07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 14, 2008

வலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்

அண்ணாகண்ணன் பன்முகச் சிந்தனையும், ஆய்வுத் தமிழின் புலமையும் பெற்றவர். ஆளுகைத் தமிழால் இதழாசிரியராய் தன்னை ஆழமாய் நிலை நிறுத்திக் கொண்டவர். இவரின் கவிதைகள் இனிமைத் தமிழாய் சுவைக்கின்றன. வரவேண்டும் அவள் என்ற கவிதை அருமை. ஆங்கிலக் கவிதைகளும் எழுதுகிறார்.

நிலாரசிகன் தனிமைக்குத் துணையாய் கவிதையை அழைப்பவர். ஏறத்தாழ 150 பதிவுகள் இட்டிருக்கிறார். சிறு கதையும் அப்பதிவுகளில் உண்டு. மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஆழமான அருமையான கருத்துகள் அவரது கவிதையில் வெளிப்படுகின்றன. தனது படைப்புகள் பேசட்டும் என்று அவர் தன்னைப் பற்றி பேசவில்லை அறிமுகத்தில். குறுங்கவிதைகள் இனிமையாய் உள்ளன.

அன்புடன் புகாரி : தஞ்சைத் தரணி தந்த கவிஞர். நெஞ்சை அள்ளும் கருத்துகளை நிகழ்வுகளாய் கவிதையாக வடிப்பதில் வல்லவர். நா.பா வின் தீபம், மாலனின் திசைகள், வலம்புரி ஜானின் "தாய்", இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரவையின் ஆண்டு மலர், திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற இணைய இதழ்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் தன்னுடைய கவிதைகளை மழையாய்ப் பொழிந்துள்ளார்.
தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு இவர் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறார்.

சேவியர் கவிதையை நேசித்து சுவாசித்து கவிதையாய் திகழ்பவர். ஆறு கவிதைத் தொகுதிகளையும் ஒரு சிறு கதைத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் , கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி , அறிவுமதி, முத்துக் குமார் மற்றும் பலரால் பாராட்டப் பெற்றவர்.

கல்கி, குமுதம், தமிழ் ஓசை, தை, புதிய பார்வை, திண்ணை, அம்பலம், தமிழோவியம், காதல், சிங்கை இணையம், அந்தி மழை, அம்பலம், தினம் ஒரு கவிதை, நிலாச்சாரல், சங்கமம், இணைய குழுக்கள்… போன்றவற்றில் படைப்புச் சுவடுகள் படைக்க வாய்ப்பு பெற்றவர்.…

படிப்பவரை மயக்கும் பாக்களைத் தந்து கொண்டிருக்கிறார்.

நவீன்பிரகாஷ் பெயருக்கு ஏற்றார்ப்போல் புதுமைக் கவிதைகளை பூவானமாய் தூவி உள்ளார். குறுங்கவிதைகள் படத்துடன் பாங்காய் மிளிர்கின்றன. படங்களும் படங்களின் சுவைகளும் பார்த்த உடன் மனத்தைத் தொடுகின்றன. மந்திரமாய் நம்மை மயக்குகின்றன. கவிதைக்கு ஈடுபாடு தானே முதல் இலக்கணம். அதை இவர் கவிதையில் முழுமையாய்க் காணலாம்.

நளாயினி தாமரைச் செல்வன் கவிதை உள்ளிட்ட கலைகளின் அரசியாய்த் திகழ்கின்றார். கவிதைகளில் காவியம் வடிக்கின்றார். முகம் தொலைத்தவர் என்ற அவரது கவிதை இயல்பினை இயல்பாய்க் காட்டுகிறது. எத்தனை காலங்கள் மாறினால் என்ன ? இந்நிலைமை இப்படியேதான் என்பதை ஏற்றமாய் உரைக்கின்றார்.

செல்வி ஷங்கர்
-------------------

22 comments:

  1. மறுமொழி தாருங்களேன்

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு.

    கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது. அவை இரண்டாம் பாகமாக வரும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. தொகுப்பு அருமை மேடம். சுட்டிகளைப் பொருமையாகப் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி . செல்வி. அப்பப்போ இப்படியான பாராட்டுக்கள் ரொனிக் மாதிரி. நன்றி செல்வி.

    ReplyDelete
  5. அட நானுமா இந்த தொகுப்பில்...??? மிக்க நன்றி செல்வி... :)))

    ReplyDelete
  6. குறிப்பிடும் அனைத்துக் கவிஞர்களின் படைப்புகளுமே அருமையானதொன்று, இன்னும் பலரும் இருக்கின்றார்கள், அடுத்த தொகுப்பில் வருவார்களோ?

    ReplyDelete
  7. சிவா,

    பல காரணங்களினால் விடு பட்டிருக்கிறது. நிச்சயம் இரண்டாம் பாகம் வரும் , கவலை வேண்டாம்.

    ReplyDelete
  8. சதங்கா,

    சுட்டிகளைப் பொறுமையாகப் படித்துச் சுவையுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  9. நளாயினி

    நிச்சயம் படைப்பாளிக்கு பாராட்டுகள் ஒரு ஊக்கம் தானே

    கை தட்டினால் கணங்களில் கருத்துகள் கவிதை ஆகும் அல்லவா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. நவீன் பிரகாஷ்

    புதுமைக் கருத்துகளைப் படத்துடன் படைக்கும் நீங்கள் நானுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது. தங்களின் உழைப்பு பொறுமை பாராட்டுதலுக்குறியது.

    நல்வாழ்த்துகள் - நன்றி வருகைக்கு

    ReplyDelete
  11. கீதா,

    நேரமின்மையும், அவசரமான பதிவும் சிறந்த இணையக் கவிஞர்கள்பலரை அறிமுகப் படுத்த தடையாக இருந்தது.
    ஆசிரியர் பொறுப்பினை 10 மணித்துளிகளில் அவசரமாக ஏற்றதே முதற்காரணம். அடுத்த தொகுப்பு நிச்சயம் வரும். இங்கில்லை எனினும் என் பதிவில் இடம் பெறும்.

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு..... :)

    ReplyDelete
  13. செல்வி அம்மா,

    நலமா? இந்தப் பதிவைப் படித்துக் கொண்டே இருக்கிறேன், அடுத்த பாகம் வரும் வரை :)

    அண்ணாகண்ணன் அவர்களின் 'உதடு ஒட்டி ஒரு பாடல்'-லில் தொடங்கியுள்ளேன்.

    'வறுமை வெறுமை வெம்மை
    கொடுமை கொடுமை கொடுமை!
    பொறுமை புதுமை முழுமை
    பெருமை பெருமை பெருமை!'

    http://annakannan-kavithaigal.blogspot.com/2007/01/blog-post_22.html

    மகிழ்ச்சி,மகிழ்ச்சி.நேற்று நிலாவில் 'பவன்'-அம் (பவனம்), இன்று கவிகளின் ஊர்வலம்.:) :).நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. நன்றி தமிழ் பிரியன்

    ReplyDelete
  15. புது வண்டே

    அவசரம் வேண்டாம் - பொறுமையாகப் படிக்கலாம் - ரசிக்கலாம் - மறு மொழி இடலாம்.

    சரியா ?

    ReplyDelete
  16. ஆஹா.. கவிதைச்சரம் கலக்கலா இருக்குங்க செல்வி அக்கா:)

    ReplyDelete
  17. கவிதையை மட்டுமின்றி கவிஞர் அறிமுகமும் சுருக்கம்,விளக்கம் இரண்டும் ஒருங்கே சங்கமிக்க..உங்க வள்ளுவம் தனி ஸ்டெயில் இதுலயும்.

    சூப்பர்:)

    ReplyDelete
  18. ஸ்ரீதர்,

    கவிதைகள் கருத்துகளின் ஆழத்தை அழகாய்த் தெரிவிப்பன. அதைப் படைக்கும் கவிஞர்கள் அழகுணர்ச்சியை மொழி நடையில் கொண்டு வருபவர்கள். அதனை அறிந்தால் நமக்கும் அழகுணர்ச்சி தோன்றும் நன்றி

    ReplyDelete
  19. மனமார்ந்த நன்றிகள் :) உங்கள் ரசனைக்குரிய எழுத்தாளராய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. சேவியர்

    நல்ல கவிதைகள் எப்பொழுதுமே சுவைக்கும். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. கவிஞர்களில் பலர் விடுபட்டிருக்கிறது. அவை இரண்டாம் பாகமாக வரும் என எதிர்பார்க்கிறேன் // மங்களூர் சிவா நீங்கள் குறிப்பிடுவது என்னைத்தான் என்பது செல்விஷங்கருக்கு புரியும் இல்லையா :)

    ReplyDelete
  22. முடியலத்துவம் படிக்கிறேன் செல்வேந்திரன் - சீரக மிட்டாய் அருமை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது