என்னோட ம.பா.பார்த்துட்டுப் பரிதாபப் பட்டு, சர்க்கரைக்கே தித்திப்புப் போடலையானு கேட்கும் என்னோட அல்பத்தனத்தை நினைவு வச்சுட்டு, என் இலையைக் காட்டிப் பாயாசம் கொடுங்கனு கேட்டதுக்கு, அவங்க, அதை விட அல்பத் தனமா, அட, அதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்களா? இன்னொரு முறை கேட்கிறாங்கனு வியந்து ஆச்சரியப் பட நொந்து நூலாகிப் போன நான் அப்புறம் பாயாசத்தைக் கையாலேயே தொடவேண்டாம், ஸ்பூனாலேயே எடுத்துச் சாப்பிட்டுக்கலாம்கிற முடிவுக்குக் கஷ்டப் பட்டு வரவேண்டி இருந்தது. அது மாதிரி அபி அப்பாவும் செய்வார், சரியா என்னோட பின்னூட்டத்துக்கு முன்னால் வரை பதில் கொடுத்துடுவார்.ரொம்பவே வரிசையாகவும், ஒழுங்காவும் பின்னூட்டங்கள் கொடுத்திருக்கும் எல்லார் பேரும் சொல்லியும் பதில் கொடுப்பார். அப்புறம் வந்திருக்கும் என் பின்னூட்டம் அதை விட்டுடுவார் கவனமா. அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் இருந்து ஆரம்பிச்சிருப்பார் பதில் சொல்ல. இதைக் கேட்டால், "இல்லைம்மா, நீங்க கடைசியிலே வந்து சொன்னீங்க இல்லை, அதான் என்பார். எனக்கு அப்புறம் சொல்லி இருக்கிற 999 பேரின் பின்னூட்டமும் எப்படித் தான் கண்ணிலே படுதோ தெரியலை, அதான் இப்போப் போய்ச் சொல்றதே இல்லைனு வச்சுட்டேன். சரினு எப்போவாவது முன்னால் கொடுத்துட்டேன்னு வைங்க, அப்போ நம்ம பின்னூட்டத்தை மட்டும் கவனமா விட்டுட்டு அடுத்ததில் இருந்து ஆரம்பிப்பார், பந்தியிலே ஓரத்தில் உட்கார்ந்து இருக்கிறவங்களைக் கவனிக்காமலே போகிற பாயாசம் கொடுக்கிறவர் போல. நமக்கு எல்லா இடத்திலும் உட்கார்ந்து ஒண்ணும் கிடைக்காமல் இதே பழக்கமாகி, இப்போ வீட்டிலேயே பால் பாயாசம் வச்சுச் சாப்பிட்டுட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டியதாய் இருக்கு! என்ன செய்ய எல்லாம் அஜித் லெட்டர்! :( இருந்தாலும் சிரிச்சு வைங்க! அதுக்காகப் பாருங்க, இப்போ நம்ம பதிவுக்குக் கமெண்ட் போடக் கூட ஆளில்லை! :P

அபி அம்மா தான் பாவம், இந்த அபி அப்பா கிட்டேயும், அபி பாப்பா கிட்டேயும் மாட்டிட்டுப் படற அவஸ்தை, இங்கே பாருங்க! :)))))))))))

அபி அப்பா சிதம்பரத்துக்குப் போன அப்பா(டா)சாமி!!! இப்படிக்கு அபி பாப்பா!


அபி அம்மா கிட்டே நானும் தொலைபேசியில் எப்படி எல்லாமோ சொல்லிப் பார்த்தேன், அபி அப்பாவை மிரட்டறதுக்குச்சொல்லிக் கொடுத்துப் பார்த்தாச்சு. :P அபி அப்பா கிட்டேயே இருந்துட்டு அவங்களை மிரட்டிட்டு இருந்தார் போலிருக்கு, பாதியிலேயே "இதோ கோபி வரார், சாட்டிங்கிற்கு"னு நான் சொன்னதும் பயந்துட்டாங்களா இல்லை அபி அப்பா பயமுறுத்தினாரா புரியலை, உடனேயே தொலைபேசியை வச்சுட்டாங்க! இன்னிக்கு வரையிலும் திரும்பப் பேசலை. முந்தாநாள் பேசினப்போ கூட அபி அப்பா மட்டுமே பேசினார் அதுவும், ரொம்ப ஜாக்கிரதையா என் கிட்டே அபி அம்மாவா? அவங்க வீட்டிலே இல்லைனு சொல்லிட்டார். நிஜமா அபி அம்மா? :P

அபி அப்பாவை ஏக மனதாய் டுபுக்குவின் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கிறேன்.


அடுத்து வரார், நம்ம அம்மாஞ்சி, அம்மாஞ்சி என்ற அம்பியை எனக்குப் பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசுலே இருந்தே தெரியும். நான் தமிழ் எழுத முடியாமல் திண்டாடும்போது வெ.பா.வ. ஜீவ்ஸ், பொறுமையாகவந்து செய்ய வேண்டியதைச் சொல்லிட்டுப் போக, இந்த டாம் மட்டும், "கையைப் பிடிச்சாச் சொல்லித் தர முடியும்?"னு அதட்டிட்டுப் போயிடுச்சு! :P அதுக்கு அப்புறமும், எல்லாப் பதிவுகளும் தொலைந்து போய்க் கஷ்டப் பட்டேனே அப்போ கூட, இந்த டாம், ஜெரியாகிய என்னைப் பார்த்துச் சிரிச்சுட்டுத்தான் இருந்தது. தெரியாமப் போயிடுச்சு எனக்கு இந்த டாமைப் பத்தி! :P இப்போக் கூட எனக்கு வந்த வைரல் ஜூரம் என் கணினியையும் பீடிக்க, எங்கெங்கிருந்தோ உதவிக்கரம் வர, இந்த டாம், அட, இத்தனை பேரா வந்திருக்காங்கனு, கணக்கு மட்டும் போட்டுப் பார்த்துட்டுப் போயிருக்கு. இப்போ ஊரில் இல்லை, வரட்டும், அதுக்குள்ளே, நான் வலைச்சரத்தை விட்டுப் போயிடுவேன், இந்த டாமை வேறே வழியில்லாமல், நகைச்சுவை இளவரசனாய்த் தேர்ந்தெடுக்கிறேன். இவரின் சமீபத்திய சில பதிவுகள்:


அம்பி
ரெட்டை ஜடை வயசு 1&2
அம்பி
அம்பி

தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை மாதிரி அம்பிக்கும், எனக்கும் சண்டை தொடரும் என திரு திராச அவர்கள் ஒருமுறை திருவாய் மலர்ந்தருளி உள்ளார். அது நிஜமோ?

அடுத்து இசை இன்பம் பற்றிய சில பதிவுகளும், முக்கியமான நண்பர் இருவரும் நாளை இடம் பெறுவார்கள். அதற்கு முன்னர், சமீபத்திய தொலைக்காட்சித் தொடர் ஆன "சிம்ரன் திரை" பற்றிய ஒரு சிறு விமரிசனம். உண்மையில் தொடர்கள் பார்க்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை, என்றாலும், முதல் கதை சுஜாதாவின் கதை என்பதால் பார்த்தேன். ரொம்ப அருமைனு சொன்னால் அது பத்தாது. சிம்ரனின் நடிப்பு மட்டுமில்லை, வண்ணாத்திப் பூச்சியாகவே வாழ்ந்த அவள் கணவன் ஆக வரும் ராகவும், அப்படியே இயல்பாய் வாழ்ந்திருந்தார். சிம்ரனின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம், இத்தனை நடிப்பை எங்கே ஒளித்து வச்சிருந்தார்? என்று கேட்கும்படியாகவே இருந்தது. எடுத்திருக்கும் விதமும் அசர அடிக்கின்றது. நேர்த்தியான ஒளிப்பதிவு, சற்றும் குறைவில்லாத லொகேஷன்கள், என்று தேடிப் பிடித்துப் பொருத்தமாய்ப் போட்டிருக்கின்றார்கள். யதார்த்தத்திற்கு மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் செலுத்தியுள்ள கவனம் நன்கு புலப்படுகின்றது. அதுதான் சுஜாதா கதை என்பதால் அப்படி இருந்ததுனு நினைச்சால், அதற்குப் பின்னர் வந்தது ஸ்ரீப்ரியாவின் கதையில், ராதிகா சஷாங்கின் திரைக்கதையில், "அனுவும், நானும்" அகத்தியன் இயக்கத்தில். சிம்ரன் நடிக்கவே இல்லை. வாழ்ந்தார் அந்தக் கதா பாத்திரத்தில்.

இன்னொரு "கேளடி கண்மணி"யோ என நினைத்த போது முற்றிலும் புதிய கோணம். 7,8 வயதுப் பெண்ணிற்கு, மாற்றாந்தாய் ஆக மனமுவந்து வரும் சிம்ரனுக்கு ஏற்படும், ஒவ்வொரு பிரச்னைகளும் எந்த நடுத்தரக் குடும்பத்திலும் ஏற்படுவதே. கணவன் வீட்டை விட்டுப் போ எனக் கோபத்தில் சொன்னதும், சிம்ரன் கதறிய கதறல், ரொம்பவே இயல்பான ஒன்றாகும். மறுநாள் அனைத்தையும் துடைத்துவிட்டுத் திரும்பக் கணவனிடமே செல்வது, சிரிக்கும்போதும், அழும்போதும், தெரியும் அவரின் கன்னக் குழி கூட நடிப்பில் வியக்க வைக்கின்றது. கண் பேசுமா என்றால் பேசியது மிக அருமையாகவே. அந்தக் கண்களில் எத்தனை உணர்ச்சிகளைக் கொட்டுகின்றார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பாவம் தெரிகின்றது. கதையோடு ஒன்றுவது மட்டுமல்லாமல் பார்க்கும் நம்மையும் அதே போல் உணர வைத்தார். ஒவ்வொரு நாளும் தொடர் முடிந்ததும், மனதில் பாரம் ஏறும். இன்றுதான் முடிவு பார்த்ததும் பாரம் இல்லாமல் இருக்கின்றது. அனைவரும் பார்க்க வேண்டிய தொடர் சிம்ரன் திரை என்பதில் சந்தேகமே இல்லை, இது வரை. இனி வரும் தொடர்கள்????? தெரியவில்லை!!!!!உண்மையில் பெண்களுக்குப் பெருமை தரும் இத்தகைய தொடர்கள் வந்தால்?????? அப்புறம் பாருங்க, இந்த கோபி எனக்கு லிங்க் கொடுக்கத் தெரியாதானு கேட்டுட்டு இருக்கார். அதுக்காக இந்தப் பதிவுக்கு நேரம் செலவழிச்சு லிங்க் எல்லாம் கொடுத்திருக்கேன். அது தவிரவும் கீழே பாருங்க!

குழந்தையின் தோசை, எழுதியது, முகுந்த் நாகராஜ்
மேலும் வாசிக்க...

Thursday, April 24, 2008

விருதுகள் கொடுக்கும் ஒரு பதிவும், விருது கொடுக்க வேண்டிய ஒரு பதிவும்!

என்னுடைய புத்தாண்டு சபதம் பற்றிய பதிவுக்கு வந்த திரு சூரி அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார்.

//sury said...
leave your comment
என்று பார்த்தவுடன் ஞாபகம் வந்தது.
எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஆசிரமத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு .
Leave your shoes and ego here.

இங்கும் அதுவே பொருந்துமோ ?
அல்லது வருவோருக்கு மட்டும் பொருந்துமோ ?
நானறியேன் பராபரமே.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.//



என்னோட இந்தப் பதிவில் திரு சூரி அவர்களின் பின்னூட்டம் மேலே கண்டபடி இருந்தது. அவரை அதற்கு முன்னர் சில பதிவுகளில் பின்னூட்டங்களில் பார்த்திருந்தாலும், என் பதிவுக்கு வந்தது இந்தக் குறிப்பிட்ட பதிவில் தான். அதில் இருந்து அவ்வப்போது என் பதிவுகளில் வந்து பின்னூட்டங்கள் கொடுத்து வருகின்றார். இவருடைய இந்தப் பதிவில் இவரும் ராமாயணம் எழுதி இருக்கின்றார் என்றாலும் எனக்கு அதிகம் பிடித்தது, இவரின் விருதுகள் பற்றிய இந்தப் பதிவுகளே. இதோ இங்கே பார்க்கவும்!
திரு சூரி அவர்கள் தம்முடைய இந்தப் பதிவில் பலருக்கும் தங்கக் கிரீடம் கொடுத்துக் கெளரவிக்கின்றார். அவருடைய ரசனையும் பெரியது, கொடுக்கும் பரிசும் பெரியதாகவே உள்ளது. இம்முறை மட்டும் அட்சய திரிதியைக்காகத் தனக்கே கொடுக்கும்படிக் கேட்டிருக்கின்றார். சில பதிவுகள் பற்றி அவர் சொல்வதை அவர் வாயாலேயே கேட்போமா?

இது பாசமலரின் பதிவில் இருந்துனு நினைக்கிறேன்.

//பஸ் ஸ்டான்ட் வந்தபோது பயம் வந்து விட்டதாம். தன் பய உணர்வினை
"அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.." என்றார்களாம். இவர் என்ன சொல்கிறார்:
http://pettagam.blogspot.com///

அடுத்ததாக, அவர் காட்டும் வலைப்பதிவு இதோ
அவர் மொழியிலேயே பார்க்கலாம், கீழே!

//நான் குறிப்பிடவேண்டிய ஒரு வலைப்பதிவு. அன்பு என்றாலே எல்லோரும் தாயன்பு, தாம் நேசிக்கும் தோழியிடம் அன்பு, டீச்சரிடம் அன்பு, தனக்குரியவரிடத்தில் அன்பு (காதல் என்றாலும் சரி), இயற்கை மேல் தான் கொண்டுள்ள அன்பு, தெய்வத்திடம் கொண்ட அன்பு பற்றிதான் சொல்கிறார்களே தவிர, உலகத்தில்
"அப்பா என்றொரு அற்புத ஜீவன்" என்று இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். என்னமா தன் அப்பாவைப்
பற்றி இவர் எழுதுகிறார் பாருங்கள்://

//தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்//

அப்பாவுக்காகக் கவிதை எழுதிய பெண்ணைப் பாராட்டியவர் அடுத்துக் கீழே சொல்வது காதலைப் பற்றி! இதோ! அவை!

//இந்த வலைதனில் பதிவாளர் எழுதிய ஒரு வாக்கியம் பொன்னான வாக்கியம். தன் காதலுக்காக ஒரு அன்னையின் மகிழ்ச்சியில் ஒரு புள்ளி வைத்திட வேண்டாம் என்கிறார். காதலி தன் காதலனிடம் சொல்கிறாளாம்.//

//உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம்,"//

பதிவு எதுவெனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் இவர் அடுத்துச் சொல்வது, சிவிஆர், இம்சையுடன் குழுவாக வைத்திருக்கும் பதிவு! இதோ அது!

நட்பைப் பாராட்டும் அந்த உள்ளங்களை வாழ்த்திக் கடைசியில் தங்கக் கிரீடத்தை இவர்களுக்கே சூட்டுகின்றார் திரு சூரி அவர்கள் இதோ!


//ஆகவே, நட்பினை ஓங்கி உயர்த்திச் சொன்ன சிவிஆர் அவர்களை
பாராட்டுவோம்.
ஐந்து கண்டங்களுக்கும் ஆழிகட்கும் நடுவே நட்புப்பாலம்
அமைத்திட்ட திரு . சி.வி. ஆர். அவர்களுக்கு
இந்த வாரம் தங்க க்ரீடம் சூட்டி மகிழ்வோம்.

இந்தப் பதிவினைத் துவங்கியது இம்சை அரசி எனும் நண்பர் என‌
சற்று நேரம் முன் திரு சி.வி.ஆர். அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அவருக்கு என் நன்றி.
ஆக, இந்த பாராட்டுதல்களும் க்ரீடமும் திரு.சிவிஆர்,மதிப்புற்குரிய இம்சை அரசி மற்றும் இப்பதிவினை வழிநட‌த்தும் குழுவினருக்கும் உரித்தாக்குவதில் பெருமகிழ்வு
அடைகிறேன்.
இம்சை அரசிக்கும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.

வாழ்க வளமுடன் //

நம் பதிவுலக "மாதா மகி" ஆன துளசிக்கும் ஒரு பதிவில் கிரீடம் சூட்டி இருக்கின்றார். சென்று களியுங்கள். அடுத்து நாம் காணப் போவது வடுவூர் குமாரின் வலைப்பதிவு.

இரண்டு பதிவுகள் வைத்திருக்கின்றார் வடுவூர் குமார். ஒன்று மடவிளாகம், என்ற பெயரில் கட்டுமானத் துறை என்றும், மற்றது லினக்ஸ் பற்றிய தகவல்களும். லினக்ஸ் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டு அரசு ஊழியர்களில் பலரும் அது தான் உபயோகிப்பதாயும் கேள்விப் பட்டிருந்தாலும், மைக்ரோசாப்ட் எக்ஸ்பியை விட அது ரொம்பக் கஷ்டம் என்று சொல்வார்கள். என்றாலும் எப்படினு போய்ப் பார்த்தேன், நிஜமாவே தலை சுத்தல் தான். பொறுமை வேண்டும் ரொம்ப. அநேகமாய்க்கோபம் என்பதே போய் விடும் என நினைக்கிறேன். உலக அமைதி காக்க சிபாரிசு செய்யலாமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. ஆங்கிலத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் புரியும் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முக்கியமாய் இந்த "உபுண்டு" என்ற வார்த்தையே பயமுறுத்துகிறது. பார்க்கலாம், நடைமுறையில் பயன்பாட்டில் ஓரளவு புரியும் என்றே தோன்றுகிறது. லினக்ஸ் பற்றிய கட்டுரையில் இருந்து சில வரிகள். புரியலைனால் நேரே குமாரிடம் போய்க் கேட்கவும்.

உபுண்டு - ஸ்கைபி:
லினக்ஸில் பல வருடங்களாக இருந்த முக்கியமான தடை நேற்று எனக்கு தீர்ந்தது ஆதாவது வீடியோ/ஆடியோ Chat.

கீழே இருக்கும் படத்தை பார்த்து பயந்திடாதீங்க.. எதுக்கு 2 கேமிரா? ஒன்று வின்டோசுக்கு மற்றொன்று லினக்ஸுக்கு.இட பக்க கேமிரா வின்டோஸில் நல்ல ஒளி தரத்துடன் வீடியோ சேட் செய்ய முடியும் அதனால் அதைவிட மனதில்லை ஆனால் லினக்ஸில் வேலை செய்யவில்லை.Logitech கேமிராக்கள் பல லினக்ஸில் நன்றாக வேலை செய்கிறது.//

சொல்றார், படமும் தெரியுதுனு, போட்டும் காட்டி இருக்கார். இருந்தாலும் நம்ம நேரம் எப்படினும் யோசிச்சுக்கணும். அடுத்துப் பாருங்க!


//கம்பியில்லா தொடர்பு:

கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.

என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.

இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.

இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.//

நல்ல வெயில், தண்ணி காட்டினால் நல்லது தானேனு தோணுதா? இன்னும் பாருங்களேன்!


//உபுண்டு 7.04------->7.10
சில நாட்களுக்கு முன்பு தான் வந்த இந்த மேம்பட்ட பகுதி 7.10 ஐ நிறுவலாம் என்று நினைத்து அந்த பேக்கேஜ் மேம்பாட்டை துவங்கினேன்.

முதல் அதிர்ச்சியே "இப்போது சுமார் 650 MB " அளவுக்கு தறவிரக்கம் செய்ய போகிறேன் என்றது. என்னடா இது புது வெர்சன் அவர்கள் வலையில் இருந்து இறக்கினாலே அந்த அளவு தானே இருக்கும்,நாமோ மேம்படுத்த தானே செய்கிறோம் எதற்கு இந்த அளவு தறவிரக்கம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் "சரி" என்று சொன்னேன்.

சுமார் 1.30 மணித்துளிகள் ஆகும் என்றது.மானிடரை மட்டும் மூடிவிட்டு வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.

அகலப்பட்டை இல்லாதவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நொந்து நூலாகிவிடுவீர்கள்.//

அவருக்கு முதல் அதிர்ச்சினு மட்டும் சொல்லிட்டு இருக்கார். நமக்கு நிரந்தர அதிர்ச்சியா இருக்குமோ என்னமோ? பையன் கிட்டே சொன்னேன், லினக்ஸ் உபயோகிக்கலாமானு யோசிக்கிறேன் அப்படினு! பையன் சிரிக்கிறான். "அம்மா, நீ ப்ரோகிராம் எழுதக் கத்துக்கிட்டதே சொல்லவே இல்லையே?" அப்படினு கேட்கிறான். நேரம்! :P

அடுத்துப் பாருங்க மடவிளாகம் பதிவுகளில் இருந்து தற்சமயம் கட்டிக் கொண்டிருக்கும் கத்திப்பாரா பாலத்தைப் பற்றிய ஒரு வர்ணனை! சம்மந்தப் பட்டவர்கள் இப்போதே கவனித்து ஆவன செய்வார்களா தெரியவில்லை! என்றாலும் இந்தப் பாலத்தில் தான் நாம் போகப் போகின்றோம்! :((((((

//சரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.

அப்போது எடுத்த சில படங்கள் கீழே....



//பாருங்கள் அந்த "தோள்" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்!!

ஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.

பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.

இது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.//

இனி அனைவரும் எதிர்பார்க்கும் நகைச்சுவைப் பதிவுகள் நாளை. போட்டியில் இருப்பவர்கள், டுபுக்கு, அபி அப்பா, அம்பி மற்றும் பலர்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 23, 2008

ஆன்மீகத்தில் புது வரவுகளும், ஒரு பெண் கவிஞரின் அறிமுகமும்!

ஆன்மீகப் பதிவுகளில் அடுத்துப் புதிதாக இப்போது கொஞ்ச நாட்களாய் எழுத ஆரம்பித்திருக்கும் மதுரையம்பதி! இவர் முதலில் என்னுடைய திருக்கைலைப் பயணத்தைத் தான் படிக்க ஆரம்பித்துள்ளார். அனானி ஆப்ஷனில் நான் பின்னூட்டம் அனுமதிக்காத காரணத்தால், மற்றப் பதிவுகளில் என்னைச் சந்திக்கும்போது, பின்னூட்டம் போட அனுமதி கேட்டுட்டு, பின்னர் வேறே வழியில்லாமல், வலைப்பக்கம் ஆரம்பிச்சு பின்னூட்டம் போட ஆரம்பித்தார். இவரை எழுத வைத்த பெருமை குமரன், கே ஆர் எஸ், திராச போன்றவர்களுக்கே உரியது. கூட்டுப் பதிவாய் ஆச்சாரிய ஹ்ருதயம் என்ற பதிவும் எழுதும் இவர், இன்னும் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கின்றது. இவரின் அனுபவங்கள் கை கொடுக்கும் என நம்புகின்றேன். நேரமின்மை தான் முக்கிய காரணம் இவர் எழுத முடியாமைக்கு. நேரம் இருந்தால் இன்னும் எழுதுவார் என நம்புகின்றேன்.

அம்பிகை உபாசகர் ஆன இவர் எழுத ஆரம்பித்ததில் முதன்மையானது "செளந்தர்ய லஹரி" பற்றியே. பின்னர் மதுரையம்பதி என்ற பெயரிலும் ஒரு தனிப்பதிவு வைத்திருக்கின்றார். மொக்கை எல்லாம் இவரிடம் பார்க்க முடியாது. ஆனாலும் சாட்டிங்கில் பார்க்கும்போது என்னிடம் மொக்கை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த அளவுக்கு "மொக்கை ஆர்வலர்" என்றும் சொல்லலாம். அல்லது என்னை மாட்டிவிடப் போட்ட எதிர்க்கட்சிகளின் திட்டமோ என்றும் யோசிக்கலாம். அவங்க அவங்க இஷ்டம் அது! மெளலி, நேத்து நீங்க சொன்னாப்பலேயே எழுதி இருக்கேன். ஓகேயா? :P

. மதுரை மீனாட்சியின் திருக்கல்யாணம் பற்றிய இவரின் பதிவு இதோ!

http://maduraiyampathi.blogspot.com/2008/04/blog-post_17.html

//திருவிழாவின் எல்லா நாட்களும் ஈசன் தனியாக் ஒரு வாகனத்தில் ப்ரியாவிடையுடன் வருவார், அன்னை தனி வாகனத்தில் வருவார். ஆனால் பதினோராம் நாள் இரவு மிக விசேஷமான சப்தாவரணம். இதில் அன்னையும் ஈசனும் ஏக ஆசனத்தில் சப்பரத்தில் வருவர். இதனை வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே காண முடியும். மற்ற எல்லா திருவிழாவிலும் அன்னையின் வழி தனி வழிதான். இந்த சப்தாவரண ஸ்வாமி தரிசனம் எல்லா பாபங்களையும் தீர்க்கக் கூடியதாம்.//

செளந்தர்ய லஹரி பற்றிய வலைப்பூ இதோ, இங்கே!
http://sowndharyalahari.blogspot.com/

//இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் //

இதிலே எனக்கும், இவருக்கும் இன்னும் தீர்த்துக் கொள்ளாத ஒரு கணக்கும் இருக்கின்றது. லலிதா சஹஸ்ரநாமம் அருளியது யார் என்பதில்! வசினி தேவதைகள் அருளியதாய் அவரும், வசினிதேவதைகள் மூலம் ஹயக்ரீவர் பெற்று அகத்தியருக்கு அருளியதாய் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லலிதா த்ரிசதி தான் ஹயக்ரீவர் அருளியது என்பது மெளலியின் தீர்மானமான முடிவு, அதை நான் இன்னும் தீர்மானத்தோடு மறுத்துக் கொண்டிருக்கிறேன். யாராவது தெரிஞ்சவங்க இருந்தால் இதைத் தீர்த்து வைக்கலாம். அல்லது ஹயக்ரீவர் மூலம் வெளிப்படுத்தப் பட்டதா? அகத்தியர் மூலம் தான் உலகுக்கு தெரிய வந்ததுனு சந்தேகம் இல்லைனு நினைக்கிறேன். பார்க்கலாம். அடுத்து நாம் சிங்கப்பூர் சென்று மாதங்கியைப் பார்ப்போமா?

http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_09.html
http://clickmathangi.blogspot.com/2008_03_01_archive.html


சிங்கப்பூரில் வசிக்கும் "மாதங்கி" சிறிதாக எல்லாம் கேட்கவில்லை, "பெரிதினும் பெரிது கேள்" என்கின்றார்.
திரு திவாவின் "நல்ல செய்தி" பதிவில் இருந்து இவர் பதிவுக்குப் போனேன். ஒரு வார்த்தையின் மூலத்துக்குப் போய் அதன் அர்த்தம் என்ன என்று ஆராயும் இவரின் தெளிந்த தமிழ் அறிவும், எழுதி இருக்கும் கவிதைகளும், கதைகளின் தேர்ந்தெடுப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூரில் வசிக்கும் இவர் தற்சமயம் இந்தக் கதையைக் கொடுத்திருக்கின்றார். இம்மாதிரிப் பல கதைகள் வந்திருந்தாலும், இதுவும் படிக்கச் சுவையாகவே இருக்கிறது. எப்போது எழுத ஆரம்பித்தார்? ம்ம்ம்ம்ம்??2005 அக்டோபரில்? ஆமென நினைக்கிறேன், என்றாலும் எனக்கு இப்போது தான் தெரியும். ஆகவே அறிமுக இழையில் அறிமுகம் செய்கின்றேன். அவர் கொடுத்திருக்கும் கதை இதோ:

//எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்

ஜேனட்டின் முன்குறிப்பு:

மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.

என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை.

நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.

என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர்.


போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான்.//

மூன்றாவது கண் என்ற கதையின் சில பகுதிகளை மேலே கண்டோம், அருமையான கதைத் தேர்வு. இவரின் படிப்பின் ஆழம் நன்றாய்ப் புரிய வருகின்றது. இனி கீழே இவரின் சில கவிதைகளைக் காண்போம். முதலில் ஒரு குழந்தையின் தோசை பற்றிய கவிதை!

குழந்தையின் தோசை


//எதனாலோ அந்த தோசையைப்//
பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.
அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு
அந்த தோசையைச் சுட்டிக்காட்டி
அது தன்னுடையது என்று
முன்பதிவு செய்துகொண்டது.
இதை கவனிக்காமல் அந்த தோசையை
என் பார்சலில் வைத்துக்
கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.
மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்வரை
திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்
என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.//

இந்தக் கவிதையைப் படித்த எனக்கும் சற்று நேரம் அன்றும் கை நடுங்கியது, இப்போதும்! அடுத்து இன்னோரு கவிதை!வேறொரு வெயில் நாளில் கவிதையில் இருந்து:

//'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்
உன் வீட்டையில்லை'
என்றபோது உன் கண்ணில் தெரிந்த
பரவசம்
பத்துநாட்களுக்குப் போதுமானதாக
உனக்கு இருக்கலாம்
இப்போது நான் யோசிக்கிறேன்
உறுத்தாத மௌனங்களின் மொழியை
நிழலின் அடியில் அசைபோட்டபடி
உன் பயங்களைக் களைவது எப்படியென்று//

இங்கேயும் மெளனத்தின் மொழிதான் என்றாலும், உணர்வுகளைப் புரிந்து கொண்ட திருப்தியும் வருகின்றதல்லவா? பயங்களைக் களைவது ஒன்றும் அவ்வளவு சிரமமாய் இருக்கப் போவதில்லை என்ற நிச்சயமும், அதனால் விளையும் ஆனந்தமும் தென்றல் காற்றுப் போலவே மனதை மெல்லியதாய், இதமாய் வருடிச் செல்கின்றது. அழகாய் உணர்வுகளை, தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், மிக, மிகச் சிக்கனமாயும், தீர்மானமாயும் தெரிவிக்கின்றார்.

அடுத்துச் சமீபகாலமாய் ஆன்மீகம் எழுத ஆரம்பித்திருக்கும் திரு திவா அவர்கள். இவர் "இல்லம்" குழுமத்திலும் எழுதுவதால் ஏற்கெனவே அறிமுகம் ஆனவரே, ஆனால், வலைப்பூக்கள் இப்போ சமீபத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கின்றேன். இவரின் வலைப்பூக்கள்:

My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

மூன்று வலைப்பூக்கள் ஆரம்பித்திருக்கும் இவர் அதிகம் கவனம் செலுத்துவது ஆன்மீகம் தான் என நினைக்கின்றேன். நல்ல செய்தியில் கடைசியாக துளசி பற்றி தினமலரில் வந்ததோடு அதன் பின்னர் ஒன்றும் காணமுடியவில்லை. அடுத்து கதை கதையாம் என்ற வலைப்பூ. (க்ர்ர்ர்ர்ர்., இதைத் தான் நான் காப்பிரைட் கொடுக்காமல் என்னோட ராமாயணம் தொடருக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் எண்ணம், ) இந்தக் "கதை கதையாம்" பதிவில் கதைகள் பலவும் சொல்வார்னு நினைச்சால், முதல் கதை என்னமோ நல்லாவே இருந்தது. அதுக்கு திருஷ்டிப் பரிகாரம் போல மற்ற கதைகள். ரொம்பவே சாதாரணமான கதைகள், மெகா சீரியல்களின் வழக்கமான நடை போல். :( ஒருவேளை கற்பனை வரண்டுவிட்டதோ? தெரியலை! அதுக்கு நான் கொடுத்த பின்னூட்டம், "முடிவை முன்னாலேயே ஊகிக்கும்படி இருக்கேனு கேட்டதுக்கு, இனிமேல் உங்களுக்குக் கதையே சொல்லலைனு சொல்லி ஜகா வாங்கிட்டார்! :P முதல் கதையில் இவரின் தொழிலான பொறிதுயில் ஆழ்த்துதலின் தாக்கம் இருந்தது என்றால், மற்றவைகளின் முடிவை ஊகிக்கும்படியாகச் சாதாரணமான ஒன்றாகி விட்டது. அதனால் கதை சொல்லுவதையே விட்டு விடலாம்னு முடிவு பண்ணிட்டார் போலிருக்கு! :P கதை சொல்லுவதோடு கூடவே தலைவலி மாத்திரையும்,காபியும் தயாராகத் தருகின்றார். எனக்கு இரண்டுமே ஒத்துக்காது. அதனால் கதையே வேண்டாம்னு வந்துட்டேன்! :P

அதனாலோ என்னமோ ஆன்மீகம் பக்கம் முழுக்கவனத்தையும் செலுத்தி இருக்கின்றார் இப்போது. http://anmikam4dumbme.blogspot.com/ இந்த வலைப்பூவில் ஆன்மீகம் பற்றியும், அதிலும் யோகவழிகள் பற்றியும் தெளிவான எளிமையான நடையில் எழுதி வருகின்றார். தற்சமயம் பக்தி மார்க்கத்தில் இறைத் தத்துவத்தை உணருவது எவ்வாறு எனக் கூறுகின்றார். படிக்கும்போது எளிமையாகவே இருக்கின்றது. அதிலும் மனிதர்களின் பொறிகளைத் துயிலில் ஆழ்த்தும் தொழிலைச் செய்யும் ஒருவர், தன் தொழிலுக்கு மாறாக இங்கே பொறிகளைத் தட்டி எழுப்பி, இதான் உங்கள் மனக்கவலைகள் போக்கும் வழினு காட்டுவதைப் போய்ப் பாருங்கள். இதோடு நில்லாமல், இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு "ஆனை" இலவசமாயும் அளிக்கின்றார். கூடவே யானைத் தீனிக்குப் பணமும் கொடுக்கின்றார். சமீபத்தில் இதைப் பெற்ற துளசியைக் கேட்டுக்கலாம். :))))))))))

http://anmikam4dumbme.blogspot.com/2008/04/blog-post.html ஹிஹிஹி, நம்ம அருமை நண்பர், விநாயகர் இங்கே குழந்தை வடிவில் உட்கார்ந்திருக்கார். அவர் உட்கார்ந்திருக்கும் அழகே அழகு.
மேலும் வாசிக்க...

ஜீவா வெங்கட்ராமனும், கபீரன்பனும்! ஆன்மீகப் பதிவர்கள்! பரிசு கபீரன்பன் கொடுப்பார்!

ஆன்மீகப் பதிவர்களில் முக்கியமானவர் குமரன் என அனைவரும் அறிந்த ஒன்றே. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. பின்னர் ஜிரா, என அழைக்கப் படும் ஜி.ராகவன், கே ஆர் எஸ், ஜீவாஎன்றழைக்கப் படும் வெங்கட்ராமன், திரு திராச, விஎஸ்கே, சிவமுருகன், மதுரையம்பதி, திரு சூரி அவர்கள், சமீபத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் திவா போன்றவர்கள் இருக்கின்றார்கள். குமரனுக்கோ, கேஆரெஸ்ஸுக்கோ அறிமுகம் கொடுத்து எழுதுவது நம்மால் முடியாத ஒன்றாகும். இந்த வலை உலகில் நான் அறிமுகம் ஆன போதில் இருந்தே குமரனை அறிவேன். அவர் எழுத்துக்களைப் படித்துக்கொண்டும் வருகின்றேன். நேரம் இன்மையால் அதிகமாய்ப் பின்னூட்டம் கொடுப்பதும் இல்லை, அவரும் அதிகமாய்ப் பதிவுகளையும் வைத்திருக்கின்றார். :)))))))) கே ஆரெஸ்ஸின் தமிழுக்கு முன்னால் நம்மால் நிற்கக் கூட முடியாது. மற்றவர்களில் ஜிராவையோ, விஎஸ்கேயையோ, சிவமுருகனையோ, திராசவையோ கூட அறிமுகம் செய்ய வேண்டாம். அனைவரையும் பற்றிக் குறிப்பிட்டிருப்பதோடு நிறுத்திக் கொண்டு, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஜீவாவையும், கபீரன்பனையும் மட்டும் சொல்லப் போகின்றேன்.

ஜீவாவை எனக்குச் சிதம்பர ரகசியம் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச பின்னரே தெரியும். ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் பதிவுகள். அவரின் எழுத்தாற்றலுக்கும் விஷய ஞானத்துக்கும் முன்னர் நாமெல்லாம் வெறும் ஜுஜுபி என்பது நன்கு புலன் ஆகும். அவர் எழுதியவற்றிலே அனைத்துமே நல்ல பதிவுகள் என்றாலும் என்னைக் கவர்ந்தது எனச் சொல்லவேண்டுமானால் நடராஜ தத்துவம் பற்றிய அவரின் பதிவுகள் தான்.

//பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!//

இதை விட வேறு விளக்கமும் வேண்டுமா என்ன? அருமையான விளக்கம். அதே போல் ஆறுபடை வீடுகளும், யோக சாஸ்திரத்தில் ஒவ்வொரு சக்கரத்தைக் குறிக்கின்றது என்பதைக் குறித்தும் ஒரு பதிவு எழுதி உள்ளார். கடைசி இரு சக்கரங்கள் பற்றி, எனக்கும் அவருக்கும் கொஞ்சம் வேறுபட்ட கருத்து இருந்தாலும், அவர் எழுதி உள்ளவை மிக மிக அருமையான ஒன்றே ஆகும். அதுவும் முதலில் மூலாதாரம் ஏன் கணபதி என்பதில் ஆரம்பித்துக் கடைசி வரையிலும் சொல்லி இருக்கின்றார் இந்தப் பதிவில். இதோ அந்தப் பதிவின் சுட்டி!:

ஆறுபடை வீடும் ஆறு சக்கரங்களும்!

//கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான். //

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.//

பொதுவாகவே நாம் அனைத்து வேலைகளையும் விநாயகனை வணங்கியே ஆரம்பிக்கின்றோம். அதற்கும் ஒரு விளக்கம் இவரிடம் தயாராக இருக்கின்றது, இதோ இந்தப் பதிவில்!

திவாவின் ஆனைமுகத்தோன் பதிவுக்கான அவரின் பின்னூட்டம் இது. யோக சாஸ்திரத்தின் உள்ளார்ந்த அறிவைக் காட்டுகின்றது இது. அருமையாகப் பதிவுகள் மட்டுமின்றி பின்னூட்டமும் கொடுப்பதில் இருந்து அவரின் பக்குவம் தெரிய வருகின்றது அல்லவா? இதோ அந்தப் பின்னூட்டம்:

//1.மூலதார கணபதி, முழுமுதல் பொருள். அவனே
ஆதாரம். ஆதாரம் இல்லாமல் என்ன யோகமும் செய்து மேலெழுப்ப எத்தனித்தாலும், நீண்ட தூரம் செல்ல இயலாது. ஆதாரப் பொருளின் அருள் பெற்றால், நிலை பெற்று நிற்கலாம், நீட்டலாம்.
2.வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களையாமல் என்ன யோகம் செய்தாலும், எங்கே மேலெழும்ப எத்தனித்தாலும், மீண்டும் கீழே வர நேரிடும். ஆகவே, விநாயகன் துணைகொண்டு வினைகளைக் களைவது முதன்முதலில் செய்ய வேண்டியது.//

அடுத்ததாய்க் கபிரன்பன் அவர்கள். கபீரின் "தோஹா" எனப்படும் ஈரடிப்பாடலை, அதற்குரிய பொருளோடு மட்டுமின்றி, பாரதி, தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள் என ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நான் அடிக்கடி செல்லும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. இவர் பாரதியைக் கபீரோடு ஒப்பிட்டுச் சொல்லும் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாரதி இவர் தேடுவது போல் கபீர் பற்றியோ, மற்ற வடமொழிக் கவிஞர்கள் பற்றியோ பாடியதாய் எனக்கும் தெரியவில்லை, எனினும் ஒப்பிடுதல் வேறு முறையில் வருகின்றது பாருங்கள்:

p>http://kabeeran.blogspot.com/2007/09/blog-post_09.html



//

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு//

மேலே இவர் குறிப்பிட்டிருப்பது பாரதி பற்றியது நூற்றுக்கு நூறு பொருந்துமா என்ற கேள்வி எனக்குள் எழும். ஏனெனில் பாரதி துன்பத்திலும், வறுமையிலும் உழன்றாலும் பராசக்தி தாசன்.வறுமையைக் கண்டு பயந்தவனாய்த் தெரியவில்லை. கையில் பணம் இருந்தாலும் நாளைக்கு எனச் சேமித்து வைக்கும் குணமும் அவனிடம் இருந்ததில்லை. துன்பங்களைத் தூசியாகவே மதித்தான் என்று அவன் பராசக்தியை இவ்வாறு துதிப்பதில் இருந்தே தெரிய வருகின்றது அல்லவா?

//நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்:
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ!"//

எனவும் சொல்கின்றான். இவ்வாறு பராசக்தியின் பார்வையிலேயே துன்பங்கள் பஞ்சு பெருந்தீயால் அழிக்கப் படுவது போல் அழிந்து போகும் என்ற நிச்சயம் உள்ளவனாய் இருக்கின்றானே? இவன் எவ்வாறு ஊசலாடுகின்றான் எனக் கபீரன்பன் சொல்கின்றார் எனப் புரியவில்லை. ஒருவேளை மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற இயலாத வறுமையைச் சுட்டுகின்றாரா தெரியவில்லை! ஆனால் அந்த வறுமையைக் கூடப் பாராட்டாமல்,

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில், குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?
தீம் தரிகிட, தத்தரிகிட, தித்தோம்! "

எனத் தனக்குள்ளே கண்ட உள்ளொளியைக் குறித்துக் குதித்துப் பாடியவன், இந்த வறுமையை எள்ளி நகையாடி இருப்பான் எனவே தோன்றுகின்றது. அடுத்து இவர் கூறுவது, இறைவனைச் சென்றடைய சாத்திரங்கள் தேவையில்லை எனப் பாரதி ஏளனம் செய்ததைப் பற்றி. கலகத் தரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்தது பற்றியும், பல கற்றும், பல கேட்டும் பயனொன்றுமில்லையே எனவும் ஏங்குகின்றார். மேலும் பரசிவ வெள்ளம் என்னும் அந்தப்பாடலில்,

"காவித் துணிவேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகளேதுமில்லை
தோத்திரங்களில்லை உளந் தொட்டு நின்றால் போதுமடா"


எனவும் கூறுகின்றார். இன்னும் என்ன சொல்கின்றார் இருவரையும் ஒப்பு நோக்கி எனக் கீழே காண்போமா?

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லைதோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடாசிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்//

இந்தக் கபீரன்பன் முத்தமிழ்க் குழுமத்திலும் எழுதுகின்றார், வேறு பெயரில். அவர் யார்னு சொல்றவங்களுக்கு அவரே பரிசும் கொடுப்பார். :)))))))))

அடுத்து சமீப காலங்களில் எழுத ஆரம்பித்திருக்கும் மதுரையம்பதி என்னும் சந்திரமெளலி.
இப்போ இரண்டு மாசமாய் எழுதிக் கொண்டிருக்கும் திவா,
இன்னும் திவாவின் பதிவிலிருந்து போய்ப் பார்த்த மாதங்கி போன்றோர் பற்றி நாளை காணலாமா? அடுத்து சூரி சார் அவர்களின் விருதுகள் பற்றிய பதிவுகளையும் பார்க்கலாம்.




மேலும் வாசிக்க...

Monday, April 21, 2008

அருமைச் சகோதரி வல்லி சிம்ஹனின் மலரும் நினைவுகள்!

அடுத்து அருமைச் சகோதரி வல்லி சிம்ஹன். அவரும் நான் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச கால கட்டத்திலேயே ஆரம்பித்தார். இவரும் ஆங்கிலத்தில் ஆரம்பிச்சு விட்டுப் பின்னரே தமிழில் எழுத ஆரம்பித்தார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தீர்மானத்துடனேயே எழுதி வருகின்றார். நான் ஆரம்பத்தில் புலம்பல் ஆரம்பிச்சுட்டுப் பின்னர் சூப்பர் சுப்ராவின் பின்னூட்டத்தினால் கொஞ்சம், கொஞ்சமாய் மாறிப் பின்னர் எழுத ஆரம்பித்தேன். ஆனால் வல்லி சிம்ஹன் அப்படி இல்லை. ஆரம்பத்திலேயே இது தான் நம் வழி என ஒரு தீர்மானம் இவரிடம். எழுதுவதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுகின்றார். இது எனக்கு உள்ள ஒரு பெரிய குறை. நிறையப் பேர் சொல்கின்றார்கள், ரொம்பப் பெரிய பதிவாய் இருக்குனு. அது என்னமோ நான் எழுதுவதைக் குறைச்சுக்கணும்னுதான் பார்க்கிறேன், ஆனால் எழுத ஆரம்பிச்சால், வேறே ஏதாவது தடங்கல் வந்தால் தான் நிறுத்த முடியுது. இது ஒரு பலவீனமாய் இருக்கின்றது. இப்போ வல்லியின் பதிவுகள் பற்றி ஒரு அலசல்:

http://naachiyaar.blogspot.com/2006_04_01_archive.html

இதோ இங்கே காணலாம் இவரின் ஆங்கிலப் பதிவுகளை. அடுத்து இவர் தமிழில் எழுத ஆரம்பிச்சதும், அநேகமாய் இவரும் சென்ற ஊர்கள், இருந்த ஊர்கள் என அதைப் பற்றியும் எழுதினாலும், இவர் தம் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒரு கதையில் வரும் சம்பவங்கள் போன்றவையாகும், அதிலும் இவர் தம் திருமணம் ஆனது பற்றிய ஒரு தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார் பாருங்கள், எனக்கு மிகப் பிடித்த ஒரு பதிவு அது. இதோ அந்தப் பதிவு! அவரின் திருமணத்துக்கு முன்பு அவர் தம் பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்வின் உண்மையான மலர்ந்த நினைவுகளின் தொகுப்பு இது: அவங்க அத்தையிடமிருந்து பாட்டிக்குக் கடிதம் வந்திருக்கிறது, பையனுக்குப் பெண் ஏதானும் இருக்கானு! பாட்டியின் வாயைப் பிடுங்கி விஷயம் அறிந்து கொண்டதோடு நில்லாமல், அந்தப் பையனின் தாய்க்கு, பாட்டி எழுதுவது போல் ஒரு கடிதமும் பாட்டியின் கண் எதிரிலேயே தயார் செய்து அனுப்புகின்றார் வல்லி அக்கா. தின்னத் தின்னத் தெகட்டாத அடிக்கரும்பின் ருசியோடு ஒப்பிடுமாறு, இந்தப் பதிவு படிக்கப் படிக்க சுவை குன்றாத ஒன்றாகும். அவங்களோட வார்த்தைகளிலேயே பார்ப்போமா?



//அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)

இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி
இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ
இருக்கிறாள்.
சிவப்பிலேயும் சிவப்பு .
உயரத்திலேயும் உயரம்.
கிளி போல அழகு.நீ ஜாதகத்தை அனுப்பு. நான்
நாராயணன் கிட்டப் பேசிக்கறேன்.
இப்படிக்கு,
ஆசீர்வாதங்களுடன்
சித்தி.
இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.
நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.
இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும் //


அடுத்த பகுதியில் இது:

//திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.
சாமி கடவுளே அந்தத் தபால் போகமலேயே இருக்கணுமே.
என்னவோ பிரார்த்தனை.
அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.//

அப்புறம் தான் வருது க்ளைமாக்ஸே! :))))))))))))))

//அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.
அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.
சட்டுனு கடிதம் ஞாபகம் வர இல்லைப்பா,என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,(அம்மாவுக்குக் கோபம் வந்தா ஒண்ணு முதுகுல ஒரு தட்டு,இல்லாட்ட ஒரு கடுமையான முறைப்பு.:) )
எனக்குப் பேச்சு வரவில்லை.
அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.
நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு
மனசு வரவில்லை.
ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்.
என்று பேச ஆரம்பிக்க.//

அதன் பின்னர் ஒருமாதிரியாகப் பெற்றோர் சம்மதத்துடன் பெண்பார்க்கும் படலம் இதோ: வல்லி அக்கா மனசு போலவே மாப்பிள்ளை வந்து விட்டாரே! :))))))))))மாப்பிள்ளை வந்துவிட்டார் பெண்ணைப் பார்க்க. அந்த மாப்பிள்ளை யார் எனத் தெரியும் வரை நம் வல்லி அக்கா பட்ட பாடு! :)))))))))
அவங்க சொல்றதையும் பார்ப்போமே!


//எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸ்ஸீஸ்டண்ட் மானேஜர்.
ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்
ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.
உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.
கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.
ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.//

பெண் பார்க்கவும் வந்தாச்சு, ஆனால் நம் அக்காவின் கண்ணில் மாப்பிள்ளை தவிர மத்தவங்க தான் தெரியறாங்க, கலங்கிப் போனா அக்காவின் துணைக்கு வரார், மாமா! :))))))))))

//என்
மாமா, அப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.
திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு
சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி
அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.
அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கு வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்
ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.
எங்களுக்கு சம்மதம்.
அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."
இல்லாட்டாப் பரவாயில்லை.
நான்தான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.
பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.//

எப்படி இருக்கு? அருமையா இல்லை? இது தவிர இன்னும் இம்மாதிரியான அனுபவக் கோவையான நிகழ்வுகளை அள்ளித் தருகின்றார் வல்லி அக்கா.

எவ்வளவு சுவையான அனுபவங்கள்? விளையாட்டுத் தனமாய்ச் செய்த ஒரு காரியத்தின் விளைவு கடைசியில் அனைவர் மனதிற்கும் பிடித்த மாதிரி ஆகி விட்டது அல்லவா? வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவும் மாறிவிட்டது. வல்லிக்கு இப்போது நினைக்கும்போது கூட ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு புதுமை அதில் தெரியலாம்!

http://naachiyaar.blogspot.com/2007/06/180.htm
http://naachiyaar.blogspot.com/2007/06/181.html
http://naachiyaar.blogspot.com/2007/06/182.html

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் உற்சாகத்தோடு எழுதும் இவரின் பழைய நினைவுகளும் சுவை சற்றும் குன்றாமல் இருக்கின்றது. இதோ இவரின் சமீபத்திய பதிவுகளின் ஒரு சுட்டி!

http://naachiyaar.blogspot.com/ அறுபதுக்கு அறுபது 1972.

அடுத்துச் சமீப காலத்தில் தமிழ் மண நட்சத்திரங்கள் ஆக இருந்த இருவரின் பதிவுகள் பற்றியது. முதலில் வருபவர் ப்ரியா வேங்கட கிருஷ்ணன். மிக மிக அருமையான தொகுப்பைக் கொடுத்திருந்தார் இவரின் தமிழ்க்கல்வி வலைப்பதிவில். சுட்டி இதோ:

http://tamilkkalvi.blogspot.com/ priya venkatakrishanan

ஆன்மீகத்துக்குத் தனிப்பதிவு வைத்திருக்கும் இவர் அதிலே புதிரா? புனிதமா? பாணியில் கேள்விகள் கேட்டுட்டு இருந்தார். இப்போக் கொஞ்ச நாளா எதையும் காணோம்.படிப்பில் மும்முரம்னு நினைக்கின்றேன். திருப்பாவை பற்றிய பதிவுகளும், இடம் பெற்றிருக்கும் இவரின் தமிழ்க்கல்வி பதிவுகளில் உண்மையிலேயே தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்தார், நட்சத்திர வாரத்தின் நிறைவுப் பகுதியான இதில் இவர் யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் சற்றும் பிசிறடிக்காமல் சொல்லிக் கொடுக்கின்றார். மிகச் சிறந்த ஆசிரியையாக வரக்கூடிய பொறுமையைப் பெற்றிருக்கின்றார் இவர் இந்தச் சிறிய வயதிலேயே! வாழ்த்துகள் ப்ரியா வேங்கடகிருஷ்ணன்! இது தவிர, இரு ஆங்கிலப் பதிவுகளும், குட்டிப்ரியாவில் தொடர்ந்து தமிழும் சொல்லிக் கொடுக்கின்றார்.
http://tamilkkalvi.blogspot.com/2008/01/blog-post_5036.html
http://aanmeegham.blogspot.com/

அடுத்த ஆசிரியர் நிஜமாவே அனைவராலும் ஆசிரியராய்ச் சொல்லப் படும் சுப்பையா சார். இவரின் நட்சத்திர வாரப் பதிவுகளும் குறிப்பிடத் தக்க வரவேற்பைப் பெற்றது. எல்லாவற்றையும் குறைவின்றித் தொட்டுச் சென்ற இவரின் அனுபவங்கள் பிரமிப்பையே தருகின்றது. அநேகமாய் அனைத்துத் தரப்பு நண்பர்களுக்கும் சமர்ப்பணம் பண்ணி இருந்த இவர் பதிவுகளில் எனக்குப் பிடிச்ச இரு பதிவுகள் வாரியார் பற்றி இவர் எழுதி இருந்தவை தான்.

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_28.html
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7034.html

வாரியார் சுவாமிகளின் வார்த்தைகளிலே இவர் சொல்வது:


//தம்பீ! இந்த ஊன உடம்பை முழுவதுங் காண்பதற்கு இரு நிலைக்
கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்
காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்,
இப்போதே வாங்கி வருகின்றேன், பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று, வேதகாமத்தில் விளைந்தவை.
ஞானமூர்த்தியைக் காண இரு நிலைக் கண்ணாடிகள் வேண்டும் என்றேன்
அல்லவா? ஒரு கண்ணாடி திருவருள். மற்றொன்று குருவருள். இந்தத்
திருவருள் குருவருள் என்ற இரு

கண்ணாடிகளின் துணையால் ஞானமே
வடிவாய் இறைவனைக் காண வேண்டும். அன்புள்ள தம்பீ! திருவருள்
எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும்.
கடும் வெயிலில் பஞ்சை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது.
சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழே வரும் ஒளியில்
பஞ்சை வைத்தால் அந்தக் கணமே வெந்து சாம்பலாகும். சூரியகாந்தக்
கண்ணாடி பரந்து விரிந்துள்ள வெயிலின்

ஆற்றலை ஒன்றுபடுத்திப் பஞ்சை
எரிக்கின்றது. அதுபோல் யாண்டும் விரிந்து பரந்துள்ள திருவருளை ஒன்று
படுத்தி மாணவனுடைய வினைகளாகிய பஞ்சைக் குருவருள் சாம்பலாக்கு
கின்றது. கதிரவனது வெயிலும்

சூரியகாந்தக் கண்ணாடியும்
தேவைப்படுவது போல் திருவருளும் குருவருளும் இறைவனைக் காண
இன்றியமையாதவை.இறை என்ற சொல் இறு என்று பகுதியடியாகப் பிறந்தது.
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது.
எங்கும் நிறைந்த பொருளைக் காணும் வழி வகைகளையறிவது தான்
அறிவுடைமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடைமையாகாது.

எதை எதனால் அறிவது?//


வாரியார் சுவாமிகள் சொன்னதாய் ஐயா அவர்கள் சொன்னதுக்கு மேலே நாம் என்ன சொல்ல முடியும் இல்லையா?
*************************************************************************************
"டாம்" ஆகிய அம்பி வந்து லிங்கைக் கொடுங்கனு கேட்டுட்டுப் போயிருக்கார். ஆனால் லிங்க் கொடுக்கும்போது சிலசமயம் ப்ளாகர் ஏத்துக்குது, அதுக்கு மனசு இருந்தால், பலசமயம் ஏத்துக்கறதில்லை, தவிர நேரமும் ஆகின்றது. குறிப்பிட்ட பதிவைத் தேடி, லிங்க் கொடுத்து, அது சரியா வருதானு பார்த்து! நீங்களே தேடிப் பிடிச்சுப் படிச்சுக்குங்க, இது தலைவியின் ஆனை! சீச்சீ ஆணை! அம்பி நோட் திஸ் பாயிண்ட்! சோம்பல் படாதீங்க! :P
மேலும் வாசிக்க...

மூன்று முக்கிய தோழிகளின் எழுத்துக்கள் பற்றிய என் கருத்து!

அதுக்காக மத்தவங்க தோழி இல்லைனு நினைக்கக் கூடாது. அனைவருமே தோழிகள் தான் என்றாலும் என் மனத்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி மட்டுமே இங்கே சொல்கின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதில் வேதாவை மட்டுமே நான் சந்தித்துள்ளேன், மற்ற இருவரையும் சந்தித்ததே இல்லை. துளசி பதிவுலகில் மிகவும் எனக்கு சீனியர் என்றாலும் மனதில் ஒத்த தோழியே! அவரின் பயணக்கட்டுரைகளே என்னையும் பதிவுலகுக்கு இழுத்தது என்பது ஓரளவு உண்மையே!(இந்த யானைக்குக் காப்பிரைட் வாங்கினது மட்டும் தான் கொஞ்சம் பிடிக்கலை, என்றாலும் உயிலை மாத்தறேனு சொல்லி இருக்காரே! :))))))) அடுத்து கவிதா! கிட்டத் தட்ட நானும், இவரும் ஒன்றாகவே ஆரம்பித்திருக்கின்றோம் எழுதுவதற்குனு நினைக்கின்றேன். என்றாலும் இவர் பெரும்பாலும் சமூகப் பிரச்னைகள், பெண்கள் பிரச்னைகள் என்றே தொட்டுக் கொண்டிருப்பார். அடுத்து வேதா, வயதில் இளையவர் என்றாலும் பதிவுலகில் எனக்கு மூத்தவர், என்பதோடு நாங்கள் பல்வேறு விஷயங்களையும் பரிமாறிக் கொள்வதுண்டு. வயது கடந்த ஒரு நட்பு எனக்கு வேதாவோடு. நான் எங்காவது சென்றாலும், உடல்நிலை சரியில்லை என்றாலும் என் வலைப்பக்கங்களைக் கவனித்துச் சில சமயம் பதிவுகளை நான் அனுப்ப, அவர் போட்டு, பின்னூட்டங்கள் வெளியிட்டு, எனக்காகப் படங்களை வெளியிட்டு என்று அம்பி சொல்வது போல் எனக்கு ஒரு பினாமியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவரால் வர முடியவில்லை என்பது எனக்குக் கொஞ்சம் இழப்பே! முக்கியமாய் ஒரு அந்தரங்கமான தோழி பரிமாற்றங்களுக்கு இல்லை என்பதே! பேசி எவ்வளவு நாளாச்சு? ம்ம்ம்ம்ம், என்றாலும் அவருக்குக் கல்யாணம் என்பது ஒரு சந்தோஷமான விஷயமே அல்லவா!

முதலில் நாம் பார்க்க இருப்பது கவிதா: இவர் இப்போது பதிவுலகின் கதவுகளை இறுக்க மூடிக் கொண்டு ஒரு இரும்புத் திரையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றார் என்றாலும் என்னால் தவிர்க்க முடியாதவர்.


எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா அது கவிதாவின் என் பார்வையில் தான். அதிலே அவங்க எழுதும் கருத்துக்களும், அவங்களோட தெளிவான, அதே சமயம் உறுதியான நிலைப்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. என்னோட கருத்துக்களும் அவங்க கருத்தோட ஒத்துப் போறதும் ஒரு காரணம் என்றாலும் சில சில விஷயங்களில் முரணும் உண்டு. என்றாலும் ஒருமித்த ஒத்த எண்ண அலை வரிசை இருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன், அதை நம் கைப்புள்ளயும் உணர்ந்ததோடு அல்லாமல் என்னிடம் சுட்டியும் காட்டி இருக்கின்றார். பெண் வேலைக்குச் செல்வதில் ஆகட்டும், கணவனை வேலைக்குச் செல்லும் பெண் நடத்தும் விதத்தில் ஆகட்டும் அவர் எழுதிய பதிவுகளின் கருத்துக்களே பெரும்பாலும் என்னுடைய கருத்துக்களாகவும் இருக்கும். மனைவியைக் கணவன் அடிமையிலும், அடிமையாக ஒரு புத்தகம் கூட வாங்கிப் படிக்க விடாமல் நடத்தும் ஒரு ஆணைப் பற்றிய அவர் பதிவிலும் அவர் பொங்கி எழுந்தது போல் எனக்குள்ளும் கோபம் கிளர்ந்தது. பெண் ஈமச் சடங்குகள் செய்வதைப் பற்றி அவர் எழுப்பிய சந்தேகங்களும், அதற்கு வந்த வித விதமான பதில்களுக்கு நடுவில், நான் கொடுத்த பதில்களை அவர் ஏற்றுக் கொண்ட விதமும் அவருடைய மன முதிர்ச்சியைக் காட்டியது. அதே சமயம் ஹெல்மெட் போடுவது பற்றிய அரசாணை வந்தபோது அதில் எனக்கும் உடன்பாடு இல்லை எனினும், அது குறித்த பதிவிற்கு அவர் கொடுத்த தலைப்பு அதிர வைத்தது. அதற்குப் பின்னர்? விழுந்தது ஒரு இரும்புத் திரை! அழைக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே தன் கருத்துக்களைக் கொடுத்து வருகின்றார் அவர். இது என் வரையிலும் ஒரு பேரிழப்புத் தான் என்றாலும் அவர் தரப்பிலும் ஒரு நியாயமும் இருக்கும். என்னால் மறக்க முடியாத, ஆனால் இது வரை சந்திக்காத ஒரு தோழி கவிதா!

அடுத்துப் பதிவுலக "மாதாமகி" என இ.கொ. அவர்களால் பட்டம் சூட்டப் பட்டிருக்கும் துளசி அவர்கள். ஒரு வகையில் இவர் பதிவுகள் பற்றிய குறிப்புக்களைத் தினமலர் பத்திரிகையில் பார்த்துவிட்டே நானும் எழுத வந்தேன் என்றால் மிகை இல்லை. இவர் எழுதிய பல பயணக்கட்டுரைகளையும், நியூசிலாந்து பற்றிய கட்டுரைகளையும் விட மிகவும் என்னைக் கவர்ந்தது "திருவேங்கடம் ஹரியானது இப்படித் தான்" கதை தான். வாழ்க்கையில் உறவுகளின் முக்கியத்துவத்தைக் கூறும் இந்தக் கதையில் திருவேங்கடம் ஹரியானதோடு நிற்கவில்லை, மீண்டும் திருவேங்கடமாகவும் ஆகிவிட்டானே? :((( ஒரு பெண் இல்லை எனில் அவள் குழந்தைகள் வாழ்க்கை எவ்வாறு கேட்பாரின்றிப் போய்விடும் என்பதற்கும், உறவுகள் இருந்தும் கவனிக்காததால் திருவேங்கடம் பஞ்சாபிலேயே வளர்ப்புப் பெற்றோரிடமே வளர்ந்தாலும், தன் குடும்பமும் நினைவில் மோதத் திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கைகளை அழைத்துச் செல்கின்றான். வளர்ப்புப் பெற்றோரிடம் உள்ள நம்பிக்கைதான் இதற்கு முழுக்காரணம் என்றாலும் சென்றவர்களில் அனைவருமா சுகம் அனுபவித்தனர்? இல்லையே? அவன் தங்கை பிஜயா, தனக்குக் கிடைத்த நல்வாழ்வைப் பாழடித்துக் கொண்டதோடு அல்லாமல் அவள் குழந்தைகளையும் தவிக்க விடுகின்றாள். நல்லவேளையாகக் கஸ்தூரி போல ஒரு தங்கை கிடைத்ததால் குழந்தைகள் பாடு பரவாயில்லை. கிடைத்த உறவைக் கைப்பற்றிக் கொண்ட கஸ்தூரி போல் திருவேங்கடத்தின் மனைவியால் இருக்க முடியவில்லை. அவளுக்கு அங்கே பொருந்தவே இல்லை. ஒருவேளை அவனும் பஞ்சாபிலேயே பெண் பார்த்துக் கொண்டிருக்கலாமோ என்ற நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மனைவியின் நச்சரிப்பால் தமிழகம் திரும்பும் திருவேங்கடம் மூட்டை தூக்கிப் பிழைக்க வேண்டி உள்ளது. மனைவிக்கு உறவுகள் திரும்பக் கிடைக்கின்றது ஒன்றே லாபம். பல கோணங்களிலும் அலச வேண்டும் இந்தக் கதையை என்றாலும் நேரமின்மையாலும் பெரிதாய்ப் போய்விடும் என்பதாலும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இதோ இங்கே பாருங்கள் துளசியின் கதையை


அடுத்து இனிய தோழி வேதாவின் மனம் உண்மை முகம். உண்மைதான். நம் மனமே நம் உண்மை முகமாகின்றது. வேதாவின் கவிதைகளும் அவர் மனதின் அப்போதைய தன்மையைப் பிரதிபலிக்கின்றதோ? பெரும்பாலும் சோகமாகவே கவிதைகள் எழுதுகின்றார். சில பொது நண்பர்கள் என்னிடம் ஏன் இப்படி என்றும் கேட்டிருக்கின்றார்கள். கவிதைக்கு சோகம் ஒரு அழகு என்பதாலோ என்னமோ தெரியலை! தன் சோகத்தை(?) இவ்வாறு வர்ணிக்கின்றாரோ என்று அனைவரும் எண்ணும் வண்ணமே சொல்லி இருக்கின்றார் இந்தக் கவிதையில்! கவிதையின் தலைப்பு "புரிதல் என்பது!

குத்திக் கிழித்தன
உன் வார்த்தைகள்,
என் இதயத்தில்
இறங்கிய கத்தியாய்.

புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...


இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..

இதே வேதா தன் மன மகிழ்வையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றார் பாருங்கள் "இனி வண்ணங்கள் மட்டுமே!"என்ற தன் கவிதையில்.


மரித்துப் போன நினைவுகள் படிந்த
இலையுதிர் காலத்துச் சருகுகள்
இடறிக்கொண்டே இருந்தன என் காலடியில்..

வசந்தம் வந்த நேரத்தில்
துளிர்த்தன புதிய இலைகள்..

கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..

பச்சையும் பழுப்பும்
சண்டையிட்டு கொண்டாலென?

காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...

மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..

நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன (,
வாழ்வின் ரகசியத்தை..

(இந்த இடத்தில் எத்தனை நளினமாயும், அதே சமயம் மென்மையை உணரும்படியாகவும், ரகசியம் புகையாய் வந்து மோதுகின்றது? உணர முடிகின்றதல்லவா? அவர் சுமக்கும், அல்லது சுமக்கப் போகும் வண்ணம் அவரின் கவிதையில் மட்டுமில்லாமல், அவர் நெஞ்சத்திலும், நம் அனைவரின் நெஞ்சிலும், வாரித் தெளிப்பதையும் உணருகின்றோம்.)

வானவில்லின் வண்ணம் சுமந்து
வசந்தத்தின் பாதையில் அடிவைத்தேன்
இனி வண்ணங்கள் மட்டுமே...

Posted by வேதா at 9:20 AM

ஒரு கவிதை அனைவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இவர் கவிதைகள் சொல்கின்றன. எழுத்திலும் இவர் மிகத் திறமை வாய்ந்தவரே! சமூகப் பிரச்னை ஆனாலும் சரி, மற்ற மொக்கைகள் ஆனாலும் சரி இவரின் எழுத்துத் திறன் மெச்சும் தகுதி வாய்ந்ததே! இவரும் பல பயணக் கட்டுரைகள் எழுதி உள்ளார். நட்புகளின் மேன்மை பற்றிய தெளிவான ஒரு எண்ணமும் இவரிடம் உள்ளது. இவரின் தோழமை மூலம் நாங்கள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. தற்சமயம் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருப்பதால் சற்றே மெளனம். திருமணம் முடிந்து பின்னர் வரும் நாளுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன். திருமணம் நிச்சயிக்கப் பட்டபின்னர் உள்ள நிலையை மறைமுகமாய்ச் சொல்லும் மொழி (மெளனம்) இதுவோ? இதோ இந்தக் கவிதை என்ன சொல்கின்றது? அப்பட்டமாய் அவர் நிலையைச் சொல்லுகின்றது அல்லவா? மெளன மொழி என்னும் இக்கவிதையைப் பாருங்கள்: ஒரு கல்யாணப் பெண்ணின் இயல்பான நாணமும், மகிழ்ச்சியும், அதனால் வரும் நிம்மதியும், மன நிறைவும் நம் மனதிலும் இழை ஓடுகின்றது அல்லவா? அதிலும் அந்த மணமகன் பேசிவிட்டால்? அப்பா! இப்போதைய பெண்களின் இந்த எதிர்பார்ப்பு அநேகமாய்ப் பொய்யாவதே இல்லை, என்றாலும் வேதா ரொம்பவே பக்குவமான ஒரு பெண். ஆகையாலேயே மெளனத்தையும் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது அவரால்.
மெளன மொழி என்ற அவரின் சமீபத்திய கவிதையில்:



//வார்த்தைகள் மட்டுமே நேசம் தரும் என நினைத்திருந்தேன்
அருவியாய் கொட்டும் வார்த்தைகளுக்கிடையே
அங்கங்கே தேங்கி நிற்கும்
உன் சில மெளனங்கள் அறியும் வரை...

மெல்ல மெல்ல உடையும் நம்மிடையேயான
மெளன நொடிகளுக்குள் புகுந்து புறப்படுகின்றன
சில நேச சொற்கள்
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
அறிமுகப்படுத்த...

பிரம்மபிரயத்தனத்தோடு அலையும்
அச்சொற்கள் பாவம் அறிந்திருக்கவில்லை,
கண்களின் மொழியை விடவும்
இதயத்தின் மொழியை விடவும்
சக்தி வாய்ந்தது
நம் மெளன மொழி என்று...//


உண்மை மெளனமே ஒரு கவிதைதான் என்றாலும், என்னால் தவிர்க்க முடியாத ஒரு நினைப்பு, அட, அங்கேயுமா, இப்போ, இந்தக் காலத்திலுமா, இன்னுமா என்பதே! :))))))))))))))))))
மேலும் வாசிக்க...

சுய அறிமுகம் - கீதா சாம்பசிவம்

அறிமுகம் செய்து சொல்லிக்கும்படியா சாதனைகள் ஒன்றும் செய்யவில்லை, இனியாவது செய்யணும். என்றாலும் இந்த அளவுக்குச் சிலருக்காவது என்னைத் தெரிந்திருக்கின்றது என்றால் நண்பர்களே காரணம். அத்தகைய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கின்றேன். இந்த வாரத்தில் எனக்குப் பிடிச்ச பதிவுகளின் சுட்டிகளைச் சுட்டுவதோடு மட்டுமில்லாமல், அதில் சிலவற்றில் இருந்து எனக்குப் பிடித்த பகுதிகளையும் கொடுக்கப் போகின்றேன்.


பதிவுகள் எழுத ஆரம்பிச்சபோது கூட இவ்வளவு கவனமா இல்லை. இப்போ இன்னும் அதிகக் கவனம் எடுத்துக்க வேண்டி இருக்கு. சொல்லும் ஒவ்வொரு சொல்லும், எழுதும் ஒவ்வொரு எழுத்தும், யோசிச்சு, யாரையும் எந்தவிதத்திலும் காயப் படுத்தாம இருக்கணுமேன்னு நினைக்க வேண்டி இருக்கு. இந்த "வலைச்சரம்" தொடுக்க ஏற்கெனவே அழைப்பு வேறு ஒருவர் மூலம் வந்தது. என்றாலும் மறுத்து வந்தேன். இப்போ முத்துலட்சுமியிடம் அவ்வாறு சொல்ல முடியவில்லை.


எப்படியோ தப்பிச்சுட்டு இருந்தேன், இப்போ முத்துலட்சுமி நல்லா மாட்டி விட்டுட்டாங்க, நம்மாலே ஆகாத வேலைனு சொல்லிப் பார்த்தும் விடலை! ஒரு வேளை அபி அப்பாவின் சதியாக இருக்குமோனு சிபி ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்தப்போ சொல்லிட்டுப் போனார். அப்படித் தான் இருக்கும்னு நானும் நினைச்சேன். அது சரி என்னோட பதிவுகளை அறிமுகப் படுத்திக்கணுமாமே? இந்தப் பதிவுலகுக்கே அறிமுகம் நான் "மொக்கை ஸ்பெஷலிஸ்ட்"னு இதிலே அறிமுகம் வேறே தேவையா என்ன? அதான் சிஷ்யகேடிங்க எல்லாம் வரிசையா வந்து அறிமுகம், அரியா முகம்னு எல்லாம் சொல்லிட்டுப் போயாச்சே?


என்னோட பதிவுகளிலே முக்கியமானதுனு எதைச் சொல்றது? அதான் ஒரே குழப்பம்! நல்ல பதிவுகள்னு எண்ணினாப்பலே தானே இருக்கு! ம்ம்ம்ம்ம் எதைச் சொல்லலாம்? இருங்க வரேன், இந்த பாரதி பத்தின பதிவுகளைச் சொல்லலாமா? ம்ம்ம்ம் ஓகே! அதை எடுத்துக்கலாமே!


http://sivamgss.blogspot.com/2007/02/221.html


http://sivamgss.blogspot.com/2007/03/222.html


http://sivamgss.blogspot.com/2007/02/218.html


பாரதி பற்றிய என் நினைவுகள் பள்ளி நாட்களிலேயே ஆரம்பிக்கின்றன. பாரதியின் பாடல்களை அறிமுகம் செய்து வைத்த என் ஆசிரியர் திரு ஈஸ்வர வாத்தியார், மிகவும் உணர்ச்சிகரமாய், வீரத்துடனும், கம்பீரத்துடனும், கணீர் என்ற குரலிலும் பாரதியின் பாடல்களைச் சொல்லித் தருவார். 5-ம் வகுப்பு வரையிலும் அநேகமாய்ப் பாரதியின் பாடல்களை நிறையவே சொல்லித் தந்திருக்கின்றார். பாரதி கண்ட கனவுகள் இன்னும் எதுவும் நனவாகவே இல்லை, முக்கியமாய்ப் பெண் விடுதலை. பாரதி கண்ட பெண் விடுதலையா இப்போது இருக்கின்றது? இதோ சமீபத்தில் நான் மகளிர் தினத்தில் எழுதிய கட்டுரை ஒன்று அது பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே பேசும். இதோ அதன் சுட்டி!:


http://sivamgss.blogspot.com/2008/03/blog-post_9940.html



மற்றபடிக்குச் சொல்லிக்கிறாப்போல் எதுவும் எழுதவில்லை என்பதே நிஜம். சிலசமயம் வந்துட்டு ஏதோ போஸ்ட் போடணும்னு எழுதிட்டுப் போகிறதும் உண்டு இல்லையா? அம்மாதிரியான பதிவுகளே அதிகம், அப்புறம் சில பதிவுகள் பாதியிலேயே நிற்கும். அது பற்றிப் பலரும் கேட்டிருக்கின்றார்கள். சில பதிவுகள் பல்வேறு காரணங்களால் தொடரவேண்டாம் என முடிவு செய்து தொடரவில்லை, சில பதிவுகள் வேறு குழுக்களிலும் தொடர்கின்றன. அமெரிக்கா பற்றிய பதிவு அப்படித் தான். வேறு குழுவில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது போல் பிரயாணங்கள் பற்றிய பதிவுகள் அலுப்பைத் தருவதாய்ச் சிலர் சொன்னதால் அனுபவம் புதுமையை நிறுத்தி விட்டேன். என்றாலும் மீனாட்சி கோயில் சென்ற அனுபவமும், பழநி சென்ற அனுபவமும் மட்டும் சொல்லி விட்டேன். பொதுவாகவே மனித மனம் மாறுதலை எதிர்பார்க்கும். மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே பதிவுகளும் அமையவேண்டும் என்பதால் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கின்றது. பெண் விடுதலை, பெண்ணிற்கு நடக்கும் அநியாயங்கள் என்று நிறையவே எழுதலாம் தான். ஆனால் ஒரு பக்கம் இவ்வாறு பேசிக் கொண்டு இன்னொரு பக்கம் பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் சரியாக இல்லாததால் பேசிப் பயன் இல்லை என்றே தோன்றுகின்றது.

உண்மையான பெண் விடுதலை என்பது என்ன என்று யாருமே புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றால், உரிமையைக் கேட்டுப் பெறுவது இல்லை. உரிமை நமக்கும் உண்டு. பெண்ணுக்கு 33% ஒதுக்கீடு என்று போராடுவது தான் பெண்ணின் உரிமை என்றால் அது தவறு. அதுக்கும் மேலே நமக்கு உண்டு என்று உணரவேண்டும். பெண்ணின் உடல் அழகைக் காட்டும் விளம்பரங்களில் நடிக்க முடியாது என்று சொல்லவேண்டும். இது கொஞ்சம் நடக்கக் கூடியதா என்று யோசிக்க வேண்டியது. ஆனாலும் ஒரு பக்கம் பெண்கள் அதுவும் சினிமா நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்து வருவதைக் கேலி பேசும் நாம், இன்னோரு பக்கம் பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டி ஒரு பொருளை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? பெண் உடை அணிவது கண்ணியமாகவும், இருக்கவேண்டும் அல்லவா? திரைப்பட நடிகையாக இருந்தாலும் பொது இடங்களில் கண்ணியக் குறைவாக உடை அணிந்து வருவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

வெளிநாடுகளில் உடை அணிவதற்கெனச் சில வரைமுறைகள் இருப்பதாயும் அதை இங்கேயும் கொண்டு வரலாமே எனவும் சிலர் சொல்கின்றனர். நம் நாட்டில் இல்லையா என்ன? கோயிலுக்குச் செல்வதென்றால் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்து போவதை விரும்புவோமா என்ன? ஆனால் காலப் போக்கில் இவையும் மாறியே வருகின்றது. இன்று பெரும்பாலான தமிழ்நாட்டுக் கோயில்களில் அனுமதிக்கின்றார்கள். ஆனால் கேரளம், கர்நாடகாவில் அனுமதிப்பது இல்லை. உடை அணிவது அவர்கள் சுதந்திரம் என்றொரு பேச்சும் இருக்கின்றது. எலிசபத் ராணியாகவே இருந்தாலும் கவர்ச்சியாக உடை அணிந்தால் கெளரவக் குறைவு என்றொரு எண்ணம் அனைவருக்குமே உண்டு. சுதந்திரத்தை இதிலே காட்டவேண்டுமா என்ன? "பெப்சி" புகழ் இந்திரா நூயி தன் உடை புடவை என்பதில் பெருமிதம் தான் கொண்டிருக்கின்றார். உலகப் புகழ் கிடைத்தும் அவர் ஒன்றும் மாறவில்லை. புடவை தான் அணிகின்றார் அலுவலகத்துக்குக் கூட. படிப்பிலும், புரிந்துணர்விலும் வரவேண்டிய மாற்றத்தை உடையில் மட்டுமே கொண்டு வந்துவிட்டோமோ? சரி, சரி, போரடிக்குதுனு சொல்றீங்க இல்லையா இன்னிக்கு இதை நிறுத்திக்கிறேன். நாளை பார்க்கலாம்.

கீதா சாம்பசிவம்

-----------------------

மேலும் வாசிக்க...

சென்றவரும் வந்தவரும்

அருமை நண்பர் ரசிகன் என்ற ஸ்ரீதர் அழகாக, ஏழு பதிவுகள் இட்டு வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிகத் திறமையாக கையாண்டிருக்கிறார். சுய அறிமுகம், மண வாழ்த்து, கவிதைச் சரம் மூலமாக கவிஞர்கள் அறிமுகம், சிறுமிகள் பற்றிய பதிவு, அறிவுத் தேடல் மற்றும் வழக்கமான முறையில் சரவெடி, கத்தாரின் இனிய நண்பர்கள் எனச் சிறந்த முறையில் பதிவுகள் தந்தது பாராட்டத்தக்கது. அவருக்கு வலைச்சர குழுவினரின் சார்ர்பில் பொறுப்பாசிரியர் என்ற முறையில் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்து இந்த வார ஆசிரியராக திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை தேர்ந்தேடுத்ததில் வலைச்சர குழுவினர் பெருமை அடைகிறோம். 2005 ஆம் ஆண்டிலேயே பிளாக்கர் கணக்கினைத் தொடங்கி, எண்ணங்கள் என்ற இவரது வலைப்பூவினிலே எழுதி வருகிறார். இவர் இமாலய பரிக்கிரமா செய்தவர். தனது இமாலயப் பயணத்தை (சாதனை!!) ஆன்மிகப் பயணம் என்ற தனது வலைப்பூவினில் எழுதி பின்னர் அதிலேயே சிதம்பர ரகசியம் தொடரும் எழுதி வருகிறார். சிதம்பரம் பற்றிய இன்றைய சர்ச்சைகளை நன்றாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். இப்போது கதை கதையாம் காரணமாம் என்று தொடராக இராமாயணம் எழுதிவருகிறார்.இவரது பின்னூட்டங்களிலும் டாம்-ஜெர்ரி கலந்துரையாடல் விளையாட்டு மிகவும் ரசிக்கும்படி இருக்கும். இவரது அமெரிக்க அனுபவங்கள் மிகுந்த நகைச்சுவை தரக்கூடியது. மழலைகள்.காம், நம்பிக்கை குழுமம், மற்றும் முத்தமிழ் குழுமங்களில் தொடர்ந்து எழுதுகிறார்.

ஆச்சார்ய ஹிருதயம், மதுரை மாநகரம் போன்ற குழுப்பதிவுகளிலும் அழகு தமிழில் அருமையாக எழுதி வரும் இவர் இந்த வார வலைச்சரத்தை தொடுக்க வருகிறார்.

வருக வருக என வரவேற்று, வலைச்சர ஆசிரியர் குழுவின் சார்பாக, பொறுப்பாசிரியர் என்ற முறையில் இப்பதிவினை இடுகிறேன்.

நல்வாழ்த்துகள்
-------------------
மேலும் வாசிக்க...

கத்தார் கதாநாயகர்கள்

விடைப்பெறுகிறேன்.(யாரு கேள்வி கேட்டது? விடை பெறுவதுக்குன்னு எடக்கு முடக்கால்லாம் கேக்கப்டாது:P))



எல்லா வலைப்பதிவுகளையும் சொல்லிட்டு நம்ம ஊர்க்காரங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியுமா?


எனது சக கத்தார் வாழ் கதாநாயகர்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்:)


இதோ கத்தார் கதாநாயகர்கள்
என்னைப் பற்றி ( உன்னிய பத்திதான் மொத பதிவுலயே சுயப் புராணம் பாடியாச்சேன்னு கேக்கறது புரியுது.எதுக்கு அவசரப் படறிங்க?) சொல்லறதுக்கு இன்னும் என்ன இருக்கு?.. அதனால நேரடியா நம்ம நண்பர்களைப் பத்தி சொல்லறேன்னு சொல்ல வந்தேன்:P

நம்ம கானகம் மாம்ஸ், பழகுவதற்க்கு இனிமையானவர்.பயணக்கட்டுரைகளை இவரைத்தான் எழுத சொல்லனும்.
அம்புட்டு அருமையா ஒன்னுவிடாம ஆர்வமூட்டும் வகையில் எழுதுவார்.கத்தாரைப் பற்றி யாராவது கேட்டால்,இவரின் இவர் எழுதிய இந்த இடுகையை அப்படியே அனுப்பிடலாம்

கத்தார் ஒரு அறிமுகம்


நான் ஏற்கனவே படித்திருந்து ஒரு ஃபார்வேர்ட் மெயிலுக்கு இவர் கத்தாரை கம்பேர் செய்து எழுதிய கமெண்ட்ஸ் ரொம்பவே ரசித்தேன். இவையே போதும் எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சுக்க:)

அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.


நம்ம நவின பாரதிய இளவரசர்.அப்பப்பா.. எவ்ளோ கலைரசனை உடையவர்.,திரைப்படம் ,புத்தகம்,தமிழ் ,மலையாளம்,விழாக்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.தான் ரசித்தவற்றை அவ்வளவு அருமையா பதிபு செய்கிறார். இவருடைய பதிவுல ஒரு சிறப்பம்சம் என்னன்னா?. தான் சொல்லும் விஷயத்தைப் பற்றிய முழு சுட்டிகளையும் இணைத்து பதிவை முழுமைப் படுத்தியிருப்பார்.

திருவனந்தபுரம் பத்மநாத ஸ்வாமி கோவில்

IT நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார்.


நம்ம ஆயில்யன் மாம்ஸ்,இவரப் பற்றி சொல்லனும்ன்னா , தினமும் ஒரு பதிவு போட்டுட்டுதான் தூங்கவே போவாரு. மங்கையர் தினம்,குழந்தைகள் தினம்,தந்தையர் தினம்,விழிப்புணர்வு தினம் என தினமும் இன்றைக்கு என்ன தினமாய் உலகலவில் கொண்டாடறாங்கன்னு இவர் பதிவில் பார்த்து தான் தெரிந்துக்கொள்கிறோம்ன்னா பாத்துக்கோங்களேன். அது மட்டுமின்றி, ஊரில் இருந்த போது நடந்த மலரும் நினைவுகள்.இவர் படித்தவற்றில் இவரைக் கவர்ந்த செய்திகளைப்பற்றிய இவர் பார்வை என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.


PIT போட்டியில் இவருக்கு நேரம் கொடுக்காமல் சீக்கிரம் மூடிட்டாங்கன்னு அதுக்கு எதிரா இவர் பண்ணிய குறும்பு பாருங்களேன்:P

நிதி நிர்வாகவியல்

அரசியல்



மக்கள்ஸ், எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமா வலைசரத்துல நமக்கு பிடித்த சுட்டிகளை பகிர்ந்துக்க கிடைச்ச வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்க இயலாமல் போனாலும், பிடித்த சில பதிவுச் சுட்டிகளை அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய வாய்ப்பையும் ,ஆலோசனைகளையும் எனக்கு வழங்கிய முத்துலஷ்மி அக்காவுக்கும் ,வலைச்சர பொறுப்பாசிரியராய் வழி நடத்திய சீனா ஐயாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்:)


இந்தப் பதிவில்,தனி மடலில்,சாட் குறுஞ்செய்தியில்,அலைபேசி உரையாடல்களுக்கிடையில் வாழ்த்தும்,பாராட்டும் சொன்ன அத்துணை நெஞ்சங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

நன்றி......................நன்றி......................... நன்றி :)

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்

















மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது