07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 29, 2008

கவிதைச்சரம்!

கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..
கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?






கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது ஆயிரம் மலர்களின் தோட்டம்.

கவிதை என்பது எந்த சந்தர்ப்பங்களிலும் முட்டிக்கொண்டு வந்துவிடுமா? சுனாமி வந்தபோது கவிதை வந்தது.கும்பகோண ம் தீவிபத்து நடந்தபோது கவிதை வ ந்தது. பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டபோது கவிதை வ ந்தது. இந்தக்கவிதைகள் எழுதும் கவிஞர்களை நாம் மதிக்கிறோம் ஆனால் இதுபோல இன்னொருகவிதை எழுத வாய்ப்பு நேராதிருந்தால் தேவலை என்று மனம் எண்ணுகிறது.

நம்மில் அவ்வபோது உக்கிரம் கொள்ளும் உணர்ச்சிகளையே கவிதையாக்குகிறோம் நம் உதடுகளுக்கு புன்னகைபுரியவும் தெரியும் நம் விழிகளுக்கு கனல் உமிழவும் தெரியும்.

கவிதை இதயம் சம்பந்தப்பட்ட்து. விமர்சனங்கள் ,அதனை மூளையைக்கொண்டு அணுகும்போது அபத்தமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கவிதை பலவித ருசிகளைகொண்டது சிலர் குறளில்காமத்துப்பாலை அகற்றி விட்டு மற்றதை பைண்ட் செய்துவைத்திருப்பார்கள் உண்மையில் காமத்துப் பாலில்தான் கவிதை இருக்கிறது,மற்றதில் உரைநடை இருக்கிறது!

முகத்தைதான் படமெடுக்கலாம் முகமூடியை படமெடுத்து என்னபயன்?
கவிதையில் நாம் நாமாக இருக்கவேண்டும்

நம் ஒவ்வொருவரிடமும் ஒருகவிஞன் இருக்கிறான். பலரின் கவிதைகள் மௌனமாக உறைந்திருக்கின்றன சிலர்மட்டுமே அவற்றை வார்த்தையால் மொழிபெயர்க்கிறார்கள். கவிதை பார்வையிலேயே இருக்கிறது.

இந்தவகையில் நான் ரசித்த கவிதைத்தளங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுதத் விரும்புகிறேன்.

வளர்ந்துவரும் இளம்கவிஞர் ரிஷான் ஷெரீபின் கவிதைத்தளத்தில்
! பல கவிதைகள் மிகவும் எதார்த்தமானவை..’மரணம்துரத்தும் தேசத்துக்குரியவனாக ‘ ‘நடுநிசியில் எனது தேசம்’ போன்ற கவிதைகளின் சோக்ம் நெஞ்சை உலுக்குகிறது. காதல்கவிதைகளிலும் எதார்த்தம் மெனமை மிளிர்கிறது.

மைத்துளிகள் என்று வலைத்தளத்தில் தோழி சுவாதி எழுதிய காதல்பறிய கவிதை அதன் இயல்பை அப்படியே சொல்கிறது சுவாதியின் பலகவிதைகள் அவர் வலையில் சிறப்பாக் உள்ளன. அவை உண்மைத்துளிகள்!

இங்கு நிலவுநண்பன் எனும் ரசிகவ் ஞானியரின் தூக்கம் விற்ற காசுகள் இது பலமுறை பலரால்பாராட்டு பெற்றதுதான்,,,இன்னும் பலகவிதைகள் சிறப்பாக உள்ளன.
அவைகால்தடங்கள் மட்டுமன்று எனும் ப்ரியனின் கவிதையைக்காண வாருங்கள் இந்தவலைத்தளத்தில் அவரது பலகவிதைகள் எல்லாரையும் கவர்ந்துவிடும்.

என் அன்புத்தம்பி நிலாரசிகன்! செல்லமாய் இவரை ஜூனியர்வைரமுத்து என்போம் குழுவில் நாங்கள். இரு கவிதை நூல்கள் அளித்திருக்கும் இவரது வலைமனையில் ஏராளக்கவிதைகள் கதவிடுக்கில் சிக்கியவிரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதல் என்பது போன்ற காதல்கவிதைகள் தொடங்கி சமுதாய சிந்தனை கொண்ட கவிதைகள் வரை நிலாதன் வலையில் உலா போவதை கவனியுங்கள் அவைகள் உங்கள் பார்வைக்குக்கிடைக்க இதோ..
.



கென் பெயர்தான் சின்னது .மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது இவருக்கு!
இவருடைய தற்கொலைக்கானகாரணங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ப்ரேம்குமார் வலையில் தேடும்போதே கிடைத்த தேடல்கவிதை சின்னது ஆனா சிறப்பானது இவருடைய மற்றகவிதைகளும் அப்படியே படித்துப்பாருங்கள்.

காதல்கவிஞர் அருட்பெருங்கோவாஇ இங்க விடலாமா? காதல்மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் மனிதர் அசத்துகிறார். பாருங்க அவைகளை இங்க…

கவிநயாவின் கனியான கவிநயமிக்க கவிதைகளை காணவும் அங்கே அருவியின் சப்தம் கேட்கும்.அபிராமி அன்னையின் அருள்விழி திறந்திருக்கும். வசந்தம் வீசும் இன்னும் இன்னும்!! எனக்குப்பிடித்த இளம் கவிதாயினிகளில் கவிநயாவும் ஒருவர்.

தணீகையின் அருமையான பலகவிதைகள் இங்கே ..புரியமுற்படுகையில் எனும் இவரது கவிதை சிந்திக்கவைக்கும் வெற்றுக்காகிதம் என்று சொல்லிக்கொண்டு பல வெற்றிக்கவிதைகள் படைக்கிறார்.

சிறுவனின் வலைத்தளமாம் கம்ல்ராஜன் இங்கே பெரியபெரிய அற்புத விஷய்ங்களை கவிதையாய் தருகிறார்.

தஞ்சைமீரானின் ‘தடை ‘கவிதை அவரது இந்த பிடிக்கும்

சூர்யாவின் கவிதைகளை அவரது சூர்யபார்வையில் காணலாம்….உணர்சிபூர்வமான எதார்த்த கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.

அங்கே தீட்டு கவிதை பிடிக்கும் எனக்கு

இங்க மங்களூர் சிவா கவிதைகள் அருமை . ஆனா ஒரு படம் போடறார்பாருங்க பெண்களுக்கு வருமே வெட்கம் வெட்கம்! சைன்னு சொல்வேன் ஷை!!!

அண்ணா கண்ணன் சிஃபி ஆசிரியர் மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய பொய்க்காரியின் ரசிகை நான்!

இங்கேஎன் அன்புத்தோழி மதுமிதாவின் கவிதைகளை காற்றுவெளியிடையே காணுங்கள் அதில் அன்பின் நிறம் எனக்கு மிகப்பிடிக்கும்.

<.

லக்ஷ்மண் ராஜா சகாராதென்றல் என்று இன்னும் பலரின் கவிதைகள் கொண்ட தளங்களை இன்னொரு பதிவில் காண்போம்.

கவிதைச்சரம் இப்போது கட்டிவிட்டேன். மணக்கிறதா?!

39 comments:

  1. /
    "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.
    /
    மங்களூர் சிவா கவிதை சூப்பர்.

    ReplyDelete
  2. நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்

    ReplyDelete
  3. சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்.

    ReplyDelete
  4. மங்களூர் சிவா அண்ணாச்சி,
    //"என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" //

    இதை நான் ஷைலஜா அக்காக்கிட்ட சொல்லியே ஆகணும்.நீங்க சொல்லவிடாமல் பண்ணிட்டீங்களே.. :(

    என்னுடைய கவிதைகளையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டதற்கு மகிழ்வுகளுடனான நன்றிகள் ஷைலஜா அக்கா :)

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...
    மீ தெ பர்ஸ்ட்டு??
    பெஸ்ட்டும்தான் வாங்கதம்பி!

    April 29, 2008 9:35:00 AM IST


    மங்களூர் சிவா said...
    /
    "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.
    /
    மங்களூர் சிவா கவிதை சூப்பர்.//

    கவிதை சூப்பர் ஆனா கவிதைகளில் படம்தான்.....:):) நான் ஒண்ணூம் சொல்லலப்பா:)

    April 29, 2008 9:36:00 AM IST

    ReplyDelete
  6. மங்களூர் சிவா said...
    நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்
    /// ஆமா அவருவந்தா அட் எ டைம் பத்து பின்னூட்டம் போடறாரு வாங்க நி.ந!

    ReplyDelete
  7. மங்களூர் சிவா said...
    சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்./

    பொறுமையை சோதிக்கலயே?:)

    ReplyDelete
  8. எம்.ரிஷான் ஷெரீப் said...


    என்னுடைய கவிதைகளையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டதற்கு மகிழ்வுகளுடனான நன்றிகள் ஷைலஜா அக்கா ///

    நல்ல கவிதைகள் மேன்மேலும் அளிக்க ஆசி வழங்குகிறோம் தம்பி!

    ReplyDelete
  9. அன்பின் சைலஜா,

    அருமையான பணி. அழகாகச் செய்திருக்கிறீர்கள்.

    அன்பான வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  10. படித்த, பிடித்த பக்கங்களேயானாலும், பலகவிதைகள் உங்களால் மறுபார்வையில்.

    நன்றிங்க ஷைலஜாக்கா!

    ReplyDelete
  11. சக்தி சக்திதாசன் said...
    அன்பின் சைலஜா,

    அருமையான பணி. அழகாகச் செய்திருக்கிறீர்கள்.

    அன்பான வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி//


    நன்றி சக்திதாசன்...தெரிந்தவரை செய்தேன் கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. இப்னு ஹம்துன் said...
    படித்த, பிடித்த பக்கங்களேயானாலும், பலகவிதைகள் உங்களால் மறுபார்வையில்.

    நன்றிங்க ஷைலஜாக்கா//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இப்னு....

    ReplyDelete
  13. ஷைலஜா அக்காவின் குரல் கேட்டு ஓடோடி வந்திருக்கிறேன். இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கிறேன்.

    ReplyDelete
  14. //மங்களூர் சிவா said...
    மீ தெ பர்ஸ்ட்டு///



    அடப்பாவி நீதான் இங்கயும் பர்ஸ்ட்டா?

    ReplyDelete
  15. அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை எல்லாம் தொகுத்து கொடுத்திருக்காங்க. ஷைலு அக்கா நல்லாத்தானே இருந்தீங்க நேத்து:)))))))))))

    ReplyDelete
  16. ///மங்களூர் சிவா said...
    நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்///



    ரொம்ப கூவாத. அதான் வந்துட்டோம்ல!

    ReplyDelete
  17. ///மங்களூர் சிவா said...
    மங்களூர் சிவா கவிதை சூப்பர்.///



    இது கொஞ்சம் இல்ல நிறையவே ஓவரு சிவா!!!

    ReplyDelete
  18. ///மங்களூர் சிவா said...
    சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்.///



    இப்படி சொல்லிட்டு நீ எஸ் ஆகி ஜி டாக் ஒப்பன் பண்ணிடுவ. எங்களுக்கு எல்லாம் தெரியும்.

    ReplyDelete
  19. ///கவிதை சூப்பர் ஆனா கவிதைகளில் படம்தான்.....:):) நான் ஒண்ணூம் சொல்லலப்பா:)///


    படம் மட்டும் தானே தெரிஞ்சுது. கவிதை வேற அங்க இருக்கா? அட கொடுமையே!!!

    ReplyDelete
  20. ///ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்
    /// ஆமா அவருவந்தா அட் எ டைம் பத்து பின்னூட்டம் போடறாரு வாங்க நி.ந!////

    ஆஹா என்ன இது? கணக்கு சரியா சொல்லுங்கக்கா.

    ReplyDelete
  21. ///ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    சரத்தை பொறுமையா படிச்சிட்டு வரேன்./

    பொறுமையை சோதிக்கலயே?:)///



    அட நீங்க வேறக்கா. அவரு இப்படித்தான் சொல்லி நம்ம பொறுமைய சோதிப்பார். கடைசி வரைக்கும் படிக்கவே மாட்டார்.

    ReplyDelete
  22. இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் கவிஞர்களின் படைப்புக்களை முன்பே வாசித்திருக்கின்றேன். இவர்கள் சரத்தில் வரவேண்டிவர்களே.

    அறிமுகம் கொடுத்த மற்றையவர்களையும் தேடிப் பிடிக்கின்றேன்.

    நல்ல தொகுப்பு

    நாளைய சாப்பாட்டுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  23. நிஜமா நல்லவன் said...
    அடடா வீக் என்ட் ஜொள்ளு கவிதை எல்லாம் தொகுத்து கொடுத்திருக்காங்க. ஷைலு அக்கா நல்லாத்தானே இருந்தீங்க நேத்து:)))))))))))

    >>>> உஷ்!! ஐஸ் ஐஸ்:) புரிஞ்சுதா?:)

    ReplyDelete
  24. நிஜமா நல்லவன் said...
    ///ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    நிஜமா நல்லவா எங்கிருந்தாலும் வரவும்
    /// ஆமா அவருவந்தா அட் எ டைம் பத்து பின்னூட்டம் போடறாரு வாங்க நி.ந!////

    ஆஹா என்ன இது? கணக்கு சரியா சொல்லுங்கக்கா.

    >>எல்லாம் ஒரு பாசத்துல சொல்றதுதான்!!

    ReplyDelete
  25. கானா பிரபா said...
    இதில் பெரும்பாலான வலைப்பதிவுக் கவிஞர்களின் படைப்புக்களை முன்பே வாசித்திருக்கின்றேன். இவர்கள் சரத்தில் வரவேண்டிவர்களே.

    அறிமுகம் கொடுத்த மற்றையவர்களையும் தேடிப் பிடிக்கின்றேன்.

    நல்ல தொகுப்பு

    நாளைய சாப்பாட்டுக்கு வெயிட்டிங்//

    நன்றி கானாப்ரபா! நாளைய சாப்பாடு எப்படி ஹெவியாவா இல்ல லைட்டவா? பாக்லாம் சமைக்கிறபோது தெரிஞ்சிடும்!!

    ReplyDelete
  26. அருமையான தொகுப்பு .... தங்களின் விமர்சனம் சிறப்பாக வந்திருக்கின்றது...நன்றி அக்கா

    ReplyDelete
  27. கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில இணைப்புகள் சரியாக இல்லை - கென், அருட்பெருங்கோ, மற்றும் கமல்ராஜன் உடையவை. அவற்றை மட்டும் திருத்தி விடுங்கள். இவ்வளவு பதிவுகளையும் படித்து (என்னுடையதைக் கூட!) அழகாய் விமர்சித்தளித்த உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!

    ReplyDelete
  28. என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொடுத்த சைலஜா அக்காவிற்கு நன்றிகள் பல :)

    அடுத்த சரத்திற்காக காத்திருப்பவர்களின் ஒருவன்.

    ReplyDelete
  29. Gnaniyar @ நிலவு நண்பன் said...
    அருமையான தொகுப்பு .... தங்களின் விமர்சனம் சிறப்பாக வந்திருக்கின்றது...நன்றி அக்கா

    >>>
    நன்றி ரசிகவ்

    பெங்களூரில் முந்தாநாள் அடித்தபுயல்மழையில் வீட்டில் மிந்தடை 42மணிநேரமாக அடுத்தவலைச்சரம் தொடுக்க அதனால்தான் தாமதமாகிறது

    ReplyDelete
  30. கவிநயா said...
    கவிதைச் சரம் மணக்கிறது, ஷைலஜா! சில இணைப்புகள் சரியாக இல்லை - கென், அருட்பெருங்கோ, மற்றும் கமல்ராஜன் உடையவை. அவற்றை மட்டும் திருத்தி விடுங்கள். இவ்வளவு பதிவுகளையும் படித்து (என்னுடையதைக் கூட!) அழகாய் விமர்சித்தளித்த உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!

    >>மிக்க நன்றி கவிநயா வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  31. நிலாரசிகன் said...
    என்னுடைய வலைப்பதிவை சரத்தில் தொடுத்த சைலஜா அக்காவிற்கு நன்றிகள் பல :)

    அடுத்த சரத்திற்காக காத்திருப்பவர்களின் ஒருவன்.

    >>நன்றி நிலா ...அடுத்த சரம் மின் தடை காரணமாய் தாமதமாகிவிட்டது.

    ReplyDelete
  32. கவிதை பத்தி அழகா புட்டு புட்டு வெச்சிருக்கீங்க

    ReplyDelete
  33. //கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம்//

    இதுவே கவிதை!
    யார் இந்தக் கவிஞரு ஷைலு அக்கா? :-))

    ReplyDelete
  34. ரிஷானின் "நடுநிசியில் எனது தேசம்" பல முறை வாசித்துள்ளேன்! அவரு கவுஜைக்கு ஆர்க்குட் குழுமம் ஒன்னே தனியா இருக்கு! :-)

    அருட்பெருங்கோ, மதுமிதா அக்கா, நிலவு நண்பன், மங்களூர் சிவா கவிதைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்!

    மைத்துளிகள், கென், பிரேம், ப்ரியன், கவிநயா மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கவிஞரை எல்லாம் குறித்துக் கொண்டேன்! அறிமுகத்துக்கு கவிமுகமான நன்றி ஷைலஜா!

    ReplyDelete
  35. நாமக்கல் சிபி said...
    கவிதை பத்தி அழகா புட்டு புட்டு வெச்சிருக்கீங்க..
    >>>>>>நன்றி சிபி..புட்டு செய்யவராது(எப்போதும் மைபா தான்:)) அதான் இங்க புட்டு வச்சிட்டேன்:)

    ReplyDelete
  36. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம்//

    இதுவே கவிதை!
    யார் இந்தக் கவிஞரு ஷைலு அக்கா? :-))>>>ஒருத்தருக்கு மைபா மட்டுமே செய்யத்தெரியும் என ரவி அவர்களே எண்ணாதீர்கள் அவர்களுக்கு இப்படிஎழுதவும் வரும் எப்போதாவது!!!!

    May 2, 2008 3:37:00 AM IST

    ReplyDelete
  37. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ரிஷானின் "நடுநிசியில் எனது தேசம்" பல முறை வாசித்துள்ளேன்! அவரு கவுஜைக்கு ஆர்க்குட் குழுமம் ஒன்னே தனியா இருக்கு! :-)

    அருட்பெருங்கோ, மதுமிதா அக்கா, நிலவு நண்பன், மங்களூர் சிவா கவிதைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும்!

    மைத்துளிகள், கென், பிரேம், ப்ரியன், கவிநயா மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கவிஞரை எல்லாம் குறித்துக் கொண்டேன்! அறிமுகத்துக்கு கவிமுகமான நன்றி ஷைலஜா!

    >>இன்னமும் பலரை அறிமுகம் செய்யணும் பாராட்டணும் இன்னொரு வாய்ப்பினில் நன்றி ரவி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  38. நன்றிங்க சைலூ,

    தமிழ் மட்டுமே எழுத தெரிந்த என்னையும் (என் பெயரையும்) இந்த வலையில் சிக்க வைத்ததற்கு :-)

    உங்களின் கலக்கல்ஸ்சுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது